Saturday 14 November 2009

இணையத்தில் காதலித்துச் சம்பாதிக்கலாம்


இன்று இணையத்திலே பலரையும் கட்டிப்போட்ட்டிருக்கின்ற ஒன்றுதான் இணைய அரட்டை. இந்த அரட்டைகள் மூலம் நல்ல பல சம்பவங்கள் இடம்பெறுவதோடு. சில சுத்துமாத்து வேலைகளும் இடம் பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

இன்று பல சமுகத்தளங்கள் இருக்கின்றன. அதன் மூலம் பலர் தமது நண்பர்கள் வட்டத்தை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர். இதன் மூலம் காதல், திருமணம், வியாபாரம் என்று நல்ல பல விடயங்கள் நடை பெற்றாலும் இன்று பலர் இணைய அரட்டையே வாழ்க்கை என்று தினமும் அரட்டையிலேயே தமது காலத்தை வீணடித்துக்கொண்டு இருக்கின்றனர்.
இங்கே அரட்டை அடிப்போர் பலர் தமது உண்மையான விபரங்களை விடுத்து பொய்யான தகவல்களைத்தான் பகிர்ந்து கொள்கின்றனர் என்பது வேறு விடயம். சில ஆண்கள் பெண்களின் பெயரிலே அரட்டை அடித்து பல சுத்துமாத்து வேலைகள் செயவோருமுண்டு.

சிலர் இந்த அரட்டைகளைப் பயன் படுத்தி நிறையவே சம்பாதித்துக்கொண்டிருக்கின்றனர். இதிலே சில பெண்கள் ஆண்களை காதலிப்பதாக நடித்து அவர்களிடமிருந்து பணங்களை பெற்று பின்னர் ஏமாற்றி வருகின்ற சம்பவங்களும் நடந்துகொண்டு வருகின்றன.

நான் இணையத்திலே உலாவ வந்த ஆரம்பத்திலே வலைப்பதிவுகள் பற்றி எல்லாம் தெரியாது. நண்பர்கள் மூலமாக சில சமுக வலையமைப்புகள் பற்றி அறிந்தேன். அவ்வப்போது அந்த இணையத்தளங்களிலே அரட்டையோடு என்பொழுது போகும்.

இத் தளங்களிலே அதிகமாக ஆண்கள் என்றால் பெண் நண்பர்களை வைத்துக் கொள்வார்கள். பெண்கள் ஆண் நண்பர்களை வைத்துக் கொள்வார்கள். ( ஈநேன்று தெரியவில்லை தெரிந்தவங்கள் சொல்லுங்கள்) ஆனால் நான் ஆண், பெண் என்று பாகுபாடின்றி எல்லா நண்பர்களையும் இணைத்துக்கொண்டேன். ஆனால் என்னிடம் இருக்கின்ற ஒரு கெட்ட குணம் எல்லோரையும் நம்பிவிடுவது.

இந்த அரட்டையிலே இருக்கின்ற பொய் நண்பர்களையும் இவர்களின் சுத்துமாத்துக்களையும் அறிந்தபோது அரட்டைப் பக்கமே போவதில்லை. அவ்வப்போது போய் என்ன என்ன நடக்கிறது என்று பார்த்துவருவதுமுண்டு.

இப்போ சொல்ல வந்த விடயத்துக்கு வருகிறேன். அரட்டை மூலம் எனக்கு பல நண்பர்கள் கிடைத்தனர். ( நான் நண்பனின் கதை என்று சொன்னால் நம்பவா போறிங்க அதுதான் எனக்கு என்று ஆரம்பிக்கிறேன்) இதிலே சில வெளிநாட்டு நண்பிகள் நெருக்கமானார்கள். அதிலே ஒரு நண்பி எப்போதும் இணைய இணைப்பிலே இருப்பார். எப்போதும் என்னோடு அரட்டை அடித்துக்கொண்டே இருப்பார்.

இவரது நண்பர் வட்டத்திலே பல ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருக்கின்றனர். எவரும் பெண்கள் இல்லை. மிகவும் அழகானவர், என்னுடைய வலைப்பதிவை பார்த்து கருத்துக்களைச் சொல்வார். அடிக்கடி என்னைப் பற்றி புகழ ஆரம்பித்துவிட்டார். பின்னர் என்னைக் காதலிப்பதாக அடிக்கடி சொல்வார். நான் இப்போத்துதான் பச்சிளம் பாலகன் என்பதனால் முடியாது என்று சொல்லிவிட்டேன்.

இக்கால கட்டத்திலே இவரது நட்புவட்டத்திலே இருக்கின்ற இலங்கையைச் சேர்ந்த மத்திய கிழக்கு நாடொன்றிலே இருக்கின்ற ஒரு நண்பரை நான் எனது நட்பு வட்டத்திலே இணைத்துக் கொண்டேன். அந்த நண்பரும் என்னோடு நல்ல நெருக்கமான நண்பரானார்.

