Saturday 19 December 2009

வேட்டைக்காரனும் பிரபலமாகும் பதிவர்களும்




வேட்டைக்காரன் விமர்சனம் மூலம் வேட்டையாடப்படும் பதிவர்கள்

வேட்டைக்காரன்  வெளிவருவதற்கு முன்னரே வேட்டைக்கரனுக்கு எதிராகவும், ஆதரவாகவும் வேமர்சனங்கள் அதிகமாக இருந்தது. இதனால் வேட்டைக்காரனை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் அதிகரித்து இருந்தன என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்று வேட்டைக்காரன் விமர்சனங்களை பதிவர்கள் வேக வேகமாக பதிவிட்டு வருகின்றனர். சிலரோ வேட்டைக்காரன் விமர்சனம் என்று சொல்லி தான் பிரபல்யம் அடைவதற்காகவும், பதிவர்களை வம்புக்கு இழுப்பதட்காகவும் வேட்டைக்காரன் விமர்சனம் என்ற பெயரில் ஏதோ விமர்சனம் செய்து பதிவர்களை வம்புக்கு இழுத்திருக்கின்றனர். இது எப்படி இருப்பினும் வேட்டைக் காரனைப் பாருங்கள் பார்த்துவிட்டு வேட்டைக்காரனை விமர்சனம் செய்யுங்கள். தாம் பிரபலமாவதட்கான விமர்சனமாக வேட்டைக்காரனை பயன்படுத்த வேண்டாம்.

 என் பெயர் சரியா? தவறா?

நான் பதிவெழுத வந்த காலம் தொடக்கம் இன்று வரைக்கும் என் பெயரிலே சிறு சர்ச்சை ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. நான் எனது பெயரை எழுதும் முறை தவறானது என்று சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

நான் எனது பெயர ஆரம்பம் முதல் சந்ரு என்றே பயன் படுத்தி வருகின்றேன் ஆனால் இது தவறானது. சந்த்ரு என்றுதான் வர வேண்டும் என்று சிலர் அடிக்கடி சொல்லி வருகின்றனர். சந்ரு என்று எழுதுவது தமிழிலே சற்று மயக்கத்தை ஏற்படுத்துவதாக சொல்கின்றனர்.

சந்ரு என்பது தவறானது என்றால் தமிழிலே எழுதுவதற்கே முடியாமல் இருக்கின்ற பெயர்கள் பல இருக்கின்றனவே என்று நண்பர் ஒருவரிடம் கேட்டேன் அவர் சொன்னார் அது தமிழ் பெயர் அல்ல ஆனால் சந்ரு என்பது தமிழ் பெயர் சந்ரு எனும் பெயரிலே தமிழ் இலக்கண மயக்கம் இருப்பது தவறு என்றார்.

அப்படியானால் ஜெயகிருஷ்ணா என்பது ஒரு தமிழ் பெயர் இங்கே நாம்  ஷ் போட்டு எழுதுகின்றோம். இவ்வாறு வடமொழி சொற்களை பயன் படுத்தி பல பெயர்களை எழுதுகிறோம் இது சரியா?

ஒருவரின் பெயரை இன்று என் ஜோதிடம் முக்கிய இடம் பெறுகின்றது. பலர் தங்களது பெயரை என் ஜோதிடப்படி வைத்திருப்பார்கள்.  அப்போது அவரது பெயரை மாற்ற சொல்ல முடியுமா? என் பெயர் ஒரு ஜோதிடப் படியும் நான் வைக்கவில்லை.

என் பெயரை சந்ரு என்று எழுதுவதையே நான் விரும்புகிறேன். பல நண்பர்கள் சந்த்ரு  என்று மாற்றும்படி சொல்கின்றனர். என் பெயர் சந்ரு என்று இருப்பது சரியா தவறா? சந்ரு என்று இருக்க வேண்டுமா? சந்த்ரு என்று வரவேண்டுமா உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.


பிரபல பதிவராவது எப்படி...


இன்று பிரபல பதிவராவதட்கு இலகுவான பல வழிகள் இருக்கின்றன. அவற்றில் ஒரு சிலவற்றை தருகிறேன் நீங்களும் பின்பற்றி பிரபல பதிவராகுங்கள்.

1. பிரபல பதிவர்களை தாக்கி பதிவிடலாம்.
இதனால் பிரபல பதிவர் மட்டுமல்ல அவரை பின்தொடர்வோர் அவரது இரசிகர்கள் என்று எல்லோரும் உங்கள் பதிவுக்கு வருவார்கள் அப்போது உங்கள் வலைப்பதிவை பலர் அறிந்து கொள்வார்கள்.

