6ம் தரம் படிக்கின்ற மாணவன் (11 வயது) தன் வகுப்பில் படிக்கின்ற மாணவிக்கு காதலர்தின வாழ்த்து ஒன்றினை கொடுத்திருந்தான். மாணவி உடனடியாக எங்களிடம் தந்து விட்டார். மாணவனை கூப்பிட்டு விசாரித்தோம் இது என்ன வாழ்த்து என்று எனக்கு தெரியாது கடையில் இருந்தது வாங்கிக் கொடுத்தேன். என்று சொல்லிவிட்டான்.
நாங்களும் பெரிதுபடுத்தவில்லை காரணம் இது காதலர் தினத்தில் வழங்கப்படவில்லை. ஒரு மாதத்துக்கு முன்னர் நடந்த சம்பவம் இது.
சில நாட்களின் பின்னர் அதே மாணவனால் குறித்த மாணவிக்கு ஒரு கடிதத்தை கொடுத்திருந்தான். மாணவி உடனே எங்களிடம் தந்துவிட்டார்.
அன்பின் சுகந்திக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
நான் உன்னை காதலிக்கிறேன். நீ என்னைக் காதலிக்கவில்லை என்றாலும் நான் உன்னைக் காதலித்துக் கொண்டே இருப்பேன். நீ இல்லை என்று மட்டும் சொல்லிவிடாதே நான் செத்துவிடுவேன். நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது. நீ இல்லை என்று சொன்னாலும் நான் சாகவும்மாட்டேன். ஏன் என்றால் எனக்குள்தான் நீ இருக்கின்றாய்.
நல்ல பதில் தருவாய் என்று எதிர் பார்த்துக் காத்திருக்கின்றேன்.
அன்புடன்
கீர்த்தி
கடிதத்தைப் பார்த்ததும் சிரிப்புத்தான் வந்தது. உடனே மாணவனை கூப்பிட்டு கடிதம் கொடுத்தாயா என்று கேட்டோம் மாணவன் உடனே சொன்ன பதில் நான் காதலிக்கிறேன் கடிதம் கொடுத்தேன்.
9 comments: on "11 வயதில் மலர்ந்த காதலின் கதை"
இப்ப மாணவர்கள் யாருக்குமே பயப்படுவதில்லை போலும்.
//vanathy கூறியது...
இப்ப மாணவர்கள் யாருக்குமே பயப்படுவதில்லை போலும்.//
இப்போ உண்மையாகவே பல ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயப்படுகிறார்கள். மாணவர்களுக்கு பயம் என்பது இல்லை.
உண்மையில் அந்தப் பையனுக்கு காதல் என்ற சொல்லின் அர்த்தம் தெரியமோ தெரியது.. இது ஒரு பால் கவர்ச்சியாயிருக்கலாம் என நினைக்கிறேன்.. இதற்கு எம் சமூகமும், திரைபபடக் கலாச்சாரமும் தான் பதில் கூற வேண்டும்...
ஒரு முறை அவனை அழைத்து புரிய வைத்துப் பாருங்கள்..
(அந்தக் கடிதம் பார்க்கும் போது பயங்கர சிரிப்பு வந்திருக்குமே.. ஹ..ஹ..ஹ..)
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.
//.தி.சுதா கூறியது...
உண்மையில் அந்தப் பையனுக்கு காதல் என்ற சொல்லின் அர்த்தம் தெரியமோ தெரியது.. இது ஒரு பால் கவர்ச்சியாயிருக்கலாம் என நினைக்கிறேன்.. இதற்கு எம் சமூகமும், திரைபபடக் கலாச்சாரமும் தான் பதில் கூற வேண்டும்...
ஒரு முறை அவனை அழைத்து புரிய வைத்துப் பாருங்கள்..
(அந்தக் கடிதம் பார்க்கும் போது பயங்கர சிரிப்பு வந்திருக்குமே.. ஹ..ஹ..ஹ..)
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.//
இப்பவும் நினைத்தால் சிரிப்பு வருகிறது... உண்மையில் நீங்கள் சொல்வதுபோல் சமூகமும் திரைப்படங்களுக்கும் பங்கிருக்கின்றது. அந்த மாணவனிடம் நிறைய விடயங்களை விளங்கப்படுத்தி இருக்கின்றோம்.
வருகைக்கு நன்றிகள்.
ம்ம்ம்....சிரிப்புத்தான் வருது.என்னதான் செய்தீங்க பிறகு !
//ஹேமா கூறியது...
ம்ம்ம்....சிரிப்புத்தான் வருது.என்னதான் செய்தீங்க பிறகு !//
இப்போதைக்கு காதல் வேண்டாம் இது காதலிக்கும் வயது இல்லை. படிக்கும் வயது இப்போது படிங்கள் என்று அறிவுரை சொன்னோம்.
ஹா ஹா ஹா !!! விளையும் பயிர் ...........:)
ஒருபக்கம் சிரிப்பாக இருந்தாலும் சிறுவயதிலேயே இப்படி எண்ணம் இருப்பது வருத்தமாகவும் வேதனையாகவும் உள்ளது இதற்கு சமூகமும் மாறி வரும் கலாச்சாரமும் ஒரு காரணமாக இருக்கலாம்
சினிமாக்களும் ஊடகங்களும் செய்யும் வேலை இது...
Post a Comment