Friday 14 August 2009

மேல் நாட்டுக் கலாசாரம் தேவையா...

நடையில், உடையில் நாகரீகம் சொல்லும் பெண்... எனும் எனது இடுகையிலே கருத்துரையிட்ட சில நண்பர்களுக்கு விளக்கமளிப்பதற்காகவே இந்த இடுகை. அந்த இடுகையிலே நான் பெண்களை அடிமைப்படுத்தும் படி எழுதி இருப்பதாக அவர்களின் பின்னூட்டம் இருந்தது. அந்த இடுகையையும் பினூட்டங்களையும் வாசித்துப்பாருங்கள் நான் பெண் அடிமை பற்றி எங்கே குறிப்பிட்டு இருக்கிறேன் என்று.

நான் பெண் அடிமை பற்றி அங்கெ பேசவில்லை மேல் நாட்டு நாகரீகம் பற்றித்தான் சொல்லி இருக்கின்றேன். நான் முற்று முழுதாக பெண்களை அடிமைப் படுத்துவதை எதிர்ப்பவன். பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று சொல்பவன். நான் பெண் அடிமை பற்றிப் பேசுகிறேன் என்று சொல்பவர்கள் எனது பதிவுகளைப் பாருங்கள் புரியும். வேண்டுமென்றால் http://shanthru.blogspot.com/2009/06/blog-post_28.html இங்கே போய் பாருங்கள் என் ஏக்கம் தெரியும்.

ஒரு இனமாகட்டும், சமுகமாகட்டும், மதமாகட்டும் சில நடைமுறைகள், பாரம்பரியங்கள், கலாசாரம் என்று இருக்கின்றது. அதற்கு ஏற்ற மாதிரி இருக்க வேண்டியது ஒவ்வொருவரது கடமை. எதற்காக இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைகள் நம்மை நல்வழிப்படுத்துவதற்காகவே. ஒவ்வொருவரும் தங்கள் விருப்பப்படி கட்டுக்கோப்பு இல்லாமல் இருந்தால் அது மிருகங்கள் போன்றுதான் இருக்கும்.

இன்று மேல் நாட்டு நாகரீகம் எங்களை ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கின்றது. நான் மேல் நாட்டு நாகரீகங்களை எதிர்க்கவில்லை. ஆனால் எமது கலாசாரம் பாரம்பரியங்களை சீர்குலைக்கும் மேல் நாட்டு நாகரீகங்களை எதிர்க்கிறேன். சில மேல் நாட்டு நாகரீகங்களை ஏற்றுக்கொள்ளலாம். அந்த நாகரிகத்தின் தாக்கத்தினைப் பற்றி சிந்தியுங்கள்.

அந்த இடுகையிலே நான் உடை பற்றிச் சொல்லி இருந்தேன். எந்த ஒரு சமூகமும் உடையினைக் குறை, அல்லது உடுத்த வேண்டாம் என்று சொல்லி இருக்கின்றதா இல்லையே. எதற்காக நாம் உடை அணிகின்றோம். அரைகுறை ஆடையுடன் அலைவதைவிட ஆடையின்றி திரியலாமே. சுதந்திரம் இருக்கிறதுதான் சுதந்திரம் இருக்கின்றது என்று சமூகக் கட்டமைப்பை மீறி ஆடையின்றி போக முடியுமா.

நாகரீக ஆடைகளை நாகரீக உலகுக்கு தகுந்தாற்போல் அணிய வேண்டும் . நான் இல்லை என்று சொல்லவில்லை. அரைகுறை ஆடை வேண்டாம் என்றுதான் சொன்னேன். இந்த அரை குறை ஆடையினால் எத்தனை பிரட்சனை. அவர்களை பார்த்து யாராவது ஆண்கள் ஏதும் சொல்லிவிட்டால் ஆண்கள் மீது குற்றம் சுமத்தி விடுவார்கள். யார் மீது குற்றம் அரை குறை ஆடை இன்றி தமிழ் கலாசார ஆடை அணிந்து செல்கின்ற பெண்களுக்கு ஆண்கள் அளவுக்கு அதிகமான தொல்லைகொடுக்கின்றார்களா . இல்லையே, அரை குறை ஆடை அணிபவர்களிடம் கேட்கின்றேன் நீங்கள் அணிந்திருப்பது எதற்கு அதனையும் அகற்றி விடலாமே.

பெண்களை மட்டும் நான் குற்றம் சொல்லவில்லை இன்று இளைஞர்களும் வெளிநாட்டு நாகரீக மோகத்தினால் தானும் சீரழிந்து தனது சமுகத்தையும் சீரழிக்கின்றனர். போதைப்பொருள் பாவனை இன்று எந்தளவு அதிகரித்து இருக்கின்றது. இதனால் அவர்கள் மட்டுமா இந்தச் சமூகமுமே பாதிக்கப் படுகிறது. இது தேவையா?.

இப்படிப்பட்ட வெளிநாட்டுக் கலாசாரங்களைத்தான் நான் எதிர்க்கிறேன். ஆனால் சில மேல் நாட்டுக் கலாசாரங்களை நாம் அறிந்திருக்க வேண்டும் பின்பற்ற வேண்டும். நான் இல்லை என்று சொல்லவில்லை. இன்று மேல் நாட்டுக் கலாசாரம் ஏதோ ஒரு வகையில் அவசியமாகிவிட்டது. அதற்காக வேண்டப்படாத மேல் நாட்டு கலாசாரங்களை பின்பற்றுவதை கைவிடுங்கள் என்பதுதான் என் கருத்து.

இதனை பெண் அடிமை பேசுகிறேன் என்று சொல்லவேண்டாம். என்ன சொல்கிறேன் என்பதனை புரிந்து கொண்டு விவாதியுங்கள்.
இதுபோன்ற தேவையற்ற மேல் நாட்டுக் கலாசாரங்கள் தேவையா என்பதுதான் என் கேள்வி உங்கள் கருத்துக்கள் பின்னூட்டங்களாக வாரட்டுமே...

உங்கள் விவாதங்கள் வெறுமனே பொழுது போக்குக்கான விவாதமாக இல்லாமல் மாற்றுக் கருத்துக்களுக்கு தீர்வு கிடைக்கின்ற விவாதங்களாக அமையட்டும்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

76 comments: on "மேல் நாட்டுக் கலாசாரம் தேவையா..."

Saravanan Trichy said...

தல..திரும்பவும் சூடான topic..கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்..

Admin said...

//குட்டி பிரபு கூறியது...
தல..திரும்பவும் சூடான topic..கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்..//



ஆமா உங்க கருத்துக்களைச் சொல்லுங்க என்றுதானே கேட்டு இருக்கின்றேன் சொல்லுங்க உங்க கருத்துக்கள.

Saravanan Trichy said...

அரைகுறை ஆடையால் பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்பதே நீங்கள் சொல்ல விரும்புவது!
//யார் மீது குற்றம் அரை குறை ஆடை இன்றி தமிழ் கலாசார ஆடை அணிந்து செல்கின்ற பெண்களுக்கு ஆண்கள் அளவுக்கு அதிகமான தொல்லைகொடுக்கின்றார்களா //
இதில் முற்றிலும் வேறுபடுகிறேன்!
இன்று அதிகமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது கிராமங்களில் உள்ள 15 வயதிற்கு உட்பட்ட பெண்கள் தான்! இதற்க்கு காரணம் அரைகுறை ஆடைகள் தானா?

பெண்ணடிமைத்தனம் பற்றி கேட்டிருக்கிறீர்கள். உங்கள் கருத்துக்களை நீங்கள் வெளிப்படையாக சொல்லலாம். ஆனால் இப்படித்தான் நீ இருக்க வேண்டும் என்று கட்டளை இடும் போது அது கண்டிப்பாக பெண் அடிமைத்தனம் தான்!

Saravanan Trichy said...