2. பதிவுகளுக்கு எதிராக கருத்துரையிடலாம்.
இதனால் எல்லோரும் பதிவுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும்போது நீங்கள் மட்டும் எதிராக கருத்துதெரிவிப்பதால் எல்லோர் பார்வையும் உங்கள் பக்கம் திரும்பும். அத்தோடு அந்தப் பதிவு ஒரு தேவையற்ற விவாதமாக மாற்றப்படும். எல்லோரும் உங்கள் பதிவுகளை பார்க்க ஆசைப் படுவார்கள். (என்ன எழுதுறிங்க என்றுதான் பார்க்க)

3. ஏனைய வலைப்பதிவர்களின் பதிவுகளுக்கு எதிர் பதிவு போடலாம் இதனாலும் குறிப்பிட்ட வலைப்பதிவர் சார்ந்த எல்லோரும் உங்கள் வலைப்பதிவுக்கு வருவர். இவ்வாறு பல எதிர் பதிவுகளை போடும்போது பலர் உங்கள் வலைப்பதிவை வந்து பார்ப்பார்கள்.

4. நீங்கள் வலைப்பதிவுகளுக்கு கருத்துரை இடும்போது சம்பந்தப் படாத ஒரு பதிவரை வம்புக்கு இழுத்து கருத்துரை இடலாம். அதனால் வம்புக்கு இழுக்கப்பட்ட பதிவரும், அவர் சார்ந்தோரும் உங்கள் பக்கம் பார்வையை திருப்புவார்.

இன்னும் இருக்கிறது சந்தர்ப்பம் வரும்போது மிகுதி வரும்.

சில பதிவர்கள் இவ்வாறுதான் பிரபல்யமாகிக் கொண்டு இருக்கின்றனர். நீங்களும் இதனை கடைப்பிடித்து பிரபல பதிவராக வாழ்த்துக்கள்.


வலைப்பதிவு அறிமுகம்

பங்குச்சந்தை - ஸ்ரீலங்கா எனும் வலைப்பதிவானது இலங்கையின் பங்குச் சந்தை தொடர்பாகவும், இப் பங்குச் சந்தையிலே நாளாந்தம் இடம் பெறுகின்ற மாற்றங்கள்.  பங்குச்சந்தை முதலிட்டு வாய்ப்புக்கள், பங்குச் சந்தையில் முதலிடுவது தொடர்பான பல்வேறு பட்ட ஆலோசனைகள். உலக பங்குச்சந்தை மாற்றங்கள் , உலக பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்களை தினமும் திரட்டித் தருகின்ற ஒரு வலைப் பதிவாகும்.

இந்த வலைப்பதிவின் மூலம் பங்குச் சந்தையில் முதலிட்டவர்களும், முதலிட நினைப்பவர்களும், இத் துறை சார்ந்தவர்களும், வணிகத்துறை சார்ந்த மாணவர்களும் நன்மையடைந்து வருகின்றனர்.

இந்த வலைப் பதிவுக்கு சென்று நீங்களும் நன்மையடையலாம்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

34 comments: on "வேட்டைக்காரனும் பிரபலமாகும் பதிவர்களும்"

KANA VARO said...

//சில பதிவர்கள் இவ்வாறுதான் பிரபல்யமாகிக் கொண்டு இருக்கின்றனர். நீங்களும் இதனை கடைப்பிடித்து பிரபல பதிவராக வாழ்த்துக்கள்.//


உங்களை வைத்து மற்றவர்களை எடைபோட்டது தவறு… நீங்கள் பிரபலமாக கைக்கொண்ட இவ்வாறான முறைகள் அபாரம். இப்பதிவை மூன்று மாதங்களுக்கு முதல் இட்டிருந்தால் எனக்குப் பிரையோசனமாக இருந்திருக்கும். இப்பதிவை இட்டுக்கூட நீங்கள் பிரபலமாகப் பார்த்திருக்கிறீர்கள். சொந்த அனுபவத்தை எழுதினாலும் அது பிழை எண்டுறீர்கள். சபாஷ்

Admin said...

