கௌரவ தவிசாளர் அவர்களே,
கிழக்கு
மாகாண சபையின் 2012ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தினை இன்று
இச்சபையின் முன் சமர்ப்பிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
கிழக்கு
மாகாண சபையானது உத்வேகத்துடன் இயங்க ஆரம்பித்த நாள் முதல் தேசிய
கொள்கைகளுடன் இணைந்த வகையில் துறைசார் உபாயங்கள் மற்றும்புதிய இலக்குகளுடன்
கூடியஅபிவிருத்தி திட்டங்களுடன் எமது மாகாணமானது பல ஆக்கப+ர்வமான
அபிவிருத்திகளை அடைந்து கொண்டிருக்கின்றது. பயனுறுதிமிக்க வழிகாட்டல்களுடன்
இம் மாகாணத்தில் அடுத்து வரும் ஆண்டுகளில் பிராந்திய அபிவிருத்தியுடனான
உயர் பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு ஒருபலமான அடித்தளமும்
உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் இச்சபையில் பெருமிதத்துடன்
தெரிவித்துக்கொள்கின்றேன்.
முன்னேற்றப் போக்கு
இத்தகைய பின்னணியில், இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் கிழக்கு மாகாணத்தின்பங்களிப்பானது கணிசமான அளவில் அதிகரித்து2010 ஆம் ஆண்டில் 5.9 வீதத்தை அடைந்திருந்தது.இதன் மூலம் மாகாண ரீதியில் 7ஆம் இடத்தில் இருந்த எமது மாகாணம் 6ஆம் இடத்திற்கு முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமன்றி 2007 ஆம் ஆண்டு 185,000மில்லியன் ரூபாவாக இருந்த எமது மாகாண மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2010 ஆம் ஆண்டில் 332,000மில்லியன் ரூபாவாக அதிகரித்திருந்ததுடன் இது எமது மாகாணத்தின் வருடாந்த தனிநபர் வருமானத்தினை 212,000 ரூபாவாக அதிகரிக்கச்செய்திருந்தது என்பதும்குறிப்பிடத்தக்கதொரு அம்சமாகும்.

இப்பெறுபேறுகளை
அடைவதற்கு கௌரவ ஆளுநர், மாகாண சபை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட,
பிரதேச மட்ட நிறுவனங்கள் எம்முடன் கைகோர்த்து இயங்கியதுடன் அவர்களின்
ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் வழங்கியிருந்தனர். மேலும்,எதிர்வரும்
ஆண்டுகளிலும் எமது சாதனைப் பயணம் தொடர, இவர்களது ஒத்துழைப்பு என்றென்றும்
எமக்கு கிடைக்குமென எதிர்பார்க்கின்றேன்.
கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டம்
“மகிந்த சிந்தனை – எதிர்காலத்திற்கான தொலைநோக்கு”என்ற அபிவிருத்திக் கொள்கையில்குறிப்பிடப்பட்டுள்ள பல்வகைத்தன்மையுடைய சமநிலையான பிராந்திய அபிவிருத்திஎன்பதுடன் எமது மாகாணத்திற்குரித்தான பிரத்தியேக தேவைகள், வளங்கள் ஆற்றல்கள் என்பவை உள்வாங்கப்பட்ட கிழக்கு மாகாண அபிவிருத்திச் செயற்பாடுகள் மேலும் புதுவேகத்துடன் தொடரப்படவுள்ளன. இந்த வகையில் “மனித விழுமியங்கள், நல்லாட்சி மற்றும் வாழ்க்கைத்தரம் என்வற்றில் மிகச் சிறந்த பிரதேசமாக கிழக்கு மாகாணம் உருவாகும்” என்றதொலை நோக்கினை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட கிழக்கு மாகாண அபிவிருத்தித்திட்டம் என்ற ஐந்து ஆண்டு திட்ட ஆவணத்தினை உங்கள் முன்னிலையில் இன்று வெளியிட்டு வைப்பதில் மிகவும் பெருமிதம் அடைகின்றேன்.

இத்திட்டத்தில்;
06 பிரதான அபிவிருத்தித் துறைகளின் கீழ் சுமார் 378,000மில்லியன் ரூபா
பெறுமதியான முதலீட்டுத் தேவைகள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இவற்றுக்கான
நிதியீட்டமானது மத்திய அரசிலிருந்தும், கொடை வழங்கும் நிறுவனங்கள் மற்றும்
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமும் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்துவரும்
ஐந்து ஆண்டுகளில்; கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு துறைக்குமான இலக்குகள்
நிர்ணயிக்கப்பட்டு அவற்றினை அடைவதற்கான உபாயங்களும் வரிசைப்படுத்தப்பட்ட
கருத்திட்ட சுருக்கங்களும் இதில்உள்ளடக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும்
ஆண்டுகளில்இவற்றை அடையப்பெறும் வகையில் எமது மாகாண அபிவிருத்திச்
செயற்பாடுகள் ஒருங்கிணைக்கப்படவுள்ளன.
