Showing posts with label தமிழ் மொழி. Show all posts
Showing posts with label தமிழ் மொழி. Show all posts

Sunday, 5 February 2012

மட்டக்களப்பு பேச்சுத் தமிழுக்கு செந்தமிழ் அங்கிகாரம்..

மட்டக்களப்பு பேச்சித் தமிழுக்கு யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் செந்தமிழ் அங்கிகாரம் வழங்கியிருப்பது ஒன்றும் ஆச்சரியப்படும் ஒன்றல்ல. மட்டக்களப்பு தமிழர்கள் எவ்வாறு பூர்வீகக் குடிகளோ அவ்வாறே அவர்கள் பேசும் தமிழ் செந்தமிழாகப் போற்றப்படுவதற்க்கு வடமொழிக்கலப்பு மிகவும் குறைவாக இருப்பது ஒரு காரணமாகும் என பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் வெளியான மட்டக்களப்பு மாநாட்டு நினைவு மலர்-1996 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தமிழர்கள் பேசும் தமிழ் பழந்தமிழ் இலக்கியங்களில் எல்லாம் இழையோடி நிற்பதனை சான்றாதாரத்துடன் நிரூபித்திருக்கும், இலங்கையில் ஆரம்ப குடிகளாக இங்குள்ள தமிழர்களும் வாழ்ந்தார்கள் என்பதனை வாகரை வாணன் அவர்களின் ‘”பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ்’ எனும் நூலை ஆதாரமாகக்கொண்டு ஆணியடித்துச் செல்ல இதனை வரைகிறேன்.

மட்டக்களப்புக்குள் இருக்கும் மகிமை உலகின் மூலை முடுக்குகளில் கிழம்பி வருவதற்க்கான சந்தர்ப்பங்கள் நீண்டநாள் யுத்தச் சூழல், அடக்குமுறை, பாராபட்சம், ஒதுக்கித்தள்ளுதல் என்கின்ற தடைகளால் முடங்கிக்கிடந்தமை, அந்த மக்களை பாரம்பரியத்தின் வழிவந்தவர்களா? ஏன உலக அரங்கில் கேள்வி கேட்க வைத்தமை இந்த ஆதாரங்களை பார்க்கும்போது மனம் வருந்த வைக்கிறது.

இதற்க்கு சான்றுகள் தேவையல்லவா இதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னால் தமிழ்துறைத் தலைவர் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் மட்டக்களப்பு தமிழின் சிறப்புகள் பற்றி குறிப்பிடுகையில், ‘மட்டக்களப்பு தமிழகம் சமீபகாலம் வரையில் பிறபகுதி மக்களுடன் தொடர்புகொள்ள முடியாத நிலையில் வாழ்ந்துவந்ததால் அவர்கள் மொழி தன்னியல்பு சிலவற்றினை கொண்டு விழங்குகின்றது. மட்டக்களப்பு தமிழ் சொற்களையும் மலையாளச் சொற்களையும் ஒப்பிட்டு நோக்கும்போது மட்டக்களப்புச் சொற்களில் சில மலையாளச் சொற்க்கள் மட்டும் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’ எனக் கூறுகிறார்( மட்டக்களப்பு பிரதேச சாகித்திய விழா நினைவு மலர்-1993).

இதற்க்கு அவர் மேலும் வலுவூட்டும் ஒன்றாக மட்டக்களப்பு தமிழே மிகவும் செந்தமிழ் பண்புடையது எனும் கருத்து 1966 ஆண்டில் கமில சுவெலபியினால் அறுதியிடப்பட்டுக் கூறப்பட்டுள்ளமை இங்கு எடுத்துச் சொல்லக்கூடியதாக உள்ளது.
கதிரவெளியில் கண்டு பிடிக்கப்பட்ட சிவலிங்க ஆதாரம்.
செந்தமிழ் என்பது அது உயிர்த்துடிப்புள்ள ஆதித் தமிழ். அதற்க்கு சான்றாக ஒரு சமுகம் பேசுகின்ற பேச்சு வழக்கு, பழம்பெரும் இலக்கியங்களில் எழுதப்பட்டிருக்கவேண்டும். அந்த வகையில் மட்டக்களப்பு பேச்சுத்தமிழ், சுவையான தமிழ் இலக்கிய நூல்களில் அலங்கரிக்கப்பட்டுள்ளது ஒன்றும் ஆச்சரியம் இல்லை என வாகரைவாணன் அவரது ‘பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ்’ எனும் நூலில் அடிச்சுக் கூறுவது தெழிவாகிறது.
இதில் வரலாற்றுப்பாதையை சற்று திரும்பிப் பார்ப்போமானால், மட்டக்களப்பில் கி.மு 5ம் நூற்றாண்டிலே கதிரவெளி, மற்றும் கட்டுமுறிவில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் ஆதாரங்கள் வரலாற்றுக்குறிப்புகள் எமது முன்னோர்கள் நனி நாகரிகமாக வாழ்ந்துள்ளனர் எனக் கூறுகிறது. இம்மக்கள் பேசிய தமிழ் சொற்க்கள் சில இன்னும் சிதைந்துபோகாமல் அவர்கள் பரம்பரையினர் நாவில் நடமாடுகின்றமையும், அச்சொற்க்கள் பரிபாடல், கலித்தொகை, தொல்காப்பியம், அகநாநூறு, புறநாநூறு, குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றமை மட்டக்களப்புத் தமிழரின் தொன்மையை நிரூபிக்கப் போதுமானவை என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

இதனையே மட்டக்களப்பு தமிழக ஆசிரியர் பண்டிதர் வி.சீ.கந்தையா அவர்கள் கூறிய பின்வரும் கூற்று அணிசெய்யும். ஒரு நாட்டின் பண்டைய வரலாற்றை அறிவதற்க்கு புத்தகங்களும் செய்யுளம்தான் வேண்டும் என்பதற்க்கில்லை. அந்நாட்டு மொழி அல்லது சொல்க்கூட வரலாறாருரைக்கும் பெருங்காவியமாய் அமையும் (மட்டக்களப்புத் தமிழகம் -பக்.86)
நான் முன்பும் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன் அது மட்டக்களப்பில் பேசப்படும் சொற்க்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் வருவதாகக் கூறியதற்க்கு, ஆதாரக்குறைவு இருந்தமையை பல அன்பர்கள் சுட்டிக்காட்டியமைதான் எனது தேடலை தூண்டியது. அவர்களில் குறிப்பாக டீடீஊ யின் எமது மதிப்பிற்க்குரிய நிருபர் சீவகன் அவர்கள் என்னை இவளவு ஆதாரத்துடன் எழுதத் தூண்டியவர் என பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

எனவே பண்டிதர் வி.சீ.கந்தையா அவர்களின் கூற்றுக்கு அணிசேர்க்கும் வரலாருரைக்கும் வழக்காறுகள் சிலவற்றினை தொட்டுச் செல்லலாம்.
மட்டு மண்வாசனை மாறாத மூதாட்டி ஒருவர்.
முதலில் மட்டக்களப்பின் கிராமப்புறங்களில் இன்றும் வழக்கிலுள்ள ‘கா’ எனும் சொல் வயதானவரை அல்லது தமக்கு மிகவும் நெருக்கமானவர் ஒருவரைக் கண்டால் ‘எங்ககா போறா’ என்ன கா பாடு? ஏன்று வினவுதல் வழக்கு. இது அவர்களது நாட்டுப்பாடல்களிலும் இடம் பெறுவதை வாகரை வாணர் இவ்வாறு காட்டுகிறார்.

‘வாழைப்பழம் எடுகா, வம்பரையில் தேனெடுகா’ எனும் பாடலும் அதுபோல், சிலப்பதிகாரம், கலித்தொகை ஆகிய நூல்களிலும் சான்றாக வருகிறது.
பொய்யாமை நுவலும் நின் செங்கோல் அச்செங்கோலின்
செய்தொழிற் கீழ்ப்பட்டாளோ இவள் காண்டிகா! –மருதக்கலி
அதுபோல் சிலப்பதிகாரத்தில் இது “கணிகா வாய்வதின் வந்த குரவையின் வந்தீண்டும்” எனவும் வருவது இம்மக்கள் பேசும் தமிழ் அன்று இலக்கியத்தில் வந்துள்ளதை காட்டுகிறது.

