Thursday, 19 January 2012

உயிருக்ரைக் காப்பாற்ற கைகொடுங்கள்



நண்பர்களே ஒரு மாணவனின் உயிரைக் காப்பாற்ற உதவுங்கள் என்று இரண்டு பதிவுகள் போட்டும் சிலர் உதவுவதாக சொல்லி இருக்கின்றனர். இருந்தும் எந்த உதவியும் இதுவரை கிடைக்கவில்லை விரைவில் குறித்த மாணவனுக்கு சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றார். முந்திய பதிவை அப்படியே தருகிறேன்.

வலைப்பதிவு எழுதும் நாம் எழுத்துக்களுடன் நின்று விடாது சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும். சில பதிவர்கள் இதனைச் செய்து வருகின்றனர். நானும் சமூக சேவை செய்து வருபவன் எனும் வகையில் உங்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். 

 தற்போது உயர்தரம் படித்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவனுக்கு இருதய நோய் இருக்கின்றது. உடனடியாக இருதய சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றார். உடனடியாக சத்திரசிகிச்சை செய்யாவிட்டால் உயிராபத்து ஏற்படும் நிலையில் இருக்கின்றார். இருதய சத்திர சிகிச்சைக்காக இலங்கை ரூபா ஐந்து இலடசத்திற்குமேல் செலவாகும்.


ஆனாலும் அம்மாணவனின் குடும்பம் மிகவும் வறிய நிலையில் இருக்கின்றது. நல்ல எண்ணம் கொண்டவர்கள் இவரின் உயிரைக் காக்க உதவி செய்யுங்கள். இவர் மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்தவர் பெயர் இராஜேந்திரம் நிமல்ராஜ் மட்களுதாவளை மகா வித்தியாலயத்தில் உயர்தரம் படிக்கின்றார். மாணவனின் உயிரைக்காக்க உதவ நினைப்பவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் நேரடியாக குறித்த மாணவனுடன் தொடர்புபடுத்தி விடுகிறேன்.

எனது மின்னஞ்சல் :-shanthruslbc@gmail.com
 தொலைபேசி இலக்கம் : - 0094778548295







read more...

Sunday, 15 January 2012

சிவசேனா கட்சியினர் உலகப் பயங்கரவாதிகளா?

அண்மையில்   கேரளா நாட்டின் திருவானந்தபுரம் பத்மநாபா சுவாமி கோயில் முன்றலில் ஆரம்பித்த சமாதான யாத்திரையானது 69 கிலோ மீற்றர் தூரம் வரை சென்றது. இவ்விடயம் தொடர்பா சில இணையத்தளங்களில் ஆசாமி யோகேஸ்வரன் சிவசேனா பயங்கரவாதிகளுடன் கூட்டணி எனும் தலைப்பில் செய்திகள் வெளியாகி இருந்தன. எனக்கும் மின்னஞ்சல் வந்திருந்தது அதனை அப்படியே தருகின்றேன். 


கேரளா நாட்டு மாநில சிவசேனை அமைப்பின் தலைவர் பூஜ்ஜியம் புவனேந்திரா ஜு அவர்களும் தமிழ் நாட்டு மாநில சிவசேனை அமைப்பு தலைவர் உயர் நீதிமன்ற சட்டத்தரணி எஸ்.இராஜேஸ்வரன் அவர்களும் இணைந்து இரு மாநிலங்களின் சிவசேனை அமைப்புக்களை ஒன்றிணைத்து கேரளா நாட்டின் திருவானந்தபுரம் பத்மநாபா சுவாமி கோயில் முன்றலில் ஆரம்பித்த சமாதான யாத்திரையானது 69 கிலோ மீற்றர் தூரம் வரை சென்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தலைமை தாங்கிய உலக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அரசியல் பிரதிநிதியும் கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் மட்டக்களப்பு மாவட்;ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டு காவிக் கொடியை அசைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன் தொடர்ந்து இரு மாநிலங்களிலும் வழங்கப்பட்ட வரவேற்புகளை ஏற்று சமாதான யாத்திரை முடியும் வரை விஜயத்தை மேற்கொண்டார்.

இவ் நிகழ்வில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கேரளா தமிழ் நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் இருந்து கலந்து கொண்டதுடன் ஆயிரக் கணக்கான வாகனங்களும் தொடரணியாக சென்றன 

இந்தியாவில் இடம் பெறும் அனைத்து இந்து முஸ்லிம் கலவரங்களின் சூத்திரதரிகளான  விஷ்வ ஹிந்து பரிஷத் ,சிவசேனை அமைப்புக்கள் திராவிட எதிர்ப்பிலும் முன்னணி வகிப்பன. இந்தியாவை ஆக்கிரமித்த ஆரியர்களின் அரசியல் வாரிசுகளான இவர்கள் இந்தியாவிலுள்ள திராவிடர்களின் முதல் எதிரிகளாவர்.இந்து சமயம் என்கின்ற போர்வையில் இந்தியாவின் பூர்வீக குடிகளை அடிமைகளாக்கி சாதி பிரிவினைகளை உருவாக்கிய ஆரியர்களின் இன்றயதொடர்ச்சியே இந்த சிவசேனை கூட்டமாகும் .மகாத்மா காந்தியை சுட்ட இந்த சிவசேனை கூட்டத்தினர் பல வருடங்களாக இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தனர் இந்தியாவின் பல்லின கலாசாரத்தை ஏற்றுக்கொள்ளாத இந்த இந்துத்துவவாதிகள் இந்து மதம் எனும் போர்வையில்  இந்தியாவிலுள்ள பலவித வழிபட்டு முறைகளையும் உட்கொண்டு செரித்தவர்கள் 

.பாம்பையும்,பார்ப்பானையும்கண்டால் பார்ப்பனை முதலின் அடி என்று உரத்து சொன்ன தந்தை பெரியார் இவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் .அந்த பெரியாரின் அரசியல் ,கலக  செயல்பாடுகள் நிறைந்திருந்தமை காரணமாகவே இன்றுவரை இந்த இந்துத்துவ பயங்கரவாதிகளால் தமிழ் நாட்டில் கால் ஊன்ற முடியவில்லை ஆயிரம் விமர்சனங்கள் இருந்த போதும் தமிழ் நாட்டை மாறி மாறி திராவிட கட்சிகளே ஆண்டு வர முடிகின்றது.தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக இரண்டற கலந்து வள முடிகின்றது .இந்தியாவில் இருக்கின்ற எந்த ஒரு அரசியல் முற்போக்கு சக்திகளும் இந்த  விஷ்வ ஹிந்து பரிஷத் ,சிவசேனை அமைப்புகளுடன் ஒட்டி உறவடுவதில்லை உழைக்கும் மக்களுக்காக போராடும் எந்த ஒரு இடது சாரி கட்சிகளோ கம்யுனிஸவாதிகளோ இவர்கள் பக்கமே செல்வதில்லை .ஏன்அதிகம் வேண்டாம் புலிகளின் விசுவாசிகளான நெடுமாறனோ வீரமணியோ திருமாவளவனோ  விடுதலை இராசெந்திரனோ ,தியாகுவோ இவர்களில் ஒருவர்கூட இந்த இந்து பாசிச கும்பலின் பக்கம் தலை வைத்தே படுப்பதில்லை .இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இடம்பெறும் தேசிய இன போராட்ட அமைப்புக்களோ .தலித் போராளிகளோ இந்த விஷ்வ ஹிந்து பரிஷத் ,சிவசேனை கும்பலை எதிரிகளாகவே கணிப்பதுண்டு .ஆனால்அரசியலில் வலதோ இடதோ ஏதும் அறியாத தற்குறி பிரபாகரனால் வளர்க்கப்பட்ட கூட்டமைப்பினர் இன்று விஷ்வ ஹிந்து பரிஷத் கும்பலுடன் உறவு தேடி ஆசாமி யோகேஸ்வரனை தூது அனுப்பியுள்ளனர் 

.கிழக்கு மாகாணத்தில் மீண்டும் ஒரு முறை இனகலவரங்களை துண்டி விடும் ஆலோசனைகளும் பொருளாதார உதவிகளும் கூட இந்த இந்து பார்ப்பனிய பாசிச கும்பலால் யோகேஸ்வரன் எம்பி ஊடாக கூட்டமைப்பினருக்கு  வழங்கபடலாம்.
கு .சாமித்தம்பி 
read more...

பொங்கலோ பொங்கல்

அனைத்து நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
free ecards

free ecards
read more...

Saturday, 14 January 2012

இலங்கை முஸ்லிம்கள் உண்மையான முஸ்லிம்களா? அல்லது தமிழர்களா?

இன்று மட்டக்களப்பில் தமிழர் பிரதேசங்களில் முஸ்லிம்கள் காணி பிடித்தல் சிலை உடைப்பு என்று பல பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கிழக்கிலே குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக முஸ்லிம்கள் வேண்டுமென்றே சில அரசியல்வாதிகளின் பின்னணியில் தமிழர் பிரதேச நிலங்களை பிடித்து  வருகின்றனர். இவ்வாறு தொடர்ச்சியாக பல விடயங்கள் இடம்பெற்று வருகின்றன.

ஆனால் இலங்கையில் இருக்கும் முஸ்லிம்கள் உண்மையில் முஸ்லிம்களா அல்லது தமிழர்களா? 


