இந்திய - இலங்கை கடற்பரப்பில் இருநாடு மீனவர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் தொடரும் நிலையில், கொழும்புக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முன்வைத்துள்ள யோசனைகள் இருதரப்பிலும் மாற்றுக் கருத்துக்களை தோற்றுவித்துள்ளது. இது அவ்வாறிருக்க எனது முன்னைய இடுகை ஒன்றினைத் தருகின்றேன்.
இன்று இணையத்தளங்கள் வலைப்பதிவுகளில் அதிகமாக பேசப்படுகின்ற விடயம் தமிழக மீனவர்களின் கொலை பற்றிய விடயமாகவே இருக்கின்றன.
இந்தப் பிரச்சினை தொடர்பிலே சில வலைப்பதிவுகளிலும் சமூகத் தளங்களிலும் வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன.
இலங்கை வலைப்பதிவர்கள் பலர்; இலங்கை மீனவர்கள் குறிப்பாக வடபகுதி தமிழ் மீனவர்கள் தமிழக மீனவர்களால் பல்வேறு வழிகளிலே பாதிப்புக்குட்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்கின்ற இலங்கையின் கடலெல்லைக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசித்து இலங்கை மீனவர்களின் வலைகள் என்பவற்றை சேதப்படுத்தி தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி இலங்கை மீனவர்களின் வயிற்றிலடித்துச் செல்லும் செயல் அன்று தொட்டு இன்றுவரை நடந்து வருகின்றது. இது யாவரும் அறிந்த விடயம்.
தமிழக மீனவர்களால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட இலங்கை வடபகுதி மீனவர்கள் பலர் இருக்கின்றனர்.
தமிழக மீனவர்களினால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுவதுபோல் அன்றுதொட்டு இன்றுவரை இலங்கை கடற்படையினரால் பல தமிழக மீனவர்களின் உயிர்களும் பறிக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் இன்று தமிழக மீனவர்களின் படுகொலைக்கு எதிர்ப்பலைகள் அதிகமாகி இருக்கின்றன.
உலகத்தில் எந்த ஒரு மூலையிலாவது ஒரு தமிழனுக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் ஒவ்வொரு தமிழனும் அவனுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். அவன் இலங்கைத் தமிழனாக இருந்தால் என்ன இந்தியத் தமிழனாக இருந்தால் என்ன. இன்று தாக்கப்பட்டிருப்பவன் தமிழன். ஒவ்வொரு தமிழனும் அவனுக்காகக் குரல் கொடுக்கவேண்டும்.
பல காலமாக தமிழக மீனவர்களால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இருந்தபோதும் தமிழக மீனவர்களின் படுகொலை தொடர்பாக பரவலாக எதிர்ப்பலைகள் வந்துகொண்டிருக்கின்றபோது. அவர்களுக்காக பலரும் குரல் கொடுத்துக் கொண்டீருக்கும்போது நாமும் அவர்களுக்காக குரல் கொடுக்கவேண்டும்.
அதைவிடுத்து தமிழக மீனவர்கள் என்றும் இலங்கை மீனவர்கள் என்றும் பிரித்து பேசாதீர்கள். இங்கே இரு பக்கமும் பாதிக்கப்படுவது எம் உறவுகள் அப்பாவித் தமிழர்கள்.
இன்று தமிழக மீனவர்களின் படுகொலைக்கு எதிராக எல்லோரும் குரல் கொடுக்கும் நேரத்தில் இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று குற்றம் சுமத்துவது எந்த வகையில் நியாயம்.
இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் இல்லை என்று சொல்லவில்லை. இந்த நேரத்தில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தேவையானதா?
இலங்கை மீனவர்களின் வலைகள் வெட்டப்படுகின்றன இதனை தமிழகத்திலே இருக்கின்ற அனைத்து மீனவர்களும் செய்கின்றனரா? இல்லையே. இன்று உயிரிழந்திருக்கின்ற இந்திய மீனவன்தான் இலங்கை தமிழர்களின் வலையை வெட்டினானா?
எவனோ ஒருவன் செய்திருக்கலாம் அதற்காக இன்று அப்பாவியாக உயிரிழந்திருக்கின்ற தமிழக மீனவனை குற்றம் சொல்லலாமா? அவனுக்காக குரல் கொடுக்காமல் விடலாமா?
இலங்கை பதிவர்கள் சிலர் தமிழக மீனவர்களினால் இலங்கை மினவர்கள் வெகுவாகப் பாதிக்கின்றனர் எனும் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்கின்றேன். நானும் குற்றம்சாட்டுகின்றேன். ஆனாலும் குற்றம்சாட்டுவதற்குரிய நேரம் இதுவல்ல.
இலங்கையிலே இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்றபோது. எதுவுமே அறியாதவர்கள்போன்று தமிழக அரசியல்வாதிகள் மௌனம் சாதித்தபோது (தமிழக அரசியல் வாதிகளென்ன உலகமே மௌனம் சாதித்தபோது) இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கவில்லையா? உயிரைக்கூட கொடுத்தார்கள்.
இந்திய தமிழன் இலங்கை தமிழன் என்பதனை மறந்து தமிழன் என்று சிந்திப்போம் பாதிக்கப்பட்ட உறவுகளுக்காகக் குரல்கொடுப்போம்.
தலைப்பை பார்த்தே பலர் என்னைத் திட்டியிருப்பீர்கள். திட்டிய அனைவருக்கும் நன்றிகள்.
இன்று பதிவிட முடியாதபோதும் பதிவிட வேண்டும் என்பதற்காக பதிவிட்டேன்.
இதனையும் பாருங்கள்.
http://www.shanthru.com/2012/01/blog-post_26.html
இதனையும் பாருங்கள்.
http://www.shanthru.com/2012/01/blog-post_26.html
1 comments: on "இலங்கை தமிழன் என்றால் உசிரு. இந்திய தமிழன் என்றால் மசிரு."
100% I am agree with your argument!
Sorry: I couldn't type in Tamil at the moment.
Post a Comment