தமிழ் மொழியினை கொலை செய்வதிலே இன்று திரையுலகம்கூட விட்டு வைக்கவில்லை. திரையுலகத்தைப் பொறுத்தவரை பல வழிகளிலே எமது தமிழ் மொழியினை வளர்க்க முடியும். ஆனால் இன்று என்ன நடக்கின்றது? தமிழ் மொழியை வளர்ப்பதற்குப் பதிலாக எப்படி எல்லாம் தமிழ் மொழியினை கொலை செய்ய முடியுமோ அப்படி எல்லாம் கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
திரையுலகம் சார்ந்த எல்லோரையும் குற்றம் சொல்லவில்லை. தமிழ் மொழியை வளர்ப்போரும் திரையுலகத்திலே இருக்கின்றார்கள். இருந்தாலும் இன்று திரைப்படங்களிலே பல்வேறு வழிகளிலே தமிழ்மொழி கொலை செய்யப்படுகின்றது.
அன்றைய திரைப்படங்களிலே தமிழ் மொழி இன்றுபோல் கொலை செய்யப்பட்டதா இல்லையே? இன்று என்ன செய்கின்றார்கள்.
இன்றைய தமிழ் திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் எமது கலாசாரத்துக்கு போருத்தமிலாத குடும்பத்தோடு பார்க்க முடியாத திரைப்படங்களே அதிகம் எனலாம். அதனை விட்டுவிடுவோம். திரைப்படங்களிலே தமிழ் மொழியிலே எத்தனை வீதம் பேசுகின்றார்கள் என்பதனை பார்த்திருக்கின்றீர்களா. ஏன் நாங்கள் தேவையற்ற முறையிலே வேற்று மொழிகளை பயன்படுத்துவதனை தவிர்த்து எமது தாய் மொழி தமிழினை பயன் படுத்துவதிலே என்ன தவறிருக்கின்றது.
இன்று வருகின்ற பாடல்களிலே என்ன செய்திருக்கின்றார்கள் அவர்கள் என்ன மொழியிலே பாடல்கள் எழுதியிருக்கின்றார்கள் என்பதே புரிந்து கொள்ள முடியாமலிருக்கின்றது. ஏன் தமிழ் பாடலிலே வேற்று மொழிகளை கலக்கின்றார்கள் தமிழ் மொழியிலே அழகான சொற்கள் இல்லையா? எத்தனை சொற்கள் இருக்கின்றன. இந்தக் கவிஞர்களுக்கு தமிழ் சொற்களுக்கு பஞ்சமா அல்லது தமிழ் மொழி தெரியாதவர்களா?
தமிழ் மொழியிலே பாடல் எழுதத் தெரியவில்லை என்றால் இவர்களுக்கு எதற்கு தமிழ் கவிஞர்கள் எனும் பட்டம். இவர்களுக்குத் இவர்களுக்குத் தெரிந்த வேற்று மொழிகளிலே பாடல்களை எழுதலாமல்லவா? ஏன் தமிழ் மொழியை கொலை செய்து தமிழ் மொழியின் சிறப்பை இல்லாதொழிக்க நினைக்கின்றனர்.
இவர்களால் எத்தனை இலக்கியப் பாடல்கள் கொச்சைப் படுத்தப்பட்டிருக்கின்றன. எத்தனை இலக்கியப் பாடல்களை தமது பாடல்களிலே புகுத்தி எமது தமிழ் மொழியினை கொச்சைப் படுத்தியிருக்கின்றனர்.எத்தனை தேவாரங்களை கொச்சைப் படுத்தியிருக்கின்றனர். வேறொரு மொழியிலே இவ்வாறு செய்ய அந்த மொழியினை சார்ந்தவர்கள் விடுவார்களா?
இவர்களால் தமிழிலே பாடல்களை எழுதுவதற்கு என்ன. தமிழ் மொழியிலே சொற்களுக்கு பஞ்சமா? அல்லது இவர்களுக்கு தமிழ்மொழி தெரியாதா? தமிழ் மொழியிலே பாடல் எழுதத் தெரியாதவர்கள் எதற்கு தமிழ் கவிஞர்கள் என்று தங்களை சொல்லவேண்டும். தமக்கு தெரிந்த மொழிகளிலே எழுதலாமே. எங்கள் தமிழ்மொழியை ஏன் சாகடிக்கவேண்டும்.
இன்று இரசிகர்கள் இதனைத்தான் விரும்புகிறார்கள் என்று சொல்லப்போகின்றார்களா? இரசிகர்கள் விரும்புவதை விட அவர்களால் திணிக்கப்படுகிறது. இரசிகர்களை பழக்கப்படுத்தி விட்டது யார்? இவர்களால் திணிக்கப்பட்டபோது ஆரம்பத்திலே சகித்துக் கொண்டு கேட்க ஆரம்பித்தனர். பின்னர் தங்களை பழக்கப் படுத்திக்கொண்டனர் என்றுதான் சொல்லவேண்டும்.
