நாங்கள் பலர் சேர்ந்து பத்து வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த சமுக சேவை அமைப்பான கல்வி அபிவிருத்தி சங்கமானது பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகின்றது. இந்த அமைப்பானது சிறுவர்களின் நலன் தொடர்பிலே பல்வேறுபட்ட செயத் திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகின்றது.
கல்வியை தொடர முடியாத வறிய மாணவர்களுக்கு கல்வியை தொடர்வதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல். மாணவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகுவதை கட்டுப்படுத்தலும், இடைவிலகியவர்களை மீண்டும் பாடசாலையில் சேர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல், இலவச வகுப்புக்களை நடாத்துதல் என்று பல்வேறு செயத் திட்டங்களை நடை முறைப் படுத்தி வருகின்றது.
இதன் ஒரு செயற்பாடாக மாலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணிவரைக்கும் நாளாந்தம் 360 மாணவர்களுக்கு இலவச வகுப்புக்களை நடாத்தி வருவதோடு மாதாந்த பரிட்சைகளையும் நடாத்தி வருகின்றது.
இவை அனைத்துக்குமான செலவுகளையும் இந்த அமைப்பினுடைய உறுப்பினர்களும் சில நலன் விரும்பிகளும் செய்து வருகின்றனர்.
இலவச வகுப்புக்களை நடாத்துவதற்கு என்று ஒரு கல்வி நிலையத்தினையும் கொண்டுள்ளது இந்த அமைப்பு.
கடந்த இரு நாட்களுக்கு முன்னர் இந்த கல்வி நிலையத்திலே போடப்பட்டிருந்த பல பெறுமதி வாய்ந்த மின் குமிழ்கள் இரவோடு இரவாக திருடப்பட்டிருக்கின்றன. இதன் பெறுமதி 40 ஆயிரம் ருபாவுக்கும் அதிகமாகும். இதுபோல் முன்னர் ஒரு தடவையும் திருடப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த அமைப்பினுடைய செயற்பாடுகள் அனைத்துக்காகவும் அமைப்பின் உறுப்பினர்கள் பல கஸ்ரங்களுக்கு மத்தியிலே தமது பங்களிப்பை செய்து வருகின்றனர். இதனை நன்கு அறிந்தவர்களே இப்பிரதேசத்தை சேர்ந்த அனைவரும். இப்படிப்பட்ட திருட்டுக்களை செய்கின்ற நாகரிகமற்ற, மனித நேயமற்ற மனிதர்களும் இன்று இருக்கின்றார்களே.
இந்த அமைப்பானது உறுப்பினர்களின் நிதிப் பங்களிப்பிலே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரிடம் பலதடவை சென்றதன் பயனாக எமது தொல்லை தாங்க முடியாமல் ஒரு கணணி உபகரணத்தை வழங்கினார்.
பாராளுமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கியும் பிரதேச செயலக அதிகாரிகள் இரண்டு மாதங்களின் பின்னே எமக்கு கணணி வழங்கினார்கள். இரண்டு மாதங்கள் பிரதேச செயலக அதிகாரிகள் எங்களை திங்கட் கிழமைவாருங்கள், செவ்வாய்க்கிழமை வாருங்கள் என்று ஏமாற்றி இருக்கின்றனர். அப்போதே நான் ஒரு பதிவிலே குறிப்பிட்டு இருந்தேன் ஏதோ சுத்து, மாத்து வேலைகள் இடம்பெரப்போவதாக தெரிகிறதென்று.
பிரதேச செயலகத்துக்கு பலநாள் அலைந்து திரிந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் கணணி வழங்கப்பட்டது. ஆனால் எந்த விதமான உத்தரவாதப் பத்திரமும் வழங்கப் படவில்லை. கணணியை கொண்டு வந்து 3 நாட்கள் மட்டுமே பாவிக்கப்பட்டது. 4 வது நாள் கணணி வேலை செய்யவில்லை.
இப்படி ஒரு கணணி பெயருக்கு வழங்கத்தான் வேண்டுமா? இந்த கணணிக்குரிய உத்தரவாதப் பத்திரம் எங்கே போனது. ஏன் இந்த அதிகாரிகள் இப்படிப்பட்ட வேலைகளை செய்கின்றனர்.
இது தொடர்பிலே குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினரும், உரிய பிரதேச செயலக அதிகாரிகளும் கவனம் செலுத்துவார்களா?
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..
8 comments: on "இப்படியும் மனிதர்கள்"
"என்னை போல நல்லத் செய்ய வேண்டுமென நினைக்கிற மைனாரிட்டி உன்னைப் போல தீமையே செய்கிற மெஜாரிட்டி அதுதான் சொசைட்டி" என பார்த்திபன் ஒரு படத்தில் சொல்வார் உண்மைதான் போலும்.
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
///திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.. ///
இதுதான் நிதர்சனம். என்ன சொன்னாலும் திருந்தாத ஜென்மங்கள்தான் இவ்வுலகில் அதிகம் சந்ரு.
உங்களின் தொடரும் சேவைக்கு பாராட்டுக்கள்
நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும் ...
கவலைப்படாதீங்க ...
நல்லவை சீக்கிரம் நடக்க வாழ்த்துக்கள்.
அரிஷ்விஜா...வித்யாசமான பெயர். யார் அது? இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
சந்ரு உங்கள் சமூகசேவைக்கு
வாழ்த்தும்,நன்றியும்.
சீர்கேடுக்கு....????
நொந்து கொள்ளத்தான் முடியும்!
அழகான சிறுமி...பெயர் {எனக்கு}அழகல்ல!!
என் வாழ்த்தும் சேரட்டும்!!
இப்படியுமா??:(
எங்கள் நாட்டில் இது என்ன புதுசா சந்ரு.இன்னும் நோண்டினால் எங்களுக்குத்தான் நாத்தம்.
Post a Comment