இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு பற்றி பேச ஆரம்பித்தாலே பதிவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க இருக்கின்ற ஒரு சில பதிவர்கள் இலங்கைப் பதிவர்கள் பற்றியும் பதிவர் சந்திப்பு பற்றியும் தவறான முறையில் பேசுவதை பதிவிடுவதை நிறுத்துவது நல்லதென்று நினைக்கின்றேன்.
இலங்கையிலே இடம்பெற்ற ஒவ்வொரு வலைப்பதிவர் சந்திப்பும் இலங்கை வலைப்பதிவர்கள் மத்தியிலே பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. இதன் மூலம் பல புதிய புதிய பதிவர்கள்கூட உருவாகிக் கொண்டிருக்கின்றனர்.
நான் சில காலம் பதிவிடுவதிலிருந்து ஒதுங்கி இருந்தாலும் பதிவுலகில் என்ன நடக்கின்றது என்று பார்க்கத் தவறுவதில்லை. பதிவர்களுக்கிடையே கருத்து முரண்பாது இருக்கலாம் அதற்காக எடுத்ததற்கெல்லாம் பிழை என்று சொல்லி முரண்பட்டுக்கொண்டிருப்பது. நாகரீகமான விடயமல்ல.
இறுதியாக இடம்பெற்ற இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு தொடர்பான பேச்சுக்கள் ஆரம்பமானதன் பின்னர் அதிகார மையம் என்ற சொல் பரவலாக இலங்கை இலங்கை வலைப்பதிவர் மத்தியிலே பேசப்படுகின்றது. இது தொடர்பாக நானும் சில கருத்துக்களை சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றேன்.
இலங்கை வலைப்பதிவர்களைப் பொறுத்தவரை தலைமைத்துவம் அதிகார மையம் என்றொன்று இருந்ததில்லை அப்படி இருப்பதை நானும் விரும்பப் போவதுமில்லை. பதிவர் சந்திப்புக்கள் கொழும்பில் நடப்பதனால் இதிகார மையம் கொழும்பு பதிவர்களிடம் இருக்கின்றது. என்று பதிவர்களக்கிடையே சண்டைய ஏற்படுத்தும் நினைக்கும் ஒரு செயலாகவே நான் பார்க்கின்றேன். என்ன கொடுமை சார் என்று சொல்லிவிட்டு நாம் நம் வேலையை பார்ப்போம்.
என்னைப் பொறுத்தவரை பதிவர் சந்திப்புக்களை கொழும்பைவிட வேறு இடங்களிலே நடாத்துவதை அதிகமான பதிவர்கள் விரும்புகின்றனர். ஆனால் வேறு பிரதேசங்களிலே இருக்கின்ற பதிவர்கள் சந்திப்புக்களை அந்தந்த பிரதேசங்களிலே நடாத்துவதற்கு முன் வருவது குறைவு முன் வந்தாலும் இடை நடுவிலே ஏற்பாடுகளை கைவிடுகின்றனர். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஏனைய பிரதேசங்களைப் பொறுத்தவரை குறைந்தளவான பதிவர்கள் இருப்பதும் அதிகமான பதிவர்கள் கொழும்பிலே இருப்பதனால் கொழும்பிலே சந்திப்புக்களை ஏற்பாடு செய்வதும் இலகுவான விடயம்.
சில பதிவர்கள் மட்டக்களப்பிலே நடாத்தலாம் என்று என்னிடம் கேட்டுக் கொண்டனர் நானும் நடாத்துவதற்கு தயாராக இருந்தேன் அந்தக் காலகட்டத்தில் நான் அரசியல் சார்ந்த பதிவுகளை பதிவிட்டதனால் எனக்கும் சில பதிவர்களுக்கும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. நான் அரசியல் சார்ந்த பதிவுகளை பதிவிட்டதனால் குழுமத்திலிருந்தும் விலகி இருந்தேன். ஆனாலும் குழுமத்தில் நடக்கும் விடயங்களை பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். எனது அரசியல் சார்ந்த பதிவுகள் மற்றும் கருத்து முரண்காடுகள் (அரசியல் சார்ந்த குருத்து முரண்பாடுகள்) காரணமாக சந்திப்பு ஏற்பாடுகளைக் கைவிட்டேன்.