நான் சிறுவனாக இருக்கும் பொழுதுகளில் என்னுடைய மாமாவின், அப்பப்பாவின் வெற்றிலைத் தோட்டத்துக்கு செல்லுவது வழக்கம், அங்கு துரவு கிண்டி அதற்க்குள் ஒரு பழய பொந்துள்ள மரத்தை நிறுத்தி பூவல் அமைத்து அதில் இருந்து கிடைக்கும் நீரை குடிக்கப்பயன்படுத்துவதை பார்த்திருக்கிறேன். ஆனால் அவை 2000 ஆணடுகளுக்கு முன்னமே கூவல் என அழைக்கப்பட்டதுடன், இவை பழந் தமிழ் இலக்கியங்களில் ‘ அரிது உன் கூவல்’ ‘கண்படு கூவல் தோண்டி’ என புறநாநூற்றிலும், ‘ஐங்குறு கூவல் கீழ்’ என ஐங்குறுநூற்றிலும் சொல்லப்படுகிறது.
மட்டக்களப்பு மதுரத்தமிழில் முக்கியமாக பேசப்படும் இன்னொரு சொல் ‘மருங்கை’ இது ஒரு குழந்தையின் பிறப்பை ஒட்டி நடைபெறும் சடங்கு ஆகும். இச்சடங்குக்கு பக்கத்தில் உள்ளவர்களை அழைப்பதனாலேயே (மருங்கு-பக்கம்) இச்சடங்கு மருங்கை எனச் சொல்லப்பட்டது. இச் சொல் பண்டைய இலக்கியங்களில் பல இடங்களில் பாவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புனர்ந்த ஐந்திணை மருங்கின்- தொல்காப்பியம்.
மருங்கில் கொண்ட பல்குறுமாக்கள்- புறநாநூறு.
பெருவழி மருங்கில் -அகநாநுர்று.

என அடுக்கிக் கொண்டு போகலாம். இன்னொரு மறக்கமுடியாத மட்டக்களப்பாருக்கே உரித்துடைய சொல் என்றும் சொல்லிவிடலாம். அது சூடு எனும் சொல்லன்றி வேறில்லை. வயலில் விளைந்த கதிர்களை தாக்கத்தி (தாள்10 கத்தி) கொண்டு அறுத்தெடுத்து களத்தில் அகலப்பரப்பி அவற்றின் மீது அவற்றின் மீது எருமைக் கடாக்களை நடக்கவிட்டு மிதித்து வைக்கோலில் இருந்து நெல்லை வேறாக்கும் செயலே சூடு போடுதல் எனப்படும். சூடுபோடும் போது நெல் மிகுதியாகக் கிடைக்க வேண்டும் என்ற பெருஆசையில் பெருமக்கள் பொலி பொலிதாயே பொலி குரல் எடுத்து பாடுவார்களாம்.
இந்த முறையில் சூடு போட்டு அவுரியில் மீது நின்று பதர் போகத் தூற்றி எடுத்து, அவணக்கணக்கில் சாக்கில் கட்டி வண்டியில் கொண்டுவந்து வீட்டு முற்றத்தில் பட்டறை கட்டி வைப்பர். உழவுத் தொழிலுடன் இரண்டறக்கலந்த வெள்ளாமை, சூடு, களம், பொலி, பட்டடை(பட்டறை), ஆகிய சொற்க்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் பதியப்பட்டுள்ளமை, தமிழர் வாழ்வோடு அத்தொழில் ஒன்றித்தமையைக் காட்டுகிறது என வாகரைவாணன் புட்டுக்காட்டுவது மட்டக்களப்பு தமிழின் மகிமையை தொட்டுக்காட்டுகிறது அல்லவா.

நீடு கதிர்கழனி சூடு தடுமாறும் – புறநாநூறு.
வயல்வெளி ஆம்பல் சூடு தடுப்புதுப்பூக்
கன்றுடை புனிற்றா தின்ற மிச்சில் -நற்றினை.
வட்டில் வாய்வைக்கும்..
பெட்டியால் வாரிப் பட்டடை நெல்லெல்லாம் -முக்கூடற்ப்பள்ளு
பல வெள்ளாமையிட்டேன் மணல் வாரியைப்
பண்டு நம் பெருமான் கட்டழித்தார்- முக்கூடற்ப்பள்ளு
பொலி தூற்றி ஆற்றிப் பொலி
பொலி யென்றளப்பார்- முக்கூடற்ப்பள்ளு
என்பன அவை பழந்தமிழ் இலக்கியச் சொற்கள் என்ற சான்றை கொண்டுள்ளது என்பதற்கு தக்க எடுத்துக்காட்டு.

இன்னும் ஒரு உன்னதமான சொல் மட்டக்களப்பில் இவர்கள் பயன்படுத்துவார்கள் அது ‘ஏமம்சாமம்’ என்பதுதான். இங்கு ‘சாமம்’ இது இரவு என்று பொருள்படும். இதற்கு சூடாமணி, நிகண்டு என்பன சாட்சியளிக்கின்றன. ஏமம் என்கின்ற சொல் மலையாள மொழியிலும் உண்டு என்பார் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள்.
குறிஞ்சி, கூதீர் யாமம் என்மனார் புலவர் (தொல்காப்பியம்)
இடையிருள் யாமத்து என்னையீங்கு
அழைத்தனை (மணிமேகலை)

நளன் யாமத்தும் பள்ளிகொள்ளான் (நெடுநல்வாடை)
இன்னொரு சொல் மட்டக்களப்பு தமிழகத்தில் இதை உச்சரித்தாலே பக்தி, பயம், சந்தோசம், தூய்மை என்பன குடிகொண்டுவிடும் அந்தச் சொல் தான் ‘சடங்கு’ (வைகாசிச் சடங்கு, வைரவர் சடங்கு). சடங்குகளின்போது, கண்ணூறு, நாவூறு கழிப்பதற்க்காகச் செம்பில் தண்ணீர் ஓதிக் கொடுத்தல் என்பன பட்டி தொடங்கி பட்டினம் வரைக்கும் விசேசமாக நடைபெறும் வழக்குகள். புழந்தமிழ் இலக்கியங்களும் இதனைப் பறைசாற்றுகிறது.
சீர் மறைத் தொழிற் சடங்கு செய்திருந்து
நூல் முனிவர்…..(பெரிய புராணம்)
போற்றுஞ் சடங்கை நன்னாதே…(கடு வெளிச் சித்தர்)
இன்னொரு மட்டக்களப்பு தமிழகத்தில் எம்முன்னோர் இன்றும் பேசும் ஒரு மரக்கறி வகை வழுதுணங்காய் என்கின்ற சொல். அதை ஒரு நாட்டுப்புறக் கவிஞர்கூட இப்படிச் சொல்லியது ஞாபகம் வருகிறது.
‘வாழக்காய் மந்தம்
வழுதுணங்காய் செங்கிரந்தி
கீரை குழுமை –என்
கிளிமொழிக்கு என்ன கறி?’
அதுபோலவே பழந்தமிழ் செப்பேடுகளில் அவை வந்துள்ளமை ஆச்சரியமில்லை.

‘வட்டும் வழுதுணையும் போல் வாரும்’ (நாலடியார்)
மட்டக்களப்பு தமிழக மக்கள் அனேகமாக சமைப்பதற்கு தேவைப்படும் விறகினை ‘கொள்ளி’ என்றே பேச்சு வழக்காக இன்றும் கொண்டுள்ளமையும் அவை அன்றே பழந்தமிழில் செந்தமிழாக வந்துள்ளமையும் இம்மக்களின் பூர்வீகத்துக்கு எடுத்துக்காட்டே.
குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி (புறநாநூறு)
கொள்ளி வாய்ப் பேய்க் குழவிக்கு (கலிங்கத்துப் பரணி)
ஆனால் இப்போது இம்மக்கள் கொள்ளி என்பது ஏதோ கொச்சைத் தமிழ், படியாதவன் பேசும் ஒன்று என நினைத்து அவர்களது நல்ல வழக்காறுகளை வழுக்க விட்டுக்கொண்டிருப்பது பரிதாபமே.
அடுத்தது ஆணம் எனும் மட்டக்களப்பு தமிழர்களின் கறிவகைகளில் ஒன்று. கொச்சிக்காய் தூள் போடாமல் தேங்காய்ப்பால் நிறைய விட்டு ஆக்கப்படும் சுவையான கறி இது. அதற்க்கு மரணவீட்டு அமுதுகளில் நல்ல மரியாதை உண்டு. மண்டல புருடர் வழங்கிய சூடாமணி நகண்டு ‘ஆணமே குழம்பொடு’ என்று சொல்கிறது. இது போலவே தமிழர் திருநாள் தைப்பொங்கலிலும், கோயில் திருவிழாக்களிலும் புக்கை அல்லது பொங்கலுக்கு பஞ்சம் இருக்காது. புழந்தமிழ் இலக்கியங்களிலும் புக்கை, புற்கை என்று இருப்பதனை இங்கே காணலாம்.