உடை அணிவது அவரவர் தனிப்பட்ட விருப்பம்! சட்டத்திற்கு உட்பட்டு எந்த உடையும் அணியலாம். ஆனால் கலாச்சாரம் என்பதெல்லாம் சும்மா! நம்ம தேவைக்கு ஏத்த மாதிரி மாத்திக்க வேண்டியதுதான்.

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

ஆடை என்பது அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப அணியலாம் என்றாலும் பிறருடைய கவனத்தைச் சிதறடிக்காமல் இருப்பது நலம்...........தவறுகள் நடக்க வாய்ப்பை நாமே ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு பிறகு ......அடித்துக்கொண்டு என்ன பயன்.......

. said...

உண்மை தான் சந்த்ரு... நீங்க சொல்வது உண்மை தான்... அவ்வித ஆடைகள் நம் கலாச்சாரம் இல்லை தான்!

அப்படி மேலை நாட்டுக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவது 'அவர்களின் சுதந்திரம்' என்று எண்ணுகிறார்கள் ஒருசிலர்...

அவ்வாறு நினைப்பவர்களை யாராலும் எதுவும் செய்ய முடியாதே! விரைவில்... கலாச்சாரமா? அப்படி என்றால் என்ன? என்று கேட்கும் நிலை வந்தாலும் வியப்படைய எதுவுமில்லை!:(

அவர்களாகத்திருந்தும் வரையில் இந்நிலையை மாற்ற முடியாது.. ஆனால், அது.. நடக்குமா என்பது தான் கேள்வி?!

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

இவ்வுலகில் நல்லது கெட்டது என்ற இரண்டு எங்கும் உண்டு எதனைக கொள்ளவேண்டும் என்பதிலும் எதனைத் தள்ளவேண்டும்
என்பதிலும் தெளிவாக இருக்கவேண்டும்........நம்மவர்கள் தள்ளவேண்டியதைக் கொள்வதும் கொள்ளவேண்டியதையும் தள்ளுகின்றார்கள்..........

புல்லட் said...

ஆஹா! ஆஹா! நம்ம கட்சி பிரதர் நீங்க... உதைச் சொல்லப்போய்தான் முன்னம் பொம்பளைக்கு வால்பிடிக்கிறவங்களும் பெண்ணிய தீவிர வாதிகளும் நமக்கு குண்டு வைக்கத்திரிஞ்சாங்க..கொஞ்சம் டீசன்டா உடுத்துங்கன்டு சொன்னா அடிக்க வாறாங்க ... நாம என்னத்த பண்ண? முனைவர் கல்பனா , பிரியங்கா அருமையா சொல்லி இருக்கிறீங்க..

குறை ஒன்றும் இல்லை !!! said...

இந்த நாகரீகம் எல்லாம் அவங்கவங்க மனசு சம்பந்தப்பட்டது.. இன்னும் சொல்ல போனா அவங்க அப்பா இல்லேன்னா புருசன் கவனிக்க வேண்டியது, கவலை பட வேண்டியது.. நம்ம மாதிறீ ஆளுங்க இல்ல..முடுஞ்சா ரசிங்க... இல்லேண்னா விடுங்க.. அத விட்டுட்டு இன்னும் எத்தன நாள் தான் அவங்கள குறை சொல்லுவீங்க :)

Saravanan Trichy said...

பிரியங்கா" சொன்னது…
//கலாச்சாரமா? அப்படி என்றால் என்ன? என்று கேட்கும் நிலை வந்தாலும் வியப்படைய எதுவுமில்லை!:(//

உண்மைதான்! பல "நல்ல" தமிழ் கலாச்சாரங்களை இப்படித்தான் அழித்திருக்கிறோம்.
உதாரணம்: குழந்தை திருமணம், குலத்தொழில், உடன்கட்டை ஏறுதல், இன்னும் பிற அழிந்து போன கலாச்சாரம் எல்லாம் உங்களுக்கே தெரியுமே..

. said...

குட்டி பிரபு கூறியது...
பிரியங்கா" சொன்னது…
//கலாச்சாரமா? அப்படி என்றால் என்ன? என்று கேட்கும் நிலை வந்தாலும் வியப்படைய எதுவுமில்லை!:(//

உண்மைதான்! பல "நல்ல" தமிழ் கலாச்சாரங்களை இப்படித்தான் அழித்திருக்கிறோம்.
உதாரணம்: குழந்தை திருமணம், குலத்தொழில், உடன்கட்டை ஏறுதல், இன்னும் பிற அழிந்து போன கலாச்சாரம் எல்லாம் உங்களுக்கே தெரியுமே..

//

மன்னிக்கணும்... நீங்க சொன்ன உதாரணங்கள் எல்லாம் கலாச்சாரம் அல்ல... அவை மூட நம்பிக்கைகள்! (அவற்றை ஒழிக்கத் தான் அன்று சிலர் பாடுபட்டனர்...) கலாச்சாரம் என்பது வேறு! மூட நம்பிக்கை என்பது வேறு...

Admin said...

1. //குட்டி பிரபு கூறியது...
உடை அணிவது அவரவர் தனிப்பட்ட விருப்பம்! சட்டத்திற்கு உட்பட்டு எந்த உடையும் அணியலாம். ஆனால் கலாச்சாரம் என்பதெல்லாம் சும்மா! நம்ம தேவைக்கு ஏத்த மாதிரி மாத்திக்க வேண்டியதுதான்.//



2. //குட்டி பிரபு கூறியது...
பிரியங்கா" சொன்னது…
//கலாச்சாரமா? அப்படி என்றால் என்ன? என்று கேட்கும் நிலை வந்தாலும் வியப்படைய எதுவுமில்லை!:(//

உண்மைதான்! பல "நல்ல" தமிழ் கலாச்சாரங்களை இப்படித்தான் அழித்திருக்கிறோம்.
உதாரணம்: குழந்தை திருமணம், குலத்தொழில், உடன்கட்டை ஏறுதல், இன்னும் பிற அழிந்து போன கலாச்சாரம் எல்லாம் உங்களுக்கே தெரியுமே..//


ஒன்றுக்கொன்று முரண்பாடா தெரியவில்லையா... என்னங்க நீங்க...

Admin said...

குட்டி பிரபு நீங்க குட்டியாகவே இருக்கிங்க... கலாசாரம் என்றா என்ன... வற்புறுத்தல் என்றா என்ன... மூட நம்பிக்கை என்றால் என்ன என்று தெரியாமல் இருக்கிங்களே...

Admin said...

//குட்டி பிரபு கூறியது...
பிரியங்கா" சொன்னது…
//கலாச்சாரமா? அப்படி என்றால் என்ன? என்று கேட்கும் நிலை வந்தாலும் வியப்படைய எதுவுமில்லை!:(//

உண்மைதான்! பல "நல்ல" தமிழ் கலாச்சாரங்களை இப்படித்தான் அழித்திருக்கிறோம்.
உதாரணம்: குழந்தை திருமணம், குலத்தொழில், உடன்கட்டை ஏறுதல், இன்னும் பிற அழிந்து போன கலாச்சாரம் எல்லாம் உங்களுக்கே தெரியுமே..//



குட்டி பிரபு முதலில் கலாசாரம் என்றா என்ன என்று அறிந்து விட்டு வங்க பேசலாம் கலாசாரம் என்றால் என்ன என்று தெரியாதவங்களோட கலாசாரத்தைப் பற்றிப் பேசி பிரயோசனம் இல்லை....

குழந்தை திருமணம், குலத்தொழில், உடன்கட்டை ஏறுதல் எல்லாம் கலாசாரம் என்று யார் சொன்னது இது எல்லாம் மூட நம்பிக்கைகள். இது மட்டுமல்ல இன்னும் நிறையவே மூட நம்பிக்கைகள் இருக்கு. கலாசாரம் என்பது வேறு.

Admin said...

//குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
இந்த நாகரீகம் எல்லாம் அவங்கவங்க மனசு சம்பந்தப்பட்டது.. இன்னும் சொல்ல போனா அவங்க அப்பா இல்லேன்னா புருசன் கவனிக்க வேண்டியது, கவலை பட வேண்டியது.. நம்ம மாதிறீ ஆளுங்க இல்ல..முடுஞ்சா ரசிங்க... இல்லேண்னா விடுங்க.. அத விட்டுட்டு இன்னும் எத்தன நாள் தான் அவங்கள குறை சொல்லுவீங்க :)//

அது அவங்க சுதந்திரமாக இருந்தாலும் ஒரு சமுகத்தின் கலாசாரத்தை மீற முடியுமோ....

உங்கள் வருகைக்கு நன்றி நண்பா...

Admin said...

//முனைவர் சே.கல்பனா கூறியது...
ஆடை என்பது அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப அணியலாம் என்றாலும் பிறருடைய கவனத்தைச் சிதறடிக்காமல் இருப்பது நலம்...........தவறுகள் நடக்க வாய்ப்பை நாமே ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு பிறகு ......அடித்துக்கொண்டு என்ன பயன்.......



//முனைவர் சே.கல்பனா கூறியது...
இவ்வுலகில் நல்லது கெட்டது என்ற இரண்டு எங்கும் உண்டு எதனைக கொள்ளவேண்டும் என்பதிலும் எதனைத் தள்ளவேண்டும்
என்பதிலும் தெளிவாக இருக்கவேண்டும்........நம்மவர்கள் தள்ளவேண்டியதைக் கொள்வதும் கொள்ளவேண்டியதையும் தள்ளுகின்றார்கள்..........//


உண்மைதான் தங்களில் தவறுகளை வைத்துக்கொண்டு மற்றவர்கள் மீது திணிப்பவர்களே இவர்கள்...

கருத்துக்களுக்கு நன்றிகள்..

வால்பையன் said...

//நீங்க சொன்ன உதாரணங்கள் எல்லாம் கலாச்சாரம் அல்ல... அவை மூட நம்பிக்கைகள்!//

ஒருகாலத்தில் கலாச்சாரமாக இருந்ததைத் தான் மூடநம்ப்பிக்கைகள் என்று ஒழித்தார்கள்!

ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன்!
இப்போதய நிலைக்கு ஒரு பெரியார் பத்தாது!

முடியல!

Admin said...

//புல்லட் கூறியது...
ஆஹா! ஆஹா! நம்ம கட்சி பிரதர் நீங்க... உதைச் சொல்லப்போய்தான் முன்னம் பொம்பளைக்கு வால்பிடிக்கிறவங்களும் பெண்ணிய தீவிர வாதிகளும் நமக்கு குண்டு வைக்கத்திரிஞ்சாங்க..கொஞ்சம் டீசன்டா உடுத்துங்கன்டு சொன்னா அடிக்க வாறாங்க ... நாம என்னத்த பண்ண? முனைவர் கல்பனா , பிரியங்கா அருமையா சொல்லி இருக்கிறீங்க..//



வாங்க தலைவா... அரை குறையாய் திரிபவர்களுக்கு வால்ப்பிடிப்பதுக்கும் காரணம் இருக்கு... என்ன அவங்க கண்குளிர இரசிக்கத்தான். வேற என்ன....

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா..

வால்பையன் said...

//அரை குறையாய் திரிபவர்களுக்கு வால்ப்பிடிப்பதுக்கும் காரணம் இருக்கு... என்ன அவங்க கண்குளிர இரசிக்கத்தான். வேற என்ன....//

நிறைய நல்லவங்க மத்தியில வந்து மாட்டிகிட்டேனே!

சந்ரு said...

//வால்பையன் கூறியது...
//அரை குறையாய் திரிபவர்களுக்கு வால்ப்பிடிப்பதுக்கும் காரணம் இருக்கு... என்ன அவங்க கண்குளிர இரசிக்கத்தான். வேற என்ன....//

நிறைய நல்லவங்க மத்தியில வந்து மாட்டிகிட்டேனே!//

நாங்க நல்லவங்க என்று சொல்லவில்லை தல..... அத நாங்க சொள்ளக்கூடாது...

வால்பையன் said...

//நாங்க நல்லவங்க என்று சொல்லவில்லை தல..... அத நாங்க சொள்ளக்கூடாது... //

இதுக்காக அரசியல்கூட்டத்துலருந்து ஆளா கூட்டியாற முடியும்!
நம்மளே நேரம் கிடைக்கும் போது சொல்லிக்க வேண்டியது தான்!

Saravanan Trichy said...

கலாச்சாரம்னா என்ன? மனிதனின் வாழ்வியல் முறைதானே? அப்போது இருந்த மக்களின் சடங்குகள்,சம்பிரதாயங்கள்,வாழ்வு தானே கலாச்சாரம். இப்போது தானே நீங்கள் இவற்றை( குழந்தை திருமணம், குலக்கல்வி, உடன்கட்டை ஏறுதல்) எல்லாம் மூடநம்பிக்கை என்கிறீர்கள்.
இப்போது மூடநம்பிக்கை எனின் அப்போது நம்பிக்கை. தமிழரின் வாழ்வியலில் இது இல்லை என்று சொல்லுங்கள். . உடை கலாச்சாரம் பற்றி என்ன சொல்வது...அதற்க்கு சோழர் கால சிலைகளே சாட்சி!

வால்பையன் said...

குட்டிபிரபு!

செக்கில் மாட்டிய மாடுகளை தெரியுமா!?
அதற்கு வண்டி ஓட்ட தெரியாது!
சுத்தி சுத்தி தான் வரும்!

நான் வண்டி மாடு!
நீங்களும் அப்படிதான்னு தெரியுது!
ஏன் செக்குமாட்டை வண்டிமாடாக்க ட்ரை பண்றிங்க!

சந்ரு said...

//வால்பையன் கூறியது...
குட்டிபிரபு!

செக்கில் மாட்டிய மாடுகளை தெரியுமா!?
அதற்கு வண்டி ஓட்ட தெரியாது!
சுத்தி சுத்தி தான் வரும்!

நான் வண்டி மாடு!
நீங்களும் அப்படிதான்னு தெரியுது!
ஏன் செக்குமாட்டை வண்டிமாடாக்க ட்ரை பண்றிங்க!//



யார் சொன்னது செக்கில் மாட்டிய மாடுகளுக்கு வண்டி ஓட்டத் தெரியாது என்று இரண்டும் செய்யும் மாடுகளை நீங்கள் பார்த்ததில்லை போலும்...

Saravanan Trichy said...

@ வால்பையன்
சும்மா பொழுது போவாமதான்!

வால்பையன் said...

//யார் சொன்னது செக்கில் மாட்டிய மாடுகளுக்கு வண்டி ஓட்டத் தெரியாது என்று இரண்டும் செய்யும் மாடுகளை நீங்கள் பார்த்ததில்லை போலும்... //

அப்ப சரி!
உருப்பட்டா மாதிரி தான்!
நின்ன இடத்துலயே சுத்திகிட்டு இருங்க!

சந்ரு said...

இது எங்கேயோ போகிறது தலைப்புக்கு ஏற்ற விவாதம் போல் தெரியவில்லை. இனி நான் போக வேண்டும் உங்களுக்கான பதில்கள் நாளை தொடரும்

வால்பையன் said...

//இது எங்கேயோ போகிறது தலைப்புக்கு ஏற்ற விவாதம் போல் தெரியவில்லை.//

புதுசா எதோ கருத்து சொன்னாமாதிரி கவலை படுறிங்களே!
நேத்து பின்னூட்டத்தில் சொன்னதை தான் பதிவா போட்றுக்கிங்க!

நாங்க என்னத்த சொல்ல!

Saravanan Trichy said...

சந்ரு...
உங்களுக்கு மாடர்ன் டிரஸ் போட்ட மகாலக்ஷ்மி மனைவியா வரணும்னு "செல்போன்" மாரியம்மன் கிட்ட வேண்டிகிறேன்..

ப்ரியமுடன் வசந்த் said...

சந்ரு பாவம்பா பொண்ணுங்களும் பசங்களும் விட்ருங்க....

sakthi said...

