Sunday, 20 December 2009

நானும், என் சுய புராணமும்.

நான் வலைப்பதிவுக்கு வந்தது புகழ் தேட வேண்டும் என்பதற்காகவோ, பிரபல பதிவராக வேண்டும் என்பதற்காகவோ அல்ல,  தமிழர்களுக்கே தனித்துவமான, மறைந்து வருகின்ற எமது கலை, கலாசாரங்களை வெளி உலகுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும், எமது மக்கள் படுகின்ற அவலங்களை என்னால் முடிந்தவரை வெளி உலகுக்கு கொண்டு செல்ல வேண்டும், என் கருத்துக்களையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே வலைப்பதிவை ஆரம்பித்தேன்.

வலைப்பதிவு மூலம் நிறையவே நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர், என் கருத்துக்களையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கின்றேன் எனும்போது மட்டற்ற மகிழ்சியே.  அண்மைக் காலமாக ஏன் இந்த வலைப் பதிவுலகத்துக்கு வந்தேன் என்று எண்ணத் தோன்றுகின்றது.

நான் அதிகமாக பிரச்சினைகளைப் பற்றி பதிவிட்டு வருகின்றேன். எங்கு தவறு நடக்கின்றது, பிரச்சினைகள்  இருக்கின்றதோ அதனை நான் ஒரு போதும் சுட்டிக்காட்ட தயங்கப் போவதுமில்லை.  அது யார் செய்த தவறாக இருந்தாலும்.  என் பதிவுகளிலே தவறு இருந்தால் நேர்மையான முறையிலே யார் சுட்டிக் காட்டினாலும் நான் திருத்திக்கொள்ள தயாராக இருக்கின்றேன்.

அதனை விடுத்து அச்சுறுத்தல் விடுவது, தகாத வார்த்தைகளால் பின்னூட்டமிடுவது, என் பெயரிலே தவறான முறையிலே என் நண்பர்களது வலைப்பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவது   இவ்வாறு பல்வேறு இழிவான செயலிலே சிலர் ஈடுபடுவது மன வேதனையைத் தருகின்றது.

இச்செயற்பாடுகள் தொடர்பாக நான் சில இடுகைகளிலே சுட்டிக்காட்டிய போது நான் பிரபலமாவதட்காக சுய புராணம் பாடுவதாக இந்த  செயல்களிலே ஈடுபட்டவர்கள் சில வலைப்பதிவுகளிலே பின்னூட்டமிட்டு  இருந்தனர். என் வலைப்பதிவிலும் மோசமான வார்த்தைகளால் பின்னூட்டமிட்டு  இருந்தனர்.

இந்த மோசமான கிழ்த்தரமான வேலைகளை செய்கின்றவர்களுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன். துணிவும் தன்நம்பிக்கையும் என்னுடன் கூடப் பிறந்த ஒன்றாகும். எவரது மிரட்டல்களுக்கும் நான் பயப்படப் போவதில்லை. மரணத்துக்கு பயப்படுபவனுமல்ல மரணமென்பது ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அது இன்று வந்தாலும் சரி, நாளை வந்தாலும் சரி அதுவரை நல்ல மனிதனாக வாழவேண்டும்.  என்பதுதான் என் எண்ணம்.

கடந்த சில நாட்களாக நாகரிகமற்ற சிலரின்  பின்நூட்டங்களால்   மனதிலே மிகவும் கவலையாக இருந்தது. வேண்டத்தகாத வார்த்தைகள் வேண்டுமென்றே என்னை சீண்டுவதாக அமைந்திருந்தன. நான் என்  கருத்தை சொல்லுகின்ற, வெளியிடுகின்றபோது போது தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம். அதனை விடுத்து தேவையற்ற விடயங்களை சொல்லி மற்றவர்களது மனதை புண்படுத்தும் செயலானது மனிதத் தன்மையான ஒரு செயலல்ல.

ஒரு சிலர் செய்யும் தவறுக்காக எல்லோரையும் தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்ப்பதும்  மனிதத் தன்மையல்ல. நான் என் தாய் மொழி தமிழ்மொழியையும், என்னை வெளி உலகிற்கு அறிமுகப் படுத்திய அறிவிப்புத் துறையையும்  என் உயிரிலும் மேலாக மதிப்பவன். இவை இரண்டைப் பற்றியும் யார் தவறாக பேசினாலும் அவர்களுக்கு எதிராக நான் எதனை  செய்யவும் தயங்கமாட்டேன்.