அடிக்கடி என்னோடு பேசும் ஒரு நண்பராக மாறிவிட்டார். அப்போது அந்த நண்பர் என்னிடம் நான் குறிப்பிட்ட அந்த பெண் தன்னை இரண்டு வருடங்களாகக் காதலிப்பதாகவும் மாதாமாதம் அந்த பெண்ணுக்கு தான் பணம் அனுப்புவதாகவும் சொன்னார். நான் அவரிடம் எதுவும் சொல்லவில்லை

மறுபுறத்திலே அந்தப்பெண் என்னிடம் விருப்பம் கேட்டு என்னை விடுவதாக இல்லை. அடிக்கடி அவசரமாக பணம் தேவைப்படுகின்றது. என்றெல்லாம் பேசுவார் நான் காதில் கேட்காதது போன்று இருந்து விடுவேன்.

இவர் நிறையப்பேரை ஏமாற்றி வருகின்றார் என்பது மட்டு எனக்கு புரிந்துகொள்ள முடிந்தது. இவரை பற்றி ஆராய வேண்டு மென்று நினைத்தேன் இவரது நண்பர் வட்டத்திலே இருக்கின்ற பலரை என் நண்பர் வட்டத்திலே இணைத்தேன். அப்போது பலரை இந்தப் பெண் காதலிப்பதாக அறியக் கிடைத்தது. நான் எவரிடமும் இந்தப்பெண் பற்றிய விடயங்களை சொல்லவில்லை.

அவர் தனக்கொரு வலைப்பதிவு உருவாக்கித்தரும்படி அடிக்கடி என்னிடம் கேட்பதுண்டு. நான் உங்கள் மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல் என்பவற்றை தாருங்கள் என்று கேட்டு வங்கிக் கொண்டேன். வலைப்பதிவு உருவாக்கியக் கொடுப்பது என் நோக்கமல்ல இவரது ஏமாற்று வேலைகளை அறிய வேண்டும் என்பதே என் எண்ணம்.

உடனடியாக நான் அவரது மின்னஞ்சலை பார்த்தபோது பலரிடமிருந்து நிறையவே பணம் பெற்றிருப்பது அறிய வந்தது. அவர் பலரை காதலிப்பதாக நடித்துக்கொண்டிருக்கின்றார். பலர் இவருக்கு மாதாந்தம் பணம் அனுப்பிக்கொண்டிருக்கின்றனர். என்பதும் தெரிய வந்தது.


உடனடியாக நான் மத்திய கிழக்கிலே இருக்கின்ற இலங்கையைச் சேர்ந்த நண்பருடன் தொடர்புகொண்டு விபரங்களைச் சொன்னேன் அவர் நம்பவே இல்லை. அவரால் அவள் மீதான காதலிலிருந்து வெளியே வர முடியவில்லை.

அந்த நண்பரைப் பற்றி நினைக்கும்போது இன்றும் நான் கவலைப் படுவதுண்டு. அவரது குடும்பம் சாதாரண ஏழைக் குடும்பம். தந்தை இறந்துவிட்டார். தாய், இரு தங்கைகள் அவர்களைப் பார்க்கின்ற பொறுப்பு இவரிடமே. இவர் செய்தவை தனது வருமானத்தில் அரை வாசியை அந்தப் பெண்ணுக்கும் அரை வாசியை தாய்க்கு அனுப்புவதும். இன்று அந்தப் பெண்ணின் தொடர்பு இல்லாமல் போய்விட்டதாகவும் அந்தப் பெண்ணால் நிறையவே இழந்திருப்பதாகவும் கூறினார்.

இவர் மாத்திரமல்ல இன்று பல இளைஞர்கள் இவ்வாறு ஏமாற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். பல சமுக இணையத்தளங்களிலே பல பெண்கள் காதல் எனும் போர்வையில் இளைஞர்களை சிக்கவைத்து பணம் பறித்துக்கொண்டிருக்கின்றனர். இணையத்திலே அரட்டை அடிப்பவர்கள் நிதானமாக சிந்தித்து செயற்படுவது நல்லதே.


சம்பவங்கள் உண்மை..... நீயா அவன் என்று கேட்கவேண்டாம். நான் அவனில்லை.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

51 comments: on "இணையத்தில் காதலித்துச் சம்பாதிக்கலாம்"

உங்கள் தோழி கிருத்திகா said...

என்னிடம் இருக்கின்ற ஒரு கெட்ட குணம் எல்லோரையும் நம்பிவிடுவது..//////////////
ரொம்ப தப்புங்க.....நல்லா தெரிஞ்சவங்களே இப்போ சில சமய்ங்களில் ஏமாத்திடறாங்க...எல்லாமே ஓரளவுக்குதாங்க...

அந்த நண்பரைப் பற்றி நினைக்கும்போது இன்றும் நான் கவலைப் படுவதுண்டு. அவரது குடும்பம் சாதாரண ஏழைக் குடும்பம். தந்தை இறந்துவிட்டார். தாய், இரு தங்கைகள் அவர்களைப் பார்க்கின்ற பொறுப்பு இவரிடமே. இவர் செய்தவை தனது வருமானத்தில் அரை வாசியை அந்தப் பெண்ணுக்கும் அரை வாசியை தாய்க்கு அனுப்புவதும். ///////////////

இதெல்லாம் தேவையா.....என்னாங்க அவரு....பாவபடரதா வேண்டாமான்னே தெர்ல...