அன்று வேற்று மொழிக் கலப்பிலாத பாடல்கள் வெளிவரவில்லையா? அந்தப் பாடல்கள் இன்றும் மக்கள் மனதிலே இடம்பிடித்திருக்கின்றன. ஆனால் இன்றைய பாடல்கள் எவ்வளவு காலம் நிலைத்திருக்கின்றன? சினிமாப் பாடல்கள் இன்று தமிழ் மொழியினைக் கொலை செய்வதனை ஒரு தொடர் பதிவே எழுத முடியும்.
தமிழ் மொழியினை வளர்ப்பதற்காக தமிழ் மொழியிலே திரைப்படங்களின் பெயர்களை வைத்தால் வரி விலக்கு..... சரி திரைப்படங்களிலே தமிழ் மொழியும் எமது இலக்கியங்களும் கொலை செய்யப்படுவதை என்னவென்றே பார்க்காது. வேற்று மொழியிலே பெயர் வைப்பதை தடை செய்வதிலே என்ன இருக்கிறது? திரைப்படமே ஒட்டு மொத்தத்தில் தமிழ் மொழியை கொலை செய்கிறது.திரைப்பட பெயரினை தமிழில் வைத்து தமிழை கொலை செய்யும் திரைப்படங்களை என்ன செய்வது.
தமிழ் மொழி பற்றிப் பேசுகின்றவர்கள் திரைப்படப்பாடல்களும், திரைப்படமும் தமிழை கொலை செய்வதை பற்றி சிந்தித்திருக்கின்றார்களா?
இன்று தமிழ் மொழியை வளர்க்கின்ற திரையுலகம் சார்ந்தோரும். திரைப்படங்களும் இல்லாமல் இல்லை. தமிழ் மொழியினை கொலை செய்கின்றவர்கள் எமது மொழியின் வளர்ச்சிக்காக தமிழ் மொழியினை தமது பாடல்களிலே கொலை செய்வதனையாவது நிறுத்தி தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக நல்ல பாடல்களைத் தருவார்களா?
6 comments: on "தமிழை கொலை செய்து வாழ்ந்து வரும் தமிழ் சினிமா"
//திரைப்படம் தமிழ் மொழியை வளர்ப்பதற்குப் பதிலாக எப்படி எல்லாம் தமிழ் மொழியினை கொலை செய்ய முடியுமோ அப்படி எல்லாம் கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.//
உங்கள் ஆதங்கம் உண்மை. பகிர்வுக்கு வாழ்த்துக்கள். நன்றி
//தமிழ் மொழி பற்றிப் பேசுகின்றவர்கள் திரைப்படப்பாடல்களும், திரைப்படமும் தமிழை கொலை செய்வதை பற்றி சிந்தித்திருக்கின்றார்களா?//
யோசிக்க வேண்டிய விடயம்தான்
//ஏன் தமிழ் பாடலிலே வேற்று மொழிகளை கலக்கின்றார்கள் தமிழ் மொழியிலே அழகான சொற்கள் இல்லையா? //
சரியான கேள்வி...
அந்த விதத்தில் வேட்டையாடு விளையாடு பட பாடல் "பார்த்த முதல் நாளே " என்ற பாடல் எனக்கு பிடிக்கும்... தமிழை சரியாக பயன்படுத்திய நல்ல பாடல்
http://billa2007.blogspot.com/2007/03/vettayaadu-vilayaadu-lyrics-paartha.html
சென்ற வார சிறந்த எழுத்தாளர்கள் - http://www.jeejix.com/Post/Show/1377/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
பெரு (அ) பொலிவியா இசை - http://www.jeejix.com/Post/Show/1402/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%20(%E0%AE%85)%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88
ரஜினி ஏன் அப்படிச் சொன்னார்? - http://www.jeejix.com/Post/Show/1296/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_
(www.jeejix.com ) .
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!
சகோதரா நல்ல காலம் தமிழ் பெயர் வைத்தால் தான் வரிவவிலக்கு என்று சட்டம் கொண்டு வந்தது... இல்லாவிடில் ஹொலிவுட்ற்கே எம்மிடம் தான் பெயர் கடன் கேட்டு வந்திருப்பார்கள்.... நல்ல பதிவொன்று வாழ்த்துக்கள் சகோதரம்...
தாய்மொழியின் அக்கறை உங்கள் மனதிலும் என் மனதிலும் மட்டும் இருந்தால் போதாது சந்ரு.இங்கும் ஒற்றுமை தேவை தமிழை அழகாகவே வைத்திருக்க.
Post a Comment