Thursday, 12 August 2010

பறிபோகும் தமிழர் பிரதேசங்கள்

வடக்கு கிழக்கு மாகாணங்களிலே தமிழர்களது நிலங்கள் திட்டமிட்டு வேறு இனத்தவர்களினால் அபகரிக்கப் படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலே சிங்களவர்களும் முஸ்லிம்களும் தமிழர் பிரதேசங்களிலே குடியமர்த்தப் படுவதாக குற்றம்
சுமத்தப்படுகின்றது.

வடக்கு கிழக்கிலே திட்டமிட்டு இலங்கை அரசாங்கம் சிங்களவர்களை குடியேற்றி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் குற்றம்
சுமத்துகின்றனர். இவர்கள் குற்றம் சுமத்துவதோடு நின்றுவிடாது இக் குடியேற்றங்களை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய
பொறுப்பு இருக்கின்றது.

ஆனால் இது தொடர்பில் குற்றச்சாட்டுக்களையும் கண்டனங்களையும் தவிர ஆக்கபூர்வமாக எதனையும் செய்வதாக தெரியவில்லை

அண்மையிலே 4தமிழ் மீடியாவிலே இடம் பெற்ற செய்தி...


சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலே பரவலாக புத்த விகாரைகளும், சிங்களக் குடியேற்றங்களும், ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனால் அப்பகுதியில் வாழும் தமிழ மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


குறிப்பாக வடக்க கிழக்கு பிரதேசங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக மாற்றம் பெற்றுள்ள பகுதிகளிலேதான் இவ்வாறான நடவடிக்கைகள் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறியப்படுகிறது.


இவ்வாறு நடைபெறும் விகாரைகள் அமைப்பும், சிங்களக் குடியேற்றமும், மிக நுட்பமாக ஏற்புடுத்தப்பட்டு வருவதாகவே அவதானிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படகிறது.


இராணுவ காவலரண்களை அண்டிய பகுதிகளிலே சிறு, சிறு விகாரைகள் அமைக்கப்படுகின்றன. இவ் விகாரைகளிலே பெளத்த மதம் சார்ந்த நிகழ்வுகள் அவ்வப்போது இடம் பெற்று வருகின்றன. எதிர் காலத்தில் இவ் விகாரைகள் பாரிய விகாரைகளாக உருவெடுக்கக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.


இது தொடர்பாக அரசாங்கத்திலே அங்கம் வகிக்கின்ற அரசியல்வாதிகள் கருத்துத் தெரிவிக்கின்றபோது இராணுவ முகாம்களிலே இருக்கின்ற இராணுவ விரர்களின் வணக்கஸ்தலமாக மட்டுமே இந்த விகாரைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வேறு நோக்கங்களுக்காக அமைக்கப்படவில்லை என்று குறிப்பிடுகின்றனர்


இதுபோலவே தமிழ் பிரதேசங்களில் இராணுவ முகாம்களுக்கு பக்கத்தில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கு திட்டமிடப்படுவதாக மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். வடக்கு கிழக்கிலே இருக்கின்ற இராணுவ முகாம்களுக்கு அருகிலே இருக்கின்ற காணிகளிலே பல சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுத்தப் பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது.
ஒரு இராணுவ முகாமை எடுத்துக் கொண்டால் அந்த இராணுவ முகாமுக்கு அருகில் இருக்கின்ற காணியிலே அந்த இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர்களின் குடும்பங்கள் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் எதிர் காலத்திலே இப்பிரதேசங்கள் முற்று முழுதாக சிங்களப் பிரதேசங்களாக மாறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பிரதேச மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

நன்றிகள் 4தமிழ் மீடியா


இது ஒரு புறமிருக்க முஸ்லிம்களாலும் தமிழர் நிலப்பரப்புக்கள் அபகரிக்கப்படுவதாக தமிழ் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அண்மையில் மட்டக்களப்பு ஆரையம்பதி மக்கள் முஸ்லிம்கள் தமிழர் பிரதேசங்களை அபகரிப்பதை நிறுத்த வேண்டும் எனக்கோரி
உண்ணாவிரதம் ஒன்றினை மேற்கொண்டனர்.

உண்ணாவிரதம் இடம்பெற்ற இடத்துக்கு சென்ற கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் மக்களால் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது அதனை
அப்படியே தருகின்றேன்.


01. மண்முனை பிரதேச சபைக்குரிய வடக்கு எல்லையினுள் காத்தான்குடி நகர சபை அத்து மீறி நிருவாகம் செய்வது உடன் நிறுத்தப்பட வேண்டும்.