தமிழ்மொழிப் பற்று என்பது ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டும். தமிழ் மொழிப் பற்று ஒரு பிரதேசம் சார்ந்தவனுக்குத்தான் இருக்க வேண்டுமென்று இல்லை. நான் மட்டக்களப்பை சேர்ந்தவன் ஆனாலும் வலைப்பதிவு மூலம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நண்பர்களே எனக்கு அதிகம். இந்த நட்பை இல்லாமல் செய்ய வேண்டுமென்று சிலர் தேவையற்ற பிரதேச வாதத்தை துண்டுகின்ற பல பின்னூட்டங்களை   நாள்தோறும் என் வலைப் பதிவிலே இட்டு வருகின்றனர்.

நான் பிரதேச வாதத்தையும், பிரதேசவாத அரசியலையும் முற்றாக  வெறுப்பவன். ஒருசிலர் செய்யும் தவறுக்காக எல்லோரையும். விரோதிகளாக பார்க்க முடியாது.  பிரதேச வாத பின்னூட்டங்களை  தவிர்த்து விடுங்கள் நேர்மையான கருத்துக்களை சொல்லுங்கள் என்று அனானிகலிடம்  கேட்டுக் கொள்கிறேன்.

 எனது நண்பர்களின்   வலைப்பதிவுகளிலே எனது பெயரிலே தேவையற்ற பின்னூட்டங்கள் சில விசமிகளால் இடப்பட்டதனால் நான் சில காலம் வெளி நாட்டு நண்பர்களின் வலைப் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவதை தவிர்த்து.  இலங்கையிலே இருக்கின்ற என்னோடு நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே பின்னூட்டமிட்டு வந்தேன்.

சில நாட்களாக அனானிகள்  என்னை மோசமான முறையிலே திட்டித் தீர்த்ததனால் நான் சில காலம் வலைப்பதிவுப் பக்கம் வருவதில்லை என்றும், எவருக்கும் பின்னூட்டமிடுவதில்லை என்றும் நினைத்திருந்தேன். ஆனால் சில நண்பர்கள் எனக்கு உச்சாகத்தை வழங்கினார்கள் தொடர்ந்து எழுதுங்கள் என்று. அவர்களுக்கு எனது நன்றிகள்.

இந்த சீண்டுதல்கள்   என்னை இன்னும் நிறையவே எழுதத் தூண்டுகின்றது என்பதுதான் உண்மை. இனிவரும் என் எழுத்துக்கள் இன்னும் புத்துணர்ச்சி பெறும்.

என்று முதல் நான் அனைத்து நண்பர்களது வலைப்பதிவுக்கும் பின்னூட்டமிட இருக்கின்றேன். நான் எனது பின்னூட்டத்தினால்   தனிப்பட்ட எவரையும் தாக்குவதில்லை, எதிர்க் கருத்துக்களை சொன்னாலும் தகாத வார்த்தைகளை பிரயோகிக்க மாட்டேன் அப்படி பின்னூட்டமிடப்பட்டால் அது நான் இட்ட பின்னூட்டமல்ல உடனடியாக எனக்கு தெரியப்படுத்துங்கள் நண்பர்களே.


நான் என்றும் தமிழனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

21 comments: on "நானும், என் சுய புராணமும்."

ஸ்ரீராம். said...

ஏன் இதை எல்லாம் லட்சியம் செய்கிறீர்கள்? தூசு என ஒதுக்கி உங்கள் பணியைத் தொடருங்கள்...

Subankan said...

நல்ல முடிவு, தொடருங்கள் :)

Ramesh said...

///துணிவும் தன்நம்பிக்கையும் என்னுடன் கூடப் பிறந்த ஒன்றாகும். எவரது மிரட்டல்களுக்கும் நான் பயப்படப் போவதில்லை. மரணத்துக்கு பயப்படுபவனுமல்ல மரணமென்பது ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அது இன்று வந்தாலும் சரி, நாளை வந்தாலும் சரி அதுவரை நல்ல மனிதனாக வாழவேண்டும். ///

இதுவே நமக்குத்தேவை..தடைகளை உடைத்து முன்னேறுங்கள். தோள் கொடுக்க நாங்கள் தயார் நண்பனே

///நான் மட்டக்களப்பை சேர்ந்தவன் ஆனாலும் வலைப்பதிவு மூலம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நண்பர்களே எனக்கு அதிகம். ///

நல்லது. ஆனால் இப்படியான வசனங்களை மறப்போம். தழிழர் என்றே இருப்போமே..

