Sunday, 15 January 2012

சிவசேனா கட்சியினர் உலகப் பயங்கரவாதிகளா?

அண்மையில்   கேரளா நாட்டின் திருவானந்தபுரம் பத்மநாபா சுவாமி கோயில் முன்றலில் ஆரம்பித்த சமாதான யாத்திரையானது 69 கிலோ மீற்றர் தூரம் வரை சென்றது. இவ்விடயம் தொடர்பா சில இணையத்தளங்களில் ஆசாமி யோகேஸ்வரன் சிவசேனா பயங்கரவாதிகளுடன் கூட்டணி எனும் தலைப்பில் செய்திகள் வெளியாகி இருந்தன. எனக்கும் மின்னஞ்சல் வந்திருந்தது அதனை அப்படியே தருகின்றேன். 


கேரளா நாட்டு மாநில சிவசேனை அமைப்பின் தலைவர் பூஜ்ஜியம் புவனேந்திரா ஜு அவர்களும் தமிழ் நாட்டு மாநில சிவசேனை அமைப்பு தலைவர் உயர் நீதிமன்ற சட்டத்தரணி எஸ்.இராஜேஸ்வரன் அவர்களும் இணைந்து இரு மாநிலங்களின் சிவசேனை அமைப்புக்களை ஒன்றிணைத்து கேரளா நாட்டின் திருவானந்தபுரம் பத்மநாபா சுவாமி கோயில் முன்றலில் ஆரம்பித்த சமாதான யாத்திரையானது 69 கிலோ மீற்றர் தூரம் வரை சென்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தலைமை தாங்கிய உலக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அரசியல் பிரதிநிதியும் கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் மட்டக்களப்பு மாவட்;ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டு காவிக் கொடியை அசைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன் தொடர்ந்து இரு மாநிலங்களிலும் வழங்கப்பட்ட வரவேற்புகளை ஏற்று சமாதான யாத்திரை முடியும் வரை விஜயத்தை மேற்கொண்டார்.

இவ் நிகழ்வில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கேரளா தமிழ் நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் இருந்து கலந்து கொண்டதுடன் ஆயிரக் கணக்கான வாகனங்களும் தொடரணியாக சென்றன 

இந்தியாவில் இடம் பெறும் அனைத்து இந்து முஸ்லிம் கலவரங்களின் சூத்திரதரிகளான  விஷ்வ ஹிந்து பரிஷத் ,சிவசேனை அமைப்புக்கள் திராவிட எதிர்ப்பிலும் முன்னணி வகிப்பன. இந்தியாவை ஆக்கிரமித்த ஆரியர்களின் அரசியல் வாரிசுகளான இவர்கள் இந்தியாவிலுள்ள திராவிடர்களின் முதல் எதிரிகளாவர்.இந்து சமயம் என்கின்ற போர்வையில் இந்தியாவின் பூர்வீக குடிகளை அடிமைகளாக்கி சாதி பிரிவினைகளை உருவாக்கிய ஆரியர்களின் இன்றயதொடர்ச்சியே இந்த சிவசேனை கூட்டமாகும் .மகாத்மா காந்தியை சுட்ட இந்த சிவசேனை கூட்டத்தினர் பல வருடங்களாக இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தனர் இந்தியாவின் பல்லின கலாசாரத்தை ஏற்றுக்கொள்ளாத இந்த இந்துத்துவவாதிகள் இந்து மதம் எனும் போர்வையில்  இந்தியாவிலுள்ள பலவித வழிபட்டு முறைகளையும் உட்கொண்டு செரித்தவர்கள் 

.பாம்பையும்,பார்ப்பானையும்கண்டால் பார்ப்பனை முதலின் அடி என்று உரத்து சொன்ன தந்தை பெரியார் இவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் .அந்த பெரியாரின் அரசியல் ,கலக  செயல்பாடுகள் நிறைந்திருந்தமை காரணமாகவே இன்றுவரை இந்த இந்துத்துவ பயங்கரவாதிகளால் தமிழ் நாட்டில் கால் ஊன்ற முடியவில்லை ஆயிரம் விமர்சனங்கள் இருந்த போதும் தமிழ் நாட்டை மாறி மாறி திராவிட கட்சிகளே ஆண்டு வர முடிகின்றது.தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக இரண்டற கலந்து வள முடிகின்றது .இந்தியாவில் இருக்கின்ற எந்த ஒரு அரசியல் முற்போக்கு சக்திகளும் இந்த  விஷ்வ ஹிந்து பரிஷத் ,சிவசேனை அமைப்புகளுடன் ஒட்டி உறவடுவதில்லை உழைக்கும் மக்களுக்காக போராடும் எந்த ஒரு இடது சாரி கட்சிகளோ கம்யுனிஸவாதிகளோ இவர்கள் பக்கமே செல்வதில்லை .ஏன்அதிகம் வேண்டாம் புலிகளின் விசுவாசிகளான நெடுமாறனோ வீரமணியோ திருமாவளவனோ  விடுதலை இராசெந்திரனோ ,தியாகுவோ இவர்களில் ஒருவர்கூட இந்த இந்து பாசிச கும்பலின் பக்கம் தலை வைத்தே படுப்பதில்லை .இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இடம்பெறும் தேசிய இன போராட்ட அமைப்புக்களோ .தலித் போராளிகளோ இந்த விஷ்வ ஹிந்து பரிஷத் ,சிவசேனை கும்பலை எதிரிகளாகவே கணிப்பதுண்டு .ஆனால்அரசியலில் வலதோ இடதோ ஏதும் அறியாத தற்குறி பிரபாகரனால் வளர்க்கப்பட்ட கூட்டமைப்பினர் இன்று விஷ்வ ஹிந்து பரிஷத் கும்பலுடன் உறவு தேடி ஆசாமி யோகேஸ்வரனை தூது அனுப்பியுள்ளனர் 