பதிவர் சந்திப்பு வேறு பிரதேசங்களிலே இடம்பெறாமல் அதிகார மையம் கொழும்பிலேதான் இருக்கின்றது என்ற குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கின்றேன். ஒவ்வொரு பிரதேச பதிவர்களுக்கும் நிறையவே சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் பதிவர்களாகிய நாங்கள்தான் முன்வரவில்லை.
சில பதிவர்கள் எல்லாவற்றையும்;; எதிர்ப்பதை நிறுத்திக் கொள்வது நல்லது. கருத்து முரண்பாடு இருக்கவேண்டும் அப்போதுதான் உண்மைகள் தெரியவரும். அதற்காக கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க வேண்டியதில்லை. எங்களிடையே கருத்து முரண்பாடு இருந்தாலும் நல்ல விடயங்களுக்காகவாவது ஒன்று சேரவேண்டும்.
அடுத்த சந்திப்பு வேறு பிரதேசங்களிலே அடம்பெற வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். அடுத்த சந்திப்பை மட்டக்களப்பில் நடாத்துவதாக இருந்தால் அதற்கான ஏற்பாடுகளையும் நான் செய்ய தயாரயக இருக்கின்றேன்.
நல்லவற்றுக்காக ஒன்றுபடுவோம்.
17 comments: on "இலங்கை வலைப்பதிவர் சந்திப்பும் அதிகார மையமும்"
நல்லகருத்து வரவேற்கிறேன் இப்படியான பதிவுகளையும்..
வாழ்த்துக்கள் தொடருங்கள். மட்டக்களப்பு ஏற்பாட்டுக்கு நானும் தயார்.
நல்ல விடயத்தை எழுதியிருக்கிறீர்கள் சந்துரு.
நல்லதொரு இடுகை :)
/////அடுத்த சந்திப்பை மட்டக்களப்பில் நடாத்துவதாக இருந்தால் அதற்கான ஏற்பாடுகளையும் நான் செய்ய தயாரயக இருக்கின்றேன்./////
வாழ்த்துக்கள் சந்ரு..
நல்ல கருத்துகள்
காத்திரமான கருத்துக்கள்..
//றமேஸ்-Ramesh கூறியது...
நல்லகருத்து வரவேற்கிறேன் இப்படியான பதிவுகளையும்..
வாழ்த்துக்கள் தொடருங்கள். மட்டக்களப்பு ஏற்பாட்டுக்கு நானும் தயார்.//
அப்போ மட்டக்களப்பில் ஏற்பாடு செய்வோமே..
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
// Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu கூறியது...
நல்ல விடயத்தை எழுதியிருக்கிறீர்கள் //
நல்ல விடயங்கள் கட்டாயமாக எழுதப்பட வேண்டும்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//Subankan கூறியது...
நல்லதொரு இடுகை :)//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
/////அடுத்த சந்திப்பை மட்டக்களப்பில் நடாத்துவதாக இருந்தால் அதற்கான ஏற்பாடுகளையும் நான் செய்ய தயாரயக இருக்கின்றேன்./////
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//Cool Boy கிருத்திகன். கூறியது...
நல்ல கருத்துகள்//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//sinmajan கூறியது...
காத்திரமான கருத்துக்கள்..//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
இதில் இவ்வளவு கருத்து வேறுபாடா...எங்கு பதிவர் சந்திப்பு நடந்தாலும் சிறப்பாக நடத்த வாழ்த்துக்கள்.
//நல்லவற்றுக்காக ஒன்றுபடுவோம்.//
அதே காத்திரமான,
உண்மையான கருத்துக்கள்..:)
நல்லா விளங்கிரமாதிரி சொன்ன உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!!!
அடுத்த பதிவர் சந்திப்பு உங்கள் ஏற்பாட்டுடனும் நடக்க வாழ்த்துக்கள்
மீண்டும் வருக சந்த்ரு..
நல்லா சொன்னீங்க. உறைக்குமாறு உண்மைகளை சொல்லியுள்ளீர்கள்.
ஒற்றுமையே பலம் என்பது எல்லோருக்கும் இலேசில் புரிவதில்லை.
Post a Comment