Showing posts with label தொழினுட்பம். Show all posts
Showing posts with label தொழினுட்பம். Show all posts

Thursday, 6 August 2009

ரோபோக்களின் துணையுடன் இருதய சத்திர கிச்சை

இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக பல்வேறுபட்ட தேவைகளுக்கு ரோபோக்கள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன.


ரோபோக்களின்உதவியுடன் மிகவும் இலகுவான முறையிலே இருதய சத்திர சிகிச்சையினை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர் சென்னை மருத்துவர்கள். இருதய அறுவைச் சிகிச்சையில் ரோபோக்களை பயன் படுத்துவது முக்கிய திருப்பம் எனவும், இருதய அறுவைச் சிகிச்சையினை ரோபோக்களின் உதவியோடு மேற்கொள்வது நோயாளிகளுக்கு பல வசதிகள் காணப்படுவதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


இந்த அறுவைச் சிகிச்சை முறை மூலமாக சென்னையில் உள்ள செட்டிநாடு ஹெல்த் சிட்டி மருத்துவமனை மருத்துவர்கள் இரண்டு இளைஞர்களுக்கு இருதய அறுவைச் சிகிச்சையினை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.


இந்த அறுவைச் சிகிச்சை மூலம் குறைந்த அளவு திசுக்களே சேதமடைவதால் குறைந்தளவு இரத்த விரயமே ஏற்படுவதாகவும். இதனால் நோயாளிக்கு குறைந்த அளவு இரத்தம் ஏற்றினால் போதுமானது என்றும், இவனை பயன் படுத்துவதனால் நோயாளிக்கு வலி குறையும் என்றும், அறுவைச் சிகிச்சையின்போது வெளியேறும் இரத்தத்தின் அளவு குறைவு என்பதனால் நோயாளிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


இந்த அறுவைச் சிகிச்சையின் மூலம் குறைந்தளவு பகுதிகளே சேதமடைவதுடன் போடப்படும் தையல் உறுதியானதாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
read more...

Friday, 17 July 2009

புதிய வலைப்பதிவர்கள் followers வசதியினைப்பெற மேலும் சில வழிகள்...

புதிய வலைப்பதிவர்கள் தமது வலைப்பதிவில் followers வசதியை பெறுவது எப்படி. எனும் பதிவின் மூலமாக புதிய பதிவர்கள் எப்படி போல்லோவேர்ஸ் வசதியினைப்பெறலாம் என்று குறிப்பிட்டு இருந்தேன். இதனை நான் பல மாத இணையத்தேடலின் மூலமாகவே பெற்றுக்கொண்டேன். அதை புதிய பதிவர்களோடு பகிர்ந்து கொண்டேன். பலர் இதனால் நன்மை அடைந்து இருக்கின்றார்கள்.

இன்று நண்பர் நட்புடன் ஜமால் அவர்கள் என்னோடு தொடர்புகொண்டு இன்னும் followers வசதி பற்றி அறிந்து கோள்ளக்கூடிய வழிகளை சொல்லி இருந்தார் அவற்றினைவும் உங்களுக்காகத்தருகிறேன்.

தீர்வு 1
தீர்வு 2


முயற்சி செய்யுங்கள் நண்பர்களே....
அதேபோல் நண்பர் நட்புடன் ஜமால் என்னுமோர் விடயத்தினையும் சொல்லி இருந்தார்

தூய நீர் என்பது ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜனின் எளிமையான கூட்டுக் கலவை. அது வாசமற்றது, வண்ணமற்றது, சுவையற்றது
read more...

Saturday, 11 July 2009

புதிய வலைப்பதிவர்கள் தமது வலைப்பதிவில் followers வசதியை பெறுவது எப்படி.

இன்று புதிய பதிவர்கள் எல்லோரும் தேடிக்கொண்டிருக்கும் ஒரு விடயம்தான் தங்களது வலைப்பதிவிலே followers இல்லையே என்ற பிரட்சனை.

இதனை Google Friend Connect மூலமாக இலகுவாக ப்ளக்குகளிலே இணைத்துக்கொள்ள முடியும். இது பலருக்குத் தெரிந்து இருந்தாலும் சில புதிய பதிவர்களுக்கு தெரியாது. இதனை எப்படிப்பெறலாம் என்று தலையை பிய்த்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

நானும் ஆரம்பத்திலே எனது ப்ளாக்கிலும் followers widget இல்லாமல் பல மாதங்களாக எங்கே பெறுவது இந்த widget ஐ என்று தேடிக்கொண்டிருந்தேன். ஒரு வாறாக கண்டு பிடித்து விட்டேன் அதனை புதிய பதிவர்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்

இதனை எப்படி எமது பிளக்கிலே இணைத்துக் கொள்ளலாம் என்பதை படங்கள் மூலமாக தருகின்றேன்.

முதலில் இங்கே செல்லுங்கள்...









இங்கே கிடைக்கின்ற HTML ஐ உங்கள் வலை பக்கத்தில் add widget இல் சேர்த்து விடுங்கள் இப்போ உங்கள் வலைப்பக்கத்திலும் followers....

இதில் இன்னுமோர் நன்மையும் இருக்கிறது நாம் ப்ளாக்கரில் இல்லாமல் வேறு இடங்களில் இருந்து Template download பண்ணி Template மாற்றுகின்ற பொழுது எமது வலைப்பதிவில் followers இல்லாமல் போகும் சந்தர்ப்பங்களில் எமது வலைப்பதிவில் ஏற்கனவே இருந்த followers இல்லையே என்று கவலைப்பட வேண்டியதில்லை. Google Friend Connect இல் எமது கணக்கின் மூலமாக உள் நுழைந்து இளந்த followers பெற முடியும்.


புதிய வலைப்பதிவர்கள் முயற்சி செய்து பாருங்கள்...

read more...