Wednesday, 9 December 2009

இணைய அரட்டையில் இப்படியும் நடக்கிறது

இன்று இணைய அரட்டை என்பது இணையப் பாவனையாளர்களில் அநேகமானோர் விரும்பும் ஒன்றாகும். இந்த இணைய அரட்டைகள் மூலம் நல்ல பல நண்பர்கள் கிடைப்பதோடு திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன இன்னும் பல நல்ல விடயங்கள் நடைபெற்று வந்தாலும் பல பல தீய, சமுக சீர்கேடான விடயங்களும், சுத்து மாத்துக்களும் நடந்து கொண்டுதான் வருகின்றது.

இன்று இணைய அரட்டையை நல்ல விடயங்களுக்காக பயன் படுத்துவோரைவிட கெட்ட விடயங்களுக்காக பயன்படுத்துவோர் அதிகம் என்று சொல்லலாம். இதில் வயது வித்தியாசம் இல்லை சிறுவர்களும் இன்று இந்த இணைய அரட்டைக்கு அடிமையாகி விட்டனர். இதில் பெண்களும் சளைத்தவர்களல்ல. சமூகத் தளங்களை ஆண்களை விட பெண்களே அதிகம் பயன் படுத்துவதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன.

நானும் ஆரம்ப காலங்களில் அரட்டயடிப்பவந்தான் நிறையவே நண்பர்கள் கிடைத்தனர், ஒரு சிலரே நல்ல நண்பர்கள். இந்த அரட்டையிலே இருக்கின்ற சில விடயங்களை அறிந்து, உணர்ந்து கொண்டதும் நானாகவே அரட்டைப் பக்கம் போவதை குறைத்துக்கொண்டேன். அப்போது இடம் பெற்ற சில உண்மை சம்பவங்கள் மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக என்று தருகிறேன். 

ஒரு சமுக வலைத்தளம் மூலம் எனக்கு ஒரு நண்பி கிடைத்தார். அவர் எனக்கு ஓரிரு வருடத்துக்கு முன்னரே அரட்டை அடிக்க ஆரம்பித்தவர். இலங்கையை சேர்ந்தவர். இவருக்கு வெளி நாடொன்றிலே ஒரு நண்பர் அரட்டை மூலம் கிடைத்திருக்கின்றார். நல்ல நண்பர்களாக சில காலம் பழகியிருக்கின்றனர். பின்னர் இருவரும் காதலிக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஒரு வருடம் இவர்களது காதல் தொடர்ந்திருக்கின்றது. இந்த நண்பியோ தன்னைப்பற்றிய அத்தனை விடயங்களையும் காதலனிடம் சொல்லி இருக்கின்றார். புகைப்படங்கள். தொலை பேசி இலக்கங்கள் என்று எல்லாமே கொடுத்திருக்கின்றார். பின்னர் காதலனோ தொடர்பை துண்டித்து விட்டாராம். சில நாட்களின் பின்னர் அந்தப் பெண்ணின்  மின்னஞ்சலுக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருக்கின்றது அந்த காதலனிடமிருந்து. அந்த மின்னஞ்சலிலே ஒரு இணையத்தள முகவரி குறிப்பிடப்பட்டு அந்த இணையத்தளத்திலே உங்களைப் பற்றி இருக்கின்றது என்றும் எழுதப்பட்டிருந்திருக்கிறது.

குறிப்பிட்ட இணையத்தலத்தினை சென்று பார்த்தபோது அந்தப் பெண் அதிர்ந்து போனார். அது ஒரு செக்ஸ் தொடர்பான இணையத்தளம். அதிலே இந்தப் பெண்ணினுடைய புகைப்படங்கள், இவர் பற்றிய விபரங்கள் தொலைபேசி இலக்கம் என்று எல்லாமே போடப்பட்டிருந்திருக்கிறது. இப்படி சிலர் பெண்களை ஏமாற்றி அவர்களது விபரங்களை சில தேவையற்ற இணையத் தளங்களிலே சேர்த்து விடுகின்றனர்.

அடுத்து எனக்கு நடந்த ஒரு சம்பவம் இது அரட்டை மூலம் ஒரு வெளிநாட்டு நண்பர் எனக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டார். அடிக்கடி என்னோடு தொலை பேசியிலும் அடிக்கடி பேசிக்கொள்வர். எல்லா விடயங்களையும் என்னோடு பகிர்ந்து கொள்வார். அவரது மின்னஞ்சல் கடவுச்சொல் எனக்குத் தெரியும். எனது மின்னஞ்சல் கடவுச்சொல் அவருக்குத் தெரியும் அப்படி  நல்ல நண்பர்களாகிவிட்டோம். சில காலம் அவரது தொடர்பு இல்லாமல் போய்விட்டது. அவரது மின்னஞ்சலும் கடவுச்சொல் மாற்றப்பட்டுவிட்டது. என் மின்னஞ்சலிலிருந்து எனது மின்னஞ்சலிலே இருந்த மின்னஞ்சல் முகவரிகளுக்கு தேவையற்ற படங்களை அனுப்பியிருக்கின்றார். இதனால் என் நண்பர்கள், உறவினர்கள் திட்டித் தீர்த்துவிட்டனர். சில நண்பர்கள் நான்தான் அனுப்பினேன் என்று நட்பையும் முறித்துக் கொண்டனர். எல்லாவற்றுக்கும் காரணம் நான் அதிகமாக எல்லோரையும் நம்பிவிடுவதுண்டு.