தெள்நீர் புற்கை ஆயினும் தாள் தந்து
உண்ணலின் ஊங்கு இனியது இல் (திருக்குறல்)
நெடுநீர் புற்கை நீத்தனம் வரற்கே (புறநானூறு)
அடுத்து ஒசில் என்னும் மட்டக்களப்பு தமிழ் ஒயில் எனும் சொல்லின் திரிபாகும். இதற்க்கு அழகு என்று பொருள். ஆனால், ஒசில் என்பது சந்தர்ப்பத்தைப் பொறுத்து அழகின்மையையும் சுட்டும். பட்டினத்தார் இச்சொல்லை பல இடத்தில் பயன்படுத்தியுள்ளார். அது ‘ஒயிலான வன்னமயிற் கொத்தவளென்றும்’ எனும் சான்றாகும்.
மட்டக்களப்புச் சொல்லில் பிறகு என்பது பேச்சுத் தமிழில் பின்ன என்று வரும். திருவாசகத்திலும், பெரிய புராணத்திலும் இதன் திருத்திய வடிவமான பின்னை இருக்கிறது.
‘படுவேன் படுவதெல்லாம் நான்
பட்டாற் பின்னை பயனென்னே!’ (திருவாசகம்)
குழறுதல் என்னும் மட்டக்களப்புத் தமிழ் சொல்லுக்கு புலம்புதல் என்று பொருள். இது இலக்கியங்களில் இவ்வாறு வருகிறது.
குயில் பைதல் காள் கண்ணன் நாமமே
குழறிக் கொன்றீர்’ (நம்மாழ்வார்)

இவ்வாறு மட்டக்களப்பு தமிழகம் பயின்று வந்திருக்கும் அழகு தமிழ் சொற்க்கள் போன்று இன்னும் உழக்குதல், திண்ணை, வெட்டைக்குப்போ, கச்சை, அறுநாக்கொடி, குடி, குரவை போன்ற நற்தமிழ் சொற்க்கள் இன்றும் இம்மக்களின் நாவில் தவழ்வது அன்றய பழந்தமிழ் இலக்கியங்களில் அழியா மறைச் சான்றாதாரங்களாக மிழிர்வது இம்மக்களின் பூர்வீகம், உரித்து, என்பனவற்றை பறை சாற்றுகிறது. இந்த எடுத்துக்காட்டுகள் மட்டக்களப்பில் வழங்கும் தமிழ் சொற்க்களின் பழமையையும் செழுமையையும் சங்க இலக்கியங்கள் உட்பட பழந்தமிழ் இலக்கியங்களை சான்றுகாட்டி மேலே விழக்கியதன் மூலம் மட்டக்களப்பு உட்ப்பட ஈழத்திருநாடு எங்கும் தமிழர்கள் மிகப் பழங் காலந்தொட்டே வாழ்கிறார்கள் என்பதனை உறுதிப்படுத்துவதுடன். மட்டக்களப்பின் தமிழ் செந்தமிழ் அந்தஸ்த்து பெறுவதற்க்கு அவர்களின் இனிய எழிய மொழிவழக்கும் ஒரு காரணம் என்று பேராசிரியர் கூட அழுத்திச் சொல்வது இம்மக்களின் பாரம்பரியத்தினை உறுதிப்படுத்துகிறது அல்லவா.
ஆக்கம்: சி.தணிகசீலன்

நன்றிகள் www.battinews.com www.meenmagal.net
read more...

Tuesday, 4 August 2009

வந்தவர்கள் என்ன சொல்லியிருப்பார்கள்...

ஊடகங்களில் தமிழ் கொலை செய்யப் படுகிறதா.. எனும் எனது இடுகை மூலம் பலரும் தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை பின்னூட்டமாக வழங்கி இருந்தனர்.

பலர் மின்னஞ்சல் மூலமாகவும் தமது கருத்துக்களை வழங்கி இருந்தனர். பல தமிழ்த்துறை சார்ந்தவர்களும் மின்னஞ்சல் அனுப்பியிருந்தனர். எனது பதிவிலே இருக்கின்ற பின்னூட்டங்களை எல்லோரும் பார்க்க வாய்ப்பு இல்லை பின்னூட்டங்களை ஒரு இடுகை பலர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பின்னூட்டங்கள் இடுகையாக..

பிரபா சொன்னது…
ரொம்ப முக்கியமான விஷயம் சந்ரு, திருந்துவார்கள் என்றால் சரி,,,,,,,

நட்புடன் ஜமால் சொன்னது…
எழுதுகையில்பழைய முறையினை தான் நான் இன்னும் கடைபிடிக்கின்றேன்.இணையத்தில் இன்னும் வரவில்லை.பார்ப்போம் ...

ஹேமா சொன்னது…
சந்ரு தமிழ்மொழி பற்றிய அக்கறையும் கவலையும் நிறைய இருக்கு உங்கள் பதிவிலும் மனதிலும்.சந்தோஷமாயிருக்கு சந்ரு.உங்களைப்போல இளைஞர்கள் தமிழில் அக்கறை இருக்கிறவரை தமிழின் வளைச்சிக்குக் குறைவேயில்லை.மக்கள் தொலைக்காட்சியில் ஜேம்ஸ் வசந்தன் நடாத்தும் தமிழில் பேசலாம் வாருங்கள்.வந்தால் ஒரு பொற்காசு.எப்படி!எங்கள் தாய்த்தமிழில் பேச பணம் கொடுத்து ஊக்கம் கொடுக்கிறார்கள்.ஆனால் அதிலும் 98%வீதமானோர் தோற்றே போகிறார்கள்.இது கவலைக்குரிய விஷயம்தான்.ஆனால் ஈழத்தைப் பொறுத்தவரை இந்தப் பிரச்சனை குறைவு என்றே நினைக்கிறேன்.ஆனால் ஆங்கிலம் கலக்காமல் கதைக்கும் எங்களைப் பரிகாசம் செய்கிறார்களே.என்னசெய்யலாம் சந்ரு !
நாணல் சொன்னது…
நல்ல பதிவு...

நிலாமதி சொன்னது…
காலபோக்கில் தமிழ் திசைமாறி விடுமோ என்று அச்சம் உள்ளது தமிழ் நாடில் வலது இடது என்று ஆட்டோ காரன் கூட ஆங்கிலத்தில் சொன்னால் தான் புரிந்து கொள்கிறான் தமிழும் ஆங்கிலமும் கலந்த வாழ்க்கையாய் போச்சு உங்களை போன்றவர்களின் முயற்சியால் தமிழ் வாழவேண்டும் .நல்லதொரு பதிவு பாராட்டுக்கள்.

பெயரில்லா சொன்னது…
வானொலி{அறிவிப்பாளர்கள்} சிங்கையில் 96.8ல் அழகாக தமிழ்மணக்கிறது,தவழ்கிறது. உலக {சில}தொலைக்காட்சிகளில்தான் கொடிகட்டிப் பறக்கிறது ஆங்கிலம் அதிலும் பேட்டி காண்பதென்றால்சொல்லவே வேண்டாம் ஒன்றிரண்டு சொல்தான் தமிழ் வரும்.திருந்துவார்களா?திருத்தமுடியுமா? என்னதான் இருந்தாலும்நம்ம...பி.எச் அப்துல்ஹமீத் அவர்களை மறக்க முடியுமா?
ரி.கே

மயில் சொன்னது…
உங்கள் பதிவில் இருக்கும் அக்கறை ரொம்ப நல்லா இருக்கு. பிழையின்றி எழுதுத முயற்சி செய்யனும்... ம்ம்.. நன்றி

கும்மாச்சி சொன்னது…
சந்த்ரு உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறேன். இன்றைய ஊடகங்களுக்கு மொழியை கட்டிக் காப்பதில் பெரும் பங்கு இருக்கிறது.

ஸ்ரீராம். கூறியது...
மொழி பற்றி பேசும்போது சற்று உணர்ச்சி வசப்படுகிறோம் என்று தோன்றுகிறது. 'ழ'கர, 'ல'கர, 'ள'கர, உச்சரிப்பு சரியாக வராமல் பிரபல நடிகர்கள் முதல் 'தமிழை உயிராகக் கொண்ட' அரசியல் வாதிகள் வரை சிரமப் படுவதைப் பார்க்கிறோம். அது சரிதான். தெளிவாக, பிழை இல்லாமல் பேசவேண்டும் என்பதுவரை சரி. ஆனால், எல்லாவற்றையும் தமிழ்ப் படுத்துகிறேன் என்று 'படுத்துவது' சரியா? உங்கள் பதிவிலேயே 'இலத்திரனியல்' என்ற வார்த்தையின் பொருள் என்ன என்று எதனை பேருக்குப் புரியும்? மிக கவனமாக ஷ வைத தவிர்த்து ட வாக்கினால் போதுமா? மனிதன் இன்னும் இல்லை ஆடைகளோடு வாழவில்லை. காலத்தோடு சேர்ந்து சில மாறுதல்களை ஏற்றால்தான் வளர முடியும் என்பது என் பணிவான கருத்து.

வந்தியத்தேவன் கூறியது...
தமிழகத்துடன் ஒப்பிடும்போது நாம் எவ்வளவோ மேல். சில விஷச் சக்திகள் தமிழ் மொழியைக் கொல்வதற்கென்றே கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். எழுத்தூடகங்களை விட இலத்திரனியல் ஊடகங்களோ மொழியை வளர்க்க முன்னிற்கவேண்டும் ஆனால் இலங்கையில் இலங்கை ஒளிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தென்றல் கூட ஆங்கிலமோகத்திற்க்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆளாகிக்கொண்டுவ்ருகிறது. ஏனைய வானொலிகளை விமர்சிப்பதே பாவம். ஒரு வானொலி கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி பெற்றுக்கொண்டுவந்தாலும் சில அறிவிப்பாளினிகள் தமிழில் பேசுகின்றோம் என மொழியைக் கொல்கிறார்கள். தொலைக்காட்சிபற்றிச் சொல்லத்தேவையில்லை. தலைவிரிகோலமாக ஒரே ஒரு அறிவிப்பாளினியை வைத்து பெரும்பாலான நிகழ்ச்சிகளை கொல்கிறார்கள். நிறையப் பேசலாம் ஆனால் ஊடக நண்பர்கள் கோவித்துக்கொள்வார்கள். ஏனென்றால் குறைகளைச் சுட்டிக்காட்டினால் அவர்களுக்கு பிடிக்காது. ஒரு எழுத்தூடகத்தில் ஒரு தொலைக்காட்சியை ஒவ்வொரு வாரமும் கிழிப்பார்கள் ஆனால் அவர்கள் திருந்துகிறபாடாக இல்லை. காரணம் அந்த தொலைக்காட்சியின் முகாமையாளருக்கு தமிழ் தெரியாது.