இதைப்பத்தி எல்லா இதழ்களிலும்,செய்திதாள்களிலும் வாரம் ஒரு தடவயாவது செய்தி வருது....இன்னுமும் ஏமாறுரவங்க நெரய பேரு...இதெல்லாம் என்னத்துக்கு.....

Unknown said...

//ஈநேன்று தெரியவில்லை தெரிந்தவங்கள் சொல்லுங்கள்) //

உண்மையா எனக்கும் தெரியேல சந்ரு அண்ணா...
யாராவது உண்மைவே எனக்குச் சொல்லுங்கோ....
(என்ன நல்லவனா காட்டுறதக்காகச் சொல்லேல...)

ஆண்களுக்கு பெண்கள் மீது இருக்கும் கவர்ச்சியை காரணம் காட்டி ஏமாற்றும் பெண்கள் அதிகம் தான் அண்ணா...
ஆனால் இந்த ஆண்கள் திருந்தாவரை ஒன்றும் செய்யமுடியாது...

ஒரு சிரிப்பைக் கண்டு பின்னால் போகும் பழக்கம் உள்ளவரை ஒன்றும் செய்ய முடியாது...
ஆனால்,
அதற்காக இவ்வாறான பெண்கள் செய்வதை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை.
எனினும் ஆண்கள் இடம்கொடுப்பதால் தானே இவை யாவும் நடைபெறுகின்றன.

Unknown said...

நானும் உங்களைப் போலத் தான் அண்ணா...
யாரையும் நம்பிவிடுவேன்...
என்ன சொன்னாலும் நம்பிவிடுவேன்....

இப்போது தான் கொஞ்சம் குறைத்திருக்கிறேன்....
(எல்லாம் அனுபவம் தான்... என்ன வச்சு கூட்டா கொமடி பண்ணிற்றாங்கள்... அதுவும் வாழ்க்கையில... :( )

Unknown said...

சொல்ல மற்நதுவிட்டேன்...

உண்மையை அறிய நீங்கள் மேற்கொண்ட பிரயத்தனத்திற்கு தலைவணங்குகிறேன்...

(என்னடா அடிக்கடி பின்னூட்டம் போடுறானே எண்டு யோசிக்காதயுங்கோ... காத்திரமான பதிவுகளுக்கு இப்பிடித் தான்.... )

Admin said...

//உங்கள் தோழி கிருத்திகா கூறியது...

என்னிடம் இருக்கின்ற ஒரு கெட்ட குணம் எல்லோரையும் நம்பிவிடுவது..//////////////
ரொம்ப தப்புங்க.....நல்லா தெரிஞ்சவங்களே இப்போ சில சமய்ங்களில் ஏமாத்திடறாங்க...எல்லாமே ஓரளவுக்குதாங்க...////


உண்மைதான் நான் அதிகம் உணர்ந்திருக்கின்றேன். மனிதனின் குணமே அதுதான். எனது நெருங்கிய நண்பர்களே சில சமயங்களில் என்னை ஏமாற்றிய சந்தர்ப்பங்களுண்டு.


////அந்த நண்பரைப் பற்றி நினைக்கும்போது இன்றும் நான் கவலைப் படுவதுண்டு. அவரது குடும்பம் சாதாரண ஏழைக் குடும்பம். தந்தை இறந்துவிட்டார். தாய், இரு தங்கைகள் அவர்களைப் பார்க்கின்ற பொறுப்பு இவரிடமே. இவர் செய்தவை தனது வருமானத்தில் அரை வாசியை அந்தப் பெண்ணுக்கும் அரை வாசியை தாய்க்கு அனுப்புவதும். ///////////////

இதெல்லாம் தேவையா.....என்னாங்க அவரு....பாவபடரதா வேண்டாமான்னே தெர்ல...////


எனக்கும்தான் ஆரம்பத்தில் இந்த நண்பர்மிய்து கோபம்தான் வந்தது ஆனால் அவரது குடும்ப சூழலை நினைக்கும்போது கவலையாக இருந்தது. மிகவும் வறிய குடும்பம்.



///இதைப்பத்தி எல்லா இதழ்களிலும்,செய்திதாள்களிலும் வாரம் ஒரு தடவயாவது செய்தி வருது....இன்னுமும் ஏமாறுரவங்க நெரய பேரு...இதெல்லாம் என்னத்துக்கு...../////


ஏமாறுவோர் இருக்கும்வரை ஏமாற்றுவோர் இருக்கத்தான் செய்வர். ஏமாறுவோர் விழிப்படைந்தால்தான்

. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Anonymous said...

First of all why do you have to add a stranger to your profile.

You wont believe that I know 2 girls who got bfs via chat room. Fortunately those guys are nice guys. If not???????

When people gonna learn abt it. People have been talking about these things for almost a decade. Still guys fall for it? Even god cant save them.

One idiot told me that we can discuss about our projects via yahoo chatroom.

I went to studies category and you know what happened; guys started sending msgs as hey babes, hi sweetie blah blah blah.

Only one guy who claimed to be an Indian spoke abt the project. and its been 3 yrs he never talked rubbish. He is the only one stranger in my yahoo messenger. We still say hi and discuss abt science.

Why on the earth you ppl wanna talk to strangers. huh.

Btw, "சுத்துமாத்து" can be added to "இப்படியும் பேசலாம்" :D

Admin said...

