Thursday, 23 December 2010

அரங்கேறாத அந்தரங்க அசிங்கங்கள்

எனது முன்னைய பதிவின் தொடராகவே இந்தப் பதிவும் அமைகின்றது. நல்ல சமூகத்தை உருவாக்கவேண்டிய கல்விக் கூடங்கள் காதலர் கூடங்களாக மாறுவதும். நல்ல சமூகத்தை உருவாக்க வேண்டிய ஆசிரியர்களே மாணவர்களுடன் காதல் மற்றும் காம லீலைகளில் ஈடுபடுவதோடு மாணவர்களை தீய செயல்களிலே ஈடுபடுத்துகின்ற செயற்பாடுகளும் பரவலாக இடம்பெற்று வருகின்றன.

இன்றைய இளம் சமூகத்தைப் பொறுத்தவரை அவன் சார்ந்திருக்கின்ற சூழலும் சமூகமும் அவனது அவனது நடவடிக்கைகளிலே பெரும் பங்காற்றுகின்றன. கல்விக் கூடங்களாக இருக்கவேண்டிய பாடசாலைகள் காதலர் கூடங்களாக மாறியிருக்கின்றன. சில மாணவர்கள் கல்வி கற்கச் செல்கின்ற இடமாக அல்லாமல் காதலிக்கும் இடமாக பாடசாலையை பயன் படுத்துகின்றனர். கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட காதலுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். சில மாணவர்களால் பாடசாலைகளிலே வாயினால் சொல்ல முடியாத அசிங்கங்களும் அரங்கேறி இருக்கின்றன. மறு புறத்திலே மாணவர்களை காதலிக்கின்ற ஆசிரியர்களும் இல்லாமல் இல்லை.

இது ஒருபுறமிருக்க சில ஆசிரியர்களினால் பல காதல் மற்றும் காம லீலைகள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன. இவை அந்த மாணவர்களின் எதிர்காலம் கருதி மறைக்கப்பட்டிருக்கின்றன. இவை மறைக்கப்படுவதனால் தன்னை எவருக் கண்டு கொள்ளவில்லை என்று அந்த ஆசிரியர்கள் தங்கள் காம லீலைகளை தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர்.

குறிப்பிட்ட ஒரு பாடசாலையில் ஒரு ஆசிரியர் படிப்பிக்கின்றபோது மாணவிகளின் முதுகில் தட்டி அவர்களது உள் ஆடையை லேசாக இழுத்து விடுவதும் மாணவிகளுடன் இரட்டை அர்த்தத்துடன் பேசுவதும் ஒரு சில மாணவிகளோடு நெருக்கமாகப் பழகி கணனி அறைக்கு தனியாக அழைத்துச் சென்று செக்ஸ் படங்களை போட்டுக்காட்டிய சம்பவங்கள் பல இடம்பெற்றிருக்கின்றன. அத்தோடு நின்று விடவில்லை சில மாணவிகளிடம் ஆசை வார்த்தைகளை கூறி தன் காம லீலைகளையும் அரங்கேற்றி இருக்கின்றார்.

அண்மையில் தரம் 11 படிக்கும் மாணவியையும் தன் காம லீலைகளுக்குப் பயன்படுத்தி இருக்கின்றார். குறித்த மாணவிகளின் எதிர்காலம் கருதி இவற்றை வெளியிட எவரும் முன் வருகின்றார்கள் இல்லை. இதே போன்றுதான் பிரத்தியக வகுப்புக்களை நடாத்துகின்ற சில ஆசிரியர்களும் சில மாணவிகளை தங்களது தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இதே போன்று இன்னொரு ஆசிரியர் தன்னுடைய பிரத்தியக வகுப்புக்கு வருகின்ற மாணவர்களை தன்னுடைய தேவைகளுக்கு (ஓரினச் சேர்க்கை) பயன்னடுத்திய சம்பவங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

இன்று பல ஆசிரியர்கள் நல்ல எதிர்கால சந்ததியினரை உருவாக்க வேண்டுமென்று அர்ப்பணிப்போடு செயலாற்றிக் கொண்டிருக்கும்போது ஒரு சில ஆசிரியர்கள் இவ்வாறு நடப்பது வேதனைக்குரிய விடயமே.

திருந்துவார்களா இவர்கள்?

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

7 comments: on "அரங்கேறாத அந்தரங்க அசிங்கங்கள்"

Anonymous said...