வந்தியத்தேவன் கூறியது...
ரி,கே அவர்கள் சொன்னதுபோல சிங்கையில் மட்டுமல்ல மலேசியா வானொலிகளிலும் தமிழ் கொடிகட்டிப்பறக்கிறது. சில உலகத் தொலைக்காட்சிகளின் விபச்சாரத்தைப் பார்த்து இலங்கை இலத்திரனியல் ஊடகங்களும் அவர்களின் போக்குக்கு விபச்சாரம் செய்யவிழைகிறார்கள். முளையில் கிள்ளினால் நன்மை கிடைக்கும் இல்லையென்றால் அடுத்த தலைமுறை பன்னித் தமிழ் பேசவேண்டிய நிர்ப்பந்தத்திற்க்கு ஆளாகும்.

பெயரில்லா கூறியது...
சந்ரு என்பது சரியா? சந்த்ரு என்றல்லவா இருக்கவேண்டும்.. --anvarsha..

குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
தமிழோ, தமிழரோ கொலை செய்யப்படுவது பற்றி என்ன சொல்ல.....

நேசமித்ரன் கூறியது...
நல்ல சிந்தனை நான் அன்வர்ஷா சொன்னதையும் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் தவறில்லையே..?

வால்பையன் கூறியது...
இணையத்தால் தான் தமிழ் கொஞ்சமாவது வாழ்கிறது!படித்த பின் எழுத வாய்ப்பு கிடைக்காத எனக்கு வலைத்தளம் ஒரு வரப்பிரசாதம்!தவறு ஆரம்பத்தில் வரத்தான் செய்யும் உங்களை போல் தமிழ் ஆர்வலர்கள் திருந்தினால் திருந்திகொள்வோம்!

பழமைபேசி கூறியது...
நன்றி... அவ்வப்போது இதுபோன்ற இடுகைகளைக் காணும் போது எழுதுவோருக்கும் இயல்பாய் தமிழ் வந்துவிடும்.

அஜுவத் கூறியது...
சாதாரணமாக பேசும் போது மொழிநடை வேறுபடுகின்றது என்றால் செய்திவாசிப்பாளர்கள் கூட தமிழை கொலை செய்கிறார்கள் பாருங்களேன்.

எவனோ ஒருவன் கூறியது...
நல்ல கருத்துக்கள்.மற்றவர்களை என்ன சொல்ல... நாம் நம் நடையில் கொஞ்சம் முயற்சி செய்வோம்.

எவனோ ஒருவன் கூறியது...
//உங்கள் கருத்துரை சேமிக்கப்பட்டது.தளத்தில் உங்கள் கருத்துரை தோன்றுவதற்கு சில நிமிடங்கள் ஆகலாம். பின் தடமறிதல் கருத்துரை...குழுவிலகவும்22 கருத்துரைகள்இந்த விண்டோவை மூடுக கருத்துரை வடிவத்திற்கு தாவவும்ஒரு அடையாளத்தைத் தேர்வு செய்கவெளியேறுபின் தடமறிதல் கருத்துரைகள் பெயரில்லா//சிலர் பேச மட்டுமே செய்வர். பரவாயில்லை, நீங்கள் செயலிலும் காட்டுகிறீர்கள்.

ஆ.ஞானசேகரன் கூறியது...
//பழமைபேசி சொன்னது…நன்றி... அவ்வப்போது இதுபோன்ற இடுகைகளைக் காணும் போது எழுதுவோருக்கும் இயல்பாய் தமிழ் வந்துவிடும்.//வழிமொழிகின்றேன்...

ஆ.ஞானசேகரன் கூறியது...
நல்ல இடுகை நண்பரே!... நானும் நல்ல தமிழில் எழுத முயற்சிக்கின்றேன்... 15 வருடங்களுக்கு பின் தமிழில் அதுவும் இணையத்தில் எழுதுகின்றேன். பிழைகள் வருகின்றது.. பிழையின்றி எழுத முயற்சிக்கின்றேன்....

Maximum India கூறியது...
அன்புள்ள சந்துரு தமிழை வளர்க்க வில்லையென்றாலும் தமிழை கொலை அதுவும் தமிழர்களே கொலை செய்யக் கூடாது என்ற உங்கள் கருத்து ஏற்றுக் கொள்ளத் தக்கது. அதே சமயம், தமிழ் படுத்துகிறோம் என்ற போர்வையில் ஏற்கனவே வழக்கத்தில் உள்ள தமிழ் சொற்களை சிலர் புதிதாக மாற்றி அமைப்பதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. மேலும் புதிய கருத்துக்கள் தமிழுக்குள் நுழையும் போது, அந்த கருத்துக்கள் உருவான மொழிச்சொற்களை பயன்படுத்துவதில் தவறில்லை. கருத்துக்கள் தமிழருக்கும் நன்கு தெளிவான பிறகு அதற்கான தமிழ் சொற்கள் தானாகவே உருவாகி விடும். கருத்துக்கள் தெளிவடையும் முன்னரே அவற்றுக்கான தமிழ் சொற்களை திணிக்க முனைவது ஒருவித தெளிவற்ற நிலையையே உருவாக்கும். உதாரணத்திற்கு பொருளாதாரம் பற்றி அதிகம் எழுதும் நான், ஒவ்வொரு பொருளாதார கருத்துக்கும் தமிழ் வார்த்தை தேடிக் கொண்டிருந்தால், எழுத வந்ததே மறந்து போய் விடும் அபாயம் உள்ளது. எனவே, முதலில், பாரதி சொன்னபடி திக்கு எட்டிலும் இருந்து பல கலைகள் தமிழுக்கு கொண்டு வந்து சேர்ப்போம். அந்த கலைகள் தமிழர்களிடம் வளர்ந்தால் தமிழ் தானாகவே வளர்ந்து விடும்.நன்றி.

லவ்டேல் மேடி கூறியது...
நல்ல பதிவு.....

Suresh கூறியது...
Miga arumaiyana pathivu ennaiyai nan sariparthkkola uthaviya pathivu Indraya sulnilaigalukku thevaiyana pathivum kuda.. Here tamil font problem enna seiya intha idukaikku tamil la than type pananum nu nenachane

Suresh Kumar கூறியது...
நல்ல அருமையான பதிவு அறிய தந்ததற்கு நன்றிகள் இனி தொடர்ந்து உங்கள் பதிவை படிப்பேன் .

துபாய் ராஜா கூறியது...
நல்லதொரு பகிர்வு.வாழ்த்துக்கள்.//ஊடகங்களால் முடியாதது எதுவும் இல்லை வெதுப்பகம், தொடருந்து, உந்துருளி, மகிழுந்து போன்ற சொற்கள் மக்கள் மத்தியிலே பிரபல்யமாக்கப் பட்டது ஊடகங்களால்தான் ஏனைய சொற்களையும் மக்கள் மத்தியிலே பிரபல்யப்படுத்துவதொடு தமிழ் மொழியினை ஊடங்களால் வளர்க்க முடியும் என்பதே உண்மை//உண்மையான உண்மை.

