இன்று இலங்கையின் கல்வியைப் பொறுத்தவரை மேலதிக வகுப்புக்கள் என்பது பலராலும் விரும்பப்படுகின்ற ஒன்றாகிவிட்டது. இருந்தாலும் சில ஆசிரியர்கள் இதனைப் பயன் படுத்தி தேவையற்ற விதத்திலே பிழைப்பு நடாத்துகின்றனர்.
இன்றைய கால கட்டத்திலே மாணவர்களைப் பார்த்தால் வகுப்பு வகுப்பு என்றே அலைவார்கள். இது ஒரு வகையில் நல்ல விடையமாக அமைந்தாலும் சில தவிர்க்க முடியாத நிகழ்வுகளும் இடம் பெறுகின்றன.
சில ஆசிரியர்களைப் பொறுத்தவரை பாடசாலை தவிர்ந்த வேறு நேரங்களில் மாணவர்களுக்கு இலவசமாக மேலதிக வகுப்புக்களை வைப்பார்கள். இவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
இவர்களுக்கு எதிர் மாறான ஆசிரியர்கள் இல்லாமல் இல்லை. சில ஆசிரியர்கள் கல்வி நிலையங்களில் மேலதிக வகுப்புக்களை நடாத்துபவர்களாக இருக்கின்றனர். இவர்கள் சில தந்திர உபாயங்களை வைத்திருக்கின்றனர். பாடசாளைகளையிலே இவர்கள் கல்வி நிலையத்திலே வகுப்பு நடாத்தும் பாடத்தினை மேலோட்டமாகவேதான் படிப்பிக்கின்றனர். விளக்கமாக கல்வி நிலையத்திலே படிப்பிக்கின்றனர். காரணம் பாடசாலையில் விளக்கமாக படிப்பிக்கின்றபோது தனது கல்வி நிலையத்துக்கு மாணவர்கள் வரமாட்டார்கள் என்பதனால். இவ்வாறான சில ஆசிரியர்களோ பாடசாலையில் எதனையும் படிப்பிக்கமாட்டார்கள். விளக்கமாக கல்வி நிலையத்திலே சொல்லித்தருவதாக சொல்லிவிடுவார்கள்.
கல்வி நிலையங்களிலே மேலதிக வகுப்புக்களை வைக்காத சில ஆசிரியர்களே பாடசாலையில் ஒழுங்காக படிப்பிப்பதில்லை. கல்வி நிலையங்களிலே விளக்கமாக மாணவர்களுக்கு படிப்பிக்கப்படுகின்றன என்று தாங்கள் படிப்பிக்கமாட்டார்கள். இதனால் அதிகமாக ஏழை மாணவர்களே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.
அதிகமாக வறிய மாணவர்கள் கல்வி நிலையங்களிலே கட்டணம் அதிகம் என்பதனால் அந்த வகுப்புக்கு செல்வது மிக, மிகக் குறைவு அவர்கள் முற்று முழுதாக பாடசாலையையே நம்பி இருக்கின்றனர். பாடசாலையிலும் படிப்பிக்கப்படாதபோது வறிய மாணவர்கள் தமது கல்வியை இழக்கவேண்டி ஏற்படுகின்றது.
சில ஆசிரியர்கள் குறுகிய நேரத்தில் அதிக பணம் அறவிடுகின்றனர். பல கட்டுப்பாடுகளையும் விதிக்கின்றனர். இன்று சமுகத்தில் பாடசாலைக் கல்வியைவிட மேலதிக வகுப்புக்களை நாடிஷ் செல்லும் பழக்கம் ஒரு நாகரிகமாகவே மாறிவிட்டது.
சில ஆசிரியர்களும் இதனைப் பயன்படுத்தி உழைக்கப் பழகிக் கொண்டனர்.
இதே போன்றுதான் சில பாடசாலைகளிலே சில பாடங்கள் திணிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட பாடங்களை மட்டும்தான் எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்படுகின்றது. எனக்கும் இந்த நிலை ஏற்பட்டதுண்டு. நான் உயர்தரம் வணிகப்பிரிவு படித்தேன். ஆனாலும் எனக்கு தமிழும் ஒரு பாடமாக எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. எடுக்க முடியும் ஆனால் பாடசாலையில் எடுப்பதற்கு மறுத்துவிட்டார்கள்.
இந்த நிலை மாற வேண்டும் ஆசிரியர்கள் தங்கள் நலனில் மட்டும் அக்கறை செலுத்துவதை விடுத்து மாணவர்களின் நலனில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது.
15 comments: on "இப்படியும் சில ஆசிரியர்கள்..."