மட்டக்களப்பில் இன்றுள்ள தமிழர்களில் பெருபான்மையாக இருப்பவர்கள் முற்குகர்களேயாகும். இவர்கள் கூட மட்டக்களப்பின் முற்குடிகள் அல்ல. அதற்குமுன்பே இங்கே வாழ்ந்திருக்கக் கூடிய திமிலர்கள் எனும் மீன்பிடியை தொழிலாக கொண்டவர்கள் துரத்தியடித்த பின்னே இவர்கள் இங்கு குடியேறியுள்ளனர். இலங்கையின் பூர்வீக குடிகளில் ஒன்றான இயக்கர்களும் மீன்பிடித்தலையே தொழிலாக கொண்டிருந்தனர் என்பதுவும் இங்கே நோக்கற்பாலது.
எனவே காலப்போக்கில் இந்த இயக்கர்களே திமிலர் என அடையாளப்பட்டிருந்தல் கூடும். திமிலதீவு, வலையிறவு போன்ற மட்டக்களப்பு வாவியின் கரையோர கிராமங்கள் இந்த திமிலர்களின் அடையாளங்கள் ஆகும். இவர்களுடன் அடிக்கடி புதிதாக குடியேறிய முற்குகர்கள் கொண்ட சண்டையானது இறுதியில் அவ்வேளை வியாபார நிமித்தம் ஆப்கானிஸ்தான், துருக்கி போன்றவற்றிருந்து இங்கு வந்து சென்ற பட்டாணிகள் உதவியுடனேயே முடிவுக்கு வந்துள்ளது.
திமிலர்களால் முற்குகர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இவர்களே தடுத்து நிறுத்தியுள்ளனர்.மட்டக்களப்பின் வடக்கே அமைந்துள்ள ‘ஏறாவூர்’ எனுமிடம் திமிலர்கள் ஊருக்குள் நுழையாமல் ஏற்படுத்தப்பட்ட தடை குடியிருப்பு ஆகும். அதாவது முக்குகர்கள் தமது சகோதரிகளை பட்டாணிகளுக்கு மணம் முடித்து கொடுத்து காவல் காப்பதற்காக ஏறாவூரில் இருத்தினராம். இதைதாண்டி திமிலர்கள் உள்நுழைய கூடாது என்பதற்காக ‘ஏறாவவூர்’ என அழைக்கப்படலாயிற்று என விபரிக்கிறது மட்டக்களப்பு மான்மீக கல்வெட்டுபாடல்.
இங்கு முக்குகர்களின் குடியேற்றம் என்று ஆரம்பித்ததோ அன்றே மட்டக்களப்பு பட்டாணியர்களின் (இன்றைய முஸ்லிம்களின் மூதாதையர்) வரவும் ஆரம்பித்திருக்கிறது. அவர்கள் மட்டக்களப்பின் காவர்களாக தமது உதிரத்தை சிந்திய மண் இது. ழூதிமிலரை துரத்தி சென்று திரும்பிவரும்போது பலரும் சந்தித்த வெளி சந்திவெளி எனவும் எதிரியை கொன்ற இடம் சத்துருகொன்றான் எனவும், சண்டையின் பின் வந்தேறிய (ஆறிய) இடம் வந்தாறுமூலை எனவும் மட்டக்களப்பில் முற்குகர்களும் பட்டாணியர்களும் நிலைகொண்டு வாழ்வதற்காக நடத்தியபோரின் வரலாற்றுத் தடயங்கள் கிராமங்களின் பெயர்களாகி இன்றும் காணப்படுகிறது.
அதுமட்டுமன்றி இந்த பட்டாணியர்கள் மணமுடித்துகொண்ட முற்குல பெண்களினு காவப்பட்டு வரும் குடிப்பெயர்கள் இன்று வரை மட்டக்களப்பு முஸ்லிம்களிடையேயும் காணப்படுவதும் மட்டக்களப்பு தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரே தாயின் பிள்ளைகள் என்பதை சொல்லி நிற்கிறது.
மட்டக்களப்பானது தமிழர்களுக்கு தன்னோடுள்ள பாத்தியதைக்கு என்ன எல்லையை கொண்டுள்ளதோ அந்த எல்லைவரை இன்றைய முஸ்லிம்களுக்கு மட்டக்களப்பு ீதுள்ள பாத்தியதையும் செல்லும் என்பதை இங்கே நாம் காண தவற கூடாது.இன்றைய உலகில் உள்ள மிக தொன்மையான ப10கோள வரை படங்களுள் முக்கியமானதொன்று தொலமி வரைந்த படமாகும். இதில் இலங்கை குறிப்பிடப்பட்டுள்ளதோடு கி.மு.147 வரையப்பட்ட இப்படத்தில் கல்முனை உள்ள இடம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்முனை துறைமுகத்தை அன்றைய கடலோடி வியாபாரிகள் தரிசித்துள்ளனர் என்பதற்கான மிகத் தொன்மையான ஆதாரமாகும். அப்போது வந்த பாரசீக வியாபாரிகளே இலங்கைக்கு இந்த முகவரியை தேடி தந்தவர்கள். .
வியாபார நோக்கத்துடன் வந்த பட்டாணிகள் தமிழ் பெண்களை கல்யாணம் முடித்திருக்கின்றனர் என்பதனை வரலாறு சொல்கின்றது. பட்டாணி ஆணுக்கும் தமிழ் பெண்ணுக்கும் பிறந்த சந்ததி முஸ்லிம் சந்ததியா தமிழ் சந்ததியா? 

read more...

Thursday, 12 January 2012

சுவாமி விவேகானந்தருடைய கை, கால்கள் உடைக்கப்பட்ட வரலாறு



கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் உறவை சீர் குலைத்து அரசியல் நடாத்த சில தீய சக்திகள் செயற்பட்டு வருகின்றனர். வேண்டுமென்றே கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் காணிகள் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒரு சிலரின் பின்னணியில் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் தமிழ் மக்களை சீண்டிப் பார்க்க நினைக்கின்ற பல கைங்கரியங்களையும் சில முஸ்லிம்கள் செய்து வருகின்றனர். உதாரணமாக காத்தான்குடி பிரதேச குப்பைகளை வேண்டுமென்று ஆரையம்பதியில் தேசிய கல்வியற் கல்லூரிக்கு பக்கத்தில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் கொட்டப்பட்ட விடயங்களைக் குறிப்பிடலாம். பல விடயங்களை முன்னர் சுட்டிக்காட்டியிருந்தேன்.

கிழக்கு மாகாணம் துரிதமாக அபிவிருத்தி அடைந்து வரும் நிலையில் பிரதான வீதியும் அழகாக வடிவமைக்கப்பட்டு வருவது யாவரும் அறிவர். அதன் ஒரு கட்டமாக அண்மையில் காத்தான்குடி ஆரையம்பதி எல்லையில் சுவாமி விவேகானந்தருடைய அழகிய சிலை ஒன்று வைக்கப்பட்டது. அன்று இரவோடு இரவாக அச்சிலை உடைக்கப்பட்டிருக்கின்றது. இச் சிலை உடைப்பின் நோக்கம் என்ன? என்ன காரணத்துக்காக உடைக்கப்பட்டன.

காத்தான்குடி ஆரையம்பதி எல்லை நிர்ணயம் தொடர்பில் பல காலமாக பிரச்சினைகள் இடம்பெற்று வருவது யாவரும் அறிவர். முஸ்லிம்கள் ஆரையம்பதியின் தமிழர் காணிகளை பலவந்தமாக அபகரித்ததன் காரணமாகவும் எல்லையை நிர்ணயிப்பதில் பிரச்சினைகள் இருந்து வந்தன. ஆனாலும் தற்போது எல்லை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது. அதன்பிரகாரம் காத்தான்குடி ஆரையம்பதி எல்லையில் இச்சிலை வைக்கப்பட்டது.

இரவோடு இரவாக இச்சிலை உடைக்கப்பட்டிருப்பது தமிழ் மக்கள் மட்டுமல்ல ஒவ்வொரு இந்துவும் கவலைப்படவேண்டிய விடயம். சுவாமி விவேகானந்தர் யார் அவரின் கருத்துக்கள் போதனைகளை அறியாத காட்டுமிராண்டிகளின் ஒரு செயலாகவே இச் செயல் இருக்கின்றது. சிலையை உடைக்கும்போது நேரில் கண்டவர் முஸ்லிம்களால்தான் உடைக்கப்பட்டதை உறுதிப்படுத்தி இருக்கின்றார். உடைத்தவர்களிடம் ஒன்றைக் கேட்கின்றேன் இதுதான் மதத்தின் தர்மமா? 

இன்று உலகமே போற்றிக்கொண்டிருக்கின்ற ஒரு மகானுடைய சிலையை உடைக்கும் அழவிற்கு கிழ்த்தரமானவர்களாக நீங்கள் இருப்பதையிட்டு நான் கவலைப்படுகின்றேன். இப்படிப்பட்ட கீழ்த்தரமானவர்கள் இருக்கும் தேசத்தில் நான் இருக்கின்றேனே என்பதனை நினைத்து. அன்று சிகாகோ நகரமே சுவாமி விவேகானந்தருக்கு தலை வணங்கியது. உலகமே போற்றும் உத்தமரின் கை கால்களை உடைக்கும் நீங்கள் மனிதர்களா? 

இச் சிலை உடைப்பு விடையத்தில் ஊடகங்களும் இந்து அமைப்புக்களும் அறிக்கை மன்னர்களும் அடக்கி வாசிப்பது ஏன்? சிலை உடைக்கப்பட்டது மட்டக்களப்பில் என்பதனாலா? அன்று யாழ்ப்பாணத்தில் சிலை உடைக்கப்பட்டபோது பொங்கி எழுந்தீர்கள். திருகோணமலையில் தந்தை செல்வாவின் சிலை உடைக்கப்பட்டபோது போங்கி எழுந்தீர்கள். மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்தரின் சிலை உடைக்கப்பட்டபோது மட்டும் அடக்கி வாசிப்பது ஏன்?

இப்பதிவிலும் பிரதேசவாதம் பேசுகின்றேன் என்று சொன்னால் அது உங்கள் முட்டாள் தனம். என் மன ஆதங்கத்தை எழுதுகிறேன். சிலை உடைக்கப்பட்ட அன்றிலிருந்து இன்றுவரை மனதில் நிம்மதியில்லை நான் நேசிக்கும் ஒரு மகானின் நிலை இந்த அளவிற்கு வந்திருக்கின்றதே. 

அன்று யாழ்ப்பாணத்தில் சிலை உடைக்கப்பட்டபோது மட்டக்களப்பிலிருந்து எத்தனையோ கண்டன அறிக்கைகள். ஊடகங்கள் அனைத்தும் தொடர்ந்து சிலை உடைப்பு தொடர்பாக கண்டனங்களையும் செய்திகளையும் வெளியிட்டன. அதே போன்று திருகோணமலையில் தந்தை செல்வாவின் சிலை உடைக்கப்பட்டபோது மட்டக்களப்பிலிருந்து பல கண்டன அறிக்கைகள் ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டன. அவைகளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இச் சிலை உடைப்பிற்கு ஊடகங்களும் அமைப்புக்களும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை ஏன்?

முன்னர் உடைக்கப்பட்ட சிலைக்குரியவர்களை விட சுவாமி விவேகானந்தர் முக்கியத்துவமற்றவராக நீங்கள் கருதுகின்றீர்களா? இச் சிலை உடைப்பு விடயத்தில் இந்து அமைப்புக்கள் மெளனம் சாதிப்பது ஏன்? 








read more...

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்


வணக்கம் நண்பர்களே..

இன்று முதல் நானும் .com க்கு மாறுகின்றேன். blogspot ல் இருந்து எதனையோ சாதிச்ச மாதிரி இப்போ .com க்கு மாறிஇருக்கிறாரு என்று நீங்க சொல்வது புரிகிறது.

இன்று முதல் www.shanthru.com

இதுவரை எதையும் சாதிக்கவில்லை இனிமேலாவது எதையாவது சாதிக்க வேணும் என்று நினைக்கிறன். எதனைச் சாதிப்பது? 

சமூகம் சார்ந்து சீரியசாக எழுதினால் எவரும் நம்ம வலைப்பதிவு பக்கம் தலை வைத்தும் படுக்கமாட்டார்கள். சரி மொக்கைப் பதிவுகள் எழுதுவம் என்று எழுதினால் சிலர் திட்டுகிறார்கள் உங்களிடமிருந்து இந்தப்பதிவை எதிர்பார்க்கவில்லை என்று சொல்கின்றனர். யாரையாவது பிழை பிடித்து எழுதினால் கூட்டத்தோட வந்து தாக்குறாங்க இப்படி இருந்த எப்படி நான் பிரபலமாகிறது.
இனிமேலாவது உருப்படியா எழுத ஏதாவது ஐடியா (இங்கிலிசு வார்த்தை வருது) சொல்லுங்க

நன்றிகள் - www.battinews.com
read more...

