Friday 31 July 2009

தமிழ் மொழி தமிழ் மொழியாகவே இருக்கிறதா...

ஊடகங்களில் தமிழ் கொலை செய்யப் படுகிறதா.. , மற்றும் தமிழ் மொழியை வளர்ப்பது யார்? தமிழ் மொழியை கொலை செய்வது யார்?.. எனும் இரு இடுகைகள் மூலமாகவும் பல காத்திரமான கருத்துக்கள் வந்திருந்தன. அந்த இரு இடுகைகளின் பின்னூட்டங்களிலே என்னிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்கவேண்டியவனாக இருக்கின்றேன். பின்னூட்டத்திலே எனது விளக்கங்களை வழங்கினால் எல்லோரையும் சென்றடையாமலும் விடலாம் என்பதனால் அதன் தொடர் பதிவாகவே இந்தப் பதிவும் அமைகின்றது.

எனது வலையுலக நண்பர் ஜெகநாதன் நீண்டதொரு பின்னூட்டத்தினை வழங்கி இருந்ததோடு பல கேள்விகளையும் கேட்டு இருந்தார். அவரது கேள்விகளுக்கு பதிலளிக்கமுன்னர் அவரது பின்னூட்டத்தினை தருகிறேன்.


ஜெகநாதன் கூறியது...
அன்பு சந்ரு,சீரிய முயற்சி. வாழ்த்துக்கள்! நான் நினைப்பது,

1. மொழி மற்ற மொழிகளோடு இணக்கமாக இருப்பது அதன் வளர்ச்சியைக் குறிக்கும்

2. பேச்சுத் தமிழில் மொழிக்கலப்பை பாவேந்தர் பாரதிதாசன் ஆதரித்திருக்கிறார்!!

3. இலத்திரனியல் என்றால் என்ன? இந்த வார்த்தையின் வயது என்ன? இந்தமாதிரி அருஞ்சொற்பொருள்களின் அகராதி எங்கு கிடைக்கும்? இணையத்தில் ஓசியில் கிடைக்குமா? (​மெர்ஸலாகிறது-க்கு இணையத்தில விளக்கம், அர்த்தம் கிடைக்குது)

3.5. தங்கள் கருத்துக்கு மாற்றாகவோ, இல்லை மனதைப் புண்படுத்துவதாகவோ இருப்பின் இதற்கு மேல் படிக்காதீங்க! எனக்கு மொழித் தூய்மையை விட சந்ருவின் அன்புதான் முக்கியம்.

4. //மொழி கலப்பதை தடுப்பதிலும், தமிழ் மொழியை வளர்ப்பதிலும் ஊடகங்களின் பங்கு அளப்பெரியது// ​நல்ல கருத்து. ஆனால், ஊடகம் இந்த அளவுகோலில் செயல்பட்டால் ​மொழியறிவு இருக்கும் தொழிலறிவு வளராது. (flightக்கு தமிழ் வார்த்தை இருக்கு, cockpit, fins, rudder, propeller. kinetic velocity, aerofoil, போன்ற தொழில் நுட்பங்களுக்கு புதுசாத்தான் உருவாக்கணும் - அதிலேயும் ஒரே அர்த்ததுக்கு பல பிரயோகங்கள் வர வாய்ப்புள்ளது) ஊடகங்கள் என்பதைவிட கல்விமுறை என்பதே மொழிச்செழுமைக்கு முக்கியமானது ​

5. யெஸ். மொழிப்பாதுகாப்பு என்று யாரும் மந்திரித்துவிட்டால், நம்பிடாதீங்க சந்ரு. மொழி யாராலும் பாதுகாக்கபட வேண்டியதில்லை. ​செழுமைப்படுத்தப்பட வேண்டியது.

5.1. ஸாரி. எனக்கு அவ்வளவா சுத்தத் தமிழ்ல எழுதத் தெரியாது - வராது..2. இதுமாதிரியான தமிழ்ல எழுதுனா படிக்கிறது ஈஸியா இருக்கும்னு நினைக்கிறேன்

5.3. ஒரு வார்த்தைய கொடுத்து இது அக்மார்க் தமிழ் வார்த்தைதான் தரப்பரிசோதனை ​செய்யவும் தெரியாது.

5.4. சந்திப்பிழைகளை(ச்?)) சந்திக்கிறேன் - இதுக்கும் இணையத்தில தேடுறேன் - தெரிந்தால் சொல்லவும்

5.5. சீரியஸ் இடுகையில லந்து பண்றான்னு நினைக்காதீங்க,

இப்பவும் சந்ருவின் அன்புதான் முக்கியம்னு சொல்லிக்கிறேன்.. ​தொடரப் போறீங்களா!!?(.....)(இங்கு பின்னூட்டம் ​போடாமல் இதன் முந்திய இடுகையில் போட்டுவிட்டேன்)
July 30, 2009 11:09 அம

ஜெகநாதன் கூறியது...



6. மொழிப்​பெயர்ப்புகளால கூட மொழி​செழுமையாகும்னு நினைக்கிறேன். என்னை தமிழிலில் ஆர்வமா இலக்கியத்தைப் படிக்கத் தூண்டியது, காமிக்ஸ் புத்தகங்கள் அப்புறம் ரஷ்ய இலக்கியங்கள்.

6.5 காமிக்ஸ்ல டெக்ஸ்வில்லர், ஹுப்ஹுப்ஹீரே, நவ்ஜோ, பிஸ்டல் பின் ரஷ்ய இலக்கியத்தில வர்ற கெழாக்குகள், வோட்கா, இனியாக்​போன்ற பதங்களும் ​பொருள்களும் பிற​மொழிக்கலப்புதானே? ஆனா இதை தவிர்த்து இந்த இலக்கியத்தை அணுக சாத்தியமான்னு தெரியலே.

7. ​மொழிக்கலப்புன்னா ஏன் இங்கிலீஷை மட்டும் நினைக்கிறோம்? சாவி (திறவுகோல்தான்) ஒரு டச்சு வார்த்தைன்னு கேள்விப்பட்டிருக்கேன்

8. நான் பொறியியல்... வேணாம் மெக்கானிக்கல் இன்ஜினீரிங் படிச்சிருக்கேன். இன்னும் ​மேற்படிப்பெல்லாம் படிக்க வேண்டியிருக்கு. முனைவர் பட்டம் வரைக்கும் கூட ​போகலாம்! இதுவரைக்கும் டிப்ளமோ தாண்டி தமிழ் பாடபுத்தகத்தில வந்ததில்ல (அந்த தமிழுக்கு இங்கிலீஷையே படிச்சுக்கலாம்) இந்த மாதிரி டெக்னிக்கல் படிப்புக்கு நான் இங்கிலீஷைதான் கட்டிண்டு அழணும். அப்படி தமிழ்ல இன்ஜினியரிங் பி. ஹெச்டி பண்ண வழியிருக்கா சொல்லுங்க?

8.1. எனக்கு(ம்) ழ,ல,ள உச்சரிப்பெல்லாம் சுத்தமா வராது. ​

8.2. ல - பிரச்சினையில்ல
8.3. குவாட்டர் மாதிரி அடிச்சிருந்தேன்னா ழ நழ்ழாவே
.4. ள - யாராச்சும் பாடம் எடுத்தா உண்டு
8.5. எழுதும் போது எந்த பிரச்சினையும் இல்லை
9. நான் உன்னைய இங்கிலீஷ் படிக்க வேணாம்னு சொல்லலியேன்னு கேக்கறீங்கதானே? இப்படி பிற​மொழியில் பலவருஷம் படிச்சு, கேட்டு, எழுதிக்கிட்டு இருந்தா அந்த மொழி​யோட தாக்கம் தாய்மொழியிலும் வரத்தானே செய்யும்? இங்க யார அல்லது எத குத்தம் சொல்றது?
July 30, 2009 11:09

ஜெகநாதன் கூறியது...
10. மொழி​பெயர்க்கிறவங்க ஏன் தொழில்நுட்பம் பக்கம் அதிக கவனம் எடுக்கிறதில்ல? நான் ஒரேயொரு ரஷ்ய மொழிப்​பெயர்ப்பு அறிவியல் புத்தகம் படிச்சிருக்கேன் (ரிலேட்டிவிட்டி பத்தி லெந்தாவு எழுதினது)

10.1. இந்த மொழிப் பெயர்ப்பு ஆளுகளுக்கு ஒரு ஆணியக் கூட சுத்தியல் வச்சு அடிக்கத் ​தெரியாது. அப்புறம் எப்படி டெக்னிகல் பக்கம் வருவாங்க?

10.2. அதுக்கு தொழில்நுட்ப வல்லுநர்கள், மொழியியல் ஆய்வாளர்கள் என ஒரு sync up ​வேணும். எப்ப / எப்படி சாத்தியப்படும்னு தெரியலே (நடந்திருந்தால் தெரியப்படுத்துக)

10.3. சைனாக்காரங்க நல்ல​வேளையா இங்கிலீஷ் இப்பத்தான் ஒழுங்கா கத்து, வாய் வழியா பேச டிரை பண்றாங்க. இத ஒரு நூற்றாண்டு முன்னாடியே செஞ்சிருந்தாங்கன்னா, ITல அவங்க நம்பர்.1 ஆயிருப்பாங்க. கம்ப்யூட்டர் இந்தியாவில இப்படிப் பரவியிருக்காது. நம்ம கருத்துக்களை போற​போக்கில இடுகையா போட சான்ஸே இருந்திருக்காது. வேணா எழுதி ஏதாவது பத்திரிக்கைக்கு போஸ்ட் பண்ணிட்டு நகத்தை கடிச்சிட்டு உக்காந்திருக்கலாம்.

10.4. பிற​மொழிக்கலப்பில்லாம எழுதறதும் பேசறதும் ஒரு வித்தையா எடுத்துச் செய்ய ஆரம்பிச்சவங்க நிறைய பேரு இலக்கியத்தில காணாம போயிருக்காங்க (பேரெல்லாம் தெரியாது - அந்தளவுக்கு காணாம போயிருக்காங்க..!)

10.5. எப்படிச் சொல்றேன்னா, வாசகனுக்கு இணக்கமான நடையில எழுதறவங்கதான் நிலைத்து நிற்கிறார்கள் (சுஜாதா எனக்குத் தெரிஞ்சு ஒரு ஆங்கில வார்த்தை கூட இல்லாமா ஒரு கதை எழுதியிருக்காரு, என்ன பேரு சொல்லுங்க பாப்பம்? கி.ரா எழுத்து அப்படியே வட்டாரம் + பிற மொழிக்கலப்பு இருக்கு.. ஆனா இதைத் தவிர்த்திட்டு அந்த இலக்கியத்தை எழுத முடியுமா?)

10.6. மொழி​ஒரு சாதனம். நல்ல இலக்கியம்தான் ஒரு மொழியை மேம்படுத்தும்.
10.6.1. தயவுசெஞ்சு வரிஞ்சு கட்டிக்கிட்டு சண்டைக்கு வராதீங்க - ஏன்னா என் கருத்து சுதந்திரம் இந்த பயத்தாலேயே பாதிக்கப்படுது (அ) பாதி செத்திடுது!

10.7. ஒரு வார்த்தையோட மூலம் என்னன்னு தேடிக்கிட்டு போனா.. வரலாறு, கல்வெட்டு, ​போர்-படையெடுப்பு, பிராகிருதி மொழி, பாலி, சமஸ்கிருதம், சரஸ்வதி ஆறுன்னு தாறுமாறா ஓடி எங்கியோ போயி நிக்க வேண்டியதா போயிடும்

10.8. ஆவணம், படிப்பு, ஆய்வு, சுயஅர்ப்பணிப்பு, தீவிரம், களப்பணி, பல்துறை அறிவு - இந்த மாதிரி எந்த கூறுகளும் இல்லாம தமிழ் பாதுகாப்பு - தூய்மைன்னு பேசறவங்க (10.6.1க்கு போயிட்டு வந்து தொடரவும்) தான் தமிழ் மொழியின் பேராபத்து. மொழிய வச்சு அரசியல் பண்றவங்கள நாமதான் அடையாளம் தெரிஞ்சுக்கணும்.

10.9. ஒரு மொழிக்கு மொழிக்கொலைங்கிறது பிற​மொழிக்கலப்பால வராது (அ. முத்துலிங்கம் எழுதின ஒரு கதை உயிர்மையில் வந்தது. படிச்சுப்பாருங்க) பிற மொழி பற்றிய அறிவு இல்லைங்கிறதுதான் தற்கொலைக்கு சமம்.