கிழக்கு
மாகாணத்திலுள்ள மக்கள் அனைவருக்கும் வேண்டிய நன்மைகளை உறுதிப்படுத்தி
தயாரிக்கப்பட்டுள்ளஇத்திட்டங்களுக்கு தேவையான முதலீடுகளை தேடிப்பெறுவதிலும்
அவை நல்ல முறையில் அமுலாக்கப்படுவதிலும் இந்த மாகாணசபை ஒன்றிணைந்து
செயற்படுவதற்குநாம் உறுதிப+ணுவதுடன் இதனுடன் தொடர்புடைய சகல அபிவிருத்தி
பங்குதாரர்களினதுஒத்துழைப்பையும்வேண்டுகின்றேன்.
மாகாணசபைக்கான நிதி ஒதுக்கீடு
2012 ஆம் ஆண்டிற்கென நிதி ஆணைக்குழுவினால் கிழக்கு மாகாண சபைக்கு மீண்டெழும் செலவினங்களிற்கென 11,385 மில்லியன் ரூபாவும்மூலதனச்செலவினங்களிற்கென 1,192 மில்லியன் ரூபாவும் வெளிநாட்டு உள்நாட்டு நிதியளிப்புகளுடனான விசேட கருத்திட்டங்களிற்கென 4,455 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

மீண்டெழும்
செலவின ஒதுக்கீட்டிற்கு மேலதிகமாக, அரச வருமான சேகரிப்பு என்றவகையில்
மத்திய அரசாங்க வருமான சேகரிப்பிலிருந்து 1,600 மில்லியன் ரூபாவும் மாகாண
சபை வருமான சேகரிப்பிலிருந்து 636 மில்லியன் ரூபாவும் கிடைக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறாக மொத்தம் 13,621 மில்லியன் ரூபா மாகாண
சபையின்மீண்டெழும் செலவினங்களிற்காக அடுத்த ஆண்டில் பயன்படுத்தப்படும்.
இதில் 80 வீதமான நிதி மாகாண அரச ஊழியர்களின் சம்பளக்கொடுப்பனவுகளிற்காக
ஒதுக்கப்பட்டுள்ளது.
மொத்த
மூலதனச்செலவினத்தில் 74 மில்லியன் ரூபா கௌரவ மாகாணசபை உறுப்பினர்களின்
அபிவிருத்திச்செயற்பாடுகளுக்கு நேரடியாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 193
மில்லியன் ரூபா மாகாண நிறுவனங்களின் அபிவிருத்திக்கும் சேவை வழங்கல்
மேம்பாட்டிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் விசேட கருத்திட்டங்களிற்கு
மேலதிகமாக, துறைசார் அபிவிருத்தி என்ற வகையில் மாகாண சபைக்கு வழங்கப்பட்ட
925 மில்லியன் ரூபா உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும்
உற்பத்திதுறைகளிடையேசிறிய நடுத்தர திட்டங்களிற்கென முன்னுரிமை அடிப்படையில்
பகிரப்பட்டுள்ளன.
கிழக்கு
மாகாணசபையின் அபிவிருத்தி நிதிப்பாவனையின்போது தேசிய, மாவட்ட, உள்@ர் மட்ட
நிறுவனங்களுடன்ஆக்க பூர்வமான தொடர்புகளைப்பேணி, தேவை ஏற்படுமிடத்து அரச
துறையுடன் தனியார் துறையையும் இணைத்;து பயன்மிக்க திட்டங்களை
செயற்படுத்துவதில் நாம் கவனம் செலுத்துவோம்.
மேலும்,
முன்வைக்கப்படுகின்ற நிதி ஒதுக்கீடுகளினால் மாகாண மக்கள் யாவரினதும்
முன்னேற்றத்திற்காக பயனுள்ள தரமான பெறுபேறுகள் அடையப்படுவதை நாம் கூடிய
கவனத்துடன் உறுதிசெய்வோம். இது குறிப்பாக மக்களைஆரோக்கியமுள்ளவர்களாக
வைத்திருத்தல், அவர்களின் அறிவையும் சிறப்புத்திறமைகளையும் விருத்தி
செய்தல், உற்பத்தி தொழில்வாய்ப்பு மற்றும்; வருமானங்களில் அதிகரிப்பை
ஏற்படுத்துதல்,பொது வசதிகளை ஏற்படுத்தல் என்பவற்றினூடாக மக்களின்
வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்துவதை அடிப்படையாக கொண்டமையும்.
