இளைய தளபதி விஜயின் வேட்டைக்காரன். திரைப்படம் என்று வரும் என்று விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த வேளை. வேட்டைக்காரன் வெளிவரும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரம். வேட்டைக்காரனை புறக்கணிக்க வேண்டும் என்கின்ற பிரச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இங்கே ஏன் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்கின்ற காரணங்கள் சரியானதா? அல்லது இது அரசியலாக்கப்படுகிறதா? ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதற்கான காரணத்தைப் பார்க்கின்றபோது. இலங்கையிலே சிறந்த கலைஞர்களில் ஒருவராக இருக்கின்ற இராஜ் இந்த பாடத்திலே பங்களித்திருப்பதாகவும் இவர் இலங்கை இராணுவத்தை பற்றி பாடல் எழுதியவர் என்பதால் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
இந்த கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கதா? இவரை நாங்கள் ஒரு சிறந்த படைப்பாளியாகத்தான் பார்க்கவேண்டும். இவர் இராணுவத்தை பற்றிய பாடலுக்கு மட்டுமா சொந்தக்காரர். இவரது தமிழ் பாடல்கள் பிரபலமடையவில்லையா? இவருக்கு அதிகமான தமிழ் ரசிகர்கள் இருப்பது எவராலும் மறுக்க முடியாது.
இவர் இலங்கை இராணுவத்துக்காக பாடல் பாடியவர் என்பதனால் வேட்டைக்காரனை புறக்கணிக்க சொல்லும் தமிழ் சமுகம். கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறதா? இந்த இராணுவம் பற்றிய சிங்களப் பாடல்களிலே தமிழர்களின் பங்களிப்பு இல்லை என்று சொல்கின்றிர்களா? தமிழர்களின் பங்களிப்பு இருக்கும்போது இராஜ் அவர்களை இங்கே துக்கிப் பிடிப்பது தவறான விடயமாகும்.
இராஜ் தமிழர்களுக்கு எதிரானவர் என்பது தவறானதாகும். அவர் ஒரு பேட்டியிலே சொல்லி இருக்கின்றார் தமிழ் கலைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பவதாக. சரி அவரிடம் இலங்கை இராணுவ வீரர்களை பற்றி பாடல்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி சொல்லும்போது மறுக்க முடியுமா, யாராக இருந்தாலும் மறுத்தால் . இலங்கையில் இருக்க முடியுமா? நாம் அவர் பக்கமும் பார்க்க வேண்டும்.
வேட்டைக்காரனிலே சிங்கள மொழிக் கலாசாரம் புகுத்தப்பட்டிருப்பதாக பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களிடம் கேட்கிறேன். இன்றைய சினிமா முற்று முழுதாக தமிழையும் தமிழ் கலாசாரத்தையும் மதிக்கிறதா? வேறு நாட்டு, வேற்று மொழிக்கலாசாரங்கள். வேற்று மொழிகள் கலக்கவில்லையா? இன்று வேற்று மொழிக் கலப்பில்லாமல் பாடல்கள் வரவில்லையா? எத்தனை படங்கள் தமிழ் கலாசாரத்தை கொச்சைப் படுத்தி இழிவு படுத்தி, வேற்று மொழிக் கலாசாரத்தோடு வந்தன. எத்தனை மேல் நாட்டு இசை வடிவங்கள் புகுத்தப் பட்டிருக்கின்றன. இன்றைய பாடல்களிலே எத்தனை மொழிகளை கலந்து தமிழை கொலை செய்கின்றனர். அப்போது வராத தமிழ் பற்று இப்போது வருவது ஏன்?
சரி சிங்கள இராணுவத்தைப் பற்றிய பாடல்களுக்கு சொந்தக்காரரான இராஜ் அவர்களின் பங்களிப்புக்காக வேட்டைக்காரனை புறக்கணிக்க சொல்பவர்களிடம் கேட்கிறேன். இந்த இராணுவ வீரர்களையும், சிங்களவர்களையும் கட்டிக்காத்து. தமிழர்களை ..........................(இடைவெளியை நீங்களே நிரப்புங்கள்) இலங்கை ஜனாதிபதிக்கும், அவரோடு சார்ந்தவர்களுக்கும் கை கொடுத்து, பன்னாடை, பொன்னாடை எல்லாம் போர்த்திவிட்டு சென்ற அந்த பத்து தமிழக தலைவர்களை விடவும் இராஜ் பரவாயில்லை அல்லவா? ஒரு சிங்களவராக இருந்து தமிழ் பாடல்களை உருவாக்கி தமிழ் கலைஞர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் ஒருவர் இந்த இராஜ் இவர் வேட்டைக் காரனில் பங்களித்து இருப்பது தவறா?
