வேட்டைக்காரனுக்கு எதிர்ப்பலைகள்.
இன்று பலராலும் பேசப்படுகின்ற வேட்டைக்காரன் திரைப்படத்துக்கு சில எதிர்ப்பலைகள் கிளம்பியிருப்பதாக அறிய முடிகின்றது. இருந்தாலும் விஜயின் ரசிகர்கள் பெரும் எதிர் பார்ப்போடு இருக்கின்றனர்.
இந்த எதிர்ப்புக்கு காரணம் இலங்கை இராணுவத்தைப் பற்றிய எங்கள் கடவுள்கள்.... என்ற பாடலுக்கு இசையமைத்த இராஜ் இந்தப் படத்திலே பங்களித்திருப்பதுதான். எது எப்படி இருப்பினும் வேட்டைக்காரன் வேட்டைக்காரனாகத்தான் வருவான். தங்களை ஏமாற்றமாட்டான் என்று விஜயின் ரசிகர்கள் பாரிய எதிர் பார்ப்போடு இருக்கின்றனர்.
மறக்க முடியாத அடி.
கடந்து வந்த பாதைகளில் சில விடயங்களை மறக்க நினைத்தாலும் மறக்க முடியாத சில விடயங்கள் இருக்கின்றன.
நான் சாதாரண தரப் பரிட்சை எழுதிவிட்டு பெறுபேற்றுக்காகக் காத்திருந்த காலமது. நண்பர்களோடு உரை சுற்றுவது. இப்படி பொழுது போய்விடும். ஒரு நாள் நானும் நண்பர்களும் விதியால் வந்து கொண்டிருக்கும்போது. ஒரு இராணுவ அதிகாரியால் பிடிக்கப்பட்டோம்.
அடையாள அட்டையை கேட்டார் கொடுத்தோம். என்னை மட்டும் நிற்கும்படி சொல்லிவிட்டு நண்பர்களை அனுப்பிவிட்டார். உடனே என்னிடம் நீ அகதிதானே என்றார். மட்டக்களப்பு வாவிக்கு கிழக்கே எழுவான் கரை என்றும் மேற்கே படுவான் கரை என்றும் சொல்வதுண்டு அந்த காலகட்டத்தில் யுத்தம் காரணமாக படுவான்கரை மக்கள் எழுவாங்கரைக்கு வந்து அகதிகளாக இருந்த காலம்.
அவர் என்னிடம் நீ அகதிதானே என்று கேட்டபோது நான் உடனே இல்லை என்றேன்.அவரோ எந்தக் கதையும் கதைக்கவில்லை மோசமான முறையிலே என்னை தாக்க ஆரம்பித்துவிட்டார். எனக்கோ எதற்காக அடிக்கிறார் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. பொய் சொல்லவேண்டாம் நீ அகதிதாநேடா என்று கேட்டுத்தான் அடி விழுகிறது.
அடித்துவிட்டு அடையாள அட்டையை பறித்துவிட்டு தங்களது முகாமுக்கு வரும்படி சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள். என்னால் எழுந்து நடக்க முடியவில்லை. நண்பர்கள் உதவியோடு விடு வந்து சேர்ந்தேன். பத்து நாட்களுக்கு மேல் என்னால் எழுந்து நடக்க முடியவில்லை.
அவர்களது முகாமுக்கு சென்றபோதுதான் எனக்கு அடித்ததுக்கான காரணத்தை அறிய முடிந்தது. நான் பிறந்த இடம் படுவான்கரையில் இருக்கும் ஒரு இடம் அது என் அடையாள அட்டையில் பிறந்த இடமாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதை வைத்து நான் அகதி என்று நான் படுவான்கரை என்று நினைத்துவிட்டனர். ஆனால் நான் பிறந்தது மட்டுமே படுவான்கரை பிரதேசத்திலுள்ள ஒரு வைத்தியசாலை. மற்றும்படி எல்லாமே என் சொந்த ஊர்தான்.
ஆனாலும் ஒரு வருடத்துக்கு வாரம் ஒருதடவை அவர்களின் முகாமுக்கு சென்று வரவேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாக்கப்பட்டேன். என்ன செய்வது எல்லாம் விதி.
யாழ்தேவியின் கவனத்துக்கு.
ஏனைய திரட்டிகளைப் பொல்லாது யாழ்தேவி திரட்டியிலே ஒருவர் எத்தனை ஓட்டுகளும் போடலாம் என்ற நிலை காணப்படுகிறது. இதனால் சிலர் வேண்டுமென்று பல எதிர் ஓட்டுக்களை போடுகின்றனர். இன்று எனது பல இடுகைகளுக்கு அதிகமான எதிர் ஓட்டுக்கள் போடப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக யாழ்தேவி நிர்வாகம் கவனம் செலுத்துவது நல்லது.
11 comments: on "வேட்டைக்காரனுக்கான எதிர்ப்பலைகளும். மறக்க முடியாத அடியும்"
///அடித்துவிட்டு ... என்னால் எழுந்து நடக்க முடியவில்லை.// ///பத்து நாட்களுக்கு மேல் என்னால் எழுந்து நடக்க முடியவில்லை//.
உங்கள் பரிதாபத்தை உணர்கிறேன்...
பாதிப்புக்கு கவலையடைகிறேன்...
/// நான் பிறந்த இடம் படுவான்கரையில் இருக்கும் ஒரு இடம் அது என் அடையாள அட்டையில் பிறந்த இடமாக குறிப்பிடப்பட்டிருந்தது//
ம்ம்ம்
இனி ஒரு பொல்லாப்பும் இல்லை என நினைக்கிறேன்...
இருந்தாலும்..அநாமதேய தொ(ல்)லைபேசி அழைப்புகளுக்காக எச்சரிக்கையாய் இருங்கள்...
ரொம்ப வேதனையாக இருக்கிறது உங்களுக்கு நடந்ததை நினைக்கும் போது ...
ஒரு பொறுப்புள்ள இடத்தில் இருந்துகொண்டு இப்படி கண்மூடித்தனமாக செயல் பட்ட அந்த அதிகாரியை என்ன செய்வது....கடவுள்தான் பதில் சொல்லணும்...நீங்க விடுங்க சந்ரு
பிறந்த நாட்டிலேயே பிறந்த ஊரிலேயே அகதிகளாய் அறியப்படுவது உலகத்தில நாங்களாத்தான் இருப்பம் !
m...
வேட்டைக்காரன் நல்லா வந்தா எல்லாருக்கும் சந்தோசம் தான்...
18ம் திகதி வரட்டும்...
அடையாளஅட்டை? :(
நானென்ன சொல்ல சந்ரு அண்ணா?
நான் பிறந்த இடத்தின் பெயரும் என் வாழ்கையை புரட்டிப்போட்டது.
சின்னக் கோட்டுக்குப் பக்கத்தில் பெரிய கோடொன்றைப் போட்டிருக்கீர்கள் இல்லை விஜய் படம் வரும் கஷ்டத்தை சொல்லி விட்டு அதை விட வருத்தம் தரும் உங்கள் அனுபவத்தை சொல்லி இருக்கின்றீர்களே அதை சொன்னேன்
என்னசொல்ல மனம் கனக்கிறது சந்ரு.
கொடுமையான அனுபவம்தான் சந்ரு....
//கொடுமையான அனுபவம்தான் சந்ரு....//repeat
Post a Comment