LOSHAN கூறியது...
இப்போதெல்லாம் தமிழ் கொலை என்று பேச்சு வந்தாலே வானொலி தொலைக்காட்சிகளைப் பந்தாடிப் பாய்வது ஒரு வழக்கமாகிப் போய்விட்டது. இதிலும் உண்மை இல்லாமல் இல்லை!தனிப்பட்ட ரீதியில் நான் முடியுமானவரை தமிழ்கொலைகளில் ஈடுபடுவதில்லை. என் சார்ந்தவர்களையும் கூடுமானவரை திருத்தி சீர்ப்படுத்திக் கொண்டே இருக்கிறேன். ஆனால் அது மிக சிரமமான காரியம்.இப்போதெல்லாம் நேர்முகப் பரீட்சைகள் குரல் தேர்வுகளில் செம்மையான உச்சரிப்புடையோரையும் தமிழறிவும் உணர்வும் கொண்டவர்களை தேர்ந்தெடுப்பதே பெரும் முயற்சியுடைய காரியமாக இருக்கிறது.நண்பா வந்தியத்தேவா – என்னைப் பற்றித் தெரியும் தானே... நான் விமர்சனங்களை சந்திக்கத் தயங்காதவன்..அவை நேர்மை உண்மையாக இருக்கும் பட்சத்தில.தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது ஓத்துக்கொண்டு திருத்திக் கொள்ளும் ஒரு சீர்மையான கலாசாரத்தில் நம்பிக்கையுள்ளவன் நான்.வானொலியில் பேச்சுத் தமிழைப் பயன்படுத்தினாலும் அதிலும் கூட உச்சரிப்பில் மிக்க கவனம் செலுத்தவேண்டும் என்பதை நான் முன்பு சூரியனைத் தலைமை தாங்கி நடத்தியபோதும் இப்போது வெற்றிக்கு முகாமையாளராக இருக்கும் போதும் அனைவருக்கும் வலியுறுத்தி வருகிறேன்.எனினும் ஆங்கிலக் கலப்பு பல இடங்களில் அவசியம். அத்தியாவசியம். வேண்டுமானால் அறிவிப்பாளர்களில் சிரேஷ்டர் அனுபவம் வாய்ந்தவர்; முதன்மையானவர்; என்று நாம் அனைவரும் ஏற்கின்ற திரு அப்துல் ஹமீத் அவர்களைக் கேளுங்கள்.சில சொற்களைக் கஷ்டப்படுத்தித் தமிழ்ப்படுத்தி - படுத்தாமல் அவ்வவ்வாறே ஆங்கிலத்தில் பயன்படுத்தவது இலகுவானது.. விளங்கக் கூடியது.இல்லையெனில் தமிழ் செந்தமிழாக அன்றி கொடுந்தமிழாகிவிடும்.Hi, Byeபோன்ற அனாவசிய சொற்களையோ...வேண்டுமென்றே வலிந்து புகுத்தப்படும் சில Fashion சொற்களையோ நான் சொல்லவில்லை.சந்துரு நல்லதொரு விஷயத்தை சொல்லியுள்ளீர்கள்... ஒரு இளம் ஒலிபரப்பாளர் இதுபற்றி சிந்தித்திருப்பது மகிழ்ச்சி & நிம்மதி.ஊடகவியலாளர்களின் இது சம்பந்தமான போக்கு பற்றி எனது மனக் குமுறல்களை வெளிப்படையாக விரைவில் கொட்டுவேன்..பதிவாக

சந்ரு கூறியது...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நிலாமதி

சந்ரு கூறியது...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ரி.கே

சந்ரு கூறியது...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மயில்

சந்ரு கூறியது...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி கும்மாச்சி...

சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
அருமையான பதிவு சந்ரு, ஆனால் இன்னும் ஊடகங்களில் தமிழ் கொலையாளிகள் இருப்பது தான் மனக் கவலையான விடயமாக இருக்கிறது... திருத்துவார்கள், திருந்துவார்கள் என நினைக்கிறேன்....வாழ்த்துக்கள் சந்ரு.....

சந்ரு கூறியது...
நாகரிகம் மாறுகின்றது என்பதற்காக எமது பாரம்பரியங்களையும், தமிழின் தனித்துவங்களையும் தொலைப்பதா... உங்களுக்கான் பதில்கள் எனது அடுத்த பதிவில் எதிர் பாருங்கள்... வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஸ்ரீராம்..

சந்ரு கூறியது...
உங்களுக்கான் பதில்கள் எனது அடுத்த பதிவில் எதிர் பாருங்கள்... வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி வந்தியத்தேவன்

சந்ரு கூறியது...
சிங்கை, மலேசியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் சில ஒலிபரப்பாளர்கள் தமிழை வளர்ப்பதிலே ஈடுபடுகின்றார்கள் என்பது மட்டும் உண்மையே... வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி வந்தியத்தேவன்..

வந்தியத்தேவன் கூறியது...
தெரியும் தெரியும் அதுதான் ஒருவரியில் உங்கள் ஊடகத்தில் இருப்பவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டினேன். ஒருமுறை அல்லது இருமுறை ஒரு தவறு நடந்தால் பரவாயில்லை ஆனால் அடிக்கடி ஒரே தவறைச் சிலர் விடுகிறார்கள். முற்றுமுழுதான செந்தமிழ்ச் நிகழ்ச்சிகள் நாம் கேட்கவில்லை. ஹாய், பாய் பைன் தேவையா? அதே நேரம் உங்கள் வானொலிப்பெட்டியின் சத்தத்தைக் குறையுங்கள் என பல அறிவிப்பாளர்கள் அழகாக எடுத்துரைக்கும்போது சில ரேடியோ என்பார்கள், ஒரு சில ஆங்கிலச் சொற்கள் மொழியுடன் கலந்துவிட்டன அவற்றை ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் இந்திய ஊடகங்களைப் பார்த்து யாருக்கு இந்தப்பாடல் டெலிகேட் செய்கிறீர்கள் என ஒரு தொலைக்காட்சியில் ஒருவர் கேட்கிறார். தொலைக்காட்சியை உடைக்கத்தான் மனம் வரும். சந்ரு கோடுபோட்டிருக்கிறார். ஊடகங்களில் நிகழும் மொழிக்கொலைகள் பற்றி சில நாட்களில் எழுதுகின்றேன். உங்கள் கருத்துகளை அங்கேயும் தெரிவியுங்கள். பின்னூட்டத்தில் முழுவதுமாக எழுதினால் பலரிடம் சிலவேளைகள் சென்றடையாது.

வந்தியத்தேவன் கூறியது...
//சந்ரு கூறியது...சிங்கை, மலேசியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் சில ஒலிபரப்பாளர்கள் தமிழை வளர்ப்பதிலே ஈடுபடுகின்றார்கள் என்பது மட்டும் உண்மையே... //நிச்சயமாக எம்மவர்கள் தான் அதில் முன்னோடிகளாக இருந்தார்கள். முன்னர் பலராக இருந்தது இப்போ சிலராக மாறிவிட்டது ஆகவே சிலரால் நம் தமிழ் இலங்கையிலும் கொல்லப்படுகிறது.

சந்ரு கூறியது...
என்னுடைய பெயர் சந்ரு என்பதே சரி நான் சிறு வயது முதல் இப்படியே எழுதுகிறேன். நாம் ஆங்கிலத்தில் shanthru என்று எழுதி தமிழுக்கு மாற்றினால் சந்த்ரு என்றே வரும். நான் இதற்காக என் பெயரில் மாற்றம் செய்ய விரும்பவில்லை....வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி anvarsha..

சந்ரு கூறியது...
//குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது… தமிழோ, தமிழரோ கொலை செய்யப்படுவது பற்றி என்ன சொல்ல.....//தமிழ், தமிழர் இரண்டும் தமிழரால் கொலை செய்யப்படுவதுதான் கவலைக்குரிய விடயம். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

சந்ரு கூறியது...
//நேசமித்ரன் சொன்னது… நல்ல சிந்தனை நான் அன்வர்ஷா சொன்னதையும் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் தவறில்லையே..?//என்னுடைய பெயர் சந்ரு என்பதே சரி நான் சிறு வயது முதல் இப்படியே எழுதுகிறேன். நாம் ஆங்கிலத்தில் shanthru என்று எழுதி தமிழுக்கு மாற்றினால் சந்த்ரு என்றே வரும். நான் இதற்காக என் பெயரில் மாற்றம் செய்ய விரும்பவில்லை....வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

சந்ரு கூறியது...
//வால்பையன் சொன்னது… இணையத்தால் தான் தமிழ் கொஞ்சமாவது வாழ்கிறது!படித்த பின் எழுத வாய்ப்பு கிடைக்காத எனக்கு வலைத்தளம் ஒரு வரப்பிரசாதம்!தவறு ஆரம்பத்தில் வரத்தான் செய்யும் உங்களை போல் தமிழ் ஆர்வலர்கள் திருந்தினால் திருந்திகொள்வோம்!//நீங்கள் சொல்வதுபோல் இன்று வலையுலகமும் மாற்றங்களை அதாவது தமிழை வளர்ப்பதிலே பங்கு வகிக்கின்றது விடயம். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

சந்ரு கூறியது...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி பழமைபேசி

சந்ரு கூறியது...
உங்களுக்கான் பதில்கள் எனது அடுத்த பதிவில் எதிர் பாருங்கள்... வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அஜுவத்

சந்ரு கூறியது...
//எவனோ ஒருவன் சொன்னது… நல்ல கருத்துக்கள்.மற்றவர்களை என்ன சொல்ல... நாம் நம் நடையில் கொஞ்சம் முயற்சி செய்வோம்.//வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

சந்ரு கூறியது...
இன்று வலைப்பதிவுகளிலே நீங்கள் குரிப்பிடுவதுபோல் பல தமிழ் சொற்களை பாவிக்கின்றோம் இந்த சொற்களை எங்களால் உணர முடியும் போது ஏன் ஏனைய சொற்களையும் நாம் பயன் படுத்த முடியாது... விடயம். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி எவனோ ஒருவன்

சந்ரு கூறியது...
//ஆ.ஞானசேகரன் சொன்னது… //பழமைபேசி சொன்னது…நன்றி... அவ்வப்போது இதுபோன்ற இடுகைகளைக் காணும் போது எழுதுவோருக்கும் இயல்பாய் தமிழ் வந்துவிடும்.//வழிமொழிகின்றேன்...July 27, 2009 1:02 PM ஆ.ஞானசேகரன் சொன்னது… நல்ல இடுகை நண்பரே!... நானும் நல்ல தமிழில் எழுத முயற்சிக்கின்றேன்... 15 வருடங்களுக்கு பின் தமிழில் அதுவும் இணையத்தில் எழுதுகின்றேன். பிழைகள் வருகின்றது.. பிழையின்றி எழுத முயற்சிக்கின்றேன்....வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

சந்ரு கூறியது...
//Maximum India சொன்னது… அன்புள்ள சந்துரு தமிழை வளர்க்க ............. உங்களுக்குரிய எனது பதிலை அடுத்த இடுகையில் எதிர் பாருங்கள்.... வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

சந்ரு கூறியது...
//லவ்டேல் மேடி சொன்னது… நல்ல பதிவு.....//வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி

சந்ரு கூறியது...
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி Suresh...

