காத்திருந்து... காத்திருந்து....
தினமும் கனவு கண்டேன்
உன் இதயத்தில் இடம்
கிடைக்குமென்று. - இன்று
தூக்கத்தில் கனவொன்று
கண்டேன் நீ - உன்
இதயத்தை என்னிடம்
தந்துவிட்டதாய்.
சந்தோசத்தில் கண்விழிக்க
மனமின்றி கண்விழித்தேன் .
பின்புதான் அறிந்தேன் உன்
இதயம் தினம்
ஒருவரிடம் இடம் மாறுவதாக.
உன் வார்த்தைகள்
முத்துக்களை விட
பெறுமதியானவைதான்
முத்துக்களை இலகுவாக
பெற்றுவிடலாம் - உன்
உதட்டிலிருந்து வரும்
வார்த்தை முத்துக்களை
தவமிருந்தும் பெற முடியாதல்லவா...
உன் ஒரு வார்த்தைக்காய்
தவமிருக்கிறது என் இதயம்
ஆனால் உன் வார்த்தைகள்
என்னிடம் வர மறுக்கின்றன
உன்னிடமிருந்து வரும்
வார்த்தைகளை -என்
இதயம் தாங்காதென்றா
வர மறுக்கின்றன ...
வர மறுக்கின்றன ...
உன் ஒரு வார்த்தைக்காக
காத்திருந்து படும் வேதனையைவிட
அந்த வார்த்தைகள் - என்
இதயத்தை ஒன்றும்
செய்துவிடப் போவதில்லை
கடவுளைக் கல்லாக்கிய மனிதர்கள்....
நான் இறைவனிடம் கேட்டேன் - உன்
மனமென்ன கல்லா என்று
கடவுள் சொன்னார் -நான்
கல்லாகவில்லை மனிதனே
என்னைக் கல்லாக்கிவிட்டான்
என்றார். ஒன்றுமே
புரியவில்லை என்றேன்
கடவுள் மீண்டும் சொன்னார்.
என்னை கல்லாக்கிவிட்டு
மனிதன் - என்
தொழில்களை செயக்கின்றான்.
தன்னையே கடவுள்
என்கின்றான்
மானிடன் ஆடும்வரை
ஆடட்டுமே என்று
அமைதியாகப் பார்த்துக்
கொண்டிருக்கிறேன் என்றார்..
9 comments: on "காத்திருப்பும், கடவுளை கல்லாக்கிய மனிதர்களும்"
நன்றாக இருக்கிறது சந்துரு
வார்த்தைகளில் சிக்கனமும் சொற்களின் தெரிவில் கொஞ்சம் கவனமும் செலுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும். தினமும் எழுதுங்கள் மேலே ஏதோ அறிவுரை எல்லாம் சொன்னதை நினைத்து கோபீக்காதீங்க
அருமையான கவிதை சந்ரு
சந்ரு,கவிதை கரு நல்லாருக்கு.
தர்ஷன் சொன்னமாதிரி வரிகளைச் சுருக்கி எழுதினா இன்னும் நல்லா வரும்.
அழகாய் இருக்கிறது கவிதை. வார்த்தைகள் உங்களை வந்து சேர வாழ்த்துகிறேன்.
அருமை எண்ணலை
இன்னும் சிறப்பாக வர வேண்டியது
வாழ்த்துகள்
நல்லாருக்கு..
நன்றாக இருக்கிறது..
கொஞ்சம் கவிதயின் நீளத்தை குறைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது....
வாழ்த்துக்கள்..
அருமையான கவிதை
அசத்திறீங்க அண்ணா...
Post a Comment