Saturday 25 August 2012

நம் தலையில் நாமே மண்ணை வாரிப்போட தயாரா?

அன்புக்கினிய தமிழ் உறவுகளே!.... சற்றேனும் சிந்தியுங்கள்….
கிழக்கு மாகாணசபை தேர்தல் இடம்பெற இருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் கிழக்கு தமிழர்களாகிய நாம் சிந்தித்து செயற்படவேண்டியவர்களாக இருக்கின்றோம். கிழக்கு மாகாணசபை தேர்தலிலே போட்டியிடுகின்ற கட்சிகள் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கின்றனவா என்று பார்க்கின்றபோது. வெறுமனே தமது சுயநல அரசியலுக்காகவே பல கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன.

இம் மாகாணசபை தேர்தலைப் பொறுத்தவரை கிழக்கு தமிழர்களுக்கு மிக முக்கியமான தேர்தலாக அமைய இருக்கின்றன. இத் தேர்தலை தமிழர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டிய தருணமிது. இத் தேர்தலைப் பொறுத்தவரை முதலமைச்சராக வருவது முஸ்லிமா, தமிழனா என்கின்ற கோசங்கள் ஒரு புறமிருக்க கிழக்கிலே இடம்பெற்றுவரும் துரித அபிவிருத்திகள் தொடர்வதா? இல்லையா? என்பதனை தீர்மானிக்கும் ஒரு தேர்தலாகவும், பல சவால்கள் நிறைந்த ஒரு தேர்தலாகவும் அமைய இருக்கின்றது.

இன்றைய காலகட்டத்தில் கிழக்கின் இன்றியமையாத முக்கிய தேவை என்ன என்பதனை நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற கொடுர யுத்தத்தின் காரணமாக எமது கிழக்கு மாகாணம் சின்னாபின்னமாக்கப்பட்டன. எமது மக்கள் நிம்மதியற்று வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்று எமது பிரதேசங்கள் துரிதமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. எமது மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். கிழக்கிலே இடம்பெறுகின்ற அபிவிருத்திகள் தொடரவேண்டுமா? இன்றைய எமது நிம்மதியான வாழ்க்கை தொடரவேண்டுமா? அல்லது எமது பிரதேசத்திலே இடம்பெறுகின்ற அபிவிருத்திகள் தொடரவேண்டுமா? இன்று நாம் வாழும் நிம்மதியான வாழ்க்கை தொடரவேண்டுமா என்பதனை கிழக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும்.
கடந்த 30 வருடங்களாக நாம் ஏதோ ஒரு வகையில் ஏமாற்றப்பட்டு வந்திருக்கின்றோம் என்பதனை நாம் இன்றுதான் உணர்ந்திருக்கின்றோம். கடந்தகால அரசியல் தலைமைகள் எமது மக்களை ஏமாற்றி தாம் சுயபோகங்களை அனுபவித்து வந்திருக்கின்றனர். கடந்த 60 வருடங்களுக்கு மேற்பட்ட தமிழரசுக் கட்சியின் அரசியல் வரலாற்றில் தமிழ் மக்களுக்காக எதனைச் செய்திருக்கின்றனர். ஆனாலும் தாம் சுகபோக வாழ்க்கை வாழ்ந்ததுடன் தமது குடும்பங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியிருக்கின்றனர்.

தமிழர்களின் வாக்குகளை பெறுவதற்காக காலங்காலமாக கூட்டமைப்பினர் சிங்கள பேரினவாதம் என்றும், தமிழீழம் என்று உணர்ச்சி வார்த்தைகளை மக்கள் மத்தியிலே விததைத்து மக்களை உசுப்பேற்றி அரசியல் இலாபம் தேடுகின்றனர். சிங்களப் பேரினவாதம் என்றும், தமிழீழமே எமது மூச்சு என்றும் தமிழீழ பிரகடனம் செய்த அமிர்தலிங்கமோ, அல்லது இன்று இருக்கின்ற சம்பந்தனோ, செல்வராஜாவோ, அரியநேந்திரனோ, யோகேஸ்வரனோ தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கு பற்றினரா? அல்லது தமது பிள்ளைகளை போராட்டத்தில் இணைத்துக்கொண்டனரா? தாம் அரசியலில் நிலைத்து நிற்பதற்காகவும் அரசியல் இலாபம் தேடவுமே இவர்களால் தமிழீழம் எனும் கோசங்களும் பிரகடனங்களும் செய்யப்பட்டன. இவர்களின் உணர்ச்சி வார்த்தைகளை நம்பியதன் பயனாக நாம் சந்தித்தது என்ன? பல இலட்சக் கணக்கான உயிர்களையும் உடமைகளையும் இழந்தோம். எமது பிரதேசம் சின்னாபின்னமாக்கப்பட்டன.