சந்ரு கூறியது...
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி Suresh kumar
சந்ரு கூறியது...
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி துபாய் ராஜா

அக்பர் கூறியது...
கண்டிப்பாக சரிசெய்ய வேண்டிய விசயம்.
ஜெஸ்வந்தி கூறியது...
அருமையான பதிவு. என்னை அழைத்ததற்கு நன்றி. உங்கள் மற்றைய பதிவுகளை பின்னர் வந்து படிக்கிறேன்.
Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
கலக்கல் பதிவு
சந்ரு கூறியது...
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி LOSHAN அண்ணா...

சந்ரு கூறியது...
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சப்ராஸ்

சந்ரு கூறியது...
மீண்டும் உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி வந்தியத்தேவன்....
சந்ரு கூறியது...
//அக்பர் சொன்னது… கண்டிப்பாக சரிசெய்ய வேண்டிய விசயம்//உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா

சந்ரு கூறியது...
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஜெஸ்வந்தி

சந்ரு கூறியது...
//Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது… கலக்கல் பதிவு//உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா
jothi கூறியது...
//"பிலைகள்" இருக்கிறது திருத்துங்கள்என்று//நல்ல வேளை "பிள்ளைகள்" என்று சொல்லவில்லையே சந்தோஷப்படுங்கள்


சந்ரு கூறியது...
// jothi கூறியது... //"பிலைகள்" இருக்கிறது திருத்துங்கள்என்று//நல்ல வேளை "பிள்ளைகள்" என்று சொல்லவில்லையே சந்தோஷப்படுங்கள்//வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி jothi...
சத்ரியன் கூறியது...
//தமிழ் மொழி இன்று பல மொழிக் கலப்பினால் பாதிக்கப்பட்டு வருவதாக இன்று பலரும் குற்றம் சுமத்திக்கொண்டு...//இதில் சிறு மாற்றம். தமிழில் பிற மொழி கலப்பு என்பது பன்னெடுங்காலமாகவே இருந்து வருவதாகவே தெரிகிறது. ஆனாலும், தற்போது ஆங்கிலமொழி சற்று கூடுதலாகவே ஆக்கிரமித்துக் கொண்டு வருகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.அதற்கான காரணங்களைப் பட்டியலிட்டுக் கொண்டிருப்பதைவிட நம் தாய்மொழியின் சிறப்பை மிகமிக எளிமையாக இளைஞர்களிடம் (குறிப்பாக சிறுவர்களிடம்) கொண்டு சேர்க்க வேண்டியது நமது தலையாயக் கடமையாகக் கருத வேண்டும்.முதலில், பெற்றோர்கள் மிகப்பெரும் தவற்றினைச் செய்துக் கொண்டிருக்கின்றார்கள். அடுத்த இடத்தைப் பிடிப்பவர்கள் நம் மொழி ஆசிரியர்கள். பெரும்பாலும், பாடசாலைகளில் ஒரு புள்ளி, கமா, தொடர்ப்புள்ளி...இப்படிப்பட்ட தவறுகளுக்கு மதிப்பெண் குறைப்பதோடல்லாமல், வகுப்பில் எழுப்பி நிறுத்தி ஆசிரியரே கேலி செய்யும் காட்சிகளும் அரங்கேறவேச் செய்கிறது.இது போன்ற செயல்கள் சிறுவர்களின் மனத்தில் (மொழியின்பாலும்) ஒருவித வெறுப்புணர்வை உண்டாக்கி விடுகிறது.என்னதான் என்றாலும் அடுத்தவர்களைக் குறைக்கூறுவதைத் தவிர்த்து நம் மொழியை செம்மையாக வைத்திருப்பது நமது கடமை.உங்களின் ஆர்வம் மகிழ்ச்சியாய் இருக்கிறது ...சந்த்ரு.!

சந்ரு கூறியது...
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் சத்ரியன்....
தமிழ்மொழி தமிழ் மொழியாகவே இருக்கட்டும் உங்களுக்கான பதில்களை அடுத்த பதிவில் தருகிறேன்.....

இதுதான் அந்த இடுகைக்கு கிடைத்த கருத்துரைகள். பலரது வேண்டுகோளுக்கிணங்க ஒரு பதிவாக தந்திருக்கின்றேன்.
read more...

Friday, 31 July 2009

தமிழ் மொழி தமிழ் மொழியாகவே இருக்கிறதா...

ஊடகங்களில் தமிழ் கொலை செய்யப் படுகிறதா.. , மற்றும் தமிழ் மொழியை வளர்ப்பது யார்? தமிழ் மொழியை கொலை செய்வது யார்?.. எனும் இரு இடுகைகள் மூலமாகவும் பல காத்திரமான கருத்துக்கள் வந்திருந்தன. அந்த இரு இடுகைகளின் பின்னூட்டங்களிலே என்னிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்கவேண்டியவனாக இருக்கின்றேன். பின்னூட்டத்திலே எனது விளக்கங்களை வழங்கினால் எல்லோரையும் சென்றடையாமலும் விடலாம் என்பதனால் அதன் தொடர் பதிவாகவே இந்தப் பதிவும் அமைகின்றது.

எனது வலையுலக நண்பர் ஜெகநாதன் நீண்டதொரு பின்னூட்டத்தினை வழங்கி இருந்ததோடு பல கேள்விகளையும் கேட்டு இருந்தார். அவரது கேள்விகளுக்கு பதிலளிக்கமுன்னர் அவரது பின்னூட்டத்தினை தருகிறேன்.


ஜெகநாதன் கூறியது...
அன்பு சந்ரு,சீரிய முயற்சி. வாழ்த்துக்கள்! நான் நினைப்பது,

1. மொழி மற்ற மொழிகளோடு இணக்கமாக இருப்பது அதன் வளர்ச்சியைக் குறிக்கும்

2. பேச்சுத் தமிழில் மொழிக்கலப்பை பாவேந்தர் பாரதிதாசன் ஆதரித்திருக்கிறார்!!

3. இலத்திரனியல் என்றால் என்ன? இந்த வார்த்தையின் வயது என்ன? இந்தமாதிரி அருஞ்சொற்பொருள்களின் அகராதி எங்கு கிடைக்கும்? இணையத்தில் ஓசியில் கிடைக்குமா? (​மெர்ஸலாகிறது-க்கு இணையத்தில விளக்கம், அர்த்தம் கிடைக்குது)

3.5. தங்கள் கருத்துக்கு மாற்றாகவோ, இல்லை மனதைப் புண்படுத்துவதாகவோ இருப்பின் இதற்கு மேல் படிக்காதீங்க! எனக்கு மொழித் தூய்மையை விட சந்ருவின் அன்புதான் முக்கியம்.

4. //மொழி கலப்பதை தடுப்பதிலும், தமிழ் மொழியை வளர்ப்பதிலும் ஊடகங்களின் பங்கு அளப்பெரியது// ​நல்ல கருத்து. ஆனால், ஊடகம் இந்த அளவுகோலில் செயல்பட்டால் ​மொழியறிவு இருக்கும் தொழிலறிவு வளராது. (flightக்கு தமிழ் வார்த்தை இருக்கு, cockpit, fins, rudder, propeller. kinetic velocity, aerofoil, போன்ற தொழில் நுட்பங்களுக்கு புதுசாத்தான் உருவாக்கணும் - அதிலேயும் ஒரே அர்த்ததுக்கு பல பிரயோகங்கள் வர வாய்ப்புள்ளது) ஊடகங்கள் என்பதைவிட கல்விமுறை என்பதே மொழிச்செழுமைக்கு முக்கியமானது ​

5. யெஸ். மொழிப்பாதுகாப்பு என்று யாரும் மந்திரித்துவிட்டால், நம்பிடாதீங்க சந்ரு. மொழி யாராலும் பாதுகாக்கபட வேண்டியதில்லை. ​செழுமைப்படுத்தப்பட வேண்டியது.

5.1. ஸாரி. எனக்கு அவ்வளவா சுத்தத் தமிழ்ல எழுதத் தெரியாது - வராது..2. இதுமாதிரியான தமிழ்ல எழுதுனா படிக்கிறது ஈஸியா இருக்கும்னு நினைக்கிறேன்

5.3. ஒரு வார்த்தைய கொடுத்து இது அக்மார்க் தமிழ் வார்த்தைதான் தரப்பரிசோதனை ​செய்யவும் தெரியாது.

