Saturday, 11 September 2010

காதலில் உங்கள் குணம் எப்படி

காதலில் உங்கள்  குணம் எப்படி என்று இலகுவாக அறிந்து கொள்ளலாம். நீங்களும் காதலிக்கின்றிர்களா, அல்லது உங்கள் நண்பர்கள் காதலில் என்ன குணம் என்று அறிய ஆவலா? இலகுவாக பிறந்த திகதியை வைத்து அறியலாம்.

உ+ம் 2.2.1969 2+2+1+9+6+9+=29 இதையும் பிரித்துக் கூட்ட வேண்டும் 2+9=11 1+1=2 இதுதான் இவருடைய காதல் எண் {love number}

 லவ் நம்பர் ஒன்று ==>>சின்னம் ==>மான்

பெண்ணுக்குரிய குணம் ==>> வாழ்கையை நுனிக்கரும்பு வரை சுவைத்திட ஆர்வமுள்ளவர் வரப்போகும் கணவன் தன்னைவிட எல்லா அம்சங்களிலும் உயர்ந்து நிற்க வேண்டுமென்று எதிர்பார்பவர் அப்படிப்பட்டவரை ஆதாரனை செய்யத் தவறமாட்டீர்கள் லட்சியப்போக்கும்,சாதுர்யமும்,நகைச்சுவையும் நிரம்பியவர்

ஆணுக்குரிய குணம் ==>> காதல் கல்யாணத்தில் நிறையத் தோல்வி jgகாண்பீர்கள் ஆனால் நீங்கள் மனைவியிடத்தில் விசுவாசத்தோடும்,பெருந்தன்மையோடும்,நன்றியுணர்ச்சியோடும் இருப்பீர்கள் படுக்கையில் மனைவி நல்ல ஒத்துழைப்பை அளிப்பாள் மனைவியின் நடத்தையைக் கலர் கண்ணாடி கொண்டு பார்க்காமல் இருந்தால்,வாழ்க்கை சொர்க்கம்தான் மண்டைகனத்தையும் தவிர்த்தால் எல்லாம் இன்பமயம்

லவ் நம்பர் இரண்டு ==>> சின்னம் ==>> பட்டாம்பூச்சி
பெண் ==>> கணவர் எள் கொண்டு வா என்றால் எண்ணெய் இதோ என்று சொல்லும் சுபாவம் உடையவர்.அடிக்கடி உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் தொட்டாற்சிணுங்கி நீங்கள் உங்கள் ஒவ்வொரு பணியையும்,உங்கள்அலங்காரத்தையும்,உங்கள் கணவர்{அ} காதலர் வாய் நிறைய மெச்ச வேண்டுமென்று எதிர்பார்பவர் நீங்கள் நல்ல நகைச்சுவை நிரம்பியவர் நீங்கள் இருக்குமிடத்தில் சதாசர்வ காலமும் கலகலப்புத்தான்.

ஆண் ==>> நீங்கள் ஒரு காதல் மன்ன்ன அதோடு உங்கள் காதலியின் முறையீடுகளை அனுதாபத்தோடு கேட்டு, தீர்வு காணத்தவறமாட்டீர்கள் மனைவியின் உடல் சுகத்தைப்பெற சந்திரனைக்கூட கையில் பிடிக்க முயல்வீர்கள்.ஆனாலும் கொஞ்சம் பொறாமைக் குணம் உண்டு.

லவ் நம்பர் மூன்று ==>> சின்னம் ==>>மீன் தின்னி பிராணி}{otter}

பெண் ==>> ஆண்மை நிறைந்தவன்னையே எதிர்பார்பீர்கள்,அழகுகூட இரண்டாம் பட்சம்தான்.நாகரீகத்தை எதிர்பார்பீர்கள்,வீட்டுப் பணியுடன்,வெளிப்பணியையும் திறம்பட வகிக்கக் கூடியவர் உச்சிமீது வானிடிந்து வீழினும் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியின் பாட்டுக்கு இலக்கணம் நீங்களேதான்.

