ஊடக அதர்மம் - 01 பார்க்க
தமிழ் மொழியின் சக்தி என்று தமக்குத் தானே மகுடம் சூட்டும் சக்தி. தமிழ் மொழிக்காக என்ன செய்கிறது. தமிழை கொச்சைப் படுத்துவதைத் தவிர? கலைஞர்களையும் கலைத்துறையையும் வளர்க்கின்றனராம். எங்கே வளர்க்கின்றனர் என்று சொல்லுங்கள். வெறுமனே இந்தியத் தொலைக்காட்சிகளின் தொடர்நாடகங்களை பெற்று இரவு பகலாக அத் தொடர்களைப் போட்டு எமது சமூகத்தின் கல்வியையும் இல்லாதொழிக்கின்றனர்.
பல நிகழ்ச்சிகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கின்றனர். இலங்கையில் நல்ல கலைஞர்கள் இல்லையா? படைப்பாளிகள் இல்லயைா? இலங்கையில் நல்ல கலைஞர்கள் படைப்பாளிகள் இருக்கின்றனர். இந்திய தயாரிப்பு நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்படும் பணத்தில் சிறு தொகையினை கொடுத்தாலே போதும் நல்ல நிகழ்ச்சிகளை தரக்கூடிய சிறந்த கலைஞர்கள் இருக்கின்றனர் இலங்கையில். சக்திக்கு இது தெரியாமல் இல்லை அவர்களின் நோக்கம் இலங்கையில் இருக்கின்ற தமிழர்களின் கலை கலாசாரங்களை இல்லாமல் செய்வதுதான்.
ஏன் சக்தி சுப்பர் ஸ்ரார் மூலம் பல கலைஞர்களை உருவாக்குகின்றார்கள்தானே என்று சொல்கின்றீர்களா? இந்நிகழ்ச்சி மூலம் பெருந்தொகைப் பணத்தை SMS மூலம் பெற்றுக் கொள்ளும் நோக்குடன் செய்யப்படும் நிகழ்ச்சிதான் இது கலைஞர்களை உருவாக்க வேண்டும் எனும் நோக்குடன் செய்யப்படும் நிகழ்ச்சி அல்ல. இந் நிகழ்ச்சியில் இடம்பெறும் தில்லுமுல்லுகள் ஏராளம்.
SMS நிகழ்ச்சிகளே ஏராளம் நேயர்களின் கண்ணைப் பொத்தி அடிக்கும் SMS நிகழ்ச்சிகள் ஒரு SMS அனுப்பிப்பார்த்தால் தெரியும் ஒரு SMS க்கு எவ்வளவு பணம் வெட்டுகிறார்கள் என்பது.
இது ஒரு புறமிருக்க சக்தியின் செய்திப் பிரிவு லூசுத் தனமாகச் செயற்படுவதுதான் வேடிக்கை. தங்களுக்கு யாரைப் பிடிக்கவில்லையோ அவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக செய்திகளை வெளியிடல். செய்திகளில் கேலித்தனமாக செய்திகளை வெளியிடல். உதாரணமாக இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை தலைவர் பதவியிலிருந்து துரத்துவதற்கு சக்தி தொலைக்காட்சி எவ்வாறெல்லாம் செயற்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். 30 நிமிட செய்தியில் 20 நிமிட செய்தி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான செய்தியாகவே இருக்கும்.
அதே போன்றுதான் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களை சக்தி குழுவினருக்கு கண்ணில் காட்ட முடியாது. காரணம் சந்திரகாந்தன் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்தவர் என்பதனால் அல்ல. சக்தி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் எமது சமூகத்தை வேறொரு திசைக்கு கொண்டு செல்கின்றன என்று சக்தி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் தொடர்பில் கருத்து தெரிவித்ததுதான் காரணம்.
இது ஒரு புறமிருக்க இவர்களின் செயல்கள் வடி கட்டிய முட்டாள்களின் செயல்கள் போல் அமைந்திருக்கின்றன. முதலமைச்சரால் ஏற்பாடு செய்யப்படுகின்ற கலந்து கொள்கின்ற நிகழ்ச்சிகளுக்கு சக்தியின் ஊடகவியலாளர்கள் செல்வார்கள். செய்தி போடுவார்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சி இடம்பெற்றது என்று மட்டும் சொல்வார்கள். யார் ஏற்பாடு செய்தது என்பதோ முதலமைச்சர் கலந்து கொண்டார் என்பதனையே சொல்லமாட்டார்கள். முதலமைச்சரை காட்டாது வீடியோவை காட்டுவார்கள். இதுதான் இவர்களின் ஊடக அதர்மம்.
இன்னுமொரு விடயம் சக்தி செய்திகளில் காட்டபபடும் சக்தியின் தேடல். சக்தியின் தேடல் மக்களை முட்டாள்களாகவே நினைக்கும் சக்தியின் மற்றுமொரு முயற்சி. எந்த விடயத்துக்கு நிதி ஒதுக்கப்படுகின்றது என்பதனை அவதானித்து அறிந்து செயற்படுவது. உதாரணமாக ஒரு வீதி மோசமான நிலையில் இருந்தால் அவ் வீதி திருத்தப்பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டு விட்டதாக அறிந்தவுடன் சக்தி குழுவினர் கமராவை தூக்கிக் கொண்டு குறித்த வீதிக்குச் சென்று மக்களையும் வீதிகளையும் பேட்டி எடுத்து போட்டு விடுவார்கள். செய்தியின் முடிவில் குறித்த அதிகாரியின் கவனத்திற்கு என்றும் போட்டுவிடுவார்கள்.
உண்மையில் பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது குறித்த வீதியின் திருத்தப்பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டவிடயம் அறிந்து இவர்கள் நாடகம் ஆடுகின்றனர் என்பது தெரியாது. திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டதும் குறித்த மக்களைச் சந்தித்து எங்களால்தான் இது நடக்கின்றது என்று சொல்வார்கள் திருத்தப்பணிகளையும் வீடியோ எடுத்து எங்களால்தான் சக்தியின் தேடலால்தான் வேலைகள் நடக்கின்றது என்று காட்டிக் கொள்வார்கள். சக்தியின் தேடலில் வரும் ஒவ்வொரு விடயமும் இவ்வாறுதான் நடக்கின்றது.
தொடரும்
2 comments: on "ஊடக அதர்மம் 02"
y this kolai very
சக்தி டிவிக்கு தாய் சன்டிவிதான்.. அவர்களும் இப்படிதான் பூமாலை வீடியோ ஆரம்பிக்கும்போது அரசு நலத்திட்டங்கள் எங்கு நடக்க இருக்கின்றது என்று அறிந்து செயல்பட்டார்கள்.. i
Post a Comment