Friday, 13 April 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் முதலமைச்சர் வரக்கூடாது என்பதற்காக திட்டமிடும் கூட்டமைப்பினர்



இன்று கிழக்கிலே அதிகம் பேசப்படுகின்ற விடயம் கிழக்கு மாகாணசபை விரைவில் கலைக்கப்படும் என்ற செய்தியாகும். இச் செய்தியுடன் தொடர்பு பட்ட பல விடயங்கள் பேசப்படுகின்றன. அவற்றில் மிக முக்கியமான பிரச்சினைக்குரிய விடயம் முதலமைச்சர் முஸ்லிமா? தமிழா? என்பதாகும்.

முஸ்லிம்கள் தாங்கள் முதலமைச்சரை பெற வேண்டும் என்பதில் உறுதியாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தமிழ் கட்சிகள் தமிழ் முதலமைச்சர் வருவதனை விரும்பாதவர்கள் போன்று செயற்பட்டு வருகின்றனர். பல தமிழ் கட்சிகளும் சுயேற்சைக் குழுக்களும் போட்டியிட இப்பொழுதே முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு தமிழ் கட்சிகள் பிரிந்து தமிழர்களின் வாக்குகளை சிதைத்து தமிழ் முதலமைச்சரை இல்லாமல் செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்று சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் முதலமைச்சர் பதவியினை பொறுப்பேற்றதன் பின்னரே கிழக்கு மாகாணம் துரிதமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது. கிழக்கு மாகாணத்தின் துரித வளர்ச்சியினை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் பல சதித் திட்டங்களை தீட்டி வருகின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் கிழக்கிலே தமிழ் முதலமைச்சர் வரக்கூடாது என்பதிலே உறுதியாக இருக்கின்றனர். அவர்களின் இச் சதித் திட்டங்களுக்கு கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் துணை போவது கவலைக்குரிய விடயம்.
 தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி பேசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தனித்த கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவது அவர்களின் கொள்கைகளுக்கு முரணானது இல்லையா?அன்று கிழக்கு மாகாணசபையை சந்திரகாந்தன் அவர்கள் பொறுப்பேற்றபோது கிழக்கு மாகாணசபை ஒன்று ல்லை என்று சம்பந்தனுடன் பேசச் சென்ற சந்திரகாந்தனை வர வேண்டாம் என்று திருப்பி அனுப்பியவர் கூட்டமைப்பின் தலைவர். இன்று கிழக்கு மாகாணசபைக்கு ஆசைப்படுவது ஏன்? நிரந்தர கொள்கை இல்லாததன் வெளிப்பாடா?

கிழக்கு மாகாணத்தின் இன விகிதாசார  அடிப்படையில் கூட்டமைப்பினர் தனித்து போட்டியிட்டு முதலமைச்சர் பதவியினை பெறுவது முடியாத காரியம். இவர்கள் தமிழர்களின் வாக்குகளை வேட்டையாடி கிழக்கிலே இடம்பெறும் துரித அபிவிருத்தித் திட்டங்களை இல்லாமல் செய்ய நினைக்கின்றனர்.

கூட்டமைப்பினர் அதிக ஆசனங்களை பெற்றால்கூட ஆட்சியமைக்க முடியாது. எதிர் கட்சி ஆசனங்களில் இருந்து அறுபது வருடங்களுக்கு மேலாக செய்துவரும் கதிரைகளை மட்டும் சூடேற்றும் வேலைகளை மட்டுமே செய்ய முடியும். 

இன்று என்னுடைய நண்பர் ஒருவர் மட்டக்களப்பு மாவட்டத்திலே அறிக்கை மன்னனாக திகழும்ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு தொலைபேசி அழைப்பினை எடுத்தார். வழக்கமாக அவருடன் பேசுபவர்தான் நண்பர். நண்பர் மாகாணசபை கலைப்பு விடயத்தையும் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுமா என்றும் கேட்டார்.

அதற்கு அவர் சொன்ன பதில் கேட்போம். அப்போது நண்பர் கேட்டார் வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி பேசும் நீங்கள் தனியாக இருக்கும் கிழக்கு மாகாணசபையில் போட்டியிடுவதா என்று தேர்தலில் போட்டியிடுவதற்காக கொள்கைகளில் மாற்றம் வரும் என்று சொன்னதுடன் நின்று விடாமல் பல விடயங்களை பேசினார் அப்போது நண்பர் கேட்டார் கூட்டமைப்பு போட்டியிட்டால் முதலமைச்சர் பதவி கிடைக்குமா என்று அதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சொன்ன பதில் நிட்சயமாக கிடைக்காது அது எமக்குத் தெரியும். இன்றை நாள் நேரத்தை குறித்து வையுங்கள் நான் ஒரு விடயம் சொல்கின்றேன்  கிழக்கிலே இனிமேல் ஒரு தமிழ் முதலமைச்சர் வரமாட்டார் நான் இவ்வாறு குறிப்பிட்ட நாளை ஞபகத்தில் வைத்திருங்கள் என்று சொன்னார்.

பாருங்கள் தமிழ் முதலமைச்சர் வரக்கூடாது என்பதிலே இவர்கள் எவ்வளவு அக்கறையாக இருக்கின்றார்கள். இவர்கள் கிழக்கு மக்களுக்கு தேவையா? 

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் முதலமைச்சர் வரக்கூடாது என்பதற்காக திட்டமிடும் கூட்டமைப்பினர்"

Post a Comment