களுதாவளைக் கிராம மக்களால் இன்று மாலை வேளையில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இவ் ஆர்பாட்த்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டதோடு சிவாஜிலிங்கம் அவர்களின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் நினைவுதின நிகழ்விற்கு அழைக்கப்பட்டு சென்றிருந்த கிழக்கிலே எல்லோராலும் மதிக்கப்படுகின்ற அரசியல் தலைவர் இராஜதுரை அவர்கள் மேடையில் பேசச் சென்றபோது கறுப்புக் கொடி காட்டி தகாத வார்த்தைகளால் சிவாஜிலிங்கம் அவர்கள் நாகரிகமற்ற முறையில் அவமானப்படுத்திய செயலை கண்டித்து ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த விவசாயி யோகராஜா கிழக்கு மாகாணத்துக்கு பெருமை சேர்த்த கிழக்கு மாகாண மக்களால் சிறந்த அரசியல் தலைவராக போற்றப்படுகின்றவரை யாழ்பாணத்துக்கு அழைத்து துரோகி சக்கிலியன் போன்ற நாகரிகமற்ற வார்த்தைகளால் பேசியமை எமது ஒட்டுமொத்த கிழக்கு மாகாண மக்களையும் அவமானப் படுத்தியமைக்கு சமமானதாகும். கிழக்கு மக்களால் நேசிக்கப்படுகின்ற ஒரு அரசியல் தலைவரை அழைத்து மேடையில் வைத்து அவமானப்படுத்தியமை வேண்டுமென்று திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு செயலாகும்.
இராஜதுரை ஐயா அவர்கள் தானாக செல்லவில்லை அவர்களே அழைத்தார்கள் அவர்களின் அழைப்பின் பேரின் சென்றவருக்கு அவர்கள் கொடுத்த பரிசுதான் இது. இது வேண்டுமென்று திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு செயல் எங்களால் நேசிக்கப்படுகின்ற ஒரு அரசியல் தலைவருக்கு செய்யப்பட்ட இச் செயலானது கிழக்கு மக்கள் எல்லோருக்கும் செய்யப்பட்ட ஒரு செயலாகும்.
வடக்கு சாதிவெறி பிடித்த மேலாதிக்க சக்திகள் கிழக்கு மக்களை சாதி குறைந்தவர்களாக பார்க்கின்ற பார்வை இன்னும் இருக்கின்றது. அதன் வெளிப்பாடே ஐயா இராஜதுரை அவர்களை சக்கிலியன் என்றும் துரோகி என்றும் வசை பாடச் செய்திருக்கின்றது.
கிழக்கைச் சேர்ந்த ஒரு அரசியல் தலைவருக்கு செய்யப்பட்ட இச் செயலை கூட்டமைப்பிலே இருக்கின்ற மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தஒரு அறிக்கையினையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தாமல் இருப்பது கவலைக்குரிய விடயம். இவர்கள் தொடர்ந்தும் வடக்கு மேலாதிக்க சக்திகளுக்கு துணை போகின்றவர்களாகவே இருக்கின்றனர். இச் செயலை கிழக்கு மக்கள் சார்பில் வண்மையாகக் கண்டிப்பதோடு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இச் செயல்தொடர்பில் மெளனிகளாக இருப்பார்களானால் அவர்களுக்கெதிராகவும் நாம் வீதியில் இறங்க தயாராக இருக்கின்றோம் என்றார்.
0 comments: on "மட்டக்களப்பில் கூட்டமைப்பினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்"
Post a Comment