. ஒரு படத்திலே இராஜ் பணியாற்றி இருப்பதை வெறுக்கும் தமிழ் உணர்வாளர்கள். கை குலுக்கி, பன்னாடை, பொன்னாடை போற்றி சென்ற அந்த பத்துப் போரையும் ஓட, ஓட நாட்டை விட்டு துரத்தி அடித்திருக்க வேண்டுமே. தமிழையும், தமிழனையும் ஏமாற்றி அரசியல் செய்யும் கருணாநிதியை விட இராஜ் தமிழர்களின் துரோகியாக இருக்க முடியுமா?
வேட்டைக்காரனை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இது தமிழர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு அரசியலாக்க நினைக்கும் ஒரு பிரச்சாரமேயாகும். இதற்கு
முன்னரும் எத்தனை சிங்களை கலைஞர்கள் தமிழ் சினிமாவிலே பங்களித்திருக்கின்றனர். அப்போது எங்கே போனார்கள் இந்த தமிழ் பற்றாளர்கள். ஏன் இந்தியாவிலே சிங்கள கலைஞர்களுக்கு பாராட்டுக்கள், விருதுகள் எல்லாம் கொடுக்கவில்லையா? அப்படி எல்லாம் இருக்கும்போது இன்று வேட்டைக் காரனை புறக்கணிக்க சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?
எல்லாவற்றையும் தாண்டி வேட்டைக்காரன் வெளிவந்ததும் நடக்கப் போவது என்ன?
எப்படித்தான் எதிர்ப்பலைகள் வந்தாலும் விஜயின் ரசிகர்கள் இப் படத்தினை பார்க்காமல் இருக்க மாட்டார்கள்.
வேட்டைக்காரன் எப்போ வரும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்தப் இந்தப் பிரச்சாரங்களுக்கு அப்பால் பார்க்கவேண்டும் என்ற எண்ணம். அவர்களின் மனதை விட்டு போகப்போவதில்லை. நீண்ட நாள் எதிர் பார்ப்பு இத்திரைப்படம் எப்படி இருக்கும் என்று விஜய் இரசிகர்கள் எத்தனையோ கற்பனைகளோடு இருந்திருப்பார்கள்.
விஜய் இரசிகர்கள் மட்டுமல்ல எனையோரும்தான் இவ்வாறு பாரிய எதிர் பிர சாரங்கள் வருகின்றன. எதோ ஒரு விடயம் இந்தத் திரைப்படத்தில் இருக்கிறது என்று பலரை பார்க்கத் தூண்டும்.
விஜய் எதிர்ப்பாளர்களோ, விஜய் படம் பார்க்காதவர்களோ ஏன் இந்தப் படத்துக்கு இப்படி பார்க்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்கின்றனர் என்ன என்பதனை பார்க்க வேண்டும் என்று படம் பார்க்க ஆசை படுவோர் பல உருவாவார்கள்.
இராஜ் தொடர்பாக இதுவரை அறியாதவர்கள் இராஜ் பற்றியும் அவரது திறமைகளை அறிவதற்காகவும் பலர் இத் திரைப் படத்தை பார்க்க சந்தர்ப்பமுண்டு.
அது மட்டுமல்ல சில காலமாக விஜய் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்த விஜய் இந்த படத்திலே ஏமாற்றத்தை கொடுக்க மாட்டார் என்று நம்பிக்கொண்டிருந்த விஜய் இரசிகர்களுக்கு இந்த எதிர்ப்பலைகளால் இது ஒரு வெற்றிப் படம் என்பதனை உறுதி செய்திருப்பார்கள். சிறிய காரணங்களுக்காக புறக்கணிக்க சொல்லும் பொது இப்படம் ஒரு வெற்றிப் படமாக அமைய இருப்பதனை சகித்துக் கொள்ள முடியாதவர்களால் செய்யப்படும் பிரசாரமே இது என்று எண்ணத் தோன்றுகின்றது.
