Monday 14 December 2009

நம்மவர்கள் சந்தோசத்தில்

நேற்று இடம்பெற்ற பதிவர் சந்திப்பு மிகவும் சிறப்பான முறையிலே. நடந்து முடிந்திருக்கின்றது. அதற்கு முதலிலே ஏற்பாட்டுக் குழுவுக்கு நன்றி சொல்லவேண்டும்.

தேசிய கலை, இலக்கியப் பேரவையிலே குறிப்பிடப்பட்டதுபோல் இரண்டு மணியளவிலே ஆரம்பிக்கப்பட்டது சிறப்பம்சமாகும். இதிலே கொழும்பிலே இருக்கின்ற பதிவார்கள் மட்டுமல்ல. நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் பதிவார்கள் கலந்து கொண்டதோடு. வருகை தர முடியாமல் போன இலங்கைப் பதிவர்களும் பல வெளிநாட்டுப் பதிவர்களும். நேரடி ஒளி, ஒலிபரப்பு மூலம் சந்திப்பினை நேரடியாகப் பார்த்து தமது கருத்துக்களையும் அரட்டைப் பெட்டி மூலம் பகிர்ந்து கொண்டனர்.

நான் முதலாவது  சந்திப்புக்கு செல்லவில்லை என்பதனால் இந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்கு அதிக எதிர் பார்ப்புக்களோடு சென்றிருந்தேன். எதிர்பார்ப்பும் வீண் போகவில்லை. மட்டற்ற மகிழ்சியோடு. நேற்றைய பொழுது சென்றது.

கீர்த்தியின்  அறிமுக உரையோடு நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிகழ்வுகளை, பின்னர் பதிவர்கள்  ஒவ்வொருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். தொடர்ந்து மதுவர்மனால் கலந்துரையாடல்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

பயனுறப் பதிவெளுதல் எனும் தலைப்பிலே பலரும் தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக ஒருவரை இப்படித்தான் எழுத வேண்டும் என்று கட்டாயப் படுத்த முடியாது என்றும். ஒருவர் எழுதும் பதிவினை மற்றவர்கள் படிக்ககூடிய விதத்தில் எழுதுவது நல்லது என்றும்சொல்லப்பட்டது

புல்லட்டை இந்த இடத்திலே பாராட்டினார்கள். புல்லட்டின் பதிவுகளை பலர் விரும்பி படிப்பதாகவும். அவரது பதிவுகள் நகைசுவைப் பதிவுகளாக இருந்தாலும் நல்ல விடயங்களை பற்றியும் சொல்கின்றன என்றும் புள்ளட்டினால் நகைசுவை கலந்து எழுதப்பட்ட  இலத்திரனியல் தொடர்பான பதிவினை பலரும் விரும்பி பார்த்ததாகவும் தொடர்ந்து இலத்திரனியல் தொடர்பாக பதிவிடுவார் என்று நினைத்தும் அவர் பதிவிடவில்லை. தொடர்ந்து இலத்திரனியல் தொடர்பான பதிவுகளை தனது நகை  சுவை உணர்வோடு வழங்க வேண்டும் என்றும் புல்லட்டிடம் பலரும் வேண்டிக் கொண்டனர். இந்த நேரத்தில் புல்லட்டையும் மலேசியாவையும் தொடர்பு படுத்தி சில கதைகள் வந்தன. அப்போது புல்லட் புன் முறுவலுடன் காணப்பட்டார்.


நகைசுவைப் பதிவெழுதுவது என்பது  இலகுவான காரியமல்ல  எல்லோராலும் எழுத முடியாது. இருந்தாலும் பதிவுகள் எழுதும்போது சற்றேனும் நகைச்சுவை கலந்திருந்தால் எல்லோராலும் ரசிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது.


சந்திப்பினை ஆரம்பித்து  வைக்கும் கீர்த்தி. .


                                  

கலந்துரையாடல்களை ஆரம்பித்து வைக்கும் மது.