.கிழக்கு மாகாணத்தில் மீண்டும் ஒரு முறை இனகலவரங்களை துண்டி விடும் ஆலோசனைகளும் பொருளாதார உதவிகளும் கூட இந்த இந்து பார்ப்பனிய பாசிச கும்பலால் யோகேஸ்வரன் எம்பி ஊடாக கூட்டமைப்பினருக்கு  வழங்கபடலாம்.
கு .சாமித்தம்பி 

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

6 comments: on "சிவசேனா கட்சியினர் உலகப் பயங்கரவாதிகளா?"

Rocket Tamil said...

உலக இந்துக்களுக்கு அவமதிப்பை தேடித்தந்த சிவசேன கட்சியுடன் கூட்டுச்சேர்வது அவளவு நல்லதெல்ல ஏற்கனவே மதவாத பிடியாக இருக்கும் கிழக்கு முஸ்லிம்களைப்போல் தமிழ் மக்களையும் உருவாக்க இது வழிவகுக்கும்.

எனவே தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்றால் மதங்களை நேசிக்கமுன் மனிதர்களை நேசிக்க வேண்டும்.

காட்டான் said...

ஏன் சந்துரு வடக்கை விட கிழக்கில் இந்துத்துவா கட்சிகளுக்கு ஆதரவு கூட இருக்கின்றது.? இது பிரதேச வாதமல்ல நான் அறிய வேண்டி கேட்கிறேன்.. அத்தோடு சிவசேனா ஒரு காலத்தில் மும்பையில் தமிழர்களுக்கு எதிராக இருந்த கட்சி என்றல்லவா கேள்விபட்டேன்? விளக்கம் தருவீங்களா?

Admin said...

கருத்துக்களுக்கு நன்றிகள் நண்பா. மனிதர்களை நேசிக்காத மதவாதிகள் எதற்கு என்பதுதான் என் கருத்தும்

Admin said...

என்னுள்ளும் சில கேள்விகள் எழுவதுண்டு அவற்றை வெளிப்படுத்த பயம். பிரதேச வாதம் என்பார்கள் எங்களுக்குள் எழுகின்ற சந்தேகங்களை தீர்ப்பதில் என்ன தவறிருக்கின்றது. நான் நினைப்பதுண்டு பிரதேசவாதம் எனும் சொல்லை தமிழ் மொழியிலிருந்து நீக்க வேண்டுமென்று.

சிவசேனா கட்சியை எனக்குப் பிடிக்காது. அவர்களின் கொள்கைகள் பிடிக்காது. ஒருவர் தன் மதத்தின்மீது பற்றுள்ளவனாக இருக்க வேண்டும் .அதற்காக மதம் பிடித்தவனாக இருக்கக்கூடாது. மனிதனை மனிதனாக மதிக்கத் தெரியாத மதவாதிகள் எதற்கு? உண்மையாகவே சொல்கின்றேன் கிழக்கு மக்களை இலகுவாக ஏமாற்றிவிட முடியும். அதிலும் மதத்தின் பெயரால் நன்றாகவே ஏமாற்ற முடியும்.

கிழக்கிலே இருக்கின்ற சிலர் மதத்தின் பெயரால் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர். மதத்தைச் சொல்லி பல விடயங்களை சாதித்து வருகின்றனர். கிழக்கில் இருக்கின்ற மதவாதிகள் சிவசேனா போன்ற இந்துத்துவா கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து மக்களை ஏமாற்றி வருவதுதான் நிஜம்.

காட்டான் said...

விளக்கத்துக்கு நன்றி சந்துரு..!!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்;!!!

சிராஜ் said...
This comment has been removed by the author.
Post a Comment