நல்ல பதிவு

குறை ஒன்றும் இல்லை !!! said...

//அது அவங்க சுதந்திரமாக இருந்தாலும் ஒரு சமுகத்தின் கலாசாரத்தை மீற முடியுமோ.... //
கலாச்சாரம் மனச பொருத்ததுங்க... அவங்கவங்க ஆடைய அவங்கவங்க தேர்ந்தெடுத்துக்குறாங்க..இதுல சமுதாயம் எங்கே வந்துச்சு? கவுண்டர் பாணில சொல்லனும்னா இந்த சமுதாய காவலர்கள் தொல்ல தாங்க முடியலடா சாமி.. இல்லே உங்களுக்கு உண்மையிலேயே இப்படி அக்கரை இருந்தா சம்பந்தப்பட்ட ஆளுகிட்ட சொல்லலாமேங்க :)

கலாச்சாரம், பண்பாடு எல்லாம் .......

சந்ரு said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி பிரியங்கா...

சந்ரு said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி குட்டி பிரபு...

சந்ரு said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி வால்ஸ்...

சந்ரு said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி வசந்த்...

சந்ரு said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி குறை ஒன்றும் இல்லை...

சந்ரு said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சக்தி...

Menaga Sathia said...

//ந்ரு...
உங்களுக்கு மாடர்ன் டிரஸ் போட்ட மகாலக்ஷ்மி மனைவியா வரணும்னு "செல்போன்" மாரியம்மன் கிட்ட வேண்டிகிறேன்..//ஹா ஹா

//அந்த இடுகையிலே நான் உடை பற்றிச் சொல்லி இருந்தேன். எந்த ஒரு சமூகமும் உடையினைக் குறை, அல்லது உடுத்த வேண்டாம் என்று சொல்லி இருக்கின்றதா இல்லையே. எதற்காக நாம் உடை அணிகின்றோம். அரைகுறை ஆடையுடன் அலைவதைவிட ஆடையின்றி திரியலாமே. சுதந்திரம் இருக்கிறதுதான் சுதந்திரம் இருக்கின்றது என்று சமூகக் கட்டமைப்பை மீறி ஆடையின்றி போக முடியுமா.//
உண்மை தான் சந்ரு.இப்போ பலரும் ஆடை உடுத்துகிறொம் என்கிற பேரில் கைக்குட்டை அணியறாங்க.என்னத்த சொல்றது..

ஹேமா said...

சந்ரு,வெளிநாட்டுக்காரன் தன் சூழலுக்கு ஏற்ப உடை உடுத்துகிறான்.
அவன் கலாசாரமும் அதற்கு ஒத்துப்போகிறது.அதை எம்மவர்கள் நாகரீகம் என்று சொல்லிக்கொண்டு வேடுவர் போலத் திரிகிறார்கள்.மானம் காக்க உடை என்பதை விட மானத்தை விற்கத்தானே உடைகள் இப்போ.ஆனால் எங்கள்
சினிமாக்களில் காட்டும் உடைகள் போல வெளிநாட்டுக்காரர்கள் கூட உடுத்துவதில்லை.அவ்வளவு கேவலம்.உடுத்தும் சேலையில்கூட எவ்வளவு முடியுமோ அவ்வளவு கவர்ச்சியைக் காட்டுகிறார்கள்.

ஆ.ஞானசேகரன் said...

சூடான இடுக்கையா இருக்கு,...

ஆடை என்பது அவரவர் விருப்பம் என்றாலும். அந்தந்த நாட்டு கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு இருப்பதுதான் நல்லது. அது மாறும்பொழுதான் பிரச்சனை ஏற்படுகின்றது. அதே போல் மாற்றங்களை உடனே நம்மால் ஏற்றுகொல்லவும் முடியாதது நம் கண்ணோட்டமும் ஒரு காரணம். சில மாற்றகளை காலப்போக்கில் சரியாகிவிடுகின்றது. இதைப் பற்றி நானும் ஒரு இடுகை இட வேண்டும் என்றுருந்தேன். சமயம் கிடைத்தால் இடுகின்றேன் தலைவா.. நல்ல இடுகை பராட்டுகள்

கோவி.மதிவரன் said...

ஆடை அணிவது அவரவர் விருப்பமாக இருக்கலாம். ஆனால், நமக்கென்று ஒரு பண்பாடு இருக்கின்றது. அடையாளமிருக்கின்றது. அவற்றைக் காப்பது யார்? அடுத்தவரா வந்து காப்பார். எந்த உடைய அணிந்தாலும் நமது இனத்திற்கு ஊறு விளைவிக்கின்ற அளவு இல்லாமல் இருந்தால் சிறப்பு.

அவனவன் மொழி இனத்தைப்
பிறனெவன் காப்பான் வந்தே

யோ வொய்ஸ் (யோகா) said...

இன்றைய தேதியில் கலாச்சாரம் எங்க போய் கொண்டிருக்கிறது என தெரியவில்லை. ஆனால் தமிழ் பெண்களை பொறுத்தவரை மற்றைய எல்லா நாடுகளை விடவும் நம்ம இலங்கை ரொம்பவே பரவாயில்லை என கூறலாம்.

குடும்ப குத்துவிளக்காக உடு்க்கும் பெண்களிடம் மரியாதையாக நடக்க தோன்றும் மனசு. அரைகுறையாக உடுத்துவர்களிடம் ............. மாதிரி அல்லவா யோசிக்க வைக்கிறது. இதை பெண்ணியவாதிகள் எதிர்த்தாலும், நான் பெண்ணடிமைவாதி அல்ல. அவர் அவர்களுக்கு என்று சுதந்திரம் இருக்கிறது விரும்பிய உடையை உடுப்பதற்கு. ஆனால் அதுவே அடுத்தர்கள் கண்ணை உறுத்துமானால்?

இல்லை என கூறுபவர்களிடம் ஒரு சிறு உதாரணம் கேட்கிறேன். உங்கள் மனைவி சினேகா மாதிரி(2வருடங்களுக்கு முன்) உடுத்துவதையா அல்லது நமீதா மாதிரி உடுத்துவதையா விரும்புகிறார்கள்?

நந்தா said...

பாஸ் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. ரொம்ப லாவகமா அதை தள்ளி விட்டுட்டு நேத்து பின்னூட்டத்தில சொன்னதையே திரும்ப சொல்லி இன்னொரு பதிவுல பதில் சொல்லிட்டேன்னு பதில் சொல்றீங்க. உண்மையிலேயே உடையை பற்றி மட்டும்தான் நீங்கள் கவலை பட்டீங்கன்னா ஒரு பொண்ணு ஹை ஹீல்ஸ் செருப்பு போடறதைப் பார்த்து கூட நீங்கள் வெந்து புலம்புவதேன். அதற்கு சூப்பர்னு 4 பேரு பாராட்டி வேறு சென்றிருக்கிறார்கள்.

உணமையிலேயே இது அடுத்தவர் சுதந்திரத்தில தலையிடற விஷயம்னு உங்களுக்கு தோணவே இல்லையா? உடைகளுக்குதான் கலாச்சாரம் அது இதுன்னு ஜல்லியடிச்சிருக்கீங்க. ஹை ஹீல்ஸ் செருப்புக்கு என்ன பெயரை சொல்லப் போறீங்க. இல்லை இதுவும், நீங்க சொன்ன கலாச்சாரத்தை கட்டிக் காப்பாத்தற லிஸ்ட்ல வந்து சேருதுன்னா, முதல்ல எநத ஆம்பளை பையனும் "வுட்லேண்ட்ஸ்"டைப் ஷூ போடக்கூடாதுன்னும், ஜீன்ஸ் போடக்கூடாதுன்னும் ஒரு பதிவு போடுங்களேன்.