இன்று கிழக்கிலே என்ன நடக்கின்றது என்பதனை நாம் சிந்தித்தாக வேண்டும். கிழக்கு மாகாணசபையை பிள்ளையான் அவர்கள் பொறுப்பெற்றதன் பின்னரே கிழக்கு மாகாணம் துரிதமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது என்பதனை எவராலும் மறுக்க முடியாது. 60 வருடங்களுக்கு மேலான அரசியல் வரலாற்றினைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிள்ளையானின் நான்கு வருட ஆட்சியில் செய்த ஒரு வீத அபிவிருத்தியையாவது செய்திருக்கின்றனரா? அன்று கிழக்கு மாகாணசபை ஒன்று இல்லை என்று சொன்னவர்கள் இன்று கிழக்கிலே இடம்பெறுகின்ற அபிவிருத்திகளை இல்லாமல் செய்யவே பொட்டியிடுகின்றனர்.

இன்று பிள்ளையான் ஆயுதக்கழு என்று கோசமிடும் கூட்டமைப்பு வேட்பாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அவர்களின் கடந்தகால பக்கங்களை புரட்டிப் பாருங்கள் அன்புக்கினிய எம் உறவுகளே. இன்று கூட்டமைப்பினர் வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கின்றவர்கள் அன்று அயுதக் குழுக்களாக இருந்தபோது எமது மக்கள் பட்ட துன்பங்கள் அவலங்கள் எத்தனை எத்தனை கடந்த காலங்களை எண்ணிப் பாருங்கள்.

இன்று கூட்டமைப்பில் போட்டியிடுகின்ற ஜனாவாக இருக்கட்டும், பிரசன்னாவாக இருக்கட்டும், துரைரெட்னமாக இருக்கட்டும் இவர்கள் ஆயுதக் குழுக்களை வைத்து எத்தனை கொள்ளைகள் கொலைகளைச் செய்தனர். அவைகளை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். இவர்களின் அயுதக் குழுக்கள் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து எத்தனை ஆயிரம் தமிழர்களை கடத்தினார்கள் கொலை செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.

உறவுகளே சிந்தியுங்கள் எம்மை அன்று ஆட்டிப்படைத்த இவர்கள் மாகாணசபைக்கு சென்றால் எமக்காக என்ன செய்வார்கள் மிண்டும் எம்மை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்வார்கள். எமது இன்றைய தேவை என்ன? நிம்மதியான வாழ்க்கையும், சிதைக்கப்பட்ட எமது தேசத்தின் அபிவிருத்தியுமே. வெறுமனே கூட்டமைப்பின் கபட நாடகங்களையும் உணர்ச்சி வார்த்தைகளை நம்பி மீண்டும் நாம் பலிக்கடாவாக மாறும் சமூகமாக இல்லாமல் உண்மைகளையும் யதார்த்தங்களையும் உணர்ந்து சிறந்த முடியுகளை எடுப்போம்.

பிள்ளையானின் நான்கு வருட மாகாணசபை அட்சியிலே எமது மக்கள் நிம்மதி பெருமூச்சுடன் வாழ்கின்றனர். கிழக்கு மாகாணம் துரிதமாக வழர்ச்சி அடைந்திருக்கின்றது. இவை தொடரவேண்டுமாக இருந்தால் நிட்சயமாகவே நாம் பிள்ளையானை மீண்டும் முதலமைச்சராக்க வெண்டிய பொறுப்பு எமக்கிருக்கின்றது.
தொடரும்……….



Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 comments: on "நம் தலையில் நாமே மண்ணை வாரிப்போட தயாரா?"

Unknown said...

நிட்சயம் , மீண்டும் அவர் வெற்றி பெறுவார் நண்பா!!!

Post a Comment