வேட்டைக்காரன் எல்லோரும் எதிர் பார்ப்பதுபோல் இரசிகர்களை ஏமாற்றாத ஒரு படமாக அமைய இருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை. தடைகளையும் தாண்டி சாதனை படைப்பான் வேட்டைக் காரன்.
27 comments: on "வேட்டைக்காரன் வேட்டையாடுவானா? வேட்டையாடப்படுவானா?"
ண்ணா..உங்க கருத்துக்கல்லாம் சரிதானுங்கணா... ஆனா அதுக்காக ஏணுங்கணா விஜய்யோட க்ளோசப் ஸ்டில்ஸ்லாம் போட்டு பயமுறுத்துறீங்க...புள்ள பயந்துருச்சுல்ல...
இதைத்தான் சந்துரு நானும் சொல்லப்போய் நோகடித்து விட்டார்கள். பரவாயில்லையே என்னோடு ஒத்துப் போகும் கருத்துள்ள இரண்டுப் பதிவுகளை இன்று பார்த்துவிட்டேன்.
உந்த அரசியலெல்லாம் வேணாம்...
படம் பிடிச்சிருந்தா பாருங்கோ, பாக்காட்டி பாக்காதயுங்கோ....
சும்மா எல்லாத்துக்கயும் அரசியலக் கொண்டுவந்து புகுத்திக் கொண்டு...
சிங்களவர்களை தமிழ்மக்கள் வெறுக்கவில்லை... பிரச்சினையானவர்களையே வெறுக்கிறார்கள்...
உவங்களெல்லாம் திருந்த மாட்டாங்கள்....
படம் நல்லா வந்தா எனக்கு சொல்லுங்கோ, நான் பாக்கிறன்... :)
சபாஷ்...சரியான போட்டி...
இதெல்லாம் ஒருபுறமிருக்க, அகதிகள் முகாமில் அவதியுறும் நாளைய மன்னர்களைப் பற்றி எல்லாம் பதிவிடும் நீங்கள் இந்த ஒரு சாதாரண திரைப் பட விஷயத்துக்கு இவ்வளவு பெரிய பதிவிடலாமா? படம் ஜெயித்தால் அவர்களுக்கு லாபம்..இவர்களுக்கு வாதாடி என்ன ஆகப் போகிறது?
கட்டாயம் வேட்டைக்காரன் மக்களால் வேட்டையாடப்படுவான்...
//நாஞ்சில் பிரதாப் கூறியது...
ண்ணா..உங்க கருத்துக்கல்லாம் சரிதானுங்கணா... ஆனா அதுக்காக ஏணுங்கணா விஜய்யோட க்ளோசப் ஸ்டில்ஸ்லாம் போட்டு பயமுறுத்துறீங்க...புள்ள பயந்துருச்சுல்ல...//
கருத்துக்களுக்கு நன்றிகள்.
//தர்ஷன் கூறியது...
இதைத்தான் சந்துரு நானும் சொல்லப்போய் நோகடித்து விட்டார்கள். பரவாயில்லையே என்னோடு ஒத்துப் போகும் கருத்துள்ள இரண்டுப் பதிவுகளை இன்று பார்த்துவிட்டேன்.//
இதுதானே உண்மை நிலை உண்மையை சொல்வதில் தயக்கம் வேண்டாம் நண்பா.
கருத்துக்களுக்கு நன்றிகள்.
//கனககோபி கூறியது...
உந்த அரசியலெல்லாம் வேணாம்...
படம் பிடிச்சிருந்தா பாருங்கோ, பாக்காட்டி பாக்காதயுங்கோ....//
உண்மைதான் அரசியலாக்க நினைப்பதுதான் பிரச்சினையே.
//சும்மா எல்லாத்துக்கயும் அரசியலக் கொண்டுவந்து புகுத்திக் கொண்டு...//
எங்கெல்லாம் அரசியல் பயன்படுத்தப்படுகிறது... என்ன கொடுமை???????????????
//சிங்களவர்களை தமிழ்மக்கள் வெறுக்கவில்லை... பிரச்சினையானவர்களையே வெறுக்கிறார்கள்...