இன்னுமொரு சமுக இணையத் தளத்திலே எனக்கு பிடித்த முக்கியமான ஒரு நபர் இருக்கிறாரா என்று பார்ப்பதற்கு அவரது பெயரை தேடித் பார்த்தேன். அதிர்ச்சி அடைந்தேன். அந்த நபரது பெயரிலே யாரோ ஒருவர் வேண்டுமென்று தேவையற்ற படங்களை போட்டு தனது பக்கத்தை அலங்கரித்திருந்ததொடு அரை குறை ஆடைகளுடனான வெள்ளைக்கார பெண்களை நண்பர்களாக வைத்திருக்கின்றார். இப்படி எல்லாம் செய்கின்றார்கள். அதேபோல்தான் சில முக்கியமானவர்களின் பெயர்களிலே அரட்டையடிப்பது மட்டுமல்லாது சில தீய செயல்களிலும் சிலர் ஈடுபடுகின்றனர். 

இன்று சிறுவர் முதல் பெரியோர் வரை இவ்வாறான அரட்டையிலே ஈடுபட்டு வருகின்றனர். சிலரோ தமது பொழுதை அரட்டையுடனே செலவிடுகின்றனர்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

20 comments: on "இணைய அரட்டையில் இப்படியும் நடக்கிறது"

Atchuthan Srirangan said...

//எல்லாவற்றுக்கும் காரணம் நான் அதிகமாக எல்லோரையும் நம்பிவிடுவதுண்டு.//


அப்ப உங்களை நிறையப் பேர் ஏமாற்றி இருப்பாங்களே. ...

வேந்தன் said...

எதிலும் கெட்ட விடயங்கள் இருக்கும் அதை நாம் எப்படி பயன் படுத்துகின்றோம் என்பதைப் பொறுத்து. குறிப்பா இணையத்தில் எமது சொந்த விடயங்களை பகிர்வது மிகவும் ஆபத்து அதுவும் பெண்களுக்கு இன்னும் அதிகம். நல்ல பதிவு.

அன்புடன் நான் said...

பகிர்வுக்கு நன்றிங்க சந்ரு.... நாமும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்தானே?

இது மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை!

வால்பையன் said...

இணையத்துல பல லட்சங்கள் விட்டவனெல்லாம் இருக்கான்!

Admin said...

//Atchu கூறியது...
//எல்லாவற்றுக்கும் காரணம் நான் அதிகமாக எல்லோரையும் நம்பிவிடுவதுண்டு.//


அப்ப உங்களை நிறையப் பேர் ஏமாற்றி இருப்பாங்களே. ...//


நாங்கள் அப்படி எல்லாம் ஏமாறமாட்டோம்

வருகைக்கு நன்றிகள்.

Admin said...

//வேந்தன் கூறியது...
எதிலும் கெட்ட விடயங்கள் இருக்கும் அதை நாம் எப்படி பயன் படுத்துகின்றோம் என்பதைப் பொறுத்து. குறிப்பா இணையத்தில் எமது சொந்த விடயங்களை பகிர்வது மிகவும் ஆபத்து அதுவும் பெண்களுக்கு இன்னும் அதிகம். நல்ல பதிவு.//
எல்லோரும் கவனமாக இருந்தால் சரிதான் .

வருகைக்கு நன்றிகள்.

Admin said...

//சி. கருணாகரசு கூறியது...
பகிர்வுக்கு நன்றிங்க சந்ரு.... நாமும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்தானே?

இது மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை!//

அதேதான்.

வருகைக்கு நன்றிகள்.

Admin said...

//வால்பையன் கூறியது...
இணையத்துல பல லட்சங்கள் விட்டவனெல்லாம் இருக்கான்!//

உண்மைதான் அதற்கும் ஒரு பதிவு போட்டேன்

இணையத்தில் காதலித்துச் சம்பாதிக்கலாம்
http://shanthru.blogspot.com/2009/11/blog-post_13.html

வருகைக்கு நன்றிகள்.

தர்ஷன் said...