10.10. கடைசியா (அப்பாடா..!) ஒரு குட்டிக்கதை: ஒருத்தன் குளக்கரை பக்கமா புதையல் இருக்குன்னு தெரிஞ்சு பூமியத் தோண்ட ஆரம்பிச்சானாம்.​தோண்டுனான் ​தோண்டுனான் தோண்டிக்கிட்டே இருந்தானாம். அவன் பண்ணுனது பரவலா தோண்டாம ஒரே குழியையே ஆழமா தோண்டிக்கிட்டு இருந்ததுதான். கடைசிலே பாத்தா குழிதான் ஆழமாச்சு. புதையல் கிடைக்கலே. தோண்டுனது போதும்டா மேலே ஏறலாம்னு பாத்தா ​ரொம்ப ஆழமாயிருக்கு. கத்தி கத்தி பாத்தான். பாவம் யாருக்குமே கேக்கலே.
July 30, 2009 11:10



இதுதான் அன்பு நண்பர் ஜெகநாதனின் பின்னூட்டம்.

விடயத்துக்கு வருகிறேன். நான் எப்போதும் வேற்று மொழிகளை வெறுத்தவன் இல்லை, வேற்று மொழிகளை நாம் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அந்த மொழிகள் தமிழோடு கலந்து தமிழை கொலை செய்யக்கூடாது என்றே இரு இடுகைகளிலும் தெளிவாகக் கூறி இருக்கிறேன்.

தமிழ் மொழியின் சிறப்புக்கள் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். அத்தனை சிறப்பு வாய்ந்தது தமிழ் மொழி. வேற்று மொழிகளை தமிழோடு தேவையற்ற முறையிலே அதிகமாகப் பிரயோகிக்கப்படுகிறது ஏன் என்பதுதான் எனது கேள்வி.

வேற்று மொழி பேசுபவர்கள் எமது தமிழ் மொழியினை தங்கள் மொழியோடு கலந்து பயன் படுத்துகிறார்களா. இல்லையே சில தமிழ் சொற்களை எல்லாராலும் புரிந்து கொள்ள முடியாது என்று சொல்கின்றார்கள். அப்படி என்றால் தமிழ் மொழிக்கு சொற் பஞ்சம் இருக்கிறதா?

எமது தமிழ் அறிஞர்கள் எல்லோரும் ஏனைய மொழிகளையும் படிக்கவேண்டும் என்று சொன்னார்களே தவிர தமிழ் மொழியோடு கலந்து பயன் படுத்தும் படி சொல்லி இருக்கின்றார்களா.

இன்று பல சிறப்புக்கள் மிக்க எமது தமிழ் மொழியின் சில சொற்களை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அதற்கு யார் காரணம். நாம்தான் காரணம். நாகரிகமென்ற போர்வையில் வேற்று மொழிகளின்பால் நாம் ஈர்க்கப்பட்டதே முக்கிய காரணம்.

இன்று நாம் தமிழ் இலக்கியங்களை வெறுப்பதற்கு என்ன காரணம் அதிலே பயன்படுத்தப்பட்டிருக்கின்ற சொற்களுக்கு விளக்கம் தெரியாமையே முக்கிய காரணம். நான் கேட்கின்றேன் அன்று தமிழ் அறிஞர்கள் மக்களிடம் பாவனையில் இல்லாத சொற்களை ஏன் பயன்படுத்தவேண்டும். அன்று அந்தச் சொற்கள் பயன் பாட்டில் இருந்ததே காரணம். அன்று இலக்கியங்களிலே வேற்று மொழி கலப்பு இருந்ததா. இல்லையே.

ஆனாலும் இன்று கிராமப் புறங்களிலே அந்தச் சொற்களை எமது முன்னோர்கள் பயன் படுத்துவதை கானக்கூடியதாக இருக்கின்றது. இன்றைய நாகரிகம்தான் எம்மை மாற்றிவிட்டது.

சில சொற்களுக்கு தமிழ் படுத்த முடியாது என்பதனை ஏற்றுக் கொள்கின்றேன். வளர்ச்சி அடைந்து வருகின்ற நாடுகளின் விஞ்ஞான கண்டு பிடிப்பு, அவர்களின் பொருட்களுக்கு எங்களால் தமிழ் சொல்லை தேடிக்கொண்டு இருக்கமுடியாதுதான். ஆனால் காலப்போக்கில் அதற்கும் தமிழ் சொற்களை அறிமுகப் படுத்த முடியுமல்லவா. computer என்பது தமிழ் வார்த்தை இல்லை அது காலப்போக்கில் கணணி அல்லது கணினி என்று நாம் தமிழ் படுத்தவில்லையா.

சில தமிழ் சொற்களுக்கு அகராதிகளைத்தான் தேடி பொருள் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்கிரிஇர்கள். அப்படி என்றால் அன்று இலக்கியங்களை எல்லோரும் படித்தார்கள். அன்று குருகுல முறையிலே ஒரு குருவின் வழிகாட்டலுக்கமைய படித்தவர்களே எமது தமிழ் அறிஞர்கள் பலர்.


அன்று அவர்கள் அகராதியும் கையுமாகவா திரிந்தார்கள். இல்லையே இந்தச் சொற்கள் பாவனையில் இருந்தது என்பதே உண்மை. சரி அவர்கள் அகராதி கொண்டுதான் படித்தார்கள் என்றால் இன்று ஏன் எங்களால் அந்த அகராதிகளை எங்களால் பயன்படுத்த முடியாது.


அன்று எமது தமிழ் மொழிச் சொற்கள் பயன்பாட்டில் இருந்தது என்பது புலனாகின்றது. இதற்கும் காரணம் நாமேதான்.

சரி புத்தகங்கள் தமிழில் இல்லை என்றால் அது யாரில் தவறு இருக்கிறது. தமிழிலே புத்தகங்களை எழுதுவதற்கு தமிழிலே நல்ல பொறியியலாளர்கள் இல்லையா. இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் தமிழ் மொழியை விட்டு விலகி ஆங்கில மொழியின்பால் சென்றதே காரணம்.

எனது கேள்வி இன்று கணணி மென் பொருட்கள் கூட தமிழிலே அதுவும் அற்புதமான தமிழ் சொகளைக்கொண்டு வடிவமைக்கப் படுகின்ற போது தமிழிலே சில துறைகளுக்கு புத்தகங்கள் இல்லை என்பது ஏன். உலகத்துக்கே நல்லா கருத்துக்களை சொல்லக்குகூடிய எத்தனையோ புத்தகங்களுக்கு சொந்தம் கொண்டாடுகிறது தமிழ் மொழி. ஆனால் நாமே இன்று தமிழ் மொழியினை கொலை செய்து கொண்டு இருக்கின்றோம்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். தமிழ் மொழியிலே இருக்கின்ற சொற்களை நாம் இன்று மறந்து வருகின்றோம். அவற்றை மீண்டும் மக்கள் மத்தியில் ஊடகங்களால் பிரபல்யப் படுத்த முடியும். உடனடியாக இல்லை என்றாலும் ஊடகங்களில் பயன் படுத்தப் படும்போது மக்களால் காலப்போக்கில் பயன்படுத்தப்படும் என்பது எவராலும் மறுக்கப்பட முடியாது.

முன்னைய இடுகையிலே தொடருந்து, சிற்றுந்து, உலங்குவானூர்தி, துவிச்சக்கர வண்டி, மிதி வண்டி, காலுந்து, வெதுப்பி, குளிர்களி.. போன்ற சொற்களை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் லோஷன் என்று குறிப்பிட்டு இருந்தேன் ஆனால் இச் சொற்களை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்திய பெருமை என்று வந்திருக்க வேண்டும். யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலே ஆரம்ப காலங்களில் இந்தச் சொற்கள் பாவனையில் இருந்தது உண்மையே. காலப்போக்கில் நாகரீகம் என்ற போர்வையில் இந்த சொற்கள் மறக்கப்பட்டு வந்தது என்பது உண்மையே. இச் சொற்களை பாவிப்பது மிகவும் அரிதாக இருந்த வேளை இச் சொற்களை மீண்டும் பாவனைக்கு கொண்டுவர வேண்டும் என்று லோஷன் இதற்கு முன்னர் பணியாற்றிய வானொலி நிலையத்தின் ஒரு குழுவினரின் முயற்சியின் பயனாக அந்த வானொலியின் செய்திகளில் இந்த சொற்கள் பயன்படுத்துவது வழக்கத்திற்கு வந்தது. மக்களின் பயன் பாட்டில் இருந்து மருவி வந்த இந்த சொற்களை மீண்டும் மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தியவர்களுள் லோஷனும் அவர்களது ஒரு குழுவினரும் என்பது மறுக்கமுடியாது.


இச் சொற்களின் பாவனை மிக மிக அரிதாக இருந்தபோது செய்தி அறிக்கைகளிலும் நிகழ்சிகளிலும் அதிகமாக பயன் படுத்தப்பட்டு மக்கள் மத்தியிலே பிரபல்யப்படுத்தப்பட்டது உண்மையே.

இது ஒரு புறமிருக்க எமது ஆரம்ப கால ஒலிபரப்பின் முன்னோடிகளை மறக்கக்கூடாது. எங்களுக்கெல்லாம் முன்னோடிகளாக இருந்து தமிழ் மொழி வளர்ச்சியிலே பங்காற்றிய பல ஒலிபரப்பாளர்கள் இருக்கின்றார்கள். அவர்களையும் நாம் மறந்துவிட முடியாது. எதிர் வரும் காலங்களில் அவ்வப்போது அவர்களைப் பற்றியும் பகிர்ந்து கொள்கின்றேன்


தமிழ் மொழியினை வளர்க்க வேண்டும். தமிழ் மொழி தமிழ் மொழியாக பயன்படுத்த வேண்டும் என்பதே எனது அவா.

இது தொடர்பான உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் பின்னூட்டமாக.
read more...

Wednesday 29 July 2009

தமிழ் மொழியை வளர்ப்பது யார்? தமிழ் மொழியை கொலை செய்வது யார்?..


ஊடகங்களில் தமிழ் கொலை செய்யப் படுகிறதா.. எனும் எனது இடுகை மூலம் பலரும் தமது மனங்களிலே இருந்த உள்ளக் குமுறல்களை கருத்துக்களாக வெளியிட்டு இருந்தனர். காத்திரமான பல கருத்துக்கள் வந்திருந்தன. அந்தக்கருத்துக்களை பார்த்தபோது இந்த விடயம் தொடர்பாக இன்னுமோர் இடுகையின் மூலம் சில விடயங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று ஒரு எண்ணம் என் மனதிலே தோன்றியது. இதனால் இன்னும் பல ஆக்கபூர்வமான கருத்துக்களை பெறமுடியும் என்று நினைக்கிறேன்.


இந்த இடுகையின் மூலம் எந்த ஒரு ஊடகத்தையோ, ஊடகவியலாளரையோ குற்றம் சுமத்துவது என் நோக்கமல்ல. இன்று தமிழ் மொழிக் கொலை என்று வந்தாலே எல்லோரும் குற்றம் சாட்டுவது குறிப்பாக இலத்திரனியல் ஊடகங்களையே. தமிழ் மொழியினை கொலை செய்கின்ற ஊடகங்கள் இருக்கின்ற வேளை தமிழ் மொழியினை வளர்ப்பதிலே பல தமிழ் ஊடக நிறுவனங்களும், தமிழ் ஊடகவியலாளரும் பாடு படுகின்றார்கள் என்பதனை எவரும் மறுக்க முடியாது.


ஒரு சிலர் செய்கின்ற தவறுக்காக எல்லோரையும் குற்றம் சொல்வது சரியல்ல. தமிழ் கொலை செய்கின்ற ஊடகங்களும் ஊடகவியலாளரும் திருந்த வேண்டும். என்பதோடு நாகரிக மோகத்தில் தமிழ் மொழியோடு வேற்று மொழிகளை கலப்பதனையுமே நான் தவறு என்று சொல்கிறேன்.


வானொலி, தொலைக்காட்ட்சி போன்றவற்றிலே அறிவிப்பாளர்கள் விடுகின்ற மொழி உச்சரிப்பு, வேற்றுமொழிக் கலப்பு தொடர்பாகவே பலரும் பேசி இருந்தனர். இந்த இடத்திலே ஒன்றைக் குறிப்பிட வேண்டும் நானும் ஒரு ஊடகவியலாளன்தான், ஒரு அறிவிப்பாளன். நான் தமிழ் மொழி தவறாக உச்சரிப்பதனையும், ஆங்கில வார்த்தைகள் தேவையற்று அதிகம் பயன் படுத்துவதனையும் முற்றாக வெறுப்பவன். தமிழை தமிழாக பயன் படுத்த நினைப்பவன்


ஒரு சிலர் குறிப்பிட்டிருந்தார்கள் நாமும் நாகரிகத்துக்கு ஏற்றாற்போல் மாற வேண்டுமென்று. நான் மாற வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் எமது தமிழ் பாரம்பரியங்களையும், தமிழ் மொழியின் சிறப்பினையும் நாகரிகமென்ற போர்வையில் சாகடிப்பதா.