சமமான பிராந்திய அபிவிருத்தி நோக்கிய இடைக்கால திட்டம்
பொருளாதார அபிவிருத்தியில் ஒவ்வொரு குடும்பங்களும் சமமான நன்மைகள் பெற்றுக்கொள்வதனை உறுதிப்படுத்துதல் என்ற கொள்கைக்கு அமைவாக எமது மாகாணத்திலும் சமமான அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தி பின்தங்கிய பிரதேசங்களில் தனித்துவமான அபிவிருத்தி முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.இதன் கீழ் உற்பத்தி, தொழில் துறைகளை விருத்தி செய்து வேலைவாய்ப்புகளை உருவாக்கி பின்தங்கிய பிரதேச மக்களின் வருமானத்தை அதிகரிப்பதனூடாக அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வழியமைக்கப்படுகிறது. வறிய மக்களின் ஆற்றல், பிரதேச பௌதீக வளங்களை நிலைபேறான அபிவிருத்திக்காக சிறப்பாக உபயோகப்படுத்துதல் என்பது இதன் விசேட அம்சமாகும்.

இவ்விசேட
நோக்கில், 2012 ஆம் ஆண்டில் 03 மாவட்டங்ளிலும் சகல இனங்களையும் உள்ளடக்கிய
வகையில் பொருத்தமான படிமுறைகளின் மூலம் 09 பின்தங்கிய கிராமங்கள் தெரிவு
செய்யப்பட்டு மொத்தமாக 120 மில்லியன் ரூபா பெறுமதியான சிறு அபிவிருத்தி
வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
உற்பத்தித்துறை
கிழக்கு மாகாண மொத்த தேசிய உற்பத்தியில் 29 சதவீத பங்களிப்பினை விவசாயத்துறைகொண்டிருக்கின்றது.
கிழக்கு மாகாண மொத்த தேசிய உற்பத்தியில் 29 சதவீத பங்களிப்பினை விவசாயத்துறைகொண்டிருக்கின்றது.
இந்நாட்டின்
மொத்த நெல் உற்பத்தியில் 24 வீத பங்களிப்பினை எமது
மாகாணம்கொண்டிருப்பதுடன் 2006 ஆம் ஆண்டில் 07 இலட்சம் மெற்ரிக் தொன்னாக
இருந்த நெல்லுற்பத்தி 2009ஆம் ஆண்டு 11 இலட்சம் மெற்ரிக் தொன்னாக
அதிகரித்தமையை எமது மாகாணத்தின் சாதனையாக நான் குறிப்பிட
விரும்புகின்றேன். எனினும், இவ்வருட ஆரம்பத்தில் ஏற்பட்ட வெள்ளப்
பேரழிவினால் கிழக்கு மாகாண நெற்செய்கை பெரும் பாதிப்புக்குள்ளானது
துரதிஸ்டமானதாகும். மேலும் ஏனைய உணவுப் பயிர்கள் உற்பத்தி
நடவடிக்கைகளில்இம்மாகாணமானது கடந்த காலங்களில் அதிகரித்த உற்பத்தி
இலக்குகளை எய்தியுள்ளதையிட்டும் நான் மகிழ்வடைகின்றேன்.
நாட்டின்
கால்நடை வளத்தில் 30 வீதத்தினை கொண்டுள்ள எமதுமாகாணம், மொத்த
பாலுற்பத்தியில் 17 வீத பங்களிப்பினையும் வழங்குகின்றது. 2006 ஆம் ஆண்டு
ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் லீற்றர் ஆக இருந்த நாளாந்த பாலுற்பத்தி 2010
ஆம் ஆண்டில்ஒரு இலட்சத்து எழுபத்து ஏழாயிரம் லீற்றர் ஆக அதிகரித்தது
விசேடஅம்சமாகும். மேலும் இக்காலப் பகுதியில் கால்நடைத் துறையைவிருத்தி
செய்யும் நோக்கில் புதிதாக 21 கால்நடை வைத்திய நிலையங்கள், 7 பால் பதனிடும்
நிலையங்கள், 14 பால் சேகரிப்பு நிலையங்கள் மற்றும் 2 விலங்கு நோய் ஆய்வு
நிலையங்கள் கிழக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த
3 ஆண்டுகளில்; நன்னீர் மீன் உற்பத்தியானது அதிகரித்து இத் துறையானது
சிறந்த வளர்ச்சியினை எய்தியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் நன்னீர்
மீன்பிடித்துறையை மேம்படுத்தும் நோக்கில் புதிதாக ஓர் மீன்பிடி
அபிவிருத்திப்பிரிவு விவசாய அமைச்சில் ஸ்தாபிக்கப்பட்டு இதன் சேவைகள்3
மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதை இங்குகுறிப்பிடவிரும்புகின்றேன்.