Wednesday, 11 January 2012

ஊடக அதர்மம் 02


ஊடக அதர்மம் - 01 பார்க்க 


தமிழ் மொழியின் சக்தி என்று தமக்குத் தானே மகுடம் சூட்டும் சக்தி. தமிழ் மொழிக்காக என்ன செய்கிறது. தமிழை கொச்சைப் படுத்துவதைத் தவிர? கலைஞர்களையும் கலைத்துறையையும் வளர்க்கின்றனராம். எங்கே வளர்க்கின்றனர் என்று சொல்லுங்கள். வெறுமனே இந்தியத் தொலைக்காட்சிகளின் தொடர்நாடகங்களை பெற்று இரவு பகலாக அத் தொடர்களைப் போட்டு எமது சமூகத்தின் கல்வியையும் இல்லாதொழிக்கின்றனர். 

பல நிகழ்ச்சிகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கின்றனர். இலங்கையில் நல்ல கலைஞர்கள் இல்லையா? படைப்பாளிகள் இல்லயைா? இலங்கையில் நல்ல கலைஞர்கள் படைப்பாளிகள் இருக்கின்றனர். இந்திய தயாரிப்பு நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்படும் பணத்தில் சிறு தொகையினை கொடுத்தாலே போதும் நல்ல நிகழ்ச்சிகளை தரக்கூடிய சிறந்த கலைஞர்கள் இருக்கின்றனர் இலங்கையில். சக்திக்கு இது தெரியாமல் இல்லை அவர்களின் நோக்கம் இலங்கையில் இருக்கின்ற தமிழர்களின் கலை கலாசாரங்களை இல்லாமல் செய்வதுதான். 

ஏன் சக்தி சுப்பர் ஸ்ரார் மூலம் பல கலைஞர்களை உருவாக்குகின்றார்கள்தானே என்று சொல்கின்றீர்களா? இந்நிகழ்ச்சி மூலம் பெருந்தொகைப் பணத்தை SMS மூலம் பெற்றுக் கொள்ளும் நோக்குடன் செய்யப்படும் நிகழ்ச்சிதான் இது கலைஞர்களை உருவாக்க வேண்டும் எனும் நோக்குடன் செய்யப்படும் நிகழ்ச்சி அல்ல. இந் நிகழ்ச்சியில் இடம்பெறும் தில்லுமுல்லுகள் ஏராளம்.



SMS நிகழ்ச்சிகளே ஏராளம் நேயர்களின் கண்ணைப் பொத்தி அடிக்கும் SMS நிகழ்ச்சிகள் ஒரு SMS அனுப்பிப்பார்த்தால் தெரியும் ஒரு SMS க்கு எவ்வளவு பணம் வெட்டுகிறார்கள் என்பது. 

இது ஒரு புறமிருக்க சக்தியின் செய்திப் பிரிவு லூசுத் தனமாகச் செயற்படுவதுதான் வேடிக்கை. தங்களுக்கு யாரைப் பிடிக்கவில்லையோ அவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக செய்திகளை வெளியிடல். செய்திகளில் கேலித்தனமாக செய்திகளை வெளியிடல். உதாரணமாக  இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை தலைவர் பதவியிலிருந்து துரத்துவதற்கு சக்தி தொலைக்காட்சி எவ்வாறெல்லாம் செயற்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். 30 நிமிட செய்தியில் 20 நிமிட செய்தி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான செய்தியாகவே இருக்கும். 

அதே போன்றுதான் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களை சக்தி குழுவினருக்கு கண்ணில் காட்ட முடியாது. காரணம் சந்திரகாந்தன் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்தவர் என்பதனால் அல்ல. சக்தி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் எமது சமூகத்தை வேறொரு திசைக்கு கொண்டு செல்கின்றன என்று சக்தி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் தொடர்பில் கருத்து தெரிவித்ததுதான் காரணம்.

இது ஒரு புறமிருக்க இவர்களின் செயல்கள் வடி கட்டிய முட்டாள்களின் செயல்கள் போல் அமைந்திருக்கின்றன. முதலமைச்சரால் ஏற்பாடு செய்யப்படுகின்ற கலந்து கொள்கின்ற நிகழ்ச்சிகளுக்கு சக்தியின் ஊடகவியலாளர்கள் செல்வார்கள். செய்தி போடுவார்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சி இடம்பெற்றது என்று மட்டும் சொல்வார்கள். யார் ஏற்பாடு செய்தது என்பதோ முதலமைச்சர் கலந்து கொண்டார் என்பதனையே சொல்லமாட்டார்கள். முதலமைச்சரை காட்டாது வீடியோவை காட்டுவார்கள். இதுதான் இவர்களின் ஊடக அதர்மம்.

இன்னுமொரு விடயம் சக்தி செய்திகளில் காட்டபபடும் சக்தியின் தேடல். சக்தியின் தேடல்  மக்களை முட்டாள்களாகவே நினைக்கும் சக்தியின் மற்றுமொரு முயற்சி. எந்த விடயத்துக்கு நிதி ஒதுக்கப்படுகின்றது என்பதனை அவதானித்து அறிந்து செயற்படுவது. உதாரணமாக ஒரு வீதி மோசமான நிலையில் இருந்தால் அவ் வீதி திருத்தப்பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டு விட்டதாக அறிந்தவுடன் சக்தி குழுவினர் கமராவை தூக்கிக் கொண்டு குறித்த வீதிக்குச் சென்று மக்களையும் வீதிகளையும் பேட்டி எடுத்து போட்டு விடுவார்கள். செய்தியின் முடிவில் குறித்த அதிகாரியின் கவனத்திற்கு என்றும் போட்டுவிடுவார்கள். 

உண்மையில் பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது குறித்த வீதியின் திருத்தப்பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டவிடயம் அறிந்து இவர்கள் நாடகம் ஆடுகின்றனர் என்பது தெரியாது. திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டதும் குறித்த மக்களைச் சந்தித்து எங்களால்தான் இது நடக்கின்றது என்று சொல்வார்கள் திருத்தப்பணிகளையும் வீடியோ எடுத்து எங்களால்தான் சக்தியின் தேடலால்தான் வேலைகள் நடக்கின்றது என்று காட்டிக்  கொள்வார்கள். சக்தியின் தேடலில் வரும் ஒவ்வொரு விடயமும் இவ்வாறுதான் நடக்கின்றது. 

தொடரும்
read more...

Monday, 9 January 2012

கிழக்கு மாகாண வலைப்பதிவர்கள் எழுத்தாளர்கள் சந்திப்புக்கான அவசியம் என்ன?


கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற வலைப்பதிவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சந்திப்பு ஒன்று மட்டக்களப்பில் இடம்பெற இருக்கின்றது என்று பதிவு போட்டதும் பலரும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இச் சந்திப்புத் தொடர்பான இன்னும்பல விடயங்களை இப் பதிவினூடாக தருகின்றேன்.

கிழக்கு மாகாணத்தில் அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவர் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது ஆசை . காரணம் கிழக்கு மாகாணத்திலிருந்து பதிவு எழுதுபவர்கள் மிக மிகக் குறைவு இதற்குக் காரணம் வலைப்பதிவு தொடர்பாக பலருக்கு தெரியாது அல்லது வலைப்பதிவு எழுதுவது தொடர்பாக போதிய அறிவு இன்மை. வலைப்பதிவர் சந்திப்பொன்றை செய்கின்றபோது இன்னும் பலரை பதிவுலகத்திற்குள் உள்வாங்கலாம் என்பது என் நோக்கம்.

இன்று பலர் கிழக்கு மாகாணத்தில் வலைப்பதிவெழுதுகின்றனர். ஆனாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே வெளி உலகிற்கு தெரியும்படி இருக்கின்றனர். இவ்வாறான சந்திப்புக்கள் மூலம் அவர்களை  வெளிக்கொண்டு வரமுடியும். அதிகமான பதிவர்கள் வெளி உலகிற்கு தெரியாமல் இருப்பதற்குக் காரணம் வலைப்பதிவு மற்றும் தொழிநுட்பங்கள் தொடர்பான போதிய அறிவின்மையாகும். பலருக்கு திரட்டிகளில் இணைக்கக்கூட தெரியாது. 

நான் பல புதிய பதிவர்களை உருவாக்கியிருக்கின்றேன் அவர்கள் இடைநடுவில் பதிவெழுதாமல் விடவேண்டிய நிலையில் இருக்கின்றனர். பலருக்கு எழுதவேண்டும் என்ற ஆர்வம் இருக்கின்றது. ஆனாலும் பதிவிடுதல் சார்ந்த தொழிநுட்ப அறிவு இன்மையால் அக்கறை இல்லாதவர்களாக இருக்கின்றனர்.

அடுத்து கிழக்கு மாகாணத்தில் அதிகமான எழுத்தாளர்கள் கலைஞர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு தமது படைப்புக்களை இணையத்தில் பகிர்வது தொடர்பாக எந்தவித அறிவுமற்றவர்களாக பலர் இருக்கின்றனர். கிழக்கிலே இருக்கின்ற வலைப்பதிவர்களையும் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் ஒன்று திரட்டி  சந்திப்பொன்றை ஏற்பாடு செய்வதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் இணைய எழுத்தாளர்களை அதிகரிக்க முடியும்.

கிழக்கு மாகாணம் என்ற வரையறை எதற்கு?

மட்டக்களப்பில் பதிவர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்ய வேண்டுமென்பது எனது அவாவாக இருந்தது. கிழக்கு மாகாணத்தில் வலைப்பதிவு எழுதுபவர்கள் மிகக் குறைவு பதிவர் சந்திப்புடனான கருத்தரங்கு ஒன்றினை மட்டக்களப்பில் செய்யலாமா என்று இலங்கையில் இருக்கின்ற சில பதிவர்களிடம் ஆலோசனை கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன் ஒரிரு பதிவர்கள் பதில் அனுப்பியிருந்தனர் நான் எதிர்பார்த்தவர்கள் பதில் அனுப்பவில்லை.

இலங்கை வலைப்பதிவர் குழுமத்தில் விரைவில் பதிவர் சந்திப்பொன்றை நடாத்துவது நல்லதென கேட்டிருந்தேன்  குழுமத்தில் இருப்பவர்களில் பலர் பதில் போடவில்ல. ஒரு சிலரது கருத்துக்களிலும் பதிவர் சந்திப்பு சாத்தியமற்றது என்பது போல் இருந்ததனை உணர்ந்தேன். 