நான் வேற்று மொழிகளை முற்றாக புறக்கணிக்க வேண்டுமென்று சொல்லவில்லை. ஆங்கில மொழியினை பயன் படுத்த வேண்டிய இடங்களுக்கு பயன்படுத்தத்தான் வேண்டும். அதற்காக தேவையற்ற விதத்தில் அதிகமாக பயன்படுத்தலாமா. இன்று ஆங்கில மொழியினை தமிழ் மொழியோடு பயன் படுத்துவது அதிகரித்து வருகின்றது. அன்று ஒரு பத்து வீதமாக இருந்தது என்று வைத்துக் கொள்வோம் இன்று இருபது வீதமாக அதிகரித்து விட்டது என்றால் எதிர் காலத்தில் தமிழோடு ஆங்கில மொழி பயன்பாடு அறுபது வீதமாக அதிகரித்து விட்டது என்று வைத்துக் கொள்வோம் அந்த மொழியினை தமிழ் மொழி என்பதா அல்லது வேறு ஒரு மொழி என்பதா? போகிற போக்கில் நடக்காமல் விடலாம் என்று சொல்ல முடியாது. தமிழ் மொழி மறைகின்ற நிலைக்கு தமிழர்களாகிய நாம் பங்காளிகளாக இருக்கலாமா.


சில ஆங்கில சொற்களை நாங்கள் பயன்படுத்தியே ஆகவேண்டும். இருந்தாலும் எமது தமிழ் மொழியிலே பல இனிய சொற்கள் இருக்கின்றன. ஒரு சிலரின் குற்றச் சாட்டு சில தமிழ் சொற்கள் எல்லோருக்கும் தெரியாது அதனால் ஆங்கில சொற்களை பயன்படுத்துகிறோம் என்று. இக் கருத்தினை முற்று முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாது.


இன்று இலங்கையின் ஊடகங்களிலே தொடருந்து, சிற்றுந்து, உலங்குவானூர்தி, துவிச்சக்கர வண்டி, மிதி வண்டி, காலுந்து, வெதுப்பி, குளிர்களி.. இன்னும் பல.. இனிய தமிழ் சொற்கள் பாவிக்கப்படுகின்றன. (வெளிநாட்டை பொறுத்தவரை எப்படி என்பது தெரியவில்லை) இந்த சொற்களை பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை எல்லோரும் இன்று ஏற்றுக் கொள்கின்றனர். இந்த சொற்களின் அறிமுகம் எப்போது வந்தது?. ஆரம்பகாலத்தில் இருந்து ஊடகங்களிலே பயன்படுத்தப்பட்டு வந்ததா என்றால் இல்லை. அதிகமானவர்களுக்கு அன்று இந்த சொற்கள் தமிழிலே இருக்கின்றது என்பதே தெரியாது. என்னையும் சேர்த்து.


ஊடகங்களால் முடியாதது எதுவும் இல்லை. தமிழை வளர்ப்பதிலே பல ஊடகவியலாளர்கள் பாடுபட்டிருக்கின்றார்கள். அதன் பயனாகவே இன்று இந்தச் சொற்கள் மக்களால் பயன்படுத்தப் படுகின்றன.



அன்று தொட்டு இன்றுவரை பல ஊடகவியலாளர்கள் தமிழ் மொழி வளர்ச்சியில் பங்காற்றி வருகின்றனர். இந்த இடுகையின் கருத்தாடல்களிலே தனது கருத்துரைகளையும் வழங்கிய லோஷன் கூட தமிழ் மொழியினை வளர்ப்பதில் பாடுபட்டு வரும் ஒருவர். நான் மேலே குறிப்பிட்ட தொடருந்து, சிற்றுந்து, உலங்குவானூர்தி, துவிச்சக்கர வண்டி, மிதி வண்டி, காலுந்து, வெதுப்பி, குளிர்களி.. போன்ற சொற்களை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் லோஷன் என்று சொன்னால் மிகையாகாது. அவர் இதற்கு முன்னர் பணியாற்றிய வானொலியிலே, அவர்களின் கூட்டு முயற்சியிலே இந்த சொற்களை பாவனைக்கு கொண்டு வந்தார்கள். அப்போது ஒரு சிலர் மக்களுக்கு விளங்கவில்லை என்று எதிர்த்தனர். ஆனால் இன்று எல்லாராலும் இந்தச் சொற்கள் பயன் படுத்தப் படுகின்றன.


ஊடகங்களிலே இது போன்ற பாவனையில் இல்லாத சொற்களை அறிமுகம் செய்கின்றபோது காலப்போக்கில் பாவனைக்கு கொண்டு வர முடியும். அதற்காக எல்லாச் சொற்களையும் வேற்று மொழிச் சொற்களையும் தமிழ் படுத்த முடியாது என்பதனையும் ஏற்றுக் கொள்கிறேன். அவற்றை ஒரு பக்கம் வைத்துவிட்டு தேவையற்ற வேற்றுமொழி கலப்பை தவிர்க்க வேண்டும் என்பதே எனது கருத்து.


என் நாம் இன்று வலைப்பதிவுகளிலே இடுகை, அமுக்கவும் போன்ற இனிய சொற்களை பாவிக்கின்றோமே. இன்று இணையமும் கூட ஒரு வகையில் தமிழை வளர்க்கின்றது என்று சொல்லலாம்.


அடுத்து வானொலி, தொலைக்காட்சிகளிலே தமிழ் கொலை செய்யப்படுகின்றன என்ற விடயத்துக்கு வருகின்றேன். நவின உலகத்துக்கு ஏற்றாற்போல் இன்று எல்லாமே மாறி வருகின்றன இதற்கு வானொலி தொலைக்காட்சிகளும் விதிவிலக்கல்ல. கடுமையான போட்டித்தன்மைகளுக்கு மத்தியிலே தாம் நிலைத்திருக்க வேண்டுமானால். காலத்துக்கேற்ற சில மாற்றங்களையும் இன் நிறுவனங்கள் செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது.


இதற்காக இவர்கள் நினைத்த எதனையும் செய்யலாமா இன்று சிலர் தாம் நினைத்தபடி மாறுதல் என்ற பெயரில் தமிழ் கொலை செய்து கொண்டு இருக்கின்றனர். வானொலி, தொலைக்காட்சிகளின் போட்டித்தன்மை காரணமாக நிலைத்திருக்க வேண்டுமானால் சில ஊடக நிறுவனங்கள் மாற்றங்களை செய்யத்தான் வேண்டும். இன்று பல ஊடக நிறுவனங்கள் பேச்சுத்தமிழை பயன்படுத்துகின்றன. பேச்சுத்தமிழில் பேசுகின்றபோது எல்லோருக்கும் இலகுவாக விளங்கிக் கொள்ளமுடியும். இது ஒரு புறமிருக்க இதனை ஒரு சாட்டாக வைத்து வேற்று மொழி கலந்து பேசுவதை சில அறிவிப்பாளர்கள் கடைப்பிடிப்பதுதான் கவலைக்குரிய விடயம்.


சில அறிவிப்பாளர்கள் விடுகின்ற தவறுகளை சொல்வதென்றால் அதற்கென ஒரு வலைப்பதிவு தொடக்கி எழுதிக்கொண்டே போகலாம். அறிவிப்பாளர்கள் எல்லோரும் பிழை விடுவதில்லை, தமிழை கொலை செய்வதில்லை சில அறிவிப்பாளர்கள் இருக்கின்றார்கள் லகர ழகர ளகர தெரியாமல் திண்டாடுகின்றனர். அது மட்டுமல்ல சில தமிழ் சொற்கள் அவர்களின் வாயில் இருந்து வருவதற்கு கஸ்ரப்படுகிறது.


சில அறிவிப்பாளர்கள் இனிய தமிழை மறந்து அளவுக்கு அதிகமாக ஆங்கில வார்த்தைகளை பயன் படுத்துவது என். இவர்களுக்கு தமிழ் தெரியாதா. தமிழ் தெரியவில்லை என்றால் ஏன் தமிழ் அறிவிப்பாளராக வந்தார்கள். ஆங்கில அறிவிப்பாளராக போயிருக்கலாம்தானே. இவர்கள் விடுகின்ற தவறுகளும் ஓட்டு மொத்த அறிவிப்பாளர்களையும் பாதிக்கும் என்பதை இவர்கள் உணர்ந்து திருந்துவதே நல்லது (திருந்துவார்களா)


இன்று பல ஊடக நிறுவனங்களும், ஊடகவியலாளரும் தமிழ் மொழி வளர்ச்சியிலே பங்காற்றி வருகின்றார்கள் என்பதை எவராலும் மறுக்கமுடியாது.



மக்களால் பயன் படுத்தப்படாமல் இருக்கின்ற தமிழ் சொற்களை மக்களுக்கு அறிமுகம் செய்து வேற்று மொழிக்கலப்பை தடுக்க ஊடகங்களால் முடியும் என்பதே உண்மை.



எது எப்படி இருப்பினும் தமிழை தமிழாக பயன் படுத்த வேண்டும். தாய் மொழியினை தமிழாகக் கொண்ட எல்லோரும் தமிழ் மொழி வளர்ச்சியிலே பங்கெடுக்க வேண்டும். என்பதே என் கருத்தாகும்
read more...

நண்பர்களை மறக்கலாமா.....

ஊடகங்களில் தமிழ் கொலை செய்யப் படுகிறதா.. என்ற இடுகை பலரும் பல்வேறு பட்ட கருத்துக்களோடு ஊடகங்களும் தமிழும் என்ற ரீதியிலே நல்ல ஆரோக்கியமான கருத்துக்களை பகிர்ந்துகொண்டு இருக்கின்றார்கள். அதன் தொடர் பதிவாகவே எனது அடுத்த பதிவு இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.


ஆனால் நண்பர்களில் அன்புத்தொல்லை விட்டபாடில்லை. அதுதான் நம்ம நண்பர்கள் திருமதி மேனகாசத்தியா, குறை ஒன்றுமில்லை இருவரும் எனக்கு நட்புக்கே விருது தந்து விட்டார்கள். அவர்களுக்கு நன்றிகள்.



இனி என்ன நானும் பத்துப் பேருக்கு கொடுக்கணுமே. பதிவுலகில் எத்தனை நண்பர்கள் இருக்கின்றார்கள் யாருக்கு கொடுப்பது என்பதே பிரச்சனை.



இதுவரை நட்புக்கான விருது பெறாத பத்துப் பேரை தெரிவு செய்திருக்கிறேன். அவங்கதான் இவர்கள்.

1. லோஷன் (லோஷனின் களம்) நல்ல விடயங்கள் அனைத்து தாராளமாய் தருபவர் விளையாட்டு செய்திகளை பஞ்சமின்றி வழங்குவார்.

2. பிரபா (விழியும் செவியும்) நல்ல கவிதைகளை தொகுத்துத் தருவதோடு நல்ல பல விடயங்களையும் தருபவர்.

3. முனைவர் இரா. குணசீலன் (வேர்களைத்தேடி) நல்லபல விடயங்களோடு தமிழ் இலக்கியத்தை தெவிட்டாமல் தேன் கலந்து தருபர். தொழினுட்ப தகவல்களையும் விட்டு வைக்கவில்லை.

4. ஆ.ஞானசேகரன்(அம்மா அப்பா) . நல்ல பல கருத்துக்களை இவரது பதிவுகளிலே காணமுடிகிறது.

5. சக்தி (வீட்டுப்புறா) நல்ல பல கவிதைகளை தருபவர் தமிழ் பற்று அதிகமானவர் என்பதை இவரது கவிதைகள் வெளிப்படுத்தும். தொப்பூள் கொடி சொந்தங்களை நம்பாதீர்கள்.... எனும் கவிதை இதனை சொல்கிறது.

6. காயத்ரி (பிரிவையும் நேசிப்பவள்..) நல்ல பல கவிதைகளை கவிதைகளுக்கு பொருத்தமான படங்களோடு தருவதில் சிறப்பு மிக்கவர்

7. அக்பர் (சிநேகிதன்) நல்ல பல விடயங்களை இடுகைகளாக தனது பதிவிலே தரும் ஒரு நண்பர்.

8. Starjan ( ஸ்டார்ஜன் ) (நிலா அது வானத்து மேல!) நல்ல பல விடயங்களை தனது பதிவிலே தருபவர்.

9. முனைவர் கல்பனா சேக்கிழார் இவரும் தமிழ் இலக்கியம் தொடர்பாக பல்வேறுபட்ட விடயங்களோடு, இன்னும் பல விடயங்களையும் தந்து வருகின்றார்.

10. நிலாமதி (நிலாமதியின் பக்கங்கள் இவர் வலையுலகுக்கு புதியவர். நிறையவே பல விடயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உடையவர். இந்த விருது அவரை மேலும் ஊக்கப்படுத்துமல்லவா.

இனி என்ன விருதும் கொடுத்தாகி விட்டது. நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஊடகங்கள் தமிழைக் கொலைசெய்கின்றனவா... என்ற பதிவின் தொடர் பதிவு இன்று வர இருக்கின்றது. பல்வேறு கருத்துக்களுடன்.
read more...