கைத்தொழில்
துறையானது அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தின் பிரதான தொழிற்துறையாக
விருத்தியடைந்து வருகின்றது. புடவைக்கைத்தொழில், தும்புக் கைத்தொழில்
மற்றும் கைப்பணிப் பொருட்கள் உற்பத்தி போன்ற துறைகளில் சந்தைப்படுத்தல்
வசதிகள் மேம்படுத்தப்பட்டும் உயர் உற்பத்தி தொழில்நுட்பங்கள்
அறிமுகப்படுத்தப்பட்டும் வருகின்றன.
உற்பத்தித்துறை
அபிவிருத்தியில் கிழக்கு மாகாண சபையானது உயர் தொழில்நுட்ப பயிற்சிகள்,
இயந்திரமயமாக்கல்,உற்பத்தி; பெருக்கம், விரிவாக்கல் சேவை விஸ்தரிப்பு,
உறுதியான உணவுப் பாதுகாப்பு,பெறுமதி சேர்க்கை,சுயதொழில்
ஊக்குவிப்பு,உற்பத்தி திறன், முகாமைத்துவ பயிற்சி,அதிகரித்த வருமானம்;
என்பவற்றில் அதீத கவனம் செலுத்திவருகின்றது. இதற்கமைய கிராமிய
உட்கட்டமைப்பு அபிவிருத்தி, விவசாய அபிவிருத்தி,கிராம அபிவிருத்தி மற்றும்;
உல்லாச பயண கைத்தொழில் அபிவிருத்தி போன்ற துறைகளில் 2012 ஆம் ஆண்டில்
கூடுதல் கவனம் செலுத்துவோம்.
இயற்கைப்பசளைப்
பாவனை,தரமான உற்பத்தி;, அறுவடைக்குப் பின்னரான சேதங்களை குறைத்தல்
போன்றவற்றிற்குஉரிய ஆலோசனைகளுடன் பொருத்தமான நடவடிக்கைகள் எமது நடைமுறை
திட்டங்களில் உள்வாங்கப்படும். பயிர்ச்செய்கைக்கு அவசியமான நீர்வசதி
போதியளவில் கிடைப்பதை நீர்ப்பாசனத்துறையினூடாக உறுதிப்படுத்த வேண்டிய
அவசியம் எமக்கு ஏற்படுகிறது என்பதை நான் இங்கு
வலியுத்திக்கூறவிரும்புகின்றேன்.
கிராமிய
கைத்தொழில்களை இலகுவாக மேற்கொள்ளவும் விசேட கைத்தொழில்கள் சம்பந்தமாக
விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி பயிற்சிகளை வழங்கவும் பொருத்தமான திட்டங்களை
எமது மாகாண சபை எதிர்வரும் ஆண்டுகளில்; நடைமுறைப்படுத்தவுள்ளது.
இச்சந்தர்ப்பத்தில்,
மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்பயிற்சி ஆணைக்குழு கிழக்கு மாகாணசபையுடன்
இணைந்து கிழக்கு மாகாணத்திற்கென தொழிற்கல்வி பயிற்சித் திட்டம் (ஏநுவு
Pடயn) ஒன்றினை தயார் செய்துள்ளது என்பதை இங்கு கூறுவது பொருத்தமானதென நான்
நினைக்கின்றேன்.
இத்திட்டத்தின்கீழ்
கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் ஆகக் குறைந்தது
ஒரு தொழிற்கல்வி நிலையமேனும் அமையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனூடாக பாடசாலை இடை விலகியோருக்கும் தொழிலற்ற இளைஞர் யுவதிகளுக்கும்
பொருத்தமான தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தி மேற்கொள்ளப்பட்டு அவர்களை
தொழிற்சந்தைக்கு தயார் செய்வதோடு புதிய தொழில் முயற்சிகள்
ஏற்படுத்தப்பட்டு வேலையற்றோர் வீதம் 5மூஇற்குக் குறைக்கப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலாத்துறை
விருத்திக்கு பொருத்தமான வளங்கள் நிறைந்துள்ள எமது மாகாணத்தில்
இத்துறையின் தேசிய கொள்கைக்கு அமைவாக எமது மாகாண சபை சாத்தியமானதும்
அடையாளங்காணப்பட்ட இடங்களில் சிறிய நடுத்தர உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்களை
மாகாண நிதியினூடாகவும் அரச தனியார் துறை ஒத்துழைப்புடனூடாகவும்
நடைமுறைப்படுத்தி வருகின்றோம். மேலும், சுற்றுலா கைத்தொழில் விருத்திக்கு
தேவையான தொழில் தகைமையுடன் கூடிய மனித வளங்களை மேம்படுத்தும்
நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்;பட்டு வருகின்றன. அடுத்து வரும் ஆண்டுகளிலும்
இத்துறையில் அதிக கவனம் செலுத்துவதுடன் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதும்
எமது நோக்கமாகும்.
பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகள்
பாரிய அளவிலான பொருளாதார உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்கள் மத்திய அரச நிறுவனங்களினால் எமது மாகாணத்தையும் உள்ளடக்கி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன. தேசிய கொள்கைக்கு அமைவாகவும் கிழக்கு மாகாணத்தில் நடைமுறையிலுள்ள தேசியத்திட்டங்களுடன் இணைந்த வகையிலும் கிழக்கு மாகாண சபை பல்வேறு உட்கட்டமைப்புத்துறை நிகழ்ச்சித் திட்டங்களை தயாரித்து நடைமுறைப்படுத்தி வருகின்றது.
2009 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை 218 மில்லியன் ரூபா மாகாண நிதி ஒதுக்கீட்டில் சுமார் 172 கிலோ மீற்றர் நீளமான வீதிகள் செப்பனிடப்பட்டுள்ள அதேவேளையில் இவற்றுக்கு மேலதிகமாக வெளிநாட்டு நிதியுதவியுடன்;; 315 கிலோ மீற்றர்நீளமான கிராமிய வீதிகளும் 202 கிலோ மீற்றர்நீளமான மாகாண வீதிகளும் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன.
இக்காலப்பகுதியில் வீடமைப்புக்கென 44 மில்லியன் ரூபா மாகாண நிதி ஒதுக்கீட்டில் 203 வீடுகள்; நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 3 மாவட்டங்களிலும் 443 குடிநீர்க் கிணறுகள் நிர்மாணிக்கப்பட்டு கிராமப்புறங்களில்; குடிநீர் தேவைகள் ஓரளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளன.
கிராமிய மின்சாரத்திற்கென 21.8 மில்லியன் ரூபா செலவில் 76 சிறிய வேலைத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சமூக உட்கட்டமைப்பு வசதிகளும் சேவைகளும்
கிழக்கு மாகாண சபை பதவியேற்ற காலத்தின் பின்னர் பல்வேறு கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகள் எம்மால் முன்னெடுத்து செல்லப்பட்டதன் விளைவாகவும் கிராமப் புறப் பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆசிரியர், வள பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ததாலும் எமது மாகாணத்தில் பொதுப் பரீட்சை பெறுபேறுகள் படிப்படியாக முன்னேற்றத்தினை அடைந்திருக்கின்றது என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மூன்று ஆண்டு காலப்பகுதியில் புதிதாக 04 கல்வி வலயங்கள் ஆரம்பிக்கப்பட்ட
அதேவேளை 02 கோட்டக்கல்வி அலுவலகங்களும் திறந்துவைக்கப்பட்டன.
இக்காலப்பகுதியில் புதிதாக 39 பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் இதுவரை
இயங்காமலிருந்த 45 பாடசாலைகள் மீள் திறந்துவைக்கப்பட்டன. அத்துடன் 135
பாடசாலைகள் தரமுயர்த்தப்பட்டன.
கல்வி
பெறுபேறுகளை எடுத்து நோக்குமிடத்து இக்காலப்பகுதியில் 5 ஆம் ஆண்டு புலமைப்
பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளிற்கு மேல் பெற்ற மாணவர்களின் வீதமானது
முறையே 18, 35, 41 என தொடர்ந்து வளர்ச்சியடைந்து வந்துள்ளதை இங்கு
குறிப்பிடவிரும்புகின்றேன். இவ்வாறே எமது மாகாணத்தில் க.பொ.த உயர்தர
வகுப்பிற்கு தகுதி பெறும் மாணவர்கள் வீதமானது பல்Nறு சவால்களின்மத்தியிலும்
2008 ஆம் ஆண்டில் 40.6மூஇல் இருந்து 2011 ஆம் ஆண்டு 54.7மூ ஆக வளர்ச்சி
அடைந்துள்ளது.