உடனடியாக கிழக்கிலே இருந்து பதிவெழுதும் மற்றும் இணைய எழுத்தாளர்கள் ஒரு சிலரிடம் மட்டக்களப்பில் பதிவர் சந்திப்பினை நடாத்துவது தொடர்பாக பேசினேன் அவர்கள் பூரண ஆதரவு தெரிவித்ததுடன் கட்டாயம் செய்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். மட்டக்களப்பில் பதிவர் சந்திப்பை செய்வோமா என்று நான் முதலாவதாக கேட்ட மட்டக்களப்பு பதிவர் சொன்ன பதில் இதற்குமுதல் பதிவர் சந்திப்பில் எதனைச் சாதித்தீர்கள் என்பதாகும். 

அதே போன்று கிழக்கு மாகாண செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு செய்திகள் இணையத்தள நிர்வாக நண்பருடன் தொடர்பு கொண்டு பதிவர் சந்திப்பு தொடர்பாக பேசியபோது அவர் தனது பூரண ஆதரவினையும் ஏற்பாடுகளை செய்வதற்கு தானும் முன்வருவதாக சொன்னார். பின்னர் பிரபாவுடன் தொடர்பு கொண்டேன் அவரும் பச்சைக்கொடி காட்டினார். 

கிழக்கு மாகாணத்திலே இருக்கின்ற பதிவர்கள் எழுத்தாளர்கள் கலைஞர்கள் விபரங்களை திரட்டிவருகின்றோம். கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற பதிவர்கள் எழுத்தாளர்கள் கலைஞர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.

இச் சந்திப்பானது வெறுமனே சந்திப்பாக மாத்திரம் அமையாது. பயனுள்ள விதத்திலே வடிவமைக்கப்பட வேண்டும் என்பதில் நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இச் சந்திப்பின் நோக்கம் பல புதிய பதிவர்களை பதிவுலகிற்குள் உள்வாங்கிக் கொள்வதாகும். எனவே உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கின்றோம்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பதிவர்கள் மற்றும் எழுத்தாளர்கள்  கலைஞர்கள் தொடர்பு கொள்ளுங்கள் (வெளிநாட்டில் உள்ளவர்களும்)

தொடர்புகளுக்கு :- 

info@battinews.com
shanthruslbc@gmail.com

read more...

ஊடக அதர்மம் - 01


ஊடகங்கங்கள் பக்கம்சாராது நடுநிலையாக செயற்பட வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. ஆனாலும் இன்று இலங்கையைப் பொறுத்தவரை ஊடகங்கள் நடுநிலையுடன் செயற்படுகின்றனவா? என்றால் அது கேள்விக்குறிதான். இது ஒரு புறமிருக்க இலங்கையின் தமிழ் ஊடகங்கள் தமிழர்களை மூட்டாள்களாக நினைத்துக்கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயம். இலங்கையின் சில தமிழ் ஊடகங்கள் தமிழை வளர்ப்பதாக சொல்லிக்கொண்டு தமிழை அழிக்கும் கைங்கரியங்களை செய்து கொண்டு வருகின்றனர். இத் தொடர் மூலம் இலங்கையின் தமிழ் ஊடகங்கள் மக்களை மடையர்களாக நினைத்து செயற்படும் விடயங்களை உடனுக்குடன் சுட்டிக்காட்ட இருக்கின்றேன். 


சரி... ஊடகங்கங்களை பிழை பிடிக்க உனக்கு அருகதை இருக்கிறதா? தகுதி இருக்கிறதா என்று சில மேதாவிகள் கேட்பது புரிகிறது. நான் உங்கள் போல் பெரிய மனுஷன் இல்லதான். சாதாரண ஒரு மனிதனும் பிழை பிடிக்க முடியும். இருந்தாலும் இத் தொடரில் ஊடகத்துறையின் மறு பக்கங்களையும் புரட்டிப்போட இருப்பதனால் என்னைப் பற்றியும் சில விடயங்களைக் குறிப்பிடுகிறேன். காரணம் எதிர்காலத்தில் என்னுடன் சண்டை பிடிக்க இருப்பவர்களுக்கு அந்த நேரத்தில் சொல்ல வேண்டியதை இப்போதே சொல்கின்றேன்.


2004 ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராக காலடி எடுத்து வைத்தவன். எனக்கென ஒரு இரசிகர் கூட்டம் இருக்கின்றது. அதனைவிட இலங்கை மற்றும் சர்வதேச ஊடகங்கள் சிலவற்றின் ஊடகவியலாளனாக இருக்கின்றேன். இத் தொடர் எழுதுவதற்கு தகுதியானவன் என்று நினைக்கின்றேன். தகுதியற்றவன் என்று சொன்னால் அப்போது நிருபிக்கின்றேன். 


என்னுடைய வானொலி நிகழ்ச்சிகளை ஒருபோதும் நான் ஒலிப்பதிவு செய்யவில்லை. இருந்தாலும் எனது மடிக்கணிணியில் திறந்த வெளியில் வைத்து ஒலிப்பதிவு செய்யப்பட்ட எனது குரலை கேளுங்கள். நான் அறிவிப்பாளனாக இருப்பதற்கு தகுதியற்றவன்தானே? சில அறிவிப்பாளர்களின் மறு பக்கங்கள்கூட புரட்டப்பட இருக்கின்றது. அப்போது நீ அறிவிப்பாளனுக்கு தகுதியானவனா என்று கேட்காமல் இருப்பதற்காக இதனைக் கேளுங்கள்.


வெளிநாடுகளில் இருந்து வீர வசனம் பேசி மக்களை மீண்டும் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்ல வேண்டாம் by puthiyavidiyal
ஊடகங்களினால் தமிழ் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் அதே வேளை ஒரு சில ஊடகத்துறை சார்ந்தவர்கள் சமூகத்தை சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். எப்படி எல்லாம் சீரழிக்கின்றனர்? ஒரு சிலர் செய்யும் செயலால் ஒட்டுமொத்த அறிவிப்பாளர்களையும் சமூகம் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலை இருக்கின்றது. இவற்றை கண்டும் காணாதவர்களாக உயர் அதிகாரிகள் இருப்பதும் அவர்களை மட்டுமல்ல புதியவர்களையும் ஏன் என்பது தெரியவில்லை. 

இலங்கையின் தனியார் வானொலி தொலைக்காட்சிகள் தமிழர்களை முட்டாள்களாக நினைத்துக்கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழர்களுக்கு நாம் எதனைக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நிலையில் இருக்கின்றது. 

தமிழ் மொழியினை இல்லாதொழித்து தமிழர்களின் கலை கலாசாரங்களையும் குழி தோண்டிப் புதைக்கும் முயற்சியில் சக்தி தொலைக்காட்சி மற்றும் சக்திவானொலியும் செயற்பட்டு வருகின்றது. இவர்கள் தங்களுக்கு தங்களே கொடுத்திருக்கும் அடைமொழி தமிழ் மொழியின் சக்தி. தமிழ் மொழியின் சக்தியாக இருந்து இவர்கள் என்ன செய்கின்றனர்? தமிழ் மொழியை கொலை செய்து வருவதுடன் இலங்கையில் தமிழ் மொழி என்றொரு மொழி இல்லாமல் தமிழ் மொழியும் ஆங்கில மொழியும் கலந்த புதிய ஒரு மொழியை கொண்டுவரவும் தமிழர்களின் கலை கலாசார பாரம்பரியங்களை இல்லாதொழிக்கவும் பாரிய வேலைத்திட்டங்களை செய்து வருகின்றனர்.

இன்று சக்தி தொலைக்காட்சி மற்றும் சக்தி வானொலியில் கடமையாற்றும் எத்தனை அறிவிப்பாளர்களுக்கு அறிவிப்பாளருக்குரிய தகுதி இருக்கின்றது??????? எங்கள் வீட்டில் சக்தி தொலைக்காட்சி போட நான் தடை விதித்துவிட்டேன்  ஆனாலும் நான் இல்லாத நேரத்தில் போடுவார்கள். சக்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும்போது என்னை அறியாமலே கோபம் வருவதுண்டு. அவர்கள் பயன்படுத்துவது தமிழா???? பார்ப்பவர்களை அருவருப்பூட்டக்கூடியவிதமான பேச்சுகளும் நளினங்களும். 

இலங்கையில் திறமையானவர்கள் நன்கு தமிழல் பேசக்கூடியவர்கள் இல்லையா? அவர்கள் நிகழ்ச்சிகளுக்கு பெயரே ஆங்கிலத்தில்தானே வைத்திருக்கின்றனர். அப்படி இருக்கிறது நிலை ஆனால் தமிழ் மொழியின் சக்தி எனும் அடைமொழி வேறு. சில வேளைகளில் மாலை நேரங்களில் பார்ப்பதுண்டு ஒரு அறிவிப்பாளர்  நேயர்களோடு  பேசுவார் வாய்க்குள் ஏதோ வைத்தக்கொண்டு பேசுவதுபோன்று பேசுவார் என்ன பேசுகின்றார் என்பதே புரிவதில்லை. பதது வீதமான சொற்கள்கூட தமிழல் பயன்படுத்தமாட்டார். இப்படியானவர்களை எதற்காக சேர்த்தக் கொண்டனர்? 

அடுத்தடுத்த பதிவுகளில் அலசுவோம் அதுவரை இதனையும் பாருங்கள்.


தமிழ் மொழி தமிழ் மொழியாகவே இருக்கிறதா? தமிழா நீ பேசுவது தமிழா?


நான் இப்போது அடிக்கடி கேட்கும் பாடல் ஒன்று இது மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் கலைஞர் ஒருவரின் படைப்பு இது.



..
read more...

முஸ்லிம்களால் தமிழர்களுக்கு எதிராக கிழக்கில் தொடரும் அடாவடித்தனங்கள்

பாசிக்குடாவில் திட்டமிட்ட காணி அபகரிப்பு தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு

பாசிக்குடா பிரதேசத்தைச் சேர்ந்த விநாசித்தம்பி என்னும் தமிழ் நபருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணி இஸ்லாமியர் ஒருவரினால் அரசியல் பின்புலத்துடன் வலுக்கட்டாயமாக சுவீகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸ் மற்றும் நீதி மன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்திருக்கும் போதும் அவர்கள் கட்டுபாட்டை மீறி அந்தக் காணியினுள் துப்பரவு வேலைகளை செய்துவருகின்றனர்.

