மட்டக்களப்பில் பேச்சுத்தமிழில் பயன்படத்தப்படும் சொற்கள்தான் பம்மாத்து பகடமணி. இச் சொற்கள் தொடர்பில் பதிவிட இருக்கின்றேன். இப்போது கூட்டமைப்பினர் செய்து வருவதுதான் பம்மாத்து பகடமணி.
கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் 10 ந்திகதி இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் திரு ரணில் விக்கிரமசிங்கா அவர்களுடன் இணைந்து கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்தினை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரும் நோக்குடன் ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஜனாப் ரவூப் ஹக்கீம் அவர்களையும் தம்முடன் இணைத்துக்கொண்டு தோதலில் களமிறங்கியவர்கள்தான் மேற்கூறிய முக்கூட்டணியினர். ஆனால் அவர்களின் தேர்தல் வியூகம் தோல்வியைத் தழுவியதன் காரணமாக மாகாண சபையின் ஆட்சி அதிகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியினரால் கைப்பற்றப்பட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் திரு சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் முதலமைச்சராக (16.05.2008ல்) பதவியேற்றார்.
இந்நிலையிலேதான் கிழக்கு மாகாணத்தின் ஓர் மாவட்டமாக அமைந்துள்ள திருகோணமலை மாவட்டத்தின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், சட்டமா மேதை என தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டிருப்பவருமான திரு சம்பந்தன் அவர்களை சந்தித்து கிழக்கு மாகாண நிர்வாகம் தொடர்பாகவும் அதற்கான அதிகாரங்களை அரசுடன் இணைந்து உரியமுறையில் பெறும் நோக்குடன் கிழக்கின் முதலமைச்சர் திரு சந்திரகாந்தன் அவாகளும் அவரது ஊடகப் பிரிவின் செயலாளரான ஜனாப் ஆசாத் மெளலானா அவர்களும் இணைந்து சம்பந்தனின் கொழும்பிலுள்ள வாசஸ்தலத்தில் சந்திப்பதற்கான அனுமதியினை அவரிடம் பெற்றுக்கொண்டு அங்கு சென்றிருந்தபோதே திரு சம்பந்தன் அவர்கள் நான் கிழக்கு மாகாணத்தையோ, அதன் முதலமைச்சரையோ ஏற்றுக்கொள்ளவில்லை என்னும் தமது கருத்தினைக்கூறி அவர்களை திருப்பி அனுப்பியிருந்தார்.
கிழக்கு மாகாண சபையினையோ, அன்றி அதன் முதலமைச்சரையோ நிராகரிப்பதற்கான காரணங்கள் எதனையும் அவரால் அன்று கூறமுடியவில்லை. அதற்கான பிரதான காரணம் அவர் ஒரு மாவட்டத்தின் வாக்காளர்களால் மட்டும் தெரிவுசெய்யப்பட்டவராகவும், திரு சந்திரகாந்தன் அவர்கள் ஒரு மாகாணத்தில் வாழ்ந்த மக்களில் பெரும்பாலானவர்களின் விருப்பிற்கேற்ப தெரிவாகியிருந்தமையே யதார்த்தமாகும். அதேவேளை சட்டத் துறையின் ஒரு சிறிய பகுதியினை மட்டுமே தாம் கற்றறிந்துள்ளமையை சம்பந்தன் தமது நடவடிக்கையின்மூலம் அன்று வெளிக்காட்டியிருந்தமை இங்கு முக்கிய விடயமாகும். கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த வாக்காளர்களான (982.721) வாக்காளர்களில் (645.456 ) அதாவது (65.78%) வீதமான வாக்காளர்கள் வாக்களித்த நிலையில் அமைக்கப்பட்ட மாகாண சபையின் நிர்வாகத்தினை அங்கீகரிக்க தாம் தயாரில்லை என சம்பந்தன் கூறினார்.
குறிப்பு –இங்கு வாக்களித்த மூவினத்தையும்சார்ந்த வாக்காளர்கள் இலங்கையின் ஏனைய மாகாணங்களைப்போன்று தாம் வாழும் மாகாணமும் தனித்துவமான நிர்வாகத்தின்கீழ் செயற்படவேண்டும் என்பதனை வலியுறுத்திய நிலையிலேயே தமது வாக்குகளை வழங்கியிருந்தனர். இதுவிடயம் திரு பிரபாகரன் அவர்களின் தயவில் அரசியலுக்குள் மீண்டும் நுழைந்த திரு சம்பந்தன் அவர்களால் மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதி பிரபாகரன் மட்டுமே என பட்டமளிப்புச் செய்த அவரால் தமது வாக்குறுதியினை மீறமுடியவில்லை. அவ்வாறு மீறுவதானால் வன்னியில் அவருக்கென கொள்வனவு செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியினுள்ளேயே அவரது இறுதியான வாழ்க்கை முடிவுற்றிருக்கும்.
அதேவேளை தாம் முதன்முதலாக பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கியபோது அவரது தொகுதியில் அவருக்கு மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகள் எத்தனை வீதம் என்பதனை அவர் மறந்துவிட்டார்போலும்.