அய்யா நம்ம நாடு வெப்பமான நாடுய்யா. வெள்ளைக்காரன்தான் பைத்தியக்காரத் தனமா ஜீன்ஸ் போட்டுக்கிட்டிருக்கான்னா, வெக்கமில்லாம ஏண்டா பசங்களா இதைப் போட்டுக்கிட்டு சுத்திக்கிட்டிருக்கீங்கன்னு ஒரு பதிவு போட்டு, ஆம்பளைங்கக்கிட்ட தொலைஞ்சு போய்க்கிட்டிருக்கிற நம்ம கலாச்சாரத்தையும்தான் கொஞ்சம் காப்பாத்துங்களேஎன்.

பாஸ் முதல்ல நம்ம இனத்துல இருக்கிற முகமூடியை கிழியுங்க பாஸ். அப்புறம் அடுத்த "Gender" ல இருக்கிற அயோக்கியத்தனத்தை கேட்போம். யாராவது ஒரு பொண்ணு இங்க வந்து "நீங்க என்னய்யா யோக்கியமா கிழிக்கறீங்கன்னு எங்களைக் கேள்வி கேக்கறீங்கன்னு" திருப்பிக் கேட்டா என்ன பாஸ் பண்றது?

அதனால அந்த மாதிரி சமயத்துல நம்மளை நாமே காப்பாத்திக்கறதுக்காவது நீங்க ஆம்பளைங்களுக்கு அட்வைஸ் பண்ற மாதிரி போடுங்களேன். உங்களால முடியாது. ஏன்னா பொம்பளைங்கதான இளிச்சவாய்ங்க. சம்பந்தம் இருக்கோ இல்லையோ, ஊருல வர்றவன் போறவன் எல்லாம் அறிவுரை சொல்லலாம்.("ன்" என்ற விகுதியை பொதுவாக சொல்கிறேன். தனி நபர்களையோ, உங்களையோ குறிக்க பயன்படுத்த வில்லை)

நந்தா said...

மார்புக்கச்சையை அணிய உரிமை மறுப்பு, கோவில்களுக்குள் ஒரு சில இனத்தார்க்கு உரிமை மறுப்பு, தேவதாசி முறை, பொட்டழிப்பு, உடன்கட்டை, டீக்கடை தனி கிளாஸ் போன்ற அனைத்தும் இந்தியாவின் கலாச்சாரங்களாய் ஒரு காலத்தில் இருந்தவைதான். இதில் சில இன்னும் சில இடங்களில் நடப்பவைதான். வசதியாய் மூட நம்பிக்கைகள் என்று சொல்லி விட்டால் அவை ப்ன்னெடுங்காலமாக நடந்தவை என்பதை மாற்றமுடியாமல் போய் விடுமா?

சரி ஒரு டெஃபனீஷன் கொடுங்க. இதுதான் இந்தியக் கலாச்சாரம். ஒரு ஆண் இப்படிதான் உடை உடுத்த வேண்டும். ஒரு பெண் இப்படிதான் உடுத்த வேண்டும் என்று ஒரு விளக்கம் கொடுங்கள். இப்படி ஒரு 10 பேரைச் சொல்ல சொல்ல்லலாம். அதில் ஒரு ஒருமித்த கருத்தை உங்களால் ஏற்படுத்த முடியுமான்னு சொல்லுங்கள் பார்க்கலாம்.

நீங்கள் பேண்ட் சர்ட் ஓகேன்னு கூட சொல்லலாம். கி9ராமத்துல இருக்கிற பெரியவர். அது எப்படி வேட்டி சட்டைதான்யா நம்ம கலாச்சாரம், எங்கிருந்துய்யா பேண்ட் வந்தது என்று சொல்லுவார். உண்மையும் கூட அதுதான். விட்டுடறீங்களா? இன்னியில இருந்து வேஷ்டி சட்டை மட்டும்தான் அணிவேன். எனக்கு கலாச்சாரம்தான் முக்கியம். அதைக் கட்டி காக்க இந்த முடிவை எடுக்கிறேன்னு செய்யறீங்களா?

Muruganandan M.K. said...

"ஒரு இனமாகட்டும், சமுகமாகட்டும், மதமாகட்டும் சில நடைமுறைகள், பாரம்பரியங்கள், கலாசாரம் என்று இருக்கின்றது." என்று சொன்னீர்கள்.

ஆனால் அவையும் மாற்றமடையாதவை என்று சொல்ல முடியாது. உண்மையில் மாற்றமடையாதவை என எதுவுமே இல்லை.படிப்படியாக மாறவே செய்கின்றன.

நந்தா கூறியது போல " மார்புக் கச்சையை அணிய உரிமை மறுப்பு, கோவில்களுக்குள் ஒரு சில இனத்தார்க்கு உரிமை மறுப்பு, தேவதாசி முறை, பொட்டழிப்பு, உடன்கட்டை, டீக்கடை தனி கிளாஸ் போன்ற அனைத்தும்" மாறகின்றன, மாறவே செய்யும் என்றே கருதுகிறேன்.

கலை, கலசார, பண்பாட்டு விடயங்களில் நாம் தீவிரமான அடிப்படைவாதிகளாக இருப்பது எதிர்மறையான விளைவையே கொடுக்கும் எனத் தோன்றுகிறறது

வால்பையன் said...

//இல்லை என கூறுபவர்களிடம் ஒரு சிறு உதாரணம் கேட்கிறேன். உங்கள் மனைவி சினேகா மாதிரி(2வருடங்களுக்கு முன்) உடுத்துவதையா அல்லது நமீதா மாதிரி உடுத்துவதையா விரும்புகிறார்கள்? //

அனுராதா, டிஸ்கோசாந்தி, ஜெயமாலினி இவங்களை கல்யாணம் பண்ணவங்க மனுசங்க இல்லையா!?

எத்தனை பேர் உடல்விற்று பிழைத்த பெண்களுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறார்கள் தெரியுமா?

ஆபாசம் பார்க்கும் கண்ணில் இருக்கிறது!

nalina said...

//அனுராதா, டிஸ்கோசாந்தி, ஜெயமாலினி இவங்களை கல்யாணம் பண்ணவங்க மனுசங்க இல்லையா!?

எத்தனை பேர் உடல்விற்று பிழைத்த பெண்களுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறார்கள் தெரியுமா//

yes! aanaal appadi kalyaanam seythu kondapin cimema vil
udithinapadi udithinaal accept seythu koLvaarkaLaa , vaazhkkai koduththavarkaL?

maaRaka antha peNkaLe kanniyamaana udaikaLukku maaRividuvaarkaL.
Ithilirunthu therivathu enna? enaa ?

. said...

//வால்பய்யன் கூறியது...

ஒருகாலத்தில் கலாச்சாரமாக இருந்ததைத் தான் மூடநம்ப்பிக்கைகள் என்று ஒழித்தார்கள்!

ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன்!
இப்போதய நிலைக்கு ஒரு பெரியார் பத்தாது!

முடியல!
//

சரிங்க... ஒத்துக்கறேன், அன்றைய பழக்க வழக்கங்கள் தான் இன்று மூட நம்பிக்கைகளாக நாம் உணருகிறோம்! ஆனால், ஒன்று மட்டும் விளங்கவில்லை.. ஒரு பெண், தன்னை ஒரு முழுமையான ஆடை அணிந்து மற்றவர் கண் பார்வையிலிருந்து தன்னை மறைத்துக் கொள்வது எப்படி மூட நம்பிக்கை ஆகும்?

ஆடைகளை ஏன் குறைக்க வேண்டும்...??



//ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன்!
இப்போதய நிலைக்கு ஒரு பெரியார் பத்தாது!//


உங்க பெரியார் என்ன... பெண்களை ஆடையை குறைத்து போட்டுக் கோங்கன்னு சொன்னாரா என்ன?? அவரை ஏனுங்க இழுக்கறீங்க இதுல??

Saravanan Trichy said...