இது போன்ற செயற்பாடுகள் மீண்டும் இரு சமூகங்களுக்கும் இடையில் இன முறுகலை ஏற்படுத்துவதற்காக செய்யப்படும் திட்டமிட்ட செயற்பாடாக இருக்கலாம் என மக்கள் அஞ்சுகின்றனர். இது போன்ற செயற்பாடுகளை அதிகாரிகளும், அரசியல் தலைமைகளும் தலையிட்டு முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என சம்பந்தப்பட்ட காணி உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அரசியல் தலைமைகளிடம் முறைப்பாடு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதற்குப் பின்புலமாக ஒரு முஸ்லிம் அரசியல்வாதி இரு்பது குறிப்பிடத்தக்கது

ஆரையம்பதி காத்தான்குடி எல்லை வளைவுக் கோபுரத்துக்கு மீண்டும் வழக்கு தாக்கல்

மண்முனைப்பற்று பிரதேசத்தில் ஆரையம்பதி காத்தான்குடி எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட போதும் அந்த எல்லை நிர்வாக பகிர்வில் மிக நீண்ட காலமாக இழுபறிநிலை ஏற்பட்டுவருகின்றது. இதன் காரணத்தால் அடிக்கடி இரு இனங்களுக்கும் இடையில் பரஸ்பரங்கள் பாதிக்கப்பட்டு குழப்பங்கள் ஏற்படுவதும் பின்பு பொலிஸ் அதிகாரிகளும், அரசியல் தலைமைகளும் பேசி தற்காலிக தீர்வுக்கு வருவதும் தொடர்கதையாகவே உள்ளது. மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்திலும் இவ் எல்லை அதிகாரம் வழங்கப்படுவது தொடர்பாக பிரஸ்தாபங்கள் ஒவ்வொரு கூட்டத்திலும் இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தனின் வேண்டுகோளின் அடிப்படையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கீழ் மண்முனைப்பற்று பிரதேச சபையினால் எல்லையினை வரையறுக்கும் வளைவுக் கோபுரம் அமைக்கப்படுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அதனை நிறுத்தி ஆரையம்பதி பக்கம் பின்னோக்கி நகர்த்துமாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது . இது தொடர்பான வாத பிரதிவாதங்களின் அடிப்படையில் நீதிமன்ற தீர்ப்பில் திருப்தி அடையாத ஆரையம்பதி பிரதேச சபை எதிர்காலத்தில் ஆரையம்பதி காத்தான்குடி எல்லையில் குழறுபடிகள் ஏற்படுவதை தடுப்பதற்கு எல்லையை வரையறுத்து வளைவு தூபியினை குறித்த எல்லையில் அமைப்பதற்கு அனுமதி கோரி பிரதேச தவிசாளரான மேரி கிறிஸ்றினா அவர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த எல்லை வளைவு அமைக்கப்படுமிடத்து எதிர்காலத்தில் இரு சமூகங்களுக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைகளை ஓரளவு சீர்படுத்த முடியும் என பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் பொதுமக்கள், பொது நிறுவனங்கள், ஆலயங்கள் எல்லை வளைவு தூபியினை குறித்த இடத்திலேயே அமைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தளவாய் நீரோடையில் அடாவடித்தனமாக கழிவுகள் கொட்டப்பட்டமை

செங்கலடி பிரதேச தளவாய் பகுதியில் மக்கள் குடிப்பதற்கு பயன்படுத்தும் நீரோடையில் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த கோழி வர்த்தக விற்பனையாளர் கோழிக் கழிவுகளை பலாத்காரமாக கொட்டிவிட்டு சென்றது தொடர்பாக கிராம சேவையாளர் மற்றும் பிரதேசவாசிகளால் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்களின் பாவனைக்காக பயன்படும் நீரோடையில் கழிவுகளை கொட்டியதால் இந் நீரோடை மிக மோசமான நிலையில் காணப்பட்டதுடன் இப்பகுதி மக்கள் நீராடுவதற்கும் சுத்தமான நீர் இல்லாமல் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
தமிழ் முஸ்லிம் உறவுகளை மேம்படுத்த வேண்டும என அரசியல் தலமைகளும், அரச அதிகாரிகளும் முயன்றுவரும் வேளையில் இதுபோன்ற திட்டமிட்ட செயற்பாடுகள் மீண்டும் இனமுறுகலை ஏற்படுத்த முயற்சிப்பதாக அமைகின்றது. எனவே இதில் மிக அவதானமாக செயற்பட வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
read more...

கிழக்கு மாகாண வலைப்பதிவர்கள் எழுத்தாளர்களுக்கிடையிலான சந்திப்பு


கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற வலைப்பதிவர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்குமிடையிலான சந்திப்பு விரைவில் மட்டக்களப்பில் இடம்பெற இருக்கின்றன. இச் சந்திப்பில் தொழில்நுட்பம் சார்ந்த பல விடயங்களும் எழுத்தாளர்கள் எவ்வாறு இணையத்தினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது பற்றிய பல விடயங்கள் ஆராயப்பட இருக்கின்றன.

கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற வலைப்பதிவர்கள் எழுத்தாளர்கள் வலைப்பதிவு மற்றும் எழுத்துத் துறைக்கு வருவதற்கு ஆர்வமுள்ளவர்கள் கலைஞர்கள் தொடர்பு கொண்டு உங்கள் விபரங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.

வெளிநாடுகளில் இருக்கின்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பதிவர்கள்  மற்றும் எழுத்தாளர்களும் தொடர்பு கொள்ளுங்கள்.

உங்கள் தொடர்புகளுக்கு
info@battinews.com
shanthruslbc@gmail.com
read more...

Thursday, 5 January 2012

பெண்கள் ஆண்களை தங்கள் பின்னால் அலைய வைப்பது எப்படி சில ஆலோசனைகள்.

நம்ம ஐடியா மணி தாத்தா காதல் என்பது மனித உரிமை மீறலா? என்று ஒரு பதிவைப் போட்டிருக்கின்றார் அப்பதிவைப் பார்த்ததும் என்னுடைய முன்னைய பதிவு ஒன்று ஞபகத்தக்கு வந்தது. அப்பதிவை தூசுதட்டி மீண்டும் தருகிறேன்.


ஆண்களுக்குத்தான் அதிகமாக ஆலோசனைகள் வழங்குகிறேன் ஆனால் பெண்களுக்கும் நல்ல ஆலோசனை தரவேண்டும் என்று பல பெண்கள் வேண்டிக்கொண்டனர். சில நன்பிகளோ என்னோடு பேசுவதே இல்லை அவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள்.

இன்று சில (பல) பெண்கள் ( பெண்கள் என்னை திட்டவேண்டாம் எல்லோரும் இல்லை என்று சொல்ல்கிறேன்). ஆண்களை ஏதோ ஒரு வகையில் தன் பின்னால் அலைய வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சில அப்பாவி ஆண்கள் நாய் போல் அலைந்து. கடைசியில் எல்லாம் இழந்து, எல்லாம் புரிந்து..... என்னவோ எல்லாம் நடக்குது...

சில பெண்கள் தங்கள் நண்பிகளிடம் கேட்டுக்கொள்வார்கள் "அடப்பாவி எப்படிடி இப்படி உன்னாலமட்டும் இப்படி ஆண்களை உன் பின்னால அலைய வைக்க முடியும் என்று" அது பெரிய வேலை இல்லை தங்களால் முடியவில்லையே என்று கவலைப்படுபவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள். 

பெண்கள் ஆண்களை தன் பின்னால் அலைய வைப்பது எப்படி

01 . ஆண்களைக் காணும்போது கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு ஒரு புன்னகை செய்தால் போதும்.

02. ஆண்கள் இருக்கும் அல்லது ஆண்கள் அதிகம் இருக்கின்ற இடங்களில் அடிக்கடி நடமாடுங்கள். அங்கே இருக்கின்ற ஆண்களைத்தான் நீங்கள் பார்க்க வருவதுபோல் பாவனை செயுங்கள்.

03 . அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்பவர் நீங்களாக இருந்தால் வாகனத்தில் வருகின்ற ஆண்களின் முகத்தை ஒரு தடவை பார்த்து சிறிய புன்னகை... அவ்வளவுதான் உங்களை பின்தொடர்வோர் அதிகமாகிவிடுவார்கள்.

04 . நீங்கள் இணையத்தில் அரட்டையடிப்பவரா? அப்படியாயின் ஆண் அரட்டை நண்பர்களுக்கு ஒரு ஹாய் (hi ) சொன்னால்போதும் உங்களை ஒரு தேவதையாக நினைத்துவிடுவார்கள். 

05 . நீங்கள் தமிழ் கலாசார ஆடைகளை தவிர்த்து நவீன நாகரிக அரை, குறை ஆடைகளோடு பவனி வாருங்கள் உங்கள் பின்னால் நாயும் அலையும்.

06 . எப்பவும் உங்கள் கையில் கைத்தொலைபேசி இருக்கட்டும். ஆண்கள் உங்கள் தொலைபேசி இலக்கத்தை கேட்கும்போது கொடுத்துவிடுங்கள். நீங்கள் அடிக்கடி ஆண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு ஒரு missed call (தவறவிட்ட அழைப்பு) பண்ணினால் போதும். ஆண்கள் அழைப்பை எடுத்தால் நீங்கள் பேசவேண்டாம் அல்லது ஹாய் மட்டும் சொல்லிவிட்டு துண்டித்து விடுங்கள். 

07 . ஆண் நண்பர்களோடு பேசும்போது நெருக்கமாக காதலிப்பதுபோல் பேசிக்கொள்ளுங்க. எல்லா நண்பர்களோடும் இப்படியே பழகுங்கள் அவர்கள் உங்களை காதலிக்க ஆரம்பித்தால் நீங்கள் காதலிக்கவில்லை என்றாலும் நீங்கள் காதலிக்கவில்லை என்ற விடயத்தை தெரியப்படுத்த வேண்டாம். வழமையாக நெருக்கமாக பழகுவது போன்றே பழகுங்கள்.

08. உங்களிடம் பலர் காதலை வெளிப்படுத்தி உங்கள் சம்மதம் கேட்டிருக்கலாம், கேட்கலாம் அப்போது முடியாது என்று சொல்லவேண்டாம். பின்னர் சொல்கிறேன் என்று கேட்பவர்கள் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்.

09. உங்களோடு சில பெண் நண்பிகளை வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் கதை கேட்டுத்தான் செயற்படுவது போன்று காட்டிக்கொள்ளுங்கள். இந்த நண்பிகளையும் உங்கள் ஆண் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். ஆனால் அந்த நண்பிகளை உங்கள் ஆண் நண்பர்களோடு தனிப்பட்ட தொடர்பு வைத்துக்கொள்ள விடவேண்டாம். 

10 . இதுதான் முக்கியமானது.... எங்களைப் போன்றவர்களிடம் இது மாத்திரமல்ல எதனை செய்தாலும் நாங்கள் பெண்கள் பின்னால் அலையமாட்டோம். ஆனால் பெண்களைத்தான் எங்கள் பின்னால் அலைய வைப்போம். எங்களைப் போன்றவர்களிடம் உங்கள் வேலையே காட்டி நேரத்தை வீணடித்து எங்கள் பின்னால் நீங்கள் அலைவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.


நிறைய பொண்ணுங்களுக்கு பயனுள்ள பதிவாக இருந்திருக்கும் என்று நம்புறன். 
read more...

பதிவர்களே ஜாக்கிரதை பிரதேசவாதத்தை தூண்டும் பதிவர்கள் வலையில் சிக்க வேண்டாம்.


தற்போது சில நாட்களாக பதிவுலகில் பேசப்படுகின்ற ஒரு விடயம். பிரதேசவாதத்தை தூண்டும் பதிவர்கள், தமிழ் முஸ்லிம் உறவை சீர் குலைக்க நினைக்கும் பதிவர்கள். பிரதேசவாதம் என்பது என்ன? பிரதேசவாதம் என்பதன் வரையறை என்ன? இலக்கணம் என்ன? 