Monday 27 July 2009

ஊடகங்களில் தமிழ் கொலை செய்யப் படுகிறதா..

பல சிறப்புக்களை கொண்ட தமிழ் மொழி இன்று பல மொழிக் கலப்பினால் பாதிக்கப்பட்டு வருவதாக இன்று பலரும் குற்றம் சுமத்திக்கொண்டு இருக்கின்றனர். தமிழ் மொழியை வளர்ப்பதிலே ஊடகங்களின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும் ஊடகங்களால் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

இதனை நண்பர் ஆ.ஞானசேகரன் தனது அம்மா அப்பா வலைப்பதிவிலே மிகவும் சிறப்பாகக் சொல்லி இருக்கின்றார். அந்த இடுகையை பார்த்த போது எனது மனதிலே இருந்த சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


தமிழ் மொழியோடு பிற மொழி கலப்பதை தடுப்பதிலும், தமிழ் மொழியை வளர்ப்பதிலும் ஊடகங்களின் பங்கு அளப்பெரியது. தமிழ் ஊடகங்கள் தமிழ் மொழியை வளர்ப்பதனையும் தமது நோக்கங்களிலே ஒன்றாக கடைப்பிடிக்க வேண்டும். இன்று பல ஊடகங்களும் ஊடகவியலாளரும் தமிழ் மொழியை வளர்ப்பதிலே ஆர்வம் காட்டிவரும் நேரம் சில ஊடகங்களிலே தமிழ் பயன்பாட்டைப் பார்க்கின்றபோது எல்லோருமே கவலைப்பட வேண்டிய விடயமாக இருக்கின்றது.


நாகரிக உலகில், நாமும் மாற வேண்டும் என்பதற்காக எமது தமிழ் மொழியினை மாற்றி அமைக்க முடியுமா. இன்று தமிழோடு ஆங்கில சொற்களை பயன்படுத்துவது ஒரு நாகரிகமாக மாறிவிட்டது. ஏன் தமிழ் மொழியில் பேசுவதிலே என்ன இருக்கிறது எமது மொழியை நாமே பயன்படுத்த வெறுக்கிறோம். இதற்கு சொல்லும் குற்றச்சாட்டு உண்மையான தமிழ் சொற்கள் எல்லோருக்கும் தெரியாது என்று சொல்லி விடுவார்கள். நான் வேற்று மொழிகளை குற்றம் சாட்டவில்லை ஆங்கிலம் முக்கிய மொழியாக இருக்கலாம் எமது மொழியை மறப்பதா ஆங்கிலம் பேசவேண்டிய இடங்களில் பேசுவது தப்பு இல்லை. ஆனால் சிலர் பேசுவார்கள் தமிழ் வார்த்தைகள் 25 வீதமே கூட இருக்காது. இவர்கள் பேசுவது ஆங்கிலம் தெரியாத பாமர மக்களாக இருந்தாலும் அவர்களது பேச்சிலே மாற்றம் இருக்காது.

மக்களுக்கு தெரியாததமிழ் சொற்களை பாவிக்கும் போது எல்லோருக்கும் புரியாது என்று சொல்லிக்கொள்வோர் பலர். எங்களால் புரிய வைக்க முடியும் என்பதற்கு நண்பர் ஞானசேகரன் குறிப்பிட்டவற்றை தருகிறேன்

தந்தை பெரியார் அவர்களின் அச்சு எழுத்துக்களில் சிக்கனம் காரணமாக உருவானதுதான் தமிழ் சீர்திருத்த எழுத்துகள். னா, ணா, னை, ணை, லை, ளை போன்ற எழுத்துகள் சீர்திருத்தப்பட்டது. இவற்றை மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் MGR அவர்களால் அரசில் பரிந்துரை செய்யப்பட்டது. இன்று இவைகள் பயன்பாட்டில் இருக்கின்றது. நேற்று என் நண்பர்களிடம் பழைய னா, ணா, னை, ணை, லை, ளை எழுதிக்காட்டுங்கள் என்றேன். அவர்களால் ஞாபகத்திற்கு கொண்டு வரமுடியவில்லை அந்த அளவிற்கு மறக்கடிக்கபட்டுள்ளது.

மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பது உண்மையே. இதனை 100 வீதம் ஊடகங்களினால் சாத்தியப் படுத்த முடியும். பல ஊடகங்கள் இதில் வெற்றியும் கண்டன பல ஊடகவியலாளர்கள் தமிழை வளர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றனர். வெதுப்பகம், தொடருந்து, மகிழுந்து போன்ற பல தமிழ் சொற்களை இப்பொழுது ஊடகங்களில் பாவிப்பதனை பார்க்கும்போது சந்தோசமாக இருக்கின்றது. இதனை மக்கள் மத்தியிலே பிரபல்யப் படுத்தியது ஊடகங்களே. அப்படி இருக்கும் போது ஏனைய சொற்களையும் நாம் பயந்படுத்தும்போது மக்களும் பயன்படுத்த ஆரம்பித்து விடுவார்கள் என்பதே உண்மை.


இன்று பலரது குற்றச் சாட்டாகவும் இருப்பது சில இலத்திரனியல் ஊடகங்களிலே தமிழ் கொலை செய்யப்படுகின்றன என்பதே. உண்மையும் அதுதான் தமிழை வளர்க்க வேண்டியவர்கள். நேயர்களோடு பேசும்போது அதிகமாக ஆங்கில சொற்களை பிரயோகிப்பது ஏன். நான் அதிகம் அவதானித்த விடயம் சாதாரண ஆங்கிலம் தெரியாத மக்களோடும் ஆங்கிலத்தில் பேசுவது. இன்று தொலைபேசி பாவனை அதிகரித்து விட்டதனால் கிராமப்புற மக்கள் இலத்திரனியல் ஊடகங்களுக்கு தொலைபேசி அழைப்பினை எடுப்பது அதிகரித்து விட்டது. ஆனால் அவர்களை புரிந்து கொண்டு தமிழிலே பேசுவதை தவிர்த்து ஆங்கில வார்த்தைகளோடு சில அறிவிப்பாளர்கள் விளையாடுவதுதான் ஏன்.

சிலர் தாங்கள் ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தவில்லை என்றால் மற்றவர்கள்தன்னை கீழ்த்தரமாக நினைப்பார்கள் என்று நினைக்கின்றனர். நவின உலகுக்கு ஊடகங்களும் மாறத்தான் வேண்டும். அதற்காக நாம் தமிழை சாகடிப்பதா. இன்று சில ஊடகங்களிலே சில அறிவிப்பாளர்கள் லகர, ழகர வேறுபாடு தெரியாமலே தமிழை கொலை செய்கின்றனர். இவர்கள் தமிழை வளர்ப்பவர்களா. எத்தனையோ திறமையானவர்கள் இருக்கும்போது ஏன் இவர்கள் உள் வாங்கப்பட்டனர். தமிழை வளர்க்க தமிழ் ஊடகங்கள் முன்வர வேண்டும்.

ஒரு போட்டி ஒரு தொலைக்காட்சியிலே நடந்தது அதிலே நடுவர் போட்டியாளரிடம் சொன்னார் உங்கள் தமிழ் உச்சரிப்பில் "பிலைகள்" இருக்கிறது திருத்துங்கள்என்று இவர் பிழை திருத்துகிறாரா. அல்லது தமிழ் கொலை செய்கிறாரா. அவரே தமிழ் கொலை செய்யும் போது எப்படி மற்றவரை திருத்துவது.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.இனிமேலாவது தமிழை வளர்க்காவிட்டாலும் தமிழை தமிழாக பயன்படுத்த முன்வருவார்களானால் பாராட்டப்பட வேண்டியதே.

ஊடகங்களால் முடியாதது எதுவும் இல்லை வெதுப்பகம், தொடருந்து, உந்துருளி, மகிழுந்து போன்ற சொற்கள் மக்கள் மத்தியிலே பிரபல்யமாக்கப் பட்டது ஊடகங்களால்தான் ஏனைய சொற்களையும் மக்கள் மத்தியிலே பிரபல்யப்படுத்துவதொடு தமிழ் மொழியினை ஊடங்களால் வளர்க்க முடியும் என்பதே உண்மை.
read more...

Saturday 25 July 2009

பதிவர்கள் தங்களுக்குள்ளே விருது வழங்குவது சரியா?

இன்று பதிவுலகிலே பரவலாகப் பேசப்படுகின்ற விடயம் விருதுகள் பற்றித்தான். பதிவர்களே தங்களுக்குள் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கருத்து மோதல்களால் கிடைக்கின்ற இலாபம் என்னவென்று சொல்லத்தெரியவில்லை.

இக கருத்து மோதல்கள் மூலம் விருது வழங்குதல், போட்டிகள் நடத்துதல். இவற்றை திரட்டிகள் செய்யலாம். பதிவர்கள் தங்களுக்குள் விருதுகளை பரிமாறுதல் போன்ற விடயங்கள் பற்றி பதிவர்களுக்குள்ளே பலதரப்பட்ட ஆதரவான, எதிரான கருத்துக்கள் வந்து கொண்டு இருக்கின்றன..

]இந்த கருத்து மோதல்கள் வெறுமனே பதிவர்களுக்குள்ளே வெறும் பகைமையினை வளர்ப்பதனை விடுத்து நல்லதொரு தீர்வு கிடைப்பதற்கு வித்திடுமாயின் அது சந்தோசப்பட வேண்டிய விடயமே.

எது எப்படி இருப்பினும் சில விடயங்களை பார்க்கவேண்டி இருக்கின்றது. இன்று விருதுகள் பற்றி இடுகைகள் இடாத பதிவர்கள் குறைவு என்றே சொல்லவேண்டும். அந்த அளவிற்கு விருதுகள் பெரும்பாலான பதிவர்களைச் சென்றடைந்து விட்டது.
பதிவுலகத்துக்கு நானும் ஒரு புதியவன்தான். பதிவர்களுகுள்ளே விருது வழங்குதல் என்பது. புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தும் ஒன்றாக இருக்கின்றது. பதிவர்களுக்கு விருது கொடுப்பதற்காக ஒரு அமைப்பு இல்லை என்கின்ற போது ( நான் புதிய பதிவர் நான் இருப்பதாக அறியவில்லை இருந்தால் மன்னிக்கவும்)பதிவர்களுக்குள்ளே விருது வழங்குவதில் தப்பே இல்லை. புதிய பதிவர்கள் இதனை பதிவுலகில் தங்களுக்கு கிடைத்த ஒரு அங்கிகாரமாகவே பார்க்கின்றனர்.

இந்த விருதுகளை பெறுகின்ற பதிவர்கள் அதனை தமது வலைப்பதிவுகளிலே பொறித்து விட்டு சந்தோசப் படுகிறார்களே தவிர தமது பெயருக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ போடுகிறார்களா. இல்லையே. அல்லது ஒரு வேலைவாய்ப்புகோ வேறு ஏதாவது நேர்முக பரிட்சைக்கோ போகும் போது நான் இந்த விருதெல்லாம் பெற்று இருக்கிறேன் என்று சொல்கின்றார்களா இல்லையே. தமது வலைப்பதிவில் பொறித்து தமக்கு பதிவுலகில் கிடைத்த ஒரு அங்கிகாரமாக நினைத்து சந்தோசப்படுவது மட்டுமே.

பதிவர்களுக்கு விருது வழங்குவதற்கென ஒரு அமைப்போ அல்லது திரட்டியோ முன்வருமாக இருந்தால் அது வரவேற்கத்தக்க விடயமே. எவரும் முன் வராதபோது பதிவர்களே விருது வழங்குவதில் தப்பு இருப்பதாக தெரியவில்லை.

இன்று விருது பெற்ற பல புதிய பதிவர்கள் தங்களுக்கு விருது கிடைத்துவிட்டது. தாங்கள் இன்னும் நிறையவே எழுத வேண்டுமென்று உற்சாகத்துடன் செயற்படுவதை காண முடிகின்றது.
விருது வழங்குவதட்கு தனி ஒரு அமைப்பு இல்லாதவிடத்து பதிவர்களுக்குள்ளே விருது வழங்குவதில் இந்த தப்பும் இல்லை. இது புதிய பதிவர்களை மாத்திரமன்றி பல பதிவர்களை உற்சாகப் படுத்தும் ஒன்றாகவே அமைகின்றது
read more...

தமிழர் நம் கலைஞர்கள் தொடர் பதிவு 02

இலங்கை கலைஞர்கள் பற்றிய தொடர்பதிவிலே முதலாவது பதிவிலே கலாபூசனம் ஆறுமுகம் அரசரெத்தினம் அவர்களை பற்றி சொல்லி இருந்தேன். அதன் தொடர் பதிவாகவே இந்தப்பதிவு.

முதலாவது பதிவுக்கு செல்ல இங்கே கிளிக் பண்ணவும்.