//VARO கூறியது...
//சில பதிவர்கள் இவ்வாறுதான் பிரபல்யமாகிக் கொண்டு இருக்கின்றனர். நீங்களும் இதனை கடைப்பிடித்து பிரபல பதிவராக வாழ்த்துக்கள்.//


உங்களை வைத்து மற்றவர்களை எடைபோட்டது தவறு… நீங்கள் பிரபலமாக கைக்கொண்ட இவ்வாறான முறைகள் அபாரம். இப்பதிவை மூன்று மாதங்களுக்கு முதல் இட்டிருந்தால் எனக்குப் பிரையோசனமாக இருந்திருக்கும். இப்பதிவை இட்டுக்கூட நீங்கள் பிரபலமாகப் பார்த்திருக்கிறீர்கள். சொந்த அனுபவத்தை எழுதினாலும் அது பிழை எண்டுறீர்கள். சபாஷ்//

என் பதிவுகளை தொடர்ந்து படிப்போர்க்கு தெரியும் நான் இதனைப் பதிவிடுகிறேன் என்று. நான் பிரபல பதிவர் என்று என்னை சொல்லவில்லையே.

சொந்த அனுபவங்களை எழுதும்போது எதற்காக சிலர் வேண்டுமென்று சில பதிவர்களை வம்புக்கு இழுக்கின்றனர் என்பதுதான் என் கேள்வி?

என்ன கொடும சார் said...

வரோ முந்திரிக்கொட்டை மாதிரி முதல் பின்னூட்டம் இட்டபோதே விளங்கவில்லையா? யார் இப்படி எல்லாம் பிரபலம் தேடுவது என்ற உண்மை. வரோ இருக்கிறத்தில் வந்த கணவன் மனைவி தொடரை உங்கள் வலையில் எழுதுங்கள் நீங்கள் உலகப் பிரபலம் ஆகலாம்.

KANA VARO said...

//என் பதிவுகளை தொடர்ந்து படிப்போர்க்கு தெரியும் நான் இதனைப் பதிவிடுகிறேன் என்று. நான் பிரபல பதிவர் என்று என்னை சொல்லவில்லையே.//

என் பின்னூட்டங்களையும் தொடர்ந்து பார்த்திருந்தால் தெரியும், பிரபலமானவர்களின் எல்லாப் பதிவுக்கும் பின்னூட்டம் இட்டேனா? அல்லது எனக்கு பிடிக்காத பதிவுக்கு மட்டும் பின்னூட்டம் இட்டேனா என்று (நீங்கள் தானே அவ்வலைத்தளத்தில் வீடு கட்டு குடிபுகுந்திருக்கிறீர்கள்)

//சொந்த அனுபவங்களை எழுதும்போது எதற்காக சிலர் வேண்டுமென்று சில பதிவர்களை வம்புக்கு இழுக்கின்றனர் என்பதுதான் என் கேள்வி?//

யார் யாரை வம்புக்கு இழுத்தார்கள். நேரடியாகச் கூறுங்கள். விளக்கம் தருகின்றேன். அதன் பிறகு உங்கள் முகத்தை எங்கே போய் வைத்துக்கொள்வீர்கள் என்று தான் எனக்குத் தெரியவில்லை.

உங்கள் பதிவுகள் மீது மைனஸ் ஓட்டு குத்துகிறார்கள் என்று நீங்கள் கூறியபோது உங்களுக்காக நான் ஆதங்கப்பட்டதுண்டு. சில பதிவுக்கு பிளஸ் ஓட்டும் போட்டிருக்கின்றேன். இப்பொழுது புரிகின்றது சக பதிவர்களுடன் நீர் எவ்வாறு பகைத்துக் கொள்கிறீர் என்று. நான் யோசித்த விடயம் ஒன்றை இங்கு கூறுகின்றேன். இன்னொருவருடைய பதிவில் போய் அவர் அளிக்க வேண்டிய விளக்கத்துக்கு எல்லாம் பதிலளிப்பதை இனியாவது மாற்றிக்கொள்ளுங்கள். இதுதான் பலரையும் உங்கள் மீது கோபப்பட வைக்கிறது. உங்கள் பதிவில் என்னவேண்டுமானாலும் எழுதுங்கள். உங்கள் தவறை நீங்கள் உணர வேண்டும்.

தர்ஷன் said...

நீங்கள் சொன்ன ஐடியா மூலம் பிரபலமானா பரவாயில்லை ப்ராப்ளமானா?

Atchuthan Srirangan said...

//வலைப்பதிவு அறிமுகம்

பங்குச்சந்தை - ஸ்ரீலங்கா//

சந்ரு உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி, நன்றி, நன்றி...

இலங்கன் said...

அண்ணா தமிழில் பெயர் தொடர்பாக எனக்கு அதிகம் இஸ்டம் இல்லை. முன்பு சில இடங்களில் சைக்கிள் திருத்துமிடத்தை "ஒட்டகம்" எனவும், கேக்கை "குதப்பி" எனவும் பெயர் வைக்கப்பட்டிருந்ததை ஞாபகப்படுத்தியது உங்கள் பதிவு.