///இந்த சீண்டுதல்கள் என்னை இன்னும் நிறையவே எழுதத் தூண்டுகின்றது என்பதுதான் உண்மை. இனிவரும் என் எழுத்துக்கள் இன்னும் புத்துணர்ச்சி பெறும்.////
நியூட்டனின் 3ஆம் விதியை நினைவூட்டுகிறது. உங்கள்
எழுத்துக்களால் தமிழும் கிராமத்து கலை கலாசாரங்களும் ஆவணப்படுத்தப்படுவதையே நான் விரும்புகிறேன்
தொடருங்கள் உன்னோடு நீங்கள் மட்டுமல்ல நாங்களும் இருக்கிறோம் என்பதை மனதில் நிறுத்தி மேலும் வளருங்கள் நண்பா..

Ramesh said...

///நல்லது. ஆனால் இப்படியான வசனங்களை மறப்போம். தழிழர்என்றே இருப்போமே..///
மன்னிக்கவும் அது தமிழர்

சுசி said...

குப்பையை விட்டுத் தள்ளுங்க சந்ரு.

நல்ல முடிவு.

தொடர்ந்து எழுதுங்க.

யோகராஜா said...

நல்ல நகைச்சுவைப்பதிவு.. தொடர்ந்து இப்படியாக எழுதுங்கள்

ASFER said...

குரைக்கிற நாய் குரைத்துக் கொண்டே இருக்கும்.அத பெரிசா எடுக்காதீங்க.

தொடர்ந்து எழுதுங்க.வாழ்த்துக்கள்

*****************************
COMMENTS வர வில்லையா? கவலையே வேண்டாம்.
http://asfer-asfer.blogspot.com/2009/12/comments.html

//எல்லோரும் வசிக்க வேண்டியது//

please
******************************

Admin said...

// ஸ்ரீராம். கூறியது...

ஏன் இதை எல்லாம் லட்சியம் செய்கிறீர்கள்? தூசு என ஒதுக்கி உங்கள் பணியைத் தொடருங்கள்...//

இனிமேல் எதனையும் கருத்தில் எடுக்கப் போவதில்லை. கருத்துக்களுக்கும் தொடரும் உங்கள் ஆதரவுக்கும் நன்றிகள்.

Admin said...

//Subankan கூறியது...
நல்ல முடிவு, தொடருங்கள் :)//

உங்கள் வருகைக்கும் ஆலோசனைகளுக்கும் நன்றிகள் சுபாங்கன்.

Admin said...

//றமேஸ்-Ramesh கூறியது...

இதுவே நமக்குத்தேவை..தடைகளை உடைத்து முன்னேறுங்கள். தோள் கொடுக்க நாங்கள் தயார் நண்பனே//

தொடரும் உங்கள் ஆதரவுக்கும், ஆலோசனைகளுக்கும் நன்றிகள்.

///நான் மட்டக்களப்பை சேர்ந்தவன் ஆனாலும் வலைப்பதிவு மூலம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நண்பர்களே எனக்கு அதிகம். ///

நல்லது. ஆனால் இப்படியான வசனங்களை மறப்போம். தழிழர் என்றே இருப்போமே..//

நான் என்றுமே பிரதேச வேறுபாடு பார்ப்பவனல்ல பிரதேசத்தை வைத்து சிலர் சீண்டினார்கள் அதுதான் நான் எனது இடுகையிலே சுட்டிக்காட்டினேன். நான் பிரதேச வாத்தத்துக்கும், பிரதேச வாத அரசியல் நடத்துவோருக்கும் எதிரானவன்.


///இந்த சீண்டுதல்கள் என்னை இன்னும் நிறையவே எழுதத் தூண்டுகின்றது என்பதுதான் உண்மை. இனிவரும் என் எழுத்துக்கள் இன்னும் புத்துணர்ச்சி பெறும்.////
நியூட்டனின் 3ஆம் விதியை நினைவூட்டுகிறது. உங்கள்
எழுத்துக்களால் தமிழும் கிராமத்து கலை கலாசாரங்களும் ஆவணப்படுத்தப்படுவதையே நான் விரும்புகிறேன்
தொடருங்கள் உன்னோடு நீங்கள் மட்டுமல்ல நாங்களும் இருக்கிறோம் என்பதை மனதில் நிறுத்தி மேலும் வளருங்கள் நண்பா..///

என் பதிவுகளிலே எமது கலை கலாசாரங்களை பிரதி பலிக்கின்ற பல விடயங்களை தொடர்ந்தும் பதிவிட இருக்கின்றேன். தொடரும் உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்

Admin said...

//சுசி கூறியது...
குப்பையை விட்டுத் தள்ளுங்க சந்ரு.

