Tuesday 30 October 2012

கேதார கௌரிவிரதப் பாடல்கள்


விரதங்களிலே சிறப்புமிக்க விரதம் கேதார கௌரி விரதமாகும். இக் கேதார கௌரி விரதத்தினைப் பற்றிய பாடல்கள் மிக மிகக் குறைவு. அதனைக் கருத்தில் கொண்டு என்னால் வெளியிடப்பட்ட கேதார விரதத்தின் மகிமைகளைக் கூறுகின்ற பாடல்களை உங்களுக்காகத் தருகின்றேன்.

அதற்கு முன்னர் கௌரி விரதக் காலங்களில் காலையில் எனது பாடல்களை ஒவ்வொரு வருடமும் ஒலிபரப்பிவரும் சூரியன் FM க்கு நன்றிகள். இப்பொழுதும் ஒவ்வொரு நாளும் காலையில் ஒலிபரப்புகின்றனர்.

பதிவிறக்கங்கள்...

பாடல் 5 

இப்பாடல்கள் தினமும் காலையில் சூரியன் FM ல் ஒலிபரப்பாகின்றன
read more...

Thursday 25 October 2012

கேதார கௌரி விரதத்தின் மகிமை கூறும் பாடல்களை பதிவிறக்கிக்கொள்ளலாம்.


இந்துக்களின் விரதங்களிலே சிறப்பான இடத்தினைப் பெறும் விரதங்களில் ஒன்றான கேதார கெளரி விரதத்தின் மகிமையினை கூறும் இறுவட்டு ஒன்றினை எமது கலைஞர்களின் பங்களிப்போடு வெளியிட்டு இருந்தேன்.
பாடல்கள் நல்ல வரவேற்பினைப் பெற்றிருந்தன. அப்பாடல்கள் நீங்களும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

கதைச் சுருக்கம்
திருக்கைலாச மலையிலே பரமசிவன், பார்வதி சமேதராக வீற்றிருந்த வேளையிலே. தேவர்களும், முனிவர்களும் அங்கு சென்று இருவரையும் சுற்றி வந்து வணங்கினர். அந்த வேளையிலே அங்கு வந்த பிரிங்கி முனிவர விகடக் கூத்தொன்றை ஆடி அங்கிருந்தவர்களை மகிழ்ச்சி அடையச் செய்த பின்னர். உமாதேவியை விலக்கி விட்டு சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வணங்கினர். உமாதேவியை அலட்சியம் செய்த முனிவரின் உடலிலிருந்த சக்தியை உமாதேவி எடுத்துக் கொண்டதனால் பிரிங்கி முனிவர் சபையிலே சோர்ந்து வீழ்ந்தார்.

சிவபெருமான் பிருங்கி முனிவரிடம் தடி ஒன்றைக் கொடுத்து அதனை ஊன்று கோலாகக் கொண்டு நடந்து செல்வதற்கு அனுக்கிரகம் செய்தார். இதனால் ஆத்திரமும் அவதானமும் அடைந்த உமாதேவி சிவபெருமானிடம் கோபித்துக் கொண்டு பூவுலகுக்கு வந்தார்.

ஒரு வில்வ மரத்தடியில் உமாதேவி வீற்றிருந்தார். உமாதேவியின் வருகையால் அந்த வனம் புதுப்பொலிவு பெற்றது. அந்த வனத்திலே வசித்த கௌதம முனிவர் திடிரென ஏற்பட்ட மாற்றத்துக்கான மாற்றத்துக்கான காரணத்தை அறிய முற்பட்டபோது. உமாதேவியைக் கண்டு நடந்த சங்கதிகளை அறிந்து கொண்டார்.

புரட்டாதி மாதம் சுக்கில பட்ச தசமி தொடக்கி இப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் தீபாவளி அமாவாசை வரையுள்ள கேதரேசுரர் விரத மகிமை பற்றியும் அதனை அனுஷ்டிக்கும் முறைமை பற்றியும் விளக்கமாகக் கூற அம்மை விரதம் நோற்று அர்த்தநாரீஸ்வரர் வடிவமாகினார்.
பதிவிறக்கங்கள்...
read more...