ASFER said...

சண்டை பிடிக்கவேணாமே.

அந்த 4 காரணிகளும் உண்மைதான். செய்றவங்க நிறுத்திக்கொண்டாங்க என்டா
சரி.

என்ன கொடும சார் said...

மீண்டும் என்னுடைய பெயரை பாவித்து யாரோ கருத்துரையிட்டுள்ளார்கள்.

பிரபலத்தை தேடுவதற்காகவே நீங்கள் இவ்வாறான முறைகளை நீங்கள் கையாளுகிறீர்கள். வரோ நான் உங்களை எதிர்த்து எந்த கருத்தையும் சொல்லவில்லை. சில மறைகழன்றதுகள் செய்யும் வேலை..

Admin said...

//VARO கூறியது...
என் பின்னூட்டங்களையும் தொடர்ந்து பார்த்திருந்தால் தெரியும், பிரபலமானவர்களின் எல்லாப் பதிவுக்கும் பின்னூட்டம் இட்டேனா? அல்லது எனக்கு பிடிக்காத பதிவுக்கு மட்டும் பின்னூட்டம் இட்டேனா என்று (நீங்கள் தானே அவ்வலைத்தளத்தில் வீடு கட்டு குடிபுகுந்திருக்கிறீர்கள்)//

எனது இதப் பதிவிலே நான் யாரையாவது பெயர் சொல்லி குறிப்பிட்டு இருக்கிறேனா? உங்களைப் பற்றி சொல்லி இருக்கிறேனா? நான் நீங்கள் கருத்துரை இடுவதனைப் பற்றி சொல்லி இருக்கின்றேனா? நீங்கள்தானே வீண் விவாதத்துக்கு வருகிறேர்கள். நான் எந்த வலைப்பதிவிலே வீடு கட்டி குடியிருக்கிறேன் என்று சொல்லுங்கள். நான் குடியிருப்பதும் இருக்காமல் விடுவதும் என்னைப் பொறுத்தது. அதனை சொல்லவேண்டிய பொறுப்பு உங்களிடம் இல்லை.


//யார் யாரை வம்புக்கு இழுத்தார்கள். நேரடியாகச் கூறுங்கள். விளக்கம் தருகின்றேன். அதன் பிறகு உங்கள் முகத்தை எங்கே போய் வைத்துக்கொள்வீர்கள் என்று தான் எனக்குத் தெரியவில்லை.//

நான் இந்தப் பதிவிலே உங்கள் பெயரை சொல்லி இருக்கிறேனா? என் முகத்தை எங்கே வைத்துக் கொள்வது என்பது எனக்குத் தெரியும் . நீங்கள் சொல்லவேண்டிய அவசியமில்லை.


//உங்கள் பதிவுகள் மீது மைனஸ் ஓட்டு குத்துகிறார்கள் என்று நீங்கள் கூறியபோது உங்களுக்காக நான் ஆதங்கப்பட்டதுண்டு. சில பதிவுக்கு பிளஸ் ஓட்டும் போட்டிருக்கின்றேன். இப்பொழுது புரிகின்றது சக பதிவர்களுடன் நீர் எவ்வாறு பகைத்துக் கொள்கிறீர் என்று. நான் யோசித்த விடயம் ஒன்றை இங்கு கூறுகின்றேன். இன்னொருவருடைய பதிவில் போய் அவர் அளிக்க வேண்டிய விளக்கத்துக்கு எல்லாம் பதிலளிப்பதை இனியாவது மாற்றிக்கொள்ளுங்கள். இதுதான் பலரையும் உங்கள் மீது கோபப்பட வைக்கிறது. உங்கள் பதிவில் என்னவேண்டுமானாலும் எழுதுங்கள். உங்கள் தவறை நீங்கள் உணர வேண்டும்.//

என்னை உங்களைப் போன்ற பதிவர்கள்தான் பகைத்துக் கொள்கின்றனர். மற்றவர்கள் பதிவிலே விளக்கம் சொல்லவேண்டிய கடமை இருந்தது அதுதான் விளக்கம் கொடுத்தேன். எங்கே விளக்கம் கொடுத்திருக்கிறேன் என்று சொல்லுங்கள்.

ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களையும் ஒருவர் குற்றம் சொல்லும்போது என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நான் ஒரு உடகவியலாணன் எனும்போது எந்நாளும் விளக்கம் கொடுக்கவேண்டிய பொறுப்பு இருந்தது. உரிய வலைப்பதிவரிடம் நான் சில விளக்கங்கள் கொடுக்கப்போகிறேன் என்று அனுமதிபெற்றே விளக்கம் கொடுத்தேன்.