இவர் அண்மையில் தனது பத்தாவது புத்தகத்தினை வெளியிட்டதோடு.இப்பொழுது ஒரு பக்திப்பாடல் இறுவட்டினை வெளியிடுவதட்குரிய ஆயத்தங்களை செய்து கொண்டு இருக்கிறார். இவரது முதலாவது இறுவட்டு என்னால் வெளியிடப்பட்ட கேதார கெளரி விரதப்பாடல்களடங்கிய இறுவட்டுக்கான பாடல்களை எழுதி இருந்தார்.
அவர் பற்றிய விபரங்கள சுருக்கமாக தருகின்றேன்...


1. முழுப் பெயர் - ஆறுமுகம் அரசரெத்தினம்

2. தொலைபேசி இல - 094652250306
3. உயர் கல்வி - யாழ்ப்பாண பல்கலைக் கழகம் - தமிழ் (சிறப்பு)

4. பதவிகள் -

* மட்டக்களப்பு கச்சேரியில் எழுது வினஞர்* மட்- மாங்கேணி வாகரைப்பகுதி காணி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்.

* வவுனியா முத்தையன் கட்டு படித்த வாலிபர் குடியேற்றத் திட்டத்தின் போறுப்பதிகாரி.

* மட்டக்களப்பு, கொக்கட்டிச் சோலைப் பகுதியில் விவசாயப் போதனாசிரியர்.

* மட்- சிசிலியா மகளிர் கல்லூரியில் விவசாயம், தமிழ் பாட ஆசிரியர்.

* மட்-பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தின் தமிழ் பாட ஆசிரியர்.

* தமிழ் மொழி பாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்.

* உதவிக் கல்விப் பணிப்பாளர்.

பொதுப் பணிகள் -


1. மட்- களுதாவளை சைவ மகா சபைத் தலைவர்.
2. மட்-களுதாவளை இளம் விவசாயிகள் கழகச் செயலாளர், தலைவர்.
3. மட்- களுதாவளை கெனடி விளையாட்டுக்கலகத் தலைவர்.
4. மட்- களுதாவளை முதலாம், இரண்டாம் குறிச்சி கிராம் முன்னேற்றச சங்க செயலாளர், தலைவர், கணக்காய்வாளர்.
5. மட்- செட்டிபாளையம் கண்ணகை அம்மன் கோவில் வண்ணக்கர்,பரிபாலன சபைத் தலைவர்.

6. மட்-களுதாவளை சுயம்புளிங்கப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்.

7. மட்- களுதாவளை சிவசக்தி சிறி முருகன் ஆலய பரிபாலன சபை ஆலோசகர்.

8. பஜனாவளி இசை மன்ற உறுப்பினர், போசகர்.

9. மட்- களுதாவளை கிராமிய கலைக்கழக போசகர். கட்டுரைகள் -

பத்திரிகைகளில் எழுதிய சிறப்புமிக்க கட்டுரைகள்...

1. தினகரன்- சுவாமி விபுலானந்தரும் 7 ம் ஆண்டு தமிழ் பாடப் புத்தகமும்.

2. வீரகேசரி - ஈச்சுரமா? ஈச்சரமா? - ஆய்வுகளும் ஐதீகங்களும்.

3. வீரகேசரி - களுதாவளைப் பிள்ளையார் கும்பாபிசேகம்.

4. நாவலர் குரல் - நாவலர் ஐயாவின் சங்கீத பிரேமை.

5. நாவலர் குரல் - "குயின்" என்கிளவி.

சஞ்சிகைகளில் வெளிவந்த சிறப்புமிக்க கட்டுரைகள்...

1. சிசிலியராகம் - நீங்காத நினைவுகள்.

2. கமத்தொழில் விளக்கம் - விவசாயமும் விஞ்ஞானமும்.

3. கமத்தொழில் விளக்கம் - சுதந்திர இலங்கையின் பொருளியல் வளர்ச்சிக்கு விவசாயக் கல்வியின் முக்கியத்துவம்.

4. கமத்தொழில் விளக்கம் - தாவரங்களின் மாறல்கள்.

5. நிழல் - சிலம்பு எங்கே

6. நிழல் - கண்ணகை இடது தனத்தை திருகி எறிந்தது ஏன்.

7. பேழை - கவிதைக்கு நயம் எழுதுதல்.

8. மலரும் வாழ்வு - சிறப்பு மலர் - தனியார் கல்வி நிறுவனங்கள்.

9. ஞானக்கதிர் - ஈச்சுரமா? ஈச்சரமா?.

10. மலறும் வாழ்வு - இலக்கிய கலாநிதி பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களின் வாழ்க்கையும் வளமும்.

11. மலரும் வாழ்வு - வாலியைக் கொன்றது நீதியா.

12. தொண்டன் - யாரைத்தான் நம்புவதோ.

13. காரை நகர் தமிழ் வளர்ச்சிக்கழக சிறப்பு மலர் - கார்த்திகேயப் புலவரும் விதான மாலையும்.

14. கூர்மதி - கனவு

15. கூர்மதி - மருந்தா? மந்திரமா? யந்திரமா?

16. எழுவான் - மட்டக்களப்பு மக்களின் வாழ்வியலில் கண்ணகை அம்மன் காவியங்கள்.

17. வாழட்டும் விபுலன் பணி - சுவாமி விபுலானந்தர் நினைவி தின விழா.

இதுவரை பத்து நூல்கள் பத்தாயிரம் பிரதிகளுக்குமேல் விநியோகிக்கப் பட்டுள்ளது.

தனித்துவம் - 50 வருடங்களாக வெண்கலமான குரலில் இலக்கிய, சமய பேச்சுக்கள். எழுத்தாளர், கவிஞர், நடிகர். இறுவட்டுக்கள் இதுவரை நான்கு வெளியிட்டுள்ளமை.

மீண்டும் மற்றுமோர் கலைஞர் அறிமுகத்திலே இளம் கலைஞர் வேலாயுதபிள்ளை ஜனனி அவர்களை சந்திப்போம்...

read more...

Friday 24 July 2009

நம் தமிழினம் இன்று............


சதைக் குவியலான தமிழினம்
சாதிகெட்டு நாதியற்று - இன்று
நயவஞ்சகர்கள் காலடியில்
கால் கஞ்சிக் கோப்பைக்கு
கையேந்திக் காணும் காட்சி
கண்னீரை நெருப்புத் துளியாக
உதிர்க்கின்றதே...


பெற்ற பிள்ளை எங்கே?
உற்ற அன்னை எங்கே?
பூமி தொடாத குழந்தையின்
ரீங்கார ஒலி எங்கே?
எதை எடுப்பது, யாரைத் தேடுவது..
போகும் திசை எங்கே?
கதறி அழ கஸ்ரப்படும் உடம்பு
கண்ணீரே வற்றி வறண்ட கண்கள்
காணும் போது இதயமே வெடிக்குதே...

தன் கால் பட்ட
இடமெல்லாம் தொட்டுத் தொட்டு
கொடிகட்டிப் பார்க்கும் இடமெல்லாம்
வந்தாரை வாழ வைத்து
தமிழ் மன்னர்கள் வாழ்ந்த இடமல்லவா....

உரித்த பழம்போல்
உதிரம் சொட்டச் சொட்ட
உடல்கள் - பிறந்த
குழந்தைக்கும் பால்
பொட்டிக்கு பதில்
பருத்த மருந்துக் கட்டு
தள்ளாடும் வயதிலும்
தலையில் குடும்பச் சுமை
பார்க்கும்போது தமிழ்
உதிரம் துடிக்குதே....

உழைத்து, உண்டு
ஓடி, ஆடிப், பாடி
கண்சொட்ட அன்னை
மடியில் படுத்துறங்கி
ஒட்டி உறவாடி
தான் வளர்த்த
மரம்,செடி, கொடியோடு கதைபேசி
வாழ்ந்த இடமல்லவோ - இன்று
போன காலமும் கண்ணீர் வடிக்கும்
சுடுகாட்டையும் விட
மோசமான எம் இடத்தைக் கண்டு...

அடியோடு வெட்டினாலும்
ஆலமரம் ஆட்டம் காணாது
அங்கே ஓர் இடத்தில்
அதன் விழுதாக ஓங்காரமாய்
ஓங்கி வளரும் தமிழினம்....
(இதுவும் நண்பர் தயாவின் கவிதைதான்)
read more...

பெயர் கொண்ட காதல்....

சுவை நயம்பட சுரந்து
செந்தமிழால் உனக்கொரு
கவி பாடவா?.............

இயற்கையை அழகாக்கி
வர்ணங்களைக் கொண்டு
உனக்கொரு
படம் தீட்டவா?...............

மனித இனம்
இதுவரை கண்டிராத
பளிங்குக் கற்களை கொண்டு
உனக்கொரு சிலை வடிக்கவா.........

சொல் அன்பே சொல்.....
இல்லை அன்பே இல்லை...

அத்தனையும் ஞாலத்தில்
பெயர் கொண்ட காதலர்கள்
காதலுக்கு செய்த சேவை...

சித்தத்தில் எனை நினைத்து
நித்தமும் நீ வடிக்கும்
வியர்வைத்துளிகொண்டு
எனக்கொரு சலவைக்கல்
செய்து தர முடியுமா
அன்பே......

அன்பே முயற்சியின் பயன்
நல் வினை எனில்
உலகம் முழுவதும் பேசப்பட்ட
காதலர்கள் வரிசையில்
எமக்கொரு இடமும் உண்டு
அன்பே....... அன்பே........... அன்பே............

(இக் கவிதை என் நண்பர் தயாவினுடையது....
read more...

Wednesday 22 July 2009

நம் சிறுவர்களின் எதிர்காலம் என்ன படங்கள் சொல்லும் கதைகள்....

நம் சிறுவர்களின் எதிர்காலம் தொடர்பிலே அதிகம சிந்திப்பவன் நான். பல்வேறு காரணங்களினால் நமது சிறார்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகிவிட்டன... சரி முதலில் படங்களைப் பாருங்கள் அப்புறம் கதைகளை சொல்லுங்கள்...

ஏன் கை ஏந்துகிறீர்கள் கை ஏந்தவேண்டியவர்களா நீங்கள்....
காத்திருப்பே எமது வாழ்க்கையாகிப்போனதேன்....
என்றுதான் எமக்கு விடிவு கிடைக்குமோ.....
இதுதான் என் அழகிய தேசம்...
தொலைத்துவிட்ட எம் நிம்மதியைத் தேடிடும் பயணம்....
என் சொந்த மண்ணிலும் காலுன்ற முடியவில்லை என்னதான் நடக்கிறது உலகமென்பது இதுதானா...
தடைகளை தாண்டுவதா இல்லையா .... முளையிலே தடை போடும் தேசமிது....
இங்கேயாவது சற்று நிம்மதியாக விளையாடலாமா....


ஏக்கத்தோடு சந்தொசப்படுவதேன்றால் முடியுமா.....
வாழ்க்கையின் சுமை கையிலும், மனதிலும்.....

(இந்த படங்கள் பல வலைத்தளங்களில் இருந்து பெறப்பட்டவை)
இப்போ கதைகளை நீங்களே சொல்லுங்கள்...
read more...

Tuesday 21 July 2009

கடந்து வந்த பாதையை மறக்கலாமா... 50 வது பதிவு...

இன்று நாம் என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் நாம் கடந்து வந்த பாதையினையும், நாம் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு உதவியவர்களையும் அடுத்த கணமே எம்மில் பலர் மறந்து விடுகின்றனர். நாம் எந்த நிலையில் இருந்தாலும் நாம் கடந்து வந்த பாதையினை மறந்து விடக்கூடாது....



நான் பதிவுலகத்துக்கு வந்து என்ன செய்திருக்கிறோம், எதை சாதித்து இருகி்க்கிறேன், எனக்குள்ளே நான் கேட்கும் கேள்விகள். நீங்களும் என்னைபார்த்து கேட்பது புரிகிறது. நான் எதுவும் சாதிக்க வில்லை. சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இன்று எமது சமுகம் எதிர் நோக்கும் பிரட்சனைகளையும், மறைந்து வரும் தமிழர் நம் கலை,கலாசாரங்களையும் வெளி உலகிற்கு கொண்டு வரவேண்டும் என்ற ஆதங்கம் என்னை விடுவதாக இல்லை. எமது சமுகம் எதிர் நோக்கும் பிரட்சனைகள்தான் எத்தனை எத்தனை. இவை எல்லாம் வெளி உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் முடியாத காரியமே எனது கருத்துக்கே சுதந்திரம் இல்லை எனக்கு எங்கே சுதந்திரம் வரப்போகிறது. எது எப்படி இருப்பினும் மறைந்து வரும் எமது கலை, கலாசாரம் தொடர்பாக நிறையவே எழுத வேண்டும் என்றொரு எண்ணம் இருக்கிறது.





