அனைத்து நண்பர்களுக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்.
தலைப்பை பார்த்ததுமே என்னடா இவன் இப்படி எல்லாம் எழுதுரானே என்று யோசிக்கிறிறீர்களா? உண்மையை சொல்லணும் என்றால் இப்படி எல்லாம் எழுதத்தான் வேண்டும்.
எமது பிரதேசத்திலே கோவணம்(கச்சை) கட்டினால் பொலிசாரால் தண்டப் பணம் அறவிடப்படுகின்றது. இது தற்போது எமது பிரதேசத்தில் பேசப்படும் விடயம். எங்கள் ஊரில் ஒருவர் வாழைப்பழக் கடை வைத்திருக்கின்றார். அவர் கோவணம்தான் கட்டுவார் அவரது கோவணத்தைக் கண்ட பொலிசார் அவரை பிடித்துவிட்டனர் என்று பரவலாக பேசப்படுகின்றது. ஆனால் இதில் எந்த உண்மையும் இல்லை.
இக்கதை வருவதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. இப்போது எமது பிரதேசத்திலே பொலிஸ் தொல்லை தாங்க முடியவில்லை. எதற்கெடுத்தாலும் தண்டப்பணம் விதிப்பது.
எமது கிராமமானது விவசாயக் கிராமம் பல விவசாயிகள் மிளகாய்ச் செய்கையிலே ஈடுபட்டு வருகின்றனர். மிளகாய்ச் செய்கைக்கு மாட்டெரு மிக மிக அவசியமான ஒன்று மாட்டெரு இல்லையேல் மிளகாய்ச் செய்கை பண்ணமுடியாத நிலை இருக்கின்றது. தனது விவசாய நிலத்தில் மாட்டெரு ஏற்றி வைத்திருக்கின்ற விவசாயிகளை கைது செய்து அடைத்து வைத்து தண்டப்பணம் அறவிட்டு வருகின்றனர் பொலிசார். பொலிசார் சொல்லும் விளக்கம் சூழல் மாசடைகின்றது என்பதே.
ஆனால் விவசாயிகள் மாட்டெருவினை உடனடியாகவே பயிர்களுக்கு போட்டுவிடுகின்றனர். அல்லது ஒருசில நாட்கள் மாத்திரமே பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வர். இதனால் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அத்தோடு மிளகாய்செய்கைக் காலம் ஆரம்பித்திருக்கின்றது இந்தநிலை தொடருமாக இருந்தால் மிளகாய்ச் செய்கை பண்ண முடியாத நிலை ஏற்படலாம்.
இது மாத்திரமல்ல அண்மையில் இரண்டு இடங்களிலே கஞ்சாவினை பொலிசாரே கொண்டு வைத்துவிட்டு அந்த காணியின் உரிமையாளரை கைது செய்து அபராதம் விதித்த சம்பவங்களும் இடம் பெற்றிருக்கின்றன. இவ்வாறான செயற்பாடுகள் பணம் படைத்தவர்களுக்கு நடந்தால் பாதிப்படையமாட்டார்கள். ஆனால் அன்றாடம் கூலிவேலை செய்பவர்களுக்கே இந்த நிலை. தண்டப் பணத்துக்கே ஒரு மாதம் கூலிவேலை செய்யவேண்டும். இவ்வாறு பல விடயங்கள் இடம்பெறுகின்றன.
இலஞ்சம் வாங்கி செயற்படுகின்ற பொலிசாரும் இல்லாமல் இல்லை கடலிலே மண் அகழ்வது தடை செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் பொலிஸ் நிலையத்துக்கு அருகிலேயே இரவோடு இரவாக மண் அகழ்ந்து விற்பனை செய்துகொண்டிருக்கின்றனர். குறித்த பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொலிஸ் துரித அழைப்பு இலக்கமாகிய 119 க்கு பல தடவை அறிவித்தும் எந்தப் பயனும் இல்லை.
எனக்கும் எனது நண்பர்களுக்கும் அண்மையில் இடம்பெற்ற சம்பவம்.
நாங்கள் நண்பர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் சந்தோசமாக ஏதாவது செய்வோம். அதிகமாக இரவு 12 மணிக்கு பின்னர்தான் வீட்டுக்கு செல்வோம். இப்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான மழை பெய்து கொண்டிருக்கின்றது. மழை காலத்தில் குளத்திலே இரவு நேரத்தில் மீன் வெட்டுவார்கள். அதிகமாக மீன் வெட்டப்படுகிறது என்பதனை அறிந்த நாம் நாமும் சந்தோசமாக மீன் வெட்ட ஆசைப்பட்டோம். மழையில் நனைவதென்றால் எனக்கு மிக மிக பிடித்த விடயமாச்சே.
