Monday, 11 January 2010

நம்மவர்கள் எங்களோடு......

 நான் அதிகமாக கவிதைகளை இரசிப்பவன். அண்மையில் ஒரு வலைப்பதிவு என் கண்ணிலே பட்டது. மிகவும் அழகான கவிதைகளோடு அந்த வலைப்பதிவு...

இவர் இலங்கையை சேர்ந்த ஒரு பெண் பதிவர் ஆனால் அவர் இப்போது கனடாவில் இருக்கிறார்.

இவரது கவிதைகள் அனைத்துமே என்னைக் கவர்ந்துவிட்டன. நீங்களும் அவரது வலைப்பதிவுக்கு போய் வரலாம்.

ஈழமகளின் "கவிமழை" ஈழத்தில் பொழிகிறது.
அவரது வலைப்பதிவிலிருந்து ஒரு கவிதை...

கண்ணீரைத் தாங்குமா - இதயம்

 கண்ணீரைத் தாங்குமா - இதயம்
கண்ணீரைத் தாங்குமா.
விண்மீன்கள் சிரிக்கிறது - உலகே
வேடிக்கை பார்க்கிறது.

தமிழ் மண்ணின் மணம்
மறந்து போனதம்மா...
எம் உதிரத்தின் மணம்
எம்மில் வீசுதம்மா....!

சோலைவனம் எங்கள் தேசம்
பாலைவனம் ஆனதிப்போ...
பாசவனம் எங்கள் வாசம்
சுடுகாடாய்ப் போனதிப்போ...!

தந்தை தாயின் உறவு
சொல்லப் பிள்ளை இல்லையம்மா...
பிள்ளை உள்ள வீட்டில்
சொந்தம் எதுவும் இல்லையம்மா....!

தென்றல்வீசும் எங்கள் தேசம்
சோகமயம் ஆனதிப்போ...
செந்தமிழ் எங்கள் வேதம்
செவ்வினால் எம்முயிர் போகுமிப்போ...!

கடற்கரைக் காற்றில் வரும்
பேரின்பம் இன்றில்லையம்மா...
கல்லுரிகள் கண்ட கனவு
கரைந்து புதைகுழியில் போனதம்மா....!


நீதி மறவா எங்கள் தேசம்
நேர்மையில்லா சிங்கள அரசு ஆளுதிப்போ...
சாதி.. மதம் ஒன்றே எங்கள் தேசம்
பௌத்த மதமாய் மாறுதிப்போ...!

அவரது காதல் கவிதைகளிலே எனக்கு பிடித்த சில வரிகள்.

பெண்ணே...! உன்னைப் பார்க்கும் போது

பேசத் துடிக்கும் வார்த்தைகள்
மெளனமாகி விடுகின்றது.

பெண்ணே....!
உன்னை விட்டு விலகும் போது
உணர்ச்சியற்ற கால்களாய்ப்
போகின்றது

பெண்ணே....
உன்னை நினைக்கும் போது
கவிமழையாய்ப் பொழிகிறது
என் இதயத்தில்.

பெண்ணே....
உன்னை கனவில் அணைக்கும் போது கூட‌
பூக்களாய் நினைத்து பூஜை அறையில்
பூட்டி வைக்க விரும்புகின்றேன்.

பெண்ணே....
உனைப் பார்த்து வரைந்த போது
என் உயிர் கொடுத்து
உயிர் ஓவியமாய் மாற்றிவிட்டேன்.

பெண்ணே....
உன்னை நினைத்து மரணித்த போது
என்னை ஆழமாய் விரும்பினாய்.
நான் ஆவியாய் அலைகின்றேன்.

பெண்ணே....
மறு ஜென்மம் மலரும் போது
நான் நீயாகவும்... நீ... நானாகவும்
அப்போ புரியும் என் காதல் வலி.

நீங்களும் அவரது வலைப்பதிவுகளுக்கு சென்று வரலாம். அவரது திறமைக்கு உற்சாகம் வழங்குவோம்

http://www.eelamakal.blogspot.com/

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

4 comments: on "நம்மவர்கள் எங்களோடு......"

நிலாமதி said...

உண்மை .........தரமான் கவிதை தரும் ஈழத்து பெண்களில் இவரும் ஒருவர். மேலும் வளர வாழ்த்துக்கள்.
சந்துரு உங்களுக்கு நன்றி.

Anonymous said...

கவிதை கண்ணீரை வரவைக்கிறது....

Priya said...

அழகான கவிதைகள்!

Post a Comment