//maaRaka antha peNkaLe kanniyamaana udaikaLukku maaRividuvaarkaL.
Ithilirunthu therivathu enna? enaa ?//
மாறிடுவாங்கன்னு தெரியுதுல்ல..அப்பறம் ஏன் அவங்கள போயி தொந்தரவு பண்றீங்க.. அவங்க இஷ்டத்துக்கு விட்டுருங்களேன்.அந்த மாதிரி உடைகள் அணியுரதுனாலதான் பெண்களுக்கு பிரச்சனைன்னு சொல்லுறதெல்லாம் சும்மா! அப்படியே பிரச்சனைனு வந்தா உடை போட தைரியம் இருக்க அவங்களுக்கு பிரச்சனைய சமாளிக்கவும் தைரியம் இருக்கும்.

Saravanan Trichy said...

@பிரியங்கா
//ஒரு பெண், தன்னை ஒரு முழுமையான ஆடை அணிந்து மற்றவர் கண் பார்வையிலிருந்து தன்னை மறைத்துக் கொள்வது எப்படி மூட நம்பிக்கை ஆகும்?// ஒரு பெண், தன்னை ஒரு முழுமையான ஆடை அணிந்து மற்றவர் கண் பார்வையிலிருந்து தன்னை மறைத்துக் கொண்டால் மட்டுமே வாழமுடியும்னு நீங்க நம்புனா அது கண்டிப்பா மூட நம்பிக்கை தான்!
சரி நீச்சல் போட்டில கலந்துக்குற பொண்ணு என்ன உடை உடுத்துனா வெற்றி பெற முடியும்?

. said...

//நந்தா கூறியது...
மார்புக்கச்சையை அணிய உரிமை மறுப்பு, கோவில்களுக்குள் ஒரு சில இனத்தார்க்கு உரிமை மறுப்பு, தேவதாசி முறை, பொட்டழிப்பு, உடன்கட்டை, டீக்கடை தனி கிளாஸ் போன்ற அனைத்தும் இந்தியாவின் கலாச்சாரங்களாய் ஒரு காலத்தில் இருந்தவைதான். இதில் சில இன்னும் சில இடங்களில் நடப்பவைதான். வசதியாய் மூட நம்பிக்கைகள் என்று சொல்லி விட்டால் அவை ப்ன்னெடுங்காலமாக நடந்தவை என்பதை மாற்றமுடியாமல் போய் விடுமா?//

ஒழிக்க வேண்டியவற்றை ஒழித்துத் தான் ஆகா வேண்டும்ங்க!! ஆனா, ஆடையை குறைப்பதில் என்ன மகிழ்ச்சி??

//சரி ஒரு டெஃபனீஷன் கொடுங்க. இதுதான் இந்தியக் கலாச்சாரம். ஒரு ஆண் இப்படிதான் உடை உடுத்த வேண்டும். ஒரு பெண் இப்படிதான் உடுத்த வேண்டும் என்று ஒரு விளக்கம் கொடுங்கள்.//

ஆடை உடுத்துவதைப் பற்றி என்ன சொல்லணும்ங்க? அது அவங்க அவங்களுக்கா இருக்கனும்ங்க! ஒருவர் உடுத்தும் உடையில் தான் அவர்களுக்கு மரியாதை கிட்டும் ஒரு சமூகத்தில்!! அதற்காக எல்லோரும் பழமை வாதிகளாக இருக்க வேண்டும், புதியவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று யாரும் சொல்லவில்லை! மாற்றங்களை ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் அந்த மாற்றங்கள் நம் நாட்டை முன்னேற்றுவதில் இருந்தால் பரவாஇல்லையே?!
மேல்நாட்டுக் கலாச்சாரத்தின் (முறையை) ஆடைகளை வரவேற்கிறீர்கள்! சரி, அப்படிஎன்றால், அவர்கள் நாட்டில் "ஒருவனுக்கு ஒருத்தி என்ற முறை எல்லாம் இல்லை..." அதையும் ஏற்றுக் கொள்ள முடியுமா நம்மால்?






//இப்படி ஒரு 10 பேரைச் சொல்ல சொல்ல்லலாம். அதில் ஒரு ஒருமித்த கருத்தை உங்களால் ஏற்படுத்த முடியுமான்னு சொல்லுங்கள் பார்க்கலாம்.//

ஏங்க இப்டிலாம் கேக்கறீங்க? மேல்நாட்டுக் கலாச்சாரத்தை பின்படுத்தரோமுங்கர பேர்ல நம் நாட்டுக் கலாச்சாரம் சீரழிவது உங்களுக்கு தெரியலீங்களா?

. said...

//குட்டி பிரபு சொன்னது…
ஒரு பெண், தன்னை ஒரு முழுமையான ஆடை அணிந்து மற்றவர் கண் பார்வையிலிருந்து தன்னை மறைத்துக் கொண்டால் மட்டுமே வாழமுடியும்னு நீங்க நம்புனா அது கண்டிப்பா மூட நம்பிக்கை தான்!
சரி நீச்சல் போட்டில கலந்துக்குற பொண்ணு என்ன உடை உடுத்துனா வெற்றி பெற முடியும்?

//


நீங்க பேசறதப் பாத்தா விதண்டா வாதம் பண்ற மாறித் தான் தெரியுதுங்க! நீச்சல் போட்டிக்கு முழூ உடையப் போட்டுக்கணுமா வேணாமா ங்கறது இல்லங்க நம் கேள்வி! நீச்சலடிக்கும் போது எந்த உடை அணியறாங்களோ அந்த உடைய சாலைல போகும் போது அணிந்து நடந்தால் நன்றாகவா இருக்கும்?

Saravanan Trichy said...

@பிரியங்கா
//ஆடையை குறைப்பதில் என்ன மகிழ்ச்சி//
ஆடைய குறைன்னு இங்க யாரும் சொன்னதா எனக்கு தெரியல. ஆடை உடுத்துறது அவங்களோட தேவையா பொறுத்தது! கலாச்சாரம்ங்க்ற பேருல இதத்தான் நீ உடுத்தணும்னு சொல்லாதீங்கன்னு தான சொல்றோம்.
//ஆடை உடுத்துவதைப் பற்றி என்ன சொல்லணும்ங்க? அது அவங்க அவங்களுக்கா இருக்கனும்ங்க! ஒருவர் உடுத்தும் உடையில் தான் அவர்களுக்கு மரியாதை கிட்டும் ஒரு சமூகத்தில்!! //
அதைத்தானே நாங்களும் சொல்றோம் !

//அவர்கள் நாட்டில் "ஒருவனுக்கு ஒருத்தி என்ற முறை எல்லாம் இல்லை..." //
நம்ம ஊருல மட்டும் இருக்கா என்ன? ஒருத்திக்கு ஒருவன்னு வேணா சொல்லலாம் . "ஒருவனுக்கு ஒருத்தி" நோ சான்ஸ்...

Saravanan Trichy said...

//விதண்டா வாதம் // அப்படின்னா என்னன்னே தெரியாது எனக்கு!
//நீச்சலடிக்கும் போது எந்த உடை அணியறாங்களோ அந்த உடைய சாலைல போகும் போது அணிந்து நடந்தால் நன்றாகவா இருக்கும்?// அத முடிவு பண்ண வேண்டியது அவங்கதான். நாம இல்லைன்னு தான் நான் சொல்றேன்!

. said...

@குட்டி பிரபு...

உண்மை தான்ங்க... ஆடை அணியரவங்க முடிவு பண்ண வேண்டிய விஷயம் தான்.. அவங்களா யோசிக்க வேண்டிய விஷயம் தான்! நானும் என்னோட முதல் பின்னூட்டத்துல இதத் தான் சொன்னேன்! ஆனா, மூட நம்பிக்கையையும் இதையும் ஒண்ணா கோர்த்து விடவே நான் மேலும் வாதாட வேண்டிவந்தது!!

நந்தா said...

பிரியங்கா இங்கே வாதம் சற்றே திசை தப்பி போயிருக்கிறது அவ்வளவே. இங்கே நானாகட்டும், குட்டிபிரபு ஆகட்டும், வால்பையன் ஆகட்டும் வேறு சில நண்பர்களாகட்டும் நாங்கள் சொல்ல வந்தது கலாச்சாரம் என்ற பெயரைச் சொல்லி இன்னொருவரை கட்டளையிட, எவருக்கும் உரிமையில்லை என்பதே.