நான் பிரதேசவாதம் பேசுகின்றேன் என்று இலங்கை தமிழ் வலைப்பதிவர்கள் சில காலம் எனக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்தனர். நான் பிரதேசவாதம் பேசுபவன் எனும் மாயையை தோற்றுவித்து என்னை பதிவுலகிலிருந்து விரட்டியடித்தவர்கள். புது வருடத்திலிருந்து பதிவெழுதலாம் என்று வந்தால் மீண்டும் என்னை நோக்கி போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர்.

சில விடயங்களை குறிப்பிட்டாகவேண்டும். அநீதிகளை யார் செய்தாலும் தட்டிக் கேட்கும் குணமுடையவன். மரணத்துக்கு மட்டும் பயப்படுபவனல்ல. ஒருவருடைய கருத்து முரண்பாடாக இருக்கலாம் மாற்றுக் கருத்தாக இருக்கலாம். முரண்பாடான கருத்தாக இருக்குமானால் சுட்டிக் காட்டினால் சரியானதாக இருக்கும் பட்சத்தில் அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பாண்மையும் என்னிடம் இருக்கின்றது. அதனைவிடுத்து பொய்களைச் சொல்கிறான் என்று பிரதேசவாதம் எனும் நஞ்சை ஊட்டி அவனை பழிவாங்க நினைப்பது தவறானது.

கடந்த காலங்களில் என் வலைப்பதிவில் நடந்தவை என்ன என்று பலருக்கு தெரியாமல் இருக்கலாம். அரசியல் சார்;ந்த தொடர் பதிவொன்றை எழுதினேன். அதில் கடந்தகால அரசியல் தலைவர்கள் விட்ட தவறுகளை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியிருந்தேன். ஆனால் சிலர் பொய்களை எழுதுகிறேன் என்று போர்க்கொடி தூக்கினர். எது பிழை என்று சுட்டிக்காட்டச் சொன்னபோது எவரும் சுட்டிக் காட்டவில்லை. தொடர்ந்த பதிவுகளில் 24 க்கு மேற்பட்ட புத்தகங்களையும் கட்டுரைகளையும் ஆதாரமாக வெளியிட்டேன். இதுவரை நான் பொய்யாக எழுதிய விடயம் எது என்று சுட்டிக்காட்டவில்லை. பிரதேசவாதம் பேசுகின்றேன் என்று ஒரு மாயையை தோற்றுவித்தமைதான் மிச்சம். எனது தொடர் பதிவிற்கு கிழக்கைச் சேர்ந்தவர்களைவிட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகமானவர்கள் ஆதரவு தந்தார்கள். இது பழைய கதை

இன்று மீண்டும் பரவலாகப் பேசப்படுகின்ற விடயம் பிரதேசவாதம் தமிழ் முஸ்லிம் உறவை சீர்குலைக்கும் முயற்சியில் பதிவர்கள். சிங்கள பேரினவாதத்திற்கும் கருணா பிள்ளையான் போன்றோருக்கு விலைபோன பதிவர்கள் எனும் விடயங்கள்.

இவ்வாறான கதைகள் வரக் காரணம் என்ன? நான் புது வருடத்தில் மீண்டும் பதிவுலகிற்கு வந்து கிழக்கு மாகாணத்திலே முஸ்லிம்களால் தமிழர்களுக்கு எதிராக செய்யப்படுகின்ற பல அராஜகங்களை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியிருந்தேன். கிழே கொடுக்கப்படும் பதிவுகளை பார்க்கவும்.

http://shanthru.blogspot.com/2011/12/blog-post_14.html

http://shanthru.blogspot.com/2011/12/blog-post_20.html

http://shanthru.blogspot.com/2011/12/blog-post_31.html

கிழக்கு மாகாணத்திலே தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம்களால் அரங்கேற்றப்படுகின்ற கொடுமைகளை ஆதாரங்களுடன் வெளியிட்டேன். கிழக்கு முஸ்லிம்களால் தமிழர்களுக்கு செய்யப்படுகின்ற கொடுமைகள் வெளிவருவதில்லை. காரணம் கிழக்கிலே இவற்றை வெளியிடக்கூடிய ஊடகங்கள் இல்லை. வலைப்பதிவர்கள் இல்லை. அதற்காக எனது சமூகம் அடக்கி ஒடுக்கப்படும்போது என்னாலும் மௌனித்துக் கொண்டு இருக்க முடியாது.

உண்மைச் சம்பவங்களை வெளியிட்டிருக்கின்றேன். தமிழ் முஸ்லிம் பிரச்சினையை ஏற்படுத்த நினைக்கின்றேன் என்று சொல்பவர்களிடம் ஒரு கேள்வி மட்டக்களப்பில் இடம்பெற்ற சம்பவங்கள்போல் உங்கள் அக்கா தங்கைகளுக்கு இடம்பெற்றிருந்தால் சும்மா இருப்பீர்களா? எமது சமூகத்தில் இடம்பெறுகி;ற பிரச்சினைகளை வெளிப்படுத்தக்கூட உரிமை இல்லையா? 

இதனை புதாகரமாக்கி பதிவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்க சில இணையத்தளங்களும் வலைப்பதிவர்களும் முயற்சி செய்து வருகின்றனர். அவர்கள் பிரதேசவாதம் எனும் நஞ்சை ஊட்டி மோதவிட நினைக்கின்றனர். முன்னர் எனக்கு பிரதேசவாதம் பேசுபவன் என்று சேறு பூசப்பட்டதன் காரணமாக பிரதேசவாதத்தை கையிலெடுக்க நினைக்கின்றனர்.
இதில் சிந்திக்கவும் இணையத்தளம் பதிவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கின்றது. சில பதிவர்கள் சிங்கள பேரினவாதத்திற்கும் கருணாவிற்கும் விலை போய்விட்டதாகவும்  பிரதேசவாதத்திற்கு துணைபோவதாகவும் தமிழ் முஸ்லிம் மோதலை ஏற்படுத்துவும் முயற்சி செய்வதாகவும் எழுதி இருக்கின்றனர். 

சிந்திக்கவும் இணையத்தள நிர்வாகிகள் எந்தெந்தப் பதிவர்கள் சிங்களப் பேரினவாதிகளிடமும் கருணாவிடமும் எவ்வளவு எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்பதனை வெளியிட முடியுமா? தமிழ் முஸ்லிம் உறவை சீரழிக்க நினைக்கின்றனர் என்று குறிப்பிட்டிருக்கும் சிந்திக்கவும் இணையத்தள நிர்வாகிகள் கிழக்கின் உண்மை நிலைகளை அறிந்தார்களா? கிழக்கில் இடம்பெறும் பிரச்சினைகள் தொடர்பாக எப்போதாவது ஏதாவது எழுதி இருக்கின்றார்களா? ஒன்றை மட்டும் சொல்கிறேன் சிந்திக்கவும் இணையத்தள நிர்வாகிகள் தமது அக்கா தங்கை தனைவி மக்களை முஸ்லிம்களுக்கு கூட்டிக் கொடத்துவிட்டு முஸ்லிம்களுக்கு வக்காளத்து வாங்குங்கள் முஸ்லிம்களினால் கிழக்கு மக்களுக்கு செய்யப்படும் கொடுமைகளை மூடி மறையுங்கள்.

நான் பிரதேசவாதம் பற்றிப் பேசுகின்றேன். முஸ்லிம்களுக்கு எதிராக எழுதுகின்றேன் என்று சொல்பவர்களிடம் சொல்கின்றேன். நான் எவர் தவறு செய்தாலும் தட்டிக் கேட்பவன் அநீதிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர நினைப்பவன். எனது கடந்தகால பதிவுகளைப் பாருங்கள். கருணாவிற்கு எதிராக பல பதிவுகள் எழுதி இருக்கின்றேன். கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு எதிராக எழுதி இருக்கின்றேன். இலங்கை அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக பல பதிவுகளை எழுதி இருக்கின்றேன்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கையிலிருந்து அதிக பதிவுகளை இட்டவன் நான். முள்ளிவாய்க்கால் படுகொலை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது கலைஞருக்கு ஒரு கடிதம் எனும் தலைப்பில் ஒரு பதிவிட்டிருந்தேன் அப்பதிவு என்னை பல சிக்கல்களில் மாட்டியிருந்தது. அப்பதிவை புலிகளுக்கு ஆதரவான இணையத்தளங்கள் பல வெளியிட்டிருந்தன. அதன் காரணமாக பல உயிரச்சுறுத்தல்கள்கூட வந்திருந்தன். பல பதிவர்கள் அப்பதிவை நீக்கும்படி கூறியும் நான் நீக்கவில்லை. நான் பிரதேசவாதம் பேசுகின்றேன் என்று சொல்கின்ற ஒரு பதிவர்கூட அப் பதிவை நீக்கும்படி சொல்லி இருந்தார். ஆனாலும் நான் இதுவரை நீக்கவில்லை.

வலைப்பதிவுலகில் அதிக உயிரச்சுறுத்தலுக்கு மத்தியில் எழுதும் பதிவர் நானாகத்தான் இருக்கும். பல உயிரச்சுறுத்தலுக்கு மத்தியில்  சில மாதங்கள் மறைந்திருந்து எழுதிய காலகட்டங்களும் இருக்கின்றன்.

நான் என்பாட்டுக்கு எழுதிக்கொண்டிருக்கலாம் என்று நினைத்தால் அனானிகள் விடுவதாக இல்லை. துப்பாக்கிக்கு மிரளாத நான் உங்கள் அனானி பின்னூட்டங்களுக்கு மிரளப் போவதில்லை. உங்கள் பின்னூட்டங்கள் என் எழுத்தின் வேகத்தை அதிகரிக்கும். தலையில் துப்பாக்கி வைத்தாலும் உண்மைகளை எழுதிக்கொண்டே இருப்பேன்.

மற்றுமொரு விடயம் பதிவுலகில் எனக்கும் மருதமூரானுக்கும் யாழ்தேவி திரட்டி விடயத்தில் கருத்து முரண்பாடு இருந்தது. வலைப்பதிவிலும் நான் தாறுமாறாக எழுதி இருந்தேன். ஆனாலும் நட்பு விடயத்தில் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துணர்வுடனும் நண்பர்களாகவும் இருக்கின்றோம். இது பலருக்குத் தெரியாது. எப்பொழுது இருவரையும் மீண்டும் மோதவிடலாம் என்றும் சிலர் நினைக்கலாம். ஆனாலும் நாம் நண்பர்களாகவே இருப்போம்.

