புலம்பெயர் பதிவராக பதிவுகளில் சந்திப்பதில் மகிழ்ச்சி...
புதியதொரு நாட்டிலிருந்து பதிவிட ஆரம்பித்திருக்கின்றேன். இப்போது நான் கட்டாரில் இருக்கின்றேன். முடிந்தவரை தொடர்ந்தும் வழமையான எனது பதிவுகள் உங்களை வந்து சேரும்.
தற்போதைக்கு தொடர்ந்து பதிவிட முடியாதபோதும் அடிக்கடி என் பதிவுகள் வந்துசேரும்.
நாட்டிலே இருந்து எழுத நினைத்தும் எழுத முடியாமல்போன பல விடயங்களையும் இன்னும் பல விடயங்களையும் பதிவிட நினைத்திருக்கின்றேன்.
குறிப்பாக வெளிநாட்டு வாழ்க்கையும் அதனோடு சார்ந்த பல விடயங்களும் அடிக்கடி வரும்.
நாட்டில் இருந்து பதிவிட்டபோது சில பதிவர்களோடு முரண்பட்டிருக்கின்றேன். கருத்துமோதல்கள் நட்புக்களையும் இல்லாமல் செய்திருக்கின்றது.
சிறு வயது முதல் அரசியலில் ஈடுபாடு அதிகம் அரசியல் சார்ந்து என் பதிவுகள் இருந்ததனால் பலர் முரண்பட்டிருக்கின்றனர். அரசியல் பதிவுகளில் இருந்து முற்றாக விலகி இருக்கலாம் என்று நினைத்திருக்கின்றேன்.
முடிந்தவரை நல்ல பதிவுகளோடு அடிக்கடி வருவேன்.
எது எப்படி இருப்பினும் நம் நாடு போல வருமா?...
4 comments: on "புலம் பெயர்ந்தும் உங்களோடு"
//////////நாட்டிலே இருந்து எழுத நினைத்தும் எழுத முடியாமல்போன பல விடயங்களையும் இன்னும் பல விடயங்களையும் பதிவிட நினைத்திருக்கின்றேன்.
/////////
எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறேன் நண்பரே . தங்களின் பணி சிறப்பாக அமைவதற்கு எனது வாழ்த்துக்கள்
ம்ம்ம்ம்... சுவர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல சுதந்திரம் வருமா? வருமா?
வாழ்த்துக்கள்..
பணி மாற்றமா? புதிய பதிவுகள் தொடருங்கள்.
Post a Comment