கட்டார் நாட்டுக்கு தொழில் தேடி சென்று ஏமாற்றத்துடன் நாட்டுக்கு வந்து சேர்ந்தேன். வந்து இரண்டு மாதங்களாகிவிட்டது என் கைப்பேசியில் சுட்ட சில படங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
கட்டாரில் இருந்து துபாய் போய் துபாயில் இரண்டரை மணித்தியாலங்களும் அங்கிருந்து மாலைதீவு சென்று மாலைதீவில் எட்டரை மணித்தியாலங்கள் விமான நிலையத்தில் தங்கியிருந்து நாட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
நான்கரை மாதங்கள் என்னை அரவணைத்து தங்குவதற்கு இடம் உணவு உட்பட அத்தனை உதவிகளையும் செய்த என் நண்பர்களில் சிலரும் நானும். கட்டார் வீதிகளில்.
இது நண்பர்களும் நானும் இருந்த இருப்பிடம் இதை பார்த்து நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள் நம் உறவுகளின் நிலையை
மாலைதீவு விமான நிலையத்தின் சுவர்கள் வெடித்து கட்டிடம் விழும் நிலையில் இருக்கிறது.
எட்டரை மணித்தியாலங்களை என்ன செய்வது உணவு தண்ணீர் இன்றி நண்பர்கள் படும்பாடு. உணவு சாப்பிடுவதானால் டொலர் வேண்டும் எங்களிடம் எவரிடமும் டொலர் இல்லை.
3 சிங்கள நண்பிகள் விமானத்தில் கிடைத்ததனால் நண்பர்களுக்கு மட்டற்ற மகிழ்சி
சிங்கள நண்பிகளோடு சந்தோசமாக நண்பர்கள்
மொட்டையுடன் அடியேன்
பறக்கும்போது சுட்டது இதுதான்
5 comments: on "பறக்கும்போது சுட்டது"
படங்களை ரசிக்க விடாமல் ஏதோ ஒன்று அழுத்துகிறது...
//எட்டரை மணித்தியாலங்களை என்ன செய்வது உணவு தண்ணீர் இன்றி நண்பர்கள் படும்பாடு. உணவு சாப்பிடுவதானால் டொலர் வேண்டும் எங்களிடம் எவரிடமும் டொலர் இல்லை//
.துபாய் மாதிரி இலவச ப்ரேக்பாஸ்ட் அங்கே கிடையாதா.இரக்கமற்ற மனிதர்கள் .
சந்ரூ...!
தங்களின் தொழில் தேடிய மத்தியகிழக்குப் பயணம் தோல்வியில் முடிந்ததை இரண்டு வாரங்களுக்கு முன்னர் மட்டக்களப்புக்கு வந்தபோது நண்பரொருவர் சொன்னார். மனதுக்கு கொஞ்சம் நெருடலாகவும்- கவலையாகவும் இருந்தது.
இனியாவது வாழ்க்கையில் வசந்தங்கள் வீசட்டும்.
படங்கள் அருமை
//எட்டரை மணித்தியாலங்களை என்ன செய்வது உணவு தண்ணீர் இன்றி நண்பர்கள் படும்பாடு. உணவு சாப்பிடுவதானால் டொலர் வேண்டும் எங்களிடம் எவரிடமும் டொலர் இல்லை.//
வேதனையான விடயம்
Post a Comment