5.4. சந்திப்பிழைகளை(ச்?)) சந்திக்கிறேன் - இதுக்கும் இணையத்தில தேடுறேன் - தெரிந்தால் சொல்லவும்

5.5. சீரியஸ் இடுகையில லந்து பண்றான்னு நினைக்காதீங்க,

இப்பவும் சந்ருவின் அன்புதான் முக்கியம்னு சொல்லிக்கிறேன்.. ​தொடரப் போறீங்களா!!?(.....)(இங்கு பின்னூட்டம் ​போடாமல் இதன் முந்திய இடுகையில் போட்டுவிட்டேன்)
July 30, 2009 11:09 அம

ஜெகநாதன் கூறியது...



6. மொழிப்​பெயர்ப்புகளால கூட மொழி​செழுமையாகும்னு நினைக்கிறேன். என்னை தமிழிலில் ஆர்வமா இலக்கியத்தைப் படிக்கத் தூண்டியது, காமிக்ஸ் புத்தகங்கள் அப்புறம் ரஷ்ய இலக்கியங்கள்.

6.5 காமிக்ஸ்ல டெக்ஸ்வில்லர், ஹுப்ஹுப்ஹீரே, நவ்ஜோ, பிஸ்டல் பின் ரஷ்ய இலக்கியத்தில வர்ற கெழாக்குகள், வோட்கா, இனியாக்​போன்ற பதங்களும் ​பொருள்களும் பிற​மொழிக்கலப்புதானே? ஆனா இதை தவிர்த்து இந்த இலக்கியத்தை அணுக சாத்தியமான்னு தெரியலே.

7. ​மொழிக்கலப்புன்னா ஏன் இங்கிலீஷை மட்டும் நினைக்கிறோம்? சாவி (திறவுகோல்தான்) ஒரு டச்சு வார்த்தைன்னு கேள்விப்பட்டிருக்கேன்

8. நான் பொறியியல்... வேணாம் மெக்கானிக்கல் இன்ஜினீரிங் படிச்சிருக்கேன். இன்னும் ​மேற்படிப்பெல்லாம் படிக்க வேண்டியிருக்கு. முனைவர் பட்டம் வரைக்கும் கூட ​போகலாம்! இதுவரைக்கும் டிப்ளமோ தாண்டி தமிழ் பாடபுத்தகத்தில வந்ததில்ல (அந்த தமிழுக்கு இங்கிலீஷையே படிச்சுக்கலாம்) இந்த மாதிரி டெக்னிக்கல் படிப்புக்கு நான் இங்கிலீஷைதான் கட்டிண்டு அழணும். அப்படி தமிழ்ல இன்ஜினியரிங் பி. ஹெச்டி பண்ண வழியிருக்கா சொல்லுங்க?

8.1. எனக்கு(ம்) ழ,ல,ள உச்சரிப்பெல்லாம் சுத்தமா வராது. ​

8.2. ல - பிரச்சினையில்ல
8.3. குவாட்டர் மாதிரி அடிச்சிருந்தேன்னா ழ நழ்ழாவே
.4. ள - யாராச்சும் பாடம் எடுத்தா உண்டு
8.5. எழுதும் போது எந்த பிரச்சினையும் இல்லை
9. நான் உன்னைய இங்கிலீஷ் படிக்க வேணாம்னு சொல்லலியேன்னு கேக்கறீங்கதானே? இப்படி பிற​மொழியில் பலவருஷம் படிச்சு, கேட்டு, எழுதிக்கிட்டு இருந்தா அந்த மொழி​யோட தாக்கம் தாய்மொழியிலும் வரத்தானே செய்யும்? இங்க யார அல்லது எத குத்தம் சொல்றது?
July 30, 2009 11:09

ஜெகநாதன் கூறியது...
10. மொழி​பெயர்க்கிறவங்க ஏன் தொழில்நுட்பம் பக்கம் அதிக கவனம் எடுக்கிறதில்ல? நான் ஒரேயொரு ரஷ்ய மொழிப்​பெயர்ப்பு அறிவியல் புத்தகம் படிச்சிருக்கேன் (ரிலேட்டிவிட்டி பத்தி லெந்தாவு எழுதினது)

10.1. இந்த மொழிப் பெயர்ப்பு ஆளுகளுக்கு ஒரு ஆணியக் கூட சுத்தியல் வச்சு அடிக்கத் ​தெரியாது. அப்புறம் எப்படி டெக்னிகல் பக்கம் வருவாங்க?

10.2. அதுக்கு தொழில்நுட்ப வல்லுநர்கள், மொழியியல் ஆய்வாளர்கள் என ஒரு sync up ​வேணும். எப்ப / எப்படி சாத்தியப்படும்னு தெரியலே (நடந்திருந்தால் தெரியப்படுத்துக)

10.3. சைனாக்காரங்க நல்ல​வேளையா இங்கிலீஷ் இப்பத்தான் ஒழுங்கா கத்து, வாய் வழியா பேச டிரை பண்றாங்க. இத ஒரு நூற்றாண்டு முன்னாடியே செஞ்சிருந்தாங்கன்னா, ITல அவங்க நம்பர்.1 ஆயிருப்பாங்க. கம்ப்யூட்டர் இந்தியாவில இப்படிப் பரவியிருக்காது. நம்ம கருத்துக்களை போற​போக்கில இடுகையா போட சான்ஸே இருந்திருக்காது. வேணா எழுதி ஏதாவது பத்திரிக்கைக்கு போஸ்ட் பண்ணிட்டு நகத்தை கடிச்சிட்டு உக்காந்திருக்கலாம்.

10.4. பிற​மொழிக்கலப்பில்லாம எழுதறதும் பேசறதும் ஒரு வித்தையா எடுத்துச் செய்ய ஆரம்பிச்சவங்க நிறைய பேரு இலக்கியத்தில காணாம போயிருக்காங்க (பேரெல்லாம் தெரியாது - அந்தளவுக்கு காணாம போயிருக்காங்க..!)

10.5. எப்படிச் சொல்றேன்னா, வாசகனுக்கு இணக்கமான நடையில எழுதறவங்கதான் நிலைத்து நிற்கிறார்கள் (சுஜாதா எனக்குத் தெரிஞ்சு ஒரு ஆங்கில வார்த்தை கூட இல்லாமா ஒரு கதை எழுதியிருக்காரு, என்ன பேரு சொல்லுங்க பாப்பம்? கி.ரா எழுத்து அப்படியே வட்டாரம் + பிற மொழிக்கலப்பு இருக்கு.. ஆனா இதைத் தவிர்த்திட்டு அந்த இலக்கியத்தை எழுத முடியுமா?)

10.6. மொழி​ஒரு சாதனம். நல்ல இலக்கியம்தான் ஒரு மொழியை மேம்படுத்தும்.
10.6.1. தயவுசெஞ்சு வரிஞ்சு கட்டிக்கிட்டு சண்டைக்கு வராதீங்க - ஏன்னா என் கருத்து சுதந்திரம் இந்த பயத்தாலேயே பாதிக்கப்படுது (அ) பாதி செத்திடுது!

10.7. ஒரு வார்த்தையோட மூலம் என்னன்னு தேடிக்கிட்டு போனா.. வரலாறு, கல்வெட்டு, ​போர்-படையெடுப்பு, பிராகிருதி மொழி, பாலி, சமஸ்கிருதம், சரஸ்வதி ஆறுன்னு தாறுமாறா ஓடி எங்கியோ போயி நிக்க வேண்டியதா போயிடும்

10.8. ஆவணம், படிப்பு, ஆய்வு, சுயஅர்ப்பணிப்பு, தீவிரம், களப்பணி, பல்துறை அறிவு - இந்த மாதிரி எந்த கூறுகளும் இல்லாம தமிழ் பாதுகாப்பு - தூய்மைன்னு பேசறவங்க (10.6.1க்கு போயிட்டு வந்து தொடரவும்) தான் தமிழ் மொழியின் பேராபத்து. மொழிய வச்சு அரசியல் பண்றவங்கள நாமதான் அடையாளம் தெரிஞ்சுக்கணும்.

10.9. ஒரு மொழிக்கு மொழிக்கொலைங்கிறது பிற​மொழிக்கலப்பால வராது (அ. முத்துலிங்கம் எழுதின ஒரு கதை உயிர்மையில் வந்தது. படிச்சுப்பாருங்க) பிற மொழி பற்றிய அறிவு இல்லைங்கிறதுதான் தற்கொலைக்கு சமம்.

10.10. கடைசியா (அப்பாடா..!) ஒரு குட்டிக்கதை: ஒருத்தன் குளக்கரை பக்கமா புதையல் இருக்குன்னு தெரிஞ்சு பூமியத் தோண்ட ஆரம்பிச்சானாம்.​தோண்டுனான் ​தோண்டுனான் தோண்டிக்கிட்டே இருந்தானாம். அவன் பண்ணுனது பரவலா தோண்டாம ஒரே குழியையே ஆழமா தோண்டிக்கிட்டு இருந்ததுதான். கடைசிலே பாத்தா குழிதான் ஆழமாச்சு. புதையல் கிடைக்கலே. தோண்டுனது போதும்டா மேலே ஏறலாம்னு பாத்தா ​ரொம்ப ஆழமாயிருக்கு. கத்தி கத்தி பாத்தான். பாவம் யாருக்குமே கேக்கலே.
July 30, 2009 11:10



இதுதான் அன்பு நண்பர் ஜெகநாதனின் பின்னூட்டம்.