Thursday 4 October 2012

மதச் சண்டை போடும் மதம் பிடித்தவர்களே சண்டையை நிறுத்துங்கள்


இது என்னுடைய 500வது பதிவு

மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் வலைப்பதிவுகளை கடந்த 10 நாட்களாக வலம் வந்தேன். பதிவுலகத்தில் என்ன நடக்கின்றது என்பதனை அறிந்துவிட்டத்தான் எனது 500 வது பதிவை எழுதவேண்டும் என்ற எண்ணத்தில் 10 நாட்களும் பதிவுலகை வலம் வந்தேன். நீண்ட நாட்களாக அரசியல் தவிர்ந்த ஏனைய பதிவுகளை எழுதவில்லை என்பதனால் நிறைய விடயங்களை எழுதவேண்டும் எதனை எழுதுவது என்ற திண்டாட்டமும் இருந்தது.

வலைப்பதிவுகளைப் பார்க்கின்றபோது எனக்குள் நானே சிரித்துக் கொண்டேன். மதச் சண்டைகள் ஓய்ந்தபாடில்லை மதத்துக்காகச் சண்டை மதச்சண்டை நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது.. இதில் வேடிக்கை என்னவென்றால் அன்று கிழக்கிலே தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம்களால் மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகள் பற்றியும் தமிழ் பெண்களை முஜஸ்லிம் இளைஞர்கள் காம இச்சைகளை தீர்த்துக் கொள்ள பயன்படுத்துவது தொடர்பாகவும் ஆதாரங்களுடன் எழுதியிருந்தேன் அவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிராக நான் எழுதியதற்கு முதன் முதலில் போர்க்கொடி து+க்கியவர்களே இன்று இஸ்லாமிய மதத் தீவிரவாதிகளுக்கு  எதிராக மதச் சண்டை செய்கின்றனர்.

மதங்கள் புனிதமானவைவதான் ஆனால் சில மத வெறியர்கள் மதத்தைவைத்து மதவெறி பிடித்து அலைகின்றனர் என்பதே உண்மை. 

இதில் இஸ்லாம் மட்டுமல்ல அனைத்து மதத்திலும் மதவாதிகள் இருக்கின்றனர். ஆனாலும் இஸ்லாத்தில் மத தீவிரவாதிகள் அதிகம் என்றுதான் என்னுள் தோன்றுகின்றது. அமேரிக்காவில் இஸ்லாத்திற்கு எதிராக ஒரு திரைப்படம் வெளியிடப்படுகின்றது என்றால். எதற்காக இலங்கையில் வீதியால் செல்லும் வாகனங்களுக்கு கல்லெறிய வேண்டும். ஒருவருக்கு மத சுதந்திரம் இருக்கலாம் ஆனால் அது இன்னொருவரின் மூக்கில் கை வைக்கும் அளவிற்கு இருக்கக்கூடாது.

வலைப்பதிவில் எழுதுவதற்கு எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன அவற்றை எழுதலாம் வெறுமனே மத வெறியர்கள் போல் சண்டை பிடிப்பதை விட்டுவிடுங்கள். ஒருசிலர் மதத்தை வைத்து வலைப்பதிவில் சண்டை பிடிப்பது நல்ல விடயமல்ல. பல இணையத்தளங்கள் மதம் சார்ந்து எழுதுகின்றன அவை இவ்வாறு சண்டை பிடிப்பதாகத் தெரியவில்லை. ஒருசில இஸ்லாமிய நண்பர்கள் இஸ்லாமிய மதம் சார்ந்து எழுதுகின்றோம் என்று ஏனைய மதங்களையும் சாடுவது தவறானது. 

இந்து மதம் பற்றி பலர் எழுதுகின்றனர் அவர்கள் இஸ்லாத்தை சாடுகிறார்களா? இல்லையே. நான் இந்து மதத்தை அதிகம் நெசிப்பவன் என்னாலும் இந்து மதத்தை முன்னிலைப்படுத்தி ஏனைய மதங்களை சாடி எழுத முடியும் ஆனாலும் ஏனைய மதங்களையும் நேசிக்கின்றேன். 

மதத்தை வைத்து வலைப்பதிவுலகில் சண்டை பிடிப்பவர்கள் மதச் சண்டைகளை நிறுத்துங்கள் 
read more...