காட்சிப் பொருளாக்கப் படும் பெண்கள் எனும் இடுகையின் தொடர்ச்சியாகவே இந்த இடுகையும் இடம்பெறுகின்றது.
சில விடயங்களைப் பேசுகின்றபோது சில எதிர்ப்புக்கள் வரலாம் என்பதனால் மேலோட்டமாக முந்திய இடுகையிலே மேலோட்டமாக சில விடயங்களை குறிப்பிட்டு இருந்தேன். இருந்தாலும் இத்தொடருக்கு பாரிய ஆதரவு இருப்பது சந்தோசப்பட வேண்டிய விடயமாக இருக்கின்றது. இன்னும் விரிவாக ஆராயலாமே, தொடர்ந்து எழுதுங்கள் என்று பலரும் வேண்டிக்கொண்டதுக்கு இணங்க அனைத்து விடயங்களையும் சற்று விரிவாக ஆராயலாம் என்று இருக்கிறேன்.
அத்தோடு கடந்த இடுகையிலே கருத்துரைகளிலே சிலர் கேட்ட கேள்விகளுக்குரிய விளக்கங்களை. இங்கே கொடுக்கவும் இருக்கிறேன்.
பெண்ணடிமைத் தனமேன்பது எங்கிருந்து ஆரம்பிக்கின்றது? பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எங்கே ஆரம்பிக்கின்றன என்று பார்த்தால் ஒரு பெண்ணுக்கு தன் வீட்டிலேயும் குடும்பத்திலேயும்தான் ஆரம்பிக்கின்றது. அதனையும் விட ஒரு படி மேலே சென்று பார்ப்போமானால். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெண் பிறப்பதற்கு முன்னரே கருவிலேயே ஆரம்பித்து விடுகின்றன. எத்தனை பெண் பிள்ளைகள் கருவிலேயே அழிக்கப்பட்டிருக்கின்றன, அழிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன.
எதற்காக இந்த பெண் பிள்ளைகள் கருவிலேயே அழிக்கப்படவேண்டும். இதற்கு அந்த பெண்ணும் காரணமாக இருக்கின்றாளே எனும்போது நாம் வெட்கித்தலை குனிய வேண்டி இருக்கின்றது. கருவிலே இருப்பது ஆண் குழந்தை என்றால் சந்தோசப்படும் பெண் கருவிலிருப்பது பெண் குழந்தை என்றால் அதனை அளக்க நினைப்பது ஏன். தானும் ஒரு பெண்தான் என்பதனை மறந்து விடுகின்றாளா?
சரி ஒரு பெண்குழந்தை பிறந்து விட்டது என்றால். அவளை எந்தளவு அடக்கி ஒடுக்க முடியுமோ எந்தளவுக்கு அடக்கி ஒடுக்க நினைக்கும் சமூகமும் இல்லாமல் இல்லை. ஆண்களுக்கும், பெண்களுக்கும் சில சமூகக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனாலும் இங்கே நடப்பது என்ன பெண்களை பெண்களை வெளியில் செல்ல விடாமல் பெட்டிப்பாம்பாக வீட்டுக்குள்ளேயே அடக்கி வைக்கின்ற எத்தனை பெற்றோர் இருக்கின்றனர்.
பெண் என்றால் அடுப்படிக்கு மாத்திரமே என்று சொல்லுகின்ற எத்தனையோ பெற்றோர் இருக்கின்றனர். இவர்களின் இந்த மூட எண்ணங்களால் எத்தனையோ பெண்கள் கல்வி இழந்து, தனது வாழ்க்கையையே தொலைத்து நிக்கின்றனர்.
