பாசிக்குடாவில் திட்டமிட்ட காணி அபகரிப்பு தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு
பாசிக்குடா பிரதேசத்தைச் சேர்ந்த விநாசித்தம்பி என்னும் தமிழ் நபருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணி இஸ்லாமியர் ஒருவரினால் அரசியல் பின்புலத்துடன் வலுக்கட்டாயமாக சுவீகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸ் மற்றும் நீதி மன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்திருக்கும் போதும் அவர்கள் கட்டுபாட்டை மீறி அந்தக் காணியினுள் துப்பரவு வேலைகளை செய்துவருகின்றனர்.
இது போன்ற செயற்பாடுகள் மீண்டும் இரு சமூகங்களுக்கும் இடையில் இன முறுகலை ஏற்படுத்துவதற்காக செய்யப்படும் திட்டமிட்ட செயற்பாடாக இருக்கலாம் என மக்கள் அஞ்சுகின்றனர். இது போன்ற செயற்பாடுகளை அதிகாரிகளும், அரசியல் தலைமைகளும் தலையிட்டு முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என சம்பந்தப்பட்ட காணி உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அரசியல் தலைமைகளிடம் முறைப்பாடு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதற்குப் பின்புலமாக ஒரு முஸ்லிம் அரசியல்வாதி இரு்பது குறிப்பிடத்தக்கது
ஆரையம்பதி காத்தான்குடி எல்லை வளைவுக் கோபுரத்துக்கு மீண்டும் வழக்கு தாக்கல்
மண்முனைப்பற்று பிரதேசத்தில் ஆரையம்பதி காத்தான்குடி எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட போதும் அந்த எல்லை நிர்வாக பகிர்வில் மிக நீண்ட காலமாக இழுபறிநிலை ஏற்பட்டுவருகின்றது. இதன் காரணத்தால் அடிக்கடி இரு இனங்களுக்கும் இடையில் பரஸ்பரங்கள் பாதிக்கப்பட்டு குழப்பங்கள் ஏற்படுவதும் பின்பு பொலிஸ் அதிகாரிகளும், அரசியல் தலைமைகளும் பேசி தற்காலிக தீர்வுக்கு வருவதும் தொடர்கதையாகவே உள்ளது. மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்திலும் இவ் எல்லை அதிகாரம் வழங்கப்படுவது தொடர்பாக பிரஸ்தாபங்கள் ஒவ்வொரு கூட்டத்திலும் இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தனின் வேண்டுகோளின் அடிப்படையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கீழ் மண்முனைப்பற்று பிரதேச சபையினால் எல்லையினை வரையறுக்கும் வளைவுக் கோபுரம் அமைக்கப்படுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அதனை நிறுத்தி ஆரையம்பதி பக்கம் பின்னோக்கி நகர்த்துமாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது . இது தொடர்பான வாத பிரதிவாதங்களின் அடிப்படையில் நீதிமன்ற தீர்ப்பில் திருப்தி அடையாத ஆரையம்பதி பிரதேச சபை எதிர்காலத்தில் ஆரையம்பதி காத்தான்குடி எல்லையில் குழறுபடிகள் ஏற்படுவதை தடுப்பதற்கு எல்லையை வரையறுத்து வளைவு தூபியினை குறித்த எல்லையில் அமைப்பதற்கு அனுமதி கோரி பிரதேச தவிசாளரான மேரி கிறிஸ்றினா அவர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த எல்லை வளைவு அமைக்கப்படுமிடத்து எதிர்காலத்தில் இரு சமூகங்களுக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைகளை ஓரளவு சீர்படுத்த முடியும் என பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் பொதுமக்கள், பொது நிறுவனங்கள், ஆலயங்கள் எல்லை வளைவு தூபியினை குறித்த இடத்திலேயே அமைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தளவாய் நீரோடையில் அடாவடித்தனமாக கழிவுகள் கொட்டப்பட்டமை
செங்கலடி பிரதேச தளவாய் பகுதியில் மக்கள் குடிப்பதற்கு பயன்படுத்தும் நீரோடையில் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த கோழி வர்த்தக விற்பனையாளர் கோழிக் கழிவுகளை பலாத்காரமாக கொட்டிவிட்டு சென்றது தொடர்பாக கிராம சேவையாளர் மற்றும் பிரதேசவாசிகளால் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்களின் பாவனைக்காக பயன்படும் நீரோடையில் கழிவுகளை கொட்டியதால் இந் நீரோடை மிக மோசமான நிலையில் காணப்பட்டதுடன் இப்பகுதி மக்கள் நீராடுவதற்கும் சுத்தமான நீர் இல்லாமல் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
தமிழ் முஸ்லிம் உறவுகளை மேம்படுத்த வேண்டும என அரசியல் தலமைகளும், அரச அதிகாரிகளும் முயன்றுவரும் வேளையில் இதுபோன்ற திட்டமிட்ட செயற்பாடுகள் மீண்டும் இனமுறுகலை ஏற்படுத்த முயற்சிப்பதாக அமைகின்றது. எனவே இதில் மிக அவதானமாக செயற்பட வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
2 comments: on "முஸ்லிம்களால் தமிழர்களுக்கு எதிராக கிழக்கில் தொடரும் அடாவடித்தனங்கள்"
Keep up your great work. We will continue to support you, even though we cannot show faces for political correctness.
உண்மைகளைச் சொன்னால் எதிர் வாக்கு????
Post a Comment