கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் உறவை சீர் குலைத்து அரசியல் நடாத்த சில தீய சக்திகள் செயற்பட்டு வருகின்றனர். வேண்டுமென்றே கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் காணிகள் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒரு சிலரின் பின்னணியில் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் தமிழ் மக்களை சீண்டிப் பார்க்க நினைக்கின்ற பல கைங்கரியங்களையும் சில முஸ்லிம்கள் செய்து வருகின்றனர். உதாரணமாக காத்தான்குடி பிரதேச குப்பைகளை வேண்டுமென்று ஆரையம்பதியில் தேசிய கல்வியற் கல்லூரிக்கு பக்கத்தில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் கொட்டப்பட்ட விடயங்களைக் குறிப்பிடலாம். பல விடயங்களை முன்னர் சுட்டிக்காட்டியிருந்தேன்.
கிழக்கு மாகாணம் துரிதமாக அபிவிருத்தி அடைந்து வரும் நிலையில் பிரதான வீதியும் அழகாக வடிவமைக்கப்பட்டு வருவது யாவரும் அறிவர். அதன் ஒரு கட்டமாக அண்மையில் காத்தான்குடி ஆரையம்பதி எல்லையில் சுவாமி விவேகானந்தருடைய அழகிய சிலை ஒன்று வைக்கப்பட்டது. அன்று இரவோடு இரவாக அச்சிலை உடைக்கப்பட்டிருக்கின்றது. இச் சிலை உடைப்பின் நோக்கம் என்ன? என்ன காரணத்துக்காக உடைக்கப்பட்டன.
காத்தான்குடி ஆரையம்பதி எல்லை நிர்ணயம் தொடர்பில் பல காலமாக பிரச்சினைகள் இடம்பெற்று வருவது யாவரும் அறிவர். முஸ்லிம்கள் ஆரையம்பதியின் தமிழர் காணிகளை பலவந்தமாக அபகரித்ததன் காரணமாகவும் எல்லையை நிர்ணயிப்பதில் பிரச்சினைகள் இருந்து வந்தன. ஆனாலும் தற்போது எல்லை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது. அதன்பிரகாரம் காத்தான்குடி ஆரையம்பதி எல்லையில் இச்சிலை வைக்கப்பட்டது.
இரவோடு இரவாக இச்சிலை உடைக்கப்பட்டிருப்பது தமிழ் மக்கள் மட்டுமல்ல ஒவ்வொரு இந்துவும் கவலைப்படவேண்டிய விடயம். சுவாமி விவேகானந்தர் யார் அவரின் கருத்துக்கள் போதனைகளை அறியாத காட்டுமிராண்டிகளின் ஒரு செயலாகவே இச் செயல் இருக்கின்றது. சிலையை உடைக்கும்போது நேரில் கண்டவர் முஸ்லிம்களால்தான் உடைக்கப்பட்டதை உறுதிப்படுத்தி இருக்கின்றார். உடைத்தவர்களிடம் ஒன்றைக் கேட்கின்றேன் இதுதான் மதத்தின் தர்மமா?
இன்று உலகமே போற்றிக்கொண்டிருக்கின்ற ஒரு மகானுடைய சிலையை உடைக்கும் அழவிற்கு கிழ்த்தரமானவர்களாக நீங்கள் இருப்பதையிட்டு நான் கவலைப்படுகின்றேன். இப்படிப்பட்ட கீழ்த்தரமானவர்கள் இருக்கும் தேசத்தில் நான் இருக்கின்றேனே என்பதனை நினைத்து. அன்று சிகாகோ நகரமே சுவாமி விவேகானந்தருக்கு தலை வணங்கியது. உலகமே போற்றும் உத்தமரின் கை கால்களை உடைக்கும் நீங்கள் மனிதர்களா?
இச் சிலை உடைப்பு விடையத்தில் ஊடகங்களும் இந்து அமைப்புக்களும் அறிக்கை மன்னர்களும் அடக்கி வாசிப்பது ஏன்? சிலை உடைக்கப்பட்டது மட்டக்களப்பில் என்பதனாலா? அன்று யாழ்ப்பாணத்தில் சிலை உடைக்கப்பட்டபோது பொங்கி எழுந்தீர்கள். திருகோணமலையில் தந்தை செல்வாவின் சிலை உடைக்கப்பட்டபோது போங்கி எழுந்தீர்கள். மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்தரின் சிலை உடைக்கப்பட்டபோது மட்டும் அடக்கி வாசிப்பது ஏன்?
