அழகிய தேசமா?
இன்று என் தேசத்தில்
மிஞ்சி இருப்பது என்ன?
இல்லை இல்லை
நிறையவே இருக்கின்றனவே
கிராமங்கள் தோறும்
ஒன்றுக்கு இரண்டு
அனாதை இல்லங்களும்
அகதி முகாம்களும்
நாம் என்ன செய்தோம்
தமிழராய் பிறந்ததை தவிர.
அனாதை இல்லங்களில் வாழும்
அந்த மழலைகளின் முகத்தில்
எத்தனை எத்தனை
கவலைகளின் முகவரிகள்
ஆறுதல் சொல்வதைத்தவிர
என்னால் எதுவும்
செய்ய முடியவில்லை
வார்த்தைகள் வர மறுக்கின்றன..
நீங்கள் அனாதைகள் இல்லை
அனாதைகள் ஆக்கப்பட்டவர்கள்
நீங்கள் மட்டுமல்ல
நாங்களும்தான் அனாதைகள்
சொந்தங்களை இழந்ததனால்
நீங்கள் அனாதைகள்
சிறுவர் இல்லங்களில்.
தமிழனாய் பிறந்தோம் -இன்று
அனைத்தும் இழந்து
அகதிகளாக அடை பட்டோம்
அகதி முகாம்களில்.
தமிழன் என்றால்
அகதி என்று
மகுடம் சூட்ட
நினைக்கும் தேசமிது
"தமிழன் நாம்'
தலை நிமிர்ந்து சொல்லுங்கள்
தம்பிகளே தங்கைகளே
நாளைய தலைவர்கள்
நீங்கள் அல்லவா
அதுதான் உங்களையும்
முளையிலே கிள்ள நினைக்கிறது
இந்த தேசம்
காலம்தான் பதில் சொல்லும்
காத்திருங்கள் - என்னால்
இதற்கு மேலும்
எதுவும் சொல்லமுடியாது
சொன்னால் நானும் நாளை
அனாதை ஆக்கப்படலாம்
வாய் பொத்தச் சொல்லும்
தேசமல்லவா இது...
9 comments: on "என்னடா உலகமிது"
ஒரு நாள் விடிவு வரும். காத்திருங்கள்.
சந்ரு நான் புலம்பியதின் மிகுதி இப்போ நீங்கள்.மிகுதி புலம்ப வருவார்கள் எங்கள் கரம் தொட்டு.
பயப்பட வேண்டாம்.
நாளைப் பொழுது என்றும் நல்ல பொழுதாக அமையும் என்ற நம்பிக்கைதான் வாழ வைக்கிறது. மனதை நெருட வைக்கும் பதிவு.
:((, உங்கள் மனநிலை புரிகிறது.
என்னதிது...
விமர்சனங்களெல்லாம் அரசியல் பக்கம் திரும்புகின்றன...
வேதனைகள் எல்லாம் எம்மோடு பிறந்துவிட்டன போல் ஆகிவிட்டன..
என்ன செய்ய...
புரிகிறது,புரிகிறது.
உறைக்க வேண்டியவர்களுக்கு உறைக்குமா-?
//கிராமங்கள் தோறும்
ஒன்றுக்கு இரண்டு
அனாதை இல்லங்களும்
அகதி முகாம்களும்
நாம் என்ன செய்தோம்
தமிழராய் பிறந்ததை தவிர.//
//நீங்கள் அனாதைகள் இல்லை
அனாதைகள் ஆக்கப்பட்டவர்கள்//
வலிக்குது சந்ரு.........................................................
துரோகத்தால் எல்லாம் முடிஞ்சுபோச்சே.. இனி எங்க எங்களுக்கு விடிவு... இயற்கை ஒவ்வொரு வருடமும் மட்டககளப்பை அழிக்குது.. அது கானாது என்டு இன்னும் எத்தனையோ அழிவுகள்... ச்சை....
//எதுவும் சொல்லமுடியாது
சொன்னால் நானும் நாளை
அனாதை ஆக்கப்படலாம்
வாய் பொத்தச் சொல்லும்
தேசமல்லவா இது... //
உங்கள் உணர்வுகளை உணர முடிகின்றது
Post a Comment