மட்டக்களப்பு நகரிலுள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலையும்இ சாரணியத்தின் தந்தை என போற்றப்படும் பேடன் பவுலின் சிலையும்இ கிழக்கிலங்கைக்கு புகழ்சேர்த்த சுவாமி விபுலானந்த அடிகளின் சிலையும்இ மட்டக்களப்பிற்கு புகழ் சேர்த்த மண்டூர் பெரியதம்பிப்புலவரின் சிலையும் இன்று (06.04.2012) வெள்ளிக்கிழமை அதிகாலை விஷமிகளால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று மட்டக்களப்பு சிலை உடைப்பு வரலாறுகள் தொடர்கதையாக மாறி வருகின்றது. அதுவும் மக்களால் போற்றப்படுகின்ற மகான்களின் சிலைகள் உடைக்கப்படுவது வருந்தத்தக்க விடயம். இன்று அதிகாலை இச் சிலைகள் உடைக்கப்பட்டதன் நோக்கம் என்ன? யாரால் உடைக்கப்பட்டது?
இவ்வாறான சம்பவங்கள் தொடர் கதையாக இருக்கக்கூடாது. முதன் முதலில் ஆரையம்பதியில் சுவாமி விவேகானந்தருடைய சிலை உடைக்கப்பட்டபோது சிலை உடைப்பு விடயத்தில் கைது செய்யப்பட்டவருக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டிருந்தால் இவ்வாறான சிலை உடைப்பு சம்பவங்கள் தொடர் கதையாக இருக்க வாய்ப்புக்கள் குறைவானதாகவே அமைந்திருக்கும்.
முன்னர் சுவாமி விவேகானந்தரின் சிலையினை உடைத்து பாரிய குற்றத்தினை புரிந்தவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதன் நோக்கம் என்ன? இன்று நான்கு சிலைகளும் உடைக்கப்பட்டதன் நோக்கம் என்ன?
அதுவும் இன்று உடைக்கப்பட்ட சிலைகள் நகரின் மத்திய பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு நான்கு சிலைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. கிழக்கு மாகாண மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வரும் இவ்வேளையில் மக்களை குழப்பமடையச் செய்யும் முயற்சியா?
இந்த நான்கு சிலைகளையும் உடைத்த குற்றவாளிகளையாவது காவல்துறையினர் கைது செய்து உரிய தண்டனை வழங்குவார்களா?
சிலை தொடர்பில் நேற்று நான் எதிர்வு கூறிய என் பதிவு
1 comments: on "மட்டக்களப்பில் காந்தி சிலை உட்பட நான்கு சிலைகள் உடைப்பு பின்னணி என்ன?"
இது மக்கள்மத்தியில் குழப்பத்தை உண்டுபண்ண அரச ஆதரவுடன் நடக்கும் செயலாக இருக்கலாம்
Post a Comment