உரிய வலைப்பதிவர்கள்தான் என்னை கருத்ததுரையிட வேண்டாம் என்று சொல்லவேண்டும். நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. என் விளக்கங்கள் எல்லோரையும் கோபப்பட வைக்கவில்லை உங்களைப் போன்ற ஒரு சிலருக்கே கோபமாக இருந்திருக்கும். மற்றவர்களை வம்புக்கிழுத்து சீண்டிவிட்டு புதினம் பார்ப்பவர்களுக்கு கோபமாகத்தான் இருக்கும்.

Admin said...

//தர்ஷன் கூறியது...
நீங்கள் சொன்ன ஐடியா மூலம் பிரபலமானா பரவாயில்லை ப்ராப்ளமானா?//

பிரபலமாகலாம் ஆனால் இப்படி பிரபலமாகுவோரால்தான் மற்றவர்களுக்குத்தான் பிரச்சினை.

Admin said...

//Atchu கூறியது...
//வலைப்பதிவு அறிமுகம்

பங்குச்சந்தை - ஸ்ரீலங்கா//

சந்ரு உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி, நன்றி, நன்றி...//

என்றும் என் ஆதரவு இருக்கும் திறமைக்கு முன்னுரிமை கொடுப்பேன்.

Admin said...

//இலங்கன் கூறியது...
அண்ணா தமிழில் பெயர் தொடர்பாக எனக்கு அதிகம் இஸ்டம் இல்லை. முன்பு சில இடங்களில் சைக்கிள் திருத்துமிடத்தை "ஒட்டகம்" எனவும், கேக்கை "குதப்பி" எனவும் பெயர் வைக்கப்பட்டிருந்ததை ஞாபகப்படுத்தியது உங்கள் பதிவு.//

என்னைப் பொறுத்தவரை தமிழர்களாகிய நாம் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று விரும்புபவன் நான் ஆனாலும் என் பெயரிலே மயக்கம் இருப்பதாக சிலர் குறிப்பிடுவதுதான் எனக்கு மயக்கமாக இருக்கிறது.

Admin said...

//ASFER கூறியது...
சண்டை பிடிக்கவேணாமே.

அந்த 4 காரணிகளும் உண்மைதான். செய்றவங்க நிறுத்திக்கொண்டாங்க என்டா
சரி.//

உண்மைதான்.... நிறுத்திக் கொண்டால் சரிதான் நிறுத்துவார்களா?

Subankan said...

உங்கள் பதிவில் என்னையும் மறைமுகமாக வம்புக்கு இழுத்துள்ளீர்கள். இப்படிப் பிரபலமாகுவது யார் என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

Admin said...

நான் சிலரிடம் நேரடியாக சொல்லி இருக்கிறேன் என் பதிவுப்பக்கம் வரவேண்டாம் என்று. அவர்கள் வருவதே பிரச்சினைகளை உருவாக்கத்தான்.

Admin said...

//Subankan கூறியது...
உங்கள் பதிவில் என்னையும் மறைமுகமாக வம்புக்கு இழுத்துள்ளீர்கள். இப்படிப் பிரபலமாகுவது யார் என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.//


சுபாங்கன் நான் நகைச்சுவைப் பதிவுகளை சொல்லவில்லை வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பவர்களைத்தான் சொன்னேன்.



நானும் சிலரை நகிஸ் சுவைப்பதிவு மூலம் கலாய்த்து இருக்கிறேன் உங்களையும்தான். அப்படிப்பட்ட நகை சுவைப் பதிவுகளை நான் சொல்லவில்லை. இப்படி பிரபலமானது யார் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன் அதனால்தான் இந்தப் பதிவு.

Subankan said...

மேலே எனது பெயரில் இடப்பட்ட பின்னூட்டம் என்னால் இடப்படவில்லை அண்ணா, open id இனைப் பயன்படுத்தி இடப்பட்டுள்ளது. அதைக் கிளிக் செய்தால் எனது தளத்திற்கே வருகிறது. profile க்கு அல்ல. தயவுசெய்து அதை நீக்கிவிடுங்கள்.

பின்னூட்டம் இட்டவருக்கு,

கருத்துகளை உங்கள் பெயரில் இடமுடியாவிட்டால் அனானியாகவாவது இடுங்கள். தயவுசெய்து அடுத்தவர் பெயரைப் பயன்படுத்தி பதிவர்களுக்குள் பிரச்சினை உருவாக்காதீர்கள்.

