Monday, 19 July 2010

கடவுளுக்கு மாடு எழுதும் கடிதம்

வணக்கம்  தெய்வமே.


நலமாக இருக்கின்றீர்களா என்று கேட்க விரும்பவில்லை. நீங்கள் நலமாகவே இருப்பீர்கள். நீண்ட நாட்களாகவே உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்தது ஆனாலும் எழுதுவதற்கு மனம் வருவதில்லை. எங்களை மாடு என்று சொல்லிக்கொண்டு எங்களையும் விட மோசமான நிலையிலே மனிதானமற்று செயற்படுகின்ற இந்த மனிதர்களின் போக்கைப் பார்க்கின்றபோது எப்படியோ  இன்று கடிதம் எழுதவேண்டும் என்று தோன்றியது.

அப்படி கடிதம் எழுத வேண்டும் என்ற அவசியம் ஏன் ஏற்பட்டது என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. நீண்ட காலமாகவே எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தை உங்களிடம் முதலில் கேட்கின்றேன். உலகத்தைப் படைத்து, உயிர்களை எல்லாம் படைத்து இந்த உலகத்தையே நீங்கள்தான் இயக்கிக் கொண்டிருப்பதாக சொல்கின்றனர். இது உண்மையா? அப்படியானால் எங்களுக்கு 5 அறிவு படித்துவிட்டு மனிதனுக்கு மட்டும் ஏன் 6 அறிவு படைத்தீர்கள்.

இன்றைய மனிதன் ஆறறிவோடுதான் இருக்கின்றானா என்பது சந்தேகமாகவே இருக்கின்றது. 5 அறிவு படைத்த நாங்கள் நடந்து கொள்ளும் அளவுக்கு மனிதன் நடந்து கொள்கின்றானா?  எங்களைப் பார்த்து மாடு என்று சொல்லிவிட்டு எங்களைவிட  கீழ் தரமான முறையிலே நடந்துகொள்ளும் மனிதர்களைப் பார்த்து வெட்கித் தலை குனிகின்றோம்.

சில மனிதர்களுக்கு மாடு, மாடு என்று ஏசுகின்றனர். அவர்கள் நடக்கின்ற விதங்களைப் பார்க்கின்றபோது. அடிக்கடி நான் கவலைப் படுவதுண்டு. அந்த மனிதன் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்து   அழுதிருக்கின்றேன். மாடு என்று எங்கள் பெயரை வைத்து  கேவலமான நடவடிக்கைகளிலே ஈடுபட்டு எங்கள் பெயரையே கேவலப்படுத்தும்போது எமது சந்ததிக்கே ஒரு அவமானமாக கருதுகின்றேன். 

இந்த மனிதன் எத்தனையோ அட்டுழியங்களையும், அடாவடிகளையும் செய்துகொண்டிருக்கின்றான் எங்களையும் இவன் விட்டு வைத்ததாக இல்லை.  எங்களை எப்படி எல்லாம் கொடுமைப் படுத்தவேண்டுமோ அப்படி எல்லாம் கொடுமைப் படுத்துகின்றான்.

ஏன் கதையும் ஒரு சோகக் கதைதான். நான் இப்போது ஒரு விவசாயியிடம் இருக்கின்றேன்.  என்னை சிறுவயதிலே வேறு ஒரு இடத்திலிருந்து வாங்கி வளர்த்தார். சிறு வயதில் நல்ல உணவு கிடைத்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை இப்போது அந்த விவசாயிக்கு தினமும் அதிகளவில் உழைத்துக் கொடுக்கின்ற ஒருத்தனாக மாறிவிட்டேன். ஆனால் நான் உழைத்துக் கொடுக்கும் அளவுக்கு எனக்கு உணவு வழங்கப் படுவதில்லை.

செய்வதறியாது தினமும் அழுதுகொண்டிருக்கின்றேன். காலையில் 5 மணிக்கு எங்காவது உழுவதற்கு கொண்டு செல்வார். காலையில் சாப்பாடு கிடைக்காது நெல் விதைக்கும் காலங்களில் காலையில் போனால் மாலையில்தான் வரவேண்டும் அதுவரைக்கும் தொடர்ந்து வேலை செய்யவேண்டும். உணவு கிடைக்காது.  இரவில் வைக்கோல் தருவார்கள்.

பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு இந்த வைக்கோலை சாப்பிட்டு நான் என்ன செய்வது.  நான் உழைத்துக் கொடுக்கும் பணத்தை வைத்து அந்த மனிதர் விதம் விதமான சாப்பாடு  சாப்பிடுகின்றார். எங்களுக்கு ஒரு நேர சாப்பாடும் ஒழுங்காக இல்லை.

இந்த நிலை எனக்கு மட்டுமல்ல ஏன் சந்ததிக்கே, என் இனத்துக்கே நடக்கின்றது. பசியின் காரணமாக நாங்கள் வேலயு செய்யமுடியாது களைப்பின் காரணமாக சற்று நேரம் படுத்தாலே எத்தனையோ சித்திரைவதை செய்கின்றனர். எங்கள் முக்குக்குள் கம்பினால், கம்பியால் குத்தி காயம் எடுத்து மிளகாய் பொடி போடுகின்றனர். அப்போது நான் மிளகாய்ப்பொடி எரிகின்றபோது வேலை செய்வேனாம்.  இன்னும் எத்தனையோ சொல்ல முடியாத சித்திரைவதைகள்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ஆனால் இன்னும் எழுத நேரம் போதவில்லை இன்று முழுவது கடும் வேலை இப்போதுதான்  வைக்கோலை சாப்பிட்டுவிட்டு  வந்து எழுதுகின்றேன். உடம்பு கடும் வலியாக இருக்கின்றது.  இன்று சற்று களைப்பாக இருந்ததனால் வேகமாக வேலை செய்யும்படி அதிகமாக அடித்துவிட்டார்கள் இப்போது சற்று தூங்க வேண்டும்.

இறுதியாக உங்களிடம் ஒன்றை மட்டும் கேட்கின்றேன். மனிதர்களையும் எங்களையும் நீங்கள்தானா படைத்தீர்கள். உங்கள் படைப்பிலும் வேற்றுமைகளா? உங்களால் படைக்கப்பட்ட எங்களை உங்களாலேயே படைக்கப்பட்ட இன்னொரு படைப்பு மனிதன் எனும் மிருகம் எங்களை சித்திரைவதை செய்யும்போது ஏன் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

நான் நினைக்கின்றேன். இப்போது மனிதர்களை அறிவில்லாமல் படைக்கின்றீர்கள் என்று.  உங்களால் படைக்கப்பட்ட மனிதனை உங்களால் மாற்ற முடியாதா? மனிதன் மனங்களிலே மாற்றம் வரவேண்டும். மனிதனது மனங்களிலே உங்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாதா?

நீங்கள் இந்த உலகத்தில் நடப்பவற்றை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றீர்களா? அல்லது இந்த மனிதர்களின் அட்டுழியங்களுக்கு பயந்து நீங்களும் எங்காவது ஓடிவிட்டீர்களா?

தவறிருந்தால் மன்னியுங்கள்.

இப்படிக்கு
உன் படைப்பால் வேதனைப்படும்
மாடு


(மாடு படும் கஷ்டங்களையும், வேதனையையும் நேரில் கண்டபோது எழுதத் தோன்றியது)

இன்றைய பாடல்

read more...

Sunday, 18 July 2010

அரோகரா... சொல்லுங்கோ.... அரோகரா...

கிழக்கிலங்கையிலே பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக விளங்குகின்ற மட்டக்களப்பு களுதாவளை திருநீற்றுக் கேணி சிவசக்தி சிறி முருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழா இன்று (18 .07 .2010 ) ஆரம்பமாகி 27 .07 .2010 அன்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெற இருக்கின்றது.  


இந்த ஆலயம் பல நுற்றாண்டு கால  வரலாற்றினைக் கொண்டதோடு திருநீறு தானாகவே கிடைக்கின்ற தீர்த்தக்கேணியினையும்  கொண்ட ஆலயமாகவும் இருக்கின்றது. 


திருவிழாக் காலங்களில் கலை, கலாசாரம் சார்ந்த பல கலை நிகழ்சிகளும், சமய சம்பந்தமான பல நிகழ்வுகளும் இடம்பெறும். 


ஆலயத்தைப் பற்றியும். ஆலயத்திலே இடம்பெறுகின்ற முக்கியநிகழ்வுகளும் பல விடயங்களும் இன்னொரு பதிவில் விபரமாக தருகின்றேன்.




read more...

Wednesday, 14 July 2010

கொம்புமுறி விளையாடலாம் வாங்க.

தமிழருகே  தனித்துவமான கலை, கலாசார, பாரம்பரியங்கள் இருக்கின்றன. அவை இன்று மறைந்து வருகின்றன. அன்று நடைபெற்ற பல விடயங்களை நமது முன்னோர்கள் சொல்லியே நாம் அறியவேண்டி இருக்கின்றது.



எமது பாரம்பரிய கலைகளை நாம் கட்டிக்காக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். பல விடயங்களை நாம் எமது முன்னோர்கள் சொல்லியே அறியவேண்டி இருக்கின்றது. எமது எமது எதிர்கால சந்ததியினர் எமது பாரம்பரிய கலை, கலாசாரங்களை எதிர்காலத்தில் தெரியாமல் இருப்பதற்கும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

தமிழருக்கே தனித்துவமான ஒரு விளையாட்டாக கொம்புமுறி விளையாட்டு விளங்குகின்றது. கொம்புமுறி விளையாட்டுக்கு பிரசித்தி பெற்ற இடமும் எனது கிராமம் களுதாவளை. கொப்புமுறி விளையாட்டு இடம் பெற்ற  இடம் கொம்புச்சந்தி என்று இப்போதும் எல்லோராலும் பயன்படுத்தப் படுகின்றது ஆனால் இங்கே இருக்கின்ற பலருக்கு கொம்புமுறி விளையாட்டு என்றால் என்ன என்று தெரியாது.

கொம்புமுறி விளையாட்டு தொடர்பாக நான் முன்னர் மேலோட்டமாக ஒரு இடுகை இட்டிருந்தேன்.  இந்த பதிவின் மூலம் கொம்புமுறி விளையாட்டு பற்றியும் எமது கிராமத்திலே எவ்வாறு கொம்புமுறி விளையாட்டு இடம் பெற்றது என்ற பல சுவாரஷ்யமான விடயங்களை வரலாற்று தகவல்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன்.

கண்ணகை மாநாய்கரின்  வளர்ப்பு மகள். மாசாத்துவரின் மருமகள். கோவலன் மனைவி. செட்டி குலத்திலே வளர்ந்த செட்டிச்சி அம்மை. மாவின் கனியாக வந்த மாறன் விழி மாற வழி செய்தவள்.  மாதவிக்குப் போன்தோற்ற கணவருடன் பூம்புகார் விட்டுப் புறப்பட்டு மதுரை சென்றாள்.  ஆயர் இடை சேரியில் கண்ணகியை அடைக்கலமாக வைத்து கண்ணகியின் ஒரு கால் சிலம்பு விற்க  சென்றான் கோவலன்.

தட்டான் ஒருவன் கோவலனை "சிலம்புத் திருடன்" என்று குற்றம் சாட்டினான். விதி வலியால் அறிவிழந்த  பாண்டிய மன்னன் தீர்க்கமாக விசாரணை செய்யாமல் கோவலனை மழுவிலே வெட்டிக் கொன்றான்.

தன் கணவன் கள்வன் எனும் குற்ற  சாட்டின் பேரில் கொலை செய்யப் பட்டத்தை அறிந்த கண்ணகை கடும் கோபமுற்றாள். ஒரு கையில் சிலம்பு மற்றொரு கையில் வேப்பம் குழை.  விரித்த தலை முடி  நீர் வடியும் கண்கள் . கோபா வேசமாக சென்று பாண்டியனோடு வழக்குரைத்த கண்ணகை இடது முலை திருகி எரிந்து பாண்டிநகர் எரித்தாள்.

அடைக்கலமாக இருந்த ஆயர்ப்பாடிக்கு வந்தபோது ஆய்ச்சியர்கள் வெண்ணெய், தயிர் முதலானவற்றை கண்ணகியின் வேப்பம் தனிவித்தனர். கண்ணகை சீரிய தோற்றம் மாறவில்லை. பொங்கிய சினம் தணியவில்லை. இளைஞர்கள் கண்ணகி கட்சி கோவலன் கட்சி என்று இரண்டு பிரிவாகப் பிரிந்து கொம்பு எனப்படும் வளைந்த தடிகள்  இரண்டினை ஒன்றோடு ஒன்று கொழுவி இழுத்து முறித்து விளையாடி கண்ணகை கட்சிக்கு வெற்றி கொடுத்து ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.

இந்த வினோத விளையாட்டினை கண்ணுற்ற கண்ணகை கோபம் தணிந்து மணம் மகிழ்வுற்று சிரித்ததாகவும் கண்ணகையை மகிழ்சி அடைய செய்யும்  நோக்கிலே தோன்றி வளர்ச்சி அடைந்ததே இந்த கொம்புமுறி விளையாட்டு. இது விளையாட்டு என்று பேர் பெறினும் சமய சம்மந்தமானதும் இலக்கிய இராசனைக்குரியதும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலே வெற்றிலை செய்கையின் மூலம் புகழ் பெற்ற கிராமம் களுதாவளை கிராமம். பழம் பெருமை மிக்க இக் கிராமத்தின் வெற்றிலை தனி சுவை மிக்கது. "காலி  விளை பாக்கிற்கும் களுதாவளை வெற்றிலைக்கும் ஏலம் கிராம்பிட்கும் ஏற்றதுதான் உன் எழில் வாய்"  என்று நாட்டுப்புற பாடலிலே பாடும் அளவுக்கு பிரசித்தி பெற்றதுதான் இக் கிராமம்.

கண்ணகை வழிபாடு இந்தியாவிலே ஆரம்பமானது. சேரன் செங்குட்டுவன் இமய மலையில் கல்லெடுத்து கனக, கனக விஜயன் தலைமையிலே சுமந்து வர செய்து கண்ணகிக்கு சிலை செய்தான். கோவில் கட்டி விழாக் கொண்டாடினான். விழாவுக்கு சென்ற இலங்கை கஜபாகு வேந்தன் கண்ணகை சிலைகளையும், வழிபாட்டினையும் இலங்கைக்கு கொண்டு வந்ததாக சிலப்பதிகாரம் சொல்கின்றது.

கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்திலே கண்ணகை வழிபாடு பிரசித்தி பெற்றது.  கொம்புமுறி விளையாட்டு கண்ணகை அம்மனை முன்னிறுத்தியே நடை பெறும். அம்மை, கொப்பளிப்பான், கண்நோய், போன்ற நோய்களை "அம்மன் கோதாரி"  என்று அழைப்பது மட்டக்களப்பு பிரதேச வழக்கு.

மழை வளங்குன்றி, வரட்சி அதிகமான காலத்திலேயே இந்த நோய்கள் அதிகம் பரவும். மஞ்சலும், வேப்பிலையும் இதற்கு மருந்து. கண்ணகை அம்மனுக்கு விழா நடத்தினால் கண்ணகை மகிழ்சியுற்றால் மழை பொழியுமெனவும் கோதாரிகள் (நோய்கள்) குறையும் எனவும் மக்கள் நம்பினர். இதனாலேயே கண்ணகையை வேண்டி மக்கள் மழைக் காவியம் பாடினர்.

"கப்பல் திசை கேட்டது கரைக்குள் அடையாதோ
கட்டையினில் வைத்த பின மற்றுயிர் கொள்ளாதோ
உப்பளமத்தில்  பதர் விதைக்க முளையாதோ
உத்தரவு ஊமையனுரைக்க அறியானோ
இப்பிரவியர் குருடு இப்ப தெளியாதோ
எப்பமா மழை தருவ தென்றினி திருந்தாய்
தப்பினால் உலக முறுவார்கள்  துயர் கண்டாய்
தற்பரா பரனுதவு சத்தி கண்ணகையே"

என்பது மழைக் காவியத்தில் சில வரிகள்.

கொம்புமுறி விளையாட்டு நடத்துவதானாலும் கண்ணகையினுடைய அருளையும், கருணையும் பெற்று நோய் நொடியின்றி  மழைவளம் பெற்று வளமாக வாழலாம் என்று மக்கள் நம்பினர். அவர்களுடைய நம்பிக்கை நிறைவேரியமையினாலேயே இன்றும் கண்ணகை வழிபாடு நிலைத்து நிக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலே கொம்புமுறி விளையாட்டு பரவலாக நடைபெற்றிருக்கின்றது. களுதாவளையிலே மிக நீண்ட காலமாக இக் கொம்புமுறி விளையாட்டு சிறப்பாகவும், ஒழுங்காகவும் திட்டமிட்டும் நடைபெற்று வந்திருக்கின்றது. மட்டக்களப்பு தமிழகம் எனும் நூலில்  இது பற்றி விபரமாக குறிப்பிடப் பட்டுள்ளன.

கொம்பு என்ற சொல் பல்வேறுபட்ட கருத்திலே வழங்குகின்றது. பழங்காலத்தில் கொம்பு என்றோர் துளைக் கருவி இருந்தது. கொம்பு போன்று வளைந்த இதனை "ஊதிடு கொம்பு" என்றனர். கோடு, இரலை, ஆம்பல், வபிர், என்றும் அதனைக் குறிப்பிட்டனர்.

கோடு என்பது ஏரிக்கோடி, கோல், நந்து, மேன்மை, விலங்கின் கொம்பு, மரக் கொம்பு என்பனவற்றையும் குறிக்கும். "கொம்பு விளையாட்டு என்று சொல்லும்போது அது மரக் கொம்பினையே குறிக்கின்றது. அதிலும் இதற்கு என்று குறிக்கப்பட்ட அளவு, தகமை பெற்ற வளைந்த மரக் கொம்பே இதனால் கருதப் படுகின்றது.

கொம்புமுறி விளையாட்டு நடைபெறுவதற்கு இரண்டு கட்சிகள் தேவை ஒன்று கோவலன் கட்சி மற்றொன்று கண்ணகை கட்சி. கோவலன் கட்சியை வடசேரி என்றும், கண்ணகை கட்சியை தென்சேரி என்றும் குறிப்பிடுவர். வடசேரி, தென் சேரி  என்பவற்றை வடசேரி வாரம் தென் சேரி வாரம் என்று அழைப்பது மட்டக்களப்பு வழக்காறு.

மட்டக்களப்பு பிரதேசத்திலே கோவில் உரிமை அதிகமாக குடிவழியாக கணிக்கப்படுகின்றது.  பல குடிகள் இருக்கின்றன, குடும்பம் என்றும் சில இடங்களிலே சொல்வார்கள். ஒரு தாயின் பிள்ளைகள் ஆண் என்றாலும் சரி பெண் என்றாலும் சரி அனைவரும் தாயின் குடியினராகவே கணிக்கப் படுவர்.

வடசேரி, தென்சேரி வாரம் கணிக்கப்படும்போது மாறாக தந்தையின் வாரமாகவே ஆண் பெண் பிள்ளைகள் அனைவரும் கருதப்படுவர். வாரம் என்பதனை வாரக் கட்டு என்றும் சொல்வதுண்டு...


தொடரும்.


இன்றைய பாடல்


read more...

Sunday, 11 July 2010

உனக்கில்லடி உபதேசம் ஊருக்குத்தான்டி

நான் ஒவ்வொருவரும் சொல்கின்றபடி நடக்கின்றோமா? அல்லது மற்றவர்களுக்கு புத்திமதிகள் சொல்கின்றோம். கருத்துக்களை சொல்கின்றோம் அதன்படி நாம் நடக்கின்றோமா என்று கேட்டால். எத்தனை பேர் ஆம் என்று சொல்ல முடியும்.

நாம் ஒவ்வொருவரும் சமூகக் கருத்துக்கள், பெண்ணடிமை, சிறுவர் துஸ்பிரயோகம், மது, புகைத்தல் போன்றவற்றால் ஏற்படுகின்ற விளைவுகள் பற்றி எல்லாம் பேசிக்கொண்டிருக்கின்றோம். இதைப் பற்றிப் பேசுகின்ற நாம் அவற்றை சரியாக செய்கின்றோமா? நாம் மற்றவர்களுக்கு சொல்கின்ற கருத்துக்களுக்கு அமைவாக நடந்து கொள்கின்றோமா என்பதை  நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டியவ்பர்களாக இருக்கின்றோம்.

சிலர் இருக்கின்றார்கள் பெண்விடுதலை பற்றி எழுதிக்கொண்டிருப்பார். ஆனால் அதற்கு மாறாக அவர் நடந்துகொண்டிருப்பார். புகைத்தலால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி கவிதை எழுதுவார் ஆனால் அவரால் புகைத்தலை நிறுத்த முடியாமல் இருக்கும்.

சிறுவர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது, சிறுவர் துஸ்பிரயோகம் செய்யக்கூடாது என்றெல்லாம் பேசுவோம் அதன்படி நாம் நடக்கின்றோமா? இவற்றை நடைமுறைப் படுத்தவேண்டிய அதிகாரிகளே சிறுவர்களை வீட்டில் வேலைக்கு வைத்திருப்பார்கள். அந்த சிறுவர்களுக்கு சித்திரவதையும் செய்வார்கள்.

பதிவர்களாகிய நாம் பல்வேறுபட்ட கருத்துக்களை சமுகத்துக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றோம். அதன்படி நாம் நடந்து கொள்கின்றோமா என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து பார்க்கவேண்டும்.
பாடலைக் கேட்டுப்பாருங்கள்..


read more...

Saturday, 10 July 2010

ஏன் இப்படி தானும் சீரழிந்து சமுகத்தையும் சீரழிக்கிறார்களோ தெரியவில்லை.

நேற்று நான் பேருந்தில் சென்றுகொண்டிருக்கும்போது நடந்த சம்பவம் ஒன்று....

இரு நண்பர்கள் எனக்கு பக்கத்து இருக்கைகளில் இருந்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொண்ட விடயம்.

முதல் நண்பன் -: டேய் இப்ப சுதன் குடிக்கிறதே இல்லையாம்டா...

இரண்டாம் நண்பன் -: உண்மைதான்டா. எப்படிடா அவனால இருக்க முடியிது. அவன்.  குடிக்காம இருக்கமாட்டானேடா.

முதல் நண்பன் -: உண்மைதான்டா அவன் நிருத்தல்லடா. அவன்ட அண்ணன் சாராயத்துக்குள்ள ஏதோ குளிசயப் போட்டு  (மாத்திரை) கொடுத்ததாம். அந்த குளிசை சுதனுக்கு தெரியாமல் போட்டதாம். அந்த குளிசை போட்டு கொடுத்தால் அன்று முழுதும் சத்தியா இருக்குமாம் பிறகு ஒரு நாளும் சாராயப் பக்கமே எட்டியும் பார்க்கமாட்டானுகலாம்.

இரண்டாம் நண்பன் -; இந்த குடியால ஒவ்வொரு நாளும் எவ்வளவு காசடா குடிச்சு தொலைக்கிரம். விடியத்தில எழும்பினா இனி குடிக்கப்போடா என்று நினைக்கிற. ஆனா பொழுதுபோக,போக குடிக்கிற எண்ணம்தானே  வருகுது. நம்மளும் இந்த குளிசயத்தான் சாராயத்தில போட்டு குடிக்கணும்.

முதலாம் நண்பன் -; நீ எனக்கு தெரியாமல் எனக்கு போட்டுத்தா. நான் உனக்கு தெரியாமல் போட்டுத்தாரன்....
 இப்படியே தொடர்கிறது...

என்னுடைய நண்பர் என்று சொல்லலாம் ஒவ்வொரு இரவிலும் குடிப்பார். குடிக்கவேண்டாம் என்று பல முறை சொல்லிப்பார்த்தேன் எவர் கதையும் கேட்பதாகவும் இல்லை.

எதற்காக குடிக்கின்றாய் என்று கேட்டால் கவலைகளை மறக்க குடிக்கிறேன் என்று சொல்வார் என்ன கவலை என்று கேட்டால் தினம் ஒரு காரணம் சொல்வார்.

அவர் சொல்லும் காரணங்களை கேட்டால் கோபம்தான் வரும். அப்பா இறந்த கவலை. அவரின் அப்பா இறந்து பல வருடம். கைல காசு இல்லை என்ற கவலை. அப்போ குடிப்பதற்கு மட்டும் காசு இருக்கும்.  தங்கட்சுக்கு வீடு கட்டவில்லை என்ற கவலை. இவ்வாறு தினமும் ஒரு காரணம் சொல்வார்.

என் இவாறு குடித்துக் குடித்து தான் மட்டுமல்ல, தன்னை சார்ந்த சமுகத்தையும் சீரழிக்கின்றனரோ  தெரியவில்லை. 

நாகரீகம் எனும் போர்வையில் இன்றைய இளம் சமூகத்தினர் சீரழிந்து கொண்டிருக்கின்றனர். குடிக்கவில்லை என்றால் தன்னை கீழ் தரமாக நினைப்பவர்களும் இருக்கின்றனர்.

இன்று குடும்பத்தை கொண்டு நடாத்தவேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் குடித்துக் ,குடித்தே தன்னை சார்ந்தவர்களும் தன் பிள்ளைகளும் சீரழிகின்ற நிலைக்கு இட்டு செல்கின்றனர்.

குடித்துவிட்டு வந்து மனைவி, பிள்ளைகளுடன் சண்டை பிடிக்கின்ற, சித்திரவதை செய்கின்ற எத்தனையோ குடும்பத் தலைவர்களை பார்த்திருக்கின்றோம்.

தன் பிள்ளைகள் உணவின்றி, பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கும் ஆனால் சில தந்தையர்கள் தினம் குடித்துவிட்டு வருவர். தன் மனைவி பற்றியோ, பிள்ளைகள் பற்றியோ இவர்களுக்கு அக்கறை இருக்காது.

தினமும் குடித்துவிட்டு வீட்டிலேயே தந்தை சண்டை பிடிப்பதால் பாடசாலையில் வகுப்பு மாணவர்கள் கிண்டல் செய்கிறார்கள் என்பத்தனால் எத்தனையோ பிள்ளைகள் பாடசாலை செல்வதை விட்டிருக்கின்றன.

அண்மையில் வீதியால் காலை ஒன்பது மணியளவில் வந்துகொண்டிருந்தேன். ஒரு மீன் வியாபாரி மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். வீதியின் இரு மருங்கிலும் மோட்டார் சைக்கிள்தான் தண்ணிபோட்டதுபோல் தள்ளாடி வந்துகொண்டிருந்தது.

அவர் மாத்திரமல்ல 7 , 8 வயதிருக்கும் ஒரு சிறுவனும் (அவர் மகன்) அந்த மோட்டார் சைக்கிளில் இருக்கிறான். பார்க்கும்போது அவருக்கு அடி கொடுக்கவேண்டும் போல் இருந்தது.

பாடசாலை செல்லவேண்டிய அந்த பிள்ளையைக் கொண்டு குடித்தித் திரிகிறான் அந்த திருந்தாத ஜென்மம். இப்படி உழைத்து உழைத்தே குடித்து, குடித்து குடியாலே இறந்த எத்தனையோ பேரைப் பார்த்திருக்கின்றோம்.

சிலர் ஓடி, ஓடி உடலை வருத்தி வேலை செய்வார்கள். பார்த்தாலே பாவமாக இருக்கும். அவர்கள் உழைப்பது எதுவுமே வீடு சென்று சேராது. குடிப்பதற்கு என்றே உழைப்பவர்கள் இருக்கின்றனர்.

சிலரைப் பார்த்திருக்கின்றேன். குடிக்கவில்லை என்றால் உடல் நடுங்குகின்றது என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஏன்தான் குடித்துக், குடித்தே தானும் சீரழிந்து. சமுகத்தையும் சீரழிக்கின்றார்களோ தெரியவில்லை. இவர்களை திருத்தவே முடியாது.
read more...

Friday, 9 July 2010

எஸ்.எம்.எஸ் மூலம் இலகுவாக சம்பாதிக்க சில வழிகள்.

சில வானொலி தொலைக்காட்சிகளிலே இப்போ எதற்கு எடுத்தாலும்  எஸ். எம்.எஸ் போட்டி என்று வைத்து உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். எதற்கு எடுத்தாலும் எஸ்.எம்.எஸ் போட்டிதான்.

நம்ம வலைப்பதிவிலே எப்படி எஸ்.எம்.எஸ் மூலம் உழைக்கலாம் என்று யோசித்துப் பார்த்தேன். சில உருப்படாத ஆலோசனைகள் உங்களுக்காக.

1 . முதலில் நாங்கள் தொலைபேசி சேவை வழங்குகின்ற நிறுவங்களோடு ஒப்பந்தத்தை செய்து கொள்ள வேண்டும்.

2 . எமது வலைப்பதிவுக்கு வருபவர்கள் எஸ்.எம்.எஸ் மூலம் தமது கருத்துக்களை அனுப்ப வேண்டும். நல்ல கருத்துக்களுக்கு பெறுமதி மிக்க பரிசில்கள் வழங்கப்படும் என்று சொல்லலாம். பரிசு  பெறுவதற்காக பலர் வலைப்பதிவை பார்க்க வருவார்கள்.