நல்ல முடிவு.

தொடர்ந்து எழுதுங்க.//


குப்பைகள் அல்ல சாக்கடைகள் என்று சொல்லலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றிகள். தொடர்ந்தும் என் பதிவுகள் வரும்.

Admin said...

//யோகராஜா கூறியது...
நல்ல நகைச்சுவைப்பதிவு.. தொடர்ந்து இப்படியாக எழுதுங்கள்//


19 வருடங்களுக்கு முன் இறந்த என் தந்தை யோகராஜா ஆவியாக வந்து கருத்துரையிட்டாரோ என்று நினைத்தேன். ஆனால் அவர் இப்படி எழுத நாகரிகமற்றவரில்லையே. இது எல்லாம் ஒரு பிழைப்பு.

Admin said...

//ASFER கூறியது...
குரைக்கிற நாய் குரைத்துக் கொண்டே இருக்கும்.அத பெரிசா எடுக்காதீங்க.

தொடர்ந்து எழுதுங்க.வாழ்த்துக்கள்//

நாயுடன் இவர்களை ஒப்பிட வேண்டாம் நாய்க்கு நன்றியாவது இருக்கும். ஆதரவுக்கு நன்றிகள்.


//*****************************
COMMENTS வர வில்லையா? கவலையே வேண்டாம்.
http://asfer-asfer.blogspot.com/2009/12/comments.html

//எல்லோரும் வசிக்க வேண்டியது//

please
******************************//

நான் வாசித்தேன் நண்பா நல்ல இடுகை ஆனால் கருத்துரை இடவில்லை.

மயில்வாகனம் செந்தூரன். said...

உங்கள் தமிழுணர்வுக்கு தலை வணங்குகின்றேன்... மேலும் நானும் உங்களைப்போலவே எம் தாய்மொழியாம் தமிழையும், எனது அறிவிப்புத் துறையையும் ஆழமாக நேசிக்கின்றேன்.. உங்கள் ஊடகப்பணி தொடரட்டும்... சில இடங்களில் "தடைகளைத் தாண்டுவதை விட தகர்ப்பதே சிறந்தது"... கவலையை விடுங்கள்.. தொடருங்கள்... நண்பர்கள் நாம் உள்ளோம்...வாழ்த்துக்கள்...

Priya said...

படிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு சந்ரு, இப்படியெல்லாம் கூட நடக்குமா...?எனக்கு ஆச்சர்யமாவும் அதிர்ச்சியாவும் இருக்கு! இத்தனை வேகமான உலகத்தில இந்த பதிவுலகம் நல்லதொரு நட்பை வளர்க்கும் என்றுதான் நினைத்திருந்தேன்...

நீங்க கவலையை விடுங்க... தொடர்ந்து எழுதுங்க‌!

விபு said...

தொடருங்கள் அண்ணா...

விபு said...

தொடருங்கள் அண்ணா...

Kala said...

சந்ரு தமிழர்களுக்கு இன்று நேற்றல்ல...
மன்னர் காலங்களிலிருந்தே ஒற்றுமை
கிடையாது யாராவது ஒரு எட்டப்பன்
இருந்து கொண்டேதான் இருப்பான்

நல்லவை செய்யவும் மாட்டார்கள்
செய்யவும் விடமாட்டார்கள்

நீங்கள் அன்னப் பறவைபோல் வேண்டியவற்றை
எடுத்து விட்டு வேண்டாதவற்றை தொட்டுக்கூடப்
பார்க்க வேண்டாம் இரு கை அடித்தால் தான்
ஓசை வரும்.ஒரு கையால்...எழுப்ப முடியாது

ஓன்றொன்றுக்கும் பதில் சொல்லப் போனால்....
முடிவு கிடையாது. அதனால் மற்றவர்களுக்கு
{அநாவசியர்களுக்கு}பதில் சொல்லத் தேவையில்லை

உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

Unknown said...

ஒற்றை வார்த்தை தான் சொல்வேன் சந்ரு அண்ணா....

விட்டுத் தள்ளுங்கள்...

ARV Loshan said...

இதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுக்காதீர்கள்.. விமர்சனங்களை மட்டும் கருத்தில் எடுங்கள்.
பாராட்டுக்களை நன்றியோடு பாருங்கள்.
காழ்ப்புணர்ச்சியை அழித்தே விடுங்கள்.

தொடர்ந்து உங்கள் வழியில் பயணிக்க வாழ்த்துக்கள்

ஜோதிஜி said...

Good . So nice. Asusual proceed.

Post a Comment