இப்பதிவிலும் பிரதேசவாதம் பேசுகின்றேன் என்று சொன்னால் அது உங்கள் முட்டாள் தனம். என் மன ஆதங்கத்தை எழுதுகிறேன். சிலை உடைக்கப்பட்ட அன்றிலிருந்து இன்றுவரை மனதில் நிம்மதியில்லை நான் நேசிக்கும் ஒரு மகானின் நிலை இந்த அளவிற்கு வந்திருக்கின்றதே.
அன்று யாழ்ப்பாணத்தில் சிலை உடைக்கப்பட்டபோது மட்டக்களப்பிலிருந்து எத்தனையோ கண்டன அறிக்கைகள். ஊடகங்கள் அனைத்தும் தொடர்ந்து சிலை உடைப்பு தொடர்பாக கண்டனங்களையும் செய்திகளையும் வெளியிட்டன. அதே போன்று திருகோணமலையில் தந்தை செல்வாவின் சிலை உடைக்கப்பட்டபோது மட்டக்களப்பிலிருந்து பல கண்டன அறிக்கைகள் ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டன. அவைகளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இச் சிலை உடைப்பிற்கு ஊடகங்களும் அமைப்புக்களும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை ஏன்?
முன்னர் உடைக்கப்பட்ட சிலைக்குரியவர்களை விட சுவாமி விவேகானந்தர் முக்கியத்துவமற்றவராக நீங்கள் கருதுகின்றீர்களா? இச் சிலை உடைப்பு விடயத்தில் இந்து அமைப்புக்கள் மெளனம் சாதிப்பது ஏன்?
9 comments: on "சுவாமி விவேகானந்தருடைய கை, கால்கள் உடைக்கப்பட்ட வரலாறு"
உண்மையில் காத்தான்குடி முஸ்லிம்களின் நோக்கம் பக்கத்து கிராமம்களை அபகரிப்பதுதான் முதல் ஆரயம்பதி நரசிங்கர் விக்ரகத்தை உடைத்தார்கள் , மாட்டுத்தலையை கொண்டுபோய் கோவிலுக்குள் போட்டார்கள், இப்போ விவேகானந்தர் சிலை உடைப்பு....
உண்மைல் இவர்கள் புனித குரானை படித்தவர்களா ? இலங்கைத்தீவில் மிகவும் வேதனைக்குரியவர்கள்தான் காத்தான்குடி ஊர் முஸ்லிம்கள்.
அநியாயத்தை தட்டிக் கேட்க்கும் தைரியம் உள்ளவன் நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.
எமது பிரதேசத்தை காப்போம்......
//முஸ்லிம்கள் ஆரையம்பதியின் தமிழர் காணிகளை பலவந்தமாக அபகரித்ததன் காரணமாகவும்//
அப்ப்டி நடந்திருந்தால் அந்த நேரம் துப்பாக்கியும் கையுமாக இருந்த பிள்ளையான் கருணா பிற புலிகள் ஒன்றும் செய்யவில்லையா?
அல்லது நீங்கள் நீதிமன்றத்தை நாடியிருக்கலாம்தானே?
ஆனால் நீங்கள் செய்ததெல்லாம் காத்தான்குடி மக்களை கொன்றுகுவித்து அவர்களை காத்தான்குடியிலிருந்தே துரத்துவதுதானே?
முதலாவது படத்தை பார்த்தாலே காத்தான்குடி ஈச்சை மரங்களுக்கு மிக அருகில் இந்த சிலை இருப்பது தெளிவாக தெரிகிறது.
// Rocket Tamil கூறியது...
உண்மையில் காத்தான்குடி முஸ்லிம்களின் நோக்கம் பக்கத்து கிராமம்களை அபகரிப்பதுதான் முதல் ஆரயம்பதி நரசிங்கர் விக்ரகத்தை உடைத்தார்கள் , மாட்டுத்தலையை கொண்டுபோய் கோவிலுக்குள் போட்டார்கள், இப்போ விவேகானந்தர் சிலை உடைப்பு....