////கனககோபி கூறியது...

//ஈநேன்று தெரியவில்லை தெரிந்தவங்கள் சொல்லுங்கள்) //

உண்மையா எனக்கும் தெரியேல சந்ரு அண்ணா...
யாராவது உண்மைவே எனக்குச் சொல்லுங்கோ....
(என்ன நல்லவனா காட்டுறதக்காகச் சொல்லேல...)

ஆண்களுக்கு பெண்கள் மீது இருக்கும் கவர்ச்சியை காரணம் காட்டி ஏமாற்றும் பெண்கள் அதிகம் தான் அண்ணா...////


என்ன அனுபவமோ?...

////ஆனால் இந்த ஆண்கள் திருந்தாவரை ஒன்றும் செய்யமுடியாது...

ஒரு சிரிப்பைக் கண்டு பின்னால் போகும் பழக்கம் உள்ளவரை ஒன்றும் செய்ய முடியாது...
ஆனால்,
அதற்காக இவ்வாறான பெண்கள் செய்வதை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை.
எனினும் ஆண்கள் இடம்கொடுப்பதால் தானே இவை யாவும் நடைபெறுகின்றன.////


உண்மைதான் கோபி பெண்களைவிட ஆண்களில்தான் அதிக குற்றம் இருக்கின்றது (எல்லா ஆண்களுமல்ல) ஆண்கள் நிதானமாக இருந்தால் சரிதானே எந்த பிரச்சனையும் வரப்போவதில்லை

Unknown said...

//You wont believe that I know 2 girls who got bfs via chat room. Fortunately those guys are nice guys. If not??????? //

I never know guys got nice girls via chats... :P

I admit that guys have these kind of weakness....

Unknown said...

//என்ன அனுபவமோ?... //

உதில அனுபவம் இல்லப்பா...
பல்லிளிச்சுக் கொண்டு போகமாட்டன்....

Anonymous said...

//I never know guys got nice girls via chats... :P
//

Lol.. I always confuse you and kaana praba anna... It took sometime to set it out.

anyways, Nice punch

Admin said...

//கனககோபி கூறியது...

நானும் உங்களைப் போலத் தான் அண்ணா...
யாரையும் நம்பிவிடுவேன்...
என்ன சொன்னாலும் நம்பிவிடுவேன்....

இப்போது தான் கொஞ்சம் குறைத்திருக்கிறேன்....
(எல்லாம் அனுபவம் தான்... என்ன வச்சு கூட்டா கொமடி பண்ணிற்றாங்கள்... அதுவும் வாழ்க்கையில... :( )//

என்ன கோபி நிறையவே அனுபவமிருக்குபோல. யாரது கோபியின் வாழ்க்கையை கூட்டாக காமடியாக்கப்பார்க்கிறது. அவர்களை விட்டு வைக்கக்கூடாது.

Admin said...

//கனககோபி கூறியது...

சொல்ல மற்நதுவிட்டேன்...

உண்மையை அறிய நீங்கள் மேற்கொண்ட பிரயத்தனத்திற்கு தலைவணங்குகிறேன்...////


அவர் என்னை ஏமாற்ற நினைத்தபோதுதான் நான் உசாரானேன். அவரைப் பற்றி முற்றாக அறியவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.


///(என்னடா அடிக்கடி பின்னூட்டம் போடுறானே எண்டு யோசிக்காதயுங்கோ... காத்திரமான பதிவுகளுக்கு இப்பிடித் தான்.... )////

இது பிடிச்சிருக்கு...

Unknown said...

//Mukilini சொன்னது…
//I never know guys got nice girls via chats... :P
//

Lol.. I always confuse you and kaana praba anna... It took sometime to set it out.

anyways, Nice punch //

Someone recently said that I copied his name.
I really don't know him when I picked this user name...
I visited his page couple of weeks ago.. :P

Sinthu said...

" ஆனால் என்னிடம் இருக்கின்ற ஒரு கெட்ட குணம் எல்லோரையும் நம்பிவிடுவது."
அப்ப உங்களை நிறையப் பேர் ஏமாற்றி இருப்பாங்களே...........? (காதல் விடயத்தைக் கருதவில்லை, சாதரணமாக சொன்னேன்..)
என் என்றால் எனக்கு அனுபவம் இருக்கு..

Subankan said...

//ஆனால் என்னிடம் இருக்கின்ற ஒரு கெட்ட குணம் எல்லோரையும் நம்பிவிடுவது.//

எனக்கும் அதே கெட்ட குணம் உண்டு. ஆனால் இப்படியான அனுபவங்கள் எல்லாம் கிடைத்ததில்லை. காரணம் இணைய அரட்டையில் அவ்வளவாக நாட்டமில்லை. இந்தப் பதிவுக்கான கரு நேற்று இரவுதானே உருவானது?

வந்தியத்தேவன் said...

சந்ரு இது உங்களின் உண்மைக் கதைதானே. நேற்றிரவு என்னுடன் அரட்டையடிக்கும் போது சொன்ன கதை தானே.

Admin said...

//Mukilini கூறியது...

First of all why do you have to add a stranger to your profile.

You wont believe that I know 2 girls who got bfs via chat room. Fortunately those guys are nice guys. If not???????