இது என்னுடைய 50 வது பதிவு நான் பதிவுலகத்துக்கு வந்து படித்தவை ஏராளம், நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கின்றார்கள். மிகவும் சந்தோசம் அடைகின்றேன். நான் இந்த வலைப்பதிவினை ஆரம்பித்து இன்று சரியாக இரண்டு மாதங்கள் நான் கடந்த 21.05.2009 இல் தான் இந்த வலைப்பதிவினை ஆரம்பித்தேன். எல்லோரும் கேட்பது ஏன் எவ்வளவு விரைவாக பதிவிடுறிங்க எங்களுக்கு வாசிப்பதற்கு இடம் கொடுங்க என்றுதான். இன்னும் அதிகமாக எழுத வேண்டும் என்ற ஆதங்கம் இருக்கிறது அதுதான் எவ்வளவு வேகம்.




நான் பதிவுலகத்துக்கு வந்தது 19.02.2009 இல் தான் அப்போது நான் வேறொரு வலைப்பதிவினை வைத்து இருந்தேன். அது எங்கோ மாயமாகி விட்டது. என்னை பதிவுலகிற்கு அறிமுகம் செய்தவர் எனது நண்பரும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன அறிவிப்பாளரும், தொழிநுட்பக் கலைஞரும் பதிவருமான பிரபா. நண்பர் பிரபாவுக்கு என்றும் நன்றி கூறக்

கடமைப்பட்டுள்ளேன்





நான் எழுதுவதெல்லாம் சரியா நானும் ஒரு பதிவரா? என்றெல்லாம் எனக்குள் நான் அடிக்கடி கேட்கும் கேள்விகள். இன்று அதற்கு விடை கிடைத்து இருக்கின்றது. நானும் ஒரு பதிவர் என்பதற்கான அந்தஸ்த்து கிடைத்திருக்கின்றது. இரண்டு மாதத்திலே 50 பதிவுகள், எனது 50 வது பதிவிலே இரண்டு விருதுகள் வழங்கப்பட்டு இருக்கின்றது எல்லையற்ற சந்தோசம் அடைகின்றேன்.





என்னை உற்சாகப்படுத்திய எனது நண்பர்களுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். பதிவுலகிற்கு வருவதற்கு முன்னர் கவிதை எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தது ஆனால் எழுதவில்லை. கவிதை என்று இல்லாமல் கிறுக்கல்கள் என்று எனது கவிதைகளை பதிவிட்டேன். நண்பர்களின் பாராட்டுக்கள்தான் நான் எழுதும் அத்தனையும்.



நான் பதிவுலகத்திற்கு வந்து பல நல்ல நண்பர்களை சந்தித்து இருக்கிறேன். நான் அன்று முதல் இன்றுவரை என்றும் மதிக்கின்ற ஒரு நல்ல மனிதர். அறிவிப்பாளர் லோஷன் அண்ணா அவர்கள் எனக்கு முதன் முதலில் பின்நூட்டமிட்டது எனக்கு இன்னும் எழுத வேண்டும் என்ற ஆவலை தூன்டியது. லோஷன் அண்ணாவுக்கும் எனது நன்றிகள். லோஷன் அண்ணா எனக்கு முதன்முதலில் வழங்கிய பின்னூட்டம் இதுதான் "LOSHAN கூறியது... உங்கள் பார்வைக் கோணம் அருமை சகோதரா..இந்த பிஞ்சுகளின் எதிர்காலம் பற்றிப் பெரிதாக கவலைப்பட பெரியவர்கள் முன்வரவேண்டும்." இது எனக்குக் கிடைத்த முதல் அங்கிகாரம்.





அடுத்து நானும் ஒரு பதிவர் என்ற அந்தஸ்தை பட்டாம் பூச்சி விருது மூலமாகத்தந்த முனைவர் இரா. குணசீலன் அவர்களுக்கும் எனது நன்றிகள். இவரது இலக்கியப்படைப்புகளை கண்டு வியந்தவன் நான்.





எனக்கு பல வாசகர்களையும் நண்பர்களையும் தேடித்தந்த தமிழிஸ் தமிழ்மணம் இரண்டுக்கும் எனது விசேட நன்றிகளோடு ஏனைய திரட்டிகளுக்கும் எனது நன்றிகள்.





எனக்கு சந்தோசத்துக்கு மேல் சந்தோசத்தை கொடுக்கும் விடயம்தான். நண்பர் அக்பர் அவர்களினால் வழங்கப்பட்டிருக்கும் சுவையார்வ பதிவு/பதிவர் விருது. அவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.





இந்த விருதினை நானும் கொடுக்கவேண்டுமே.....


1 .பிரபா (விழியும் செவியும்) இவர் தனது வலைப்பதிவிலே நல்ல கவிதைகளை தொகுத்து பதிவிடுவதோடு சிந்தனை கருத்துக்களையும். பல அறிவுபூர்வமான பதிவுகளையும் தந்து வரும் ஒருவர். இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்திலும் பல அறிவுபூர்வமான பல நிகழ்சிகளோடு ஒரு தொழிநுட்பக் கலைஞராகவும் வலம் வருபவர். நேரத்தை இவர் தேடிப்பிடிக்க வேண்டி இருக்கிறது.


2 யாழினி (நிலவில் ஒரு தேசம்) இவர் பல கவிதைகளையும் பல அறிவுபூர்வமான கட்டுரைகளையும் தரும் ஒருவர்.


3. கானா பிரபா (றேடியோஸ்பதி) இவர் வித்தியாசமான முறையிலே இசைத்துறை சார்ந்ததாகவும் பல்வேறு பட்ட பதிவுகளையும் வழங்கி வருகின்றார். சினிமாப் பாடல்கள் பற்றிய பரந்த அறிவு கொண்டவர் என்று சொன்னால் அது மிகையாகாது. வளர்ந்து வரும் அறிவிப்பாளர்களுக்கு ஒரு சினிமாத் தகவல் களஞ்சியம் என்று சொல்லலாம்.


4. சிந்துகா (சிந்து) இவர் பல கவிதைகளோடு கட்டுரைகள் சிந்தனைக் கருத்துக்களையும் தமது பதிவுகளிலே வழங்கி வருகின்றார்.


5 .டொக்டர்.எம்.கே.முருகானந்தன் (ஹாய் நலமா) இவர் தனது வலைப்பதிவின் மூலமாக பல்வேறுபட்ட மருத்துவத்தகவல்களோடு பல ஆக்கபூர்வமான கட்டுரைகளையும் வழங்கி வரும் ஒருவர்.



6 .கலை (கலை-இராகலை) இவரும் மலையகம் சார்ந்த பல கட்டுரை கவிதைகளோடு பல நல்ல கருத்தாழமிக்க கட்டுரைகளையும் வழங்கி வருகிறார்.




தொடருங்கள் நண்பர்களே இன்னும் பல நல்ல விடயங்களை பதிவுகளாகத் தர வேண்டும் என்பதே எனது அவா...
read more...

Sunday 19 July 2009

தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களில் சிறப்பான இடத்தினைப் பெறும் கொம்புமுறி விளையாட்டு... .

தமிழர் எமது கலை, கலாச்சாரங்கள் மறைந்துவரும் நிலையில். நான் நீண்ட நாட்களாக அறிய ஆவலாக இருந்த விடயம் ஒன்றுக்கு முற்று முழுதான விளக்கம் கிடைத்திருக்கின்றது. அது வேறு ஒன்றுமல்ல. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கொம்புமுறி விளையாட்டு பற்றிய பல்வேறு விடயங்களை நேற்று அறிந்து கொள்ள முடிந்தது.

எனது இகிராமம்கூட கொம்புமுறி விளையாட்டுக்கு பிரசித்தி பெற்ற ஒரு கிராமமாகும். க்கிராமத்திலே கொம்புமுறி விளையாட்டு இடம் பெற்ற இடம் கொம்புச் சந்தி என்று இப்பொழுதும் அழைக்கப்படுகிறது ஆனால் இங்கு இருக்கும் அநேகமானவர்களுக்கு கொம்புமுறி விளையாட்டு என்றாலே என்ன என்று தெரியாது.


கலைஞர் அறிமுகத்திலே கலந்து கொண்டிருக்கும் கலாபூசனம் ஆறுமுகம் அரசரெத்தினம் அவர்களை நேற்று சந்திக்கக் கிடைத்தது. அவர் கொம்புமுறி விளையாட்டு தொடர்பாக பூரணமான விளக்கத்தினைத் தந்ததோடு. அவரால் கொம்புமுறி விளையாட்டு தொடர்பாக வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்தினையும் தந்தார். அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


கண்ணகை அம்மனுடன் தொடர்பு பட்டதே கொம்புமுறி விளையாட்டு. மாநாய்கரின் வளர்ப்பு மகள். மாசாத்துவரின் மருமகள். கோவலனுடைய மனைவி. இவர்கள் மூவரும் செட்டிகள். இதனால்தான் கண்ணகியும் செட்டிச்சி அம்மை. மாதவிக்குப் பொன்தோற்றகோவலருடன் மதுரைக்குச் சென்ற கண்ணகை ஆயர் இடைச் சேரியில் தங்கியிருக்க. கோவலன் கண்ணகியின் இடது காற்சிலம்பை விற்க மதுரை நகர் வீதியிலே விலை கூறினான்.



பாண்டிமாதேவியின் சிலம்பை பறி கொடுத்த தட்டான். சிலம்புத் திருடன் கோவலன் என்று பாண்டி மன்னனிடம் குற்றம் சாட்ட விதி வலியால் தீர விசாரித்தறியாத மன்னன் கோவலனை மழுவால் வெட்டுவிக்கும்படி கட்டளை இட்டான்



கோவலன் கொலையுண்டான். இதை கண்ணகை அறிந்தாள். கடும் சினம் கொண்டாள். "காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என் கணவன்? என்று செங்கதிர்ச் செல்வனிடம் கேட்டாள் . உன் கணவனை கள்வன் என்ற இவ்வூரை தீ உண்ணும் என்றான் செங்கதிர்ச் செல்வன். தலைவிரி கோலம். ஒரு கையில் சிலம்பும் மறு கையில் வேப்பம் குழையோடும். மன்னனிடம் சென்று வாதாடி வழக்குரைத்து.சிலம்புடைத்துவழக்கு வென்றாள்.



மன்னனும் மனைவியும் உயிர் நீத்தனர். இடது முலை திருகி நகர் எரித்தால். ஆயர் இடைச் சேரிக்கு வந்தாள். ஆய்ச்சியர் வெண்ணை தயிர் என்பவற்றை அவள் மார்பிலே அப்பினர். சீற்றத்துடன் வந்து கொண்டிருந்த கண்ணகியின் முன்னால் கோவலன் கட்சி, கண்ணகை கட்சி எனப் பிரிந்து கொம்புமுறித்து விளையாடி கண்ணகை கட்சிக்கு வெற்றி கொடுத்து இளைஞர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். சினம் தணிந்த கண்ணகை சிரித்து மகிழ்ந்தாள். தாயே குளிந்தளிர்வாய் என்று அவர்கள் வேண்ட அம்மனும் குளிர்ந்தாள். இதுதான் கொம்புமுறி விளையாட்டு வந்த வரலாறு.


"கொம்பு எனப்படுவது வளைந்த மரத்தடியாகும். வெட்சி, கருவீரம், கரயாக்கு என்ற மரக்கிளைகளே பயன் பட்டன. வட சேரிக்கொம்பு 90 பாகை வளைவிலும் தென்சேரிககொம்பு அதை விடக்கூடிய வளைவிலும் இருக்கவேண்டும் என்பது விதி. இரண்டே முக்கால் விரல்க்கடையில் சரிகொம்பு இருக்க வேண்டும். இரண்டு விரக்கடை குச்சித்தோடு இருக்கவேண்டும். கொம்புகளின் அளவுப் பிரமாணம். ஏனைய கட்சியினால் பரிசீலிக்கப்படும். கொம்புகளுக்கு மூன்றரை முழம் (ஐந்தரை அடி) நீழமான பில்லிக்கம்புகள் வைத்து வெளுக்கயிற்றினால் வரிந்து பனிச்சை மரத்தின் கைகளின் பசை பூசி காய வைத்து எடுப்பர். கொம்புக்கு "அரிப்பு" எனப்படும் கயிறு கட்டப்படும்.

தூண்டில் போடுவோருக்கு தூண்டில் அரிப்புப் பற்றியும் நன்கு தெரியும். அரிப்பு என்பது ஒரு ஆள் நீளமான சுமார் ஆறடி நீளக் கயிறாகும். இது வெள்ளை ஆத்தி நாரினால் திரிக்கப்பட்ட வெளுக் கயிறாகவோ, மான் தோலினால் திரிக்கப்பட்ட கயிறாகவோ இருக்கும். இந்தக் கயிற்றுக்கு ஆமணக்கு என்னை பூசுவது வழக்கம். தென்சேரி வாரக் கொம்பு அரிப்பிலே உள்ள கொழு தவனையுடாக பெரிய வடத்தினைப்பூகுத்தி பேரு மரமொன்றின் அடியில் பிணைத்து விடுவர். வட சேரிக் கொம்பின் கொளுத் தவணையுடன் ஒரு உலக்கை போடப்படும். வட சேரிக்கொம்பின் கொலு தவணையில் நீழமான வடமும் பூட்டப்படும்.