Admin said...

//Subankan கூறியது...
மேலே எனது பெயரில் இடப்பட்ட பின்னூட்டம் என்னால் இடப்படவில்லை அண்ணா, open id இனைப் பயன்படுத்தி இடப்பட்டுள்ளது. அதைக் கிளிக் செய்தால் எனது தளத்திற்கே வருகிறது. profile க்கு அல்ல. தயவுசெய்து அதை நீக்கிவிடுங்கள்.

பின்னூட்டம் இட்டவருக்கு,

கருத்துகளை உங்கள் பெயரில் இடமுடியாவிட்டால் அனானியாகவாவது இடுங்கள். தயவுசெய்து அடுத்தவர் பெயரைப் பயன்படுத்தி பதிவர்களுக்குள் பிரச்சினை உருவாக்காதீர்கள்.//
சுபாங்கன் நீங்கள்தான் இந்த கருத்துரை இட்டீர்கள் என்று நான் நினைத்துவிட்டேன். எனக்கு ஓபன் ஈத் போன்ற தொழிநுட்ப விடயங்கள் தெரியவில்லை. நீங்கள் இல்லை என்று உறுதிப் படுத்தியமைக்கு நன்றிகள்.

அன்புடன் நான் said...

சந்த்ரு விட சந்ரு தான் நல்லா இருக்குங்க.
மற்றபடி பிரபல பதிவராக வருவதைவிட... ஒரு நாளு பேருக்கு பிடித்த பதிவர இருப்பதுதான் சிறப்பு என் எண்ணுகிறேன். பகிர்வுக்கு நன்றிங்க சந்ரு.

Unknown said...

சபா....

சந்ரு அண்ணா....
உண்மையான புளொக்கர் மூலம் இடுவதானால் B என்ற எழுத்து பெயருக்குப் பக்கத்தில் வரும்....

Open ID மூலம் என்றால் சிறிது மங்கிய நிறத்தில் வரும்....
கவனித்துக் கொள்ளுங்கள்...

என்ன கொடுமை சாருக்கு,..
உங்கள் புளொக்கர் கணக்கு மூலம் பின்னூட்டமிட்டீர்களென்றால் பிரச்சினைகளைத் தடுக்கலாமே?
நீங்கள் ஏன் தொடர்ந்தும் Open ID மூலம் பின்னூட்டுகிறீர்கள்?

என்னய்யா பிரபலம்...
பிரபலமா வந்து என்னத்தக் கிழிக்கப் போறம்....
எனக்கு உதுமேல எந்த நம்பிக்கையும், விருப்பமும் கிடையாது...

நான் எதிர்பார்த்ததைவிட நிறையவே நல்ல நண்பர்களை/உறவுகளைப் பெற்றுவிட்டேன்....

எல்லாம் ஒரு மன மகிழ்ச்சிக்காகத் தானே....

இங்கும் இவ்வளவு பிரச்சினைகள் இருப்பது மனதிற்கு வருத்தத்தைத் தருகிறது...

Unknown said...

உங்கள் பெயர் தொடர்பா நான் முன்னமும் குறிப்பிட்டிருக்கிறேன்...
அது உங்கள் விருப்பம்...

நான் அதில் மூக்கை நுழைத்துக் கொள்ள விரும்பவில்லை...

எனது பெயரில் 'ஷ்' இருக்கிறது...
நான் என்ன செய்ய.... :(

Kala said...

சந்ரு பரவாயில்லை
சந்திரகுமார் அவர்களே!
சந்த்ரு---உச்சரிக்கும் போது
சத்ரு என்று ஒலி வருகிறது இது உங்களுக்கு
புரியுமென நினைக்கின்றேன்


இதற்கு முதல் இடுகை நான் படிக்கவில்லை
இப்போதுதான் பார்த்தேன் உங்களுக்கு
கவிதை வர......காரணமான அந்தக் காரிகை ???

நல்ல முயற்சி தொடருங்கள்.

என்ன கொடும சார் said...

என் பெயர் இங்கு துஷ்பிரயோகம் செய்யப்படும்போது பதிலளிப்பதற்கான தார்மீக உரிமை எனக்கிருக்கிறது. அதை மறுதலிக்க நீர் யார்?

இப்பதிவை இட்டுக்கூட நீங்கள் பிரபலமாகப் பார்த்திருக்கிறீர்கள் என்று வரோ சொன்னதை நான் வழிமொழிகிறேன்.

//நான் பிரபல பதிவர் என்று என்னை சொல்லவில்லையே.//

அப்படியாயின் எதற்கு உமக்கு சம்பந்தம் இல்லாத தெரியாத விடயத்தை பற்றி எழுதுகிறீர்கள்?

