சிறுபான்மை மக்களுக்கான குறைந்த பட்ச அதிகாரப் பகிர்வு முறைமை மாகாண சபை - கிழக்கு மாகாண முதலமைச்சர்.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன், சிறுபான்மை மக்களுக்காக கொண்டுவரப்பட்ட குறைந்தபட்ச அதிகாரத் தீர்வு முறைமை இன்று நம் எல்லோராலும் பேசப்படுகின்ற 13வது அரசியல் திருத்தச் சட்டத்தின் கருவில் உருவான மாகாண சபை முறைமைதான். 1987ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வடக்கு கிழக்கிணைந்த மாகாண சபையினால் 13அரசியல் திருத்தச் சட்டமூலத்தினை அடிப்படையாகக் கொண்டு சுயாதீனமாக இயங்க முடியாது போனது. இதற்கு அப்போதைய ஒரு சில அரசியல்வாதிகள் மற்றும் மறைமுகமாக இருந்து செயற்பட்ட போராட்ட இயக்கங்கள் காரணம் என்று கூறலாம். ஆனால் இன்று இயங்குகின்ற கிழக்கு மாகாண சபை அவ்வாறான ஒன்றல்ல. மிகவும் பல்வேறு வழிகளிலும் அல்லலுற்ற எம் மக்கள் நிம்மதியாக வாழவேண்டும். அவர்களுக்கான அதிகாரங்களை குறித்தொதுக்கப்பட்ட சட்டவரையறைகளுக்குள் நின்று கொண்டு பெற்று அதனூடாக சிறப்பாக செயற்பட வேண்டும் என்பதே எமது மக்களின் அவாவாகும். அதனை நிறை வேற்றுவதற்காகத்தான் கிழக்கு மாகாண சபை தற்போது மக்கள் பிரதிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. இம் மாகாண சபைக்கு 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக அளிக்கப்பட்டிருக்கின்ற அதிகாரங்களை முழுமையாக பெறுவற்கு அரசியல் வாதிகள் எனத் தங்களை இனங்காட்டுவோர் கட்டாயம் ஆதரவளிக்க வேண்டும். வெறமனே பேசுவதனால் மாத்திரம் பயன் இல்லை அதனை நடைமுறைப் படுத்துவதற்கான வழிவகைகளைத் தேட வேண்டும். அப்போதுதான் எமது சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை ஓரளவேனும் வென்றெடுக்க முடியும் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்தோடு கட்சி பேதங்களை மறந்து எமது சிறுபான்மை மக்களுக்களுக்கான குறைந்த பட்சத் தீர்வாக எம் கண் முன்னே இருக்கின்ற மாகாண சபையினை பலப்படுத்த அனைவரும் முன் வரவேண்டும். மாறாக சிறுபான்மை மக்கள் தொடர்பான சட்டத்திருத்தங்களை பாராளுமனறத்தில் வாக்கெடுப்பிற்காக அல்லது பரிசீலனைகளுக்காக கொண்டுவருகின்ற போது பொறுப்பற்றவர்களைப் போன்று பாராளுமன்ற நடவடிக்கைகளலிருந்து வெளிநடப்புச் செய்வதும் சிலர் விடுமுறைகளில் நிற்பதும் தவிர்க்கப் படவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் அவர் பேசுகையில், கடந்த காலங்களில் செயற்பட்ட தமிழ் அரசியல் வாதிகள் போல் இனி மேலும் நாம் காலத்தை வீணடிக்க முடியாது. ஆரம்பத்தில் கொள்கை, கோட்பாடு, உரிமை, சமஸ்டி என்றெல்லாம் பேசியவர்களின் நிலை என்ன? அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்த விடம் அவைகளெல்லாம் எமக்கு கிடைக்காது அவைகளெல்லாம் அசாத்தியமான விடயங்கள் என்று. அப்படி இருந்தும் காலத்தினை வீணடித்த வரலாறுகள்தான் மிச்சம். ஆனால் இவர்கள் எல்லோரும் கேட்டதற்கு அப்பால் இன்று சிறுபான்மை மக்களுக்காக இந்நாட்டில் இருக்கின்ற அதிகாரப் பகிர்வு முறை என்றால் அது மாகாண சபை முறைமைதான். இது விரும்பியோ விரும்பாமலோ எமக்குக் கிடைத்திருக்கின்றது. அதனைச் சரியாகப் பயன்படுத்துவதற்கும், அதனைப் பலப்படுத்துவதற்குமான வழிவகைகளையே நாம் தேட வேண்டும். எமக்குத் தெரிந்த அத்தோடு இலகுவாக பெறக்;கூடிய விடயங்களைப் பற்றிச் சிந்திக்காமல் இன்றும் அன்று போல் பழைய பாணியில் வேதம் ஓத நினைப்பது வேதனையளிக்கிறது. அவற்றை எல்லாம் விடுத்து தமிழ் மக்களின் அரசியல் காவலர்கள் என்பவர்கள் எம் மக்களுக்கான அதிகாரங்களைப் பெறுவதற்கு சகல வழிகளிலும் முன்வரவேண்டும். அதனை விடுத்து காலங் கடந்த ஞானம் பெற்ற ஞானிகள் போல் திரியாமல் தற்போதைய சுமுகமான சூழ்நிலையில் எமக்கான அதிகாரங்களை நாம் பேசிப் பெறுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இச் செயலமர்விற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர மேயர், உள்ளுராட்சி சபைகளின் தவிசாளர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள், ஆலோசகர்கள், அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் அரசியற் துறை சார்நத மாணவர்களும் வருகைதந்திருந்தார்கள்.



