சில நாட்களாக என்னுள்ளே சில இனம் புரியாத கற்பனைகளும், கவலைகளும். இன்று நடப்பவைகளை எல்லாம் யோசித்து பார்க்கும்போது என்னடா உலகம் என்று எண்ணத் தோன்றுகின்றது. எழுத நினைப்பவை ஏராளம். ஆனால் எழுத முடியவில்லை. என் சுதந்திரம்தான் பர்றிக்கப்பட்டதென்றால். என் கருத்துச் சுதந்திரத்தையும் பறிக்க நினைப்பதா? ஏன் இந்த நாட்டில், இந்த உலகில் ஏன் பிறந்தோம் என்றே எண்ணத் தோன்றியது.
பல விடயங்கள் பதிவிட இருந்தாலும் மனம் இடம் கொடுக்காதபடியால். இணையத்திலே ஒரு சுற்று சுற்றிவந்தபோது நான் தேடிக்கொண்டிருந்த விடயங்களை கண்டுகொள்ளமுடிந்தது. அளவற்ற சந்தோசமடைந்தேன் அவற்றை உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன்.
என்னை அறிவிப்புத் துறைக்கு வருவதகு தூண்டுகோலாக இருந்தவரும், என்றும் நான் நேசிக்கின்ற, மறைந்தும் மறையாது மக்கள் மனங்களிலே இன்றும் நிலைத்திருக்கின்ற இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளராக இருந்து அறிவிப்புத் துறைக்கே பெருமை சேர்த்த மறைந்த அறிவிப்பாளர் கே.எஸ். ராஜா பற்றிய பல்வேறுபட்ட தகவல்களை அறிந்து கொள்ளமுடிந்தது அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.
ஒரு நல்ல ரசிகனே நல்ல அறிவிப்பாளனாக இருக்கமுடியும். நான் அறிவிப்பாளனாக இருந்தாலும் கூட நான் அறிவிப்பாளன் என்பதனை வெளிக்காட்ட விரும்புவதில்லை. நல்ல ரசிகன். நல்ல நிகழ்சிகளை படைக்கின்ற எந்த அறிவிப்பாளராக இருந்தாலும் அவர்களின் ரசிகனாகிவிடுவேன். அதனால் என்னை நிறையவே வளர்த்துக்கொள்ள முடிந்தது.
எனது சிறிய வயதுமுதல் வானொலியோடு கட்டிப்போட்டவர் கே.எஸ் .ராஜா அவர்கள். நான் பிறந்து வளர்ந்தது பின்தங்கிய ஒரு பிரதேசம் மின்சார வசதிகூட இல்லை (அங்கே இன்றும் மின்சார வசதி இல்லை நான் இப்போ வேறு இடத்தில் இருக்கிறேன் ) உலர் மின்கலம் மூலம் இயங்கும் வானொலியில்தான் நிகழ்சிகளைக் கேட்பதுண்டு.
சிறு வயதிலே நான் எப்போது வானொலியோடுதான் இருப்பேன் படிக்கும்போதும் பக்கத்திலே வானொலிப்பெட்டி இருக்கும் ( இன்றும் அப்படித்தான்) அன்று கே.எஸ் ராஜா அவர்களால் உமாவின் வினோதவேளை நிகழ்சியினை தொகுத்து வழங்கிய விதமும் அவரின் குரலும் என்றும் என்னுள்ளே ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
நான் மிகவும் சிறு வயதாக இருக்கும்போது அவர் அறிவிப்பாளராக இருந்ததனால் என்னால் அவரது நிகழ்சிகளை முற்று முழுதாக கேட்க முடியவில்லையே என்று கவலைப் படுவதுண்டு. இன்று அவர் எங்களோடு இருந்திருந்தால் நான் இன்னும் எவ்வளவோ வளந்திருப்பேன்.
அவரிடம் நாங்கள் நிறையவே படித்திருக்கலாம். அவர் நிகழ்சிகளை செய்கின்ற விதம், அவரது உச்சாகமான அறிவிப்பு, விளம்பரங்கள் வாசிக்கும் விதம் என்று எல்லாவற்றிலுமே அவருக்கென்று ஒரு தனி இடம் இருக்கின்றது.
இன்று தமிழை வளர்க்கின்றோம் என்று தமிழ் மொழியை கொலை செய்பவர்கள் அவரின் அறிவிப்புக்களை கேட்கவேண்டும்.
அவரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். நான் இன்று பல விடயங்களை இணையத்திலே அறிந்துகொள்ள முடிந்தது கே.எஸ்.ராஜா அவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் அவரால் செய்யப்பட்ட உமாவின் வினோதவேளை போட்டி நிகழ்சிகள், விளம்பரங்கள், அவரால் செய்யப்பட்ட இசை நிகழ்சிகள் என்று எல்லாமே ஒலி வடிவத்திலே இருக்கின்றது. அவற்ற்றை நீங்களும் கேட்டு மகிழலாம். தரவிறக்கிக் கொள்ளலாம்.
இன்று அந்த ஒலிவடிவங்களைக் கேட்கின்றபோது நேரடியாகவே கே.எஸ்.ராஜாவே என் முன்னால் நின்று பேசுவது போன்று ஒரு உணர்வும் சந்தோசமாகவும் இருந்தது.
1. கே.எஸ். ராஜாவால் செய்யப்பட்ட நிகழ்சிகள்
2.கே.எஸ்.ராஜாவின் விளம்பரங்கள்.
3.யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கே.ஜே. ஜேசுதாஸின் இசை நிகழ்சியினை கே.எஸ். ராஜா தமிழிலும் ஆங்கிலத்திலும் தொகுத்து வழங்கிய உச்சாகமான அறிவிப்பு நிறைந்த நிகழ்சியின் ஒலி வடிவம்
4.கே.எஸ்.ராஜா அவர்களுக்கு ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் வழங்கிய அஞ்சலி
இன்னும் பல்வேறுபட்ட விடயங்களையும் அறிந்துகொண்டேன் . கே.எஸ். ராஜாவைப் பற்றி நீங்களும் அறிந்து கொள்வதோடு அவரது குரல்களை மீண்டும் கேட்டு மகிழ இங்கே செல்லுங்கள்.
நன்றி: யாழ் சுதாகர்
4 comments: on "வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகில்"
நல்ல பகிர்வு!
1984 ல் கேட்ட குரல். இன்று கேட்க வாய்ப்பு அமைத்துக் கொடுத்த உங்களுக்கு நன்றி. ஆனால் அன்று வானொலியில்கேட்டதற்கும் இன்று இதன் மூலம் கேட்டதும் ரொம்பவே வித்யாசம்.
இவரைப்பற்றி முழுமையாக எழுதுங்களேன். நிறைய விசயங்கள்..... குறிப்பாக இவரின் இறுதிய மரண நிகழ்வுகள்.......
நல்லா இருக்குங்க .. நானும் அறிவிப்பாளர் ஆகணும்னு தான் ரொம்ப ரொம்ப ஆசையா இருக்கேன் .. ஆனா எப்ப நிறைவேறும் அப்படின்னுதான் தெரியல..!
நான் அவரின் ரசிகன் சந்ரு....முன்னமே சொல்லியிருக்கிறேன்...
Post a Comment