//நான் எந்த வலைப்பதிவிலே வீடு கட்டி குடியிருக்கிறேன் என்று சொல்லுங்கள்.//

இது கூட தெரியல..

கனககோபி; உங்கள் ஆலோசனைக்கு நன்றி. சில காரணங்களுக்காக அவ்வாறு செய்து வந்தேன். ஆலோசனையை ஏற்றுக்கொள்கிறேன். சில நாட்களில் நான் பொருத்தமான மாற்றுவழியை கையாள்வேன்..

Admin said...

//சி. கருணாகரசு கூறியது...
சந்த்ரு விட சந்ரு தான் நல்லா இருக்குங்க.
மற்றபடி பிரபல பதிவராக வருவதைவிட... ஒரு நாளு பேருக்கு பிடித்த பதிவர இருப்பதுதான் சிறப்பு என் எண்ணுகிறேன். பகிர்வுக்கு நன்றிங்க சந்ரு.//

உங்கள் கருத்துத்தான் என் கருத்தும்.

வருகைக்கு நன்றிகள்.

Admin said...

//@. கனககோபி கூறியது... //

உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.

ஸ்ரீராம். said...

மறுபடியும் வேட்டைக் காரனா...ஐயோ....

உங்கள் பெயர் சந்ரு என்பதே நல்லா இருக்கு... இலக்கணமாவது மயக்கமாவது பெயருக்கே எதுக்கு அதெல்லாம்...

Admin said...

//Kala கூறியது...
சந்ரு பரவாயில்லை
சந்திரகுமார் அவர்களே!
சந்த்ரு---உச்சரிக்கும் போது
சத்ரு என்று ஒலி வருகிறது இது உங்களுக்கு
புரியுமென நினைக்கின்றேன்//

புரிகிறது. உச்சரிப்பு வித்தியாசம், ஒலி வேறுபாடு.


//இதற்கு முதல் இடுகை நான் படிக்கவில்லை
இப்போதுதான் பார்த்தேன் உங்களுக்கு
கவிதை வர......காரணமான அந்தக் காரிகை ???

நல்ல முயற்சி தொடருங்கள்.//

அது கவிதை அல்ல என் நண்பன் ஒருவனுக்கு நகை சுவையாக எழுதி அனுப்பிவிட்டு அதனை அப்படியே பதிவிட்டு விட்டேன்.நான் நகைசுவைக்காக என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். இதுவரை எந்தக் காரிகையும் இல்லை.

Admin said...

//என்ன கொடும சார் கூறியது...
என் பெயர் இங்கு துஷ்பிரயோகம் செய்யப்படும்போது பதிலளிப்பதற்கான தார்மீக உரிமை எனக்கிருக்கிறது. அதை மறுதலிக்க நீர் யார்? //


என் வலைப்பதிவுக்கு வரும் கருத்துரைகளை வெளியிடுவதும், வெளியிடாமல் விடுவதும் என்னைப் பொறுத்தது. இங்கு யார் பெயர் துஸ்ப்பிரயோகம் செய்யப்பட்டது என்பதற்கு நான் பொறுப்பல்ல அது துஸ்பிரயோகம் செய்தவர்களை பாருங்கள். இந்த வலைப்பதிவுக்கு ஒருவரை வரவேண்டாம் என்று சொல்லும் உரிமை எனக்கிருக்கிறது. நான் இந்த வலைப் பதிவின் உரிமையாளர்.

//இப்பதிவை இட்டுக்கூட நீங்கள் பிரபலமாகப் பார்த்திருக்கிறீர்கள் என்று வரோ சொன்னதை நான் வழிமொழிகிறேன்.//

நான் பிரபலமாவது பிரபலமாகாமல் விடுவதைப் பற்றியும் நீங்கள் பேசவேண்டிய உரிமை உங்களுக்கில்லை.

//அப்படியாயின் எதற்கு உமக்கு சம்பந்தம் இல்லாத தெரியாத விடயத்தை பற்றி எழுதுகிறீர்கள்?//

நான் இதைத்தான் எழுத வேண்டும் என்று சொல்லும் உரிமையும் எவருக்குமில்லை. நான் தெரிந்த விடயத்தைப் பற்றி எழுதுவதும் தெரியாத விடயத்தைப் பற்றி எழுதுவதும் என்னைப் பொறுத்தது.