பயனுறப் பதிவெளுதல் எனும் தலைப்பிலான கலந்துரையாடல். நிறைவு பெற்றதும் பெண்களும் பதிவுலகமும் எனும் தலைப்பிலே தர்சாஜனி தனது கருத்துக்களோடு கலந்துரையாடலை ஆரம்பித்தார். அவர் தனது உரையில் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை எடுத்து  சொன்னார். அத்தோடு அனானிகள் பெண்களை தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களால் கருத்துரையிடும்போது ஆண்களைப் போல் பெண்களால் மனதை திடப்படுத்திக்கொண்டு மீண்டும் பதிவெழுத முடியாது போகின்றது இதனாலும் பல பெண்கள் பதிவெழுத பின்னிக்கின்றனர். என்று சொன்னார். அத்தோடு இன்று பெண்களே பாராட்டுகின்ற தன்மை இல்லை என்றும் குறிப்பிட்டார். பெண்கள் எதிர் நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எடுத்து  சொன்னார்.  இவரது கருத்துக்களுக்கு ஆண்களே பதிலளித்துக் கொண்டிருந்தார்கள்.

பெண்களும் பதிவுலகமும் எனும் தலைப்பில் உரையாற்றும் தட்சாஜனி.



 இந்த நேரத்தில் மேகலா எனும் பதிவர் ஆண்களால்தான் இன்று பெண்கள் பல பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றார்கள்  என்று சற்று உணர்ச்சி வசப்பட்டு பேசியதோடு எந்தக் கணவர் ஒரு பெண்ணை வலைப்பதிவு எழுத போயிற்று வா நான் பிள்ளைகளை பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார்கள் என்று வந்தியத் தேவனைப் பார்த்துக் கேட்பது போன்று கேட்டார். வந்தி அண்ணாவுக்கு விரைவில் டும், டும், டும் என்பதனை அறிந்திருப்பார் போலும். அப்போது மண்டபம் கலகலப்பானது.


சந்திப்பில் கலந்து கொண்டோரில் சிலர்.   உரையாற்றுவது மேமன்  கவி



பின்னர் பருத்தித் துறை வடையும், பயிற்றம் பணியாரமும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து  இலங்கைப் பதிவர் கூகுள் குழுமத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதுபற்றி தொழிநுட்ப விளக்கங்களோடு விளக்கினார் மது.

அடுத்து இறுதியாக பின்னூட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலை மு. மயுரன் ஆரம்பித்து  அனானிப் பின்னூட்டங்களை வரவேற்பதாகவும் சொன்னார். இதனை
 ஏற்றுக்கொண்ட லோஷன் இருந்தாலும் .  சில தேவையற்ற தனிநபர் தாக்குதல் பின்னூட்டங்களை கண்டிக்க வேண்டும் என்றார்.  இது
 தொடர்பிலே அனானிகளால் அதிகம் தாக்கப்பட்ட ஹிஷாம், சந்ரு , வந்தியத்தேவன் போன்றோர் தமது அனானிகளால் திட்டு வாங்கிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.


அனாணிகள் தொடர்பான  கருத்துக்களோடு லோஷன்



மது கும்மி  பின்னூட்டங்கள் தொடர்பாக கருத்துக்களை
 சொன்னார். இவ்வாறு பலர் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். .

தொடர்ந்து பதிவார்கள் குழுவாகப் பிரிக்கப்பட்டு சுவாரஸ்யமான போட்டிகள் இடம் பெற்றன.

பின்னர் நண்பர்கள் தங்களுக்குள்ளேயே கலந்துரையாடினர். நான் உடனடியாக மட்டக்களப்பு திரும்ப வேண்டியதால் நேரம் போய்விட்டதால் உடனடியாக வர நினைத்தேன் அப்போது மது பாலகாரங்கள் சிலவற்றை கையிலே தந்துவிட்டார் என்ன செய்வது வீதியால் சாப்பிட்டுக் கொண்டு சென்றேன்.
பதிவார்கள் அனைவரும் மிகவும் சந்தோசத்துடன் இருக்கின்றனர் என்பதே உண்மை.


தனது கருத்துக்களை எலியை மனதில் நினைத்துக் கொண்டு சொல்லும் ஆதிரை
   

என் புதிய சேட்டைப் பாருங்கள் என்று சொல்லும் வந்தி.


