Saturday, 7 August 2010

திருமணத்தின் பின்னும் பெண்களை கவர சில ஆலோசனைகள்


என்னுடைய முன்னைய இடுகை ஒன்று மீண்டும் உங்களுக்காக.... எல்லோருக்கும் பயனுள்ள ஆலோசனைதானே ...
01. உங்களுக்கு திருமணம் நடந்த விடயத்தை திருமண நாள் அன்றோடு மறந்து விடுங்கள், உங்களுக்கு திருமணம் நடந்து விட்டது என்று தெரியாதவர்களுக்கு திருமணம் நடந்த விடயத்தை தெரியப்படுத்த வேண்டாம்.

02 . மனைவி பிள்ளைகளோடு வெளியில் செல்வதை தவிருங்கள்.

03. நீங்கள் எப்போதும் திருமணமாகாத இளம் நண்பர்களோடு மட்டுமே பழகுங்கள். அப்போது மற்றவர்கள் உங்களையும் திருமணமாகாத ஒருவர் என்று நினைத்து விடுவார்கள்.

04. எப்போதும் நாகரிகமான ஆடைகளை அணியுங்கள் அடிக்கடி இளம் பெண்கள்  அதிகம் நடமாடும் இடங்களுக்கு சென்று உங்கள் வழமையான சில்மிசங்களை செய்யுங்கள்.

05. இளம் பெண்களுக்கு உதவிகள் தேவைப்படும்போது அந்தப் பெண்கள் உங்களிடம் உதவி கேட்காமலேயே நீங்களாகவே சென்று உதவி செய்யுங்கள். அப்போது அந்தப் பெண்ணின் மனதிலே இலகுவில் இடம் பிடிக்கலாம்.

06. சில காலம் குழந்தை பெறுவதை தவிர்க்க வேண்டும். காரணம் பிள்ளைகளின் தொல்லை அதிகமாகும் அப்போது வெளியில் நீங்கள் கல்யாணமானவர் என்பது தெரிய வரலாம். அப்போது இளம் பெண்கள் உங்களை கண்டாலே ஓடி விடுவார்கள்.

07. உங்கள் மனைவி வெளியில் சென்று வருவதற்கு ஒரு காரினையும் (மகிழுந்து) ஒரு சாரதியையும் ஏற்பாடு செய்து வையுங்கள். ( உங்கள் மனைவியை அந்த சாரதி ஏற்பாடு செய்தால் நான் பொறுப்பல்ல)

08. மூஞ்சி   புத்தகத்தில் (face book) அதிகம், பெண் நண்பிகளை தேடிக்கொள்ளுங்கள்.அல்லது அதிகம் பெண் நண்பிகளை சேர்க்க துடிக்கும் சந்ரு போன்றோரின் ஆலோசனைகளைப் பெறுங்கள்.

09. திருமண, பிறந்தநாள் போன்ற விசேட நிகழ்வுகளுக்கு மனைவியுடன் செல்வதை தவிர்த்து தனியாக செல்லுங்கள். ஏல்லும்போது கம்பிரமான தோற்றத்தோடு செல்லுங்கள். அங்கேயும் பல இளம் பெண்களை கவர முடியும்.

10. இதுதான் மிக முக்கியமான ஒன்று ஏற்கனவே திருமணமான மூத்த பதிவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று அவர்களது அனுபவத்துடன் கூடிய ஆலோசனைகளை பெறுங்கள்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

10 comments: on "திருமணத்தின் பின்னும் பெண்களை கவர சில ஆலோசனைகள்"

சசிகுமார் said...

நண்பரே இப்பவே நம்ம ஆளுங்களுக்கு அதுதான் வேலையாக உள்ளது. இதில் நீங்க வேற உசுப்பி விடுறீங்க

சசிகுமார் said...

நண்பரே இப்பவே நம்ம ஆளுங்களுக்கு அதுதான் வேலையாக உள்ளது. இதில் நீங்க வேற உசுப்பி விடுறீங்க

ஹேமா said...

சந்ரு...அரசியலோடு இதுவும் நடக்குதோ...நடக்கட்டும்.
நல்லதா நடக்கட்டும் !

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் நல்லது

Unknown said...

<<<
பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இல்லாமல் சமூகத்துக்கு ஏதாவது செய்யத்துடிப்பவன்.
>>>

ஆகா ரெம்ப துடிச்சுட்டீங்களே. :)

செல்வா said...

ஒரு முடிவுலதான் இருக்கீங்க போல..??

ஸ்ரீராம். said...

குறும்புப் பதிவு...

ananth said...

do you think this article good. its trash. never write this kind of article

Thenammai Lakshmanan said...

ஹாஹாஹா சந்த்ரு மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் பதிவுகளை எல்லாம் படித்து சிரித்து மகிழ்ந்தேன்..

அரசியல் பற்றிய பகிர்வு ஷார்ப்..

Anonymous said...

சிறந்த வலைப்பதிவாக ஆரம்பிக்கப்பட்ட உங்கள் தளம், இன்று மூன்றாந் தரமான மஞ்சள் பத்திரிகை ஆகிவிட்டது.

Post a Comment