ஆண் ==>> ஓர் உத்தம புருஷனின் கல்யாணகுணங்கள் அத்தனையும் பொருந்தியவர் எல்லோருக்கும் பரிசுகளையும் பண்டங்களையும் வாரி வழங்கும் கர்ணன் எல்லா விஷயங்களையும் பேதமின்றி விளையாட்டாகவே எடுத்துக்கொள்வார் சுவையான பேச்சாளர் பொறாமை என்றால் அது என்ன விலையென்று கேட்பவர்

லவ் நம்பர் நான்கு ==>> சின்னம் ==>> தேனீ

பெண் ==>> உங்களை நேசிப்பவரிடம் விசுவாசமாகவும்,நன்றியுள்ளவராகவும்,அனுசரணையுள்ளவராகவும்,இருப்பீர்கள்.நீங்கள் இருக்குமிடத்தில் கும்மாளமும் வேடிக்கையும் ,சிரிப்புந்தான்.

ஆண் ==>> நீங்கள் உணர்ச்சிவசப்படும் டைப் முன் யோசனையுடையவர் குழந்தைகளையும்,மனைவியையும் அதிகமாக நேசிப்பவர். விசாலமனமும்,பெருந்தன்னையும் நிறைந்தவர்.உங்கள் மனதை பறிகொடுத்தவருக்காக உயிரைக் கூட தியாகம் செய்யத்தயங்காதவர்.பரிபூரண சுதந்திரத்தை வழங்குபவர்.உங்களைக் கணவராக அடைய ரொம்ப கொடுத்துவைத்திருக்க வேண்டும்.

லவ் நம்பர் ஐந்து ==>> சின்னம் ==>> குருவி

பெண் ==>> பெண்மை பரிபூரணமாக குடிகொண்டுள்ளவர்.

இவரை மனைவியாக அடையப்போகிறவர்கள் ரொம்பவும் அதிஷரசாலிதான் உலகை ஒரு சுற்றுசுற்றிவர,பேராசை கொண்டவர் யாராவது சுவையாகச் சமைத்து வைத்தால் நாக்கை நொட்டை விட்டுக்கொண்டு சாப்பிடத் தயாராகும் உங்களுக்கு

சமையல்.வீட்டுவேலையெண்றால் எட்டிக்காய்தான் இவளை மனைவியாக அடைந்த நான் சந்தேகமில்லாமல் பாக்கியசாலிதான் என்று உங்கள் கணவர் நினைக்கும் அளவுக்கு நீங்கள் ஐர்க்பாட்.

ஆண்   ==>>  பெண்களிடையே நீங்கள் ரொம்பவும் பாப்புலர் டைப் உங்கள் பார்வைக்காக ஏங்கும் பெண்கள் ஏராளம் உங்களின் போக்கு எதிர்த்தரப்பினருக்கு அதிர்ச்சியையும்,அளிக்கலாம் ,ஆனந்த்ததையும் அளிக்கலாம் உங்களுக்கு வாழ்கை ஒரு சவால்தான்! .

லவ் நம்பர் ஆறு ==>> சின்னம் ==>> வாத்து

பெண் ==>> குப்பை மேட்டைக்கூட கோவிலாக்கும் கலைநயம் படைத்தவர் என் கணவர்,என் கு்ழந்தைகள்ளாதான் உலகம் என்று வாழ்ந்து காட்டக் கூடிய உண்மையான தாய் நீங்கள் அதது அதனிடத்தில் இருக்க வேண்டுமென்பதில் தீவிரம் காட்டுவீர்கள். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற கொள்கையால் கணவனைத் திக்குமுக்காட வைப்பீர்கள் ஓர் ஆதர்ச மனைவி என்பதற்கு உண்டான அத்தனை தகுதிகளையும் கொண்டவர் .

ஆண்  ==>> காதல் பவித்திரமானது,பெண்ணை மலரெனக் கையாளும் பாங்குடையவர் உடலைக் காயப்படுத்தக் கூட உங்கள் மனம் இடம் கொடுக்காது. அழகை ஆராதனை செய்யும் அதே சமயத்தில் கவிதைகளையும் எழதித் தள்ளுவீர்கள் மணாளனே மங்கையின் பாக்கியம் என்ற வாசகம் உங்களுக்காகவேதான்.