பள்ளிகளில் மட்டுமல்ல...
பெரும் பல்கலைகழகங்களிலும் இதே நிலை தான்...
சமீபத்தில்... சென்னைப் பல்கலைகழக விலங்கியல் துறையின் பேராசிரியர் மீது அவரிடம் பி எச் டி செய்துகொண்டிருந்த மாணவி பாலியல் தொல்லை என்று குற்றம் சாட்டியும், துறை முதல்வர் அவரது பல்கலைகழக நண்பர்கள் என அனைவரது உதவியாலும் அது மூடி மறைக்கப்பட்டது... இந்த பேராசிரியர் மீது ஏற்கனவே இத்தகைய புகார்கள் வந்துள்ளன... ஆனால் பல வகைகளில் அத்தனையையும் மூடி மறைத்து விடுகிறார்... இதற்கு துறையைச்சார்ந்த சில ஆண் பேராசிரியர்களும் ஒத்துழைக்கின்றனர்.. இதற்கெல்லாம் எப்போதுதான் விடிவுகாலம் வரும்... இத்தனைக்கும் அவரது மகள் அதே கேம்பஸில் வேறு துறையில் முதுகலைப்பட்டம் படிக்கிறாள்...

ஸ்ரீராம். said...

இவர்கள் ஆசிரியர்களா நாசகாரர்களா..கொடுமை. இங்கும் இது மாதிரி செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

மாணவன் said...

மாணவர்களை சிறந்தமுறையில் வழிநடத்தி எதிர்கால சந்ததினரை சிறப்பாக உருவாக்கும் மிக முக்கிய பொருப்பு ஆசிரியர்களுடையது அப்படிபட்ட ஆசிரியர்கள் (ஒருசிலர்) இப்படி நடந்துகொள்வது மிகுந்த வேதனையோடு “வேலியே பயிரை மேய்ந்த கதையாக” உள்ளது

Admin said...

//பெயரில்லா சொன்னது…
பள்ளிகளில் மட்டுமல்ல...
பெரும் பல்கலைகழகங்களிலும் இதே நிலை தான்...
சமீபத்தில்... சென்னைப் பல்கலைகழக விலங்கியல் துறையின் பேராசிரியர் மீது அவரிடம் பி எச் டி செய்துகொண்டிருந்த மாணவி பாலியல் தொல்லை என்று குற்றம் சாட்டியும், துறை முதல்வர் அவரது பல்கலைகழக நண்பர்கள் என அனைவரது உதவியாலும் அது மூடி மறைக்கப்பட்டது... இந்த பேராசிரியர் மீது ஏற்கனவே இத்தகைய புகார்கள் வந்துள்ளன... ஆனால் பல வகைகளில் அத்தனையையும் மூடி மறைத்து விடுகிறார்... இதற்கு துறையைச்சார்ந்த சில ஆண் பேராசிரியர்களும் ஒத்துழைக்கின்றனர்.. இதற்கெல்லாம் எப்போதுதான் விடிவுகாலம் வரும்... இத்தனைக்கும் அவரது மகள் அதே கேம்பஸில் வேறு துறையில் முதுகலைப்பட்டம் படிக்கிறாள்...//

எல்லா இடங்களிலும் இந்த கொடுமைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் பணமும் பதவியும் மூடி மறைக்கின்றன.

கருத்துக்களுக்கு நன்றிகள்

Admin said...

//ஸ்ரீராம். கூறியது...
இவர்கள் ஆசிரியர்களா நாசகாரர்களா..கொடுமை. இங்கும் இது மாதிரி செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன//

எல்லா இடங்களிலும் இருக்கும் இந்த கொடுமையை மூடி மறைப்பதனைவிட உரியவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்.

வருகைக்கு நன்றிகள்.

Admin said...

//மாணவன் கூறியது...
மாணவர்களை சிறந்தமுறையில் வழிநடத்தி எதிர்கால சந்ததினரை சிறப்பாக உருவாக்கும் மிக முக்கிய பொருப்பு ஆசிரியர்களுடையது அப்படிபட்ட ஆசிரியர்கள் (ஒருசிலர்) இப்படி நடந்துகொள்வது மிகுந்த வேதனையோடு “வேலியே பயிரை மேய்ந்த கதையாக” உள்ளது//

ஒரு சில ஆசிரியர்கள்தான் இப்படி நடந்து கொள்கின்றனர். அவர்களினால் அந்த சமூகம் பாதிக்கப்படுகின்றது என்பதனை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

vanathy said...

இந்த ஜென்மங்கள் திருந்தவே திருந்தாதுங்க!

Post a Comment