When people gonna learn abt it. People have been talking about these things for almost a decade. Still guys fall for it? Even god cant save them.

One idiot told me that we can discuss about our projects via yahoo chatroom.

I went to studies category and you know what happened; guys started sending msgs as hey babes, hi sweetie blah blah blah.

Only one guy who claimed to be an Indian spoke abt the project. and its been 3 yrs he never talked rubbish. He is the only one stranger in my yahoo messenger. We still say hi and discuss abt science.

Why on the earth you ppl wanna talk to strangers. huh.

Btw, "சுத்துமாத்து" can be added to "இப்படியும் பேசலாம்" :D//

ஆண், பெண் இரு பக்கமும் தவறு இருக்கின்றது. ஆனால் இணைய அரட்டையிலே நிதானமாக இருப்பது நல்லது.

இணைய அரட்டை மூலம் நல்ல பல விடயங்களும் நடைபெற்று வருவது உண்மையே.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

ப்ரியமுடன் வசந்த் said...

ஏமாளிகள் இருக்குற வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்

சந்ரு இடுகையிலே இது ஒரு முக்கியமானதொரு இடுகை...

Admin said...

////கனககோபி கூறியது...

//என்ன அனுபவமோ?... //

உதில அனுபவம் இல்லப்பா...
பல்லிளிச்சுக் கொண்டு போகமாட்டன்....////


அப்போ ரொம்ப நல்ல பிள்ளை என்று சொல்கிறீர்கள்.

Admin said...

//Sinthu கூறியது...

" ஆனால் என்னிடம் இருக்கின்ற ஒரு கெட்ட குணம் எல்லோரையும் நம்பிவிடுவது."
அப்ப உங்களை நிறையப் பேர் ஏமாற்றி இருப்பாங்களே...........? (காதல் விடயத்தைக் கருதவில்லை, சாதரணமாக சொன்னேன்..)
என் என்றால் எனக்கு அனுபவம் இருக்கு..//


நிறையவே அனுபவம் இருக்கிறது சிந்து. நிறையவே நண்பர்களை நம்பி ஏமாந்து இருக்கின்றேன். ஆனால் காதல் வலையில் விழுவதில்லை.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்

வந்தியத்தேவன் said...

//நான் இப்போத்துதான் பச்சிளம் பாலகன் என்பதனால் முடியாது என்று சொல்லிவிட்டேன்.//

இதுதான் பச்சிளம் பாலகனுக்கு அழகு. எம்மை யாரும் ஏமாற்றமாட்டார்கள்.

இப்படியான பெண்கள் பற்றி அடிக்கடி செய்திகள் வந்தாலும் ஏமாறுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஒருமுறை ஜூனியர் விகடனில் இந்தியாவில் சிலர் பெண்களின் படங்களை வைத்து ஆண்களை ஏமாற்றியதாகவும் ஏமாறிய ஆண்கள் இதனை வெளியில் சொல்லமுடியாமல் பணத்தைப் பறிகொடுத்ததாகவும் செய்தி வந்தது.

Admin said...

// Subankan கூறியது...

//ஆனால் என்னிடம் இருக்கின்ற ஒரு கெட்ட குணம் எல்லோரையும் நம்பிவிடுவது.//

எனக்கும் அதே கெட்ட குணம் உண்டு. ஆனால் இப்படியான அனுபவங்கள் எல்லாம் கிடைத்ததில்லை. காரணம் இணைய அரட்டையில் அவ்வளவாக நாட்டமில்லை. இந்தப் பதிவுக்கான கரு நேற்று இரவுதானே உருவானது?//

அப்போ நீங்க நம்ம ஆளா. நானும் அதிகமாக இணைய அரட்டையில் ஈடுபடுவதில்லை. இருந்தும் என்னையும் ஏமாற்ற நினைத்துவிட்டார் விடுவேனா நான்.

இந்த இடுகைக்கான கரு பல நாட்களுக்கு முன் உதித்தவை. ஆனால் நேற்றிரவுதான் உடன் பதிவிடவேண்டும் என்று தோன்றியது.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//வந்தியத்தேவன் கூறியது...

சந்ரு இது உங்களின் உண்மைக் கதைதானே. //




இது முற்று முழுதான உண்மைக் கதைதான். ஏமாற்றப்பட்டது நானல்ல என்னை ஏமாற்ற நினைத்தபோது. நான் உசாராகி அப்பெண்ணின் ஏமாற்று வித்தைகளை அறிந்து கொண்டேன். சில நண்பர்களை காப்பாற்றிவிட்டேன்.


//நேற்றிரவு என்னுடன் அரட்டையடிக்கும் போது சொன்ன கதை தானே.//

நேற்றிரவு சொன்னது வேறு கதை.

Admin said...

//பிரியமுடன்...வசந்த் கூறியது...

ஏமாளிகள் இருக்குற வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்

சந்ரு இடுகையிலே இது ஒரு முக்கியமானதொரு இடுகை//


எப்படியோ ஏமாறுபவர்கள் இனிமேலாவது இணைய அரட்டையில் நிதானமாகச் செயற்பட்டால் சரிதான்.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

////வந்தியத்தேவன் கூறியது...