குளத்துக்குச் சென்று விரால் மீன்கள் உட்பட பல மீன்களை வெட்டிவிட்டோம். திரும்பி வந்துகொண்டிருக்கும்போது பிரதான வீதியில் நின்ற பொலிசார் எங்களைப் பிடித்துவிட்டனர். எங்கள் கைகளில் மீன்களும் மீனை வெட்டுவதற்காக கொண்டு சென்ற கொண்டு சென்ற மெல்லிய தகடுமே. அப்போது நேரம் இரவு 12 மணியை தாண்டிவிட்டது.
எங்களைப் பிடித்த பொலிசார் விரட்ட ஆரம்பித்துவிட்டனர். என்னைப் போன்றுதான் என் நண்பர்களும் எதற்கும் பயந்தவர்களல்ல. நாம் மீன் வெட்ட கொண்டு சென்ற மெல்லிய தகட்டை வைத்து கூரிய ஆயுதங்களுடன் வந்தோம் என்று கைது செய்யப்போகின்றார்களாம். பொலிசாருக்கும் எமக்கும் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. இது வேற யாருமாக இருந்தால் பணம் பறித்திருப்பார்கள்.
இவ்வாறு தேவையற்ற விடயங்களுக்கெல்லாம் மக்களிடம் பணம் பறிக்கின்ற நிலை காணப்படுகின்றது. சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களே சட்டத்தை கையிலெடுத்திருக்கின்றனர்.
14 comments: on "கோவணம் (கச்சை) கட்டினால் தண்டனை... பொலிஸ் தொல்லை தாங்க முடியல..."
ஆகா,
இப்பிடியெல்லாமா.. கொஞ்சம் பயந்து காட்டினால் இப்படித்தான். கறக்க ஆரம்பித்து விடுவார்கள்.
அப்பிடி பொலிஸார் படுத்தும் பாட்டுக்கு அடிமையாகியிருக்கும் தங்கள் ஊரின் பெயரையும் வெளிச்சமிட்டிருக்கலாமே.இந்தப் பொலீஸார் குணிந்திருப்பவனின் தலையில் குட்டுவதில் கெட்டிக்காரர்கள் இல்லையா? பெரும்பாலும் பாஷை தெரியாததாலே இந்த நிலமை என்றெண்ணுகிறேன்.பாவம் தான் என்ன செய்வது? இன்னும் எத்தனை காலம்தான் இந்த நிலமையோ? இறைவா நீ இருக்கிறாயா?
எப்டிங்க இந்த படத்தை புடுச்சீங்க?
மக்களிடம் கறப்பதுதான் அவர்கள் தொழில் போலிருக்கிறது
லஞ்சம் எந்த நாட்டு போலிசை விட்டு வைத்தது.
ரொம்பவும் ஆஅச்சர்யமாகவும் காமெடியாகவும் இருக்கிறது... உங்கள் நிலையை நினைத்து சிறப்பதா அழுவதா என்று தெரியவில்லை...
இங்கேயும் நடக்கறதுதான்...!!
//Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu கூறியது...
ஆகா,
இப்பிடியெல்லாமா.. கொஞ்சம் பயந்து காட்டினால் இப்படித்தான். கறக்க ஆரம்பித்து விடுவார்கள்.//
உண்மைதான்... எப்படிக் கறக்க முடியும் என்று இருக்கின்றனர்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//Shafna கூறியது...
அப்பிடி பொலிஸார் படுத்தும் பாட்டுக்கு அடிமையாகியிருக்கும் தங்கள் ஊரின் பெயரையும் வெளிச்சமிட்டிருக்கலாமே.இந்தப் பொலீஸார் குணிந்திருப்பவனின் தலையில் குட்டுவதில் கெட்டிக்காரர்கள் இல்லையா? பெரும்பாலும் பாஷை தெரியாததாலே இந்த நிலமை என்றெண்ணுகிறேன்.பாவம் தான் என்ன செய்வது? இன்னும் எத்தனை காலம்தான் இந்த நிலமையோ? இறைவா நீ இருக்கிறாயா?//
கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், களுதாவளை எங்கள் கிராமம்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//ஜோதிஜி கூறியது...
எப்டிங்க இந்த படத்தை புடுச்சீங்க?//
இணையத்திலிருந்துதான் பிடித்தேன்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//Dr.எம்.கே.முருகானந்தன் கூறியது...
மக்களிடம் கறப்பதுதான் அவர்கள் தொழில் போலிருக்கிறது//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//இளம் தூயவன் கூறியது...
லஞ்சம் எந்த நாட்டு போலிசை விட்டு வைத்தது.//
எல்லோரும் தூயவர்களில்லையே...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
// philosophy prabhakaran கூறியது...
ரொம்பவும் ஆஅச்சர்யமாகவும் காமெடியாகவும் இருக்கிறது... உங்கள் நிலையை நினைத்து சிறப்பதா அழுவதா என்று தெரியவில்லை...//
ஆச்சரியமல்ல உண்மையாக நடக்கும் விடயங்கள்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//ஸ்ரீராம். கூறியது...
இங்கேயும் நடக்கறதுதான்...!!//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
Post a Comment