3 . வலைப்பதிவில் குறிப்பிட்ட நேரங்களுக்கு சில கேள்விகளை வெளியிடலாம் அந்த நேரத்தில் சரியான பதில் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்புபவர்களுக்கு பெறுமதி மிக்க பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கலாம்.

4 . குறிப்பிட்ட இடுகைகள் திரட்டிகளில் எத்தனை வாக்குகள் பெறும் என்று போட்டி  வைக்கலாம்.

5 . அதிகமாக எஸ்.எம்.எஸ் அனுப்புபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கலாம்.

6 . தினமும் குறிப்பிடப் படுகின்ற நேரத்தில் வெளியிடப்படுகின்ற கேள்விகள் அத்தனைக்கும் பதில் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்புகின்றவர்களுக்கு பெறுமதியான பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கலாம்.

குறிப்பிட்ட நேரம் என்பது ஒவ்வொரு மணித்தியாலத்திலும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் கேள்விகளை வெளியிடலாம். இதனால் வாசகர்கள் தொடர்ச்சியாக எமது வலைப்பதிவிலேயே குடியிருப்பர்.

7 . யார் அதிகமாக எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார்களோ அவர்களுக்கு பரிசுத்தொகை இரட்டிப்பாகும் என்று அறிவிக்கலாம்.

8 . திரைப்படங்கள் வெளிவருகின்ற போது. பதிவர்களால் இடுகையிடப்படுகின்ற திரைவிமர்சனங்களில் பத்து திரைவிமர்சனத்தை தெரிவு செய்து. எஸ்.எம்.எஸ் மூலம் வாக்களிப்பு நடாத்தலாம். இதேபோல் கவிதைகள் மற்றும் ஏனைய படைப்புக்களுக்கும் செய்யலாம்.

9 . இடுகைகளுக்கு தலைப்பினையும், குறிப்புக்களையும் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்புவோரில் நல்ல தலைப்புக்களை அனுப்புவோருக்கு பெறுமதியான பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கலாம்.  அவர்கள் அனுப்புவதை நாம் கணக்கிலெடுக்க வேண்டியதில்லை.

10 . என்ன இவ்வளவுக்கேல்லாம் பெறுமதிமிக்க பரிசுகளுக்கு எங்கே போவது என்று யோசிக்கிறிங்களா? கவலைய விடுங்க. நாங்களே  போலியான பெயர்களோடும், இடங்களோடும் பரிசுக்குரியவர்களை உருவாக்கி அறிவிப்போம். இதெல்லாம் இப்போ சகஜமப்பா...

நீங்களும் ஆலோசனைகளை சொல்லுங்கள்....
(இது நகைச்சுவைப் பதிவு என்று மட்டும் சொல்லமாட்டேன்)

*****************************************************
நான் தேடிப்பெற்ற தொழில்நுட்ப விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு தொழில்நுட்ப உலகம் எனும் வலைப் பதிவினை ஆரம்பித்திருக்கின்றேன். உங்களுக்கும் பயன்படம் வகையில் தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களை பதிவிட இருக்கின்றேன். அங்கேயும் உங்கள் ஆதரவு இருக்கும் என்று நம்புகின்றேன்.
read more...

Thursday, 8 July 2010

நண்பர்களே உதவுங்கள்.

நண்பர்களே என்னுடைய வலைப்பதிவு அடிக்கடி காணாமல் போகிறது. பல நண்பர்களும் இதை என்னிடம் சொல்லி இருக்கின்றார்கள். என் வலைப்பதிவை திறக்கின்றபோது. (open ) பின்வரும் செய்தி வருகிறது. அடிக்கடி இந்த செய்தி வருகிறது.

Oops! This page appears broken. DNS Error - Server cannot be found.

நான் பல temlete களையும் மாற்றிப் பார்த்தேன். blogger க்குரிய temlete உம மாற்றிப் பார்த்தேன். சரி வரவில்லை. என் வலைப்பதிவிலே இருந்த அத்தனை  Gadjet களையும் நீக்கிப்பார்த்தேன் எந்த ஒரு பயனும் கிடைக்கவில்லை.

என்னால் முடிந்தவரை முயற்சி செய்து பார்த்தேன். முடியவில்லை. தொழிநுட்பம் தெரிந்தவர்கள் உதவுங்கள். இதற்கு என்ன காரணம். என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்.
read more...

இப்படியும் மக்களை ஏமாற்றுகிறார்கள்

மக்களுக்காக சேவை செய்யவேண்டிய சில உயர் அதிகாரிகள் தாம் உழைத்தால் மட்டும் போதும். என்ற நிலையில் இருப்பதுபோன்று தெரிகிறது. சில அதிகாரிகளோ மேல் மட்டங்களில் இருந்து மக்களுக்கு வருகின்ற உதவிகளையும் உரியவர்களை சென்றடைய தாம் செய்ய வேண்டிய கடமைகளை செய்யாது விடுகின்றனர்.

மட்டக்களப்பு களுதாவளை  கிராமத்திலே இருந்த பழைய நூலகம் உடைக்கப்பட்டு புதிய கட்டடம்  அமைக்கப் பட்டது.  பழைய கட்டடத்திலே இருந்த மரங்கள், கூரைத்தகடுகள் என்பவற்றை களுதாவளைக் கிராமத்திலே இருக்கின்ற ஒரு ஆலயத்துக்கு வழங்கும்படி கிழக்கு மாகாண முதலமைச்சர் களுதாவளை பிரதேச சபைக்கு  இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

ஆனால் இதுவரை அந்த பொருட்கள் ஆலயத்துக்கு கொடுக்கப்படவில்லை. ஆலய நிர்வாக சபையினர் பல தடவை பிரதேச சபை அதிகாரிகளை சந்தித்தும் எந்த பதிலும் இல்லை என்று சொல்கின்றனர்.

இந்த பொருட்களை ஆலயத்துக்கு வழங்குவதிலே சிக்கல் இருப்பதாக தெரியவில்லை. முதலமைச்சரே கடிதம் வழங்கியிருக்கின்றார்.  எதற்காக இன்னும் வழங்கப்படவில்லை என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.

முன்னர் இந்த பிரதேச சபைக்கு சொந்தமான  பொருட்கள் மாயமாக மறைந்த நிகழ்வுகளும் இடம்பெற்றிருக்கின்றன. அவ்வாறு இந்த பொருட்களும் மாயமாக மறையுமா?

இன்னும் பொருட்கள் ஆலயத்துக்கு வழங்கப் படாமை தொடர்பாக ஓரிரு நாட்களுக்கு முன்னர்தான் முதலமைச்சருக்கு தெரியப் படுத்தியதாக ஆலய நிர்வாகத்தினர் கூறினர் . முதலமைச்சர் இந்த விடயத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆலய நிர்வாகத்தினர் கூறினர்

read more...

Wednesday, 7 July 2010

நன்னாரி வேரும் இரு பதிவர்களும்.

அண்மையில் நண்பர் பிரபாவும் நானும் வானொலி தொடர் நிகழ்சி ஒன்றுக்காக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை சந்தித்து பேட்டி எடுப்பதற்காக கிழக்கு மாகாணத்திலே யுத்தத்தால் பாதிக்கப் பட்ட பல பகுதிகளுக்கு சென்றிருந்தோம்.

நான்கு அறிவிப்பாளர்கள் சென்றிருந்தோம் அதில் நானும் பிரபாவுமே பதிவர்கள். குறிப்பிட்ட ஒரு தினத்தில் வாகரைக்கு போவதாக முடிவெடுத்து மாலை வேளையில் மட்டக்களப்பு நகரிலிருந்து வாகரை நோக்கி புறப்பட்டோம்.

வாகரைக்கு நான் முன்னர் ஒரு தடவை சென்றிருந்தாலும். இந்த தடவை சென்றபோது வித்தியாசத்தை உணர முடிந்தது. முதல் தடவை சென்றபோது வாகரை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கின்றது. அங்கே மக்களை சந்தித்தபோது மக்களின் வெளிப்பாடுகளை பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்.

இப்போது விடயத்துக்கு வருகிறேன். வாகரை சென்று கொண்டிருக்கும்போது. வீதியின் இரு மருங்கிலும் சிறு, சிறு பற்றைகைகாடுகள் காட்சியளித்தன. அந்த காடுகளுக்குள்ளே ஒரு இராணுவ வீரர் ஏதோ பிடுங்கிக் கொண்டிருந்தார். என்ன பிடுங்குகிறார் என்று அறிய ஆவலோடு எமது வாகனத்தின் வேகத்தைக் குறைத்து பார்த்தபோது எங்கள் எல்லோருடைய கடந்த கால நினைவுகளை ஒவ்வொருவராக மீட்டிப்பார்த்து ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொண்டோம்.

  • அவர் பிடுங்கிக் கொண்டிருந்தது நன்னாரி வேர் . நன்னாரி வேர் என்றால் என்ன என்று இப்போது பலருக்குத் தெரியாது. பலர் நனாரி எனும் பெயரையே கேள்விப் பட்டிருக்கமாட்டார்கள்.
எனது சிறிய வயதிலே அதிகளவான நன்னாரி வேர் தேநீர் அருந்தி இருக்கிறேன். நல்ல மனமும், சுவை நிறைந்ததாகவும் இருக்கும். மருத்துவக் குணங்களும் அதிகம் கொண்டதாம் இந்த நன்னாரி வேர்.

எங்களுடைய பிரதேசத்திலே முன்னர் அதிகமாகக் கிடைக்கும் ஆனால் இப்போது மருந்துக்கும் இல்லை. அங்கே அந்த இராணுவ வீரர் பிடுங்கும்போது நானும் பிடுங்கி எடுத்து வீட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது ஆனாலும் நாம் அவசரமாக சென்று கொண்டிருப்பதனால் அந்த என்னத்தை கைவிட்டுவிட்டேன்.

எங்கள் வாகனத்தை செலுத்தி வந்தவர் மருதமுனையை சேர்ந்த ஒரு நண்பர். அவர் முன்னர் தேற்றாத்திவிலே ஒரு நன்னாரி வேர் தேனீர் கடை இருந்ததாகவும் அவர் நன்னாரி வேர் தேனீர் அருந்துவதட்காகவே தேற்றாத்தீவுக்கு வந்து போவதாகவும் சொன்னார்.

ஆனால் நம்ம பிரபாவோ எங்களுடைய பிரதேசங்களிலே இப்போது நன்னாரி வேர் இல்லை என்பதனால் இங்கிருந்து பிடுங்கிக் கொண்டு எமது பிரதேசத்திலே விற்பனை செய்வோம் என்று ஆலோசனை சொன்னார்.

இப்போது நன்னாரி வேர் தேநீர் அருந்தவேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஒரு நாள் அதற்காகவே வாகரைக்கு செல்ல வேண்டும்.

சுவை, மணம் மாத்திரமல்ல நல்ல மருத்துவக் குணமும் கொண்டதுதான் இந்த நன்னாரி வேர். நானறிந்த நன்னாரி வேரின் மருத்துவக் குணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நன்னாரி, சீமைநன்னாரி, பெருநன்னாரி, கருநன்னாரி. என வகை பலவகை உண்டு

எங்கும் வளரும் கொடி வகையைச் சேர்ந்தது. . இதன் வேரின் மேற்புறம் கருமை நிறமாகும். உள்ளே வெண்மை நிறமாகவும், நல்ல மணமுடைய தாகவும், இருக்கும்.

நன்னாரி வேர் உடல் வெப்பத்தை தணிக்க கூடிய ஒன்று.

மேக நோய், பால்வினை நோய்களுக்கு சிறந்த நிவாரணி.

பச்சை நன்னாரி வேறை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர மூலச் சூடு, இருமல், நீர்க்கடுப்பு என்பன குணமாகும்.

வெட்டி வேர், விளாமிச்சை வேர், நன்னாரி வேர் இவற்றை நன்கு அலசி, வெள்ளைத் துணியில் கட்டியில் மண்பானை தண்ணீரில் போட்டு தண்ணீரில் போட்டு அந்நீரை குடித்துவந்தால் பலவீனப்பட்ட தலைமுடியின் வேர்கால்களுக்கு நல்ல பலம் கிடைக்கும்


வெயில் காலத்தில் நா வரச்சியை தணிக்க நன்னாரி குடிநீர் மிக நல்லது. உடல் வெப்பத்தை தணிக்கும் சக்தி உள்ளது நன்னாரி வேருக்கு.
 
கல்லீரல் நோய், காமாலை என்பவற்றை குணப்படுத்தும்.
 
ஆண்மை பெருக நானாரி வேரை ஊற வைத்து  இளஞ் சூடாக அருந்தி வரவேண்டும்.

நன்னாரி வேருடன் பாலும் சக்கரையும் கலந்து சிறு பிள்ளைகளுக்கு கொடுத்து வர வேண்டும்.

நன்னாரி வேர்ப் பொடியுடன் சோற்றுக் கற்றாழை சோறு சேர்த்து உண்ண விஷக் கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும்.

நன்னாரிவேரை வாழையிலையில் வைத்துக் கட்டி எரித்து சாம்பலாக்கி அதனுடன் தேவையான அளவு சீரகமும், சர்க்கரையும் பொடித்துக் கலந்து அருந்திவர சிறு நீரகநோய்கள் அனைத்தும் விலகும்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.  பல படங்களை இணைக்க 2 மணி நேரம் முயற்சி செய்தும் முடியவில்லை. என் வலைப்பதிவில் படங்களை இணைக்க முடியவில்லை.


read more...

Tuesday, 6 July 2010

என்னதான் நடக்கிறது. என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்

அவ்வப்போது என்னுடைய வலைப் பதிவில் பல பிரச்சினைகள் தானாகவே வந்துகொண்டே இருக்கின்றது. என்னதான் நடக்கிறது என்று தெரியவில்லை, அடிக்கடி என் வலைப்பதிவு மாயமாகின்றது (open ஆகவில்லை)

ஒரு சில தினங்களுக்கு முன்னர் என்னுடைய வலைப்பதிவை தமிழ்மணம் திரட்டியிலிருந்து நீக்கியதோடு. என் பதிவுகளை இணைக்க முடியாமலும் தமிழ்மணம் குழுவினர் செய்திருந்தனர்.

உடனடியாக நான் தமிழ்மணம் குழுவினருக்கு என்ன காரணத்துக்காக என் பதிவை நீக்கினீர்கள் என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அவர்கள் உடனடியாகவே எனக்கு பதில் மின்னஞ்சல் அனுப்பியிருந்தனர். அந்த மின்னஞ்சல் இதோ.