//நான் இப்போத்துதான் பச்சிளம் பாலகன் என்பதனால் முடியாது என்று சொல்லிவிட்டேன்.//

இதுதான் பச்சிளம் பாலகனுக்கு அழகு. எம்மை யாரும் ஏமாற்றமாட்டார்கள். ////


பச்சிளம் பாலகர்கள் ஏமாற்றப் பட்டால் உடனடியாக பச்சிளம் பாலகர் சங்கத்தில் முறையிடலாம். சங்கத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

//இப்படியான பெண்கள் பற்றி அடிக்கடி செய்திகள் வந்தாலும் ஏமாறுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஒருமுறை ஜூனியர் விகடனில் இந்தியாவில் சிலர் பெண்களின் படங்களை வைத்து ஆண்களை ஏமாற்றியதாகவும் ஏமாறிய ஆண்கள் இதனை வெளியில் சொல்லமுடியாமல் பணத்தைப் பறிகொடுத்ததாகவும் செய்தி வந்தது.//

இணைய அரட்டையிலே பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் பெண்களை இலகுவில் ஏமாற்ற முடியாது. உசாராகிவிடுவார்கள். ஆண்கள் அப்படி இல்லையே ஒரு ஹாய் சொன்னால் போதும் இலகுவில் மயங்கி விடுவார்கள்.

கார்த்தி said...

தெரியாத பெண் நண்பர்களை ஆண்கள் தங்களது வலையமைப்புக்களில் இணைக்காமால் இருப்பது நல்லது. vice versa.
இங்கேயாவது ஒரு பெண்தான் ஏமாற்றினதா சொல்லியிருக்கிறீங்க. ஆனா இப்பெல்லாம் பல ஆண்கள் பெண்கள் பெயரில் கணைக்கை உருவாக்கி கொண்டு பலரை பலவிதங்களில் ஏமாற்றி வருகின்றனர். சோ நிதானம் அவசியம்.

பாரதி said...

அந்த பெண் ஐடி எதுவென்று தெரிய படுத்தவும்

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

// கார்த்தி கூறியது...
சோ நிதானம் அவசியம்//

சோ நிதானமா.. அந்தாளுக்கெங்க நிதானம் இருந்திருக்கு.. நிதானம் இல்லாம ஏதாவது உளறிக் கொட்டுறதுதான் சோவின் வேலை..
:)))

ஹேமா said...

அரட்டை என்கிற பேரில் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள் சிலர்.விஞ்ஞான வளர்ச்சி சிலசமயம் வேதனைதான்.ஆனால் அருமையான நட்புக்களும் கிடைக்கிறதே !

Unknown said...

//மதுவதனன் மௌ. / cowboymathu சொன்னது…
// கார்த்தி கூறியது...
சோ நிதானம் அவசியம்//

சோ நிதானமா.. அந்தாளுக்கெங்க நிதானம் இருந்திருக்கு.. நிதானம் இல்லாம ஏதாவது உளறிக் கொட்டுறதுதான் சோவின் வேலை..
:))) //

அட... இது நல்லாயிருக்கே....

thiyaa said...

கேட்க நல்லாய்த்தானிருக்கு.......

Admin said...

//கார்த்தி கூறியது...

தெரியாத பெண் நண்பர்களை ஆண்கள் தங்களது வலையமைப்புக்களில் இணைக்காமால் இருப்பது நல்லது. vice versa. //

இது சற்றுக் கடினமான விடயம்தான். ஆனால் நிதானமாக இருக்கலாம்.

//இங்கேயாவது ஒரு பெண்தான் ஏமாற்றினதா சொல்லியிருக்கிறீங்க. ஆனா இப்பெல்லாம் பல ஆண்கள் பெண்கள் பெயரில் கணைக்கை உருவாக்கி கொண்டு பலரை பலவிதங்களில் ஏமாற்றி வருகின்றனர். சோ நிதானம் அவசியம்.//

ஆண்களும் ஏமாற்றாமல் இல்லை ஆனால் பெண்களை ஆண்கள் ஏமாற்றுவது இலகுவான காரியமல்ல. விரைவிலே உசாராகிவிடுவார்கள் பெண்கள். ஆனால் ஆண்களோ விரைவிலே பெண்கள் வசப்பட்டுவிடுவார்கள்.

Admin said...

//பாரதி கூறியது...

அந்த பெண் ஐடி எதுவென்று தெரிய படுத்தவும்//


நிறையவே பெண்களால் பாதிக்கப்பட்டிருக்கிங்கபோல.
வருகைக்கு நன்றிகள்.

Admin said...

//மதுவதனன் மௌ. / cowboymathu கூறியது...

// கார்த்தி கூறியது...
சோ நிதானம் அவசியம்//

சோ நிதானமா.. அந்தாளுக்கெங்க நிதானம் இருந்திருக்கு.. நிதானம் இல்லாம ஏதாவது உளறிக் கொட்டுறதுதான் சோவின் வேலை..
:)))//

ஆஹா...
வருகைக்கு நன்றிகள்

Admin said...

//ஹேமா கூறியது...