இத்தனையையும் தாண்டி ஒரு பெண் திருமணம் என்று ஒரு படி சென்றுவிட்டால். சில கணவன்மார்களால் படுகின்ற சித்திர வதைகள்தான் எத்தனை? போதாக்குறைக்கு மாமியாரும் வந்து சேர்ந்து விடுவார். தன் மனைவியை அடிமைபோல் நடாத்துகின்ற எத்தனை கணவன்மார்களை பார்த்திருக்கின்றோம், தனக்கு சமைத்துப் போடுவதற்கும், தனது உடல் சுகத்துக்குமே பெண் என்று பெண்ணை ஒரு போகப் பொருளாக பார்க்கின்றவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர். (மனைவியை தெய்வம்போல் போற்றுகின்ற கணவன்மாரும் இல்லாமல் இல்லை) மாமியார்கள் விட்டார்களா பெண்களை எத்தனை பாடுபடுத்துகின்றனர். இந்த மாமியார்கள் ஒன்றை புரிந்து கொள்கின்றார்களா தானும் ஒரு பெண்தான் என்பதனை.

முந்திய இடுகையிலே நண்பர் ரோஸ்விக் தனது கருத்திலே ...
கூர்ந்து நோக்குங்கள் எல்லா இடங்களிலும் பணம் ஒழிந்திருப்பது தெரியும். பெண் பணத்திற்காக விபச்சாரம் செய்கிறாள். பெண்களை விபச்சாரி என்று எழுதும்போது தான் பத்திரிக்கைகள் அதிகம் விற்கிறது. அங்கும் பணம். மாடலிங் மற்றும் திரைத்துறையில் அதிக பணம் பெற வேண்டி இவர்கள் ஆடை அவில்பிற்கு தயாராகிறார்கள். அதன் மூலம் படமும் நிறைய பணம் ஈட்டும் என்பதால் தயாரிப்பாளர்களும் உடன் படுகிறார்கள்.
பெண்களை இது போன்ற காரியங்களில் இருந்து வெளி வர சொல்லுங்கள். கட்டாயப்படுத்தும் ஆண்களை கால்களுக்கிடையில் மிதிப்போம்.
பெண்களை இது போன்ற விஷயங்களில் ஈடு படக்கூடாது என்று தடை போட்டால்.... அதற்கும் ஒரு கூட்டம் வரும், எங்கள் சுதந்திரம் பறிக்கப்படுகிரதேன்று....
பெண்களின் அழகு ஆண்களை மட்டுமல்ல... பெண்களையும் கவரக்கூடியது என்று நீங்கள் கருதினால், சில பெண்களை விளம்பரத்தில் இருந்து மட்டுமல்ல... விபச்சாரத்தில் இருந்தும் வெளிக்கொணர முடியாது.
என்று சொல்லி இருந்தார் உண்மைதான் இன்று பணத்துக்காக மனிதன் எதனையும் செய்யத்துணிந்து விட்டான். விளம்பரம் சினிமா போன்ற துறைகளிலே தனது கவர்ச்சியைக் காட்டி பிழைப்பு நடாத்துகின்ற , எல்லா பெண்களிலும் நாம் தவறு சொல்ல முடியாது. எத்தனை பெற்றோர் பணத்துக்கு ஆசைப்பட்டு தனது பிள்ளை விரும்பாமலே சினிமா துறைக்குள் நுளைத்திருக்கின்றார்கள். சரி ஒரு பெண் தவறான முறையில் செல்கின்றாள் என்றால் அதனை முடிந்தவரை பெற்றோரால் தடுக்க முடியும் ஆனால் சில பெற்றோரின் அசமந்த போக்கினாலே இன்று பல பெண்கள் இத்துறைகளை நாடிச்செல்ல வேண்டி இருக்கின்றது.
இன்று விபச்சாரிகளாக இருக்குமதிகமான பெண்கள் பணத்துக்காகவே இந்த தொழிலை செய்கின்றனர். பெற்றோரால் கைவிடப்பட்டு, கணவனால் கைவிடப்பட்டு, சொந்தங்களால் தூக்கி எறியப்பட்டு தான் வாழ வழியின்றி இத் தொழிலுக்கு வந்த பெண்களே அதிகம். இந்த இடத்திலே இப்படிப்பட்ட பெண்களை நாம் எந்த வகையில் குற்றம் சொல்ல முடியும். இவள் சார்ந்த சமுகத்தின் மீதுதான் குற்றம் இந்த சொல்லவேண்டும்.