இந்த இடத்தில் மருதமூரான் பற்றிய விடயம் ஏன் வருகின்றது என்று கேட்கின்றீர்களா? அண்மையில் நண்பர் நிருபனுடைய பதிவொன்றில் இலங்கையில் இருந்து சமூகம் சார்ந்து பதிவுகளை இடும் ஒரு பதிவர் உனக்கில்லடி உபதேசம் ஊருக்குத்தாண்டி எனும் வகையில் சமூகத் தளம் ஒன்றில் பெண்களுடன் செக்ஸ் ரீதியான அரட்டை அடித்த ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றது என்று குறிப்பிட்டிருந்தேன்.

மருதமூரான் சமூகம் சார்ந்து எழுதுபவர். இதனை வைத்து என்னையும் மருதமூரானையும் மீண்டும் மோதவிட சில நினைத்திருக்கின்றனர். நான் பின்னூட்டமிட்டதும் நண்பர் மருதமூரான் என்னுடன் தொலைபேசியில் பேசினார். நான் மருதமூரானைத்தான் குறிப்பிட்டிருப்பதாக சிலர் நினைப்பதாக கூறினார். பலருடயை மின்னஞ்சல்கள் ஹக் பண்ணப்பட்டன தனது மின்னஞ்சலும் ஹக் பண்ணப்பட்ட விடயத்தையும் குறிப்பிட்டார். (எனது மின்னஞ்சலும் ஹக் பண்ணப்பட்டு பல பெண்களுக்கு செக்ஸ் படங்கள் அனுப்பப்பட்ட வரலாறுகளும் உண்டு ஹக் பண்ணப்பட்ட மின்னஞ்சலை இன்னும் என்னால் மீளப்பெற முடியவில்லை வேறு ஒருவர் பயன்படத்திக் கொண்டிருக்கின்றார்)

மருதமூரான் நல்ல ஒரு நண்பர் அவர்பற்றி இதுவரை நான் தவறாக எந்தஒரு விடயத்தையும் அறியவில்லை. நான் குறிப்பிட்ட பதிவர் தொடர்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றேன். அவரின் நடவடிக்கைகளை வைத்தே அவரின் மறு முகத்தை வெளியிடுவதா இல்லையா என்பதனை தீர்மானிக்க முடியும். 






read more...

யாழ்ப்பாணம் மட்டும்தான் செந்தமிழுக்கு இலக்கணமா?

இன்று கொலைவெறிப்பாடல் பலரது அபிமானப் பாடலாக இருந்தாலும் பரவலாக பலராலும் எதிர்க்கப்படுகின்ற பாடலாகவும் அமைந்திருக்கின்றது.  ''என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்தக் கொலவெறிடா '' எனும் பாடல் இப்போது யாழ்ப்பாண நண்பர்களினால் வெளியிடப்பட்டிருக்கின்றது.

 எனது கணிணியில் இப்போதெல்லாம் அதிகம் ஒலிக்கின்ற பாடல் இப்பாடல்தான். அழகிய வரிகள்  இளம் இசையமைப்பாளர் எஸ். ஜே ஸ்ரலின் பாடல் வரிகளை எழுதிப் பாடியுள்ளார். இப்பாடலை நான் அதிகம் கேட்டாலும் பாடலைக் கேட்கும் ஒவ்வொரு தடவையும் பாடலின் சில வரிகள் பொருத்தமற்றது போன்று தோன்றுகிறது.  தமிழ் மொழியின் சிறப்பினைச் சொல்லும் இப்பாடலில் ஒரு குறித்த பிரதேசத்தை மட்டும் சுட்டிக் காட்டுவது பொருத்தமற்றது என்பது என் கருத்து எந்த வரிகள் என்று சொல்ல மாட்டேன் சொன்னால் பிரதேசவாதம் பேசுகிறேன் என்று சொல்வார்கள்...

பாடல் வரிகள்


என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…
கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா…
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…
செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்…
கம்பனின் வரிகள்…
வள்ளுவன் குறள்கள்…
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு…
பழமை பாடும்…
தமிழர் பெருமை எங்கே?
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யேசு, புத்தன்,
காந்தி சொன்ன
அகிம்சை வழியைக் கேளு – தினம்
தமிழின் செழுமை
படித்து வந்தால்
தணியும் கொலவெறி பாரு..!
ஆஸ்கார் வாங்கிய
தமிழன் சபையில்
பெருமை சேர்த்தான் தமிழில்
செம்மொழி பாடிய
புரட்சிக் கவிஞன்
தன்னுயிர் கலந்தான் தமிழில்..!
தமிழை வாழவை இல்லை வாழவிடு
இன்னும் தாங்காதடா மனசு
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு
தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பைத் தொலைத்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…
பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல – அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா – தமிழா
எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா…


read more...

Tuesday, 3 January 2012

மட்டுநகரை பணத்துக்காக விற்கும் மட்டு மாநகரசபை

கிழக்கு மாகாணத்திலே ஓர் அழகிய மாவட்டம் என்றால் முதலில் எல்லோரும் குறிப்பிடுவது மட்டக்களப்புத்தான். மட்டக்களப்புக்கென்று பல தனிச் சிறப்புக்கள் இருக்கின்றன. வாவிமகள் ஆட மீன் பாடும் விசேட தனிச் சிறப்பு, ஒல்லாந்தர் ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட கோட்டை, மற்றும் இறங்கு துறை மேலும் இயற்கை அழகு கொஞ்சும் வாவிகள், நீண்ட அழகிய கடற்பரப்பு, பசுமையான வயல் வெளிகள் இயற்கையான நீர் நிலைகள், புராதன ஆலயங்கள், சிறப்பு மிக்க மட்டக்களப்பிற்கே உரித்தான கலை கலாசாரங்கள், உணவுப் பழக்க வழக்கங்கள், அழகிய பேச்சு தமிழ் என அடிக்கிக் கொண்டே போகலாம். 

எத்தனையோ சிறப்புக்களைக் கொண்டமைந்த இந்த மட்டக்களப்பை இன்று ஒரு அரசியல் வாதி கண் பருவத்தை உயர்த்தும் அளவிற்கு அபிவிருத்தி செய்து வருகின்றார். ஏன் இவரால்தான் மட்டு நகரிலே இவ்வளவு காலங்களும் மாடுகள் படுத்துறங்கிய அந்த பழைய பஸ் தரிப்பு நிலையம் மாற்றப்பட்டு சகல வசதிகளுடன் கூடிய அழகிய மட்டக்களப்பின் எழிலுக்கு மேலும் மெருகூட்டுவதைப்போன்று அருகில் உள்ள அழகிய வாவியை ஒத்தாற்போல் இளம் நீல நிறம் பூசப்பட்டு மிகவும் அழகாக காட்சி தந்தது.
ஆனால் கேவலம் இன்று றைனோ என்கின்ற கூரைதகடு கம்பனியின் விளம்பரத்திற்காக வெறும் 50000ரூபாயினை வைப்பு பணமாக பெற்று விட்டு பேரூந்து நிலையத்தின் முழுப்பகுதியையும் மஞ்சள் நிறத்தால் அசிங்கப்படுத்தி வருகின்றார்கள். பாருங்கள் மட்டக்களப்பின் தனித்துவத்தைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய மாநகர சபை வெறும் பிச்சக் காசு 50000 ரூபாவிற்காக அழகிய பேரூந்து நிலையத்தையே தாரை வார்த்தவர்கள் இனிமேல் எதையெல்லாம் தாரை வார்க்கப் போகின்றார்களோ தெரியல.

எனவே நான் மட்டக்களப்பின்பால் அதிக அக்கறை கொண்டவன் என்ற அடிப்படையில் இந்த செயலை வன்மையாக கண்டிக்கி;ன்றேன்.
உண்மையில் வெறும் 50000ரூபாய் மடடும்; தானா இவர்கள் பெற்றிருப்பார்கள். எனக்கு நன்றாகத் தெரியும் மேயருக்கு எவ்வளவு பிரதிமேயருக்கு எவ்வளவு பாவம் கொமிசினருக்கு அதில் பங்கு இல்லை. இதற்கு அனுமதி வழங்கியவர் கொமிசனர்தான். அவரும் மட்டக்களப்புத்தானே அவருக்காவது இது தெரியலயா?
எவ்வாறாயினும், கிழக்கு மாகாண முதலமைச்சர் மட்டக்களப்பின் அபிவிருத்தியில் அதிக அக்கறை செலுத்துவபவராயின் இந்த விடயத்திற்கு சரியான தீர்ப்பு வழங்க வேண்டும். என்பது மட்டக்களப்பு மக்கள் சார்ந்த எனது பணிவான வேண்டுகோள்.

ஓவ்வொரு மானமுள்ள மட்டக்களப்பானும் இது பற்றி சிந்தித்து தயவு செய்து முதலமைச்சரின் கவனத்தற்கு கொண்டு வந்து அந்த முங்கள் பெயின்ட்டை அகற்றி அழகிய இளம் நீல நிறத்திலான பழைய பேரூந்து நிலையத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும்.

குறிப்பு:   மேற்குறித்த பஸ்நிலையத்தை நிர்மாணித்த ஆஞ்சநேயர் கன்ரக்ஸன் ஒரு வருட இறுதியில் பெயின்ட் அடித்து கொடுக்க வேண்டும். அதற்காக அவர்கள் பெயின்ட்டை கொள்வனவு செய்து வைத்திருக்கின்றார்களாம். றைனோ அடித்ததால் அவர்கள் அதை என்ன செய்வார்கள். நான் நினைக்கின்றேன் வருகின்ற தைப் பொங்கலுக்கு மேயர், பிரதி மேயர், கொமிசனர் எல்லாரும் தங்கட வீட்டுககு; அந்த பெயின்ட்டை அடித்தாலும் அடிப்பார்கள் கவனம் மக்களே!

மட்டக்களப்பின் மாடுகள் படுத்துறங்கிய பழைய பஸ் தரிப்பு நிலையம்
 
 புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அழகிய மட்டு பேரூந்து நிலையம்


 பணத்துக்காக றைனோவிற்கு தாரை வார்க்கப்பட்ட பின்னர் மட்டு பஸ் நிலையம்

நன்றி
மட்டு நரசிம்மன்!

read more...

Sunday, 1 January 2012

பதிவுலக சாதனைகளும் வேதனைகளும் காமத்தில் சிக்குண்டவர்களும்



புதிய ஆண்டை வரவேற்றிருக்கும் இவ் வேளையில் நாம் கடந்த வருடம் எதனைச் சாதித்தோம் என்பதனை கடந்த வருடத்தின் பக்கங்களை புரட்டிப்பார்க்க வேண்டும். கடந்த வருடத்தில் நாம் சாதிக்க நினைத்தவை நாம் விட்ட தவறுகள் தடைக்கற்கள் என்பவற்றை புரட்டிப்பார்க்கின்றபோது இவ் வருடத்தில் அச் சவல்களையுடம் தடைக்கற்களையும் படிக்கற்களாக மாற்ற முடியும்.

ஆனாலும் எனது கடந்த வருட அனுபவங்களை நான் திரும்பிப் பார்க்க விரும்பவில்லை. கடந்த வருடம் என்னை ஒரு பரதேசியாக மாற்றிய வருடம். எனது ஊரைவிட்டு எங்கும் நான் போக விரும்புவதில்லை ஆனாலும் கடந்த வருடம் எனது வீட்டில் நிம்மதியாக இருக்க விடாத வருடம். நான்கரை மாதம் கட்டாரில் திண்டாட்டம். இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். 