Dear சந்ரு,

Your blog is Rejected by tamilmanam.net, Administrator due to follwing reason
unless your link to the porno sites gets removed I can not add your blog in tamilmaNam.
hope you understand our stand
நிர்வாகி

நான் திரும்பவும் மின்னஞ்சல் அனுப்பினேன்.

வணக்கம்...

தமிழ்மணம் குழுவினருக்கு.
என் பதிவுகளை தமிழ் மனத்திலிருந்து நீக்கப் பட்டத்தை இட்டு கவலையடைகிறேன். என்ன காரணத்துக்காக என் வலைப் பதிவை நீக்கினீர்கள் என்பதனை அறியத்தர முடியுமா? என் பதிவுகள் தமிழ்மணத்திலே இணைப்பதற்கு தகுதியற்றதா? என் பதிவுகள் தரமற்றவையா? காரணத்தை அறியத்தர முடியுமா?


அன்புடன்...
சந்ரு
http://shanthru.blogspot.com/

அவர்கள் உடனடியாக பதில் மின்னஞ்சல் அனுப்பியிருந்தனர்.

முந்தைய மடலில் காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. உங்கள் பதிவில் ஆபாசத் தளங்களின் இணைப்புக்கள், பாப்-அப்-கள் இவற்றின் காரணமாக உங்கள் பதிவு நீக்கப்படுகிறது.

==
புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.
இரா. செல்வராசு
தமிழ்மணம் உதவிக்குழு
http://tamilmanam.net
http://blog.selvaraj.us

எனது பதிவில் ஆபாசத் தளங்களின் இணைப்புக்கள், பாப்-அப்-கள் இருப்பது அப்போதுதான் எனக்கு தெரிய வந்தது. இது என்னால் செய்யப்பட்டதல்ல இது எவ்வாறு வந்தது என்று தெரியவில்லை.

எனது வலைப் பதிவை சில ஆபாச இணையத் தளங்களிலே யாரோ இணைப்புக் கொடுத்திருக்கின்றனர் அவற்றை சில பதிவர்களிடம் சொல்லி இருக்கின்றேன் அவற்றை நான் நீக்க முயற்சி செய்தும் முடியவில்லை.

என்று எனது வலைப் பதிவை ஓபன் பண்ணியபோது open பண்ணி ஒரு நிமிட நேரத்தில் வேறு ஒரு இணையப் பக்கத்துக்கு மாறியது. உடனடியாகவே நான் temlete மாற்றிப் பார்த்தேன்.

இப்பொழுது Chrome , Firefox இரண்டிலும் பிரச்சினை இல்லாமல் open ஆகிறது ஆனால் Internet Explorer இல் ஓபன் ஆக்குவதாக இல்லை.

எனது பதிவுகளுக்கு வந்த கருத்துரைகளை வெளியிடவும் முடியாமல் இருக்கின்றது. என்ன செய்யலாம்.

இதே போன்று முன்னர்  இரண்டு தடவைகள் நடந்தபோது சிலர் நம்பவில்லை அதனாலே மின்னஞ்சல்களை வெளியிட்டேன்.
read more...

Monday, 5 July 2010

சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்படும் விதவைகள்

இது என்னுடைய 250 வது பதிவு. இதுவரை எனக்கு ஆதரவு வழங்கிய வலையுலக நண்பர்கள், வாசகர்கள், திரட்டிகளான தமிழிஷ் ,  தமிழ்10 , ஏனைய திரட்டிகள் மற்றும் இப்போது என் பதிவுகளை இணைத்து அதிக வாசகர்களை என் வலைப்பதிவுக்கு வருகைதர வைக்கின்ற தினமணி நாளிதழுக்கும் எனது நன்றிகள்.

இலங்கையைப் பொறுத்தவரை யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே ஆகும்.  இந்த உள்நாட்டு யுத்தத்தின் மூலம் பல ஆயிரக்கணக்கான பெண்கள் விதவைகளாக்கப்பட்டிருக்கின்றனர்.

அவர்களின் நிலை படு மோசமான நிலையிலே இருக்கின்றது. இவர்களிலே அதிகமானவர்கள் இளம் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்கள் சிறு வயதிலேயே குடும்ப சுமையினை தாங்கிக் கொள்ளவேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டனர்.

இதில் அதிகமானவர்கள் பின்தங்கிய கிராமப் புரங்களை சேர்ந்தவர்கள் கல்வி அறிவேன்பதும் அவர்களிடம் சரியான முறையில் இல்லை. இதனால் தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்றவேண்டிய? கொண்டு நடாத்த வேண்டிய பொறுப்பு இவர்களிடமே இருக்கின்றது.

இதற்காக இவர்கள் கூலி வேலை செய்தல், சுய தொழில்களை மேற்கொள்ளல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். சுய தொழிலைப் பொறுத்தவர். எல்லோராலும் செய்ய முடியாத காரியமாக இருக்கின்றது. போதிய பணவசதி உதவிகளை பெறுவதிலே சிக்கல்களை எதிர் நோக்குகின்றனர்.

கூலி வேலைக்கு செல்பவர்களைப் பொறுத்தவரை தனது பிள்ளைகளை கவனிக்கவேண்டும், வீட்டுவேலைகளை செய்யவேண்டும், கூலி  வேலைக்கு செல்லவேண்டும் என்று பாரிய சிக்கல்களை எதிர் நோக்குகின்றனர். அவர்களின் உழைப்புக்கேற்ற கூலி  வழங்கப்படுகின்றதா என்பது வேறு விடயம்.

சிலர் இவ்வாறு கஷ்டப்படுகின்றவர்களை வைத்து அதிகவேளைகளைக் கொடுக்கின்றனர். ஆனால் வேலைக்கேற்ற கூலி வழங்கப் படுவதில்லை. இதை விட்டாள் வேறு வழியில்லை என்று கஷ்டப்பட்டு உழைத்து  வருகின்றனர் பலர்.

இது ஒரு புறமிருக்க இந்த விதவைகளைப் பொறுத்தவரை பலர் இளம் வயதை சேர்ந்தவர்கள்.  வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையை இழந்து நிக்கின்றனர். இவர்களின் வாழ்க்கையை வளமானதாக மாற்ற எமது சமுகத்தால் முடியும்.

ஆனால் அவர்களளின் எதிர் காலத்தைப் பற்றி சிந்திக்காத சமூகமாக எமது சமூகம் இருப்பதுதான் கவலைப்படவேண்டிய விடயம். விதவைகளை ஒதுக்கி வைக்கின்ற சமுகமாக எமது சமூகம் இருக்கின்றது.

விதவைகள் திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளிலே கலந்து கொள்ள கூடாது, இந்த விதவைகளின் கண்களிலே விழிக்கக் கூடாது என்று நினைப்பவர்களும் இருக்கின்றனர்.

பெண்களை மறுமணம் செய்தால் கேலி செய்து தேவையற்ற கதைகளைக் கட்டி விடுகின்ற சமூகம். ஆண்கள் எத்தனை திருமணம் செய்தாலும் போசாதிருப்பது ஏன்?  சில ஆண்களைப் பொறுத்தவரை ஒரு மனைவி இருக்கும்போதே இன்னொரு திருமணம் செய்வார். இதனை வீரமாக பேசிக்கொள்பவர்களும்  இல்லாமல் இல்லை.

பெண்களோ தன் குடும்பத்தின் கஸ்ர நிலையின் காரணமாகவும், தனது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகாகவும் மறுமணம் செய்தால் வேசி என்றும் இன்னும் பல கதைகளும் சொல்லி அந்த பெண்ணை ஒதுக்கி வைக்கின்றனர். விதவையான பெண் வாழக் கூடாதா?

எங்கள் ஒவ்வொருவருடைய மனங்களும் மாற வேண்டும் விதவைகளின், எமது சமூகத்தின்  எதிர்கால வளமான வாழ்வுக்காக ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
read more...

தோல்வி நிலையென நினைத்தால்....

நான் அடிக்கடி சில பாடல்களைக் கேட்பதுண்டு. மனதுக்கு மிகவும் பிடித்த பாடல்கள். நான் அடிக்கடி, அதிகமாக எனது நிகழ்சிகளிலே ஒலிபரப்பிய பாடல்கள் (நான் அதிகமாக பழைய, இடைக்கால பாடல் நிகழ்சிகளே செய்வதனால்) உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன் கேட்டுப் பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்.









அவதாரம்  என்கின்ற வலைப்பதிவினை ஆரம்பித்திருக்கின்றேன் அதிலே அவை முற்று முழுதாக பாடல்களின் தொகுப்புக்களை கொண்ட ஒரு வலைப் பதிவாக அமைய இருக்கின்றது.
read more...

Sunday, 4 July 2010

இந்து சமயமும் மூட நம்பிக்கைகளும்


எனும் பதிவிலே நான் அதீத கடவுள் நம்பிக்கை கொண்டவன் என்றாலும் இவ்வாறன விடயங்களை நம்புவதில்லை என்று குறிப்பிட்டிருந்தேன்.  நான் இவ்வாறான விடயங்களை நம்பாததட்கு காரணம் இன்று பலர் தாம் பணம் உழைப்பதற்காக இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

சிலைகள் நிலத்தின் கீழிருந்து கண்டெடுக்கப்படலாம். அது எமது முன்னோர்கள் பயன்படுத்தியவைகளாக இருக்கலாம். அவை இன்று எமது கண்களில் பட்டிருக்கலாம். ஆனால் சிலர் இவற்றை வைத்து பணம் உழைக்க முற்படுகின்றனர்.
அதனாலேயே இன்று மக்கள் இவ்வாறான விடயங்களையோ, கடவுளையோ நம்புவதிலிருந்து விலகி  செல்கின்றனர்.

நாங்கள் சுனாமிக்கு முன்னர் கடற்கரைப் பிரதேசத்திலே இருந்தோம். இப்பொழுது வேறு இடத்துக்கு மாறி இருக்கின்றோம். இப்பொழுது இருக்கின்ற இடம் முன்னர் பாரிய பள்ளமும், மேடுமாக  இருந்தது. அவற்றை சம தரையாக்கி எடுத்திருக்கின்றோம்.

வீட்டிலேயே சிறு பையன் (மருமகன்) இருக்கிறான் அவன் தனது மோதிரத்தைக் தொலைத்துவிட்டான். அப்போது நிலத்திலே அம்மா தேடிக்கொண்டிருக்கும்போது. அம்மாவின் கையிலே வெண்கலத்தாலான பிள்ளையார் சிலை ஒன்று கிடைத்தது. அவற்றை இப்பொழுதும் எங்கள் வீட்டில் வைத்து வணங்கி வருகின்றோம். நாங்களும் நிலத்திலிருந்து சிலை வந்துவிட்டது என்று பெரிதுபடுத்தி இருந்தால் நிலை வேறு.

இன்று பல இடங்களிலே இவ்வாறான நிகழ்வுகள் சாதாரணமான ஒன்றாகிவிட்டது. பலர் இதை வைத்து உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இன்று நடக்கின்ற சில நிகழ்வுகளைப் பார்க்கின்றபோது எமது சமயம் செல்கின்ற பாதையை நினைத்து கவலைப் படுவதுண்டு.

கிராமங்களிலே சொல்வார்கள் தெய்வம் ஆடுதல் என்று. இன்று பல மனிதர்களை தெய்வம் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிரதாம். அல்லது தெய்வத்தை இவர்கள் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை.

இப்போது அடிக்கடி ஏன் காதில் விழுகின்ற விடையன். அவர் தெய்வம் ஆடுகிறாராம், இவர் தெய்வம் ஆடுகிறாராம், அம்மன் பார்வையாகிவிட்டாராம், அம்மன் வாக்கு கொடுத்திருக்கிறாராம், சில நாட்கள் தெய்வம் ஆடப்படும் பின்னர் பார்த்தால் வீட்டருகே சோதிட நிலையம் என்று பெயர்ப்பலகை இருக்கும். சாஸ்த்திரம் சொல்லப்படும். இவ்வாறு பலர் உழைத்துக்கொண்டிருக்கின்றனர். கடவுள் பெயரை சொல்லி.

இவ்வாறான ஒரு சிலரின் நடவடிக்கைகளால்தான் இன்று கடவுள் நம்பிக்கை இல்லாமல் போகின்றது.  இவ்வாறு தெய்வம் ஆடுபவர்கள் தங்களை கடவுளாக காட்டிக் கொள்கின்றனர். அம்மன் சொல்கிறார் என்று தாங்களாகவே பல கதைகளை சொல்கிறார்கள்.

இவர்கள் கடவுளைவிட மேலானவர்களாகிவிட்டார்களா?  கடவுளோடு பேசுகின்ற நிலையில் இருக்கின்றார்களா?  சரி அப்படியானால் ஏன் கடவுள் இவர்களிடம் சொல்லவேண்டும்? கடவுள் நேரடியாக வந்து சொல்லலாம்தானே.

இது ஒரு புறமிருக்க பலர் இவர்களை நம்பி சாஸ்த்திரம் (சோதிடம்)  பார்க்கப்போகிறோம் என்று அலைந்து திரிவதுதான் கவலைப்படவேண்டிய விடயம்.
இவர்களெல்லாம் திருந்துவார்களா?
read more...

அசினும் நானும்



இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பில் அண்மையில் இலங்கையில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழவை தழிழ் திரையுலகம் புறக்கணித்திருந்தது. தமிழ் நடிகர், நடிகைகளும் விழாவை புறக்கணித்தனர்.


இந்நிலையில் தெலுங்கில் வெற்றி பெற்ற ‘ரெடி’ படம் இந்தியில் தயாரிக்கப் படுகிறது . இதில் சல்மான்கான் ஜோடியாக அசின் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இலங்கையில் நடந்து வருகிறது.

தமிழ் திரையுலகத்தின் தடையை மீறி இலங்கைக்கு ஷூட்டிங் சென்ற நடிகை அசின் இலங்கையில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ‘நான் அரசியல்வாதி இல்லை, கிரிக்கெட் வீரர்கள் போகும்போது ஷூட்டிங்கில் பங்கேற்க நான் செல்வதில் தவறு இல்லை’ என்று அசின் பேட்டியளித்திருக்கின்றார்.