உங்களைப் போலவே எனக்கும் ஒரு நண்பன் இருந்தான் ஒருமுறை துவைத்து காயப் போட்டிருந்த வெள்ளை ஆடைகளை சாப்பிட முயற்சித்திருக்கிறான். என்ன செய்வது அவன் உங்களைப் போலவே வெளுத்ததெல்லாம் பால் என நம்பும் சாதி
Cool

cheena (சீனா) said...

அன்பின் சந்ரு

கத்தி இருபக்கமும் கூர்மையானது - எப்பக்கம் பயன் படுத்த் வேண்டும் என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்

இணையத்தினால் நன்மைகள் அதிகம் - நல்வாழ்த்துகள்

நிலாமதி said...

பயனுள்ள் தகவல். உங்கள் எச்சரிக்கைக்கு நன்றி

கவி அழகன் said...

என்னப்பா ஆப்பு !!!! எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை

Kala said...

சந்ரு! இணையம்மட்டுமில்லை!
எல்லாவற்றிலும் முன்னெச்சரிக்கை
வேண்டும்
ஏமாற்றுபவர்களில்_இருபாலாரும் உண்டு
ஏமாறுபவர்களிலும்_இருபலாரும் உண்டு
{என்னைத் தவிர...ஹ்ஹஹ்ஹ}

ரொம்பப்பப்பப்பப..... பட்டுத் திருந்திஇருக்கிறார்போல.....
கவனம்!1
படிப்பவர்கள் உஷார்ராகட்டும்!!
நன்றி

Admin said...

//தர்ஷன் கூறியது...
உங்களைப் போலவே எனக்கும் ஒரு நண்பன் இருந்தான் ஒருமுறை துவைத்து காயப் போட்டிருந்த வெள்ளை ஆடைகளை சாப்பிட முயற்சித்திருக்கிறான். என்ன செய்வது அவன் உங்களைப் போலவே வெளுத்ததெல்லாம் பால் என நம்பும் சாதி
Cool//

யாரப்பா சொன்னது நான் வெள்ளை ஆடைகளை சாப்பிடுவது என்று.

வருகைக்கும், கடிக்கும் நன்றிகள்.

Admin said...

//cheena (சீனா) கூறியது...
அன்பின் சந்ரு

கத்தி இருபக்கமும் கூர்மையானது - எப்பக்கம் பயன் படுத்த் வேண்டும் என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்

இணையத்தினால் நன்மைகள் அதிகம் - நல்வாழ்த்துகள்//

வருகைக்கு நன்றிகள்.

Admin said...

//நிலாமதி கூறியது...
பயனுள்ள் தகவல். உங்கள் எச்சரிக்கைக்கு நன்றி//

வருகைக்கு நன்றிகள்.

Admin said...

//கவிக்கிழவன் கூறியது...
என்னப்பா ஆப்பு !!!! எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை//

என்ன பயப்படுவதைப் பார்த்தால் எதோ இருக்கிறதுபோல..
வருகைக்கு நன்றிகள்.

Admin said...

//Kala கூறியது...
சந்ரு! இணையம்மட்டுமில்லை!
எல்லாவற்றிலும் முன்னெச்சரிக்கை
வேண்டும்
ஏமாற்றுபவர்களில்_இருபாலாரும் உண்டு
ஏமாறுபவர்களிலும்_இருபலாரும் உண்டு
{என்னைத் தவிர...ஹ்ஹஹ்ஹ}

ரொம்பப்பப்பப்பப..... பட்டுத் திருந்திஇருக்கிறார்போல.....
கவனம்!1
படிப்பவர்கள் உஷார்ராகட்டும்!!
நன்றி//

பட்டேன் ஆனால் மாட்டுப்படவில்லை.

வருகைக்கு நன்றிகள்.

Admin said...

என் இடுகைகள் அனைத்துக்கும் இன்று ஒரே நாளில் அதிகம் எதிர் வாக்குப் போட்ட புண்ணியவான் வாழ்க..

Unknown said...

இந்தப் பதிவு எப்படி என் கண்ணிலிருந்து தப்பியது?

இன்றுதான் வாசிக்கிறேன்.
யாழ்தேவி, எனது புளொக்கர் பின்தொடர்வோர் பட்டியல் அகியவற்றில் இது என் கண்களுக்குத் தட்டுப்படாதது அதிசயம்....

எனக்கு பதிவுகளுக்கு உடனுக்குடன பின்னூட்டம் போடப் பிடிக்கும். பிந்திப்போட ஒரு மாதிரிக் கிடக்குது...

நல்ல பதிவு சந்ரு அண்ணா...

வழமையாகச் சொல்வது தான்,
ஏமாறுவோர் இருக்கும்வரை ஏமாற்றுவோர் இருக்கத்தான் செய்வார்கள்....

Post a Comment