தேசியமட்டத்துடன்
ஒப்பிடும்போது மட்டக்களப்பு மத்தி, கல்முனை, அக்கரைப்பற்று, திருகோணமலை,
திருக்கோவில் ஆகிய வலயங்களின் கல்வி வளர்ச்சி அண்மைக் காலங்களில் தேசிய
மட்ட சராசரியைவிட அதிகமாகக் காணப்படுவதையும் இவ்விடத்தில்
சுட்டிக்காட்டவிரும்புகின்றேன். எமது மொத்த மாகாணத்தின்
நிலைதேசியமட்டத்துடன் ஒப்பிடும்பொழுது குறைவான நிலையில் இருப்பினும்,
இம்மாகாணத்தில் கல்வி நிலை படிப்படியாக உயர்ந்து செல்வதால் எதிர்காலத்தில்
தேசியமட்ட சராசரியினை நாங்கள் அடையக்கூடியதாக இருக்குமென நம்பிக்கையுடன்
எதிர்பார்க்கின்றேன். இத்துடன் பல்கலைக்கழகம் செல்வதற்குத் தகுதியானோர்
வீதமானது 60மூ இற்கு மேலாக காணப்படுவதும் ஒரு சிறந்த பெறுபேறாகவே நான்
கருதுகின்றேன்.
எமது
மாகாணத்தில் பொதுவாக சுகாதார, மனித நல குறிகாட்டிகள் தேசிய மட்டத்துடன்
ஒப்பிடும் அளவிற்கு சிறப்பாக காணப்படுகின்றன. சுகாதாரத்துறையில்;; 2008 ஆம்
ஆண்டு முதல் இற்றைவரை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்;படுத்தும் பொருட்டு 03
வெளி நோயாளர்கள் பிரிவு கட்டிடங்களும், 26 வைத்திய, சத்திர சிகிச்சை
மற்றும் மகப்பேற்று விடுதிகளும் 29 சுகாதார உத்தியோகத்தருக்கான
விடுதிகளும், 10 சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் புதிதாக கட்டப்பட்டு
சிறப்பாக இயங்குவதுடன் மேலும் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்கு பாரிய
உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இக்காலப்பகுதியில்
35 அம்புலன்ஸ் வண்டிகளும் 48 வெளிக்கள வாகனங்களும் 32 அலுவலக வாகனங்களும்
பெற்றுக்கொள்ளப்பட்டு மாகாணத்தில் சுகாதார, மருத்துவ சேவைகள்
மேம்படுத்தப்பட்டுள்ளதை பெருமையுடன் அறிவிக்கின்றேன். மேலும்; 52
வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைப்பிரிவுக்கான மருத்துவ உபகரணங்களும் 27
வைத்தியசாலைகளுக்கு ஆய்வுகூட உபகரணங்களும் மற்றும்; 80 வீதமான சிகிச்சை
நிலையங்களிற்கு அத்தியவசிய மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு எமது மாகாண
வைத்தியசேவைகள் சிறப்பான முன்னேற்றத்தினை கண்டுள்ளது.
கடந்த
3 ஆண்டுகளில் புதிதாக கட்டப்பட்ட 6 வைத்தியசாலைகளுடன் மேலும் 8
வைத்தியசாலைகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டதோடு 100 க்கு மேற்பட்ட வைத்திய
உத்தியோகத்தர்கள் உட்பட ஏறக்குறைய 700 நியமனங்களும் வழங்கப்பட்டிருந்தன.
இக்காலப்பகுதியில் 4 வைத்தியசாலைகள் ஆதார வைத்தியசாலையாக தரம்
உயர்த்தப்பட்டும் உள்ளன.
சுதேச
மருத்துவத்துறையில் 3 பஞ்சகர்ம வைத்தியசாலைகள், 27 ஆயுர்வேத மத்திய
மருந்தகங்கள் கட்டப்பட்டும் சுதேச மருந்து உற்பத்திப்பிரிவுகள்
ஏற்படுத்தப்பட்டும் இவற்றிற்கான போதிய ஆளணிகள் வழங்கப்பட்டு; இயங்கி
வருகின்றதையும் நான் இங்கு மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகின்றேன்.
மொத்தமாக
கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறையிலும் வைத்திய சேவையிலும் ஏற்பட்ட
முன்னேற்றமானது மக்களின் சுகாதாரஆரோக்கிய நிலைகளில் கணிசமான முன்னேற்றத்தை
காட்டியதுடன் மருத்துவ சிகிச்சைக்காக வெளிமாவட்டங்களிற்கு செல்ல வேண்டிய
நிலை மாறி உள்ளுர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்ற சூழ்நிலைகளை
அதிகரித்திருந்தது.