//இந்த நிலை மாற வேண்டும் ஆசிரியர்கள் தங்கள் நலனில் மட்டும் அக்கறை செலுத்துவதை விடுத்து மாணவர்களின் நலனில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது. //
என் விருப்பமும் இதுதான்.
நல்ல பதிவு சந்ரு.
//இந்த நிலை மாற வேண்டும் ஆசிரியர்கள் தங்கள் நலனில் மட்டும் அக்கறை செலுத்துவதை விடுத்து மாணவர்களின் நலனில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது.//
உண்மைதான் நண்பா,.. இதுபோன்ற சூழ்களால் நானும் பாதிக்க பட்டுள்ளேன்... இதைப்பற்றி நானும் எழுத வேண்டும் என்று இருக்கின்றேன்...
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.
நீங்கள் சொல்லுவது சரி சந்ரு அண்ணா....
எல்லாமே வியாபாரமாகிவிட்டது.
ஆசிரியர்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும்....
//இன்றைய கால கட்டத்திலே மாணவர்களைப் பார்த்தால் வகுப்பு வகுப்பு என்றே அலைவார்கள்.//
உண்மைதான், இன்று மாணவர்களுக்கிடையே போட்டி அதிகரித்துவிட்டது. வரவேற்கத்தக்க விடயம்.
// பாடசாளைகளையிலே இவர்கள் கல்வி நிலையத்திலே வகுப்பு நடாத்தும் பாடத்தினை மேலோட்டமாகவேதான் படிப்பிக்கின்றனர். விளக்கமாக கல்வி நிலையத்திலே படிப்பிக்கின்றனர். காரணம் பாடசாலையில் விளக்கமாக படிப்பிக்கின்றபோது தனது கல்வி நிலையத்துக்கு மாணவர்கள் வரமாட்டார்கள் என்பதனால். இவ்வாறான சில ஆசிரியர்களோ பாடசாலையில் எதனையும் படிப்பிக்கமாட்டார்கள். விளக்கமாக கல்வி நிலையத்திலே சொல்லித்தருவதாக சொல்லிவிடுவார்கள். //
இதை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. பாடசாலையில் ஒதுக்கப்பட்ட 40 நிமிட நேரத்தில் 10 நிமிடங்கள் சம்பிரதாயபூர்வ பதிவுகளுக்கும், வகுப்பு மாற்றங்களுக்குமே போய்விடுவதால் 30 நிமிடத்துக்கும் குறைவான நேரமே கற்பிக்கக் கிடைக்கிறது. இந்த நேரத்ததினுள் விளக்கமாக்க் கற்பித்து பாடத்திட்டத்தை முடிப்பது இயலாத காரியம்.
// கல்வி நிலையங்களிலே மேலதிக வகுப்புக்களை வைக்காத சில ஆசிரியர்களே பாடசாலையில் ஒழுங்காக படிப்பிப்பதில்லை. கல்வி நிலையங்களிலே விளக்கமாக மாணவர்களுக்கு படிப்பிக்கப்படுகின்றன என்று தாங்கள் படிப்பிக்கமாட்டார்கள்.//
இதற்கும் மேலே சொன்ன காரணம் பொருந்தும்.
//இதனால் அதிகமாக ஏழை மாணவர்களே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்//
இதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனாலும் சில ஆசிரியர்கள் தனியார் வகுப்புகளில் ஏழை மாணவர்களுக்கு இலவசமாகக் கற்பிப்பதை மறந்துவிடக்கூடாது.
//நான் உயர்தரம் வணிகப்பிரிவு படித்தேன். ஆனாலும் எனக்கு தமிழும் ஒரு பாடமாக எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. எடுக்க முடியும் ஆனால் பாடசாலையில் எடுப்பதற்கு மறுத்துவிட்டார்கள்.
//
அவ்வாறு தெரிவுசெய்ய அனுமதிக்கும்போது நேரசூசிப் பிரச்சினைகள் ஏற்படும். எடுக்கமுடியும் என்றாலும் நடைமுறைச்சாத்தியமற்றது.
மனதில் பட்டதைத் தெரிவித்துவிட்டேன். தவறாக இருந்தால் மன்னியுங்கள்.
சந்ரு! முதலில் வாழ்த்துக்கள்
இதற்கு உரியவர்கள்{பாடலாலை மேலதிகாரிகள்}
நடவடிக்கை எடுத்தால் தான் ஒரளவு கட்டுப்படுத்தலாம்,
மேலதிகாரிகளும்,.....ஆசிரியர்கள் போல்லென்றால்...!!??