உவங்களெல்லாம் திருந்த மாட்டாங்கள்....//
உண்மைதான் அரசியல் இலாபத்துக்காக மக்களை பயன்படுத்துகின்றார்களே என்பதுதான் கவலைப்பட வேண்டிய விடயம்.
படம் நல்லா வந்தா எனக்கு சொல்லுங்கோ, நான் பாக்கிறன்... :)
//ஸ்ரீராம். கூறியது...
சபாஷ்...சரியான போட்டி...
இதெல்லாம் ஒருபுறமிருக்க, அகதிகள் முகாமில் அவதியுறும் நாளைய மன்னர்களைப் பற்றி எல்லாம் பதிவிடும் நீங்கள் இந்த ஒரு சாதாரண திரைப் பட விஷயத்துக்கு இவ்வளவு பெரிய பதிவிடலாமா? படம் ஜெயித்தால் அவர்களுக்கு லாபம்..இவர்களுக்கு வாதாடி என்ன ஆகப் போகிறது?//
நான் தமிழ் மீதும், தமிழ் மக்கள்மிதும் அதிக பற்றுடையவன். இருந்தாலும் வேட்டைக்காரன் திரைப்பட விடயமானது ஒரு சிறிய விடயமே. அதனை வைத்து வேட்டைக்காரன் திரைப்படத்தை புறக்கணியுங்கள் என்று மக்களை குழப்பமடைய வைத்து அரசியலாக நினைப்பதனையே வெறுக்கிறேன். ஏன் வேட்டைக்காரனை வெறுக்க வேண்டும் என்று நியாயமான காரணத்தை சொன்னார்கலானால் நானும் வேட்டைக்காரனை எதிர்த்து பதிவிட நானும் தயார். முதலில் நியாயமான காரணத்தை சொல்லட்டுமே.
//Atchu கூறியது...
கட்டாயம் வேட்டைக்காரன் மக்களால் வேட்டையாடப்படுவான்...//
வேட்டைக்காரன் வேட்டையாடுவான். மக்களால் வேட்டையாடப்படமாட்டான்.
ஒரு சிலரின் அவதூறுகளை துண்டு துண்டாக்கி வேட்டையாடிடுவான்...வெற்றி பெறுவான்...சந்ரு வாழ்க...
அண்ணா,நீங்கள் சொல்வது சரிதான் vijaiyai என்னக்கு பிடிப்பது படிக்காதது வேற விடயம் ஆனால் முட்டாள்தனமான விடையங்களுக்கு எல்லாம் இனத்தின் பெயரை இழுப்பது கண்டிக்கத்தக்கது.இவர்கள் இனத்தின் பெயரால் புறக்கணிக்க சொலிவிட்டு இறுதியில் வெளிநாடுகளில் படம் வெற்றிகரமாய் ஓடினால் கேள்விக்கு உட்படுவது எங்களின் இனமே.....
First let him give some quality movies inbetween masala movies. Then we will come to a conclusion whether he will hunt or will be hunted.
Listening the lyrics of the sonds, immaterial of whoever return, its nonsense.
If you dare, post a blog of all songs lyrics. When writing you will understand the quality I am talking about.
FYI, I don't hate Vijay, I hate only his movies...
மன்னிக்கனும் இந்த ஆட்டத்துக்கெல்லாம்
நான் வரவில்லை சினிமாவுக்கும் எனக்கும்
__________________________--___ரொம்பத்
தூரம் சந்ரு.
//Vijayasarathy R///
மசாலா படம் உங்களுக்கு பிடிக்க இல்லை எண்டால் எல்லாருக்கும் பிடிக்காமல் இருக்கவேனுமா? குறிப்பிடத்தக்க அளவாவது ஓடுற படியால் தானே அதே மாதிரி படங்கள் தயாரிக்க முன்வாறங்கள்,எனக்கும் விஜயை பிடிக்காது ஆனால் என்ட கருத்தை மத்த ஆக்களுக்கு திணிக்க முற்படக்கூடாது.திரைப்படம் என்பது ஒரு பொழுது போக்கு சாதனமே ஒழிய கருத்து சொல்லும் சாதனம்கிடையாது
//பிரியமுடன்...வசந்த் கூறியது...