தமிழ் திரையுலகினர் இலங்கை செல்லக்கூடாது என்று தடை விதித்திருப்பது உண்மைதான். இந்த முடிவு தனிப்பட்ட ரீதியில் யாரும் எடுத்ததல்ல. தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், இயக்குனர்கள் சங்கம், பெப்சி உள்ளிட்ட எல்லா அமைப்புகளும் சேர்ந்து எடுத்த முடிவுதான். அசினின் இந்த பேட்டி தமிழ் திரையுலகத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் 11 ம் திகதி இடம் பெற இருக்கின்ற தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிவடைந்ததும் திரையுலக கூட்டமைப்பு கூடி அசினுக்கு தடை விதிப்பது பற்றி முடிவு செய்யப்படும். என்று நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி கூறியிருக்கின்றார்.

இது இவ்வாறிருக்க தமிழ் திரையுலகத்தினர் இவ்வாறுதான் தொடர்ந்து இருக்கப் போகின்றனரா? இனிவரும் காலங்களில் தமிழ் திரைப்படங்களை இலங்கையில் திரையிடாமல் இருப்பார்களா? இனிமேல் இலங்கையில் நடைபெறுகின்ற எந்தவொரு விழாக்களிலும் கலந்துகொள்ளமாட்டார்களா?

கடந்த காலங்களில் இந்திய திரைப்படத் துறையினர் பங்குபற்றிய பல நிகள்வுகள் இடம் பெற்றிருக்கின்றன. யாழ்ப்பாணத்தில்கூட இசை நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. அப்போது ஏன் மெளனம் சாதித்தனர். யாழ்ப்பாண மக்கள் பல்வேறு கஸ்ரங்களுக்க மத்தியிலே வாழ்ந்து வருகின்றனர் இவ்வாறான இசை நிகழ்ச்சிகள் தேவையற்றது என்று அன்று அந்த நிகழ்ச்சிகளை புறக்கணித்திருக்கலாம்தானே.

இனிவரும் காலங்களிலே எல்லாவற்றையும் புறக்கணிக்கத்தான் போகிறார்களா? இந்தியாவிலுருந்து இலங்கைக்கு அல்லத தமிழர்களுக்கு வருகின்ற உதவிகளையும் தடை செய்யப்போகின்றார்களா? இந்திய சர்வதேச திரைப்பட விழாவினை ஏதோ ஒரு காரணத்துக்காக புறக்கணித்தாலும். அடுத்தடுத்து எல்லாவற்றையும் புறக்கணிக்க வேண்டுமா? தொடர்ந்து எல்லாவற்றையும் புறக்கணிக்கத்தான் போகிறார்களா? இனிமேல் திரைப்படங்களை இலங்கையில் திரையிடமாட்டார்களா? இலங்கையில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளமாட்டார்களா?

மறுபுறத்தில் இலங்கையில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவினை இந்திய திரையுலகம் புறக்கணித்ததையும் இத்திரைப்பட விழாவுக்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிட்ட ஊடகங்களிடம் ஒன்று கேட்கின்றேன். இத்திரைப்பட வழாவுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலே இந்திய திரையுலகம் சார்ந்தோரைக் கொண்டு இசை நிகழ்ச்சிகள் நடாத்தப் பட்டபோது ஏன் மெளனம் சாதித்தனர்.
read more...

Saturday, 3 July 2010

நிலத்திலிருந்து வெளிப்பட்ட தங்கத்தாலான கடவுள் சிலை?

இப்பொழுது எமது பகுதியிலே மிகவும் பரபரப்பாக பேசப் படுகின்ற  விடயம்தான். ஒரு வீட்டில் தங்கத்தாலான சிலை ஒன்று நிலத்துக்கடியில் இருந்து வெளிப்பட்ட விடயம்.

நான் கடவுள் மீதும், கடவுள் நம்பிக்கை மீதும் அதீத நம்பிக்கை கொண்டவனானாலும் இவ்வாறான விடயங்களை ஒரு வீதம் கூட நம்புவதில்லை.

சில காலமாக இவ்வாறான பல கதைகள் வெளியானதை யாவரும் அறிவோம். இவ்வாறான கதைகள் வெளிவந்து சில காலம் பரபரப்பாக பேசப்படும் ஆனாலும் பின்னர் அவை பற்றி பேசப்படாமல் இருப்பது ஒரு புறமிருக்க. அதனால் எதுவும் நடந்ததாகவும் தெரியவில்லை.

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் ஒரு வீட்டில் நிலத்துக்கடியில் இருந்து தங்கத்திலாலான சிலை ஒன்று வெளிப்பட்டிருப்பதாக பரபரப்பாக பரவ ஆரம்பித்ததுமே. அந்த வீட்டை பல இடங்களில் இருந்தும் மக்கள் பார்வையிட வந்து கொண்டே இருக்கின்றனர்.

எல்லோரும் சென்று பார்த்து வருகின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை சொல்கின்றனர். ஆனாலும் பார்த்த பலர் சொல்கின்ற கதை இதுதான். அந்த சிலை 5 கிலோவுக்கு மேல் வரும்  தங்கத்தாலானது. இன்னும் சில சிலைகள் வெளிப்படுமாம்.

எல்லோரும் சென்று பார்த்து வருகின்றார்கள். எனக்கு இவற்றில் நம்பிக்கை இல்லை என்பதால் நான் போக விரும்பவில்லை. இருந்தாலும் எல்லோரும் சென்று பார்த்துவந்து கதைகளை சொல்கின்றபோது பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு வந்தது.

என்னுடைய நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்டு பார்க்கலாம் என்று நேற்றிரவு 8 மணியளவில் குறிப்பிட்ட வீட்டுக்கு சென்றேன். செல்லும் பாதைகளில் பலர் பார்த்துவிட்டு வருவதையும், பார்க்க செல்வதையும் அறிய முடிந்தது.

அந்த வீட்டை அடைந்தபோது ஒரு ஆலயத்துக்கு செல்வது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. அங்கே வந்திருந்தவர்களும் ஒரு ஆலயத்தில் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமோ அதே போன்றுதான் நடந்து கொண்டனர்.

ஆனால் சிலை இருப்பதாக சொல்லப்பட்ட அறை பூட்டப்பட்டிருந்தது. இந்து சமயம் சம்பந்தமான கிரியைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

ஆனாலும் எனக்கு அந்த சிலையை பார்க்கவேண்டும் அந்த வீட்டின் சொந்தக் காரர்களோடு பேசவேண்டும் தகவல்களை பெறவேண்டும் என்று முயற்சி செய்தேன். சில கிரியைகள் இடம் பெறுவதால் இப்போது பார்க்க முடியாது என்று சொல்லப்பட்டது.

பகல் நேரத்திலே எல்லோரும் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப் பட்டிருக்கிறது. பலர் பார்த்திருக்கின்றனர்.

இவ்வாறான விடயங்கள் இப்போது அடிக்கடி நடைபெறுவது சாதாரணமாகிவிட்டது. இது உண்மையோ அல்லது பொய்யான விடயமாக இருப்பது ஒரு புறமிருக்க இவ்வாறு அடிக்கடி நடப்பதனால் மக்களுக்கு கடவுள் மீது இருக்கின்ற நம்பிக்கை இல்லாமல் போகின்றது என்பதுதான் உண்மை.

கடவுள் மீது அதித நம்பிக்கையும், சமயத்தின் மீது பற்றும் கொண்ட நான் இவைகளை 1 வீதமும் நம்பவில்லை.  சரி கடவுள்தான் என்றாலும் எதற்காக வீடுகளிலே சிலையாக தோன்றவேண்டும்?  பொதுவான இடங்களிலே வெளிப்படலாம்தானே?
read more...

google தமிழ் செய்திகளை வலைப் பதிவில் கொண்டு வருவது எப்படி

நாம் எமது வலைப் பதிவை மற்றவரைக் கவரக் கூடிய வகையில் வைத்துக்கொள்ளவே விரும்புவோம். எமது வலைப்பதிவிலே நாம்  பல செய்திகளையும், தகவல்களையும் எமது வலைப்பதிவிலே இணைத்துக் கொள்வதன் மூலமாக எமது வலைப்பதிவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை கூட்டிக்கொள்ள முடியும்.

google  தமிழ்  செய்திகளை எமது வலைப்பதிவிலே இடம்பெற  செய்வதன் மூலமாக எமது வலைப்பதிவுக்கு வருபவர்களுக்கு நாம் மேலும் பல செய்திகளையும் தகவல்களையும் வழங்க முடியும்.

எமது வலைப்பதிவில்
   Dashboard ==>> Layout ==>>add gadget ==> feed  செல்லுங்கள்
feed என்பதை கிளிக் பண்ணுங்கள். கீழே உள்ள படத்தில் உள்ளது போன்று தோன்றும். அதிலே Feed URL என்பதில் கீழே நான் தருகின்ற கோடுகளை இட்டு CONTINUE கொடுங்கள் 
கீழே படத்தில் உள்ளதுபோல் தோன்றும்.  Save பண்ணிக் கொள்ளுங்கள்.
முக்கிய செய்திகள் செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.

http://news.google.co.in/news?cf=all&ned=ta_in&ict=ln


உலக செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.
http://news.google.co.in/news/section?cf=all&ned=ta_in&topic=w&ict=ln

 இலங்கை  செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.
http://news.google.co.in/news/section?cf=all&ned=ta_in&topic=sn&ict=ln

இந்திய செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.
http://news.google.co.in/news/section?cf=all&ned=ta_in&topic=ietn&ict=ln

விளையாட்டு செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.
http://news.google.co.in/news/section?cf=all&ned=ta_in&topic=s&ict=ln
 
பொழுதுபோக்கு செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.
http://news.google.co.in/news/section?cf=all&ned=ta_in&topic=e&ict=ln

தமிழக செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.
http://news.google.co.in/news/section?cf=all&ned=ta_in&topic=tn&ict=ln

வணிக  செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.

ஒவ்வொரு வகையான செய்திகளுக்கும் ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டும்.
read more...

Friday, 2 July 2010

வலைப்பதிவுக்கு மிகவும் பிரயோசனமான Apture Tool Bar ஜ வலைப்பதிவிலே இணைப்பது எப்படி

நான் வலைப்பதிவு தொடர்பான எந்தவிதமான தொழிநுட்ப அறிவும் இல்லாமலே வலைப் பதிவுலகுக்கு வந்தேன். ஆனால் வலைப் பதிவு தொழிநுட்பங்களை நிறையவே நாள்தோறும் தேடித் பெற்றிருக்கின்றேன்.

நான் அறிந்த விடயங்களை, தேடித் பெற்றுக் கொண்ட விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். Facebook , Twitter , மின்னஞ்சல் என்பவற்றுக்கு எமது பதிவுகளை பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவுக்கு மிகவும் பிரயோசனமான Apture ToolBar இனை இவ்வாறு எமது வலைப் பதிவிலே இணைத்துக் கொள்ளலாம் என்பதனைப் பார்ப்போம்.

முதலில் http://www.apture.com/ செல்லுங்கள் கிழே படத்தைப் பாருங்கள்



FREE Get Started என்பதனை கிளிக் பண்ணுங்கள்.  கிளிக் பண்ணியதும் கீழே  படத்தில் உள்ளதுபோல் தோன்றும்.
Your website address: என்பதில் உங்கள் வலைப்பதிவு முகவரியை இடுங்கள்.
Your email: உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுங்கள்
Upload a Logo or Set Title உங்கள் வலைப்பதிவின் லோகோ  அல்லது வலைப்பதிவு பெயரை கொடுங்கள். 
Pick your bar color ToolBar வர்ணத்தை தெரிவு செய்யுங்கள் 
Get  My  Bar என்பதை கிளிக் பண்ணி கிடைக்கும் HTML ஜ
உங்கள் வலைப்பதிவில்  Dashboard ==>>Layout ==>>Edit html செல்லுங்கள்  
< /body > க்கு கீழே அந்த HTML  ஜ இட்டு Save பண்ணிவிடுங்கள்.
read more...

Thursday, 1 July 2010

வலைப்பதிவு இடுகைத் தலைப்புக்களின் எழுத்து பல வர்ணங்களில் மாறி,மாறி (Multi Color Effect ) காட்சி தர வேண்டுமா?

எமது வலைப்பதிவிலே நாம் இடுகின்ற இடுகைகளுக்கான  தலைப்பு அதிகமாக ஏதாவது ஒரு வர்ணத்திலேதான் இருக்கும். சிலர் நினைக்கலாம் தலைப்பினுடைய வர்ணம் பல வர்ணங்களில் (Multi Color Effect ) மாறிக்கொண்டு இருந்தால் அழகாக இருக்கும் என்று நினைக்கலாம்.




Dashboard ==>> Layout ==>> Edit html  செல்லுங்கள்

</head> எங்கே இருக்கின்றது என்று தேடுங்கள்.

</head> க்கு மேல் கீழே தருகின்ற HTML உள்ளிட்டு Save வே பண்ணுங்கள்




<script type='text/javascript'>

//<![CDATA[

var rate = 20;

if (document.getElementById)
window.onerror=new Function("return true")

var objActive; // The object which event occured in
var act = 0; // Flag during the action
var elmH = 0; // Hue
var elmS = 128; // Saturation
var elmV = 255; // Value
var clrOrg; // A color before the change
var TimerID; // Timer ID

if (document.all) {
document.onmouseover = doRainbowAnchor;
document.onmouseout = stopRainbowAnchor;
}
else if (document.getElementById) {
document.captureEvents(Event.MOUSEOVER | Event.MOUSEOUT);
document.onmouseover = Mozilla_doRainbowAnchor;
document.onmouseout = Mozilla_stopRainbowAnchor;
}

function doRainbow(obj)
{
if (act == 0) {
act = 1;
if (obj)
objActive = obj;
else
objActive = event.srcElement;
clrOrg = objActive.style.color;
TimerID = setInterval("ChangeColor()",100);
}
}


function stopRainbow()
{
if (act) {
objActive.style.color = clrOrg;
clearInterval(TimerID);
act = 0;
}
}


function doRainbowAnchor()
{
if (act == 0) {
var obj = event.srcElement;
while (obj.tagName != 'A' && obj.tagName != 'BODY') {
obj = obj.parentElement;
if (obj.tagName == 'A' || obj.tagName == 'BODY')
break;
}

if (obj.tagName == 'A' && obj.href != '') {
objActive = obj;
act = 1;
clrOrg = objActive.style.color;
TimerID = setInterval("ChangeColor()",100);
}
}
}


function stopRainbowAnchor()
{
if (act) {
if (objActive.tagName == 'A') {
objActive.style.color = clrOrg;
clearInterval(TimerID);
act = 0;
}
}
}


function Mozilla_doRainbowAnchor(e)
{
if (act == 0) {
obj = e.target;
while (obj.nodeName != 'A' && obj.nodeName != 'BODY') {
obj = obj.parentNode;
if (obj.nodeName == 'A' || obj.nodeName == 'BODY')
break;
}

if (obj.nodeName == 'A' && obj.href != '') {
objActive = obj;
act = 1;
clrOrg = obj.style.color;
TimerID = setInterval("ChangeColor()",100);
}
}
}


function Mozilla_stopRainbowAnchor(e)
{
if (act) {
if (objActive.nodeName == 'A') {
objActive.style.color = clrOrg;
clearInterval(TimerID);
act = 0;
}
}
}


function ChangeColor()
{
objActive.style.color = makeColor();
}


function makeColor()
{
// Don't you think Color Gamut to look like Rainbow?