லவ்நம்பர்  ஏழு  ==>> {சின்னம் ==>>ஆந்தை}

பெண்  ==>> உடுப்பது,உண்பது,பேசுவது,காதலிப்பது எல்லாமே ஏனோதானோதான். பணம்,பதவி,பகட்டு எல்லாமே உங்களுக்கு அனாவசியம்தான்....சராசரிப் பெண்ணின் ஆபாசங்களிலிருந்து வேறுபட்டு தனித்து நிற்கும் ஆபூர்வப்பிறவி நீங்கள் எந்த ஒரு விக்ஷயத்திலும் கட்டுப்பாடற்ற தனிக்காட்டு ராணி நீங்கள் வெளிவேக்ஷம் போடத்தெரியாத வெகுளிடைப் நீங்கள் மற்றவர்களின் கருத்து திணித்தலை ஒதுக்கி தன்னிச்சையாக நீங்கள் செயல்படும்பொழுது அடங்காப்பிடாரி என்ற பட்டத்தைப் பெறுவீர்கள்.

ஆண் ==>>சதாசர்வகாலமும் கற்பனை உலகில் சிறகடித்துப் பறக்கும் டைப் அதோடு புத்தகமும் கையுமாய் காரணகாரியத்தில் ஆராய்ச்சில் மூழ்கிவிடுவீர்கள். ஒரு பெண் உங்களைக் காதலிக்க நேர்ந்தாலும் அவள் என்னை ஏன் காதலித்தாள்,எந்த அம்சம் பிரதானம் ,எந்த அடிப்படையில் காதலித்தாள் என்ற ஆராய்ச்சியில் மூழ்கி,அனுபவிக்க வேண்டியதையெல்லாம் கைநழுவ விட்டுவிடுவீர்கள்.திருமணவாழ்கை வெற்றியடைவது அதிக்ஷடத்தைப் பொறுத்த்து.

லவ்நம்பர் எட்டு ==>> சின்னம் ==>>எறும்பு

பெண் ==>> களைபொருந்திய,கவர்ச்சி நிரம்பிய முகம் முதல் சந்திப்பில் நீங்கள் திமிர்பிடித்தவர் போல் பழகுவீர்கள்,ஆனால் பழகப்பழகத்தான் நீங்கள் இனியவர் என்று நிரூபிப்பீர்கள். இக்ஷடப்பட்டதை அடையத்தவறமாட்டீர்கள்.அதிகாரமும்,பணமும் உள்ளவரைத் தான் நீங்கள் தேர்தெடுப்பீர்கள் நீங்கள் உணர்ச்சிவசப்படும்பொழுது ஒருவரை இமயமலையின் உச்சியில் கொண்டு உட்காரவும் வைப்பீர்கள். அல்லது அவரை அதலபாதாளத்திலும் தள்ளுவீர்கள்.

ஆண் ==>> காதலுக்காக ,சாம்ராஐயத்தை இழந்த வின்ஸ்டர் கோமகனை உங்களுக்கு ஒப்பிடலாம் நல்ல தாம்பத்தியத்துக்கு நந்தியாக நிற்பது உங்களின் பொறாமைக்குணம்தான் சமூக‌அந்தஸ்திலும், பொருளாதார மட்டத்திலும் உயர்ந்து நிற்கும் நீங்கள் சொர்க்க வாழ்க்கை அடைவீர்கள். வெற்றிகளும்,தோல்விகளும் அடுக்கடுக்காக எதிர்பட்டாலும்,சிறிதும் மனம் தளராமல் லட்சியவாதியாகச் செயல்பட்டு வெற்றியின் சிகரத்தை எட்டிப்பிடித்திடுவீர்கள்.நீங்கள் பிறக்கும்பொழுதே சாமர்தியமும்,புத்திசாலித்தனமும் உங்களுடன் ஒட்டிக்கொண்டிருந்தால் நீங்கள் வெற்றித்திருமகனாக விளங்குவதில் வியப்பில்லை.

லவ் நம்பர் ஒன்பது ==>>சின்னம் ==>>கீரிப்பிள்ளை

பெண் ==>> இவளுடன் சேர்ந்து வாழும் வாழ்கைதான் சொர்க்கம் ,என்று துணைவர் கூறும் அளவுக்கு நீங்கள் சலிப்பைத் தராதவர் காதல் உணர்ச்சி மிக அதிகமாக உள்ளவர் பள்ளி நாள் நட்பையும், பள்ளியறை நட்பையும் எப்பொழுதும் நிறுத்திக் கொள்பவர்.