அங்கு என்னென்ன இருக்கக் கூடாதோ!அத்தனையும்
உண்டு. இல்லையென்றால் தான் ஆச்சரியப்படவேண்டும்
சந்ரு. சேவல் கூவித்தான் பொழுது விடிகிறதா?
சந்ரு பாடசாலை என்று வரவேண்டும்
அதில் தப்பாக உள்ளது உங்களிடமும்..
அனைவரிடமும்...
மன்னிக்க வேண்டுகிறேன்.......
//சுசி கூறியது...
//இந்த நிலை மாற வேண்டும் ஆசிரியர்கள் தங்கள் நலனில் மட்டும் அக்கறை செலுத்துவதை விடுத்து மாணவர்களின் நலனில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது. //
என் விருப்பமும் இதுதான்.
நல்ல பதிவு சந்ரு.//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//ஆ.ஞானசேகரன் கூறியது...
//இந்த நிலை மாற வேண்டும் ஆசிரியர்கள் தங்கள் நலனில் மட்டும் அக்கறை செலுத்துவதை விடுத்து மாணவர்களின் நலனில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது.//
உண்மைதான் நண்பா,.. இதுபோன்ற சூழ்களால் நானும் பாதிக்க பட்டுள்ளேன்... இதைப்பற்றி நானும் எழுத வேண்டும் என்று இருக்கின்றேன்...//
எழுதுங்கள் நண்பா...
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//MALARVIZHI கூறியது...
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.//
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//கனககோபி கூறியது...
நீங்கள் சொல்லுவது சரி சந்ரு அண்ணா....
எல்லாமே வியாபாரமாகிவிட்டது.
ஆசிரியர்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும்....//
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//Subankan கூறியது...
//இன்றைய கால கட்டத்திலே மாணவர்களைப் பார்த்தால் வகுப்பு வகுப்பு என்றே அலைவார்கள்.//
உண்மைதான், இன்று மாணவர்களுக்கிடையே போட்டி அதிகரித்துவிட்டது. வரவேற்கத்தக்க விடயம்.//
போட்டியை வரவேற்கத் தக்கது ஆனால் அதனை சிலர் வியாபாரமாக பயன்படுத்துவதே வரவேற்கத் தக்கதல்ல.
////இதை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. பாடசாலையில் ஒதுக்கப்பட்ட 40 நிமிட நேரத்தில் 10 நிமிடங்கள் சம்பிரதாயபூர்வ பதிவுகளுக்கும், வகுப்பு மாற்றங்களுக்குமே போய்விடுவதால் 30 நிமிடத்துக்கும் குறைவான நேரமே கற்பிக்கக் கிடைக்கிறது. இந்த நேரத்ததினுள் விளக்கமாக்க் கற்பித்து பாடத்திட்டத்தை முடிப்பது இயலாத காரியம்.//
// கல்வி நிலையங்களிலே மேலதிக வகுப்புக்களை வைக்காத சில ஆசிரியர்களே பாடசாலையில் ஒழுங்காக படிப்பிப்பதில்லை. கல்வி நிலையங்களிலே விளக்கமாக மாணவர்களுக்கு படிப்பிக்கப்படுகின்றன என்று தாங்கள் படிப்பிக்கமாட்டார்கள்.//
இதற்கும் மேலே சொன்ன காரணம் பொருந்தும்.////
நான் எல்லா ஆசிரியர்களையும் குற்றம் சொல்லவில்லை நான் அடிக்கடி சில ஆசிரியர்கள் என்று அதுதான் குறிப்பிட்டிருக்கிறேன். இலவசமாகப் படிப்பிக்கின்ற ஆசிரியர்கள் இருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டிருக்கிறேன். இவ்வார ஆசிரியர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள்.
ஆனாலும் சில பாடசாலைகளிலே நான் குறிப்பிட்ட பிரச்சினைகள் இடம்பெறுகின்றன. நகரப் புறங்களிலே பாடசாலைகளிலே கட்டுப்பாடுகள் அதிகமாக இருப்பதனால் இந்த நிலைமைகள் இல்லாதிருக்கலாம், அல்லது குறைவாக இருக்கலாம்.
கிராமப்புறங்களிலே இந்த நிலை அதிகமாக இருக்கின்றது என்றுதான் சொல்லவேண்டும். கிராமப்புறங்களிலே சில இடங்களிலே வருடத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே படிப்பிக்கின்ற ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். மிகுதி நேரங்களை வீணாக பொழுது போக்குகின்றனர். இரவு பகலாக தங்கள் வீடுகளுக்கு மாணவர்களை அழைத்து பாடம் நடாத்துகின்ற ஆசிரியர்களும் இருக்கின்றனர்.
