Thursday, 5 January 2012

யாழ்ப்பாணம் மட்டும்தான் செந்தமிழுக்கு இலக்கணமா?

இன்று கொலைவெறிப்பாடல் பலரது அபிமானப் பாடலாக இருந்தாலும் பரவலாக பலராலும் எதிர்க்கப்படுகின்ற பாடலாகவும் அமைந்திருக்கின்றது.  ''என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்தக் கொலவெறிடா '' எனும் பாடல் இப்போது யாழ்ப்பாண நண்பர்களினால் வெளியிடப்பட்டிருக்கின்றது.

 எனது கணிணியில் இப்போதெல்லாம் அதிகம் ஒலிக்கின்ற பாடல் இப்பாடல்தான். அழகிய வரிகள்  இளம் இசையமைப்பாளர் எஸ். ஜே ஸ்ரலின் பாடல் வரிகளை எழுதிப் பாடியுள்ளார். இப்பாடலை நான் அதிகம் கேட்டாலும் பாடலைக் கேட்கும் ஒவ்வொரு தடவையும் பாடலின் சில வரிகள் பொருத்தமற்றது போன்று தோன்றுகிறது.  தமிழ் மொழியின் சிறப்பினைச் சொல்லும் இப்பாடலில் ஒரு குறித்த பிரதேசத்தை மட்டும் சுட்டிக் காட்டுவது பொருத்தமற்றது என்பது என் கருத்து எந்த வரிகள் என்று சொல்ல மாட்டேன் சொன்னால் பிரதேசவாதம் பேசுகிறேன் என்று சொல்வார்கள்...

பாடல் வரிகள்


என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…
கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா…
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…
செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்…
கம்பனின் வரிகள்…
வள்ளுவன் குறள்கள்…
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு…
பழமை பாடும்…
தமிழர் பெருமை எங்கே?
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யேசு, புத்தன்,
காந்தி சொன்ன
அகிம்சை வழியைக் கேளு – தினம்
தமிழின் செழுமை
படித்து வந்தால்
தணியும் கொலவெறி பாரு..!
ஆஸ்கார் வாங்கிய
தமிழன் சபையில்
பெருமை சேர்த்தான் தமிழில்
செம்மொழி பாடிய
புரட்சிக் கவிஞன்
தன்னுயிர் கலந்தான் தமிழில்..!
தமிழை வாழவை இல்லை வாழவிடு
இன்னும் தாங்காதடா மனசு
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு
தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பைத் தொலைத்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…
பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல – அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா – தமிழா
எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா…


Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

4 comments: on "யாழ்ப்பாணம் மட்டும்தான் செந்தமிழுக்கு இலக்கணமா?"

நிரூபன் said...

வணக்கம் நண்பா, ஓர் பொதுவான நோக்கோடு தமிழின் சிறப்பினைச் சொல்லும் பாடல் எனும் அடை மொழியோடு பிரதேசம் பற்றி தனியே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!

உங்கள் கருத்தினை ஏற்றுக் கொள்கின்றேன்! தமிழின் பெருமைக்குள் தனியே ஓர் ஊரின் பெருமையினூடாக மொழிப் பெருமையை நிரூபிக்க முனைவது அழகல்ல!

புவனேஸ்வரி ராமநாதன் said...

இது போன்ற விஷயங்களை உதாசினம் செய்வதே நல்லது.
ஏனென்றால் இந்த விஷயங்களை பாராட்டுபவர்களை விட
குறை சொல்பவர்களாலேயே அதிகம் பிரபலமடைகிறது

Hotlinksin.com said...

நண்பரே உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் முத்திரை பதிக்கின்றன. உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள்.

ம.தி.சுதா said...

சகோ நீங்கள் சொல்வது சரி தான்.. ஆனால் இன்னும் ஒன்று இருக்கல்லவா..

ஃஃஃஃயாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டாஃஃஃ

இது கவிஞரின் ஏதோ ஒரு தாக்கத்தில் உருவான வரியாக இருக்கலாம்.

----யாழ்ப்பாணம் தான் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா--- என்று பாவித்திருந்தால் சொல்லுங்கள் நானும் அவரை செருப்பால் அடிக்க வருகிறேன்...

Post a Comment