Thursday, 24 December 2009

இதயத்தின் வலியும் சிதறல்களும்

வலையுலகில் என்னை உச்சாகப் படுத்துகின்றவர்களுள் ஒருவரான   சிங்கபூரில்  இருக்கின்ற கலாவின் கவிதை இது. 





இதயத்தின் வலி 






விரல் இடுக்குகளில் பிடித்து
சில இளவயசுகள்
நொடிக்கொரு தரம்
இழுக்கும் புகை
இரு வழி வரும் போது
என் இருதயம் வலிக்கின்றது


மருத்துவராய் வருவாயென
மடி சுமந்த மங்கை ஏங்க...உன்
உடலில் ஊசி ஏற்றி
செயல்பாடு செயலிழக்க
போதைப் புளங்கியாய்_நீ
பொசுங்கிக் கருகையிலே..
என் கருவறையும் வலிக்கின்றது


குடிவழி வந்த மதியிருந்தும்
மதுக் கோப்பைப் புதைகுழியில்
வாழ்க்கைப் புதையலைத் தொலைத்து
மயானத்தில் கல் பதிக்கும் போது
என் கண்மணி வலிக்கின்றது


கட்டுப்பாடில்லாக் காளையர்கள்
கண்ணிருந்தும் குருடாய்
காவலில்லாத் தோட்டத்தில்
ஆட்கொல்லி எயிட்ஸ் மலரை
அள்ளி நுகர்கையிலே...
ஆட்டம் கண்டு
என் தண்டுவடம் வலிக்கின்றது


வேக வீதியிலே விவேகம் இல்லாமல்
விரைந்து நீ செல்ல_காலனும்
கவ்வி உன்னைக் குதறிக் கொல்ல...
உதிரிப் பாகங்களாய் உடல் சிதற
என் உடல் பாகம் பாகமாய்
வலிக்கிறது


தமிழ் பேசுவதுஅநாகரீகம்
என்று....
நாகரீகம் நவிலும் போது
என் செவிப்பறை செம்மையாய்
வலிக்கிறது.



வாரம் ஒரு வலைப்பதிவு உலா 2 


வாரம் ஒரு வலைப் பதிவினை அறிமுகம் செய்து வருகின்றேன். என் வலைப்பதிவுக்கு வருபவர்கள் அந்த வலைப்பதிவினை அறிந்து கொள்ளட்டுமே என்ற எண்ணமேதான் 


சிதறல்கள் வலைப்பதிவிலே பல்வேறு பட்ட விடயங்களை பதிவிடப்படுகின்றன. கவிதைகள், கட்டுரைகள், படங்கள், அழகிய காட்சிகள், செய்திகள் என்று நல்ல பல விடயங்கள் பதிவிடப்படுகின்றன. சிதறல்கள் வலைப்பதிவை நீங்களும் சென்று பார்க்கலாமே.


அண்மையில் சிதறல்களிலே வெளியான ஒரு கவிதை இது. 

அவனும் அவர்களும் 
புல்லாங்குழல், வயலின்
இவற்றை இவனிடம்
கொடுக்கத்தேவையில்லை
எஸ்.எம்.எஸ், தொலைபேசி போதும்
மனம் விரும்பும்
கானம் வரும்

இவன் ஒரு
அறிவிப்பாளன்
தமிழ்
வலைப்பதிவாளன்
தமிழ் சொல்லி
தமிழ் வளர்ப்பவன்

இவன் அடிக்கடி
அங்கிருந்தால்தான்
நமக்கு நல்ல
பாட்டுவரும்
காது குளிரும்

தொண்டு செய்பவன்
அனானிகள் கண்டு
தமிழ் முண்டி வருபவன்

ஒல்லிக்குச்சி உடம்புக்காரன்
சொல்லியடிக்கும் தமிழ்
'கில்லி'க்காரன்

ஒலிவாங்கி முன் இருப்பதால்
விவாதமேடைகள் இவனுக்கு
விபரீதமல்ல - நல்ல
வாதியும் இவனே
நாதியற்றவர்களுக்கு
நீதியும் இவனே....

நீங்கள்
கத்திகொண்டு கீறலாம்
இவன்
புத்தி மாறப்போதில்லை
வீரம் விளைந்த மண்ணில்
ஈரம் கொண்டு முளைத்தவன்
காரம் நிறைந்தவன்

ஆதலால்
இவன்
அவனேயாக
ஆனதால்
அனானிகளே!
சற்று அமரலாம்

பட்டுச்சேலைகளே...
வேட்டிகளே...
முட்களில் விழுந்தால்
உங்கள்
முகத்திரை கிழிவதுதான்

நிச்சயம். 



Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

17 comments: on "இதயத்தின் வலியும் சிதறல்களும்"

அன்புடன் நான் said...

கலாவின் கவிதை கேட்டதுதான்.... இருந்தும் நல்லாயிருந்தது.... சிதறலும் அருமை..... உங்களுக்கும் வாழ்த்துகள்.

Subankan said...

நல்ல கவிதை. படம் கலக்கல்!

நிலாமதி said...

கலாவின் கவிதைகளும் சிதறலும். ...அழகாய் ....நன்றாய் இருகின்றன. பிறக்க இருக்கும் ஆண்டு
உங்களுக்கு வ்ள்மானதாய் உடல் நல்மானதாய்....சிறந்த எதிர்காலமாய் இருக்க அக்காவின் வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

//"போதைப் புளங்கியாய்"//

கலாவின் கவிதை அருமை.

புளங்கியாய் என்றால் என்ன?

ப்ரியமுடன் வசந்த் said...

கலாவிண்ட கவிதை படிக்கும்போது மனசில் நெருஞ்சி முள்....!