அரட்டை என்கிற பேரில் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள் சிலர்.விஞ்ஞான வளர்ச்சி சிலசமயம் வேதனைதான்.ஆனால் அருமையான நட்புக்களும் கிடைக்கிறதே !//

இன்று அரட்டை மூலம் நல்ல பல விடயங்கள் இடம்பெறுவதோடு. நல்ல பல நண்பர்களும் கிடைக்கின்றனர். அதேபோல் சிலர் ஏமாற்றிக்கொன்டிருக்கின்றனர் என்பதும் கவலைக்குரிய விடயமே.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//கனககோபி கூறியது...

//மதுவதனன் மௌ. / cowboymathu சொன்னது…
// கார்த்தி கூறியது...
சோ நிதானம் அவசியம்//

சோ நிதானமா.. அந்தாளுக்கெங்க நிதானம் இருந்திருக்கு.. நிதானம் இல்லாம ஏதாவது உளறிக் கொட்டுறதுதான் சோவின் வேலை..
:))) //

அட... இது நல்லாயிருக்கே....//

கனககோபி கூறியது...

//மதுவதனன் மௌ. / cowboymathu சொன்னது…
// கார்த்தி கூறியது...
சோ நிதானம் அவசியம்//

சோ நிதானமா.. அந்தாளுக்கெங்க நிதானம் இருந்திருக்கு.. நிதானம் இல்லாம ஏதாவது உளறிக் கொட்டுறதுதான் சோவின் வேலை..
:))) //

அட... இது நல்லாயிருக்கே....

Admin said...

//தியாவின் பேனா கூறியது...

கேட்க நல்லாய்த்தானிருக்கு.......//


கேட்க நல்லாத்தாநிருந்தாலும்... கொஞ்சம் நிதானமாக இருந்தால் சரிதான்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

அன்புடன் மலிக்கா said...

ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்,

இது யாருடைய தவறு? மனோஇச்சைகளை பின்பற்றதொடங்கும்போது இதுபோன்ற ஆப்பத்துக்களை சந்தித்துதான் ஆகவேண்டும் மனக்கட்டுபாட்டை இழக்கநேறிடும்போது மனிதன் தன்னையும் தன் தன்னைசார்ந்தையும் இழக்கிறான்,

உசாராக இருங்கோன்னுமுன்னு அண்ணாதே எழுதியிருக்கிறதை வைத்து புரிஞ்சிக்கோங்க..

நல்ல இடுகை..

Anonymous said...

வருந்ததக்க நிகழ்வு...அவருடைய அன்பை தனக்கு சாதகமா பயன்படுத்தியிருக்காங்க அந்த பெண்...எதையும் உண்மை அறிந்து செயல்பட முடியலைன்னாலும் நிதானமா யோசித்து செய்யலாம்...

Kala said...

பச்சிளம் பாலகரே!நான் அவனில்லை
என்பதை எப்படி நம்புவது?
ரொம்பொஒஒஒஒஅனுபவ பாடம்போலும்!

பொழுது போக்கு காதலும் வந்திரிச்சா?
பார்க்காமல்,தெரியாமல் காதல் வந்தால்!!
எல்லாம் “காதல் கோட்டை” என்று
எண்ணிவிடலாமா?
ஏன்? பெண்னென்றால் இவ்வளவு பறப்பு?
ஒரு பாடல் ஞாபகத்துக்கு....
“சிரிக்கின்ற பெண்களை பார்கின்ற கண்ணுக்கு
அழைப்பது போல் ஒரு சித்தப்பிரமை”

ஆண்களும் சிலபேர் {இவ் வர்க்கம்}உண்டு சந்ரு
ஆண்களே!பெண்களே! பார்த்து காதல் வரட்டும்...
விழிப்பான பார்வைக்கு நன்றி பாலகா!!

ஆ.ஞானசேகரன் said...

//சம்பவங்கள் உண்மை..... நீயா அவன் என்று கேட்கவேண்டாம். நான் அவனில்லை. //

துணிச்சலான பகிர்வு நண்பா.... நிங்கள் சொல்வது முற்றிலும் உண்மை பலர் இதில் ஏமாற்ற படுகின்றார்கள்... இந்த பதிவு ஒரு விழிப்புணர்வை கொடுக்கும் என்று நம்புகின்றேன்

பாரதி said...

//நிறையவே பெண்களால் பாதிக்கப்பட்டிருக்கிங்கபோல.
வருகைக்கு நன்றிகள்.//

நானும் ஒரு yahoo chatter என்பதால் உங்களிடம் கேட்டேன் ,இது போன்று மடிகொளும் ஏமாளி அல்ல நான்.

ஸ்ரீராம். said...

அனுபவங்கள் நமக்குத்தான் வர வேண்டும் என்பதல்ல. ..பிறரது அனுபவங்களும் பாடமாகலாம்...

Admin said...

//அன்புடன் மலிக்கா கூறியது...

ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்,

இது யாருடைய தவறு? மனோஇச்சைகளை பின்பற்றதொடங்கும்போது இதுபோன்ற ஆப்பத்துக்களை சந்தித்துதான் ஆகவேண்டும் மனக்கட்டுபாட்டை இழக்கநேறிடும்போது மனிதன் தன்னையும் தன் தன்னைசார்ந்தையும் இழக்கிறான்,

உசாராக இருங்கோன்னுமுன்னு அண்ணாதே எழுதியிருக்கிறதை வைத்து புரிஞ்சிக்கோங்க..