ஆண் ==>>உங்களது ஏகபத்தினி விரதத்துக்கு பங்கம் ஏற்படுத்த அநேக சூழ்ச்சிகள் வீசப்படும் கவனம் தேவை விசுவாமித்திரர்_மேனகையை நினைவில் கொண்டு உங்கள் வாழ்கைத் துணையை எல்லா வகைகளிலும் திருப்தி செய்வீர்கள். எறும்பின் சுறுசுறுப்போடும்,லட்சியத்தோடும்,உறுதியோடும் செயல்பட்டு அடையவேண்டியதெல்லாம் அடைவீர்கள் எந்தப் பணியை ஒப்படைத்தாலும் திறம்பட நிர்வகித்து நல்ல நிர்வாகி என்ற பாராட்டைப் பெறுவீர்கள்.அரசியலில் நுழைந்தால் மக்கள் அபிமானத் தலைவனாக்க கொடிகட்டிப் பறக்கலாம்.

ஆதாரம் _the book of love

நன்றிகள் கலா..

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

6 comments: on "காதலில் உங்கள் குணம் எப்படி"

வால்பையன் said...

//ஆணுக்குரிய குணம் ==>> காதல் கல்யாணத்தில் நிறையத் தோல்வி jgகாண்பீர்கள் ஆனால் நீங்கள் மனைவியிடத்தில் விசுவாசத்தோடும்,பெருந்தன்மையோடும்,நன்றியுணர்ச்சியோடும் இருப்பீர்கள் படுக்கையில் மனைவி நல்ல ஒத்துழைப்பை அளிப்பாள் மனைவியின் நடத்தையைக் கலர் கண்ணாடி கொண்டு பார்க்காமல் இருந்தால்,வாழ்க்கை சொர்க்கம்தான் மண்டைகனத்தையும் தவிர்த்தால் எல்லாம் இன்பமயம் //


உண்மையை சொல்லட்டா, பொறுக்கிதனமா இருக்கு!

எனக்கு 14/4/1978 ஏழாம் நம்பர் தான், ஆனாலும் எல்லாத்தையும் படிக்கலாம்னு பார்த்தா இப்படி இருக்கு!

ஆணோடு குணத்துக்கு பெண் கட்டிலில் மகிழ்ச்சி அளிப்பாள்னு இருக்கு, இந்த இடத்தில் பெண்ணின் குணத்தை யார் கட்டுபடுத்துவது!, அது என்ன நடத்தையை கலர் கண்ணாடி போட்டு பார்க்காமல் இருந்தால்!

அப்ப மந்த நம்பர்ஸ் காரங்க போட்டு பார்க்கலாமா?

இப்படியெல்லாம் யோசிக்க சொல்லி உங்களுக்கு யார் சொல்லி தர்றது!?

ஹேமா said...

அட....அட என்ன ஒரு ஆராய்ச்சி அலசல்.சந்ரு கலக்கிட்டீங்க போங்க !

சின்னபாரதி said...

நல்ல விளையாட்டு சந்துரு ... முயற்சி செய்து பார்க்கிறேன் நண்பர்களுக்கும் சேர்த்து . ஆமா ! உங்களுடைய பிறந்த திகதி என்ன?

ம.தி.சுதா said...

தங்கள் தளத்திற்கான எனது முதல் வருகை... கட்டுரை நல்லாயிருக்கு ஆனால் அரசியல் பற்றி நான் கருத்து சொல்வதாயில்லை....

ம.தி.சுதா said...

அதால வாக்கு மட்டும் போட்டிட்டு கம்முண்ணு போறன்...

S.முத்துவேல் said...

என்ன சொல்லத்தர்ன்னு தெரியல ... நிங்களெ படிச்சிகொங்க..

no : 3


ஆண் ==>> ஓர் உத்தம புருஷனின் கல்யாணகுணங்கள் அத்தனையும் பொருந்தியவர் எல்லோருக்கும் பரிசுகளையும் பண்டங்களையும் வாரி வழங்கும் கர்ணன் எல்லா விஷயங்களையும் பேதமின்றி விளையாட்டாகவே எடுத்துக்கொள்வார் சுவையான பேச்சாளர் பொறாமை என்றால் அது என்ன விலையென்று கேட்பவர்3/4 உன்மை

1/4 பொய்


எப்படியோ சரி ..,


நல்ல பதிவு தான் .

வாழ்க வளமுடன் சந்ரு.....,

Post a Comment