விடயத்துக்கு வருகிறேன். நான் எப்போதும் வேற்று மொழிகளை வெறுத்தவன் இல்லை, வேற்று மொழிகளை நாம் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அந்த மொழிகள் தமிழோடு கலந்து தமிழை கொலை செய்யக்கூடாது என்றே இரு இடுகைகளிலும் தெளிவாகக் கூறி இருக்கிறேன்.

தமிழ் மொழியின் சிறப்புக்கள் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். அத்தனை சிறப்பு வாய்ந்தது தமிழ் மொழி. வேற்று மொழிகளை தமிழோடு தேவையற்ற முறையிலே அதிகமாகப் பிரயோகிக்கப்படுகிறது ஏன் என்பதுதான் எனது கேள்வி.

வேற்று மொழி பேசுபவர்கள் எமது தமிழ் மொழியினை தங்கள் மொழியோடு கலந்து பயன் படுத்துகிறார்களா. இல்லையே சில தமிழ் சொற்களை எல்லாராலும் புரிந்து கொள்ள முடியாது என்று சொல்கின்றார்கள். அப்படி என்றால் தமிழ் மொழிக்கு சொற் பஞ்சம் இருக்கிறதா?

எமது தமிழ் அறிஞர்கள் எல்லோரும் ஏனைய மொழிகளையும் படிக்கவேண்டும் என்று சொன்னார்களே தவிர தமிழ் மொழியோடு கலந்து பயன் படுத்தும் படி சொல்லி இருக்கின்றார்களா.

இன்று பல சிறப்புக்கள் மிக்க எமது தமிழ் மொழியின் சில சொற்களை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அதற்கு யார் காரணம். நாம்தான் காரணம். நாகரிகமென்ற போர்வையில் வேற்று மொழிகளின்பால் நாம் ஈர்க்கப்பட்டதே முக்கிய காரணம்.

இன்று நாம் தமிழ் இலக்கியங்களை வெறுப்பதற்கு என்ன காரணம் அதிலே பயன்படுத்தப்பட்டிருக்கின்ற சொற்களுக்கு விளக்கம் தெரியாமையே முக்கிய காரணம். நான் கேட்கின்றேன் அன்று தமிழ் அறிஞர்கள் மக்களிடம் பாவனையில் இல்லாத சொற்களை ஏன் பயன்படுத்தவேண்டும். அன்று அந்தச் சொற்கள் பயன் பாட்டில் இருந்ததே காரணம். அன்று இலக்கியங்களிலே வேற்று மொழி கலப்பு இருந்ததா. இல்லையே.

ஆனாலும் இன்று கிராமப் புறங்களிலே அந்தச் சொற்களை எமது முன்னோர்கள் பயன் படுத்துவதை கானக்கூடியதாக இருக்கின்றது. இன்றைய நாகரிகம்தான் எம்மை மாற்றிவிட்டது.

சில சொற்களுக்கு தமிழ் படுத்த முடியாது என்பதனை ஏற்றுக் கொள்கின்றேன். வளர்ச்சி அடைந்து வருகின்ற நாடுகளின் விஞ்ஞான கண்டு பிடிப்பு, அவர்களின் பொருட்களுக்கு எங்களால் தமிழ் சொல்லை தேடிக்கொண்டு இருக்கமுடியாதுதான். ஆனால் காலப்போக்கில் அதற்கும் தமிழ் சொற்களை அறிமுகப் படுத்த முடியுமல்லவா. computer என்பது தமிழ் வார்த்தை இல்லை அது காலப்போக்கில் கணணி அல்லது கணினி என்று நாம் தமிழ் படுத்தவில்லையா.

சில தமிழ் சொற்களுக்கு அகராதிகளைத்தான் தேடி பொருள் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்கிரிஇர்கள். அப்படி என்றால் அன்று இலக்கியங்களை எல்லோரும் படித்தார்கள். அன்று குருகுல முறையிலே ஒரு குருவின் வழிகாட்டலுக்கமைய படித்தவர்களே எமது தமிழ் அறிஞர்கள் பலர்.


அன்று அவர்கள் அகராதியும் கையுமாகவா திரிந்தார்கள். இல்லையே இந்தச் சொற்கள் பாவனையில் இருந்தது என்பதே உண்மை. சரி அவர்கள் அகராதி கொண்டுதான் படித்தார்கள் என்றால் இன்று ஏன் எங்களால் அந்த அகராதிகளை எங்களால் பயன்படுத்த முடியாது.


அன்று எமது தமிழ் மொழிச் சொற்கள் பயன்பாட்டில் இருந்தது என்பது புலனாகின்றது. இதற்கும் காரணம் நாமேதான்.

சரி புத்தகங்கள் தமிழில் இல்லை என்றால் அது யாரில் தவறு இருக்கிறது. தமிழிலே புத்தகங்களை எழுதுவதற்கு தமிழிலே நல்ல பொறியியலாளர்கள் இல்லையா. இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் தமிழ் மொழியை விட்டு விலகி ஆங்கில மொழியின்பால் சென்றதே காரணம்.

எனது கேள்வி இன்று கணணி மென் பொருட்கள் கூட தமிழிலே அதுவும் அற்புதமான தமிழ் சொகளைக்கொண்டு வடிவமைக்கப் படுகின்ற போது தமிழிலே சில துறைகளுக்கு புத்தகங்கள் இல்லை என்பது ஏன். உலகத்துக்கே நல்லா கருத்துக்களை சொல்லக்குகூடிய எத்தனையோ புத்தகங்களுக்கு சொந்தம் கொண்டாடுகிறது தமிழ் மொழி. ஆனால் நாமே இன்று தமிழ் மொழியினை கொலை செய்து கொண்டு இருக்கின்றோம்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். தமிழ் மொழியிலே இருக்கின்ற சொற்களை நாம் இன்று மறந்து வருகின்றோம். அவற்றை மீண்டும் மக்கள் மத்தியில் ஊடகங்களால் பிரபல்யப் படுத்த முடியும். உடனடியாக இல்லை என்றாலும் ஊடகங்களில் பயன் படுத்தப் படும்போது மக்களால் காலப்போக்கில் பயன்படுத்தப்படும் என்பது எவராலும் மறுக்கப்பட முடியாது.

முன்னைய இடுகையிலே தொடருந்து, சிற்றுந்து, உலங்குவானூர்தி, துவிச்சக்கர வண்டி, மிதி வண்டி, காலுந்து, வெதுப்பி, குளிர்களி.. போன்ற சொற்களை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் லோஷன் என்று குறிப்பிட்டு இருந்தேன் ஆனால் இச் சொற்களை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்திய பெருமை என்று வந்திருக்க வேண்டும். யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலே ஆரம்ப காலங்களில் இந்தச் சொற்கள் பாவனையில் இருந்தது உண்மையே. காலப்போக்கில் நாகரீகம் என்ற போர்வையில் இந்த சொற்கள் மறக்கப்பட்டு வந்தது என்பது உண்மையே. இச் சொற்களை பாவிப்பது மிகவும் அரிதாக இருந்த வேளை இச் சொற்களை மீண்டும் பாவனைக்கு கொண்டுவர வேண்டும் என்று லோஷன் இதற்கு முன்னர் பணியாற்றிய வானொலி நிலையத்தின் ஒரு குழுவினரின் முயற்சியின் பயனாக அந்த வானொலியின் செய்திகளில் இந்த சொற்கள் பயன்படுத்துவது வழக்கத்திற்கு வந்தது. மக்களின் பயன் பாட்டில் இருந்து மருவி வந்த இந்த சொற்களை மீண்டும் மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தியவர்களுள் லோஷனும் அவர்களது ஒரு குழுவினரும் என்பது மறுக்கமுடியாது.


இச் சொற்களின் பாவனை மிக மிக அரிதாக இருந்தபோது செய்தி அறிக்கைகளிலும் நிகழ்சிகளிலும் அதிகமாக பயன் படுத்தப்பட்டு மக்கள் மத்தியிலே பிரபல்யப்படுத்தப்பட்டது உண்மையே.

இது ஒரு புறமிருக்க எமது ஆரம்ப கால ஒலிபரப்பின் முன்னோடிகளை மறக்கக்கூடாது. எங்களுக்கெல்லாம் முன்னோடிகளாக இருந்து தமிழ் மொழி வளர்ச்சியிலே பங்காற்றிய பல ஒலிபரப்பாளர்கள் இருக்கின்றார்கள். அவர்களையும் நாம் மறந்துவிட முடியாது. எதிர் வரும் காலங்களில் அவ்வப்போது அவர்களைப் பற்றியும் பகிர்ந்து கொள்கின்றேன்


தமிழ் மொழியினை வளர்க்க வேண்டும். தமிழ் மொழி தமிழ் மொழியாக பயன்படுத்த வேண்டும் என்பதே எனது அவா.

இது தொடர்பான உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் பின்னூட்டமாக.
read more...