நல்ல இடுகை..//

எண்கள் மனதினை நாம் திடப்படுத்திக்கொண்டு அவதானத்தோடு செயற்பட்டால் எந்தப் பிரச்சனையும் வரப்போவதில்லை.

வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள்.

Admin said...

//தமிழரசி கூறியது...

வருந்ததக்க நிகழ்வு...அவருடைய அன்பை தனக்கு சாதகமா பயன்படுத்தியிருக்காங்க அந்த பெண்...எதையும் உண்மை அறிந்து செயல்பட முடியலைன்னாலும் நிதானமா யோசித்து செய்யலாம்...//


பெண்களை நம்புகின்ற விடயத்திலே சில ஆண்கள் நிதானத்தை இழக்கின்றனர் என்பதே உண்மை. இலகுவிலே பெண்களை நம்பிவிடுவார்கள். இதனை பெண்கள் சிலர் சாதகமாகப் பயன்படுத்த நினைத்துவிடுகின்றனர்.

வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள்.

Admin said...

////Kala கூறியது...

பச்சிளம் பாலகரே!நான் அவனில்லை
என்பதை எப்படி நம்புவது?
ரொம்பொஒஒஒஒஅனுபவ பாடம்போலும்!////

தாராளமாக நம்பலாம் இது அனுபவப்பாடமல்ல நான் அதிகம் அரட்டை அடிப்பவனல்ல. என்னை ஏமாற்ற நினைத்தால் விடுவேனா.


//பொழுது போக்கு காதலும் வந்திரிச்சா?
பார்க்காமல்,தெரியாமல் காதல் வந்தால்!!
எல்லாம் “காதல் கோட்டை” என்று
எண்ணிவிடலாமா?
ஏன்? பெண்னென்றால் இவ்வளவு பறப்பு?
ஒரு பாடல் ஞாபகத்துக்கு....
“சிரிக்கின்ற பெண்களை பார்கின்ற கண்ணுக்கு
அழைப்பது போல் ஒரு சித்தப்பிரமை”//

இன்று அதிகமானவர்களின் பொழுதுபோக்கு காதல்தான். இவர்களால்தான் இன்று காதலே சீரழிக்கப்படுகின்றன. நல்ல பாடல்.

//ஆண்களும் சிலபேர் {இவ் வர்க்கம்}உண்டு சந்ரு
ஆண்களே!பெண்களே! பார்த்து காதல் வரட்டும்...
விழிப்பான பார்வைக்கு நன்றி பாலகா!!//

ஆண்களும் இருக்கிறார்கள்தான் இல்லாமல் இல்லை.
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

////ஆ.ஞானசேகரன் கூறியது...

//சம்பவங்கள் உண்மை..... நீயா அவன் என்று கேட்கவேண்டாம். நான் அவனில்லை. //

துணிச்சலான பகிர்வு நண்பா.... நிங்கள் சொல்வது முற்றிலும் உண்மை பலர் இதில் ஏமாற்ற படுகின்றார்கள்... இந்த பதிவு ஒரு விழிப்புணர்வை கொடுக்கும் என்று நம்புகின்றேன்////

நிச்சயமாக நண்பா இன்று பலர் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் விழிப்படைவது நல்லதே.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//பாரதி கூறியது...

//நிறையவே பெண்களால் பாதிக்கப்பட்டிருக்கிங்கபோல.
வருகைக்கு நன்றிகள்.//

நானும் ஒரு yahoo chatter என்பதால் உங்களிடம் கேட்டேன் ,இது போன்று மடிகொளும் ஏமாளி அல்ல நான்.//

நான் நகைச் சுவையாகத்தான் உங்களுக்கு பதிலளித்தேன் நண்பா. இன்று அந்த மின்னஞ்சலை அந்தப் பெண் பயன்படுத்துவதில்லை. அந்த மின்னஞ்சல் முகவரியை நான் இங்கே வெளியிட விரும்பவில்லை. வெளியிடுவதும் நல்ல விடயமல்ல.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//ஸ்ரீராம். கூறியது...

அனுபவங்கள் நமக்குத்தான் வர வேண்டும் என்பதல்ல. ..பிறரது அனுபவங்களும் பாடமாகலாம்...//

உண்மைதான் நண்பா நாம் பிறரது அனுபவங்களைக் கேட்பதன் மூலம் நான் சில சிக்கல்களிலிருந்து விலகிக்கொள்ளலாம்.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

X Boy said...

படங்கள் super
உங்கள் பதிவுகளை http://www.nilamuttram.com/ எனும் இணையத்தளத்திலும் பதிவு இட்டு எங்கள் முயற்சிக்கு கைகொடுக்கவும்//

நன்றிகள்...

ரோஸ்விக் said...

அரட்டை அறைகள், உண்மையில் நல்ல நட்புகளை கொடுப்பது அரிது...இது போன்ற ஏமாற்று வேலைகளுக்காகவும், தமது காமப் பசிக்காகவும் தான் அங்கு நிறைய பேர் வருகிறார்கள்.

பகிர்விற்கு நன்றி.

http://thisaikaati.blogspot.com

Post a Comment