பதிவுலகத்தால் எதனையும் சாதிக்க முடியும் எனும் அளவிற்கு பதிவுலகம் வியாபித்திருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய பதிவர்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றனர். பதிவர்கள் தினமும் பல விடயங்களை பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒபதிவுலகத்தைப் பொறுத்தவரை பல துறை சார்ந்தவர்கள் இருக்கின்றனர். எவ்வளவோ விடயங்களைச் சாதிக்க முடியும். ஆனாலும் பதிவுலகம் கடந்த வருடம் எதனைச் சாதித்திருக்கின்றது. 

எம்மில் பலர் சமூகம் சார்ந்து பல விடயங்களை எழுதிக் கொண்டிருக்கின்றோம். ஆனாலும் நம் எழுத்துக்கள்போல் செயலில் காட்டுகின்றோமா? உனக்கில்லடி உபதேசம் ஊருக்குத்தாண்டி என்பதற்கமைய பலர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். வெறுமனே எழுத்துக்களோடு மட்டும் இல்லாமல் சமூகத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும். சில பதிவர்கள் எழுத்தில் மட்டுமல்லாது சமூகம் சார்ந்த செயலிலும் இறங்கியிருக்கின்றனர். இவர்கள் பாராட்டப்பட வேண்டும். 

இலங்கைப் தமிழ் பதிவர்களைப் பொறுத்தவரை இதுவரை எதனைச் சாதித்திருக்கின்றனர்?????? பல பிரிவுகளையும் குழுக்களையும் தோற்றுவித்திருக்கின்றனர். இன்று இலங்கையில் எத்தனையோ பதிவர்கள் இரக்கின்றனர். பலர் சமூகம் சார்ந்தும் எழுதுகின்றனர். அவர்கள் எழுதுவதனைப்போல் சமூகத்துக்கு ஏதாவது செய்திருக்கின்றனரா? வெறுமனே மற்றவர்களை கவர்வதற்காகவா எழதுகின்றனர். 

இந்தியப்பதிவர்கள் பல விடயங்களைச் சாதித்திரக்கின்றனர். இலங்கைப் பதிவர்களிடையே போட்டியும் பொறாமையும் இருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். இலங்கைப் பதிவர்களிடையே பல குழுக்கள் எதற்கு? பழைய பதிவர்கள் புதிய பதிவர்கள் என்ற வேறுபாடு எதற்கு? இலங்கைப்  பதிவர்கள் பலர் பதிவுலகுக்குள் பிரவேசித்திருக்கின்றனர். அவர்களில் பலர் சிறந்த எழுத்தாளர்களாக எழுதிக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் எழுத்துக்களைப் பார்த்து நான் வியப்பதுண்டு. 

வெறுமனே எழுத்துக்களோடு மட்டும் நின்று விடாது சமூகத்துக்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும். ஒரு சிறுவனுடைய இருதய சத்திரசிகிச்சைக்காக அவசரமாக உதவுங்கள் என்று சிறுவனுடைய மருத்துவ சான்றிதழ் விடயங்களை பதிவிட்டிருந்தேன். பல நாட்களாகியும் இதுவரை எவரும் உதவவில்லை என்பது கவலைக்குரிய விடயம். ஒரு உயிரைக் காப்பாற்ற உதவி செய்ய முடியத நாம் சமூகம் சார்ந்து எழுதுவதில் பயனில்லை.

நண்பர் மதிசுதா சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் எனும் நோக்கோடு பதிவுலகிற்கு வந்த ஒருவர். அவர் தன்னால் முடிந்த ஏற்பாடுகளை செய்வதாக என்னிடம் சொல்லி இருக்கின்றார். நிருபனும் இச் சிறுவனுக்கு உதவிகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அக்கறையோடு செயற்படுகின்றார். 

இலங்கைப் பதிவர்கள் கடந்தகால கசப்புணர்வுகளை மறந்து இவ்வருடத்தில் ஆக்கபூர்வமான விடயங்களை நோக்கிச் சிந்திக்க வேண்டும். இலங்கைப் பதிவர்களுக்கிடையே புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். ஒன்றிணைய வேண்டும். சமூகம் நோக்கி சிந்திக்க வேண்டும். சமூகத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும்.

இலங்கையைப் பொறுத்தவரை எமது தமிழ் சமூகத்திற்கு நாம் செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது. இலங்கையின் வடக்குக் கிழக்கிலே பல ஆயிரக்கணக்கான விதவைகள் பல கஸ்ரங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பொருளாதார சூழல் காரணமாக பல சிறார்கள் கல்வியை இழந்து நிற்கதியாகி இருக்கின்றனர். இவர்கள் தொடர்பில் இலங்கையில் இருக்கின்ற ஒவ்வொரு பதிவரும் சிந்திக்க வேண்டும். எமது சமூகத்தின் நாளைய நிலை கேள்விக்குறியாக இருக்கின்றது. எமது சமூகத்துக்கு நாம் உதவி செய்ய முன்வராதபோது வெளிநாட்டுப்பதிவர்கள் எப்படி முன்வர முடியும்.

இலங்கைப் பதிவரிடையே ஒரு கெட்ட குணமிருக்கின்றது. ஒவ்வொருவருக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம். அதற்காக நட்பினை முறித்துக் கொள்வது மனிதனுக்கு அழகல்ல. கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல வேண்டும். இலங்கைப் பதிவர்களைப் பொறுத்தவரை பதிவுகளில் இடம்பெறும் மாற்றுக்கருத்து தொடர்பில் கருத்து மோதல்கள் ஏற்படுகின்றபோது நட்பை முறித்துக் கொள்கின்றனர். இவை மாற வேண்டும். 

என்னுடன் நெருங்கிய நண்பர்களாக இருந்த சிலர் கருத்து முரண்பாடு காரணமாக வலைப்பதிவில் இடம்பெற்ற கருத்து மோதல்களினால் என்னுடன் பேசுவதனையே நிறுத்தி விட்டனர். ஆனாலும் நான் அவர்களுடன் பேசுவதற்கு பல தடவை முயற்சி செய்தும் பலநில்லை. சிலருக்கு மின்னஞ்சல்களை அனுப்பினேன் பதில்கூட இல்லை. இப்படி இருந்தால் எப்படி ஒற்றுமைப்படுவது.

பதிவுலகில் அதிகம் நான் கருத்து மோதலில் ஈடுபட்ட ஒருவர் வால்ப்பையன் அருண் அவர்கள். அவர் கடவுள் நம்பிக்கை அற்றவர் நான் இந்து தீவிரவாதி இருவரும் வலைப்பதிவில் மோதிக்கொண்டு இருப்போம். ஆனாலும் ஜீமெயில் அரட்டையில் நட்பாகப் பேசிக்கொண்டிருப்போம். பதிவர்கள் என்பது அப்படி இருக்க வேண்டும். 

இவ்வாறு இலங்கையிலும் சில பதிவர்கள் இருக்கின்றனர் அவர்கள்போல் எல்லோருடைய மன நிலையும் மாற வேண்டும். அவர்களை நான் குறிப்பிட விரும்பவில்லை குறிப்பிட்டால் அது வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கும். அந்தளவிற்கு இருக்கின்றது இலங்கைப்பதிவுலகம்.

எனது எதிர்பார்ப்பு இவ்வருடம் இலங்கைப் பதிவர்களிடையே ஒற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும். விரைவில் இலங்கை தமிழ் பதிவர் சந்திப்பு இடம்பெற வேண்டும். விரைவில் மட்டக்களப்பில் பதிவர் சந்திப்பு இடம் பெற வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இருக்கின்றது. அதற்குரிய ஏற்பாடுகளை திருகோணமலை மட்டக்களப்பு அம்பாரை மாவட்டத்தில் இருக்கும் பதிவர்களோடு எனைய பதிவர்களோடு பேசி ஏற்பாடு செய்ய இருக்கின்றேன். இதற்கு அனைத்து பதிவர்களினதும் ஒத்துளைப்பு இருக்கும் என்று நினைக்கின்றேன்.
பிழை பிடிக்கின்றேன் என்று நினைக்க வேண்டாம் வெறுமனே பொழுது போக்குக்காக வலைப்பதிவெழுத நான் வரவில்லை வலைப்பதிவு மூலம் சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றுதான் பதிவுலகப் பக்கம் வந்தேன் இதுவரை எதனையும் சாதிக்கவில்லை என்ற குற்ற உணர்வு என்னுள் இருக்கின்றது.

அடுத்து பதிவுலகில் கவலைக்குரிய விடயம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்று சமூகம் சார்ந்து எழுதிய பதிவுகளை பார்ப்பவர்கள் மிக மிகக் குறைவானவர்களே. ஆனாலும் தலைப்பிலே காமம் என்றிருந்தால் முண்டியடித்துக் கொண்டு பார்ப்பார்கள். என்னுடைய பதிவுகளிலே காமம் என்று தலைப்புப் போட்ட பதிவுகளை வாசித்தவர்களின் தொகை மிக மிக அதிகம். 

நான் எமது சமூகத்தின்பால் அதிக அக்கறை கொண்ட ஒருவன் என்னால் முடிந்த உதவிகளை சமூகத்திற்கு செய்து வருகின்றேன். ஆனாலும் கவலைக்குரிய விடயம் இருதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உதவி செய்யுங்கள் என்று நான்  பதிவிட்டபோது உதவ எவரும் முன்வராமை கவலைப்பட வேண்டிய விடயம். இதன் பிரதிபலிப்பாக நானும் எனது நண்பர்களும் சேர்ந்து உதவும் கரங்கள் எனும் அமைப்பினை உருவாக்கி இருக்கின்றோம். அதன் மூலம் சமூகத்துக்காக கஸ்ரப்படுகின்ற மக்களுக்காக பல உதவிகளை செய்ய இருக்கின்றோம். அதற்கென ஒரு வலைத்தளமும் உருவாக்க இருக்கின்றோம் விரைவில் விபரங்களை பகிர்ந்து கொள்வேன் சமூக அக்கறை கொண்ட எவரும் எம்மோடு இணைந்து கொள்ள முடியும்.

பிறந்திருக்கும் வருடம் அனைவருக்கும் சந்தோசம் நிறைந்த ஆண்டாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவதோடு அனைவருக்கும் புது வருட வாழ்த்தக்களையும் தெரிவித்தக் கொள்கின்றேன்.

பிற்குறிப்பு - இருதய சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய சிறுவன் பற்றிய விபரங்களை தனது வலைப்பதிவில் வெளியிட்டிருக்கும் மதிசுதாவிற்கு நன்றிகள். இன்னும் பல பதிவர்கள் பதிவிட இருப்பதாக சொல்லி இருப்பது சந்தோசப்பட வேண்டிய விடயம்.
read more...