// HSVtoRGB
if (elmS == 0) {
elmR = elmV; elmG = elmV; elmB = elmV;
}
else {
t1 = elmV;
t2 = (255 - elmS) * elmV / 255;
t3 = elmH % 60;
t3 = (t1 - t2) * t3 / 60;

if (elmH < 60) {
elmR = t1; elmB = t2; elmG = t2 + t3;
}
else if (elmH < 120) {
elmG = t1; elmB = t2; elmR = t1 - t3;
}
else if (elmH < 180) {
elmG = t1; elmR = t2; elmB = t2 + t3;
}
else if (elmH < 240) {
elmB = t1; elmR = t2; elmG = t1 - t3;
}
else if (elmH < 300) {
elmB = t1; elmG = t2; elmR = t2 + t3;
}
else if (elmH < 360) {
elmR = t1; elmG = t2; elmB = t1 - t3;
}
else {
elmR = 0; elmG = 0; elmB = 0;
}
}

elmR = Math.floor(elmR).toString(16);
elmG = Math.floor(elmG).toString(16);
elmB = Math.floor(elmB).toString(16);
if (elmR.length == 1) elmR = "0" + elmR;
if (elmG.length == 1) elmG = "0" + elmG;
if (elmB.length == 1) elmB = "0" + elmB;

elmH = elmH + rate;
if (elmH >= 360)
elmH = 0;

return '#' + elmR + elmG + elmB;
}

//]]>

</script>


அவ்வளவுதான் உங்கள் இடுகைகளின் தலைப்பும் இப்போ பல வர்ணங்களில்.

read more...

கலையும் வேசங்கள்

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 27

தங்கதுரை பழிவாங்கப்பட்ட கதை…

தமது தலைமைப் பதவிக்கு போட்டியாக இருந்த இராதுரையை எப்படி ஓரங்கட்ட அமிர்தலிங்கம் சதிதிட்டம் தீட்டினாரோ அதோ போல் இராசதுரையுடன் இணைந்து (கல்விதரப்படுத்தலை போன்ற பிரச்சனைகளில்) தமது யாழ் அடிப்படைவாத சிந்தனை போக்குகளுக்கு ஒத்துழைக்க மறுத்து வருகின்ற தங்கதுரையையும் ஒதுக்கி விடும் திட்டம் அவர் மனதிலிருந்தது. 1970 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழரசுக்கட்சி பெரும் து}ண்களான அமிர்தலிங்கம் (வட்டுக்கோட்டை தொகுதி), சிவசிதம்பரம் (நல்லு}ர்த் தொகுதி) போன்றோர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்தனர். அதேபோன்று வவுனியாத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும் தமிழ் காங்கிரசின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்த தா.சிவசிதம்பரமும் தனது ஆசனத்தை 1970 ஆண்டு தேர்தலில் இழந்திருந்தார்.

பல முனைகளிலும் தோல்விகளால் துவண்டிருந்த தமிழரசுகட்சியும், தமிழ் காங்கிரசும் தமது கடந்தகால பகைகளை மறந்து வாக்குப் பொறுக்கி அரசியலுக்காக ஒன்று சேர்ந்தமையே த.வி.கூட்டணி பிரசவமாகும். இந்த நிலையில் அடுத்து வரும் தேர்தலில் இந்த கூட்டணியினரிடத்தில் தொகுதி பங்கீடு பற்றிய பிரச்சனை எழுந்த போது அதில் வவுனியா தொகுதியை இட்டு முறுகல் நிலை உருவானது.

வவுனியாவை இருசாராரும் விட்டுக் கொடுக்க தயாராக விருக்கவில்லை. இந்த நிலையில் தான் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூது}ர் தொகுதியில் சிங்கவர்கள் அதிகமாக வாழும் பிரதேசமான சேருவலையை மையமாக கொண்டு ஒரு தொகுதியை உருவாக்க அரசும் திட்டமிட்டு வந்தது.

வவுனியாவில் தமது தமிழரசு கட்சி பிரதிநிதித்துவத்தை விட்டு கொடுக்க விரும்பாத அமிர்தலிங்கம் அந்த தொகுதியின் முக்கியஸ்தரும் தமிழ்காங்கிரசின் பிரதிநிதியுமான தா.சிவசிதம்பரம்த்திற்காக முல்லைதீவினை அடிப்படையாக கொண்டு ஒரு புதிய தொகுதியை உருவாக்கும் எண்ணத்தோடு அரசை அணுகினார். இந்த நேரத்தில் தான் முல்லைதீவு தொகுதியை கொடுத்து சேருவலையை பெற்றுக் கொள்ளும் சிறிமா அரசாங்கத்தின் திட்டம் இரகசியமாக அமிர்தலிங்கத்தின் ஒப்புதலுடன் அமூலாகியது.

கிழக்கு மாகாணத்தில் சிங்கள விவசாயிகள் குடியேற்றப்பட்ட பொழுதுகளில் குய்யோ முறையோ என்று கூக்குரலிட்ட யாழ்ப்பாணத் தலைவர்கள் ஒரு புதிய தொகுதி சிங்களவர்களுக்காக கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்டு சட்ட அங்கீகாரம் பெறப்பட்ட வேளைகளில் ஏன் வாய் திறவாதிருந்தனர் என்பதன் காரணம் இதுதான். இவர்கள் ஒருபோதும் கிழக்குமாகாண மக்களின் வளமான வாழ்வினை ஆராதிக்கவில்லை. அவர்களை வைத்து பிழைப்பு நடத்தவே முயன்றனர்.

அதற்காகவே தமிழ் தலைவர்கள் என்கின்ற போலி முகம்களைக் காட்டி நாடகம் ஆடினர். அமிர்தலிங்கம் போன்றோர் கிழக்கு மண்ணை காக்க வந்தவர்கள் என்பதல்ல விற்றுத் தின்றவர்கள் என்பதே உண்மையாகும்.

1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் இரட்டை அங்கத்தவர் தொகுதியான மூது}ரில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஏ.எல்.அப்துல் மஜித் அவர்களும் தமிழரசுக் கட்சி சார்பில் தங்கத்துரை அவர்களும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்தனர். ஆனால் அமிர்தலிங்கத்தின் ஆசியுடன் சேருவலைத் தொகுதி உருவாக்கப்பட்ட பின்னர் மூது}ரிலும் சேருவலையிலுமாக வாழ்ந்த தமிழ் மக்கள் இரு தொகுதிகளிலும் சிறுபான்மையாக்கப்பட்டு தமது அரசியல் பிரதிநிதிகளை தெரிவுசெய்ய முடியாதவண்ணம் அரசியல் அனாதைகாளக்கப்பட்டனர்.

அந்த இரு தொகுதிகளிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட முடியாது போனதன் காரணமாக தங்கத்துரை அவர்களுக்கு அரசியலில் அஞ்ஞாதவாசமே கிடைத்தது. ஆனாலும் திருகோணமலையில் போட்டி போடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட வேண்டும் என பல த.வி.கூட்டணிக் கிளையினரும் கேட்டுக் கொண்ட போதும் அதற்கு எதிர்மாறான முடிவுகளையே கட்சியின் தலைமை வடக்கில் இருந்து பிறப்பித்தது. அமிர்தலிங்கத்தின் விருப்பத்திற்கேற்ப 1977ஆம் ஆண்டுத் தேர்தலில் திருகோணமலையின் த.வி.கூட்டணி வேட்பாளராக இரா.சம்பந்தன் நிறுத்தப்பட்டார்.

தனது அரசியல் எதிரிகளை பழிவாங்கி அமிர்தலிங்கம் ஒரேகல்லில் இரண்டு மாங்காய்கள் அல்ல மூன்று என விழுத்திக் காட்டினார். ஒன்று சேருவலைத் தொகுதி சிங்களவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இரண்டு, வவுனியாத் தொகுதி தமிழரசுக் கட்சிக்காக பாதுகாக்கப்பட்டது. மூன்று, முல்லைத்தீவு தொகுதி தமிழ் காங்கிரசுக்காக உருவாக்கப்பட்டது. அதேவேளை கல்லு வீழந்ததோ கிழக்கு மாகாணத்தான் தலையில். பறிபோனது சேருவலைப் பிரதேசம். மட்டக்களப்பான் மடையன் அல்ல மாங்காய் மடையன் என்று அன்று அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மனதுக்குள் சிரித்திருக்கக் கூடும். ஆனால் இன்றும் இனிமேலும் அது பழங்கதையாய் பொய்யாகிப் போகும் என்பதே திண்ணம்.

தொடரும்... 
read more...

அல்பிரட் துரையப்பாவின் படுகொலையும் வட்டுக்கோட்டைத் தீர்மானமும்.

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 26

1975ஆம் ஆண்டு யூலை மாதம் 27ஆம் திகதி பொன்னாலை என்னும் ஊரின் வரதராஜப் பெருமாள் கோயில் வாசலின் முன்னால் வைத்து துரையப்பா மீதான படுகொலை நிகழ்த்தப்பட்டது. அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபன் தயாரித்துக் கொடுத்த திட்டமொன்றின்படியே பிரபாகரன் இப்படுகொலையை நிறைவேற்றியிருந்தார். பொலிசாரின் கெடுபிடிகளில் இருந்து தப்ப கொலையாளி பிரபாகரனுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களின் (அமிர்தலிங்கம், தர்மலிங்கம்) மனைவிமார் நகைகளைக் கழட்டிக் கொடுத்து உதவி செய்தும் இருந்தனர். (‘ஈழப்போராட்டத்தின் எனது சாட்சியம்’ பக்:160)


இந்த நிகழ்வுகள் தான் “தமிழ்” அரசியலில் துரோகிகள் என்று யாரையும் சுட்டுக் கொல்லலாம் என்னும் வரலாற்றை தொடங்கி வைத்தது. இந்த சித்தாந்தம் எந்த மூளையில் இருந்து பிறந்ததோ அந்த மூளைக்குரிய மனிதன் அதே சிந்தாந்தத்துக்கு பின்னாளில் பலியாகிப் போனதையும் தவிர்க்க முடியவில்லை.


இந்த நிகழ்வுகள்தான் “தமிழ்” அரசியலில் துரோகிகள் என்று யாரையும் சுட்டுக் கொல்லலாம் என்னும் வரலாற்றை தொடங்கி வைத்தது. இந்த சித்தாந்தம் எந்த மூளையில் இருந்து பிறந்ததோ அந்த மூளைக்குரிய மனிதன் அதே சிந்தாந்தத்துக்கு பின்னாளில் பலியாகிப் போனதையும் தவிர்க்க முடியவில்லை. இவற்றையெல்லாம் முன்னுணர முடியாமல் அமிர்தலிங்கம் போன்றவர்கள் தமது தலைமைப் போட்டிகளுக்காக கண்மூடித்தனமாக இளைஞர்களை வெறியூட்டி வளர்த்தார்கள்.

தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைத்த அரசியலுக்கு வெளியே எந்தவிதமான கட்சிகளினதும் செயற்பாடுகள் இருக்கக்கூடாது எனும் நோக்கில் அவையனைத்தையுமே துரோகம் எனும் சமூகரீதியான ஒரு உளவியல் மனப்பாங்கை உருவாக்கும் பணியில் கூட்டணியின் பேச்சாளர்கள் முக்கிய பங்காற்றினர். த.வி.கூட்டணி தவிர்ந்த வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிடுவதோ, அவற்றோடு இணைந்து செயற்படுவதோ, அவற்றுக்கு ஆதரவளிப்பதோ கூட மரண தண்டனைக்குரிய குற்றமாகும் என்கின்ற எச்சரிக்கையுடனான செய்தியையே துரையாப்பாவின் கொலை எங்கும் பரப்பியது.

ஆகவே வடக்கு கிழக்கு மக்கள் விரும்பியோ விரும்பாமலோ புரிந்தோ புரியாமலோ இந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் அலைக்குள் அமிழ்த்தப்பட்டார்கள். 1977ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த நேரம் தமிழர்விடுதலைக் கூட்டணி யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் தனது முதலாவது மாநாட்டைக் கூட்டியது. அந்த மாநாட்டில் இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் விருப்பம் என்பது சுதந்திர தமிழீழத்தை அடைவதே என்ற பிரகடனத்தை நிறைவேற்றினர். 14-05-1976 இல் நிறைவேற்றப்பட்ட இந்த பிரகடனமே இன்றுவரை “வரலாற்று புகழ்மிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானம்” என புகழப்படுகிறது. இதன்படி தமிழீழம் பெறுவதே ஒரே வழி என்கின்ற கொள்கையை தமிழ் மக்கள் அனைவரினதும் ஏக கொள்கையாக தமிழர் விடுதலைக் கூட்டணியினர் பிரச்சாரம் செய்தனர்.

இந்த நேரத்தில் கூட்டணியினரால் தூண்டி விடப்பட்ட இளைஞர் குழாத்தினர் தீவிரவாத நடவடிக்கைகள் மூலம் மக்களின் கவனத்தை இந்த இளைஞர் குழுக்கள் அதிகமாக ஈர்த்தன. இதன் காரணமாக மிதவாதிகளாக இருந்த கூட்டணியினரின் மீதான அபிமானம் திசைதிரும்பத் தொடங்கியது. இன்னிலைமையை சமாளிக்கும் முகமாகவே வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை நிறைவேற்றி கூட்டணியினர் ஹீரோக்களாயினர்.

ஆனால் தமிழீழம், தமிழீழம் எனச் சொல்லிக் கொண்டு அடுத்து வரவிருந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதையே நோக்காகக் கொண்டு செயற்பட்டனர். தாம் தேர்தலில் போட்டியிடுவது பாராளுமன்றக் கதிரைகளைக் கைப்பற்றிக் கொள்வதற்கே என்ற பகிரங்கமான அசிங்கத்தை மூடி மறைத்துக் கொண்டு தமிழீழத்துக்கான ஆணை கோரியே தேர்தலில் போட்டியிடுவதாக மக்களிடம் கூட்டணியினர் பிரச்சாரம் செய்தனர்.