சமூக
உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படும் இத்தகைய பின்னணியுடன் மேலும் கிழக்கு
மாகாண சபையானது மாகாண மாணவர்களின் கல்வியை உயர்ந்த தரத்திற்கு கொண்டு
செல்லவும் ஆரோக்கியமான பிரஜைகளை உருவாக்கவும் அனாதைகள்
ஆதரவற்றோர்களைபராமரிக்கவும் வயதானவர்களின் சமூக பாதுகாப்;பு மற்றும்
நலிவுற்றோர் நலன்புரி நடவடிக்கைகள் என்பவற்றிற்கும் பொருத்தமான
செயற்திட்டங்களை வடிவமைத்து 2012 இல் அமுலாக்க நடவடிக்கைகளை எடுக்கும்.
விரைவான
சமூக பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமான திறமைகளையும் தொழில்நுட்ப
அறிவையும் கல்வி முறைக்கூடாக நிறுவுதல் என்ற கொள்கைக்கேற்ப மொழி மற்றும்
தகவல் தொழில்நுட்ப கல்வி,மாணவர்களை தொழில் சந்தைக்கு தயார்ப்படுத்தல்,
ஆசிரியர்களின் ஆற்றல் மற்றும் தரம் என்பவற்றில் கூடுதல் கவனம்
செலுத்தப்படும். அவ்வாறே நோயற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் சுதேச
மற்றும்; மேலைத்தேய வைத்தியப் பிரிவுகளினது ஒன்றிணைந்த சேவை வழங்கல்,
நோய்களிலிருந்து மக்களுக்கு பாதுகாப்பளித்து அவர்களின் ஆரோக்கியத்தைப்
பேணுதல், விளையாட்டு மற்றும் உடற்;பயிற்சிகள்; என்பவற்றிலும் கவனம்
செலுத்தப்படும்.
விசேட செயற்திட்டங்கள்
மாகாண சபை நிதியீட்டத்துடனான நிகழ்ச்சிதிட்டங்களிற்கு புறம்பாக மத்திய அரச நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் பற்றியும் மற்றும் மாகாண சபை நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்தப்படும் வெளிநாட்டு நிதியுதவியுடனான விசேட கருத்திட்டங்கள் பற்றியும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது என நான் நம்;புகின்றேன்.

பல
புதிய கருத்திட்டங்கள் எமது பிரதேச சமகால அரசியல் மற்றும் ஜனநாயக
சூழ்நிலைகளின் அடிப்படையில் உருவானவையாகும். இவற்றில் பாலங்கள் உட்பட
நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, குளங்கள் புனரமைப்புடனான நீர்ப்பாசன
திட்டங்கள், நீர்;வழங்கல் போன்ற பாரிய திட்டங்களுடன் மாகாண கிராமிய வீதிகள்
அபிவிருத்தி, கிராமிய நீர்வழங்கல்,உள்ளுராட்சி சேவை வழங்கல்; மற்றும் சிறு
உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாகாண, உள்ளுராட்சி நிறுவனங்களின் சேவைகளை
பலப்படுத்தும் தொழில்நுட்ப உதவிகளையும் இங்கு குறிப்பிட்டு கூற
விரும்புகின்றேன்.
இவற்றின்
பலாபலன்களை கிழக்குமாகாண மக்கள் தற்போது அனுபவித்துக் கொண்டிருப்பது
மிகவும் மகிழ்ச்சிக்குரியதொன்றாகும். இவ்வாறே இவ்வாண்டின் ஆரம்பத்தில்
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட
வீதிகள் குளங்கள் நீர்ப்பாசன கட்டமைப்புக்கள்; என்பவற்றை புனர்நிர்மாணம்
செய்வதனூடாக மக்களின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பதை நோக்காக கொண்ட
கருத்திட்டம்; விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்பதனையும் மகிழ்ச்சியுடன்
தெரிவிக்க விரும்புகின்றேன்.
நல்லாட்சி
இத்திட்டங்கள் தவிர கிழக்கு மாகாணசபையினால் முன்னெடுக்கப்படும் மற்றும் முன்மொழியப்படும்; ஏற்பாடுகளுக்கு செயல்வடிவம் கொடுக்க ஏதுவாக பல்வேறு சட்டமூலங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் ஏனைய மாகாணங்களில் நடைமுறையிலுள்ள பொருத்தமான சட்டமூலங்களை பெற்று எமது மாகாணத்திற்கு ஏதுவான முறையில் மாற்றியமைக்கும் செயற்பாடுகளும்; மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாகாண
வளங்களை அடிப்படையாக கொண்ட பிரதேச அபிவிருத்தி மற்றும் மக்களின் தேவைகளை
நிறைவு செய்யும் சேவைகள் என்பவற்றை முன்னிறுத்தி மாகாண, உள்ளுராட்சி
நிர்வாக கட்டமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு அது மேலும் செயற்திறன்
மிக்கதாகவும் உத்வேகமுடையதாகவும் அமைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.