தென்சேரி வாரத்தினர் தமது கொம்பினை தயாராகப் பிடித்துக்கொள்ள வடசேரி வாரத்தினர் தமது கொம்பினைப் பூட்டுவதத்கு தயாராக நிற்பர். நீழமான வடத்திலே வடைசேரித் தென்சேரிப் பொது மக்கள் இழுப்பதட்குத் தயாராக நிற்பர். கொம்பு பூட்டும் போது தத்தமது கொம்புகளை பாது காக்கும் வகையில் பில்லி மிரட்டும் இழுபறி இடம் பெரும். சரியாகப் பூட்டப்பட்டதும்.பொது மக்களின் இழுவையினால் கொம்பு ஒன்று முறிந்து விடும். முறியாத கொம்புக்குரியவர்கள் வெற்றி ஆரவாரம் செய்வர்.இரு சேரிக்கும் பொதுவாக உள்ள ஈடகத்தை அலங்கரித்து அதில் தமது கொம்பினை வைத்து கொம்புமுறிப்பாடல்களை பாடுவார்.



வசந்தன் கூத்துக்கள், பொய்க்கால் குதிரை ஆட்டம், வினோத உடை அலங்காரம் என்பன இரவு முழுவதும் இடம் பெறும். கொம்பு முறிப்பில் கொம்பின் வலிமையோடு பல மந்திர, தந்திர வித்தாண்மைகளும் பயன்படுத்தப்பட்டன.

தோற்ற கட்சியினர் மறுநாள் போட்டிக்கு கொம்பு ஆயத்தம் செய்வர். போட்டி பலநாள் தொடரும். சுள்ளிக்கொம்பு 01, கொம்புத்தட்டுக் கொம்பு 03, கூடாரக் கொம்பு 05, ஏடகக் கொம்பு 07, தண்ணீர்க் கொம்பு 01 முறித்து விளையாடுவதற்கு இரண்டு பிரிவுகள் தேவை. கோவலன் கட்சியை வடசேரி என்றனர். கண்ணகை கட்சியை தென்சேரி என்றனர்.

கொம்புமுறி விளையாட்டின்போது பல சுவாரசியமான சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் இன்னும்  பல தகவல்களையும் கலாபூசனம் ஆறுமுகம் அரசரெத்தினம் அவர்களிடம் இருந்து அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.
read more...

Saturday 18 July 2009

தமிழர் நம் கலைஞர்கள் தொடர் 1

எனது நீண்டநாள் ஆசை இன்று நிறைவேறுகின்றது. எமது கலை, கலாச்சாரங்கள் இன்று பல்வேறு பட்ட காரணங்களினால் மறைந்துகொண்டு வரும் இந்த நிலையில் இன்றும் எமது கலைகளை வளர்ப்பதிலே பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் பல கலைஞர்கள் பாடுபட்டு வருகின்றனர். இவர்களில் ஒரு சிலரே வெளி உலகிற்கு அறிமுகமாகி அல்லது அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். பலர் இலைமறை காயாகவே இன்றும் எமது கலைகளை வளர்ப்பதிலே ஈடுபட்டு வருகின்றனர்.


இலை மறை காயாக இருக்கின்ற எமது கலைஞர்களையும், அவர்களது கலைத்துறைப்பணி பற்றியும் வெளி உலகிற்கு எப்படி என்னால் அறிமுகப்படுத்த முடியும் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதுதான். நான் வலையுலகுக்குள் பிரவேசித்தேன். இன்றுதான் எனது ஆசை நிறைவேறுகின்றது. இந்தத் தொடர் பதிவிலே இலங்கயைச் சேர்ந்த எந்த ஒரு கலைஞரும் கலந்துகொள்ள முடியும். என்னால் எல்லோரையும் அறிந்து கொள்ள முடியாதல்லவா முடிந்தவரை தகவல்களை சேகரித்துக்கொண்டிருக்கிறேன்.
இந்த தொடர் பதிவில் பங்குபற்ற விரும்புகின்ற கலைஞர்கள் shanthruslbc@yahoo.com எனும் மின்னஞ்சல் முகவரியோடு தொடர்புகொண்டால் அவர்களையும் இணைத்துக் கொள்ள ஆவலாக இருக்கிறேன். அத்தோடு இத்தொடர் வெறுமனே கலைஞர்களை பற்றி மேலோட்டமாக பார்ப்பதை விடுத்து முற்று முழுதான தகவல்களையும் தர இருக்கின்றது. இலங்கயைச் சேர்ந்த எந்த ஒரு கலஞருக்கும் இங்கே இடம் கொடுக்கப்படும்.

இந்த முதலாவது தொடரிலே நான் தமிழ் இலக்கியத்தை கற்கவேண்டும் என்று ஆசைப்பட்டதற்கு காரணமாக இருந்தவரும் ஒரு சிறந்த கலைஞருமான கலாபூசனம் ஆறுமுகம் அரசரெத்தினம் அவர்களைப்பற்றியும் அவரது கலைத்துறைப்பயணம் பற்றியும் பார்க்க இருக்கின்றேன்.
இவரைப்பொறுத்தவரை ஒரு பல்துறை சார்ந்த கலைஞன் என்றுதான் சொல்லவேண்டும். இவருக்கு இலக்கியத்துறையிலே கலாபூசனம் விருது கிடைத்திருந்தாலும். தமிழர் கலைகளை வளர்ப்பதிலே அயராது பாடுபட்டு வரும் ஒருவர்.


இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளைக்கிராமத்தை சேர்ந்தவர். இவரது பாடசாலைக் காலத்திலேயே கலைகளிலே அதிக ஈடுபாட்டுடன் செயற்பட்டவர் என்பது அவரிடம் இருக்கின்ற பல நினைவுச் சின்னங்கள் சான்றாகின்றன. பாடசாலைக்காலத்திலே விவாத அரங்குகளை நடாத்துவதிலேதான் தனது கலைத்துரைப்பயணம் ஆரம்பித்ததாகச் சொல்கிறார். .

இவர் இப்பிரதேசத்திலே இருக்கின்ற கலைஞர்களை ஒன்று திரட்டி களுதாவளைக் கலைக்கழகம் எனும் பேரிலே ஒரு கலைக்கழகத்தினையும், திருவருள் நூல் வெளியீட்டுக்குழு என்ற ஒரு அமைப்பினையும் உருவாக்கி பல நூல்களையும் வெளியிட்டு வருகின்றார். களுதாவளை கலைக்கழகம் மூலமாக பல கலைஞர்களை ஒன்று திரட்டி தமிழர்களுக்கே உரித்தான கரகம், கூத்து, வில்லிசை, போன்றவற்றை அரங்கேற்றி வருகின்றார்.
இவர் சிறந்த பேச்சாளரும்கூட. இவரது பேச்சினை எவரும் விரும்பி ரசிப்பார்கள். இவர் ஆலயங்களிலே சமய சம்மந்தமான பேச்சுகளை வழங்குவதில் வல்லவர், அதேபோல் இலக்கியப பேச்சுக்களிலே சளைத்தவரல்ல. இதனால்தான் இவருக்கு வெண்கலம் என்கின்ற பெயரும் வரக் காரணமாகிவிட்டது.


அதே போன்று இவர் பாடல்கள் எழுதிவருகின்றார் அதிலும் குறிப்பாக பக்திப்பாடல்களை எழுதுவதிலே சிறப்பானவர். இப்பிரதேச ஆலயங்கள் பலவற்றினைப் பற்றிய பல பாடல்களை இயற்றி இருக்கின்றார். அத்தோடு பல பாடல்கள் அடங்கிய இறுவட்டுக்களையும் வெளியிட்டு இருக்கின்றார். இவரது திருவருள் நூல் வெளியீட்டுக்குழவின் மூலமாக பல புத்தகங்கள் இதுவரை வெளிவந்தது இருக்கின்றன.


இவரைப்பற்றிய இன்னும் பல விடயங்களும் இவரது கலைத்துறைப் பயணம் தொடர்பான பல விடயங்களையும். அவருக்கு கிடைத்த விருதுகள் பரிசுகள் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாகவும் அடுத்த பதிவிலே பார்க்கலாம்.


தொடரும்....

read more...

Friday 17 July 2009

இரட்டிப்பு மகிழ்ச்சி

நான் எனது ஐம்பதாவது பதிவினை எட்டிப்பிடிக்கலாம் என்று பதிவுகளை இட்டு வருகின்றேன். விரைவில் எனது ஐம்பதாவது பதிவினை சந்திக்கக் காத்திருக்கும் வேளையிலே ஒரு சந்தோசமான செய்தி கிடைத்தது. அது வேறு ஒன்றுமில்லை. எனக்கும் பட்டாம் பூச்சி விருது கிடைத்ததுதான்.

எனக்கு இந்தப்பட்டாம் பூச்சி விருது கிடைத்ததிலே இரட்டிப்பு மகிழ்ச்சி. நான் மிகவும் மதிக்கின்ற, தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியிலே தனது பங்களிப்பை வழங்கிவரும் முனைவர் இரா. குணசீலன் அவர்களினால் எனக்கு இந்த பட்டாம் பூச்சி விருது கிடைத்திருக்கின்றது. அவருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு. அவரின் தமிழ் இலக்கியப்பணி தொடர வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் பதிவுலகுக்கு வந்து நானும் ஒரு பதிவர் என்பதற்கு எனக்குக் கிடைத்த முதலாவது அங்கிகாரம் இது என்று நான் நினைக்கிறேன். இந்த வேளையில் என்னை பதிவுலகிற்கு அறிமுகப்படுத்திய நண்பர் பிரபாவுக்கும் நன்றி கூறுவதோடு. எனக்கு உற்சாகமளித்த ஏனைய வலையுலக நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.

எனக்குக் கிடைத்த இந்தப் பட்டாம் பூச்சி விருதினை நானும் ஐவருக்கு கொடுக்கவேண்டுமே.

1. லோஷன் (லோஷனின் களம்) நான் இவரது ரசிகன் என்று சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவருடைய பதிவுகள் பலதுறை சார்ந்ததாக இருப்பதோடு உடனுக்குடன் செய்திகளை பதிவிடுவதிலே வல்லவர். அதிலும் விளையாட்டுச் செய்திகள் என்றால் முந்திக்கொண்டு பதிவிடுபவர்.

2. சுபாங்கன் (ஐந்தறைப்பெட்டி) இவரும் பல துறை சார்ந்த பதிவுகளோடு வலம் வருபவர். தொழினுட்ப தகவல்களை பதிவிடுவதிலே சிறந்தவர்.

3. ஹேமா (வானம் வெளித்த பின்னும்) இவரும் பல கருத்தாழமிக்க சிந்திக்க தூண்டுகின்ற பல கவிதைகளை தந்து வரும் ஒருவர்.

4. சுசி (யாவரும் நலம்) இவரும் பலதுறை சார்ந்ததாக தனது வலைப்பதிவினை முன்னெடுத்து வருகின்றார். இவரது பதிவுகளிலே சிந்தனையை தூண்டக்கூடியதாக பல விடயங்களை நகைச்சுவையாக குறிப்பிட்டு இருப்பார்.

5. sshathies இவர் அண்மையில்தான் எனக்கு அறிமுகமானாலும் இவர் விளையாட்டு, சினிமா, கட்டுரைகள்,தொழினுட்பம் என்று பலதுறைகளிலும் பதிவிட்டு வரும் ஒருவர்.

இவர்கள் ஐவருக்கும் நான் பட்டாம் பூச்சி விருது கொடுப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.

read more...

புரியாத புதிர்....

நான் - உன்னை
காதலிப்பதை
இன்னுமா -நீ
புரியவில்லை - இல்லை
புரியாததுபோல்
நடித்துக்கொண்டு
இருக்கிறாயா...

காதலித்தால்
கவிதை
வரும் என்பது
உண்மைதான் - இன்று
கவிதைகளாகவே
எழுதித்தள்ளுகிறேன்
என் கவிதைகளை
பார்த்தே -என்
நண்பர்கள்
கேட்கிறார்கள்
காதலில்
விளுந்துவிட்டாயா
என்று - நீ
மட்டும் - என்
என் காதலை
உணர்ந்து
கொள்ளவில்லை
நான் உன்னிடம்
உன் இதயத்தில்
ஓரிடம்தானே
கேட்டேன்....
read more...

புதிய வலைப்பதிவர்கள் followers வசதியினைப்பெற மேலும் சில வழிகள்...