ஒரு சிலரின் அவதூறுகளை துண்டு துண்டாக்கி வேட்டையாடிடுவான்...வெற்றி பெறுவான்...சந்ரு வாழ்க...//
கருத்துக்களுக்கும், என்னை வாழ்த்தியதுக்கும் நன்றிகள் வசந்த்.
//வான்நிலவன் கூறியது...
அண்ணா,நீங்கள் சொல்வது சரிதான் vijaiyai என்னக்கு பிடிப்பது படிக்காதது வேற விடயம் ஆனால் முட்டாள்தனமான விடையங்களுக்கு எல்லாம் இனத்தின் பெயரை இழுப்பது கண்டிக்கத்தக்கது.இவர்கள் இனத்தின் பெயரால் புறக்கணிக்க சொலிவிட்டு இறுதியில் வெளிநாடுகளில் படம் வெற்றிகரமாய் ஓடினால் கேள்விக்கு உட்படுவது எங்களின் இனமே.....//
இன்று பலர் ஈழத் தமிழர்களை வைத்தே அரசியல் நடாத்திக் கொண்டிருக்கின்றனர். எதட்கேடுத்தாலும் இனம் என்ற ஒன்றை திணித்து மக்களை முட்டாள்களாக்கிக் கொண்டு இருக்கின்றனர் சிலர். அது போன்ற ஒரு செயற்பாடுதான் வேட்டைக்காரன் புறக்கணிப்பு செயற்பாடும்.
//Vijayasarathy R கூறியது...
First let him give some quality movies inbetween masala movies. Then we will come to a conclusion whether he will hunt or will be hunted.
Listening the lyrics of the sonds, immaterial of whoever return, its nonsense.
If you dare, post a blog of all songs lyrics. When writing you will understand the quality I am talking about.
FYI, I don't hate Vijay, I hate only his movies...//
இது உங்கள் கருத்து மற்றவர் கருத்து வேறுபடலாமல்லவா? நிச்சயம் வேறுபாடும்.
//Kala கூறியது...
மன்னிக்கனும் இந்த ஆட்டத்துக்கெல்லாம்
நான் வரவில்லை சினிமாவுக்கும் எனக்கும்
__________________________--___ரொம்பத்
தூரம் சந்ரு.//
நல்லது.... இது அரசியல் கலந்த சினிமா... வருகைக்கு நன்றிகள்.
//வான்நிலவன் கூறியது...
//Vijayasarathy R///
மசாலா படம் உங்களுக்கு பிடிக்க இல்லை எண்டால் எல்லாருக்கும் பிடிக்காமல் இருக்கவேனுமா? குறிப்பிடத்தக்க அளவாவது ஓடுற படியால் தானே அதே மாதிரி படங்கள் தயாரிக்க முன்வாறங்கள்,எனக்கும் விஜயை பிடிக்காது ஆனால் என்ட கருத்தை மத்த ஆக்களுக்கு திணிக்க முற்படக்கூடாது.திரைப்படம் என்பது ஒரு பொழுது போக்கு சாதனமே ஒழிய கருத்து சொல்லும் சாதனம்கிடையாது//
ஒவ்வொருவருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. அதற்காக ஒருவர் மிது கருத்தை திணிக்க வேண்டும் என்பதில்லை. அதேபோன்றுதான் நியாயமற்ற காரணங்களை சொல்லி வேட்டைக் காரனை பார்க்க வேண்டாம் என்று சொல்வதும் தவறே. பார்ப்பதும், பார்க்காமல் இருப்பதும் அவரவர் விருப்பமே.
ஆதிரைக்கு சொன்ன அதே கருத்தைத் தான் உங்களுக்கும் சொல்கிறேன்..
சினிமா தான் வாழ்க்கை என்று தமிழர் நாம் மூழ்கியபின்னர் எனக்கு இந்த எதிர்ப்பு கோஷம் பெரிதாக வியப்பைத் தரவில்லை..
ஆனால் ஆதிரை சொன்ன பல விஷயங்கள் எங்களை நாமே சுய பரிசோதனை செய்வதற்கான கேள்விகள்.
இங்கே நாம் யாரும் புனிதர் இல்லை.. எத்தனை பேர் எம் உறவுகளுக்கு எத்தனை விதத்தில் பங்களிப்பு செய்தோம் என்று கேட்டால் அனைவருமே எல்லாவற்றையும் மூடிக் கொண்டு தான் இருப்போம்.