பாராளுமன்றக் கதிரைகளை கைப்பற்றுவதற்காக போட்டியிடுகின்ற இவர்கள் தமிழீழத்துக்கான ஆணையை மக்களிடம் எதிர் பார்ப்பதாக சொல்லிக் கொண்டு கொழும்பில் போய் எப்படி தமிழீழத்தைப் பெறப்போகிறார்கள் என்கின்ற கேள்விகள் கிழக்கு மாகாணத்தில் இருந்து அப்போது எழும்பவில்லை.

இந்தத் தேர்தல் நடைபெறுவதற்கு சிலமாத இடைவெளிகளுக்கு முன்பு தான் மு.திருச்செல்வம் (1976-நவம்பர்), ஜீ.ஜீ.பொன்னம்பலம் (1977-பெப்ரவரி), செல்வநாயகம் (1977-ஏப்ரல்) போன்ற பெருந்தலைவர்களினுடைய இயற்கை மரணங்கள் சம்பவித்தன. இச்சோக நிகழ்வுகள் வடகிழக்கு மக்கள் எல்லோரையும் ஒருவித அனுதாப அலையினூடாக ஒன்று சேர்த்தது. இந்த ஒவ்வொரு மரணங்களின் போதும் தன்னையே அடுத்த தலைமையாக திட்டமிட்டு முன்னிறுத்தி வருவதில் அமிர்தலிங்கம் மிகக்கவனமாகவும், வெற்றிகரமாகவும் காய்களை நகர்த்திக் கொண்டே வந்திருந்திருந்தார்.

1977ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலும் இராசதுரையை ஓரம்கட்டிய அமிர்தலிங்கமும்… எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் மறைவுக்குப் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக ஆகும் முழுத் தகுதிகளும் கொண்டிருந்தவர் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினராயிருந்த செல்லையா இராசதுரை அவர்களாகும். 1956ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக மட்டக்களப்பு மக்களால் பாராளுமன்றத்துக்கு தெரிவாகி வந்த இவர் தமிழர்கள் மத்தியில் பழம்பெரும் தலைவராக மதிக்கப்பட்டு வந்தவர்.


ஆனால் தனது சொந்த தொகுதி மக்களாலேயே 1970 ஆண்டு தேர்தலில் வட்டுக்கோட்டையில் தோல்வி கண்ட அமிர்தலிங்கம் இராசதுரையின் வளர்ச்சியையோ அவர் தலைவராவதையோ விரும்பியிருக்கவில்லை. 1970 ஆண்டின் பின்னர் அமுலான கல்விதரப்படுத்தல் சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்கின்ற தமிழ் தரப்பினரின் முடிவினை கட்சிக்குள்ளேயே ஆட்சேபித்தவர்கள் எனும் வகையில் இராசதுரையும் தங்கத்துரையும் முக்கியம் வாய்ந்தவர்கள். இதன் காரணமாகவும் இவர்கள் மீது அமிர்தலிங்கத்துக்கு இவர்களை ஓரங்கட்டியாக வேண்டும் என்கின்ற நீண்டநாள் திட்டம் இருந்தது.


அத்தோடு யாழ்ப்பாணத்துக்கு வெளியே தமிழ் மக்களுக்கான தலைமைப் பதவி செல்லுகின்ற வாய்ப்பை அமிர்தலிங்கம் போன்றவர்களால் ஜீரணிக்கமுடியவில்லை. இதற்காக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த த.வி.கூட்டணியின் முக்கியஸ்தர்கள் பலரும் அமிர்தலிங்கத்துடன் சேர்ந்து இராசதுரையை ஓரம் கட்டும் முயற்சிக்கு ஆதரவு அளித்தனர்.

இந்த யாழ்ப்பாணத்தினுடைய மேல்தட்டு வர்க்க பண்பு முதன்முறையாக மட்டக்களப்பு மக்களால் மெதுவாக உணரப்படும் வாய்ப்பினை 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலே வழங்கியிருந்தது. இத்தேர்தலில் தனது வெற்றி வாய்ப்பின் மீது சந்தேகம் கொண்ட அமிர்தலிங்கம் வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட அஞ்சினார். அவ்வேளை தந்தை செல்வாவின் இறப்பினால் அவரது தொகுதியான காங்கேசன்துறைக்கான இடம் வெறுமையானதைப் பயன்படுத்தி அங்கே போட்டியிட முன்வந்தார்.

அதுமட்டுமன்றி மட்டக்களப்பில் இராசதுரையின் வெற்றி வாய்ப்பபுகளை குறைப்பதற்கான சாத்தியப்பாடுகளையும் அதிகரிக்கச் செய்தார். இதற்காக காசி ஆனந்தனையும் மட்டக்களப்பு தேர்தல் களத்தில் இறக்கி தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட வைத்தார் அமிர்தலிங்கம். இந்த முடிவை மட்டக்களப்பின் கூட்டணிக் கட்சிக் கிளைகள் கடுமையாக எதிர்த்தன.

பொத்துவில் தொகுதியில் போட்டியிடுவதற்கு கூட்டணியின் சார்பில் பொருத்தமான ஆள் இல்லாத நிலையில் அங்கு காசி ஆனந்தனைப் போட்டியிட வைக்க முடியும் என அவர்கள் வாதிட்டனர். ஆனாலும் அமிர்தலிஙகத்தின் விடாபிடியும் அதிகாரமும் மட்டக்களப்பு மக்களை பிரித்தாளும் சூட்சியுமே இறுதியில் வெற்றி கொண்டது. அதாவது த.வி.கூட்டணியின் சார்பில் சூரியன் சின்னத்தில் இராசதுரை போட்டியிட தமிழரசுக்கட்சி சார்பில் வீடு சின்னத்தில் காசிஆனந்தனை மட்டக்களப்பில் போட்டியிட வைத்ததன் மூலம் மட்டக்களப்பு தமிழர்களின் வாக்கை இரண்டாகப் பிரிக்கும் முயற்சியை அமிர்தலிங்கம் மேற்கொண்டார். அதனு}டாக இராசதுரையின் வெற்றி வாய்ப்புக்களை இல்லாதொழித்து கட்சிக்குள் முடிசூடா மன்னனாக தானே திகழ வேண்டும் என அமிர்தலிங்கம் கனவு கண்டார். ஒரே கட்சிக்குள்ளேயே கிழக்கில் ஒரு தலைமை உருவாகி விடக்கூடாது என்பதற்காக இந்தக் குழிபறிப்பு அரங்கேறியமையானது எமது வரலாறுகளில் காணக் கிடைக்கும் உண்மைகள்.

காசி ஆனந்தன் மட்டக்களப்பைச் சேர்ந்தவரே ஆயினும் ஒரு யாழ்ப்பாண ஆதிக்க சூதில் அகப்பட்டு பகடைக்காயானார். இராசதுரையின் வெற்றி வாய்ப்புக்களை குறைப்பதற்காக காசி ஆனந்தனுக்கு பிரச்சார உதவிகளை அமிர்தலிங்கம் திட்டமிட்டு தயார் செய்தார். யாழ்ப்பாணத்தில் இருந்து ஈழவேந்தன், கோவை மகேசன், மாவை சேனாதிராஜா போன்ற உணர்ச்சிமிகு பேச்சாளர்களும் மட்டக்களப்பில் முகாமிட்டு தங்கி காசி ஆனந்தனுக்காக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டனர். இந்த நிலையில் காசி ஆனந்தனுக்கு மட்டும் வழங்கப்பட்ட இந்தப் பிரச்சாரங்களின் முன்னுரிமையானது மட்டக்களப்பு மக்களின் சந்தேக நரம்புகளை மெல்லியதாக அரட்டி விட்டது.

இதன் காரணமாக மட்டக்களப்பில் படித்த இளைஞர் கூட்டம்; இராசதுரையை வெல்ல வைப்பதற்கு கங்கணம் கட்டிக்கொண்டு பிரச்சாரக் களத்தில் குதித்தனர். மட்டக்களப்பில் நடந்த இறுதி நாள் பிரச்சாரக் கூட்டத்தில் இராசதுரையே கட்சிக்குள் நடக்கும் குழிபறிப்பை பகிரங்கமாகவும் மக்களிடம் வெளிப்படுத்தினார். யாழ்ப்பாணமா? மட்டக்களப்பா? என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என அவர் உரையாற்றினார்.

இறுதியில் காசி ஆனந்தன் படுதோல்வியடைய வழமை போல் இராசதுரையே மட்டக்களப்பில் முதலாவது எம்.பியாக தெரிவானார். இந்தத் தேர்தலில் இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில் இருந்து இரண்டாவது எம்.பியாக ஐ.தேசியக் கட்சியைச் சேர்ந்த பரீட் மீராலெப்வை தெரிவு செய்யப்படார்.

தேர்தலில் வென்ற இராசதுரை தமிழ் அரசியல் வானில் தன்னை ஒரு தமிழனாக அன்றி மட்டக்களப்பானாகவே நடாத்தி கேவலப்படுத்திய யாழ்ப்பாணத் தலைமைகளின் புறக்கணிப்பிற்கு பாடம் புகட்ட எண்ணி விரக்தியுற்று யு.என்.பி. அரசாங்கத்தில் சேர்ந்து கொண்டார். கட்சிமாறி யு.என்.பி.யில் சேர்ந்தது பெரும் துரோகம் என்று அமிர்தலிங்கம் உட்பட யாழ்ப்பாணத் தலைமைகள் கூக்குரலிட்டன. ஆனால் மட்டக்களப்பு மக்களுக்கு அமிர்தலிங்கத்தினுடைய கீழ்த்தரமான அரசியல் சூதுகளுக்கு முன்னால் இராசதுரை கட்சிமாறியது ஒன்றும் துரோகமாகப்படவில்லை. இராசதுரை யாழ்ப்பாணத் தலைமைகளுக்கு தகுந்த பாடம் கற்பித்ததாகவே அவர்கள் பேசிக்கொண்டார்கள்.

இருந்தபோதிலும் இந்த தேர்தலில் 13 ஆசனங்களை பெற்றுக் கொண்ட த.வி.கூட்டணி இலங்கையில் வரலாற்றின் முதலாவது தடவையாக பிரதான எதிர்கட்சியாகும் வாய்ப்பு பெற்றது. சிறிலங்கா சுதந்திரக்கட்சியடைந்த படுதோல்வியே த.வி.கூட்டணிக்கு இந்த வாய்ப்பை வழங்கியது. ஆனால் இலங்கையின் எதிர்கட்சியாகிவிட்ட தகுதி ஒன்றே தமக்கு தமிழீழக் கோரிக்கைக்கான ஆணையை வழங்கி விட்டதாக பரபரப்பாக த.வி.கூட்டணி பிரச்சாரத்தில் ஈடுபட்டது. இந்த ஆணையைத் தான் இன்றுவரை தமிழீழ விடுதலைப் புலிகளும் முன்னிறுத்திப் பேசிவந்தனர்.

இதேவேளை தேர்தல் வெற்றி வாய்ப்புகளுக்காக யாழ்ப்பாணத்தில் வன்முறைகளுக்கு தூபமிட்டு வந்த தமிழ்த் தலைமைகளின் செயற்பாடுகள் அங்கிருந்த இளைஞர் குழாமை தீவிரவாதப் பாதைக்கு அணிதிரட்டியிருந்தது. ஆகவே அவர்கள் த.வி.கூட்டணி பெற்றுக் கொண்ட ஆணையைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தில் தமிழீழத்தை பிரகடனப்படுத்துமாறு அமிர்தலிங்கத்துக்கு நெருக்குவாரம் கொடுத்தனர். தேர்தல் கணக்கு வழக்குகளை அனுசரித்து தமிழ்த் தலைமைகள் மேற்கொண்ட தில்லுமுல்லுத் தனமாக வட்டுக்கோட்டைத் தீர்மானமும் தேர்தலில் தமிழீழத்துக்கு மக்களிடம் ஆணைகேட்ட கோமாளித்தனமும் தமிழீழம் பற்றிய கற்பனாவாதப் பிரச்சாரங்களும் உண்மையென்றே இந்த இளைஞர்குழாம் நம்பியிருந்தது.

அதன்காரணமாகவே பாராளுமன்றத்தில் தமிழீழத்தை பிரகடனப்படுத்தக் கோரி அமிர்தலிங்கத்துக்கு அவர்கள் நெருக்குவாரம் கொடுத்தனர். ஆனால் இவை அனைத்தும் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணி பண்ணிய வெற்று கயமைத்தனங்கள் என்பதை அந்த இளைஞர்கள் புரிந்திருக்கவில்லை. ஆனால் அமிர்தலிங்கமும் அவரது பரிவாரங்களும் தமது உண்மையான இலக்குகளில் கவனமாகவே இருந்தனர்.

தேர்தலில் தமக்கு போடப்படுகின்ற ஒவ்வொரு வாக்கும் தமிழீழத்துக்காகப் போடப்படுகின்ற ஒவ்வொரு ஆணையாகும் என்று தமிழ் மக்களை உசுப்பி விட்டு உணர்ச்சி மேலிட்ட இளைஞர்களிடம் இருந்து இரத்தத் திலகம் பெற்றுக் கொண்ட அமிர்தலிங்கம் போன்றவர்கள் தமது சந்தர்ப்பவாத அரசியலில் சங்கமமானார்கள். இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசின் சட்டதிட்டங்களுக்கும் இறைமைக்கும் விசுவாசமாக நடப்போம் என்று இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் முன்னிலையில் சத்தியம் செய்து எதிர்கட்சி ஆசனங்களில் அமர்ந்து கொண்டார்கள்


தொடரும்
read more...

கூகிள் முதன்மை செய்திகளை படங்களுடனும. அழகாகவும் இலகுவாக வலைப்பதிவுகளில் இணைக்க முடியும்

நாம் எமது வலைப் பதிவை பார்வையாளர்களை கவரும் வண்ணம் அழகு படுத்துகின்றோம். சிலர் வலைப்பதிவுக்கு வருபவர்களுக்கு முடிந்தவரை தகவல்களையும் செய்திகளையும் தமது வலைப்பதிவிலே வழங்க நினைப்பார்கள்.

அதற்காக Feed மூலம் இணையத் தளங்களையும், கூகிள் (google) செய்திகளையும் இணைத்திருப்போம்.

google  webelements   மூலமாக நாம் எமது வலைப்பதிவுகளுக்கு தேவையான மிகவும் பிரயோசனமான பல கட்ஜெட்களை (gadjet ) பெற்றுக்கொள்ள முடியும்.

இதில் கூகுளே ஆங்கில செய்திகளை மிகவும் அழகான முறையிலே எமது வலைப்பதிவிலே கொண்டு வர முடியும். எனது வலைப் பதிவைப் பார்த்திருப்பீர்கள்.

