கல்லடிக் கடற்கரையில் சிரமதான நிகழ்வு
சர்வதேச சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலே பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. பொருளாதார அபிவிருத்தி மற்றும் உல்வாசத்துறை அமைச்சருமான பசில் ராஜபக்ஸ அவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரின் வேண்டுதலின் பேரில் இந் நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார். அந் நிகழ்வுகளில் ஓர் அங்கமாக கல்லடி கடற்கரை சிரமதானம் செய்யப்பட்டது. இதில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு அரம்பித்து வைத்தார்.
உல்லாச தகவல் மையம் கிழக்கு முதல்வரினால் திறந்து வைப்பு.
சர்வதேச உல்லாச தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் நெக்டெப்பினால் அமைக்கப்பட்ட உல்லாச தகவல் மையத்தினை கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாகாண உல்லாசத்துறை அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் திறந்து வைத்தார். இந் நிகழவிற்கு உல்லாசத்துpறை அமைச்சரும் ஜனாதியின் அலோசகருமான பசில் ராஜபக்ஸ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். அத்தோடு அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்,மாகாண ஆளுணர் மொகான் விஜேவிக்ரம, மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெவ்வே, எம்.எஸ்.சுபைர், மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் மேலும் பல அரசியல் பிலபல்யங்களும் கலந்து கொண்டார்கள்.
உல்லாச கற்கைகள் நிலையம் திறந்து வைப்பு
சர்வதேச உல்லாச தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகான உல்லாசத்துறை அமைச்சினால் ஏறபாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்வுகள் மட்டக்ளப்பில் இடம்பெற்றன. மட்டு பாலமீன்மடுவில் நெக்டெப்பின் நிதியில் அமைக்கப்பட்டுள்ள உல்லாச கற்கைகள் நிலையத்தினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் உல்லாசத்துறை அமைச்சருமான பசில் ராஜபக்ஸ திறந்து வைத்தார். கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாகாண உல்லாசத்துறை அமைச்சருமான சவநேசதுரை சந்திரகாந்தன் அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்களுக்கு மட்டக்களபபு மாவட்டத்தின் உல்லாச பிரதேசங்கள் தொடர்பாக விளக்கமளிப்பதனையும் பாலமின்மடு உல்லாச பிரதேசத்தினைச் சுற்றிக் காட்டுவதனையும் தனது அழைப்பினை ஏற்று வருகைதந்த அமைச்சர் அவர்களுக்கு பொன்னாடை போற்றி கௌரவிப்பதனையும் கிழக்குப் பல்கலைக் கழக விபுலானந்தா அழகில் கற்கைகள் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலைநிகழ்வகளையும் படங்களில் காணலாம்.
0 comments: on "எங்கள் தேசத்தில்"
Post a Comment