Saturday 27 March 2010

தமிழர்கள் மஹிந்தவின் கரங்களை பலப்படுத்துவார்களா?

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்பதிலே பல சக்திகள் முனைப்பாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கு சில தமிழர்களும் துணை போகின்றார்கள் என்பதுதான் கவலைக்குரிய விடயம்.

அன்றுதொட்டு இன்றுவரை சிங்கள பேரினவாத அரசுகள் மாறி, மாறி தமிழர்களின் எதிர்காலத்தையும், அரசியல் சக்தியையும் இல்லாதொழிக்க பல சதித் திட்டங்களை தீட்டி வருகின்றன.

இந்தத் தேர்தலிலே தமிழர்களின் அரசியல் எதிர் காலத்தை இல்லாதொழிக்க உச்ச கட்ட சதித் திட்டங்களை தீட்டி வருகின்றன. தமிழர்களின் அரசியல் எதிர் காலத்தை இல்லாதொழிக்க தமிலர்கழலே பயன்படுத்தப்படுவது வேதனைக்குரிய விடயமே. பணத்துக்கும், சுகபோகங்களுக்காக  தமிழர்கள் தமிழினத்தை விற்பது வேதனைக்குரிய விடயமாகும்.

தமிழர்களின் வாக்குகளை வேட்டையாடி தமிழர் பிரதிநிதித்துவத்தையும், தமிழரின் அரசியல் பலத்தையும் இல்லாதொழிக்க பேரினவாத அரசு தனது கட்சியிலே தமிழர்களை வேட்பாளர்களாக நிறுத்தி இருப்பதோடு பல சுயேட்சைக் குழுக்களையும் களமிறக்கி இருக்கின்றது.

இந்த வேட்பாளர்கள் சொல்கின்றனர் அரசோடு சேர்ந்தால்தான் அபிவிருத்திகளை செய்ய வேண்டும் என்று. அரசோடு சேர்ந்தால்தான் அபிவிருத்திகளை செய்ய முடியுமா? தமிழர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தமிழ் பிரதிநிதித்துவங்களை அதிகரிப்பதன் மூலம் அரசோடு பேரம் பேசி பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கலாம்தானே.

அது ஒரு புறமிருக்க இந்த மகிந்தவின் அரசு தமிழர்களை இல்லாதொழிக்கின்றது. புலிகளே தமிழர்களின் ஏக பிரதி நிதிகள் என்று வீர வசனம் பேசியவர்கள் எல்லாம் இன்று மகிந்தவே சிறந்த தலைவர் என்று வால்ப்பிடிக்கின்றனர். இவர்களின் கொள்கைதான் என்ன? இன்று ஒரு கொள்கை நாளை ஒரு கொள்கையா? நாளுக்கொரு கொள்கை மாற்றும் இவர்களால் தமிழர்களுக்கு என்னதான் செய்ய முடியும். தமிழினத்தை விற்று தாம் சுகபோக வாழ்க்கை வாழ்வதைத் தவிர.

கிழக்கு மாகாணம் வன்னித் தலைமையினால் புறக்கணிக்கப்படுகின்றது. கிழக்கு மக்களுக்கு தனியே ஒரு தலைமைத்துவம் வேண்டும் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்று புலிகளில் இருந்து பிரிந்து வந்தவர் என்ன செய்கிறார். அவர் புலிகளில் இருந்து பிரிந்து வந்ததன் நோக்கத்தை நிறைவேற்றுகின்றாரா? கிழக்கு மாகாண மக்களுக்காக ஒரு தனித்துவக் கட்சியை ஆரம்பித்தார?

இன்று இந்த அரசாங்கத்தின் கட்சியிலே போட்டியிடுபவர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப் பட்டாலும் அவர்களால் தன்னிட்சயாக செயற்பட முடியுமா? அரசின் பொம்மைகளாக அரசு சொல்வதற்கு தலையாட்டவேண்டியவர்கலாகத்தான் இருக்க வேண்டும். மீறி செயற்பட்டால் பதவிகள் பறிக்கப்படும் என்பது எல்லோரும் அறிந்த விடயமே.

தமிழர்கள் சிந்தித்து செயற்படவேண்டிய காலமிது. பேரினவாதக் கட்சிகளுக்கு தமிழினத்தை விற்காமல் தமிழர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதிலே ஒவ்வொரு தமிழர்களும் உறுதியாக இருக்கவேண்டும்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 comments: on "தமிழர்கள் மஹிந்தவின் கரங்களை பலப்படுத்துவார்களா?"

jusliya said...

நமக்கேன் வீண் வம்பு......

Post a Comment