////நான் எந்த வலைப்பதிவிலே வீடு கட்டி குடியிருக்கிறேன் என்று சொல்லுங்கள்.//

இது கூட தெரியல..//

நான் ஒரு வலைப்பதிவிலே குடியிருப்பதோ, கும்மி அடிப்பதோ என்னைப் பொறுத்தது என் விருப்பம் அதனை நீங்கள் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

என்ன கொடும சார் said...

ஐயா உரிமையாளரே.. என்னுடைய பெயர் இங்கு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதனால்தான் வந்தேன். அது என் உரிமை கூட..

ஆனால் தெரியாத விடயத்தை செய்யவேண்டாம்.. வினயமாக வேண்டுகிறேன். தெரிந்ததை எழுதுங்கள்.

பக்கத்து வீட்டுக்காரன் அதிகமாக சத்தமிட்டால் எங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தினால் அது அவர்வீட்டில் இருந்துகொண்டு செய்தாலும் கூட சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும் என்பது தெரியுமா?

அதுசரி உங்கள் தமிழில் பிழை பிடித்தால் அறிவிப்பு துறையை விட்டு
விலகுவீர்களா?

Admin said...

@. என்ன கொடும சார்

நான் எதனைப் பதிவிடுகிறேன் என்று என் பதிவுகளை பார்ப்போருக்குத் தெரியும்.

என் வலைப்பதிவிலே சில எழுத்துப் பிழைகள் இருக்கின்றன. நான் சில அவசரமான பதிவுகள் இடும்போது ஏற்படும் பிழைகள். நான் முன்னரே ஒரு தடவை சொல்லி இருக்கிறேன் என் அறிவிப்பிலே உச்சரிப்பு தவறாக இருப்பதை நீங்கள் கண்டு பிடித்தால் நான் ஊடகத்துறையில் இருந்து விலகுவதற்கு தயாரென்று.

நான் அறிவிப்பிலே வேற்று மொழிகளை பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்த்து வருகிறேன். 99% நான் வேற்று மொழிகளை பயன் படுத்துவதில்லை.

முடிந்தால் என் அறிவிப்பிலே தமிழ்மொழி உச்சரிப்பு பிழை பிடியுங்கள் நான் ஊடகத்துறையை விட்டு விலகுகிறேன் என்று சவால் விடுகிறேன்.

மயில்வாகனம் செந்தூரன். said...

ம்ம்ம்ம்.... உங்கள் பெயரை இப்போது உள்ளவாறே வைத்துக்கொள்ளுங்கள் அண்ணா... அதுதான் அழகு... வேட்டைக்காரன் பற்றி எனக்குத் தெரியாது... இன்னும் பார்க்கவில்லை...ஆனால் புலம்பெயர் தமிழர்கள் வேட்டைக்காரனை புறக்கணித்திருக்கின்றார்கள்...

திரைப்படங்களை பொழுதுபோக்காக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர அவற்றை பற்றி தேவையில்லாமல் அலட்டவோ அல்லது நடிகர்களுக்கு பாலபிஷேகம் செய்யவோ தேவையில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து..... இது வேட்டைக்காரனுக்கு மட்டுமல்ல... எல்லாத் திரைப்படங்களுக்கும் பொருந்தும்... மேலும் விமர்சனங்கள் நடுநிலைமையானவையாக அமைதல் அவசியம்.. விமர்சிப்பவர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்...

இன்னுமொரு விடயம் ஒரு ஊடகவியலாளன் தன்னை சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபடுத்த
வேண்டுமெனின் முதலில் பக்கம் சாராத நாடு நிலைத் தன்மையைப் பேண வேண்டும்.. சமய,அரசியல்,சினிமா,விளையாட்டு அடையாளங்கள் நேயர்களுக்கும் அறிவிப்பாளர்களுக்குமான உறவில் ஒரு வகையான விரிசலை உண்டுபண்ணலாம்...

பங்குச் சந்தை வலைப்பூவைப் பற்றிய உங்கள் கருத்துக்கள் நன்று... அந்த தளத்தை அறிமுகப்படுத்திய உங்கள் பரந்த மனதுக்கு இனிய நன்றிகளும், வாழ்த்துக்களும்..

SShathiesh-சதீஷ். said...

விடுங்கப்பா விடுங்கப்பா இவங்கெல்லாம் திருந்த மாட்டாங்க நம்ம்ம தளபதி இல்லாட்டி ஹிட்ஸ் கிடைக்காதே.

அஹோரி said...

"பிரபல பதிவர் " ன்னா யாரு ? கவுண்டமணி பின்னூட்டம் போட வந்தாதான் நீங்கல்லாம் சரி பட்டு வருவீங்க.

Post a Comment