சரி அந்தப் பெண் தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்துவிட்டாள். எல்லாவற்றையும் விட்டு தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்துவிட்டு வெளி உலகுக்கு வருகின்றாள். அப்போது இந்த சமுகம் அவளை ஏற்கின்றதா? இல்லையே நடத்தை கெட்டவள் என்று ஒதுக்கி வைக்க நினைக்கின்றது. அவள் மணம் திருந்தி வந்துவிட்டாள் அவளை சமுகத்தில் ஒருத்தியாக ஏற்றுக்கொள்கிறதா சமுகம்? இல்லையே.
ஆனால் ஒரு பெண் இவ்வாறான நடவடிக்கைகளினால் நடத்தை கெட்டவனாக இருந்தால் அடுத்த நிமிடமே மறந்து விடுகின்றோம் ஏன் இந்த நிலை. நண்பர் கோபி தனது கருத்துரையிலே சொன்னதுபோல் பெண் செய்கின்றபோது விபச்சாரமாகவும் ஆண்கள் செய்கின்றபோது ஆண்மையாகவும் பார்க்கின்றது இந்த சமுகம்.
ஒரு ஆணுடன் அதிகமாகப் பேசினாலே கட்டுக்கதைகள் கட்டி கெட்டவள் என்று பட்டம் கொடுக்கும் சமுகம் ஒரு ஆண் வீரம் பேசுவான் நான் அவளோடு அப்படி நடந்தேன், இவளோடு இப்படி நடந்தேன் என்று. இதனை கேட்டு இரசிக்கிறது நம் சமுகம். இது எந்த விதத்தில் நியாயமானது. ஏன் நாம் பெண்களை இந்த அளவுக்கு பெண்களை பார்க்கின்றோம்.
மதுவதனன் மௌ. தனது கருத்திலே....
//பதிவுகளில் பெண்களின் கவர்ச்சிப் படத்தைப் போடுவதில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை. என்ன செய்வது ஆண்கள் ரசிக்கிறார்கள் என்பதற்காக கவர்ச்சிப் படத்தைப் போடுகிறார்கள்.
ஒவ்வொரு முறையும் பதிவுகளில் போடப்படும் கவர்ச்சிப் படங்களைப் பார்க்கும்போதெல்லாம், அதைப் பார்க்கும் பெண்கள் என்ன சிந்திப்பார்கள் என்பதுதான் எனது மனதில் ஓடும்.//
என்று தனது ஆதங்கத்தை சொல்லி இருந்தார். ஒருவரை நாம் இதனைப் பதிவிட வேண்டாம் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் பெண்களின் அரை குறை ஆடைகளுடனான கவர்ச்சிப் படங்களை போட்டு பதிவிடும்போது இளைஜர்கள் வலைப்பதிவுக்கு வருவது அதிகம்தான். ஆனாலும் எல்லோரும் வர மாட்டார்கள். இந்த படங்களை பார்த்ததுமே சங்கடப்படுகின்றவர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர்.
வீதிகளிலே விளம்பரப் பலகைகளில் இருக்கும் படங்களைவிடவா நாங்கள் போடுவது அசிங்கம் என்று கேட்கலாம் ஆனாலும் வீதிகளிலே இருக்கின்ற அந்த படங்களைப் பார்த்து செய்வதறியாது மனதை சன்சலப் படுத்திக்கொண்டு போகின்ற எத்தனையோ பெண்கள் இருக்கின்றனர். ஒரு பதிவர் நல்ல விடயங்களை பதிவிட்டிருந்தாலும் இந்த படங்களால் அந்த பதிவையே பார்க்காதவர்களும் இருக்கின்றனர்.
படம் பார்க்க வருபவர்களைவிட எங்கள் கருத்துக்களுக்காக வருபவர்களே எங்களுக்கு முக்கியம். இப்படிப்பட்ட படங்களை போடுகின்ற வலைப்பதிவுகளை குடும்பத்தோடு இருந்து பார்க்கின்றவர்கள் பார்ப்பதற்கு முன்வரமாட்டார்கள்.