சிதறல்கள் நல்ல அறிமுகம்,...!

கமலேஷ் said...

உங்களின் பதிவுகளில் நல்ல நோக்கமிருக்கிறது..
வாழ்த்துக்கள்..
கவிதைகள் அனைத்தும் அருமை...

ஹேமா said...

கலாவுக்கு வாழ்த்து.நிறைவான ரசிகை அவர்.எல்லாருக்கும் செல்லப்பிள்ளையாய் உலாவரும் எங்கள் கலா.

அடுத்த கவிதையும் அருமை சந்ரு.

இனிய
புத்தாண்டு வாழ்த்துக்களும் சந்ரு.

Ramesh said...

நன்றி சந்ரு..
அறிமுகம் உங்களாலும்...

உங்களுக்கு எழுதிய கவிதையை உங்க வலைப்பதிலே சேர்த்ததற்கும் மகிழ்ச்சி..
வாழ்த்துக்கள் உங்களுக்கு.

கலாவின் கவிதையும் நெகிழ வைக்குது

பாருங்க இந்த சிகரெட்ட
http://sidaralkal.blogspot.com/2009/09/blog-post_4817.html

வாழ்த்து சொல்லிய நண்பர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்

Admin said...

//சி. கருணாகரசு கூறியது...
கலாவின் கவிதை கேட்டதுதான்.... இருந்தும் நல்லாயிருந்தது.... சிதறலும் அருமை..... உங்களுக்கும் வாழ்த்துகள்.//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//Subankan கூறியது...
நல்ல கவிதை. படம் கலக்கல்!//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//நிலாமதி கூறியது...
கலாவின் கவிதைகளும் சிதறலும். ...அழகாய் ....நன்றாய் இருகின்றன. பிறக்க இருக்கும் ஆண்டு
உங்களுக்கு வ்ள்மானதாய் உடல் நல்மானதாய்....சிறந்த எதிர்காலமாய் இருக்க அக்காவின் வாழ்த்துக்கள்.//

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் அக்கா.

Admin said...

//பிரியமுடன்...வசந்த் கூறியது...
கலாவிண்ட கவிதை படிக்கும்போது மனசில் நெருஞ்சி முள்....!

சிதறல்கள் நல்ல அறிமுகம்,...!//

உண்மைதான் வசந்த்... இன்று நாகரிகம் எனும் போர்வையில் வாழ்க்கையையே அழிக்க நினைக்கின்றனர் பலர்.
வருகைக்கு நன்றிகள்.

வாரம் ஒரு வலைப்பதிவை அறிமுகம் செய்கின்றேன் வசந்த்.

Admin said...

//kamalesh கூறியது...
உங்களின் பதிவுகளில் நல்ல நோக்கமிருக்கிறது..
வாழ்த்துக்கள்..
கவிதைகள் அனைத்தும் அருமை...//

என்னால் முடிந்தவர் நல்லதை செய்யவேண்டும் என்ற எண்ணமே.
வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

Admin said...

//ஹேமா கூறியது...
கலாவுக்கு வாழ்த்து.நிறைவான ரசிகை அவர்.எல்லாருக்கும் செல்லப்பிள்ளையாய் உலாவரும் எங்கள் கலா.

அடுத்த கவிதையும் அருமை சந்ரு.

இனிய
புத்தாண்டு வாழ்த்துக்களும் சந்ரு.//

உண்மைதான் கலா எல்லோரையும் உற்சாகப் படுத்தும் ஒருவர் நல்ல விமர்சகர்.
வாழ்த்துக்களுக்கு நன்றிகள்

Admin said...

//றமேஸ்-Ramesh கூறியது...
நன்றி சந்ரு..
அறிமுகம் உங்களாலும்...

உங்களுக்கு எழுதிய கவிதையை உங்க வலைப்பதிலே சேர்த்ததற்கும் மகிழ்ச்சி..
வாழ்த்துக்கள் உங்களுக்கு.

கலாவின் கவிதையும் நெகிழ வைக்குது

பாருங்க இந்த சிகரெட்ட
http://sidaralkal.blogspot.com/2009/09/blog-post_4817.html

வாழ்த்து சொல்லிய நண்பர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்//

வருகைக்கு நன்றிகள் .

Admin said...

//ஸ்ரீராம். கூறியது...
//"போதைப் புளங்கியாய்"//

கலாவின் கவிதை அருமை.

புளங்கியாய் என்றால் என்ன?//

புளங்கியாய் என்பது பழக்கத்தில் உள்ள என்ற சொல்லுக்கு பதிலாக பயன்படுத்த முடியும். உதாரணமாக புழக்கத்தில் உள்ள நாணயம் என்பார்கள். நாணயப் புழக்கம் என்பார்கள். இங்கே போதைப் புளங்கியாய் என்று கலா குறிப்பிடுவது போதை பழக்கத்துக்கு அடிமையாய் என்று பொருள் தருகிறது

கலா said...

ஊவாவ்.....இவ்வளவும் நடந்திருக்கா??
என்னது சின்னப்புள்ளத்தனமா.....
எங்கிட்டச் சொல்லவே இல்ல..!!!
அப்புறம் நான் அழுதுருவன்

சந்ரு உங்கள் அன்புக்கு மிக்க நன்றியய்யா!
போதைப் புளங்கி
சந்ரு விளக்கம் கொடுத்து விட்டார் நன்றி

அனைத்துத் தோழியர்கும் ,தோழர்களுக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

அறிமுகமாக்கிய வலைப்பதிவும் நன்றாக
இருக்கின்றது வளரட்டும்! வாழ்த்துக்கள்!!

Post a Comment