பல
இன மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்ற பிரதேசம் எமது கிழக்கு மாகாணம். இன
நல்லுறவை மென்மேலும் வளர்த்து கொள்ளும் வகையிலேயே மாகாண சபையின் கொள்கைகள்,
நடைமுறைகள் அமையும். இவற்றில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறும்
கடப்பாடு, சமத்துவம் என்பவற்றை எமது சபை உறுதிசெய்யும். நிர்வாக,
அபிவிருத்தி நடைமுறைகளின் ஒவ்வொரு கட்டத்திலும் இவற்றை கருத்தில் கொண்டு
இக்கொள்கையை சமூகத்தின் அடிமட்டம் வரை எடுத்துச்செல்வதற்கு எல்லோரும்
கைகோர்த்து செயற்பட அனைவருக்கும் அன்புடன் அழைப்பு விடுக்கின்றேன்.
கௌரவ தவிசாளர் அவர்களே!
கிழக்கு
மாகாண சபைக்கென 2012 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியினைக் கொண்டு
மீண்டெழும் மற்றும் மூலதன செலவுகளை மேற்கொள்ளும் முகமாக தயாரிக்கப்பட்ட இவ்
வரவு செலவுத்திட்ட யோசனைகளை கிழக்கு மாகாண மக்களின் வளர்ச்சியிலும்
நலனிலும் கூடிய கவனம் செலுத்தி வெற்றிகரமாகவும் பயனுறுதிமிக்கதாகவும்
நிறைவேற்ற கௌரவ உறுப்பினர்களினதும் உத்தியோகத்தர்கள் அனைவரினதும் ஒருமுகமான
ஒத்துழைப்பையும் ஆதரவையும் வேண்டிக்கொண்டு இவ்வுரையை செவிமடுத்த தங்கள்
எல்லோருக்கும் நன்றி; கூறி எனது உரையை நிறைவு செய்கின்றேன்.
நன்றி
வணக்கம்
வணக்கம்
2012ம் வருடத்திற்கான கிழக்கு மாகாண
சபையின் வரவு செலவுத்திட்டம் 23 மேலதிக வாக்குகளால் வெற்றி கண்டது.
மீண்டெளும் செலவீனமாக 13521 மில்லியனும் மூலதனச் செலவுகளாக 1671
மில்லியனும் அடங்கலாக 15192 மில்லியன் ருபாய்களுக்கான வரவு செலவுத்திட்டம்
22.11.2011ம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனினால்
முன்வைக்கப்பட்டது. 25.11.2011ம் திகதி வரை வாதப் பிரதிவாதங்கள்
நடைபெற்றது.
2011ம் வருடத்துடன் ஒப்பீகையில் 13492 மில்லியன் ருபாய்
ஒதுக்கப்பட்டுள்ளது.
2012ம் வருடத்தில் இது 15192 மில்லியனாக
அதிகரித்ததன் மூலம் சுமார் 1700 மில்லியன் இவ் வருடம் அதிகரித்துள்ளது.
காலை 9.30 மணி தொடக்கம் சில தினங்களில் இரவு 10.30 மணிவரை தொடர்ந்த
விவாதங்களின் பின் அனைத்து அமைச்சுக்களின் பாதீடுகளும் வெற்றியளித்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
வரவு செலவுத் திட்டத்தின் முடிவில் உரை
நிகழ்த்திய கிழக்கு முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் கிழக்கு மக்களின் திடமான
வலுவாக்கத்திற்கு முதலாவது மாகாணசபை என்றவகையில் கடந்த 3 ½ வருடங்கள்
எதிர்க்கட்சி ஆளும் கட்சி என்ற வேற்றுமை இன்றி சேவையாற்றியது போல் இவ்
வருடம் இன்றும் சிறப்பாக சேவையாற்றுவோம் என வேண்டுகோள்விடுத்தார்.
ஆளும் கட்சியுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகளும் ஆதரவாக வாக்களித்ததுடன் ஐக்கிய தேசிய கட்சி
உறுப்பினர்களும் EPRLF கட்சியும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
1 comments: on "கிழக்கு மாகாண முதலமைச்சரின் வரவு செலவுத் திட்ட உரை"
வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தகவல்கள், கருத்துக்கள் அருமை. தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல பகிர்வுக்கு எனது வாழ்த்துக்கள். நான் மனிதர்களைப் பற்றி வேறு விதமாக என் தளத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"
Post a Comment