அன்றைய திருமலை மாவட்ட வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை (35.778) ஆகவும் மொத்தமாக வாக்களித்தவர்களின் எண்ணிக்கை (29.379) ஆக பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையில் திரு சம்பந்தனுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் ஆக மொத்தம் (15.144 மட்டுமே) அதாவது (51.76%) வீதமான மக்கள் மட்டுமே வாக்களித்திருந்தனர். அதுவும் மேற்படி தேர்தல் தமிழீழக் கோரிக்கையினை முன்வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் தேர்தலில் களமிறங்கிய நிலையிலேயே சம்பந்தனுக்கு கிடைத்த வாக்குகள் (51.76%) வீதமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த லட்சணத்திற்குள் (65.78%) வீதமான வாக்காளர்கள் பங்குகொண்ட கிழக்கு மாகாண சபையினை தம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாதென சம்பந்தன் தெரிவித்தமை சம்பந்தன் ஒரு பயங்கரவாதியா? ஜனநாயகவாதியா என்பதனை மக்களே தீர்மானிக்கலாம். புலம்பெயர் நாடுகளில் வாழும் சில புலிகளின் அடிவருடிப் பினாமிகள்தான் இன்று சம்பந்தனுக்கு ஏனைய அரசியல்வாதிகளினால் அனுபப்படும் மடல்களுக்கு பதில் கூறும் புத்திசாலிகளாக முளைவிட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண சபையினை நான் ஏற்பதற்கு தயாரில்லை என அன்று முழக்கமிட்ட திரு சம்பந்தன் அவாகள் கிழக்கு மாகாண அதிகாரத்தின்கீழ் நிர்வகிக்கப்படும் நகரசபைகளிலும், பிரதேச சபைகளிலும் தமது கட்சியின் வேட்பாளர்களை களமிறக்கியதன் மர்மமென்ன? இதன்மூலம் அவர் ஒரு (Money Maker) ரே தவிர மக்களின் பணியாளன் அல்ல என்பது தெளிவாகியுள்ளது. அதற்கமைய (17.03.2011ல்) கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலில் திரு சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பெற்ற வாக்குகள் ஆக மொத்தம் (54.542) வாக்ககள் மட்டுமே இதனை அங்கீகரிப்பதற்கு சம்பந்தன் தயாரா?
உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் கிழக்கு மாகாணம்
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் (17.03.2011—23.07.2011) மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை கிழக்கு மாகாணத்தில் பிரதான அரசியல் கட்சிகள் எனக்கூறப்படும் கட்சியினர் பெற்ற வாக்குகளும், அவர்களுக்கான உறுப்பினர்களின் விபரங்களும் பின்வருமாறு அமைந்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் மேற்குறிப்பிட்ட திகதிகளில் இடம்பெற்ற உள்ளுராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் (1) மாநகர சபை, (3) நகர சபைகள், (29) பிரதேச சபைகள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கிழக்கில் மொத்தமாக வாக்களித்த மக்களின் எண்ணிக்கையான (394.293) வாக்குகளில் அங்கு தேர்தலில் களமிறங்கிய ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற வாக்குகளும், அவர்களுக்கான உறுப்பினர்கள் மற்றும் கைப்பற்றிய சபைகள் தொடர்பான விபரங்கள் பின்வருமாறு அமைந்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் மேற்குறிப்பிட்ட திகதிகளில் இடம்பெற்ற உள்ளுராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் (1) மாநகர சபை, (3) நகர சபைகள், (29) பிரதேச சபைகள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இவற்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் (45) உறுப்பினர்களைப் பெற்று (1) நகர சபையினையும் (6) பிரதேச சபைகளையும் கைப்பற்றியுள்ளனர். அதேவேளை கிழக்கில் மொத்தமாக வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கையான (394.293) வாக்குகளில் (54.542) வாக்குகளை மட்டுமே த.தே.கூட்டமைப்பினர் பெற்ற நிலையில் இத்தொகை அளிக்கப்பட்ட வாக்குகளில் (13.82%)மான வாக்குகளை மட்டுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பெற்றுள்ளனர்
மேற்படி தகவல்கள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்க முன்வரும் புலம்பெயர் புலிப் பினாமிகளிடம் அரசியல் அறிவு அல்லது முதுகெலும்பு இருக்குமாயின் எமக்கே நேரடியாக தமது விமர்சனங்களை முன்வைக்கலாம் நாம் பதிலளிக்கவும், தமது கட்டுரையுடன் பிரசுரிக்கவும் தயாராகவுள்ளோம். அ. குமாரதுரை ஆசிரியர் மஹாவலி.கொம். எமது மின்னஞ்சல் முகவரி –Kumarathurai@kumarathurai.com
அன்றும், இன்றும்
த.ம.வி.பு கட்சியுடன் பேச்சு நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் –தமிழ்மிரர்
வியாழக்கிழமை 26 ஜனவரி 2012 04:55
(யொஹான் பெரேரா)
அதிகார பகிர்வு தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவில் பேச்சு நடத்தவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுடன் அதிகார பகிர்வு தொடர்பில் பேச்சு நடத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
‘முதலமைச்சர் சந்திரகாந்தனால் பேச்சு நடத்துவது தொடர்பில் விடுக்கப்ட்ட வேண்டுகோளையடுத்து தேசிய பிரச்சினை தொடர்பில் பேச்சு நடத்தி அரசியல் தீர்வு தொடர்பில் ஒர் இணக்கப்பாட்டுக்கு வர தீர்மானித்துள்ளோம்’ என சம்பந்தன் தெரிவித்தார். இப்பேச்சு தொடர்பிலான திகதி இதுவரை தீர்மானிக்கப்படவி;ல்லை. பேச்சுக்கான திகதியை தீர்மானிப்பது தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினருடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அதிகார பகிர்வு தொடர்பில் இணக்கப்பட்டுக்கு வருவதற்கும் பேச்சு நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார். வடக்கு கிழக்கு இணைப்பு தவிர்ந்த காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் தங்களுடன் ஒருமித்த கருத்துடனேயே உள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன் அண்மையில் கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றிகள்- www.mahaveli.com
0 comments: on "பம்மாத்தும் பகடமணியும்"
Post a Comment