புதிய வலைப்பதிவர்கள் தமது வலைப்பதிவில் followers வசதியை பெறுவது எப்படி. எனும் பதிவின் மூலமாக புதிய பதிவர்கள் எப்படி போல்லோவேர்ஸ் வசதியினைப்பெறலாம் என்று குறிப்பிட்டு இருந்தேன். இதனை நான் பல மாத இணையத்தேடலின் மூலமாகவே பெற்றுக்கொண்டேன். அதை புதிய பதிவர்களோடு பகிர்ந்து கொண்டேன். பலர் இதனால் நன்மை அடைந்து இருக்கின்றார்கள்.

இன்று நண்பர் நட்புடன் ஜமால் அவர்கள் என்னோடு தொடர்புகொண்டு இன்னும் followers வசதி பற்றி அறிந்து கோள்ளக்கூடிய வழிகளை சொல்லி இருந்தார் அவற்றினைவும் உங்களுக்காகத்தருகிறேன்.

தீர்வு 1
தீர்வு 2


முயற்சி செய்யுங்கள் நண்பர்களே....
அதேபோல் நண்பர் நட்புடன் ஜமால் என்னுமோர் விடயத்தினையும் சொல்லி இருந்தார்

தூய நீர் என்பது ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜனின் எளிமையான கூட்டுக் கலவை. அது வாசமற்றது, வண்ணமற்றது, சுவையற்றது
read more...

Thursday 16 July 2009

சிந்தனைச் சிதறல்கள்...

கற்பனை
என்றாலே - என்ன
என்று
தெரியாமல்
இருந்தேன் - இன்று
எனக்கு
கற்பனைகளே
அதிகமாகிவிட்டது
உன்னைப்பற்றி
மட்டுமே.....

***********************************************

உறங்கிக்கிடந்த -என்
கற்பனைகளை
தட்டி எழுப்பி
சிறகடித்து
பறக்கவிட்டு
சின்னாபின்னமாய்
சிதறடித்தாய் -இன்று
என்னைப்பற்றி
சிந்திக்காமல்
இருப்பதேன்...
***********************************************
read more...

Wednesday 15 July 2009

இப்படியும் நடக்கிறது... இப்படியொரு திருட்டு...




இன்று பல்வேறு வழிகளில் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இதில் அதிகமாக பாதிக்கப் படுவது. ஏழை மக்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

நேற்று இடம் பெற்ற சம்பவம் ஒன்றிலே பலர் பல இலட்சம் ரூபாய்களை இழந்து நிக்கின்றனர்.

இன்று வியாபாரப்போட்டியின் காரணமாக பல நிறுவனங்கள் தமது பொருட்களை வீடுகளுக்கே கொண்டு வந்து விற்பனை செய்வது அதிகரித்துவிட்டது.

நேற்று ஒரு கிராமத்திலே வருகை தந்த சிலர் தாங்கள் கொழும்பிலே ஒரு கம்பனியிலே இருந்து வருவதாகவும், இன்று கல்முனையிலே தமது கிளையினை திறக்க இருப்பதாகவும், மிகவும் குறைந்த விலையிலே மின் உபகரணங்களை விற்பனை செய்ய இருப்பதோடு. அவர்களிடம் உடனடியாக முற்பணம் செலுத்துபவர்களுக்கு விசேட விலைக்கழிவில் பொருட்கள் வழங்கப்படுவதோடு. அப்பொருட்கள் இன்று தங்கள் வீடுகளுக்கு கொண்டு வந்து வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

குறைந்த விலையில் பொருட்கள் என்றால் வாங்குவதற்கு ஆசை வரும்தானே. அதுவும் இவர்கள் சற்று பின்தங்கிய மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு சென்று பல ஆசை வார்த்தைகளை கூறி அவர்களை நம்பவைத்து இருக்கின்றார்கள். இவர்கள் தவனைக்கட்டன முறையிலே மின்சார உபகரணங்களை வழங்கப்போவதாகவும் குறிப்பிட்ட ஒரு தொகை பணத்தினை உடனடியாக செலுத்தும் படியும் கூறி இருக்கின்றனர்.

அவர்கள் சந்தேகப்படும் அளவிலும் இருக்கவில்லை. இதனால் பலர் பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை அவர்களிடம் கொடுத்துவிட்டனர். ஒவ்வொருவரும் பல மின்சாரப்போருட்களை பெறுவதற்கு. விண்ணப்பித்து இருந்தனர்.

இன்று காலை ஒன்பது மணிக்கு பொருட்கள் கொண்டு வருவதாக சொல்லி இருக்கின்றார்கள். ஆனால் பிற்பகல் இரண்டு மணியாகியும் பொருட்கள் வரவில்லை. அவர்களால் வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை மேற்கொண்டால் அந்த இலக்கம் போலியான இலக்கம்.

பலர் தமது நகைகளை அடகு வைத்துக்கூட காசு கொடுத்திருக்கின்றார்கள். (திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது) திருந்துவார்களா இவர்கள்...
read more...

நம் சிறுவர்களின் நிலைதான் என்ன... படங்கள் சொல்லும் கதைகள்

அறியாத பருவம் விடுங்கள்........ அவன் எதையும் அறியும் காலம் தொலைவில் இல்லை....


வாழ்க்கையின் சுமை என்பது இவ்வளவுதானா இன்னும் இருக்கிறதா

எதற்காக இந்த ஆழ்ந்த சிந்தனை நம் சிந்தனைகள் சிதறடிக்கப்பட்டு விட்டனவே...

????????????இதுதான் வாழ்க்கை என்பதா.....
இதுதான் உலகமென்பதா....

இதுதான் நம் விதி....


நீங்களே கதைகளை சொல்லுங்கள்.......
read more...

Tuesday 14 July 2009

இன்றைய சிறுவர்களின் கல்வி நிலைதான் என்ன....


இந்தப்பதிவு மூலமாகவும் சிறுவர்கள் பற்றியே பேசப்போகின்றேன். என்னடா இவன் சிறுவர்கள் பற்றியே பேசிக்கொண்டு இருக்கின்றான் என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. எமது சிறுவர்கள் பல்வேறு வழிகளிலே பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.அவர்களைப் பற்றிவும் அவர்களின் எதிர்காலம் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இன்று இலங்கையைப் பொறுத்தவரையில் எமது சிறுவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகுகின்ற வீதம் அதிகமாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகளிலேதான் இந்நிலை அதிகமாகக் காணப்படுகின்றது

நாட்டில் இடம் பெற்ற உள்நாட்டு யுத்தம் முக்கிய காரணம் என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதற்கில்லை. இதைத்தவிர இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன.


ஆறாம் ஏழாம் தரங்களிலே கல்வி கற்கின்ற சிறுவர்களே அதிகமாக பாடசாலையை விட்டு இடை விலகிச் செல்கின்றனர். இதன் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்த பொழுது ஆறாம், ஏழாம் தரங்களுக்கு வருகின்றபோதே அவர்களுக்கு சமுகத்தை பற்றிய உணர்வு தோன்றுகின்றது. அவர்கள் ஆறாம்,ஏழாம் தரங்களை அடையும் வரை அவர்கள் தாங்கள் எழுத வாசிக்க தெரியாமல் இருக்கின்றோமே படிக்கவேண்டுமே என்று சிந்திக்காமல் விளையாட்டுத்தனமாக இருந்து விடுகின்றனர்.
இவர்கள் சமுகத்தை பற்றிய உணர்வு வருகின்ற போது. தாங்கள் எழுத வாசிக்க தெரியாமல் இருக்கின்றோமே, என்ற ஒரு சிந்தனை தோன்றுகின்றது. இவர்கள் பாடசாலையை விட்டு விலக நினைக்கின்றார்கள். காரணம் வகுப்பிலே இருக்கின்ற சக மாணவர்கள் தங்களை கேலியாக பார்ப்பார்கள், தாங்கள் கேலி நிலைக்கு சென்று விட்டோமே என்ற ஒரு மனப் பாண்மை தோன்றுகின்றது. இதனால் படிப்படியாக பாடசாலையை விட்டு இடை விலகுகின்றனர்.

இவ்வாறு இடை விளகுகின்றவர்களின் நிலை .கேள்விக்குறியாகின்றது இவர்கள் பல்வேறு பட்ட பிரட்சனைகளை எதிர் நோக்குகின்றனர். இது ஒரு புறமிருக்க. இவர்கள் இவ்வாறு இடை விலகுவதை தவிர்ப்பதற்குரிய வழிகளை ஆராய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.


இவ்வாறு இடை விளகுபவர்களின் வீதம் கிராமப்புரங்களிலேதான் அதிகமாகக் காணப்படுகின்றன. இவர்களை பற்றி ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது. இவர்களது பெற்றோரும் கல்வியிலே பின் தங்கி இருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றது. இவர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வியிலே அக்கறை செலுத்தாதவர்களாக இருக்கின்றனர். முதலிலே இப்படியான பெற்றோருக்கு சிறுவர்களின் கல்வியின் அவசியம் பற்றி. பல விழிப்புணர்வுக் கருத்தரங்கு போன்ற பல்வேறு செயற்பாடுகளை செயட்படுத்த வேண்டி இருக்கின்றது.
அத்தோடு நாங்கள் உடனடியாக இடைவிலகிய சிறுவர்களை பாடசாலையில் சேர்த்துக் கொள்வதனால் அவர்கள் மீண்டும் இடை விலகக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகவே காணப்படுக்கின்றன. முதலிலே இவர்களை தனிப்பட்ட ரீதியிலே அணுகி இவர்களை எழுத வாசிக்க பழக்க வேண்டும். பல சிறுவர்கள் நன்றாக படிக்கக்கூடியவர்கள் இன்று பாடசாலையை விட்டு இடை விலகியவர்களாக இருக்கின்றனர். அவர்கள் கண்டறியப்பட்டு இன்று கல்வியிலே முன்னிலையில் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை தனிப்பட்ட ரீதியிலே எழுத வாசிக்க பழக்கிய பின்னர் அவர்களை பாடசாலையில் சேர்க்கின்ற போது அவர்களது மனதிலே இருந்த படிக்கத் தெரியாதவர்கள் என்ற குற்ற உணர்வு நீங்குகின்றது. கல்வியிலே முன்னிலைக்கு வரக்கூடிய சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கின்றன. இதில் பாடசாலையை விட்டு இடை விலகிய மாணவர்கள் தொடர்பாக பல்வேறு செயத் திட்டங்களை மேற்கொண்டு வரும் களுதாவளை கல்வி அபிவிருத்தி ஒன்றியம் வெற்றியும் கண்டுள்ளது. பல இடை விலகிய மாணவர்களின் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி அவர்களை பாடசாலைகளிலே மீண்டும் சேர்த்து இன்று கல்வியிலே நல்ல நிலையில் இருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றது.

இன்னும் பல காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். காரணங்களையும் தடுப்பதற்குரிய வழிவகை என்ன?... அவ்வப்போது உங்களுக்காக வந்து சேரும்.
read more...

Monday 13 July 2009

விதியா சதியா

நான்
காதலைப்பற்றி
அறியாத போது
காதலிக்க கற்றுத்
தந்தவன் - நீ
கற்பனை என்பதே
என்னவென்று
தெரியாதபோது -என்
கற்பனை
கதவுகளை
திர்ரந்துவிட்டுஎன்
கற்பனைகளை
அலைமோத விட்டவன் - நீ

அன்று - நம்
காதல் அரும்பியபோது
சீதனமா -சீ.....
என்றவன் -நீ
இன்று கரம்பிடிக்கும்
நேரம்
சீதனமும்
சீர்வரிசைகளும்
சீக்கிரமே
வரவேண்டும்
என்கிறாய்....

இதை - என்
விதி என்பதா...
இல்லை - உன்
சதி என்பதா.....
read more...

நம்ம உலகத்தில இப்படி எல்லாம் நடக்குதுங்கோ....

இதுதான் எங்கள் நம்பிக்கை.... இப்பவாவது எங்க தும்பிக்கைய நம்புங்க...
தத்தித் தாவுது மனமே......... இல்ல........... இல்ல...... மீனே......
அட நம்ம மனுசங்க படுற பாட்ட பாருடா மச்சான்... பாவப்பட்ட ஜென்மங்க...

என்ன இதுவும் ஒரு நம் நாட்டு யுத்த விமானமா இருக்குமோ.... ???????????

போடு தாளம் போடு.....
அமா நம்ம தமிழனுகள் மரத்துக்கு கீழ எல்லாம் தூங்குரானுகளாம் உண்மையா மச்சான்..... பாவமடா நாம் நிம்மதியா தூங்குறம்...

நாங்களும் இனி ஆயுதம் ஏந்தத்தான் வேணும் இந்த மனிசனுகளிண்ட அடாவடிகளுக்கு எதிரா...
நாங்கதான் வீரனுங்க.......

அட பாவிங்களா மேல இருக்கிற மிருகங்கள கூட பார்க்காமலா இப்படி செய்றீங்க..... அத பார்த்தாவது திருந்துங்கடா...
read more...