அனானி நேரடியாக வந்து தாக்கி விடுவானோ என்று    பயத்துடன் அனாணியால் திட்டு வாங்கிய அனுபவங்களை சொல்லும் சந்ரு.






முன்  வரிசை செந்தூரன், பங்கு சந்தை அச்சு, சந்ரு, பின் வரிசை புல்லட், லோஷன்.....




மலேசியா பற்றி அடிக்கடி பேசப்பட்டதால் சந்தோசத்தில் புல்லட்.

 


புல்லட் பேசும்போது பக்கத்தில் இருக்கும் லோஷன் அண்ணா...தன்னைப்  பற்றி ஏதும் போட்டுத்தாக்கி விடுவானோ என்று பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்.


உணர்ச்சிவசப்பட்ட மன்னார் அமுதன்.


சுபானு சுகமாகப் பேசுகிறார்

                     


அஷோக்பரன்.



நிமல்




உணர்ச்சி வசப்பட்டு பெண்கள் தொடர்பாகப் பேசிய மேகலா


போட்டியின்போது செய்வதறியாது திண்டாடும் எனது குழு..



ஒரு கடதாசி விளையாட்டுக்கே பாரிய திட்டமிடலை மேற்கொள்ளும் லோஷன் அண்ணா குழு.


இந்த சந்திப்பு தொடர்பான விளம்பரங்களை தமது திரட்டிகளிலே பிரசுரித்த அத்தனை திரட்டிகளுக்கும், வலைப்பதிவாளர்களுக்கும் அனைவர் சார்பிலும் நன்றிகள்.


படங்களுக்கு நன்றிகள் கோபி.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

19 comments: on "நம்மவர்கள் சந்தோசத்தில்"

ஸ்ரீராம். said...

நேரில் கலந்து கொண்ட உணர்வு...உங்கள் உற்சாகத்தில் பங்கு கொள்கிறோம்.

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

உண்மையில் நிகழ்வை நேரில் கண்டதான ஒரு உணர்வை பதிவர்கள் அனைவருக்கும் தரும் வகையில் உங்கள் பதிவு அமைந்துள்ளது வாழ்த்துக்கள்.

எல்லாம் சரி //மது பாலகாரங்கள் சிலவற்றை கையிலே தந்துவிட்டார் என்ன செய்வது விதியால் சாப்பிட்டுக் கொண்டு சென்றேன். // இது தான் எங்கோ இடிக்கின்றது.

Unknown said...

உங்களுக்கு வாழ்த்துப் பின்னூட்டம் இடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்....

பின்னூட்டங்களில் வாழ்த்துப் பின்னூட்டங்கள் எனப்படுவன 'நல்லா இருக்கு, அசத்தல், நல்ல பதிவு' என்று சொல்லப்படுவன ஆகும்...
அந்த வகையில்,
*இந்தப் பதிவு நல்லாயிருக்கு...*
*பகிர்வுக்கு நன்றி...*

Kala said...

\\\\எல்லாம் சரி //மது பாலகாரங்கள்
சிலவற்றை கையிலே தந்துவிட்டார்
என்ன செய்வது விதியால் சாப்பிட்டுக்
கொண்டு சென்றேன். // இது தான் எங்கோ இடிக்கின்றது.\\\\\\\\

என்ன செய்வது வீதியில் {நடை பாதையில்}சாப்பிட்டுக்
கொண்டு சென்றேன்.

Kala said...

பார்க்க முடியவில்லையென்ற கவலையில்
இருந்தேன் , புகைப்படங்களுடன் பார்த்ததில்
மிக்க மகிழ்ச்சி.பலவற்றை அறியத் தந்ததற்கு
நன்றி சந்ரு.

Admin said...

