Thursday 25 March 2010

சாமியார்களும், மாமியார்களும்

இன்று போலி சாமியார்களின் லீலைகள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கின்றன. இவர்கள் கடவுளின் பெயரில் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்திக்கொண்டு வருகின்றனர்.

நான் பல தடவை மனிதக் கடவுளர்களை கடவுளாக மதிப்பதை மக்கள் நிறுத்த வேண்டும் மூட நம்பிக்கைகளை கைவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறேன். நாம் ஏன் மனிதர்களை வணங்க வேண்டும். இந்து சமயம்தான் சொல்கின்றது ஆதியும் அந்தமும் இல்லாதவன்தான் இறைவன் என்று அப்படி இருக்கும்போது மனிதனை நாம் ஏன் வணங்க வேண்டும் என்று மக்கள் சிந்திக்க வேண்டும்.

இன்று கடவுளை வணங்குபவர்களைவிட மனிதக் கடவுளர்களை வணங்குபவர்களின் தொகை அதிகமாகிக் கொண்டு வருகின்றது. இப்படியே போனால் எதிர் காலத்தில் உண்மையான கடவுளை எவருமே வணங்கமாட்டார்கள் போலாகிவிட்டது. 

போலி சாமியார்களின் சுத்துமாத்துக்கள், லீலைகள் காரணமாக இன்று மக்கள் மத்தியிலே கடவுள் மீது இருக்கின்ற நம்பிக்கை இல்லாமல் போகின்றது. இந்து சமயத்தைப் பொறுத்தவரை மனித கடவுள்கள் (சாமியார்கள்) தேவை இல்லை இந்து சமயம் மக்களை நல்வழிப் படுத்துகின்றது.

நாம் மனிதர்களை ஏன் கடவுளாக வணங்க வேண்டும். இவர்கள் கடவுளை மீறிய ஒரு சக்தியா இல்லையே. மக்கள் சிந்திக்க வேண்டும். இந்து சமயம் சார்ந்த அமைப்புக்கள் இதிலே தலையிட வேண்டும். இந்து சமயத்தைப் பொறுத்தவரை மனிதக் கடவுளர்கள் தேவை இல்லை.

இந்த ஆசாமிகளின் மந்திர மாய, தந்திர காம லீலைகளில் நடிகைகள், பிரபலங்கள் மட்டுமல்ல சாதாரண மக்களும் வசப்படுத்தப்படுகின்றனர். ஆனால் சாதாரண மக்கள் பற்றிய தகவல்கள் வெளிவருவதில்லை.


இந்த ஆசாமிகளின் மாய வலையில் பல மக்கள் சிக்கித்தவிக்கின்றனர் என்பதுதான் உண்மை. இந்த ஆசாமிகளிளிருந்து மக்களை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் அத்தனை சாமியார்களும் ஒழித்துக்கட்டப்பட வேண்டும் இவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் இல்லை.

இந்து அமைப்புக்கள் இதிலே கவனம் செலுத்த வேண்டும். ஒன்று மட்டும் கேட்கின்றேன் இந்து அமைப்புக்களிடம் நான் சாமியாராக வேண்டும் என்றால் எனக்கு என்ன தகுதி இருக்க வேண்டும்? நானும் சாமியாராகப் போகிறேன்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

3 comments: on "சாமியார்களும், மாமியார்களும்"

Menaga Sathia said...

//இந்து அமைப்புக்கள் இதிலே கவனம் செலுத்த வேண்டும். ஒன்று மட்டும் கேட்கின்றேன் இந்து அமைப்புக்களிடம் நான் சாமியாராக வேண்டும் என்றால் எனக்கு என்ன தகுதி இருக்க வேண்டும்? நானும் சாமியாராகப் போகிறேன். // ஹி.. ஹி.. ஏன் வாழ்க்கை அதுக்குள்ள போரடித்துவிட்டதா..சாமியாராகமல் இருப்பதே நல்லதகுதி தான்.....

Atchuthan Srirangan said...

கடவுளின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் சமூக விரோதிகளை ஓரம் கட்ட வேண்டும்.

ஆனால், இது ஒரு முடியாத கரியம். ஏன் என்றால் ஏமாறுபவார்கள் இருக்கும்வரைக்கும் இதனை ஒழிக்க முடியாது.....

ஏமாறுபவார்கள் இருக்கும்வரைக்கும் ஏமாற்றுபவார்களும் இருப்பார்கள்.

Anonymous said...

//இந்து அமைப்புக்களிடம் நான் சாமியாராக வேண்டும் என்றால் எனக்கு என்ன தகுதி இருக்க வேண்டும்? நானும் சாமியாராகப் போகிறேன்//


இப்பதானே உங்கள் உண்மை நிலை புரிகிறது..
ஆசை யாரை விட்டது??
சந்துரு சுவாமிக்கு மங்களம்......

Post a Comment