02. மண்முனைப்பற்று பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியியில் நீதி மன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டதன்படி அரச காணிகளிலுள்ள காத்தான்குடி முஸ்லிம்களும் வேறு பிரதேச முஸ்லிம்களும் உடன் வெளியேற்றப்படவேண்டும். மேலும் இவ்வாறான குடிNயுற்றங்கள் இனிமேலும் இடம்பெறக்கூடாது.


03. கோயில்குளம் பகுதியில் நீர் வினியோகத்திட்டம் அமுல்படுத்தப்படுவதால் பிரதேசத்தில் நீர் வற்றும் நிலை ஏற்படும் இதனால் எமது ஜீவனோபாயமான பயிர்ச்செய்கை அழிவுறும் என்பதால் இச் செயற்றிட்டம் உடனே நிறுத்தப்படவேண்டும்.


04. காங்கேயன் ஓடை வீட்டுத்திட்டம் காங்கேயனோடை மக்களுக்கு அவரவர் வளவினுள்ளேயே கட்டிக்கொடுக்க வேண்டும். பள்ளிவாயல் காணி என்ற பேரில் மாவிலங்குதுறையில் இடம்பெறும் குடிNயுற்றம் உடன் நிறுத்தப்படவேண்டும்.


05. திண்மக்கழிவு சேகரிப்பு இடம் ஒன்று காத்தான்குடி நகரசபையால் எமது பிரதேசத்தில் ஆரம்பிக்க ஏற்பாடாகி வருகின்றது அது உடன் நிறுத்தப்படவேண்டும்.


06. மாவிலங்குதுறையில் பள்ளிவாயல் காணி என்ற பேரில் பரம்பரையாக வாழ்ந்து வரும் தமிழ் மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.


07. தமிழர்களின் பூர்வீக பிரதேசமான ஆரையம்பதியில் கடற்கரைப்பிரதேசத்தினுள் ஆட்சி உறுதிகளையும் போலியான ஆவணங்களையும் வைத்து குடியிருப்புக்களை ஏற்படுத்துவது நிறுத்தப்படவேண்டும்.



Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

9 comments: on "பறிபோகும் தமிழர் பிரதேசங்கள்"

கலா said...

என்னென்னமோ...நடக்குதய்யா
அங்கே என்னத்தச் சொல்ல......

நாமெல்லாம் கிணற்றுத் தவளைகள்தான்
கத்திக்,கத்தி அழிவதுதான் மிச்சம்!!
யார் காதிலும் விழுவதில்லை.

கவி அழகன் said...

உடலிருக்கு உயிர் இருக்கு

நரம்பிருக்கு எலும்பிருக்கு

உணர்வு தொலைத்த வெறும் கோதுகள்

இரத்தமில்ல உயிர் கோலங்கள்


கடலிருக்கு வயலிருக்கு

குளமிருக்கு நிலமிருக்கு

தொடமட்டும் முடியாத நாதாரிகள்

தொட்டாலும் கொன்றுவிடும் சூதாடிகள்


மூச்சுமட்டும் எடுக்கமுடியும்

முகம்கூட சுளிக்கமுடியா

முகம் இருக்கும் முழு முண்டங்கள்

மனம் முழுக்க இரத்த வாடைகள்


என் நிலமிருக்கு தொழிலிருக்கு

சுய கௌரவம் நிறைய உண்டு

பொத்திட்டு இருடா பரதேசி

நான் உன்னை ஆளும் இனவாசி


நான் பொருள் தருவேன்

பொதி தருவேன்

பொத்திட்டு வாங்கடா

என் ஆட்சியில் நீ தாசி

சசிகுமார் said...

யாதவன் கவிதை மிக அருமை

சசிகுமார் said...

வித்தியாசமா இருக்கு அக்கா

Unknown said...

நன்றி சந்துரு உன்மையை உரக்கசொன்னதற்கு தொடருங்கள் துணிவோடு....

Admin said...

//கலா கூறியது...

என்னென்னமோ...நடக்குதய்யா
அங்கே என்னத்தச் சொல்ல......

நாமெல்லாம் கிணற்றுத் தவளைகள்தான்
கத்திக்,கத்தி அழிவதுதான் மிச்சம்!!
யார் காதிலும் விழுவதில்லை.//

என்னத்த சொல்ல....

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

உங்கள் வருகைக்கும் கவிதைக்கும் நன்றிகள் யாதவன்

Admin said...

உங்கள் வருகைக்கும் கவிதைக்கும் நன்றிகள் சசிகுமார்

Admin said...

உங்கள் வருகைக்கும் கவிதைக்கும் நன்றிகள் மகாதேவன்

Post a Comment