நீலப்பனிக்கன் குள விவசாய வீதி பொது மக்களின் பாவனைக்காக கிழக்கு மாகாண முதலமைச்சரால் (23.09.2010) கையளிக்கப்பட்டது.
மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் கட்டிடத்திற்கான அடிக்கல் குச்சவெளியில் முதலமைச்சரால் (23.09.2010) நடப்பட்டது.

மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் கட்டிடத்திற்கான அடிக்கல் திருகோணமலையின் குச்சவெளியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் நடப்பட்டது. இந்நிகழ்வில் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை, தவிசாளர் பாயீஸ், ஆரியவதி ஆகியோரும் குச்சவெளி பிரதேச செயலாளர் தவிசாளர் தௌபிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாரம்பரிய கலை இலக்கியங்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை எம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். – கிழக்கு முதல்வர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலக கலாசார அலுவலகம் நடாத்திய மக்கள் கலை இலக்கிய விழா (22.09.2010) மட் மகாஜன கல்லூரி மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சு. அருமைநாயகம் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி. சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில், ஒவ்வொரு சமுகத்தவர்களுக்கும் ஒவ்வொரு பாரம்பரிய கலை இலக்கிய பண்பாடு கலாசாரம் என குறித்தொதுக்கப்பட்டிருக்கிறது. அதனை அவர்கள் சரியாக பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அவர்களையே சார்ந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில், கலை இலக்கியங்கள் என்பது மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்திருப்பது. விசேடமாக குறிப்பிட்ட சில கலைகளுக்கு மட்டக்களப்பு பெயர் போனது. கடந்த கால அசாதாரண சூழல் மற்றும் தற்போதைய நவீன யுகம் இவற்றிற்கிடையில் கலை இலக்கியங்கள் பாதுகாப்பதென்பது சவாலன விடயம்தான். இருந்த போதும் நகர்ப்புறங்களிலும் கிராமப் புறங்களிலும் இவ்வாறான கலை இலக்கிய நிகழ்வுகளை ஏற்படுத்த வேண்டும். அத்தோடு இது சார்நத பல போட்டிகளை நடாத்தி பரிசில்கள் வழங்க வேண்டும். அவ்வாறே மக்களுக்கும் இதன் முக்கியத்தவத்தையும் எமது பாரம்பரியங்கள் கலாசாரங்களையும் தெளிவுபடுத்த வேண்டும். இதற்காக கிழக்கு மாகாண சபையுடன் இனைந்து அதிகாரிகள் மற்றும் கலைஞர்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பிற்கே உரித்தான பல கலைநிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், மூத்த பல கஞைர்கள், கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் யூ. கே. வெலிக்கல, மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா நெடுஞ்செலியன், கலாசார உத்தியோகஸ்த்தர் மலர்ச்செல்வன் அகியோரும் கலந்து கொண்டார்கள்.
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் திருக்கோவில் கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவி மாலவன் சுபதா அகில இலங்கை ரீதியில் முதலிடம்.
தற்போது வெளியாகியுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறு அடிப்படையில் அம்பாறை திருக்கோவில் கல்வி வலயத்தைச் சேர்ந்த தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவி மாலவன் சுபதா தமிழ் மொழி மூலத்தில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் 193 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் அகில இலங்கை ரீதியில் பன்னிபிட்டிய தர்மபால வித்தியாலயத்தைச் சேர்ந்த சனூஜ கல்ஹாசன் 196 புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.மட்டக்களப்பின் முன்னாள் எம். பி. கிழக்கு முதல்வருக்கு புகழாரம்.

1 comments: on "நடந்தவை, நல்லவை"
வாசித்தேனுங்க...
Post a Comment