யார் எங்களுக்காக குரல் கொடுத்தாலும் நெகிழ்வதும், குரல் கொடுக்காவிட்டால் கொதிப்பதும் என்று உணர்ச்சி மடையராகி விட்டோம்..
கலைஞர் எதிர்ப்பும்,ஜெயலலிதா எதிர்ப்பும், காங்கிரஸ் எதிர்ப்பும் என்று இருக்கும் நாங்கள் இலங்கையில் என்ன நடக்கிறது என்று பார்ப்பது நல்லது.
விஜயும் வேட்டைக்காரனும் வென்றாலும் தோற்றாலும் முகாமில் இருக்கும் எம்மவர்க்கு எல்லாம் கிடைக்குமா?
தமிழ் ஈழம் தான் கிடைக்குமா?
வேலையைப் பாருங்கப்பா..
சயந்தன் அன்று ட்விட்டரில் சொன்னது மாதிரி வேட்டைக்கறனைப் போர்க்கநியுங்கள் என்று சொல்கிற புலம்பெயர் ஈழத் தமிழர் கைகளிலே தியட்டரில் முதல் நாளில் போப்கொர்ன் இருக்குமாம்..
உங்கள் மனம் திறந்த துணிச்சலுக்கு வாழ்த்துக்கள்..
பி.கு - விஜயை கிண்டல் செய்து பதிவு போடுவதால் எனக்கும் பல மின்னஞ்சல்கள் வந்துள்ளன. இதை உங்கள் பாணியில் நக்கலடித்து பிரசுரியுங்கள். இலங்கையிலும் வேட்டைக்காரனை துரத்துவோம் என்று..
திருந்தமாட்டார்கள் எம்மவர்கள்.
ஆனால் இப்போதே கொழும்பில் வேட்டைக்காரன் டிக்கெட்டுக்களை விற்க ஆரம்பித்துள்ளார்கள். ஆனால் மந்தமே..
//வேட்டைக்காரன் எல்லோரும் எதிர் பார்ப்பதுபோல் இரசிகர்களை ஏமாற்றாத ஒரு படமாக அமைய இருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை.//
வேட்டைக்காரன் கிட்டத்தட்ட விஜய்க்கு ஒரு ஆசிட் டெஸ்ட்தான்.
ஐயா சாமி... எனக்கு என்னவோ இவர்ர படம் எண்டா அலர்ஜி..ஆனாலும் 'கில்லி' 3 தடவைகள் தியேட்டரில் பார்த்திருக்கன்.
அதுக்கப்புறம் என் மனச தொட்டதா நல்ல படம் இல்ல..(நான் பார்க்கல ஆனா இவர் படத்த பற்றி நல்ல விமர்சனம் வந்தா பார்ப்பேன்)
நம்ம எப்பவும் நடிப்புக்கு வாழ்த்துவோம்..
அதுக்காக கலை ரகனையுடன் இருந்து பார்க்க சினிமாவை அரசியலாக்க தேவையில்லை.
ஆனாலும் தென்னிந்திய சினிமாவும் இப்போ இலங்கைப் பிரச்சனைகளுக்காக வாய் திறப்பதால் தான் உண்மையான ??? தமிழாய் இதற்கு எதிர்ப்பலைகள்..அதாவது தமிழ் என்ற உணர்வு மட்டுமே..மற்றப்படி எதிரிகளே இப்படத்தை முதலில் பார்ப்பார்கள் என்பது மறுக்கப்பட முடியாது..
உங்கள நம்பி பெஸ்ட் ஷோ பாக்கப்போறன்... பாத்திட்டு வாறன்.. எங்க போயிடப்போறீங்க? ;-)
இது வேறயா விஜய்க்கு பாவம் 18 ம் திகதி அவதார் படம் வருகுதாமே
சந்ரு அண்ணா வாழ்க வளமுடன்!
நீங்கள் எப்பொழுதும் என் பிரர்த்த்னைகளில் இருப்பீர்கள்
சந்ரு அண்ணா வாழ்க வளமுடன்!
நீங்கள் எப்பொழுதும் என் பிரர்த்த்னைகளில் இருப்பீர்கள்.
Post a Comment