அப்படி மீறி செய்வதென்றால் அது கலாச்சாரத்தின் பெயராய் இருந்தாலும் சரி வேறு எந்த வடிவமாயிருந்தாலும் சரி அது ஆணாதிக்க அடக்குமுறைத்தனமே.

Saravanan Trichy said...

//உண்மை தான்ங்க... ஆடை அணியரவங்க முடிவு பண்ண வேண்டிய விஷயம் தான்.. அவங்களா யோசிக்க வேண்டிய விஷயம் தான்//
அவ்வளவு தான். விட்டுருங்க!

. said...

//நந்தா கூறியது...
பிரியங்கா இங்கே வாதம் சற்றே திசை தப்பி போயிருக்கிறது அவ்வளவே. இங்கே நானாகட்டும், குட்டிபிரபு ஆகட்டும், வால்பையன் ஆகட்டும் வேறு சில நண்பர்களாகட்டும் நாங்கள் சொல்ல வந்தது கலாச்சாரம் என்ற பெயரைச் சொல்லி இன்னொருவரை கட்டளையிட, எவருக்கும் உரிமையில்லை என்பதே.

அப்படி மீறி செய்வதென்றால் அது கலாச்சாரத்தின் பெயராய் இருந்தாலும் சரி வேறு எந்த வடிவமாயிருந்தாலும் சரி அது ஆணாதிக்க அடக்குமுறைத்தனமே.

//

உண்மை தான்.. நான் ஒப்புக்கொள்கிறேன்... 'இப்படித் தான் இருக்க வேண்டும்' என்று யாரும் மற்றவரை கட்டளை இட முடியாது, அது அவர் மனைவியாக இருந்தாலும் கூட..!! அது அவர்களா உணர வேண்டிய ஒன்று...

உங்கள் கருத்திற்கும் விளக்கத்திற்கும் நன்றி நந்தா... :)

வால்பையன் said...

அன்பின் நளினா!

பாரம்பரியம் பாரம்பரியமாக சொல்லி கொடுத்ததையே நல்லவகைகள் என நம்பி கொண்டிருக்கும் காலம் மாறிவிட்டது! விதிவிலக்காக சந்ரு போல் ஒன்றிரண்டு பேர்கள் இருக்கிறார்கள்!
உலகம் பெண்கலீன் தனிபட்ட சுதந்திரத்துக்கு மதிப்பு அளிக்க ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டது!

கதாநாயகியின் பின்னால் கச்சை கட்டி ஆடிகொண்டிருப்பவர்கள் பலர் திருமணம் ஆனவர்கள், கோடம்பாக்கத்தில் சில வருடம் குப்பை கொட்டிய அனுபவத்தில் என்னால் உறுதியாக்ச் சொல்ல முடியும்!

கலாச்சாரம் என்ற பெயரில் எவ்வளவு நாளுக்கு தான் பெண்களை அடிமை படுத்தி வைப்பீர்கள்!

அவர்களது உடை அவர்களது சுதந்திரம் என்றால், சுதந்திரம் என்ற பெயரில் துணியில்லாமல் போகலாமே என்று சந்ரு பிதற்றுகிறார்!

அவருக்கு அரைகுறையாக பார்க்க பிடிக்கவில்லை போலும்!

வால்பையன் said...

//ஒரு பெண், தன்னை ஒரு முழுமையான ஆடை அணிந்து மற்றவர் கண் பார்வையிலிருந்து தன்னை மறைத்துக் கொள்வது எப்படி மூட நம்பிக்கை ஆகும்?//

ஆண்கள் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் தயவுசெய்து வீட்டை விட்டு வெளியவே வராதிங்க! அப்படிபட்ட ஆண்கள் நீங்கள் முழுதாக மறைத்தாலும் செய்வதை செய்வார்கள்!

முழுதாக மறைப்பதும், அவர்கள் இஷடத்துக்கு ஆடை உடுத்துவதும் அவரவர் விருப்பம் என்றே கூறினேன்!
ஆடையை குறைப்பது தான் பெண் சுதந்திரம் என்று சொல்லவில்லை!

புரிகிறதா!?
அவரவர் விருப்பம்

வால்பையன் said...

பெரியார் பாடுப்பட்டது பெண் சுதந்திரத்துக்காக! ஆடையை குறைக்க அல்ல!

பெரியாரை பற்றி உங்களுக்கு தெரிந்தது குறைவு என நினைக்கிறேன்!

”பெண் ஏன் அடிமையானாள்?”

புத்தகம் படியுங்கள்!

வால்பையன் said...

//ஒழிக்க வேண்டியவற்றை ஒழித்துத் தான் ஆகா வேண்டும்ங்க!! ஆனா, ஆடையை குறைப்பதில் என்ன மகிழ்ச்சி??//

பாதியில வந்ததால் உங்களுக்கு புரியலைன்னு நினைக்கிறேன்!
ஆடை குறைப்பதோ, முழுதாக மறைப்பதோ அவரவர் விருப்பம்!
கலாச்சார போலிஸ்களுக்கு அங்கே வேலை இல்லை என்பதே என் கருத்து!

வால்பையன் said...

//அவர்கள் நாட்டில் "ஒருவனுக்கு ஒருத்தி என்ற முறை எல்லாம் இல்லை..." அதையும் ஏற்றுக் கொள்ள முடியுமா நம்மால்?//

நாலு ஆங்கிலபடம் பார்த்துட்டு அவர்கள் நாட்டில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற முறை இல்லை என்று உளரக்கூடாது!
குடும்பம் என்ற அமைப்பு எல்லா நாட்டிலும் உண்டு!
நம் நாட்டில் உள்ளது போல் தான் அவர்கள் நாட்டிலும், விவாகரத்தும், கள்ளகாதலும்!

இந்தியாயை தலையில் வைத்த ஆட ஒன்றுமில்லை!காமத்தை பெரிதும் கொண்டாடிய நாடு தான் இந்தியா!
வேறு எந்த நாட்டு காலாச்சாரத்திலும் உடலுறவு கொள்வது போல் வழிபாட்டு தளங்களில் இல்லை!

மற்ற நாடுகளை குறை சொல்வதற்கு முன் தகுந்த ஆதராங்களுடன் வாருங்கள்!

வால்பையன் said...

//நம் நாட்டுக் கலாச்சாரம் சீரழிவது உங்களுக்கு தெரியலீங்களா? //

அதை தான் வரும் கேட்கிறார்!

எது எது நம் நாட்டு கலாச்சாரம்!
தயவுசெய்து விளக்குங்களேன்!

வால்பையன் said...

நந்தா முன்னாடியே சுருக்க்மா சொல்லிட்டார்!

என் பின்னூட்டங்கள் சும்மா ஒப்புக்கு இருந்துட்டு போகட்டும்!

. said...

@வால்பய்யன்...


நீங்க முதலில் என்னை மன்னிக்கணும்... 'சந்துரு'வின் முந்தைய இடுகையை மட்டும் தான் நான் படித்தேன் அவர் பின்னூட்டத்தில் அவர் கொடுத்த பதில்களை நான் படிக்கவில்லை! அதைப் படிக்காமல் இங்கு இந்த இடுகைக்கு பின்னூட்டமிட்டது என் தவறு தான்..

ஆனால், நானொன்றும் தவறாக பின்னூட்டமிடவில்லையே...

அண்டை நாட்டிலும் குடும்பங்கள் இருக்கின்றது தான்.. நான் இல்லை என்று சொல்லவில்லை... ஆனால், அவர்கள் நாட்டில் எதுவும் தவறில்லை என்று தான் சொல்ல நினைக்கிறேன்... நம் நாட்டில், தெருவில் ஒரு ஆணும், பெண்ணும் ஒன்றாகப் பேசிக்கொண்டே நடந்து சென்றால் அவர்களைத் தவறான கண்ணோட்டத்தில் தானே பார்க்கிறார்கள் சில பலர்.. இந்த கண்ணோட்டம் கிராமங்களில் மட்டும் இல்லை, பல நகரங்களிலும் தான்...

