Monday, 23 January 2012

கிழக்கு மாகாண முதலமைச்சர் சம்பந்தனுக்கு எதற்காக கடிதம் அனுப்பினார்

தமிழ் தேசியத்தையும் தமிழ் மக்களையும் சிங்களத்திடம் விற்றவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனுமதிக்கக் கூடாது!- கிழக்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் வேண்டுகோள் எனும் தலைப்பில் தமிழ்வின் இணையத்தளத்தில் செய்தி ஒன்று வெளியாகி இருக்கின்றது. இச் செய்தியில் குறிப்பிடப்படுகின்ற விடயங்கள் உண்மைக்குப் புறம்பான விடயமாக இருக்கின்றது.

கிழக்கு வெகுஜன அமைப்பு என்று ஒன்று இருக்கின்றதா? அப்படி ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி ஒரு அமைப்பு இருந்தால் அவர்கள் யார்? கடந்த 01.01.2012 அன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்களினால் இரா சம்பந்தன் அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கின்றது. சம்பந்தனால் முதலமைச்சருக்கு இதுவரை எந்த பதிலும் அனுப்பப்படவில்லை. ஆனால் அக் கடிதம் தொடர்பில் கிழக்கு வெகுஜன ஒன்றியம் அறிக்கை வெளியிட்டிருக்கின்றது. 

கிழக்கு வெகுஜன ஒன்றியம் யார்? சம்பந்தன் அவர்களுக்கு முதலமைச்சர் அனுப்பிய கடிதத்திற்கு வெகுஜன ஒன்றியம் அறிக்கை விட்டிருக்கின்றது. இரா. சம்பந்தனும் கிழக்கு வெகுஜன ஒன்றியமும் ஒன்றா? முதலமைச்சர் அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கின்ற விடயங்களை திரிவுபடுத்தி அவர்களின் அறிக்கை அமைந்திருக்கின்றன. 

மக்களின் ஆதரவு கூட்டமைப்புக்குத்தான் இருக்கின்றது என்பதனை உணர்ந்த முதலமைச்சர் அக் கடிதத்தில் தான் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது. உண்மையில் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் கடிதத்தின் பிரதியுடன் வெளியிட்டிருக்க வேண்டும்.

அக் கடிதத்தில் அரசுக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்புக்களின்போது வடக்கு கிழக்கு இணைப்பு தவிர்ந்த பொலிஸ் காணி விடயங்கள் பற்றி பேசுகின்றபோது தமிழ் மக்களின் நலனுக்காக செயற்படும் கட்சி என்ற ரீதியில் ஆதரவு வழங்குவதாகவும். குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் முதலமைச்சர் பதவியினை பொறுப்பேற்ற நாள் முதல் மாகாண சபைக்கு பொலில் காணி அதிகாரங்கள் வேண்டும் என்று கேட்டுவருகின்றார். ஒருபோதும் பொலிஸ் காணி அதிகாரங்களை மாகாணசபைக்கு வழங்கக்கூடாது என்று சொல்லவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழீழம் தான் தமது இறுதி தீர்வு என்று இருந்தவர்கள் இன்று அரசுடன் மாகாணசபை பொலிஸ் காணி அதிகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் நிலைக்கு வந்திருக்கின்றனர். முதலமைச்சர் அவர்கள் வடக்கு கிழக்கு தவிர்ந்த மாகாணசபை முறமை மற்றும் மாகாணசபைக்கான பொலிஸ் காணி அதிகாரங்கள் தொடர்பில் ஆரம்பம்முதலே பேசி வருகின்றார்.

தமது மக்கள் சார்ந்த மக்களின் நலன்சார்ந்த எந்தவொரு விடயமாக இருந்தாலும் கட்சி வேறுபாடுகளை மறந்து அதற்கு ஆதரவு வழங்க வேண்டியது மக்களின் நலனின் அக்கறையுள்ள தலைவரின் பொறுப்பாகும். அரசு - கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் எதிர்காலத்தில் பொலிஸ் காணி அதிகாரங்கள் பற்றியும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இவ் வேளையில் பொலிஸ் காணி அதிகாரங்கள் தொடர்பில் ஆதரவு வழங்குவதாக கடிதம் அனுப்பும் பொழுது அதனை தவறாக திரிவுபடுத்தி செய்தி வெளியிடப்பட்டிருப்பது வருந்தத்தக்க விடயம். 

இன்று மாகாணசபை முறமை மூலம் கிழக்கு மாகாணம் துரிதமாக வளசர்ச்சி அடைந்து வருவதை எவராலும் மறுக்க முடியாது. 

முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்கள் இரா. சம்பந்தன் அவர்களுக்கு அனுப்பிய கடிதம் இதோ...



Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "கிழக்கு மாகாண முதலமைச்சர் சம்பந்தனுக்கு எதற்காக கடிதம் அனுப்பினார்"

Post a Comment