முன்னைய இடுகை ஒன்று மீண்டும்..
இலங்கையைப் பொறுத்தவரை யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே ஆகும். இந்த உள்நாட்டு யுத்தத்தின் மூலம் பல ஆயிரக்கணக்கான பெண்கள் விதவைகளாக்கப்பட்டிருக்கின்றனர்.
அவர்களின் நிலை படு மோசமான நிலையிலே இருக்கின்றது. இவர்களிலே அதிகமானவர்கள் இளம் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்கள் சிறு வயதிலேயே குடும்ப சுமையினை தாங்கிக் கொள்ளவேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டனர்.
இதில் அதிகமானவர்கள் பின்தங்கிய கிராமப் புரங்களை சேர்ந்தவர்கள் கல்வி அறிவேன்பதும் அவர்களிடம் சரியான முறையில் இல்லை. இதனால் தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்றவேண்டிய? கொண்டு நடாத்த வேண்டிய பொறுப்பு இவர்களிடமே இருக்கின்றது.
இதற்காக இவர்கள் கூலி வேலை செய்தல், சுய தொழில்களை மேற்கொள்ளல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். சுய தொழிலைப் பொறுத்தவர். எல்லோராலும் செய்ய முடியாத காரியமாக இருக்கின்றது. போதிய பணவசதி உதவிகளை பெறுவதிலே சிக்கல்களை எதிர் நோக்குகின்றனர்.
கூலி வேலைக்கு செல்பவர்களைப் பொறுத்தவரை தனது பிள்ளைகளை கவனிக்கவேண்டும், வீட்டுவேலைகளை செய்யவேண்டும், கூலி வேலைக்கு செல்லவேண்டும் என்று பாரிய சிக்கல்களை எதிர் நோக்குகின்றனர். அவர்களின் உழைப்புக்கேற்ற கூலி வழங்கப்படுகின்றதா என்பது வேறு விடயம்.
சிலர் இவ்வாறு கஷ்டப்படுகின்றவர்களை வைத்து அதிகவேளைகளைக் கொடுக்கின்றனர். ஆனால் வேலைக்கேற்ற கூலி வழங்கப் படுவதில்லை. இதை விட்டாள் வேறு வழியில்லை என்று கஷ்டப்பட்டு உழைத்து வருகின்றனர் பலர்.
இது ஒரு புறமிருக்க இந்த விதவைகளைப் பொறுத்தவரை பலர் இளம் வயதை சேர்ந்தவர்கள். வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையை இழந்து நிக்கின்றனர். இவர்களின் வாழ்க்கையை வளமானதாக மாற்ற எமது சமுகத்தால் முடியும்.
ஆனால் அவர்களளின் எதிர் காலத்தைப் பற்றி சிந்திக்காத சமூகமாக எமது சமூகம் இருப்பதுதான் கவலைப்படவேண்டிய விடயம். விதவைகளை ஒதுக்கி வைக்கின்ற சமுகமாக எமது சமூகம் இருக்கின்றது.
விதவைகள் திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளிலே கலந்து கொள்ள கூடாது, இந்த விதவைகளின் கண்களிலே விழிக்கக் கூடாது என்று நினைப்பவர்களும் இருக்கின்றனர்.
பெண்களை மறுமணம் செய்தால் கேலி செய்து தேவையற்ற கதைகளைக் கட்டி விடுகின்ற சமூகம். ஆண்கள் எத்தனை திருமணம் செய்தாலும் போசாதிருப்பது ஏன்? சில ஆண்களைப் பொறுத்தவரை ஒரு மனைவி இருக்கும்போதே இன்னொரு திருமணம் செய்வார். இதனை வீரமாக பேசிக்கொள்பவர்களும் இல்லாமல் இல்லை.
பெண்களோ தன் குடும்பத்தின் கஸ்ர நிலையின் காரணமாகவும், தனது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகாகவும் மறுமணம் செய்தால் வேசி என்றும் இன்னும் பல கதைகளும் சொல்லி அந்த பெண்ணை ஒதுக்கி வைக்கின்றனர். விதவையான பெண் வாழக் கூடாதா?
எங்கள் ஒவ்வொருவருடைய மனங்களும் மாற வேண்டும் விதவைகளின், எமது சமூகத்தின் எதிர்கால வளமான வாழ்வுக்காக ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

7 comments: on "சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்படும் விதவைகள்"
ippadi palar irukkinranar. kulanthaikalai kaaranam kaatti marumanam seivathai thavirkkinranar.