இத்தொடர் நான் நினைத்ததனைவிட பலரும் பாராட்டி இருப்பதோடு தொடரும்படியும் கருத்துரைகளில் மாத்திரமல்ல சிலர் மின்னஞ்சல்களும் அனுப்பி இருந்தார்கள். அதிலே சிங்கப்பூரிலிருந்து வந்த ஒரு மின்னஞ்சலிலே இத்தொடரி பாராட்டியிருப்பதோடுதொடு பல விடயங்களை கேள்விகளாக கேட்கப்பட்டிருக்கின்றன. அந்த கேள்விகளுக்கான ஏன் பார்வையிலான பதில்கள் அடுத்த பகுதியில் தருகின்றேன்.
நண்பனின் வருகை...
நண்பனின் வருகை...
என்னை வலைப்பதிவுக்கு அறிமுகப் படுத்திய நண்பர் பிரபா சில காலம் வலைப்பதிவுப்பக்கமே வரவில்லை. சில காலம் அவரால் பதிவுகளும் இட முடியவில்லை. காரணம் அவர் கணணி முன்னால் இருக்கின்றபோது கண்கள் வலிக்க ஆரம்பிக்கின்றன அந்த நிலை அதிகரித்ததனால் வைத்தியர்கள் கணணி பக்கமே போகவேண்டாம் என்று ஆலோசனை வழங்கி இருக்கின்றனர்.
அதனால் கணணி பக்கமே செல்ல முடியாது இருந்தார். தற்போது கண்ணிலே வேதனைகள் குறைந்திருப்பதால் மீண்டும் வலைப்பதிவு பக்கம் வந்திருக்கின்றார். இனி பதிவுகளை எதிர் பார்க்கலாம் என்று சொல்லி இருக்கிறார். இனி நாம் அவர் பக்கமும் சென்று வரலாம்.

6 comments: on "பெண்களை குட்டி சுவராக்க நினைக்கும் தேசமிது"
கேள்விகளும் பதில்களும் உங்கள்
இடுகையில் அமைந்திருப்பதால்...
நான் சற்றும் இளைப்பாறுகின்றேன்
சந்ரு.
நல்ல இடுகை நன்றி
ஆண் குழந்தைகளை போலவே, பெண் குழந்தைகளையும் படிக்க வைக்க முடியும்!
ஆயினும் கருவிலேயே அழிக்க காரணம் இந்த வீணாபோண ஆண்கள் வரதட்சணை கேட்பதால் தான்!
சந்ரு வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்தால் ஒரு அட்வான்ஸ் சல்யூட்!
நல்ல அலசல்...
//கலா கூறியது...
கேள்விகளும் பதில்களும் உங்கள்
இடுகையில் அமைந்திருப்பதால்...
நான் சற்றும் இளைப்பாறுகின்றேன்
சந்ரு.//
அப்படியோ? வருகைக்கு நன்றிகள்..
//வால்பையன் கூறியது...
ஆண் குழந்தைகளை போலவே, பெண் குழந்தைகளையும் படிக்க வைக்க முடியும்!
ஆயினும் கருவிலேயே அழிக்க காரணம் இந்த வீணாபோண ஆண்கள் வரதட்சணை கேட்பதால் தான்!
சந்ரு வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்தால் ஒரு அட்வான்ஸ் சல்யூட்!//
வரதட்சனைப் pir அட்சனை பற்றியும் அடுத்தடுத்த பகுதிகளில் பேச இருக்கின்றேன்.
நிட்சயமாக நான் ஒருபோதும் வர தட்சனை வாங்கப் போவதில்லை....
வருகைக்கு நன்றி வால்...
//ஸ்ரீராம். கூறியது...
நல்ல அலசல்...//
தொடரும் ஆதரவுக்கு நன்றிகள். அலசல்கள் தொடரும்...
Post a Comment