நான் குறிப்பிட்ட விடயங்கள் முற்றிலும் உண்மையான விடயங்கள். உண்மையை சொல்லப்போனால் இதனால் பாதிக்கப்பட்டவர்களுள் நானும் ஒருவன். சாதாரண தரம் வரை எனது வகுப்பிலே நான் மட்டுமே மேலதிக வகுப்புக்களுக்காக செல்லவில்லை. அப்போது எல்லோரும் செல்கிறார்களே நான் செள்ளமுடியவில்லையே என்று தினம் தினம் கவலைப் படுவதுண்டு. என்னால் முடிந்தவரை படிக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது.
உயர் தரத்திலே ஒழுங்காக பாடங்கள் நடைபெறவில்லை காரணம் ஆசிரியர் பற்றாக்குறை. மேலதிக வகுப்புக்காக செல்ல வேண்டும் என்றால் நீண்ட துரம் செல்ல வேண்டும். அப்போது பிரசித்தி பெற்ற ஒரு ஆசிரியர் இலவசமாக வகுப்புக்களை நடாத்தினார். நான் சாதாரண தரம் படிக்கும்போதும் ஒரு ஆசிரியை என்னை தனியாக தனது வீட்டுக்கு அழைத்து கணித பாடம் சொல்லித் தருவார். இப்படிப்பட்ட நல்ல ஆசிரியர்களும் இருக்கின்றார்கள்தான்.
////நான் உயர்தரம் வணிகப்பிரிவு படித்தேன். ஆனாலும் எனக்கு தமிழும் ஒரு பாடமாக எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. எடுக்க முடியும் ஆனால் பாடசாலையில் எடுப்பதற்கு மறுத்துவிட்டார்கள்.
//
அவ்வாறு தெரிவுசெய்ய அனுமதிக்கும்போது நேரசூசிப் பிரச்சினைகள் ஏற்படும். எடுக்கமுடியும் என்றாலும் நடைமுறைச்சாத்தியமற்றது.////
இங்கே மாணவர்களின் நலன் கவனத்தில் கொள்ளப்பட வேண்டுமல்லவா?
////மனதில் பட்டதைத் தெரிவித்துவிட்டேன். தவறாக இருந்தால் மன்னியுங்கள்.////
நான் என்றுமே சரியான விமர்சனங்களை ஏற்றுக்கொள்பவன். ஒவ்வொருவருக்கும் கருத்துக்கள் வேறுபாடாக இருப்பதில் தவறில்லையே.
//Kala கூறியது...
சந்ரு! முதலில் வாழ்த்துக்கள்
இதற்கு உரியவர்கள்{பாடலாலை மேலதிகாரிகள்}
நடவடிக்கை எடுத்தால் தான் ஒரளவு கட்டுப்படுத்தலாம்,
மேலதிகாரிகளும்,.....ஆசிரியர்கள் போல்லென்றால்...!!??
அங்கு என்னென்ன இருக்கக் கூடாதோ!அத்தனையும்
உண்டு. இல்லையென்றால் தான் ஆச்சரியப்படவேண்டும்
சந்ரு. சேவல் கூவித்தான் பொழுது விடிகிறதா?//
சில மேலதிகாரிகளே இப்படி என்றால் என்ன செய்வது?
//Kala கூறியது...
சந்ரு பாடசாலை என்று வரவேண்டும்
அதில் தப்பாக உள்ளது உங்களிடமும்..
அனைவரிடமும்...
மன்னிக்க வேண்டுகிறேன்.......//
என்ன மன்னிப்பா????
ஹா... ஹா... மன்னித்துவிட்டோம்...
சந்ரு! முக்கியமான விஷயத்தை விட்டுவிட்டீங்களே…
மாணவர்களுடன் பாலியல் சேஷ்டைகள் வைத்துக்கொள்ளும் ஆசிரியர்கள். இங்கு எந்தளவு இருக்கி;றதோ தெரியாது. யாழ்ப்பாணத்தில் ஒரு சிலரை நான் கண்டிருக்கின்றேன். மாணவர்களுடன் சேர்ந்து ஆபாசப்படங்கள் பார்ப்பது. மாணவர்களுக்கு சீடிக்கள் கொடுப்பது. உறவு வைத்துக்கொள்வது. இவர்கள் மாணவிகளுடன் எவ்வாறு உறவு பேணுகி;றார்கள் என்பதை அறிய முடியவில்லை.
Post a Comment