இந்த பெண்களின் நிலையை சமரசம் என்ற பத்திரிகையின் வாயிலாக சில மாதங்களுக்கு முன்பு படித்தேன். அந்த சகோதரிகள் மறுவாழ்வு பெற்று மகிழ்ச்சியோட வாழ அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் .
விதவைத் திருமணம் பற்றி நிறையக் காலமாகவே கதைக்கிறோம் சந்ரு.
இப்போ மாற்றம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.சரியா ?
சந்துரு மட்டக்களப்பிலே நம்ம பிரதேச செயலார் பிரிவிதால் விதவைகள் அதிகமா இருக்காங்க உண்மையா ?
உங்கள் கருத்துக்கு பதில் சொல்ல தக்க தகவல் இல்லை....வெறுமையாக இருக்கிறது.... சொல்லாமே குறிப்பாக அடையாளம் காணப்பட்ட பிரதேசங்கள், காணப்படும் விதைவைகளின் எண்ணிக்கை, மறு திருமணத்துக்கான தகுதியான தந்திரோபாயத் திட்டமிடல்கள் தற்போது NGO, GO, INGO, UN Bodies நடைமுறைப்படுத்தும் திட்டங்களில் காணப்படும் இடைவெளி...இவை இருக்குமானால் உங்கள் ஆக்கம் நல்லாய் இருக்கும் சந்துரு... முயற்சி செய்யுங்கள் வாழ்துகள்.....
//Seelan on 12 பிப்ரவரி, 2011 6:48 pm சொன்னது…
உங்கள் கருத்துக்கு பதில் சொல்ல தக்க தகவல் இல்லை....வெறுமையாக இருக்கிறது.... சொல்லாமே குறிப்பாக அடையாளம் காணப்பட்ட பிரதேசங்கள், காணப்படும் விதைவைகளின் எண்ணிக்கை, மறு திருமணத்துக்கான தகுதியான தந்திரோபாயத் திட்டமிடல்கள் தற்போது NGO, GO, INGO, UN Bodies நடைமுறைப்படுத்தும் திட்டங்களில் காணப்படும் இடைவெளி...இவை இருக்குமானால் உங்கள் ஆக்கம் நல்லாய் இருக்கும் சந்துரு... முயற்சி செய்யுங்கள் வாழ்துகள்....//
இது என்னுடைய முன்னைய பதிவு ஒன்று... இப்பதிவைத்த் தொடர்ந்து பெண்கள் எதிர் நோக்கும் பிரட்சினைகள் தொடர்பாக தொடராக பல பதிவுகள் எழுதி இருக்கிறேன். இப்பதிவிலே புள்ளி விபரங்கள் மாற்று திட்டங்கள் பற்றி எல்லாம் நான் எழுதவில்லை. புள்ளிவிபரங்கள் எல்லாம் என்னிடம் இருக்கின்றன.
என்னைப் பொறுத்தவரையில் எமது சமூகம் எதிர் நோக்கும் பிரட்சினைகள் தொடர்பாக தொடர்ந்து எழுதி வருகிறேன். எமது சமூகத்தின் பிரட்சினைகளை வெளிக்கொண்டு வருவதே என் நோக்கம்.
என்னுடைய கருத்துக்கள் எதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்திலுமே இந்த நிலை இருக்கும்போது. குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் சுட்டிக்காட்ட முடியாது.
புள்ளிவிபரங்கள் நான் தரவில்லை என்பதட்காகாக சொல்லப்பட்ட பிரட்சினைகள் இல்லை என்றாகிவிடாது. என்னைப் பொறுத்தவரை எமது சமூகத்தின் பிரட்சினை வெளிவர வேண்டும்.
நீங்களும் மட்டக்களப்பை சேர்ந்தவர்தானே புள்ளி விபரங்களோடு இப்பிரட்சினை தொடர்பாக எழுதலாம்தானே.
சந்துரு உங்களது படைப்புக்கு வலுவாக இருக்குமே என்று ஒரு நட்பாசையில் சொன்னேன்.... விடயம் நல்லது அது இன்னும் பிரயோசனமுள்ளதாய் இருக்கட்டுமே என்னை போன்றவர்க்கு என்று சொன்னேன்...எனக்கு தேவை என்றால் என்னால் 1000 தகவல் எடுக்கலாம்..அப்போ உங்க பதிவ நான் பார்க்கவேண்டி வராதேபா.... அபிப்பிராயம் சொல்ல எனக்கு உரிமையில்லையா சந்துரு??? உங்கள் தகவலை தயவு செய்து சுட்டிக்காட்டி எழுதுங்கள்... இது எனது அன்பு வேண்டுகோள்...
Post a Comment