அவற்றை இவ்வாறு இணைப்பது என்று பார்ப்போம்..

google webelements (http://www.google.com/webelements) %20செல்லுங்கள்  செல்லுங்கள்  படத்தில் உள்ளவாறு தோன்றும்

அதில்  news என்று என்று இருப்பதை தெரிவு செய்யுங்கள். கீழே படத்தில் உள்ளதுபோல் தோன்றும்.

அதிலே எந்த அளவில் கட்ஜெட் அமைய வேண்டும் எந்த வகையான செய்தி வேண்டும் என்பதனை தெரிவு செய்யுங்கள்.

கிடைக்கும் HTML ஜ Add Gadjet  மூலம் வலைப்பதிவில் இணைத்துக் கொள்ளுங்கள்.. இனி என்ன உங்கள் வலைப் பதிவிலும் அங்கில செய்திகள்தான்
read more...

Wednesday, 30 June 2010

உண்மைகளும் ஆதாரங்களும்.. அனைவருக்காகவும்...

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 25


இங்கே வர்ணமாக்கப் பட்டிருக்கின்ற பகுதிகளை சற்று கவனிக்கவும்.

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி -24
 இன பிரிவினை கருத்துக்களை அள்ளி வீசக்கூடிய பேச்சாளர்கள் இந்தியாவிலிருந்து வரவழைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் தமிழ் ஆராய்ச்சிக்காக நடாத்தப்பட வேண்டிய இம்மாநாடு பிரிவினைக்கு தூபமிடுவதாக அமைந்துவிட கூடாது என்பதில் அரசு கவனமாயிருப்பது இயல்பே.

இதன்காரணமாக தமிழ் நாட்டிலிருந்து வருகை தரவிருந்த உலக தமிழ் இளைஞர் பேரவை தலைவர் ஜனார்த்தனன் போன்ற பேச்சாளர்களுக்கு இலங்கையரசு வீஸா தரமறுத்திருந்தது. அவரை தனிதமிழீழ கோரிக்கையை தூண்டிவிட கூடிய உணர்ச்சிகரமான பேச்சாளராக அரசு கருதியதே அதற்கு காரணம். ஆனால் இந்த வீஸா மறுப்பும், மாநாட்டுக்கான தடைமுயற்சிகளும் அல்பிரட் துரையப்பாவின் தூண்டுதலின் பெயரிலேயே நடைபெறுவதாக அமிர்தலிங்கம் குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்த துரையப்பாவோ யாழ்பாண மேயர் எனும் வகையில் இந்த மாநாட்டுக்காக தன்னால் முடிந்த உதவிகளை செய்ய தான் தயாராகயிருப்பதாகவும் அறிக்கைவிட்டார். ஆனால் நீதிமன்றங்களில் குதர்க்கம் பேசி தேர்ச்சி பெற்ற அமிர்தலிங்கம் “யாரின் உதவியுமின்றி தன்னால் தனித்து மாநாட்டை நடாத்த முடியும் என மறுப்பறிக்கை விட்டார்.

அதற்கு பதிலிறுத்த துரையப்பா தனது உதவிகள் ஏற்றுகொள்ளபடாவிட்டாலும் தான் இதற்கு தடையாக இருக்க போவதில்லை என சொன்னார். “யார் தடைசெய்தாலும் மாநாடு நடந்தே தீரும்” என்று வேண்டாத விவாதங்களில் ஈடுபட்டார் அமிர்தலிங்கம். இதனுடாக மாநாட்டினை ஒட்டி மிக மோசமானதொரு பதட்ட சூழலினை தோற்றுவிக்க அவரே காரணமாயிருந்தார்.

இப்படியாக அரசாங்கத்தினது பல முட்டுக்கட்டைகளையும் பாரிய ஆபத்துக்களையும் வென்று தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்படபோகிறது என்ற ஒரு மாய தோற்றத்தை வடக்கு, கிழக்கு மக்களிடம் ஏற்படுத்துவதில் அமிர்தலிங்கம் வெற்றி கண்டார்.

இறுதியாக இறைமையுள்ள ஒரு தேசமான இலங்கையரசின் சட்டதிட்டங்களை மீறி கள்ள தோணியில் ஜனார்தனன் போன்ற இந்திய பேச்சாளர்களை யாழ்பாணம் கொண்டுவந்து சேர்ப்பதில் அமிர்தலிங்கம் இறங்கினார்.

அதுமட்டுமன்றி உதவி அமைச்சர் சோமவீர சந்திரசிறீ, யாழ் மேயர் அல்பிரட்துரையப்பா போன்றோர் மீதான கொலை முயற்சிகளில் ஈடுபட்டமைக்காக இலங்கை பொலிசாரினால் தேடப்பட்டு வந்த சிவகுமாரன் போன்ற தமிழ் மாணவர் பேரவை இளைஞர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவை பட்டாளமும் இம்மாநாட்டில் முக்கியஸ்தர்களாக உலாவந்தனர்.

உண்மையில் தமிழ் ஆராய்ச்சி மாநாடுதான் நடத்தபட வேண்டுமாக இருந்திருந்திருந்தால் இவையெல்லாம் தவிர்க்கப்பட்டிருக்கலாம். இவைமட்டுமல்ல குழப்பங்களை ஏற்படுத்தும் வண்ணம் இன்னும் பல தேவையற்ற பொறுப்புகளை அமிர்தலிங்கம் போன்றோர் இந்த இளைஞர் பட்டாளத்திடம் வழங்கியிருநதனர்.

அதாவது விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த ஜனார்த்தனன் அவர்களை இலங்கை பொலிசார் கைதுசெய்யாமல் பாதுகாக்கும் பொறுப்பை பொலிசாரால் தேடப்பட்ட சிவகுமாரன் குழுவினரிடமே வழங்கியிருந்தமை நிலைமைகளை மேலும் சிக்கலாக்கியது.

ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் எனும் நூலினை எழுதிய புஸ்பராசா அவர்கள் தனது நூலில் 96 ஆம் பக்கத்தில் இந்தவிடயங்களை ஒப்புக்கொண்டுள்ளார். “மாநாட்டுக்கு உலகத் தமிழ் இளைஞர் பேரவையின் தலைவர் ஜனார்த்தனன் வந்த செய்தியை அமிர்தலிங்கம் மூலம் அறிந்துகொண்டேன்.

யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றில் வைத்து ஜனார்தனனை சந்தித்தேன். ஜனார்த்தனனது பாதுகாப்பு ஏற்பாடுகளை சிவகுமாரனே செய்தார்” என்கிறார் அவர். இவையெல்லாம் தமிழை ஆராட்சி செய்வதற்கோ அன்றி தமிழுக்கு தொண்டு செய்வதற்தோ தமிழை வளர்ப்பதற்கோ செய்யப்பட்டதல்ல. மாறாக எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றி தீவிரவாதத்தை வளர்ப்பதற்கு அமிர்தலிங்கத்தின் செயற்பாடுகள் பங்களித்தன.

வரலாற்றின் மனிதன் என்கின்ற அ.அமிர்தலிங்கம் அவர்களது பவளவிழா மலரில் இச்சம்பவம் குறித்து ஜனார்த்தனன் பின்வருமாறு விபரிக்கின்றார்.

“செய்தித்தாள்களில் நான் உரையாற்றுவேன் என அறிவிப்பு. காலை ஊர்வலத்தை தொடங்கிவைத்து பேசியபோதே என்னை கைது செய்ய பொலிசார் முயற்சிசெய்ய, அவரிடம் அமரர் நவரத்தினம் பேச்சுக்கொடுத்து இடைமறிக்க, தலைமறைவானேன். மாலை வீரசிங்கம் மண்டபத்தில் மக்கள் வெள்ளம் நிறைந்துவிட்டதால் வெளியே அமைக்கப்பட்ட திடீர் மேடையை அடைந்தேன். காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் ‘உம்மைக் கைது செய்து கொழும்பு நாலாவது மாடிக்கு அழைத்துசெல்லும் உத்தரவிது.’ எனக்காட்ட பேசிவிட்டுத்தான் வருவேன், பேசாது இங்கிருந்து போக தமிழ் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என நான் மறுக்க வேறுவளியின்றி கூட்டத்தைக் கலைத்து அங்கேயோர் ‘ஜாலியன் வாலாபாக்’ நடத்த காவல்துறையினர் முடிவுசெயது அகன்றனர். அலையைக் கிழித்துவரும் கலம்போல் அமிர்வந்தார்.
கரகொலி விண்ணைப்பிளக்க கையில் இருந்த மாலையை எனக்கு அணிவிக்க அதை அவருக்கு நான் திரும்ப மாலையிட அந்த மணமேடை – பின்னர் 12 உயிர்களை தியாகவடிவில் காணும் அவலம் ஏற்பட்டது.”

இந்த வாக்குமூலங்கள் ஊடாக நாட்டின் சட்டத்தை காக்கும் கடமையில் ஈடுபட்ட பொலிசார் ஆத்திரமூட்டப்பட்டு சிவகுமாரன், ஜனார்த்தனன் போன்றோரை கைதுசெய்யும் முயற்சியில் வான்நோக்கி சுடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

 இதனை “அமிர்தலிங்கம் சகாப்தம்” எனும் நூலை எழுதிய கதிர் பாலசுந்தரம் அவர்கள் பின்வருமாறு விபரிக்கின்றார்.

“1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தமிழ் ஆராட்சிமாநாடு நடந்தது. உலகமெங்கும் இருந்து அறிஞர்கள் வந்திருந்தனர். மக்கள் வெள்ளம் அலைபுரண்டது. யாரோ ஒரு இந்தியர் பேசப்பேவதாக பொய்க்கதை பரவியது. திடீரென வந்த பொலிசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். குண்டாம்தடிகளால் மக்களை அடித்தனா. ரைபிள்களால் சுட்டனர். மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து 9 பேர் பலியாகினார்கள்.”

நடந்த உண்மைகளை இதற்குமேல் இன்றைய பரம்பரை புரிந்து கொள்ள வேண்டும். இவையனைத்தும் தாம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக மகாநாடு நடந்ததாகவே தமிழர் விடுதலைக் கூட்டணி கணக்குப் போட்டிருக்க வேண்டும். ஏனெனில் 10-01-74 இல் நடந்த இந்த 9 பேரினுடைய இறப்பும் சிங்களப் பேரினவாத அரசின் தமிழ் படுகொலை என்று பிரச்சாரப் படுத்தி தேர்தலில் களம்மிறங்க அமிர்தலிங்கத்துக்கும் அவர் சார்ந்த கூட்டணியினருக்கும் நல்ல வாய்ப்பபை ஏற்படுத்திக்கொடுத்தது.

கிழக்கு மாகாணத்தில் இருந்து இந்த தமிழ் ஆராட்சி மாநாட்டுக்காக தமிழர்விடுதலைக் கூட்டணியின் ஏற்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட வாகன சேவையினூடு யாழ்ப்பாணம் சென்ற கட்சி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் யாருமே இந்த படுகொலையின் பின்னணியில் இருந்த சூட்சுமங்களை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அமிர்தலிங்கத்துக்கும் அல்பிரட் துரையப்பாவுக்கும் இடையே இருந்த அதிகாரப் போட்டி சண்டைகள் குறித்து அவர்கள் ஏதும் அறிந்திருக்கவில்லை. இந்த சூழ்நிலையிலையே தம் கண்முன்னே நடைபெற்றிருந்த கொலைகளை திட்டமிட்ட சிங்களப் பொலிசாரின் படுகொலையே என நம்பினர். வெடிச்சத்தங்களும் மகாநாட்டில் ஏற்பட்ட குழப்பமும் கொலை செய்யப்பட்ட 9 உடல்கள் அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி இறக்கப்பட்டமையும் தம் கண்ணெதிரே நடந்தேறியமையால் இப்படுகொலையானது சிங்கள அரசின் திட்டமிட்ட படுகொலையென்றே அவர்களை நம்பவைத்தது.

தப்பிப் பிழைத்து கிழக்கு மாகாணத்துக்கு வந்த சேர்ந்த அவர்கள் தாம் கொண்டுவந்த செய்திகளை அங்கே பரப்பினர். “கண்ணால் கண்டதும் பொய்” என்பதை அவ்வேளை கிழக்கிலங்கை மக்களிடத்தில் காலம் ஒருதரம் நிரூபணமாக்கிச் சென்றது.

இந்த தமிழாராட்சி மாநாட்டு அனர்த்தங்களுக்கு பின்பு நடந்த முக்கியமாதொரு சம்பவம் வடக்கு கிழக்கு இளைஞர்களுக்கு வன்முறை மீதான விருப்பத்தை மென்மேலும் அதிகரிக்க ஏதுவாக்கிற்று பொன் சிவகுமாரன் யாழ்பாணத்தில் நடந்த இருவேறு குண்டுத்தாக்குதல் கொலை முயற்சிகளுக்காக ஏற்கனவே தேடப்பட்டு வந்தவர் என்பதை மேலே கண்டோம்.

1974 ஆம் ஆண்டு ஆனி மாதம் 5 ஆம் திகதி கோப்பாய் வங்கியயொன்றில் பொதுமக்களின் நகைகளை கொள்ளையிட முயற்சிக்கையில் வங்கி ஊழியர்களாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பாலும் பொலிசாரால் வளைத்துப் பிடிக்கப்பட்டார். அக்கைதின் போது “சயனைட்” எனும் விசமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

இந்த தற்கொலை தமிழர்விடுதலைக் கூட்டணியினரால் பரபரப்பாக்கப்பட்டு வீரச்சாவாக வர்ணிக்கப்பட்டது. அதனூடாக ஒருவித கீரோயிச மனப்பாங்கின் மீதான பற்றுதலை இளைஞர்களுக்கு ஊட்டிவிடுவதில் கூட்டணிப் பேச்சாளர்கள் வெற்றியடைந்தனர்.

அஞ்சலிக் கூட்டங்களின் போது பொதுமக்களையும் மாணவர்களையும் அணிதிரட்டிய த.வி.கூட்டணியினரும் அவர்களது கிளையினரான தமிழ் இளைஞர் பேரவையினரும் இப்படி ஆயிரம் ஆயிரம் சிவகுமாரன்கள் உருவாக வேண்டும் என்று வன்முறைக்கு வித்திட்டனர்.

மறுபுறம் இதுபோன்ற பல நிகழ்வுகளில் முக்கிய பேச்சாளராகிய அமிர்தலிங்கம் தன்னைத்தானே தமிழீழத்தின் தளபதியாக வரித்துக்கொண்டதன் ஊடாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை தனக்கானதாக மென்மேலும் உறுதி செய்து கொண்டார்.

தொடரும்…

read more...