//ஸ்ரீராம். கூறியது...
நேரில் கலந்து கொண்ட உணர்வு...உங்கள் உற்சாகத்தில் பங்கு கொள்கிறோம்.//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//ஜோ.சம்யுக்தா கீர்த்தி கூறியது...
உண்மையில் நிகழ்வை நேரில் கண்டதான ஒரு உணர்வை பதிவர்கள் அனைவருக்கும் தரும் வகையில் உங்கள் பதிவு அமைந்துள்ளது வாழ்த்துக்கள்.//

அப்படியா.... அப்படியிருந்தால் எனக்கும் சந்தோசமே

//எல்லாம் சரி //மது பாலகாரங்கள் சிலவற்றை கையிலே தந்துவிட்டார் என்ன செய்வது விதியால் சாப்பிட்டுக் கொண்டு சென்றேன். // இது தான் எங்கோ இடிக்கின்றது.//

அவசரத்தில் வீதியையே விதியாக்கி பாரிய பொருள் மயக்கத்தையே உண்டுபண்ணிவிட்டேனே. மன்னிக்கவும் கீர்த்தி திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

தர்ஷன் said...

அட வரவில்லையே என்ற குறை போயி போச்சு உங்கள் பதிவைப் பார்த்ததும் நன்றி சந்துரு

Admin said...

//கனககோபி கூறியது...
உங்களுக்கு வாழ்த்துப் பின்னூட்டம் இடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்....

பின்னூட்டங்களில் வாழ்த்துப் பின்னூட்டங்கள் எனப்படுவன 'நல்லா இருக்கு, அசத்தல், நல்ல பதிவு' என்று சொல்லப்படுவன ஆகும்...
அந்த வகையில்,
*இந்தப் பதிவு நல்லாயிருக்கு...*
*பகிர்வுக்கு நன்றி...*//

எங்கேயோ கேட்டமாதிரி இருக்கிறதே...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//Kala கூறியது...
\\\\எல்லாம் சரி //மது பாலகாரங்கள்
சிலவற்றை கையிலே தந்துவிட்டார்
என்ன செய்வது விதியால் சாப்பிட்டுக்
கொண்டு சென்றேன். // இது தான் எங்கோ இடிக்கின்றது.\\\\\\\\

என்ன செய்வது வீதியில் {நடை பாதையில்}சாப்பிட்டுக்
கொண்டு சென்றேன்.//

பாரிய தவறு விட்டுவிட்டேன் இப்போது திருத்திவிட்டேன் சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள்.

Admin said...

//Kala கூறியது...
பார்க்க முடியவில்லையென்ற கவலையில்
இருந்தேன் , புகைப்படங்களுடன் பார்த்ததில்
மிக்க மகிழ்ச்சி.பலவற்றை அறியத் தந்ததற்கு
நன்றி சந்ரு.//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//தர்ஷன் கூறியது...
அட வரவில்லையே என்ற குறை போயி போச்சு உங்கள் பதிவைப் பார்த்ததும் நன்றி சந்துரு//

அப்படிஎன்றால் பதிவிட்டத்தில் எனக்கும் சந்தோசமே.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Unknown said...

உங்கள் அனைவரையும் சந்திக்க கிடைத்ததை இட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன். சந்திப்பை ஒழுங்கமைத்த அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்.

ப்ரியமுடன் வசந்த் said...

பகிர்வுக்கு நன்றி சந்ரு...

சிநேகிதன் அக்பர் said...

பதிவர் சந்திப்பு இனிமையா நடந்தது மனதுக்கு மகிழ்ச்சி.

கௌதமன் said...

சந்ரு - அசத்திட்டீங்க!
அபாரம். மிகவும் இரசித்து, இரண்டு முறை படித்தேன்,
படங்களும் - அதற்கு நீங்க எழுதியுள்ள நகைச் சுவையான
விளக்கங்களும், மிகவும் அற்புதம்.
வாழ்க பல்லாண்டு, வளமுடன்!
அன்புடன்
கௌதமன்

Chitra said...

super coverage! Best wishes.

ஜெ.நிதா said...

விமல் அல்ல அது நிமல்.

Admin said...

//ஜெ.நிதா கூறியது...
விமல் அல்ல அது நிமல்.//

நிமல் என்பது தெரியும் எழுத்து மாறி அடித்துவிட்டேன் நான் கண்டு கொள்ளவில்லை. இப்போ திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.

Post a Comment