உண்மைல் இவர்கள் புனித குரானை படித்தவர்களா ? இலங்கைத்தீவில் மிகவும் வேதனைக்குரியவர்கள்தான் காத்தான்குடி ஊர் முஸ்லிம்கள்.//
உண்மைதான் நண்பா.. சிலைகளை உடைப்பதும் விக்கிரகங்களை உடைப்பதும் மாட்டுத் தலையை ஆலயத்துக்குள் போடுவதும் குப்பைகளையும் மாட்டுக் குடல் கழிவுகளையும் தமிழ் மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் கொட்டுவதும்தான் இவர்களின் அடாவடித் தனங்கள் தமிழ் மக்களின் காணிகளை தொடர்ச்சியாக பலவந்தமான பிடித்து வருகின்றனர் இதன் பின்னணியில் ஒருசில முஸ்லிம் அரசியல்வாதிகள் இருக்கின்றனர்.
அப்ஸர் சொன்னது…
முதலாவது படத்தை பார்த்தாலே காத்தான்குடி ஈச்சை மரங்களுக்கு மிக அருகில் இந்த சிலை இருப்பது தெளிவாக தெரிகிறது//
முதலாவது படம் சிலைப்பக்கமாக நின்று எடுக்கப்பட்டிருக்கிறது அதனால்த்தான் அருகில் இருப்பது மாதிரி இருக்கு, அரயம்பதி எல்லைக்குள்தான் சிலை இருக்கு .
நீங்கள் ஈச்சமரம் நட்டபோது உங்களைப்போல் மனமகிழ்ச்சி அடைந்தவர்கள் தமிழ் மக்களும்தான் என்பதை மறந்து விட்டீர்கள்.
//Rocket Tamil கூறியது...
அநியாயத்தை தட்டிக் கேட்க்கும் தைரியம் உள்ளவன் நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.
எமது பிரதேசத்தை காப்போம்......//
எல்லோரும் பயத்தில் தட்டிக் கேட்காமல் விட்டதனால்தான் இன்று எமது தலையில் மிளகாய் அரைக்கும் அளவிற்கு வந்திருக்கின்றனர்
// அப்ஸர் கூறியது...
//முஸ்லிம்கள் ஆரையம்பதியின் தமிழர் காணிகளை பலவந்தமாக அபகரித்ததன் காரணமாகவும்//
அப்ப்டி நடந்திருந்தால் அந்த நேரம் துப்பாக்கியும் கையுமாக இருந்த பிள்ளையான் கருணா பிற புலிகள் ஒன்றும் செய்யவில்லையா?
அல்லது நீங்கள் நீதிமன்றத்தை நாடியிருக்கலாம்தானே?
ஆனால் நீங்கள் செய்ததெல்லாம் காத்தான்குடி மக்களை கொன்றுகுவித்து அவர்களை காத்தான்குடியிலிருந்தே துரத்துவதுதானே?
முதலாவது படத்தை பார்த்தாலே காத்தான்குடி ஈச்சை மரங்களுக்கு மிக அருகில் இந்த சிலை இருப்பது தெளிவாக தெரிகிறது.//
புலிகள் இருந்தபோது நீங்கள் தமிழர் பிரதுசங்களைப் பிடிக்கவில்லை. இன்று கருணா பிள்ளையான் இருவரும் அரசியல் நீரூட்டத்தில் இருக்கின்றனர். இவர்களிடம் ஆயுதக்குழு இல்லை. இவர்கள் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று நினைக்கின்றனர்.நீங்கள் தமிழர்களை அழித்தொழிக்க நினைப்பதுபோல் நினைக்கவில்லை. உங்களைப்போல் இப்படியான வுலைகளைச் செய்யும் அளவில் அவர்கள் இல்லை.
நீதிமன்றம்வரை சென்று எல்லை நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. எல்லையில்தான் சுவாமி விவேகானந்தர் சிலை நிறுவப்பட்டது. எல்லைக்கு அருகில் ஈச்சை மரங்களை நாட்டியது நீங்கள்தான். முட்டாள் தனமாக பேசவேண்டாம்.
கஷ்டகாலம்
ஒன்னும் சொல்ல முடியவில்லை...
Post a Comment