மற்ற நாடுகள நான் ஏதும் குறை சொல்லலங்க... தயவு செஞ்சி தப்பா நெனைக்காதீங்க... நான் முன்னாடியே சொன்னது போல்... சந்துருவின் முந்தைய இடுகைக்கான பதில்களை நான் படிக்காமல் விட்டது என் தவறு தான்... அவருடைய பதில்களை படித்த பின் தான் இந்த பின்னூட்டத்தினை அளிக்கிறேன்...

அதில்...
சந்துருவின் இந்த பதில் எனக்கு வருத்தமான ஒன்று... "நாகரீக மோகம் பிடித்து நாயாய் அலையும் பெண்களைத்தான் சொன்னேன்."

மற்றவர்களை(பெண்களை) இப்படி ஒரு சொல் சொல்ல அவருக்கு எந்த உரிமையும் இல்லை...

அப்புறம் இன்னொரு விஷயம், பெரியாரைப் பற்றி நான் ஏதும் தவறா சொல்லலீங்க.. என்னுடைய மாமனார் பெரியார் தொண்டர் தான்! எனக்கு பெரியார் பற்றி அதிகம் தெரியவில்லை ன்னாலும்...எனக்கு அவர்கள் இருவரின்(என் மாமா மற்றும் பெரியார்) மீதும் மதிப்பும் மரியாதையும் நிறையவே உண்டு...!!

நான் சொன்ன கருத்துகள்ல ஏதாச்சும் பிழை இருந்தா என்ன மன்னிச்சிடுங்க...

வால்பையன் said...

மன்னிப்பு கேட்கும் அளவுக்கு இங்கே எதுவும் தவறாக நடக்கவில்லை!

நேற்று தவறென்று பட்டது, இன்று சரியாகிவிட்டது!

பெண்கனின் உடையில் புடவையை விட சுடிதாரே இன்று முதலிடம், ஆனால் சில வருடங்களுக்கு முன் அப்படி இருக்க முடியுமா!?

மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது!
மற்றவர்களை குறைசொல்லியே ஆண்கள் முன்னிலையில் இருக்கிறார்கள்! பெண்களை கலாச்சாரத்தை காப்பாற்ற சொல்லும் அவர்கள் கலாச்சாரத்தை காப்பற்ற என்ன செய்யுறாங்கன்னு யாருக்கும் தெரிவதில்லை!

உள்ளே ஆயிரதெட்டு அழுக்கை மறைத்து வெளியே நல்லவர்களாக நடிப்பதை விட, நான் இப்படித்தான் என்று வாழ்வது குற்ற உணர்வு அற்ற நிம்மதியான வாழ்வை தரும்!

கலாச்சாரத்தை காப்பாற்றுவதை விட தற்போது மனிதனுக்கு தேவை நிம்மதியான வாழ்க்கை! தன்னிறைவு மட்டுமே என்பது என் கருத்து!

கிருஷ்ண மூர்த்தி S said...

ஆஹா! அடுத்த ரவுண்டை ஆரம்பிச்சுட்டாங்கையா! ஆரம்பிச்சுட்டாங்கையா!! எங்க வால்ஸ் எங்க வந்தாலும் ஒரு கலக்கு கலக்கிட்டு தான் வர்றாரு! வேற வேலையில் இருந்ததால, பட்டாசுச் சத்தம் கொஞ்சம் லேட்டாத் தான் கேட்டது!
/கலாச்சாரத்தை காப்பாற்றுவதை விட தற்போது மனிதனுக்கு தேவை நிம்மதியான வாழ்க்கை! தன்னிறைவு மட்டுமே என்பது என் கருத்து!/

கையக் கொடுங்க வால்ஸ்!

நிம்மதியான வாழ்க்கை, தன்னிறைவு எல்லாம் எங்கிருந்து வரும் என்று சொல்ல வருகிறீர்கள்? எப்படி வேண்டுமானாலும் வாழலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றிருப்பதிலா?

இல்லை, நாமே ஒரு சுயகட்டுப்பாட்டுக்குள், ஒரு எல்லைக்குள் இருப்பதில் இருந்தா? அப்படி முடியாதபோது, கொஞ்சம் பெரியவர்கள் சொல்கிறபடி, அதற்குக் கட்டுப்பாட்டு வாழ்வதிலா?

கலாசாரம் என்பது வெறும் போதனையோ, நீ இதைத் தான் செய்ய வேண்டும் என்றோ அல்லது செய்யக் கூடாது என்று உத்தரவு போடுகிற டிரஸ் கோட் மட்டுமல்ல.
வாழ்க்கையை இப்படி ஒருகட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்தால், நல்லது என்று அனுபவத்தில் கண்டு சொன்னதன் தொகுப்பு. அனுபவத்தில் நல்லது இதுவென்று கண்டு மாற்றிக் கொள்ளக் கூடியது தான்.

வால்பையன் said...

கலாச்சாரம் என்பது வாழ்ந்த முறை என்று வைத்து கொள்ளலாம்! அப்போ நாமெல்லாம் வாழவில்லையா!?

அவர்கள் சொல்வதை தான் பின் தொடர வேண்டுமா!?
நல்லதோ கெட்டதோ அனுபவமே சிறந்த பாடம்!

Muniappan Pakkangal said...

Westernization in dresses is very minimal.Itz not a thing for concern.You can see sexy dresses only in cinema.Tamil ladies wear Sarees only,Chudiars and nighties for their convenience.

கிருஷ்ண மூர்த்தி S said...

re-inventint the wheel என்று ஏற்கெனெவே தெரிந்ததையே திரும்பத் திரும்பக் கண்டுபிடிக்க முயன்று நேரத்தைத் தொலைக்காதே என்று அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

பட்டறிவது அல்லது கெட்டறிவது தான்
வாழும் ஒரே வழியல்ல! தன்னுடைய அனுபவங்களில் இருந்தும், முன்னோர் அனுபவங்களில் இருந்தும் கற்றுக்கொள்கிற வழிதான் கலாச்சாரமாகச் சொல்லப் படுகிறது.

வால்பையன் said...

முன்னோர் அறிவை தெரிந்து கொள்ளதல் மட்டுமே அவசியமாக படுகிறது, ஆனால் அதை கடைபிடித்தே ஆகவேண்டுமென்பது தேவையற்றது!
சூழலும், வேகமும் மாற்றம் அடைந்து விட்டது!

ஆணுக்கு எந்த வகையிலும் பெண்கள் எந்த வகையிலும் சளைத்தவர்களல்ல என்று நிரூபித்தாயிற்று!

தற்காப்பு கலையிலும் நன்றாக தேர்ச்சி கொடுத்து விடுவோம்! எவன் பக்கத்துல வர்றான் பாத்துருவோம்!


இப்படிக்கு
பெண்ணை பெற்ற பெருமையுடன்
வால்பையன்

சப்ராஸ் அபூ பக்கர் said...

அழைப்பு....

"அவன் ஒரு அறிவிப்பாளன்" எனும் தலைப்பில் ஒரு கவிதை....

வாசிக்க இங்கே வாருங்கள்.....

http://Safrasvfm.blogspot.com

கிருஷ்ண மூர்த்தி S said...

பெண்ணைப் பெற்ற பெருமையைச் சொன்ன வால்பையனுக்கு வாழ்த்துக்கள்!அப்படியே, பெண்ணும் பெருமைப் படுகிற மாதிரி வாழ்க்கையில் உயர்நலம் பெறவும் வாழ்த்துக்கள்!

/தற்காப்பு கலையிலும் நன்றாக தேர்ச்சி கொடுத்து விடுவோம்! எவன் பக்கத்துல வர்றான் பாத்துருவோம்!/

இப்படிச் சொன்னதற்காக மட்டும் அல்ல:-)))))

Menaga Sathia said...

இந்த லிங்கினை பார்க்கவும்.

http://sashiga.blogspot.com/2009/08/scrumptious-blog-award.html

Post a Comment